Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 18 JUN, 2024 | 10:53 AM கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார். கொவிட்பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் அதேவேளை இந்துக்கள் பௌத்தர்கள் கிறிஸ்தவர்களும் வேதனையை அனுபவித்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வேளை இது குறித்து ஆராயநியமிக்கப்பட்ட குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரைத்தது,உயர்நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளது. ஆகவே அரசாங்கம் அதனை பின்பற்றவேண்டிய நிலைமை காணப்பட்டது வேறுவழியிருக்கவில்லை,என தெரிவித்துள்ள ஜனாதிபதி உடல்களை தகனம் செய்வதற்கான உரிமை அடக்கம் செய்வதற்கான உரிமை ஒருவர் தனது உடல்களை மருத்துவநிலையங்களிற்கு வழங்குவதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் சட்டத்தை தனது அரசாங்கம் கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186338
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 17 ஜூன் 2024 தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்த வி.கே. சசிகலா, தற்போது மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். என்ன செய்ய முயற்சிக்கிறார் வி.கே. சசிகலா? "அரசியலில் ரீ என்ட்ரி" - சசிகலா அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்த சசிகலா, அதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்படிப் பேசும்போது, அ.தி.மு.கவில் சாதி அரசியல் செய்வதாகவும் தன்னுடைய மறு வருகையால், 2026ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமென்றும் தெரிவித்தார் சசிகலா. "அ.தி.மு.க. தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. ஒரு சில சுயநலவாதிகள் அந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சாதி தான் சொந்த சாதி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது. ஜெயலலிதாவும் சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி சாதி பார்த்து பழகியிருந்தால், உயர்சாதி வகுப்பை சார்ந்த அவர், என்னுடன் பழகியிருக்க மாட்டார். திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடும். ஆனால், இங்கு சாதாரண ஏழை கூட எம்.பி. எம்.எல்.ஏ. ஆகலாம். ஆனால் இப்போது நம் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு முன்னுரிமை கொடுத்து சாதி அரசியல் செய்கிறார்கள். இதை நானும், தொண்டர்களும், யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான் பெங்களூரு சென்றபோது, சாதி பார்த்திருந்தால், அவருக்கு (எடப்பாடி கே. பழனிசாமிக்கு) வாய்ப்பளித்திருக்க மாட்டேன். இன்று அ.தி.மு.க. மூன்றாவது, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது, டெபாசிட்டும் போய்விட்டது. சிலர் தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது என்னுடைய என்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள். 2026இல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 40 வருடங்களாக மக்கள் பணி செய்தேன், இனி வரும் காலமும் மக்களுக்காகத்தான் வாழ்வேன்” என்றார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியும் அ.தி.மு.கவும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தன. இந்தத் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் அ.தி.மு.கவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிவருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்த வி.கே. சசிகலா, பலமுறை தனது அரசியல் மறுபிரவேசத்திற்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குப் பிறகு, மீண்டும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சசிகலா. அதிமுக பதில் என்ன? ஆனால், இவரது அறிவிப்பை அ.தி.மு.க. நிராகரித்துவிட்டது. "அவருக்கும் அ.தி.மு.கவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினரே இல்லை" என்று சொல்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்குமார். "வி.கே. சசிகலா சிறையிலிருந்து 2021ல் வந்த பிறகு செய்ய வேண்டிய அரசியலை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட நிலை இது; தன்னை வந்து யாரும் ஏன் சந்திக்கவில்லை என்பதை அவர் யோசிக்க வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன். பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடியை கையாளும் திட்டம் சசிகலாவிடம் உள்ளதா? "நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார் வி.கே. சசிகலா. வெளியேற்றப்பட்ட யாரையும் சேர்க்கப் போவதில்லை என்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி. அம்மாதிரி சூழலில், எடப்பாடி கே. பழனிச்சாமியை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அவரிடம் திட்டம் ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சசிகலாவைப் பொருத்தவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் தான் செய்ய வேண்டிய அரசியலை செய்யத் தவறிவிட்டார். சசிகலாவால் அடையாளம் காணப்பட்டு எம்.எல்.ஏவாகவும் எம்.பியாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகளாகவும் உயர்ந்தவர்கள் பலர் உண்டு. இந்த இரண்டரை ஆண்டுகளில் யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை. தன்னால் உயர்த்திவிடப்பட்டவர்கள் தன்னை வந்து சந்திப்பதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பதை அவர் யோசித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த யோசனையும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்றாகச் சேரவேண்டும் என வெறும் கோரிக்கை மட்டும் விடுவதால் எதுவும் நடக்காது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். அதிமுக ஒன்றிணைவதில் என்ன சிக்கல்? சசிகலா மீண்டும் அரசியலில் இணைய விரும்பினால், எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் அவர். "விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று அ.தி.மு.க. எடப்பாடி கே. பழனிசாமி வசம்தான் இருக்கிறது. அவர் இறங்கி வராதவரை எதுவும் சாத்தியமில்லை. ஆகவே, எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திக்க முதலில் அவர் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்" என்கிறார் எஸ். லக்ஷ்மணன். இன்னொரு சிக்கலாக, அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவருமே அ.தி.மு.கவின் தற்போதைய தலைமை குறித்து வெவ்வேறு விதமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்லிவருகிறார். ஆனால், சசிகலா அ.தி.மு.கவின் தற்போதைய தலைமையுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஏதும் சொல்லவில்லை என்பதோடு, ஒரு சாதி சார்ந்து செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். தவிர, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் குறித்தும் அவர் பேசுவதில்லை. டிடிவி தினகரனைப் பொருத்தவரை, எடப்பாடி கே. பழனிசாமியைக் கடுமையாக எதிர்க்கிறார். "பழனிசாமி என்ற தீய மனிதர் பொதுச் செயலாளராக இருக்கும்வரை அவர்களோடு சேர்வது எப்படி சாத்தியமாகும்? நாங்கள் மீண்டும் ஒன்றிணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜெயலலிதா வழியை சசிகலா பின்பற்றலாம்" "தற்போதைய சூழலில் அ.தி.மு.கவில் ஒற்றுமை என்றால், எடப்பாடி கே. பழனிசாமி, வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைவதுதான். ஆனால், சசிகலா தன்னைப் பற்றி மட்டும் பேசுகிறாரே தவிர டி.டி.வி. தினகரனைப் பற்றியோ ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றியோ பேசுவதேயில்லை. அவர்களையும் இவர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் இவரே முன்வந்து அவர்களைச் சென்று பார்க்க வேண்டும். 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும் வைகோவையும் ஜெயலலிதா தானே நேரில் சென்று சந்தித்தார். அந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். சசிகலாவும் அதேபோலத் தேடிப் போக வேண்டும். வீட்டுக்குள் இருந்தபடியே ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொல்வது பலனளிக்காது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு என்ன ஆனது? இதற்கிடையில், அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் கே.சி. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்த ஜே.சி.டி. பிரபாகர், பெங்களூர் புகழேந்தி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் எல்லோரையும் இணைக்க பேசி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தக் குழுவினரின் முயற்சிக்கு பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. "நாங்கள் பேச ஆரம்பித்த பிறகுதான் எல்லோருமே தங்கள் கருத்தைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம், பொருத்திருந்து பாருங்கள்" என்கிறார் இந்தக் குழுவைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக "சசிகலாவின் ரீ என்ட்ரி திருப்பம் தராது" சசிகலாவின் 'ரீ என்ட்ரி' எந்தத் திருப்பத்தையும் தரப்போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "சசிகலாவிடம் கட்சி அமைப்பு ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் நெருக்கத்தைப் பெற்றவர் என்கிற வரலாறு மட்டுமே உள்ளது. அது ஒரு அறிமுகத்தைதான் தரும். அரசியலில் ஏறுமுகத்தைத் தராது. தவிர, அ.தி.மு.கவிலிருந்து விலகி நிற்கும் தலைவர்கள் யாரும் சசிகலாவுடன் காணப்படவில்லை. டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, தனிக்கட்சி என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இந்நிலையில், சசிகலாவின் ரீ என்ட்ரி எந்தத் திருப்பத்தையும் தராது" என்கிறார் ஷ்யாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்திருக்கும் நிலையில், சசிகலா தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி, அவருக்காக பிரசாரம் செய்திருக்க வேண்டும் என்கிறார் லக்ஷ்மணன். "தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் ஏற்கப்பட்டதுதான் என்றாலும்கூட அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது தவறு. இந்தச் சூழலில், தீவிரமான ஆதரவாளர் ஒருவரை சசிகலா தேர்தலில் நிறுத்தியிருக்க வேண்டும். அந்த வேட்பாளருக்காக சசிகலா தீவிரமாகப் பிரசாரம் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் அரசியலில் என்ட்ரி என்று சொல்வதற்கு அர்த்தமே இல்லை. இப்போதும் சசிகலாவுக்கு தொண்டர்களிடம் மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை அர்த்தமுள்ளதாக்கி, அதை அ.தி.மு.கவுக்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டுமானால், சசிகலா தன் அரசியல் பாணியை மாற்றை வேண்டும்" என்கிறார் லக்ஷ்மணன். தன்னுடைய ரீ என்ட்ரி எப்படியிருக்கும் என்பதை சசிகலா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. சுற்றுப் பயணம் போகப்போவதாக மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், கடந்த முறை அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணமே பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காத நிலையில், இந்த முறை புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சசிகலா விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? டிசம்பர் 5, 2016: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் காலமானார். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். டிசம்பர் 29, 2016: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்முறையாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடைபெறும்வரை, வி.கே. சசிகலாவே கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக இருப்பார் என முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 5, 2017: அ.தி.மு.கவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6, 2017: முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை தமிழ்நாடு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார். ஆனால், புதிய முதல்வராக பொறுப்பேற்குமாறு சசிகலாவை ஆளுநர் அழைக்கவில்லை. பிப்ரவரி 14, 2017: சொத்துக் குவிப்பு வழக்கில் வி.கே. சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா, அடுத்த முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியைத் தேர்வுசெய்தார். பிப்ரவரி 15, 2017: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தார் சசிகலா. செப்டம்பர் 13, 2017: ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை அ.தி.மு.கவுடன் இணைப்பதற்கான முன் நிபந்தனையாக, வி.கே. சசிகலாவை அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். 15 மார்ச் 2018: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்ற கட்சியை உருவாக்கினார் டி.டி.வி. தினகரன். பிப்ரவரி 2021: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவுசெய்த வி.கே. சசிகலா, பெங்களூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். மார்ச் 3, 2021: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் அவர் ஆதரிக்கவில்லை. மே 2021: சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார் சசிகலா. அ.தி.மு.க. தொண்டர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து, அ.தி.மு.கவை காப்பாற்ற வேண்டும் என்று கோருவது போன்ற ஆடியோ க்ளிப்களை ஊடகங்களுக்கு வெளியிட ஆரம்பித்தார். அக்டோபர், 2021: சிறிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் சசிகலா. ஆனால், அந்தப் பயணம் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஏப்ரல், 2022: `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூன், 2024: நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்" என்று அறிக்கைவிட்டார் சசிகலா. ஜூன் 16, 2024: தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்தார் வி.கே. சசிகலா. https://www.bbc.com/tamil/articles/czvv5pzgxq4o
  3. யாழ். காரைநகர் கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது 18 JUN, 2024 | 11:27 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களைக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/186333
  4. கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்த்த இந்தியாவும் பாகிஸ்தானும் - உத்வேகமளிக்கும் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்” இது ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் குல்புதின் நயீப் கடந்த 2023 உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் சமகால வரலாற்றில் தொடர்ச்சியான போர்களைச் சந்தித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். போர்கள் சூழ்ந்த தருணத்திலும் மக்களின் வேதனைகளை மறக்கடிக்கும் மருந்தாக இருப்பது ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றிகள்தான். அதிலும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பெரிய அணிகளை வெல்லும்போது மக்கள் தங்கள் இல்லத்தில் நடக்கும் சொந்த விழாவைப் போல் கொண்டாடுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தாலிபன்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்த காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தது பாகிஸ்தான் பாகிஸ்தானில் உருவான ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள் இத்தனைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும், கிரிக்கெட்டுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. 1839களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிரிக்கெட்டை அறிமுகம் செய்து விளையாடினார்கள். அதன்பின் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை ஊட்டி வளர்த்தது பாகிஸ்தான். தாலிபன்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்த காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் மக்கள் தாய்தேசத்துக்கு திரும்பியபின் அந்த தேசத்துக்கு தனியாக ஐசிசியில் இடம் பெற்றுக் கொடுத்து, அங்கீகாரத்தைப் பெற்றுத் தர உதவியதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான். ஆப்கானிஸ்தானுக்கு எந்த தேசத்தின் அணியும் கிரிக்கெட் விளையாட முன்வராத போது, அந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றும், அந்த அணியை பாகிஸ்தானுக்கு அழைத்து கிரிக்கெட் விளையாடச் செய்து ஊக்கமளித்தது பாகிஸ்தான். 2001-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் (ஐசிசி), 2003-ஆம் ஆண்டில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் (ஏசிசி) ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது ஆப்கானிஸ்தானுக்கு அடையாளம் தந்த பிசிசிஐ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் திறமை, திறன் மெருகேறியதற்கும், கிரிக்கெட்டில் அதிகமான இளம் வீரர்கள் உருவாகவும், அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) முக்கிய காரணமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் ஐசிசி, ஏசிசி அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தபின், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், கிரிக்கெட்டை வளர்க்கவும் கூடுதலாக நிதியை ஒதுக்கியதில் பிசிசிஐ அமைப்பின் பங்கு முக்கியமானது. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் கிரிக்கெட் வளர்ச்சி பெரிய தடைகளைச் சந்தித்தது. கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கும், தேசிய அணி வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க சரியான மைதானம் இல்லாமல், பயிற்சி வசதிகள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிரமங்களைச் சந்தித்தது. இந்தச் சூழலில்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கைகொடுத்து அவர்களின் திறமையை வெளிக்கொணரச் செய்தது பிசிசிஐ அமைப்பு. இந்தியாவில் உள்ள உலகத் தரம்வாய்ந்த கிரிக்கெட் பயிற்சி வசதிகளை ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கி உதவியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு நுணுக்கம் மெருகேறியதற்கும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், பேட்டிங் நுட்பங்களை அறிந்து கொள்ளவும் இந்தியாவில் உள்ள பயிற்சி வசதிகள் பெருமளவு உதவின. அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் விளையாடும் அங்கீகாரம் கிடைத்தபின் அந்த அணியால் டெஸ்ட் போட்டிகளை நடத்த சொந்த தேசத்தில்கூட இடமில்லாத நிலையைச் சந்தித்தது. இந்த நேரத்தில் இந்தியா, டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் விளையாட அனுமதித்து அந்த அணிக்கு தோள்கொடுத்து நின்றது. அது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னெள ஏக்னா மைதானத்தை தங்களின் சொந்த மைதானமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது. உத்தரப்பிரதேசத்தின் லக்னெள நகரில் முஸ்லிம்கள் அதிகம். அங்கு மக்களின் உணவுப் பழக்கம், அசைவ உணவுகளின் சுவை, பல்வகைகள் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பிடித்துவிட்டதால், லக்னெள நகரை தங்களது சொந்த ஊர் போலக் கருதினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டை தீட்டிய ஐபிஎல் ‘பட்டறை’ ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது. முதன்முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஐபிஎல் தொடரில் இடம் பெற்றது சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான். அதைத் தொடர்ந்து முகமது நபி, முஜுபிர் ரஹ்மான் என வரிசையாக வீரர்கள் வரத் தொடங்கினர். அதிலும் ஐபிஎல் டி20 தொடர் உலகில் பிற நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் லீக்கைவிட புகழ்பெற்றது, பரிசுகள், ஊதியம் வழங்கும் அளவிலும் பெரியது என்பதால், ஐபிஎல் தொடரில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடினாலே அனைத்து நாட்டு டி20 லீக்களிலும் விளையாட முடியும். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கும், இடம் கிடைப்பதற்கும் ஐபிஎல் டி20 லீக் பெரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது. பல்வேறு நாடுகளில் டி20 லீக்களில் பல்வேறு அணிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடும்போது, வெவ்வேறு பயிற்சியாளரின் பயிற்சியின் கீழ் விளையாடக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் மட்டும் இருந்திருந்தால், அந்நாட்டின் பயிற்சியாளரின் கீழ் மட்டுமே பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியின் நிலை ஒருவட்டத்துக்குள் சுருங்கிவிடும். ஆனால், உலகின் பல்வேறு டி20 தொடர்களில் ஆப்கானிஸ்தான் விளையாடும்போது, ஒவ்வொரு விதமான அணியில் இடம் பெற்று, அங்குள்ள பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றபோது, ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங், சுழற்பந்துவீச்சு ஆகியவை கூர்மை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது இந்தத் திறன்தான் சர்வதேச தளத்தில் ஜாம்பவான்கள் அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளிக்க முடிந்தது. அதிலும் 2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் வீரர்களின் திறமைக்கு மிகப்பெரிய உறைகல்லாக அமைந்தது. இன்னும் ஆப்கானிஸ்தான் சாதாரண அணி அல்ல என்பதை தங்கள் வெற்றியின் மூலம் எடுத்துரைத்தனர். அதிலும் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, நூர் அகமது, ஜாத்ரன், ஹஸ்ரத்துல்லா ஓமர்ஜாய், இப்ராஹிம் ஜாத்ரன், ரஹ்மத் ஷா ஆகியோரின் ஆட்டம் சர்வதேச அணிகளை வியப்புடன் பார்க்க வைத்தது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளை வெல்ல முடியாமல் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது. ஆனால், அடுத்த 8 ஆண்டுகளில் 2023ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்து தன்னை நிரூபித்தது ஆப்கானிஸ்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES பயிற்சியாளர்களின் பங்கு ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியில் பல்வேறு கால கட்டங்களிலும் பயிற்சியாளர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ், இந்திய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் லான்ஸ் க்ளுஸ்னர், இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராஹம் தோர்ப், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் ஆகியோரின் காலகட்டம் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது. தற்போது இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடந்த 2022 மார்ச் மாதம் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்று வருகிறது. பயிற்சியாளர் ஜோனத்தன் டிராட் ஒருமுறை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இன்றைய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. இன்று நீங்கள் பார்க்கும் ஆப்கானிஸ்தான் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை, நுணுக்கம், திறமை, டெஸ்ட் விளையாடும் அணிகளும் தோற்கடிக்கும் ஊக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருக்கும் பிரேவோ ‘ஒரு ரூபாய்கூட வாங்காத ஜடேஜா’ 2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான பல வெற்றிகளைப் பெறுவதற்கு ஆலோசகராக இருந்த இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் பங்கு என்று அப்போதே பாராட்டப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் மட்டும் இரட்டை சதம் அடிக்காமல் இருந்திருந்தால், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும். அஜெய் ஜடேஜா தான் மென்டராக ஆப்கானிஸ்தான் அணிக்கு பணியாற்றியதற்கு கைமாறாகவோ, ஊதியமாகவோ இதுவரை அந்நாட்டு அணி நிர்வாகத்திடம் இருந்து ஒரு ரூபாய்கூட பெறவில்லை என்பது வியப்புக்குரியது. ஆப்கானிஸ்தான் அணியின் சிஇஓ நசீப் கான், அரேபியன் நியூஸுக்கு அளித்த பேட்டியில் “ 2023ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட மென்டராக செயல்பட்ட ஜடேஜாவின் பங்கு சிறப்புக்குரியது. ஒவ்வொரு முறையும் ஜடேஜாவை நான் சந்தித்தபோதெல்லாம் ஊதியத்தை வலுக்கட்டாயமாக அளித்தபோது, பலமுறை அதைப் பெறுவதற்கு ஜடேஜா மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஒரு ரூபாய்கூட ஊதியமாக ஜடேஜா பெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயல்பட்டாலே அதுதான் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெகுமதியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்தார் இதுபோன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியை கைதூக்கிவிட பயிற்சியாளர்களும் தங்களின் பங்களிப்புகளை அளித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c1rryxrr1j5o
  5. Published By: VISHNU 18 JUN, 2024 | 02:33 AM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோட்டபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. பஷில் ராஜபக்ஷவின் காட்டிக் கொடுப்பு வெற்றிப் பெற கூடாது. 69 இலட்ச மக்களாணையை பலப்படுத்தும் வகையில் அனைவரும் செவ்வாய்க்கிழமை (18) நுகேகொடயில் ஒன்றிணைய வேண்டும் என சர்வஜன சக்தியின் பிரதிநிதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சன்ன ஜயசுமன கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்தனர். கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்ததாவது, 2019ஆம் ஆண்டு பெரும்பான்மையின் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அரச தலைவர் 69 இலட்ச மக்களாணைக்கும், அபிலாசைகளுக்கும் முரணாகச் செயற்படும் போது மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒரு தரப்பினர் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மக்கள் போராட்டத்தின் அதிஷ்டலாபம் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்தது. கோட்டபய ராஜபக்ஷ 69 இலட்ச மக்களாணையை அவமதித்து விட்டு தப்பிச் சென்ற காரணத்தால் 69 இலட்ச மக்களின் அரசியல் அபிலாசைகளை எம்மால் மறக்க முடியாது. ஏனெனில் 69 இலட்ச மக்களாணையை தோற்றுவிக்க நாங்கள் முன்னிலை வகித்தோம். இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 69 இலட்ச மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் ராஜபக்ஷர்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. 69 இலட்ச மக்களாணையை பாதுகாக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்கவுள்ளோம். 69 இலட்ச மக்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்று நுகேகொடயில் இடம்பெறும் எமது கூட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள் என்றார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச,தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். இவர்கள் மூவரும் தனித்தனியாக போட்டியிடுவதை காட்டிலும் 'தேசிய ஐக்கிய கூட்டணி' என்ற பெயரில் ஒன்றாக போட்டியிடுவது சிறந்ததாக அமையும், ஏனெனில் இவர்கள் மூவரின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையில் ஒருமித்த தன்மை காணப்படுகிறது. இம்மூவரும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் உட்பட மேற்குலகத்தின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகிறார்கள். இவர்களிடம் தேசியம் பற்றி எதிர்பார்க்க முடியாது. 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தவர்களிடமிருந்து மக்களாணையை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு. தேசியத்துக்காக அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றார். தொழிலதிபர் திலித் ஜயவீர, தேசியத்துக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டுக்கு ஆதரவான அணி,நாட்டுக்கு எதிரான அணி என்ற இரு அணிகள் தோற்றம் பெற்றுள்ளன.நாங்கள் நாட்டுக்கு ஆதரவான அணி அதன் காரணமாகவே அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறக்கணித்து நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளோம். 2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள்.2022 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ மீண்டும் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளார்.69 இலட்ச மக்களாணையை இவர் தான் காட்டிக் கொடுத்தார். நாங்கள் தோற்றுவித்த மக்களாணையின் எதிர்பார்ப்பு இல்லாதொழிய கூடாது. தேசியத்துக்காகவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/186319
  6. Published By: VISHNU 17 JUN, 2024 | 11:38 PM சாதாரணமாக எமது தமிழர் பகுதிகளிலுள்ள பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இந்த இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு மக்களின் போக்குவரத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வட்டுவாகல் பாலம் உடனடியாக நிர்மாணிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு - யாழ்ப்பாணத்திற்கான A-35பிரதான வீதியில் இந்த வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது. கடந்த 1950ஆம் ஆண்டு காலப்பகுதியளவில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்ற இந்த வட்டுவாகல் பாலமானது, 70வருடங்களுக்கும் அதிகமான பழமைவாய்ந்த பாலமாகும். குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தகாலத்தில் அதிகம் பேசப்பட்ட பாலமாக இந்தப் பாலம் காணப்படுகின்றது. இறுதியுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையிலிருந்து எஞ்சிய மக்கள் இந்த வட்டுவாகல் பாலத்தின் வழியாகவே வெளியேறியிருந்தனர். அந்தவகையில் இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பாலமாக இந்த வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது. யுத்தத்தின் பின்னரான சூழலில் எமது தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு, மதத் திணிப்பு, கடலில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் இங்குள்ள தமிழ்மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அதேபோல் இவ்வாறான மிகமுக்கியமான பாலங்கள் சீரின்மையாலும் எமது தமிழ் மக்கள் பாரிய போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான பழமைவாய்ந்த பாலங்களை புதிதாக அமைத்துத் தராமல், இங்குள்ள தமிழ் மக்களைத் தொடர்ந்தும் போக்குவரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கவேண்டுமென இந்த இனவாத அரசாங்கம் செயற்படுவதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தற்போது பழமையான இந்தப் பாலம் அடிக்கடி உடைவதும், போக்குவரத்துத் தடை ஏற்படுவதும், பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சீரமைப்புப் செய்யப்படுவதுமாக இந்தப் பாலத்தின் நிலை காணப்படுகின்றது. அதேவேளை ஒரு வழிப் பாதையாக மிகவும் ஒடுங்கிய பாலமாக இந்தப் பாலம் காணப்படுகின்றது. இதனால் ஒருகரையிலிருந்து வாகனங்கள் வரும்வரை, மறுகரையிலிருக்கின்ற வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186316
  7. வாடகை வரி விதிக்கப்படுவோர் குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்! Published By: DIGITAL DESK 3 18 JUN, 2024 | 10:51 AM முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186339
  8. கட்டுரை தகவல் எழுதியவர், லூசில் ஸ்மித் மற்றும் ப்ன் ஸ்டீல் பதவி, பிபிசி டிவி நடப்புச் செய்திகள் 17 ஜூன் 2024 மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர். கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர். கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ, கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. கிரீஸ் கடலோரக் காவல்படை, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக பிபிசியிடம் கூறியது. கிரீஸ் கடலோரக் காவல்படையின் படகில் 12 பேர் ஏற்றப்பட்டு, பின்னர் ஒரு சிறிய படகில் கைவிடப்படும் வீடியோ காட்சிகளை, முன்னாள் கிரீஸ் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவரிடம் காட்டினோம். அவர் தனது நாற்காலியில் இருந்து எழுந்த போது, அவரது ‘மைக்’ இன்னும் அணைக்கப்படாத நிலையில், ‘இது தெளிவாகச் சட்டவிரோதமானது’ என்றும் ‘சர்வதேசச் சட்டப்படி குற்றம்’ என்றும் கூறினார். நீண்ட காலமாகவே தஞ்சம் கோரிகளை கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதாக கிரீஸ் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. துருக்கியிலிருந்து வரும் அவர்களை அதே வழியில் திரும்பிச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சர்வதேசச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. ஆனால், கிரீஸ் கடலோரக் காவல்படையின் நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் சம்பவங்களின் எண்ணிக்கையை பிபிசி கணக்கிட்டது இதுவே முதல் முறை. பிபிசி பகுப்பாய்வு செய்த 15 சம்பவங்கள் (மே 2020-23 தேதியிட்டவை) 43 இறப்புகளுக்கு காரணமாக அமைந்தன. முதல்கட்டத் தரவுகளாக இருந்தவை, உள்ளூர் ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் துருக்கியின் கடலோரக் காவல்படை. அத்தகைய கணக்குகளைச் சரிபார்ப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பெரும்பாலும் மறைந்துவிடுவார்கள் அல்லது பேசுவதற்கு மிகவும் பயப்படுவார்கள். ஆனால், இவற்றில் நான்கு வழக்குகளில் நேரில் கண்ட சாட்சிகளுடன் பேசி, அவற்றை உறுதிப்படுத்த முடிந்தது. ‘டெட் காம்: கில்லிங் இன் தி மெட்?’ என்ற புதிய பிபிசி ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆய்வு, தெளிவான ஒரு நடவடிக்கையைப் பற்றிப் பேசுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். படக்குறிப்பு,கிரீசுக்கு தஞ்சம் கோரியாகச் சென்ற கேமரூனிய நபர் ‘நான் சாக விரும்பவில்லை’ ஐந்து சம்பவங்களில், கிரீஸ் அதிகாரிகள் தங்களை நேரடியாகக் கடலில் வீசியதாகத் தஞ்சம் கோரிகள் தெரிவித்தனர். அதில் நான்கு சம்பவங்களில் அவர்கள் கிரீஸ் தீவுகளை அடைந்ததாகவும், ஆனால் துரத்திப் பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். வேறு பல சம்பவங்களில், தாம் மோட்டார்கள் இல்லாமல் ஊதப்பட்ட மிதவைகளில் ஏற்றப்பட்டதாகத் தஞ்சம் கோரிகள் கூறினர். அதன்பின் அந்த மிதவைகளின் காற்று வெளியேறியது அல்லது துளையிடப்பட்டிருந்ததாகத் தோன்றியது என்றனர். 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமோஸ் தீவில் தரையிறங்கிய பிறகு கிரீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறும் கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நாங்கள் நேர்காணல் செய்த அனைத்து நபர்களையும் போலவே, அவர் ஒரு தஞ்சம் கோரியாக கிரீஸ் மண்ணில் பதிவு செய்யத் திட்டமிட்டதாகக் கூறினார். "நாங்கள் தரையிறங்கும் முன்பேபோலீசார் பின்னால் இருந்து வந்தனர்," என்று அவர் எங்களிடம் கூறினார். "கருப்பு உடையில் இரண்டு போலீசார், மேலும் மூன்று பேர் பொதுமக்கள் உடையில் இருந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அவர்களின் கண்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்,” என்றார் அவர். அவரும் மற்ற இருவர் - கேமரூனைச் சேர்ந்த மற்றொருவர் மற்றும் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த ஒருவர் - கிரீஸ் கடலோரக் காவல்படையின் படகிற்கு மாற்றப்பட்டனர். அங்கு நிகழ்வுகள் மேலும் அதிர்ச்சிகரமாக மாறின. "அவர்கள் அந்த இன்னொரு கேமரூனிய நபரிலிருந்து துவங்கினர். அவரை தண்ணீரில் வீசினார்கள். ஐவரிகோஸ்டைச் சேர்ந்த நபர், ‘என்னைக் காப்பாற்றுங்கள், நான் சாக விரும்பவில்லை…’ என்றார். இறுதியில் அவரது கை மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்தது, அவரது உடல் தண்ணீருக்கு அடியில் இருந்தது. "மெதுவாக அவரது கை கீழே நழுவியது, தண்ணீர் அவரை மூழ்கடித்தது," என்றார் அவர். நம்மிடம் பேசிய கேமரூனிய நபர், தன்னைக் கடத்தியவர்கள் தன்னை அடித்ததாகக் கூறுகிறார். “என் தலையில் சரமாரியாகக் குத்தினர். ஒரு மிருகத்தைக் குத்துவது போலக் குத்தினர்,” என்கிறார் அவர். பின்னர், அவர்கள் அவரையும் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் தண்ணீருக்குள் தள்ளினார்கள் என்று அவர் கூறுகிறார். அவரால் கரைக்கு நீந்திச் செல்ல முடிந்தது. ஆனால் சிடி கீதா, மற்றும் டிடியர் மார்ஷியல் குவாமோ நானா என அடையாளம் காணப்பட்ட மற்ற இருவரின் உடல்கள் துருக்கியின் கடற்கரையில் மீட்கப்பட்டன. உயிர் பிழைத்தவரின் வழக்கறிஞர்கள், இரட்டைக் கொலை வழக்கைப் பதியுமாறு கிரீஸ் அதிகாரிகளைக் கோருகின்றனர். பட மூலாதாரம்,FAYAD MULLA படக்குறிப்பு,தஞ்சம் கோரிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட இடத்தை நோக்கி வாகனம் ஓட்டிச்சென்ற போது, அவரை ஹூடி அணிந்த ஒரு நபர் நிறுத்தினார் ‘ஒவ்வொரு குழந்தையாக இறந்தது’ சோமாலியாவைச் சேர்ந்த மற்றொரு நபர், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கியோஸ் தீவுக்கு வந்தபோது கிரீஸ் ராணுவத்தால் எவ்வாறு பிடிக்கப்பட்டு கிரீஸ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பதை பிபிசியிடம் கூறினார். கடலோரக் காவல்படையினர் அவரைத் தண்ணீரில் இறக்குவதற்கு முன்பு, அவரது கைகளைப் பின்னால் கட்டியதாகக் கூறினார். “என் கைகளைக் கட்டி நடுக்கடலில் வீசினார்கள். நான் இறக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்,” என்று அவர் கூறினார். அவரது கைகளில் ஒன்று கட்டிலிருந்து விடுபடுவதற்கு முன்பு, அவர் அண்ணாந்து பார்த்தபடி மிதந்து உயிர் பிழைத்ததாகக் கூறினார். ஆனால் கடல் கொந்தளிப்பாக இருந்தது, அவரது குழுவில் இருந்த மூன்று பேர் இறந்தனர். பிபிசி-யுடன் பேசியவர் கரையை அடைந்தார். 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், 85 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கிரீஸ் தீவான ரோட்ஸ் அருகே அதன் மோட்டார் துண்டிக்கப்பட்ட போது சிக்கலுக்குள்ளானது. சிரியாவைச் சேர்ந்த முகமது, கிரீஸ் கடலோரக் காவல்படையை உதவிக்கு அழைத்ததாக பிபிசியிடம் கூறினார். அந்தக் காவல்படை அவர்களை ஒரு படகில் ஏற்றி, துருக்கியின் கடற்பகுதிக்குத் திருப்பி அனுப்பி, அங்கு அவர்களை ஒரு உயிர் காக்கும் படகில் ஏற்றினார்கள். தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட படகின் ‘வால்வு’ சரியாக மூடப்படவில்லை என்று முகமது கூறுகிறார். "நாங்கள் உடனடியாக மூழ்கத் தொடங்கினோம், அவர்கள் அதைப் பார்த்தார்கள்... நாங்கள் அனைவரும் அலறுவதை அவர்கள் கேட்டார்கள், இருந்தும் அவர்கள் எங்களைக் கைவிட்டுச் சென்றனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். “இறந்த முதல் குழந்தை என் உறவினரின் மகன்... மற்றொரு குழந்தை, மற்றொரு குழந்தை என அதன் பிறகு ஒவ்வொருவராக இறந்தனர். பின்னர் என் உறவினர் காணாமல் போனார். காலையில் ஏழெட்டு குழந்தைகள் இறந்துவிட்டன. காலையில் துருக்கியின் கடலோரக் காவல்படை வருவதற்கு முன்புவரை, என் குழந்தைகள் உயிருடன் இருந்தனர். தஞ்சம் கோரிகள் அனைவரும் கிரீசின் பல தீவுகளில் உள்ள சிறப்புப் பதிவு மையங்களில் தங்கள் கோரிக்கையைப் பதிவு செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் பிபிசி நேர்காணல் செய்தவர்கள் - புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான ஒருங்கிணைந்த மீட்புக் குழுவின் உதவியுடன் நாங்கள் தொடர்பு கொண்டவர்கள் - அவர்கள் இந்த மையங்களுக்குச் செல்வதற்கு முன்பே கைது செய்யப்பட்டதாகக் கூறினர். கைது நடவடிக்கையை மேற்கொள்பவர்கள் ரகசியமாக சீருடை அணியாமல், பெரும்பாலும் முகமூடி அணிந்து செயல்படுவார்கள் என்று அவர்கள் கூறினர். ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக கிரீசில் இருந்து துருக்கிக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், தஞ்சம் கோருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ஃபயாத் முல்லா எங்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிரீஸ் தீவான லெஸ்போஸில் இதுபோன்ற நடவடிக்கைகள் ரகசியமாக நடந்ததைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார். தகவல் கிடைத்து தஞ்சம் கோரிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட இடத்தை நோக்கி வாகனம் ஓட்டிச்சென்ற போது, அவரை ஹூடி அணிந்த ஒரு நபர் நிறுத்தினார் - பின்னர் அவர் காவல்துறையில் பணியாற்றுவது தெரியவந்தது. அப்போது அவரது காரின் முன்புறக் கேமராவில் இருந்து அவர் தடுத்து நிறுத்தப்பட்ட காட்சிகளை நீக்கவும், ஒரு போலீஸ் அதிகாரியை எதிர்த்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டவும் போலீசார் முயன்றனர். அதைத்தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. படக்குறிப்பு,‘போர்க்கப்பல்’ என்று அழைக்கப்பட்ட ஒரு கப்பலிலிருந்து அந்த உறுப்பினர் பார்சனை அழைத்தபோது, பார்சன் அவரது வேலையைப் பற்றிக் கேட்டார் ‘இது ஒரு சர்வதேச குற்றம்’ இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இதேபோன்ற வேறொரு இடத்தில், தஞ்சம் கோரிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவதை முல்லா என்பவர் படம் பிடித்தார். இதனை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு குழு அடையாளங்களற்ற ஒரு வேனின் பின்புறத்திலிருந்து இறக்கப்பட்டு ஒரு படகுத்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, ஒரு சிறிய படகில் ஏற்றப்படுவது பதிவாகியிருந்தது. பின்னர், அவர்கள் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிரீஸ் கடலோரக் காவல்படை படகுக்கு மாற்றப்பட்டு, நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கு ஒரு மிதவையில் ஏற்றப்பட்டுக் கைவிடப்பட்டனர். இந்தக் காட்சிகளை பிபிசி சரிபார்த்துள்ளது. கிரீஸ் கடலோரக் காவல்படையின் சிறப்பு நடவடிக்கைகளின் முன்னாள் தலைவரான டிமிட்ரிஸ் பால்டகோஸிடம் இவற்றைக் காட்டியது. நேர்காணலின் போது, அந்தக் காட்சிகள் எதைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி அவர் பேச மறுத்துவிட்டார். உரையாடலின் போது, கிரீஸ் கடலோரக் காவல்படை எப்போதும் சட்டவிரோதமான எதையும் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறுத்திருந்தார். ஆனால், ஒரு இடைவேளையின் போது, அவர் காட்சியில் பதிவாகாத யாரிடமோ கிரேக்க மொழியில் பேசுவது பதிவானது: “நான் அவர்களிடம் அதிகமாக எதுவும் சொல்லவில்லை, இல்லையா?... இது மிகவும் தெளிவாக இருக்கிறது. இது ஒன்றும் அணு இயற்பியல் அல்ல. அவர்கள் ஏன் பட்டப்பகலில் அதை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை... அது... தெளிவாகச் சட்டவிரோதமானது. இது ஒரு சர்வதேச குற்றம்." இந்தக் காட்சிகள் தற்போது கிரீஸின் சுதந்திர தேசிய வெளிப்படைத்தன்மை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சமோஸ் தீவை அடிப்படையாகக் கொண்ட ரோமி வான் பார்சன் என்ற புலனாய்வுப் பத்திரிகையாளரிடம் பிபிசி பேசியது. டேட்டிங் செயலியான ‘டிண்டர்’ மூலம் கிரீஸ் சிறப்புப் படையின் உறுப்பினர் ஒருவருடன் அவர் பேசத் துவங்கியதாகக் கூறுகிறார். ‘போர்க்கப்பல்’ என்று அழைக்கப்பட்ட ஒரு கப்பலிலிருந்து அந்த உறுப்பினர் பார்சனை அழைத்தபோது, பார்சன் அவரது வேலையைப் பற்றிக் கேட்டார். அவரது படைகள் அகதிகள் படகைக் கண்டபோது என்ன செய்தது என்பதையும் சொன்னார். அவர்கள் ‘அவர்களைத் திருப்பி விரட்டுகிறார்கள்’ என்று பதிலளித்த அவர், அத்தகைய உத்தரவுகள் ‘அமைச்சரிடமிருந்து வந்தவை’ என்று கூறினார். அவர்கள் ஒரு அகதிகள் படகை நிறுத்தத் தவறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். ‘புஷ்பேக்’ என்று அழைக்கப்படும் இச்செயல்பாட்டை கிரீஸ் எப்போதும் மறுத்து வந்திருக்கிறது. பல குடியேறிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழையும் வழி கிரீஸ் தான். கடந்த ஆண்டு, ஐரோப்பாவில் 2,63,048 குடியேறிகள் கடல் வழியே வந்தனர். அதில் 41,561 பேர் (16%) கிரீஸ் வந்தனர். கிரீஸில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் நுழைவதைத் தடுக்க 2016-இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 2020-இல் அதைச் செயல்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. கிரீஸ் கடலோரக் காவல்படை சொல்வது என்ன? எங்கள் விசாரணையின் கண்டுபிடிப்புகளை கிரீஸ் கடலோரக் காவல்படையிடம் காண்பித்தோம். ‘அதிகபட்ச நெறிமுறைகளுடன், மனித உயிர் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான பொறுப்புணர்வு மற்றும் மரியாதையுடன் அயராது உழைப்பதாக’ அவ்வமைப்பு பதிலளித்தது. ‘நாட்டின் சர்வதேசக் கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதாகக்’ அது கூறியது. மேலும், “2015 முதல் 2024 வரை, கிரீஸ் கடலோரக் காவல்படை, கடலில் 6,161 சம்பவங்களில் 2,50,834 அகதிகள்/தஞ்சம் கோரிகளை மீட்டுள்ளது. இந்த உன்னதப் பணியின் குறையில்லா நிறைவேற்றம், சர்வதேசச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்றது. கிரீஸ் கடலோரக் காவல்படை, மத்தியதரைக் கடலில் ஒரு தசாப்த காலத்தில் நடந்த மிகப்பெரிய தஞ்சம் கோரிகளின் கப்பல் விபத்திற்கு ஒரு காரணமாக இருந்ததற்காக முன்னர் விமர்சிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் கிரீஸின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட மீட்புப் பகுதியில் அட்ரியானா என்ற அந்தக் கப்பல் மூழ்கியதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், அந்தப் படகு பிரச்னையில் இருக்கவில்லை என்றும், அது பாதுகாப்பாக இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும், அதனால் கடலோரக் காவல்படையினர் அதனை மீட்க முயற்சிக்கவில்லை என்றும் கிரீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c511z2py1nko
  9. 17 JUN, 2024 | 05:32 PM (இராஜதுரை ஹஷான்) சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிப்பது குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு கிடையாது. அரசியலமைப்பு பேரவையை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனச் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் பொருளாதாரம் இன்றும் கத்தி முனையில் தான் உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. வங்குரோத்து நிலைக்குப் பின்னர் வெளிநாட்டுக் கடன் செலுத்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசமுறை கடன் செலுத்தாத காரணத்தால் சேமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்காலிகமான ஓய்வு மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் நடுத்தர மக்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊழல் ஒழிப்பு குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. மக்களை நெருக்கடிக்குள்ளாகி அறவிடப்படும் வரி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை, பாதுகாக்கப்படுவதில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. இன்னும் 30 நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை விடுக்க வேண்டும். அரசியலமைப்பு பேரவை நாளை செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 41 ஆவது உறுப்புரையின் பிரகாரம் உயர் பதவி நியமனங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அனுமதித்தல் அல்லது மீளாய்வு செய்தல் அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகும். பதவிக் காலத்தை நீடிப்பதை அனுமதிப்பதும் அல்லது ஆராய்வதும் பேரவையின் செயற்பாடல்ல. இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பில் இதுவரை 47 சட்டமா அதிபர்கள் பதவி வகித்துள்ளார்கள். இவர்களில் ஒருவரது பதவிக் காலம் ஒரு நாள் கூட நீடிக்கப்படவில்லை. பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் முறையாகச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்கள். தற்போதைய சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் 48 ஆவது சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீட்டிக்க ஜனாதிபதி ஏன் அக்கறை கொள்ள வேண்டும். பதவிக் காலம் நிறைவடைந்தவரின் பதவிக் காலத்தை நீடிக்கும் போது அந்த நபர் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சார்பாகச் செயற்படுவார். சட்டமா அதிபர் பதவி இன்றியமையாதது. ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் பதவி மீதான மக்கள் நம்பிக்கை சிதைவடையும். சட்டமா அதிபர் திணைக்களத்தையும் ஜனாதிபதி தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். https://www.virakesari.lk/article/186299
  10. ஆடுகளங்களையோ, போட்டி அட்டவணையையோ குறைகூற - வனிந்து ஹசரங்க மறுக்கிறார் Published By: VISHNU 17 JUN, 2024 | 08:47 PM (நெவில் அன்தனி) இலங்கையில் தோல்விகளுக்கு அமெரிக்க ஆடுகளங்களையோ போட்டி அட்டவணையையோ இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குறைகூற மறுத்துள்ளார். 'நாங்கள் விளையாடிய அதே ஆடுகளங்களில்தான் மற்றைய அணிகளும் விளையாடின. எங்களது விளையாட்டு வியூகங்களை மாற்றிக்கொள்வது எமது கடமை' என அவர் குறிப்பிட்டுள்ளார். ரி20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பமாவதற்கு சுமார் 10 தினங்களுக்கு முன்னர் இலங்கை அணி அமெரிக்கா சென்றடைந்தது. அத்துடன் அங்கு நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை விளையாடியிருந்தது. ஆனால், அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொள்ள முடியாமல் போனதாக வனிந்து ஹசரங்க உணர்கிறார். துடுப்பாட்டத்தில் திடீர் சரிவு கண்டதால் இலங்கையின் உலகக் கிண்ண முயற்சி சிதைக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூயோர்க் நசவ் கவுன்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களை மாத்தரமே பெற்றது. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷுக்கு எதிராக டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. ஆனால், டெத் ஓவர்களை வீசுவதற்கு முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போனதால் இலங்கை தோல்வியைத் தழுவியது. நேபாளத்துடனான ஆட்டம் மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டதும் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு சிதறிப்போனது. ஒருவாறு நெதர்லாந்துடனான போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றிபெற்று இலங்கை ஆறுதல் அடைந்தது. அல்லது வெறுங்கையுடன் நாடு திரும்ப நேரிட்டிருக்கும். இந்த உலகக் கிண்ண போட்டியின்போது நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிட்டமை, நான்கு மைதானங்களில் விளையாட நெரிட்டமை உட்பட இலங்கை எதிர்கொண்ட அசௌகரியங்கள் பற்றி கூறப்பட்டது. ஆனால், அவற்றை எல்லாம் புறந்தள்ளி வைத்த ஹசரங்க, அணியின் வெளியேற்றத்திற்கு அணிதான் பொறுப்பு என்றார். 'ஒரு போட்டியில் தோல்வி அடையும்போது ஆடுகளங்கள் மற்றும் பிற விடயங்களைக் குறை கூறலாம், ஆனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, அது சரியல்ல' என்றார் அவர். 'மற்றைய அணிகளும் அதே ஆடுகளத்தில்தான் விளையாடின. நாங்கள் விளையாடும் முறையை மாற்றுவது எங்களது கடமையாகும்.. நாங்கள் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நாங்கள் தேவையான மாற்றங்களைக் கடைப்பிடிக்கவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் எமது பிரதான குறைபாடு' என அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் நொர்த் கரோலினாவில் சிறிய பயிற்சி முகாமில் இலங்கை ஈடபட்டது. ஆனால் அது போதுமானதாக அமையவில்லை என்பதே ஹசரங்காவின் கூற்றாகும். 'எங்களை பத்து தினங்களுக்கு முன்னர் இங்கு அழைத்துவந்து பயிற்சிகளில் ஈடுபட ஏற்பாடு செய்த கிரிக்கெட் சபைக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். அது ஒரு பெரிய விடயம். நிலைமைகள், காலநிலை, நேர மாற்றம் ஆகியவற்றுக்கு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வது முக்கியம். 'என்றாலும், நாங்கள் அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றபோது, ஆடுகளங்கள் ஒரே தன்மையாக இருக்கவில்லை. சில நாடுகளில் ஆடுகளங்கள் இடத்திற்கு இடம் ஒரே மாதிரியாக இருக்கின்றபோதிலும் அமெரிக்காவில் அப்படி இல்லை. 'நாங்கள் எங்களால் முடிந்தவரை எங்களை மாற்றிக்கொள்ள முயற்சித்தோம். துரதிர்ஷ்டவசமாக நியூயோர்க்கில் எங்களது முதல் போட்டி அமைந்தது. அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாவது போட்டிக்காக நாங்கள் டலாஸுக்குச் சென்றோம், அந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அணி என்ற வகையிலும் அணித் தலைவர் என்ற வகை யிலும் அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்கவேண்டும்' என வனிந்து ஹசரங்க மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/186313
  11. மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள் - ராகுல் காந்தி Published By: DIGITAL DESK 3 17 JUN, 2024 | 02:04 PM ''இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் எல்லாம் ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை'' என மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தியாவில் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.‌ காங்கிரஸ் கட்சி நூறு இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் மின்னணு இயந்திரங்களை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், '' இந்தியாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டி. அவற்றை ஆய்வு செய்ய ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை. நம்முடைய தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படை தன்மை பற்றி தீவிர கவலைக்குரிய விடயங்கள் கேள்வியாகவே உள்ளன'' என அதில் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/186272
  12. டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசமை கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள் - சேவாக் புதிய யோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டித் தொடரை போலவே, 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்தும் பாகிஸ்தான் விரைவிலேயே வெளியேறிவிட்டது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான வெற்றியுடன் பாகிஸ்தானின் பயணம் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்த அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. ஆனால், அந்த அணியால் சூப்பர் 8-க்கு முன்னேற முடியவில்லை. கேப்டன் பாபர் ஆசம் மீது பாகிஸ்தானின் அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அயர்லாந்து அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் மீண்டும் மிடில் ஆர்டர் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 2 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 குழுநிலை ஆட்டத்தில் அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் ஆசம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, "அணியின் வீரர்கள், நிர்வாகம் என அனைவரும் சோகமாக உள்ளனர்" என்று பாபர் கூறினார். "எங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை. எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்கள் கூட்டு செயல்திறன் குறைவாக இருந்தது. இந்த தோல்விக்கு தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் காரணம் சொல்ல முடியாது. நாங்கள் சில சமயங்களில் நல்ல பேட்டர்களாகவும் மற்ற நேரங்களில் நல்ல பந்து வீச்சாளர்களாகவும் இருந்தோம். நீங்கள் இந்த இடத்தில் ஆடுகளத்தை பார்த்தீர்களானால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் எங்கள் பேட்டிங்கை கொண்டு அதனை எதிர்கொள்ள முடியவில்லை. ” என்றார் கேப்டன் பதவி குறித்து பேசிய பாபர் ஆசம், "முன்பு இதுபோன்ற சூழலில், என்னால் முடியாது நினைத்தபோது நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது நானாக அறிவித்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதனை ஏற்றுக் கொண்டது. " என்று குறிப்பிட்டார். மீண்டும் இதே முடிவுடன் கிரிக்கெட் வாரியத்தை நான் அணுகினாலும் உட்கார்ந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இறுதி முடிவை எடுக்கும்" என்றார். பாகிஸ்தான் அணியின் டி20 பயணம் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் கட்டத்தில், பாகிஸ்தான் முதல் இரண்டு முக்கியமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு கடைசி இரண்டு போட்டிகளில் வென்றது. ஆனாலும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. முதல் போட்டியில், சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன் என்ற இலக்கைக் கூட துரத்திப் பிடிக்க முடியாமல் தோற்றுப் போனது. இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய `குரூப் ஏ’ பிரிவில் பாகிஸ்தான் இருந்தது. இந்த `குரூப் ஏ’ குழுவில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் குழுவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்தானது, இதன் மூலம் அமெரிக்கா ஒரு புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர் பாகிஸ்தானின் பிரபல `டான்’ ஆங்கில நாளிதழின் விளையாட்டு செய்தியாளரான அப்துல் கஃபர் தனது எக்ஸ் தளத்தில், "2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் ஆசம் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் பாபர் ஆசமுக்கு கேப்டன் பதவியை வழங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல பெரிய ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. 2017-ம் ஆண்டு முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் தலைமையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டது. 2009 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணி பற்றிய மீம்ஸ்களும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், பாபர் ஆசம் கேப்டன் பதவி குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் அணி பற்றி சேவாக் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கும் பாகிஸ்தான் பேட்டிங் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சேவாக் கூறுகையில், "பாகிஸ்தான் அணி பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு தேவை.” என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக், டென் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "பாபர் ஆசம் இடத்தில் நான் இருந்திருந்தால், இப்போதே ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியிருப்பேன்” என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறுகையில், "அயர்லாந்துக்கு எதிரான இன்னிங்ஸை பாபர் ஆசம் வழிநடத்திய போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர், டெயில் எண்டர்களே (கீழ் வரிசை பேட்ஸ்மேன்களே) முப்பது சதவீத ரன்களை எடுத்தனர்” என்று கூறினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், "பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணம் முடிந்தது’’ என்று ட்வீட் செய்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cx99knn8v18o
  13. 17 JUN, 2024 | 08:43 PM தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க லண்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள். நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக இருக்கின்ற தேவையை அதற்கு இணையாக விளங்கிக்கொண்டவர்களே நாங்கள். அண்மைக்கால உலக வரலாற்றில் 2022 இல் மிகவும் பலம்பொருந்திய மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மக்கள் தன்னிச்சையாக வீதியில் இறங்கத் தொடங்கினார்கள். இளைஞர் மாதக்கணக்கில் ஆட்சியாளனுக்கு எதிராகப் போராடினார்கள். வெளிநாடுகளிலுள்ள நீங்கள் அதற்கான உதவிகளை புரிந்தீர்கள். வெற்றியைப் பிரார்த்தித்தீர்கள். கோட்டாபய வீட்டுக்குச் சென்றார். போராட்டத்தின் இறுதியில் அரைவாசி எஞ்சியிருக்கிறது. பாராளுமன்றமும் கலைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாக அமைந்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய வீடு செல்கிறார். உலக வரலாற்றில் ஒருபோதுமே இடம்பெற்றிராதவாறு கோட்டாபயவை விரட்டியடிப்பதற்காக வந்த மக்கள் ஆணையிலேயே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகிறார். இன்று எமது நாட்டின் ஆட்சியென்பது திரிபடைந்த ஓர் ஆட்சியதிகாரமாகும். அன்று இலட்சக்கணக்கில் மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராக எழுச்சிபெற்றனர். அதனை வெற்றியில் நிறைவுசெய்ய இயலாமல் போயுள்ளது. எனினும் தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இன்று மக்கள் தேர்தல் வாய்ப்பு வரும்வரை அனைத்து துன்பதுயரங்களையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவோ அவருடைய கும்பலைச்சேர்ந்த எவருமோ தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருக்க தயாராகினால் உலக வரலாற்றில் இடம்பெறுகின்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியைத் தடுக்க ரணில் விக்கிரசிங்கவிற்கு முடியாமல்போய்விடும். ஆட்சியாளன் தேர்தல் தொடர்பில் பதற்றமடைந்திருப்பது வேறு காரணத்தினால் அல்ல, வரலாற்றில் இற்றைவரை அதிகாரம் கைமாறிய விதம் மாற்றமடைந்து பொதுமக்களின் இயக்கமான தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கைமாறி வருவதாலாகும். ஒன்றுசேரக்கூடிய அனைவருமே தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள். இரண்டு கோப்பைகளில் உள்ள புறூட்செலட்டை ஒரே கோப்பையில் போட்டுக்கொள்ள தற்போது பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். இற்றைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கபீர் ஹசீமின் வீட்டில் ராஜித சேனாரத்னவுடன் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினைந்துபேர் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டால் என்.பி.பி. வெற்றிபெறும். அது அபாயமாம். முகத்துவார மீன்பிடித் துறைமுகம் 25 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. அரசாங்க மதிப்பீட்டுத் தொகையைவிடக் குறைவான தொகைக்கே குத்தகைக்கு விடப்பட்டது. புலனாய்வு அறிக்கைகள் அனைத்துமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திடம் வழக்கு அறிக்கைகளும் இருக்கின்றன. அதனால் மக்களின் மாற்றம் ராஜித சேனாரத்னவிற்கு அபாயகரமானதென்பது உண்மையாகும். ஊழல் பேர்வழிகளுக்கு குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு என்.பி.பி. ஆட்சிக்கு வருவது ஆபத்தானதாகும். அதனால் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த தரப்புகள் இரண்டும் இரண்டாக முன்வருவது பயங்கரமானது, அதனால் ஒன்றாக ஒன்றுசேர்ந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கீரியும் பாம்பும் அடித்துச் செல்லப்படும். ஒரு துண்டு மரக்கட்டை அகப்பட்டால் கிரியும் பாம்பும் அதில் ஏறும். ரணிலும் மகிந்தவும் ஒரே கட்டைத்துண்டில் ஏறியிருக்கிறார்கள். இந்த வெள்ளம் என்ன? தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்ட மாபெரும் மக்கள் வெள்ளம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏறுமளவுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கை வரலாற்றில் எல்லா சனாதிபதிகளும் ஒன்றாக ஏறுகின்ற மேடையை நாங்கள் சந்திக்கிறோம். சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டாபய , ரணில் ஆகியோரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரே மேடையில் சந்திக்கலாம். அவர்கள் 1994 இல் இருந்து 2024 வரை 30 வருடங்களாக பிரிந்து இருந்த குழுவினராவர் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தரித்து நின்றவர்களாவர். ஆனால் இன்று ஒரே மேடைக்கு ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்துவிதமான வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஊடக அலைவரிசைகளின் நடத்தைகள் சாதாரணமான காலங்களை விட அப்பால் சென்றுள்ளன. செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதில் உள்ளவற்றைவிட அதிகமாக வாசிக்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. மென்மேலும் மக்களின் நம்பிக்கை ஈடுபாடுகளை உறுதிசெய்து கொள்வதுதான் வெற்றிக்காக எமக்கிருக்கின்ற ஒரே பாதை. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்திப்பிற்கு வந்திருப்பதன் மூலமாக அந்த ஈடுபாட்டினை நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கத்தயார் என்பதையே பறைசாற்றுகின்றது. அதற்காக இடையீடு செய்வோம் என உங்களுக்கு அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் நாட்டுக்கு என்ன நோ்ந்துள்ளது? பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த, பாரிய குற்றச்செயல்கள் நிறைந்த, சட்டத்தின் ஆட்சி முற்றாகவே சீரழிந்த, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே அச்சம், அவநம்பிக்கை, குரோதம் வளர்ச்சியடைந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களுக்கு முறையான உணவை பெற்றுக்கொள்ள முடியாது, வைத்தியசாலையில் மருந்து மாத்திரைகள் இல்லாத, இளைஞர்களின் எதிர்காலம் முற்றாகவே, அழிக்கப்பட்ட கல்வி நாசமாக்கப்பட்ட, போதைப்பொருட்கள் நிறைந்த ஒரு தேசம் எம்மெதிரில் உருவாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு மக்களும் தாய்நாடும் அனுபவிக்கின்ற கவலைக்கிடமான நிலைமை எமது இதயங்களால் உணரப்படுமாயின், எமது பிரஜைகளின் வேதனைகள் எமது செவிகளுக்கு கேட்குமானால், இதயம் படைத்த மனிதர்களாயின் எம்மெவருக்கும் இந்த நிலைமையின் மத்தியில் பாராமுகமாக இருக்கின்ற தார்மீக உரிமை கிடையாது. நாம் அனைவரும் செய்யக்கூடிய அனைத்தையுமே புரிந்து இந்த மாற்றத்தை அடைவதற்கான முன்னோடி செயற்பொறுப்பின் பங்காளிகளாக மாற வேண்டும் அதற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எங்களுடைய தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பழைய, தோல்விகண்ட அரசியல் பயணப்பாதையை மாற்றயமைக்க வேண்டும். இந்த நெருக்கடியை அரசியலே நிர்மாணித்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள எவரேனும் சிந்திப்பாரெனில் ஒரு பாடசாலைக்கு ஏதேனும் ஒரு உதவியை செய்ய, கல்விப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென அப்படி தீர்க்க முடியாது. எனினும் நீங்கள் சில பிள்ளைகளுக்காவது உதவி செய்வது பெறுமதியானது. நீங்கள் நினைப்பீர்களானால் ஒன்றுசோ்ந்து வீடற்ற ஒருவருக்கு வீட்டை அமைத்து கொடுத்து உதவவேண்டுமென்றால் அந்த உதவியைச் செய்யுங்கள். எனினும் அதன் மூலமாக இலங்கையின் வீடமைப்பு பிரச்சினை தீரமாட்டாது. உங்களுடைய அன்பருக்கு, உறவினருக்கு மருந்துகளை அனுப்பிவைக்கலாம். ஆனால் அதன் மூலமாக இலங்கையின் சுகாதாரப் பிரச்சினை தீரமாட்டாது. இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நீங்களும் நாங்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயமாக ஆற்றவேண்டிய செயற்பொறுப்புதான் எமது நாட்டின் இந்த அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை தீர்மானகரமான திருப்புமுனையாக மாற்றுவோம். இதுவரை பாய்ந்து சென்ற அரசியல் பயணப்பாதையை மாற்றியமைக்க திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். தோ்தல் பெரும்பாலும் செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும். இந்த அரசியல் மாற்றத்தை நாங்கள் செய்வோம். அதன்போது எம்மிடம் கையளிக்கப்படுகின்ற பொறுப்பினை நாங்கள் ஆற்றுவோம். எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாறுமே பிறருக்கு எதிரான அரசியலாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெற்கின் சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த இயக்கமானது மற்றவருக்கு எதிரானதாகவே செயற்படுகின்றது. 2005 எனில் வடக்குக்கு எதிராக. 2010 எனில் தமிழனுக்கு எதிராக. 2019 எனில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக. அரசாங்கங்கள் அவ்வாறே அமைக்கப்பட்டன. தெற்கிலுள்ள கட்சிகள் வடற்கிற்கு எதிராகவும் வடக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராகவும் கட்டியெழுப்பப்படுகின்றன. கிழக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராக கட்டியெழுப்பப்படுகின்றன. ஆனால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற நீங்கள் மற்றவருக்கு எதிரான அரசியலொன்றை காண்கிறீர்களா? மற்றவருக்கு எதிரான அரசியல் கட்டியெழுப்பப்படுவதன் மூலமாக எக்கச்சக்கமாக யுத்தங்களும், முரண்பாடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கை மண் நனையும்வரை இரத்தம் பெருக்கெடுத்தோடியது. ஆறுகள் நிரம்பி வழியும்வரை வடக்கிலும், தெற்கிலும் தாய்மார்களின் கண்ணீர் வழிந்தோடியது. இந்த ஒருவருக்கொருவர் எதிரான அரசியல் எமது நாட்டை ஓர் அங்குலமேனும் முன்னோக்கி நகர்த்தமாட்டாது. தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவம் செய்வது தேசிய ஒற்றுமைக்கான அரசியலையாகும். அதனை நாங்கள் வெற்றிக்கொள்ள வேண்டும். 1948 இல் நாங்கள் சுதந்திரம் பெற்றோம். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரமாண்டமான நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற, பல்வேறு மதங்களை பின்பற்றுகின்ற, பிரதேச ரீதியான பிளவுகள் நிலவின. இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரு கொடியின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதன் பெறுபேறாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் இந்தியாவின் குடியரசு தலைவரானார். அதன் பெறுபேறாக மன்மோகன் சிங் போன்ற ஒருவர் பிரமராகிறார். அதன் பெறுபேறாக சாதியில் குறைந்தவரென கருதப்பட்ட ஒரு பெண் இந்தியாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக விளங்கிய காலத்திலும் 1948 ன் பின்னரும் எமது நாட்டில் நிலவியது பிளவுபடுத்தும் அரசியலாகும். அதிலிருந்து எமக்கு என்ன கிடைத்தது? முப்பதுவருடகால யுத்தம் உருவாகியது. பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகிறது. அதுதான் பிளவுபடுத்துகின்ற அரசியல். நாங்கள் இலங்கையில் புதிய அரசியல் ஒன்றை உருவாக்குவோம். இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்கான கொடியை ஏந்திய புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டுவோம். அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் சில சிறிய குடும்பங்களின் கைகளில் குவிந்துள்ளன. பண்டாரநாயக்க, ஜயவர்த்தன, விக்கிரமசிங்க, ராஜபக்க்ஷ, சேனாநாயக்க. நாட்டின் ஆட்சிக்கான சுக்கான் சில குடும்பங்களின் கைகளிலேயே தேங்கியிருந்தன. பிரதேச அரசியல், மாவட்ட அரசியல், ஒரு சில குடும்பங்களின் கைகளில் குவிந்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ ஒரு கட்சியின் தலைவராக மாறியமைக்கான ஒரே காரணி அவர் ஒரு ஜனாதிபதியின் மைந்தனாக அமைந்தது மாத்திரமே. உயர்மட்ட அரசியலும் கீழ்மட்ட அரசியலும் ஒரு சில குடும்பங்களின் கைகளை மையமாகக் கொண்டிருக்கின்றன. எமது அரசியலுக்கு புதிய மரபணுக்கள் சோ்க்கப்பட வேண்டும். அண்மையில் நாமல் ராஜபக்க்ஷ அவர்களின் குடும்ப அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன எனக்கூறினார். புதிய இளைஞர் தலைமுறையின் கைகளுக்கு, புதிய கருத்துக்களால் கட்டி வளர்க்கப்படுகின்ற மனிதர்களின் கைகளில் எமது அரசியலை நெறிப்படுத்துவதற்கான சுக்கான் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த அரச அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் எடுப்பது பல பரம்பரையாக இதனை வைத்துக்கொள்வதற்காக அல்ல. எமக்கு மிகவும் சுருக்கமான அத்தியாயம் ஒன்றே இருக்கிறது. அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை நாங்கள் எடுத்து புதிய பரம்பரையின் கையில் ஒப்படைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியாகிய எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு. இசெட் தலைமுறையின், அல்பா தலைமுறையின் பிள்ளைகளாகிய எமது அறிவு, மனோபாவம், விருப்புவெறுப்புக்கள் பழையவையாகும். நவீன இளைஞன் வித்தியாசமானவன். ஆனால் நவீன நிலைமையின் நோக்கங்கள் எமது நாட்டின் அரசியல் அதிகாரத்துடன் ஒத்துவருவதாக அமைவதில்லை. இந்த பழங்குடித்தன்மையிலான அரசியல் அதிகாரநிலை புதிய இளைமைக்கு அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இளைமையின் விருப்புவெறுப்புகளை விளங்கிக்கொள்ளக்கூடிய ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்களெனின் அந்த இளைமைக்காக கட்டியெழுப்பப்படுகின்ற உழைப்புச் சந்தையை கையகப்படுத்த அவசியமான திட்டமொன்றை வகுப்பார்கள். ஒரு தேசம் என்ற வகையில் நாங்கள் புதிய உலகத்துடன் ஒன்றிணைவதில் தோள்வி கண்டுள்ளோம். எமது நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகின்ற ஆட்சியொன்று அவசியமாகும். நீங்கள் வீசாக்காலப்பகுதி முடிவடையும்போது எவ்வளவு சிந்திப்பீர்கள்? எனினும் உங்களுக்கு தெரியும் டயனா குடியுரிமை இன்றி, வீசாக்காலம் கடந்து இருந்த நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து இராஜாங்க அமைச்சர் பதவியொன்றைக்கூட வகித்தார். அவ்வாறு அமையக்காரணம் சட்டம் அரசியல் அதிகாரநிலைக்கு கட்டுப்பட்டிருப்பதாலாகும். டயனாவுக்கு குடியுரிமை கிடையாதென்பதை முதலில் அறிந்தவர் டயனா ஆவார். இரண்டாவது ரணில். தனக்கு உரித்தாகாத சிறப்புரிமைகளை அறிந்திருந்து அனுபவிக்கிறார். அது எளிமையானதல்ல. பிரசன்ன ரணவீர இராஜங்க அமைச்சர் எயார் போர்ட்டில் ஒருவரை தாக்குகிறார். சட்டம் அமுலாகவில்லை. ஒட்டுமொத்த கட்டுப்பாடும் குற்றச்செயல் புரிபவர்களின் பிடிக்குள் அகப்பட்ட இலங்கை தான் இருக்கிறது. பாரியளவிலான நிதிசார் குற்றச்செயல் புரிந்தவர்கள், மனித படுகொலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நூரித் தோட்டத்தின் தோட்டத்துரை படுகொலை வழக்கில் 13 பேருக்கு மரணதண்டனை உரித்தானது. ஹோகந்தர குடும்பத்தில் ஐவரின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது. எனினும் லசந்த படுகொலை, தாஜுடீன் படுகொலை, எக்நெலிகொட கடத்திச் சென்றமை, கீத்நொயார், உபாலி தென்னகோன், போத்தல ஜயந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் இன்றும் கிடையாது. பரபரப்பினை ஏற்படுத்திய ஒவ்வொரு குற்றச்செயலையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்தது. கண்டுபிடிக்க முடியாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலினதும் ஒவ்வொரு படுகொலையினதும் பின்னால் அரசியல் இருக்கின்றது. எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதி செய்கின்ற நெறிமுறைகள் நிறைந்த சட்டத்தை மதிக்கின்ற ஆட்சியை நாங்கள் உருவாக்கவேண்டும். சீரழிந்த ஒரு பொருளாதாரமே எமக்கிருக்கிறது. நாங்கள் 20 ஆம் நூற்றாண்டை கைவிட்ட ஒரு தேசமாவோம். மனித நாகரிகத்தின் முக்கியமான காலகட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டு. தொழிநுட்பத்தின் பாரிய மாற்றங்கள் இடம்பெற்ற நூற்றாண்டாகும். நாங்கள் ஒரு தேசம் என்ற வகையில் பாரிய தொழிநுட்பத்தின் தொடர்பாடலின் மாற்றங்களை இலங்கைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலுக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டோம். எமக்கு பழைய பெருமைமிக்க வரலாறொன்று இருந்தது. மிகவும் முன்னேற்றகரமான நீர்பாசனத் தொழிநுட்பம், கட்டிடக்கலை, சீகிரியாவின் நகரநிர்மாண திட்டமிடல், மீகிந்தலையில் மருத்துவ அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான கத்தரிக்கோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமை பாராட்டிய நாங்கள் இன்று உலகில் மிகவும் வறுமையான நாடுகள் தொகுதிக்குள் வீழ்ந்துள்ளோம். பெருமைமிக்க வரலாற்றினை நவீனத்துவத்துடன் சீராக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. 76 வருடகால ஆட்சியாளர்களுக்கு தூரநோக்கொன்று இருக்கவில்லை. பொருளாதார நச்சுவட்டத்தில் நாங்கள் இறுகிப்போனோம். இந்த வட்டத்திலிருந்து நாங்கள் விடுபடவேண்டும். உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். IT தொழிற்துறை மிகமுக்கியமானதாகும். மிகவும் குறுகிய காலத்தில் 5 பில்லியன் பொருளாதாரத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ஆனால் அதனை விற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க திட்டவரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் அதற்கு இடமளிக்கவேண்டுமா? எங்களுடைய நிதி நிறுவனங்களில் அரசாங்கத்திற்கு உரிமையானதாக இருப்பது ஒன்றுதான். அது தான் காப்புறுதிச் சந்தையை நெறிப்படுத்துகின்றது. அதனையும் விற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான வளங்களிலிருந்துதான் தொலைத்தூர கிராமங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. வலுச்சக்திக்காக சிறந்த சாத்தியவளம் எம்மிடம் இருக்கிறது. 2030 அளவில் உலகின் எரிபொருளுக்கான கேள்வி உச்சக்கட்டத்தை அடையும். 2050 அளவில் உலகின் வலுச்சக்தி தேவை 65% - 85% இடைப்பட்ட அளவினை மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களே உற்பத்தி செய்யும். எமக்கு மன்னார் வடிநிலத்தில் மிகச் சிறந்த காற்றுக்கொள்திறன் இருக்கிறது. அது 45 கிகாவொற் கொள்ளலவாகும். தற்போது எமக்கு அவசியமாவது 4 கிகவொற் ஆகும். 2040 இல் 8 கிகாவொற் அவசியமாகின்றது. மிகச் சிறந்த சூரிய சக்தி சாத்தியவளம் நிலவுகின்றது. இவை அனைத்தையும் தற்போது சொச்சத் தொகைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். டெண்டர் கோராமல் காற்றாலை மின்சாரத்திற்கான அனுமதி அதானிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும். 20 வருடங்களுக்கான அக்ரீமண்ட் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதானியிடமிருந்து 8.26 சதம் டொலருக்கு வாங்குவார்கள். அதானி இந்தியாவுக்கு கொடுப்பது 3.5 சதம் டொலருக்காகும். அதானிக்கு இந்தியா கொடுப்பதும் டெண்டர் கோரியே. எம்மிடம் 31 விவசாய பண்ணைகள் இருக்கின்றன. 28,000 ஏக்கர்கள் இருக்கின்றன. இந்த 28,000 ஏக்கர்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனது இறுதிக்காலத்தில் அனைத்து வளங்களையும் விற்று தனது அமைச்சர்களுக்கு இயலுமானவரை திருட இடமளித்து செல்கின்ற பயணமொன்றை நிர்மாணித்துள்ளார். இந்த பயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில், கனிய வளங்களின் பேரில், சுற்றுலா கைத்தொழிலின் பேரில், வரலாற்றின் பேரில் எம்மால் புதிய பொருளாதார பயணத்தில் பிரவேசிக்க முடியும். தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இழந்த மறுமலர்ச்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்து அதிகாரம் கிடைக்கின்றது. எமக்கிருக்கின்ற ஒரே சக்தி உங்களின் ஒத்துழைப்பாகும்: பொதுமக்களின் சக்தியாகும். உங்களின் ஒத்துழைப்பு முன்னொருபோதும் இருந்திராதவகையில் இன்று அவசியமாகின்றது. உங்களுடைய பலம் கிடைக்காவிட்டால் இந்த பல்லாயிரக்கணக்கானோர் குழுமியுள்ள கூட்டத்தை எம்மால் நடத்த முடியாது. உங்களின் ஊக்கத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் பெரிதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். உங்களின் இடையீடு, உங்களின் பங்களிப்பு, உங்களின் உழைப்பின் பெறுபேறு இன்று கிடைத்துள்ளது. இது முடிவு அல்ல. இது லண்டனில் புதியதொரு ஆரம்பம். எம்மெதிரில் இருக்கின்ற மூன்றரை மாதக்காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். உங்களின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மீண்டும் மீண்டும் உரையாடுங்கள் நாங்கள் தொடர்ந்து உரையாடுவோம்: எழுதுவோம்: தோற்றுவோம். நீங்கள் முன்வைக்கின்ற பிரேரணைகளையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார். நாங்கள் ஒரே கூட்டு இயக்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் ஒன்று சேர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186300
  14. 17 JUN, 2024 | 08:42 PM ஒவ்வொரு நகர ஈரநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பொதுவான தன்மையைக் கருத்தில் கொண்டு ஈரநில முகாமைத்துவம் தொடர்பான பொதுவான தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்துமாறு ஈரநில மாநாட்டில் கலந்துகொண்டவகளுக்கு பிரதமர் பரிந்துரைத்தார். சர்வதேச ஈர நிலப் பூங்கா ஒன்றியத்தின் ஆசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மாநாட்டின் ஆரம்ப விழா இன்று திங்கட்கிழமை (17) காலை வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது. சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆசிய முதல் மாநாடு ஜூன் 14 முதல் 21 வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெறவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இதை ஏற்பாடு செய்கின்றது. உலகெங்கிலும் உள்ள பதினைந்து நாடுகளில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து கிட்டத்தட்ட நூறு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இலங்கை, கொரியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியன்மார், நியூசிலாந்து, நேபாளம், ஜப்பான், அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தாய்வான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றன. ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான நிர்வாகத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதும் மாநாட்டின் நோக்கமாகும். ரம்சா பிராந்திய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சூ செங் ஓஹ், சர்வதேச உறவுகள் முகாமையாளர் கிறிஸ் ரோஸ்டன் மற்றும் இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி என். எஸ். விஜேரத்ன உள்ளிட்ட உத்தியோகபூர்வமாக மாநாட்டை ஆரம்பித்தார்கள். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது: “ஈர நில உறவுகள் சர்வதேச - ஆசியா கண்டத்தின் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். சூழலுக்கு உகந்த சுற்றுலாவுக்கான ஈரநிலங்கள் மற்றும் ஈரநில மையங்கள்" என்ற கருப்பொருளின் கீழ் 15 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஈரநில வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஈரநில முகாமைத்துவம் குறித்த அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். இந்த முக்கியமான விடயத்தில் ஆற்றிய பணிகளுக்காகவும், இந்த மாநாட்டை வெற்றியடையச் செய்ததற்காகவும் பிரசன்ன ரணதுங்க மற்றும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு பெரிய நகரத்திலும் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கு ஈரநிலங்கள் அவசியம். இந்த மாநாடு நமது வர்த்தக நகரமான கொழும்புக்கும் பொருந்தும் என்பதால் மிகவும் முக்கியமானது. இந்த ஈரநிலங்கள் நகரத்தின் மனித நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பல நன்மைகளை வழங்குகின்றன.கொழும்பு ஈரநில வளாகம் ஆறு உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ளது. நிர்வாக தலைநகரம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொழும்பு மாநகர சபை, கடுவெல மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, மஹரகம நகர சபை மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களாகும். இந்த உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் கீழ் வரும் நகர ஈரநிலங்கள், நகரத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் முக்கிய அங்கமாகும். 150 ஆண்டுகள் பழமையான ஈர நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு இன்னும் 150 ஆண்டுகள் நீடிக்கும் என்பது உறுதி.பிரதம மந்திரி என்ற ரீதியில், உள்ளூராட்சிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்த விடயத்தில் நான் குறிப்பாக ஆர்வமாக உள்ளேன். காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தெற்காசியா முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன. எமது பிரதேசங்களில் ஊடகங்களின் மூலம் அழிவுகரமான விளைவுகளை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். காலநிலை மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது போல், காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றது. கொழும்பின் ஈரநிலங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரம் எதிர்கொள்ளும் எதிர்கால சவால்களைத் தணிக்க இன்றியமையாத வளமாக மாறி வருகின்றன. கனமழையின் போது, நகரின் ஈரநிலங்கள் மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கின்றன. நீர்ப் பம்பி போன்ற பசுமை, உள்கட்டமைப்பு வசதிகள் (புயல் நீர் முகாமைத்துவத்துவத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்) எங்கள் தலையீடுகள் மற்றும் முதலீடுகள் நகரத்தை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்து மாற்றுத் தீர்வுகளுக்குத் திரும்புகின்றன. நகர ஈரநிலங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் ரம்சா ஈரநில நகரம் அங்கீகாரத் திட்டத்தால் கொழும்பு ரம்சா ஈரநில நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஈரநில நகரமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் தலைநகரம் கொழும்பு ஆகும். சுற்றுலா என்பது பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது என்பதோடு நிலையான சுற்றுலா என்ற கருத்து உலகளவில் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுலா என்பது பல முக்கிய உலகளாவிய இலக்குகளை அடைவதற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய துறையாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்த முயலும் நிலையான அபிவிருத்தி, 1992 ரியோ புவி உச்சி மாநாட்டிலிருந்து முக்கிய கவனம் செலுத்துகிறது. எனவே, ஈரநில உறவுகளுக்கான முதல் சர்வதேச ஆசியா கண்டங்கள் மாநாட்டின் கருப்பொருள், "சூழலுக்கு உகந்த சுற்றுலாவுக்கான ஈரநிலங்கள் மற்றும் ஈரநில மையங்கள்" என்பது நிலையான வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் ஆணை மற்றும் முயற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது. மிக முக்கியமாக, நகர்ப்புற சூழலில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஈரநிலப் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொழும்பு நகரின் பிரதான ஈரநில மையமான தியசரு பூங்கா, ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் வசிப்பிட சமூகங்களின் தொடர்பு, கல்வி, பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வின் மூலம் புத்திசாலித்தனமான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முக்கியமான மற்றும் பொருத்தமான இடமாகும். ஈரநிலங்கள் அசுத்தமான நீரைச் சுத்தப்படுத்தவும், மீன், பறவைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான இனப்பெருக்கத் தளங்களை வழங்குவதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கவும் கடற்பாசியாக செயல்படுகின்றன. இது இறுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும். நகர மையங்களுக்கு அருகில் உள்ள ஈரநிலங்கள் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் வணிக வசதிகளின் வளர்ச்சி அழுத்தத்தில் உள்ளன. எனவே, நகர ஈரநிலத்தின் ஒவ்வொரு பகுதியும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, முக்கியமானது என்பதுடன் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை நாம் கூட்டாகச் சுமக்க வேண்டும். நகர ஈரநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானவை என்பதில் சந்தேகமில்லை, மேலும் அவை இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து நகரங்களுக்கும் பொதுவானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, தீர்வுகளின் பொதுவான தன்மையைக் கருத்தில் கொள்ளுமாறு மதிப்பிற்குரிய அறிஞர்களிடம் இந்த நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறேன். மாநாட்டில் பங்கேற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர். எஸ். சத்யானந்தா கூறும்போது, “ஈரநில மாநாட்டை நடத்துவது இலங்கைக்கு கிடைத்த பெரும் பாக்கியம். ஒரு நாடாக, இந்த மாநாடு நகர ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், உலகம் முழுவதும் உள்ள ஈர நிலங்களைப் பாதுகாக்க சிறப்பான உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இயற்கை அனர்த்தங்களின் போது கொழும்பு நகரைப் பாதுகாப்பதில் ஈரநிலங்கள் சிறப்பான பங்காற்றுகின்றன. நகர ஈரநிலங்கள் சுற்றுச்சூழல் ஆய்வு மையங்களாகவும் உள்ளன. நகர அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சு என்ற வகையில், ஈர நிலப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். அதனால்தான் நகரத் திட்டமிடலில் ஈரநிலப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். எதிர்காலத்தில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று வலியுறுத்தினார்." இயற்கை அனர்த்தங்களின் போது கொழும்பு நகரைப் பாதுகாப்பதில் ஈரநிலங்கள் சிறப்பான பங்காற்றுகின்றன. நகர ஈரநிலங்கள் சுற்றுச்சூழல் ஆய்வு மையங்களாகவும் உள்ளன. நகர அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சு என்ற வகையில், ஈர நிலப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். அதனால்தான் நகரத் திட்டமிடலில் ஈரநிலப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். எதிர்காலத்தில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று வலியுறுத்தினார்." இங்கு, கிழக்கு ஆசியாவிலுள்ள ரம்சா பிராந்திய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சு சேன்ங் ஓஹ் (Suh Seung Oh) தினேஷ் குணவர்தனவுக்கு நினைவுப் பரிசை வழங்கினார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஸ் ஹேரத், சுற்றாடல் ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186307
  15. இந்தியா - அமெரிக்கா உறவில் நெருடலை ஏற்படுத்திய வழக்கில் திருப்பம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்ற பன்னூன் நியூயார்க்கில் வசிக்கிறார். கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்தியாளர் 17 ஜூன் 2024, 10:46 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீக்கிய பிரிவினைவாத தலைவரை அமெரிக்காவில் கொல்லத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தியர் நிகில் குப்தா, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா, வார இறுதியில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி அறிக்கை கூறுகிறது. இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ அமெரிக்காவில் படுகொலை செய்ய சதி முயற்சி நடந்ததாக கூறப்படும் வழக்கை அமெரிக்கா விசாரித்து வருகிறது. குர்பத்வந்த் சிங்கைக் கொலை செய்ய ஒரு கொலையாளியை வேலைக்கு அமர்த்த முயன்றதாக நிகில் குப்தா மீது அமெரிக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வழக்கறிஞர்கள் குப்தாவை இந்திய அரசு அதிகாரி ஒருவர் இயக்கியதாக குற்றம் சாட்டுகின்றனர். குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை தொடர்பான சதிக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு அவர் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் குப்தா, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதைத் தடுக்க ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் அது செக். அரசியல் சாசன நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது. 52 வயதான நிகில் குப்தா, கொலை செய்ய ஆள் அமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சிறை பதிவுகளின்படி, அவர் தற்போது புரூக்ளினில் உள்ள பெடரல் பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குத் தொடர்பாக பேச அவரது வழக்கறிஞர்களை பிபிசி அணுகியது. ஆனால் செக். அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை. நவம்பரில் வட அமெரிக்காவில் இருந்த பன்னூன் உட்பட நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குப்தா மீது குற்றம் சாட்டினர். பன்னூனைக் கொல்வதற்காக குப்தா ஒரு கொலையாளிக்கு $100,000 (ரூ. 83,54,750) பணம் செலுத்தியதாக வழக்குரைஞர்கள் கூறினர். அந்த கொலையாளி ரகசியமாக சதி வேலையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறினர். இந்திய உச்சநீதிமன்றத்தை நாடிய நிகில் குப்தா அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்ற பன்னூன் நியூயார்க்கில் வசிக்கிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2% சீக்கியர்கள் உள்ளனர். பன்னூன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட `சீக்கியர்களுக்கான நீதி’ (Sikhs for Justice) என்ற அமைப்பில் பொது ஆலோசகராக பணியாற்றுகிறார். இந்திய அரசாங்கம் 2020 இல் பன்னூனை பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது. ஆனால் அவர் இந்த கூற்றை மறுத்தார். அவர் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் நெருக்கமாக இருந்தார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. நவம்பர் மாதம் வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று, பன்னூனுக்கு எதிரான சந்தேகத்திற்குரிய படுகொலைத் திட்டத்தை இந்தியாவின் உயர் மட்ட அதிகாரிகள் மேற்கொண்டதாக குறிப்பிட்டது. இந்த சதித் திட்டத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொண்ட இந்திய அதிகாரிகள், இதுபோன்ற செயல்கள் அரசின் கொள்கைக்கு மாறானது என்று கூறினர். குப்தாவுக்கு எதிரான கோரிக்கைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா அறிவித்தது. இந்நிலையில் நிகில் குப்தா அவரை விடுதலை செய்வதற்கும், நியாயமான விசாரணையை வழங்குவதற்கும் இந்திய உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் குப்தாவின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட குப்தாவின் மனுவில், சுய உரிமை கோரும் அமெரிக்க ஃபெடரல் முகவர்களால் தான் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய உச்சநீதிமன்றம் இந்த சர்ச்சையில் தலையிடாது என்றும், அதை அரசாங்கமே கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c722y8z810xo
  16. 17 JUN, 2024 | 05:31 PM இன்று சமூகத்தில் மீள முடியாத அழுத்தம் உருவெடுத்து மக்களைச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரி விதிக்கும் வரி சுனாமி விதிப்பது நின்றபாடில்லை. சர்வதேச நாணய நிதியம் கூறியதாக வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் சொல்வதை எல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அரசாங்கம் வினை திறன் மிக்கதாக இருந்தால், மக்களுக்காக நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது. இந்த அரசாங்கம் வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 243 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கெஸ்பேவ, இரத்தினபிட்டிய ஆனந்த புதிய மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் இறையாண்மையை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை. நல்ல நிலையிலிருந்து, நல்லதொரு கலந்துரையாடலுக்குச் சென்றால் மக்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் சரியாகச் செயல்படுத்த முடியும். மக்களின் அழுத்தத்தைக் குறைத்து, மக்களின் அசௌகரியங்களைக் குறைப்பதன் மூலம், ஒடுக்குமுறையான மக்கள் வாழ்க்கையை உருவாக்காமல் நல்ல ஆக்கப்பூர்வமான உடன்பாட்டை எட்ட முடியும். என்றாலும், இன்று பொம்மை அரசாங்கமே காணப்படுவதாகவும், இது இந்த யுகத்தின் அவலம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எமது நாட்டிற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தேவை. வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும். நாட்டுக்குப் பெற முடியுமான சிறந்ததை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டிஜிட்டல் ஶ்ரீலங்காவை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக அமைந்து காணப்படுகிறது. என்றாலும் தரம் 6-13 வரை சிங்களத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தரம் 1-13 வரை ஆங்கிலம் மொழியில் கட்டாயப் பாடமாக இது அமைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாடசாலைகளில் நிலவிவரும் மனித வளம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தே இவையனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். உலகின் புதிய போக்காக அமைந்து காணப்படும் பசுமைக் கல்வி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் பசுமையை மையமாகக் கொண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், பசுமையை மையமாகக் கொண்ட நிலையான அபிவிருத்தியில் கார்பனை வெளியேற்றும் நாடாக மாற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். பசுமை அபிவிருத்தி குறித்து பலர் பேசினாலும் அது களத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக அமையவில்லை. சகல பாடசாலைகளையும் மையமாக வைத்து, பசுமை நிலைபேறு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186298
  17. Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள். குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
  18. 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
  19. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
  20. உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
  21. இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்; அருட்பணி அருட்செல்வன்! 17 JUN, 2024 | 02:25 PM ( எம்.நியூட்டன்) இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும், தமிழர்கள் போரில் தேற்றுப்போன இனம் என்று கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன இனம் இல்லை என அருட்பணி அருட்செல்வன் தெரிவித்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா வின் 17ஆவது சர்வதேச மாநாடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நான் தமிழன், எங்கள் மொழி தமிழ்மொழி, தமிழ் இனத்தவன் என்கின்ற மாபெரும் சமூகத்திலே நாங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றோம். தமிழ் என்று சொல்லும்போது மொழியின் தொன்மை, பண்பாட்டு சிறப்புகள் நாங்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் தமிழனாக இந்த உலகிலே பூமி பந்தில் பிறந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் . இங்கு பல மொழியியலாளர்கள், ஆராட்சியாளர்கள் கூட தமிழ் மொழியில் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையிலே எம் இனம் தோற்றும் போன இனமாக பேரினிலே போராட்டத்திலே அழிவுகளைச் சந்தித்து நாங்கள் ஒடுக்கப்பட்ட தோற்றுப்போன விழிம்பிலே இருக்கிற இனமாக பார்க்கப்பட்டாலும், கருதப்பட்டாலும் நாங்கள் பண்பாடு சார்ந்த வாழ்வியலில் தோற்றுப் போன மக்கள் இனம் இல்லை மொழியினுடைய விசாலமான செழுமை சார்ந்து தோற்றுப்போன இனம் இல்லை அதனால் எங்களுக்கென்று கடமை பொறுப்பு இன்றும் அதிகமாகவே இருக்கின்றது. எங்களுக்குள் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றோம் , தமிழ் ஆராச்சியாளர்களாக இருக்கின்றோம் பெருமைக்குரிய விடையம் ஆனால் அதனையும் கடந்து எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் உணர்வு அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். அதுதான் இன்றைய காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசர அழைப்பாகவும் இருக்கின்றது தமிழன் என்று பேசலாம் ஆனால் தமிழர் உணர்வு என்கின்ற அந்த உள் உணர்வு தீயாகப் பற்றி எரியவேண்டும் தமிழன் என்று நாங்கள் பெரியளவில் பேசி தம்பட்டம் அடிக்கக முடியாத நிலைக்கு எங்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் ஏங்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்களிடம் இருக்கின்ற அந்த தமிழ் எண்ணங்களை தமிழ் சார்ந்த விழுமியங்களை தமிழ் சார்ந்த பண்பாடுகளை நாகரீகங்களை யாராலும அழித்து விடமுடியாது ஆகவே இந்த பண்பாடு சிந்திக்க தோன்றுகின்றது. ஒரு கட்டத்திலே தமிழ் பண்பாடுகளை கட்டிக் காக்கின்ற பாதுகாவலர்களாக இருந்தாலும் எங்களுக்கு என்று தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்ற பண்பாடு இருக்கின்றது என்கின்ற எண்ணங்களில் இருந்து ஒரு போது விலக முடியாது . எங்களின் பண்பாட்டை எண்ணெய்யும் தண்ணீராயும் கலக்கமுடியாதே அதே போன்று தாமரை இதழிலே விழுகின்ற தண்ணீர் துளி அதனனூடு சேர்ந்து கொள்ளாதோ ஓடும் புளியம் பழமும் போன்று இருப்பது போன்று நாங்கள் தனித்துவமான அதற்காககத்தான் நாங்கள் இந்தப் பண்பாட்டை எங்களின் தமிழ் மொழியின் சிறப்புக்களை நாங்கள் கண்டு பிடிக்க முனைவது போன்று இளைய தலைமுறையினரை பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/186270
  22. யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
  23. நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ் 17 JUN, 2024 | 12:17 PM (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது. இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. 7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப் https://www.virakesari.lk/article/186257
  24. Published By: VISHNU 16 JUN, 2024 | 10:48 PM வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குறித்த மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/186222
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த விஷயங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள தொலைத்தொடர்பு இயக்குனரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கருத்தரங்கில் அவர் இதைத்தெரிவித்தார். "வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் ஒன்றரை லட்சம் ஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஃபோன்கள் அனைத்தும் போலியானவை,” என்று கருத்தரங்கில் பேசிய அவர் குறிப்பிட்டார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். எனினும், போலி மொபைல் போன்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஏ.கே.எம்.முர்ஷித், பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். "ஒரு ஆபரேட்டரின் நெட்வொர்க்கில் இருந்த எட்டு லட்சம் மொபைல் போன்கள் ஒரே ஐஎம்இஐ குறியீட்டுடன் சில ஆண்டுகளுக்கு வேலை செய்தன," என்று அவர் கூறினார். ஆனால் ஒரே அடையாளத்தைக் கொண்ட பல செல்போன்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதே கேள்வி. ஐஎம்இஐ என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச மொபைல் கருவி அடையாளம் (IMEI) என்பது 15 இலக்க எண் ஆகும். மொபைல் கைபேசியை தயாரிக்கும் போது இந்த எண் அதில் ப்ரோக்ராம் செய்யப்படுகிறது என்று IMEI.info தெரிவிக்கிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த எண் 17 இலக்கங்களாகவும் இருக்கலாம். உண்மையில் இந்த எண் மொபைல் கைபேசியின் அடையாளமாக இருக்கிறது. இந்த கைபேசி எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது, எந்த பகுதியில் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த எண் காட்டுகிறது. "ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு ஐஎம்இஐ எண் மட்டுமே இருக்கும்படியாக மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில், மொபைல் தொடர்புக்கான குளோபல் சிஸ்டம் (ஜிஎஸ்எம்) வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று ஏ.கே.எம்.முர்ஷித் கூறினார். தொலைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதைக் கண்டுபிடிக்க ஐ.எம்.இ.ஐ எண் பயன்படுத்தப்படும். இது தவிர புதிய மொபைல் வாங்கும் போது, அந்த மொபைல் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்பதை ஐஎம்இஐ எண் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். உங்கள் போனில் *#06# டயல் செய்தால், உங்கள் மொபைலின் ஐஎம்இஐ நம்பர் உங்களுக்குத் தெரியும். நீங்கள் IMEI.info இணையதளத்திற்குச் சென்று இந்த எண்ணை உள்ளிட்டு செக் பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கத்தில் தொலைபேசி தொடர்பான தகவல்களை நீங்கள் காண்பீர்கள். ஐ.எம்.இ.ஐ மோசடி எவ்வாறு நிகழ்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றுவது என்பது பொதுவாக ஒரு உண்மையான எண்ணை குளோனிங் செய்வதாகும். மொபைல்களில் இரண்டு வகையான குளோனிங் அடிக்கடி செய்யப்படுகிறது. ஒன்று சிம் குளோனிங் மற்றொன்று ஐ.எம்.இ.ஐ குளோனிங் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் பிஎம் மொய்னுல் தெரிவித்தார். மொபைல்பேசியின் அடையாளத்தை நகலெடுக்க முடியும் என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். சாதாரண மக்கள் அதை எளிதாக செய்ய முடியாது. ஏனென்றால் இதில் பல தொழில்நுட்ப செயல்முறைகள் அடங்கியுள்ளன. போலி கைபேசிகள் தயாரிக்கும் சில சட்டவிரோத தொழிற்சாலைகளில் டாக்கா பெருநகர காவல்துறை (டிஎம்பி), சமீபத்தில் சோதனை நடத்தியது. "சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல்களை நகலெடுத்து கைபேசிகள் தயாரிக்கும் ஒரு போலி தொழிற்சாலையை 2020 ஆகஸ்டில் நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று டாக்கா பெருநகர காவல்துறையின் சைபர் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் துணை ஆணையர் முகமது ஜுனைத் ஆலம் சர்க்கார் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார். இதுபோன்ற மேலும் பல சோதனை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரங்கள் அளித்தார். "உள்ளூரில் இருக்கும் 'தொழிற்சாலைகளில்' ஓரிரு அறைகள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. கைபேசிகளின் பாகங்கள், வெளிநாட்டில் இருந்து வாங்கி அசெம்பிள் செய்யப்பட்டவை,'' என்றார் அவர். "ஐ.எம்.இ.ஐ ஸ்பூஃபிங் (போலியாக உருவாக்குவது) என்பது பட்டன் ஃபோன்களில் மிகவும் பொதுவானது. இது ஸ்மார்ட் ஃபோன்களில் இது குறைவாகவே உள்ளது. அதிக எண்ணிக்கையில் ஃபோன் அடையாள எண்களை பொருத்துவதற்கு வேறு வழிகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்," என்று அவர் கூறினார். "சட்டவிரோதமாக வெளியில் இருந்து வரும் அறியப்படாத அல்லது அநாமதேய பிராண்டுகளின் கைபேசிகளை இவ்வாறு தயாரிக்கமுடியும். இவற்றுக்கு ஒரே ஐஎம்இஐ எண் பயன்படுத்தப்படுகிறது," என்று பேராசிரியர் மொய்னுல் ஹுசைன் குறிப்பிட்டார். 'வெளிநாட்டு' நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டிருந்தால், அத்தகைய மென்பொருள் அல்லது தேவையான உபகரணங்களை அது வழங்கியிருக்கலாம்,'' என்றார் அவர். "ஒருமுறை தகவல் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டால், அதை மாற்ற முடியாது" என்று முர்ஷித் கூறினார். ”ஆனால் இது கான்ஃபிகர் (மாற்றியமைக்கக்கூடியது) செய்யக்கூடியதாக இருந்தால், போலி கைபேசிகளை சந்தைகளில் விற்பனை செய்யமுடியும்,” என்று அவர் குறிப்பிட்டார். இந்த மோசடி ஏன் நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய காலகட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய மொபைல் ஃபோன் கண்காணிப்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு ஆபரேட்டரின் டவரிலும் இணைக்கப்பட்டுள்ள மொபைல் ஃபோனின் ஐஎம்இஐயை, ஆபரேட்டர் நிறுவனம் அறிந்து கொள்ள முடியும் என்று பேராசிரியர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் பல கைபேசிகள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட கைபேசியை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். "அந்த நிலையில் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். இதன் விளைவாக மொபைல்பேசி கண்காணிப்புக்கு பதிலாக வேறு உத்திகளைக் கையாள வேண்டி இருக்கும்," என்று போலீஸ் அதிகாரி ஜுனைத் ஆலம் பிபிசி பங்களாவிடம் கூறினார். "இந்த காரணத்திற்காகவே சில குற்றவாளிகள் இத்தகைய கைபேசிகளை பயன்படுத்துகின்றனர்," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும் பெரிய அளவில் ஐ.எம்.இ.ஐ மோசடி நடப்பதற்கு காரணம் ’பொருளாதாரம்’ என்று ஏகேஎம் முர்ஷித் கூறுகிறார். ஒவ்வொரு ஐஎம்இஐ நம்பருக்கும் ஜிஎஸ்எம் சங்கம் ராயல்டி செலுத்த வேண்டும். "அந்த ராயல்டியைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தியாளர்கள், ஒரு ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் லட்சக்கணக்கான கைபேசிகளை உற்பத்தி செய்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார். இதற்கான தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஎம்இஐ தரவுத்தளத்திலிருந்து அசல் தொலைபேசியின் அதே ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு குளோன் செய்தால் கைபேசியின் தகவல் தரவுத்தளத்தில் கிடைக்கும். "இதன் விளைவாக சராசரி பயனருக்கு இதைப் புரிந்து கொள்ள வழியே இருக்காது" என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிஎம் மொய்னுல் ஹுசைன். இவற்றைத் தடுக்க அவர் இரண்டு வகையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறார். முதலாவது சட்ட நடவடிக்கை. இரண்டாவது, தொழில்நுட்ப நடவடிக்கைகள். ஒரு ஃபோன் பயனரின் கைகளுக்கு வந்துவிட்டால், தொழில்நுட்ப நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை என்று அவர் சொல்கிறார். அதனால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/c6pp1rn312do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.