Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி நன்றி அண்ணை.
  2. தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?
  3. 24 JUN, 2024 | 03:01 PM விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மையினப் பௌத்தர்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. குருந்தூர் மலையில் எவ்வித மதம் சார்ந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என நீதிமன்றம் கட்டளைகளைப் பிறப்பித்தபோதும் அந்த நீதிமன்றக் கட்டளைகளை பல தடவைகள் மீறி, பெரும்பான்மையின பௌத்தர்களால் பாரிய அளவில் பௌத்த விகாரை குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த விகாரை அகற்றப்பட வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த விகாரையை உடைத்தால் இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுமென பெரும்பான்மையின பௌத்தர்களின் பக்கம் துணை நின்று சட்டமா அதிபர் திணைக்களம் வாதிட்டு, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றவிடாமல் பாதுகாத்தனர். இதேபோல குருந்தூர் மலையில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் உரிய அரச திணைக்களங்களுக்கும், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களும் குருந்தூர் மலையில் பாதுகாப்பு கடமையிலிருக்கும் பொலிஸாரும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை நிற்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதியன்று பிறப்பித்த கட்டளையில், நீதிமன்றக் கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகளை குறித்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவர பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்தாகவும் முல்லைத்தீவு நீதிமன்றம் அந்தக் கட்டளையில் சுட்டிக்காட்டியிருந்தமையையும் இதில் முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்நிலையில் தற்போதும் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்படுதல், தீ மூட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பெரும்பான்மையின பௌத்தர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக தீ மூட்டி வழிபாடுகளை மேற்கொண்டபோது, பெரும்பான்மையின பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும், தொல்லியல் திணைக்களத்தினராலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது பெரும்பான்மையின பௌத்தர்கள் குருந்தூர் மலை தொல்லியல் பகுதிக்குள், எவ்வித தொல்லியல் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாது தீ மூட்டுதல் மற்றும் மரங்களை வெட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஆனால், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொல்லியல் திணைக்களமோ, வனவளத் திணைக்களமோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறாக குருந்தூர் மலை விவகாரத்திலே பெரும்பான்மையின பௌத்தர்கள் நீதிமன்றக்கட்டளைகளையும் சட்டங்களையும் மீறுகின்ற வகையில் செயற்படுகின்றனர். நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட அரச இயந்திரங்கள், மாறாக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பெரும்பான்மையின பௌத்தர்களுக்குத் துணைநிற்கின்றன. அதேவேளை நீதிமன்றக் கட்டளைகளைப் பின்பற்றி, சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளயும் ஏற்று அதன்படி செயற்படுகின்ற தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு பெரும்பான்மையின பௌத்தர்களால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களின் வழிபாடுகளைக் குழப்புவதற்கு பெரும்பன்மையின பௌத்தர்களுடன் இந்த அரச இயந்திரங்களும் உடந்தையாகச் செயற்படுகின்றன. இவ்வாறாக நீதிமன்றக் கட்டளைகளையோ, சட்டங்களையோ சற்றும் பொருட்படுத்தாத பெரும்பான்மையின பௌத்தர்களுடன் அரச இயந்திரங்களும் இணைந்துகொண்டு, தமிழர்களை வஞ்சிக்கின்ற செயற்பாடுகளே இங்கு இடம்பெறுகின்றன. இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம். குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் விகாரை கட்டப்பட்ட வரலாறு முல்லைத்தீவு நீதிமன்றம் குருந்தூர் மலையில் மதம் சார்ந்த கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என வழக்கின் ஆரம்பத்திலேயே கட்டளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு நீதமன்றில் அனுமதியைப் பெற்றது. இவ்வாறு அகழ்வாய்வுப் பணிக்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அகழ்வாய்வு இடம்பெறும் பகுதிக்குள் எவரும் நுழைய முடியாதெனத் தெரிவித்து, குருந்தூர் மலை வளாகத்தினுள் தமிழ்த் தரப்பை நுழையவிடாது தடுத்துவைத்துக்கொண்டு, தந்திரமான முறையிலே நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் பாரிய பௌத்த விகாரை கட்டி எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு கலசம் ஒன்றை நிறுவுவதற்கும், 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மக்களுக்கு தகவல்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்காக தமிழ் மக்கள் அங்கு சென்றபோது, அங்கு பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் குருந்தூர் மலை தொடர்பான வழக்கிலக்கம் AR/673/18 இல் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, குருந்தூர் மலையில் எந்தத் தரப்புக்களும் கட்டுமானங்கள் எவற்றினையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பிற்பாடும் அங்கு தொடர்ந்தும் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர். அத்தோடு அவ்வாறு குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். அதற்கமைய இந்த வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று, குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி, குருந்தூர் மலை தொடர்பான வழக்கின் மீது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்ற முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருப்பதானது இனங்களுக்கிடையில் சமாதானக்குலைவினை ஏற்படுத்துமென சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த நீதவான், அன்றைய தினமே உடனடியாக குருந்தூர் மலைக்குச் சென்று கள விஜயம் செய்யத் தீர்மானித்தார். அதனடிப்படையில் குருந்தூர் மலைக்கு கள விஜயம் செய்த நீதவான் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வுசெய்து, குறிப்புக்களை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் கட்டளை வழங்கிய நீதிபதி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதெனவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று கட்டளை பிறப்பித்திருந்தார். எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023 அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு குருந்தூர் மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு கடந்த 2023 ஜூலை மாதம், 04ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மீண்டும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். கள விஜயத்தின்போது குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கைகளை நீதிமன்றின் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பிலான தமது விளங்கங்களை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்புக்களினதும் விளங்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து நீதிமன்றம் குறித்த வழக்கின் கட்டளை வழங்குவதற்காக கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குறித்த திகதியில் இந்த வழக்கு கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் குருந்தூர் மலைக்கு மேற்கொண்ட கள விஜயம் மற்றும் கடந்த 2023 ஜூலை மாதம் 04ஆம் திகதி நீதவானால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயம் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த வழக்குக்கான கட்டளைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இக்கட்டளையில் ஏற்கனவே நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அத்தோடு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு விரோதமாக குருந்தூர் மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி களவிஜயத்தின்போது நீதிமன்றம் அவதானித்த கல்லொன்று, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி அங்கு இருக்கவில்லை எனவும், அதேபோல அங்கு புதிதாக பெயர்ப்பலகை ஒன்று அவதானிக்கப்பட்டதாகவும், அதனை போல இன்னும் பல விடயங்களையும் இரண்டாவது கள விஜயத்தின்போது அவதானிக்க முடிந்ததாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியது. குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்தில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகள் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது. இவ்வாறாகத்தான் குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு, சட்டவிரோதமாக பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் தொடரும் சட்ட மீறல்கள் குறிப்பாக கடந்த 2024.06.20ஆம் திகதி மிகிந்தலையிலிருந்து, பௌத்த துறவிகள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து 200க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக குருந்தூர் மலைக்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருற்தனர். இந்நிலையில் மறுநாளான ஜூன் 21ஆம் திகதி வெள்ளிக்கழமை பொசன் தினத்தன்று குருந்தூர் மலைப்பகுதிக்கு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஊடகவியலாளர்களது விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், தொடர்ந்து பொலிசாரின் கண்காணிப்பிலேயே செய்திசேகரிக்க அனுமதிக்கப்பட்டது. அங்கு பொசன் தினத்தில் பல பெரும்பான்மை இனத்தவர்கள் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. அதேவேளை குறித்த தொல்லியல் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும், சில வெட்டப்பட்ட மரங்களில் தீமூட்டப்பட்டிருப்பதையும் மேலும் அவதானிக்கமூடிந்தது. அத்தோடு குறித்த தொல்லியல் பகுதியில் தகரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தமைக்கான தடையங்களும் தென்பட்டன. இருப்பினும் ஊடகவியலாளர்கள் அங்கு சென்றபோது எவரும் இருக்கவில்லை. அதுதவிர தொல்லியல் பகுதியில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகின்ற 'மட்டக்கம்பு' என்று சொல்லப்படுகின்ற ஒரு பொருள் சீமெந்துக் கலவை பட்டு உலர்ந்த நிலையிலும் காணப்பட்டது. எனவே மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் தாண்டி, அங்கு வேறு ஏதேனும் கட்டட வேலைகள் இடம்பெறுகின்றனவா என்கின்ற வலுவான சந்தேகமும் எழுகின்றது. இந்நிலையில், இத்தகைய சட்டமீறல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களை கண்காணிக்க வந்திருந்த பொலிஸாரிடம் வினவியபோது, மரம் வெட்டப்பட்டுள்ளமை மற்றும் தீ மூட்டப்பட்டுள்ளமை முதலான சம்பவங்கள் சட்டமீறல் செயற்பாடுகள் என ஏற்றுக்கொண்ட அவர், இது தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது எனவும் தெரிவித்தார். பொலிஸாரின் இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை. அங்கு பாதுகாப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரிப்பது அவர்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டை காட்டுகிறது. அத்தோடு பொலிஸார் இந்த சட்டமீறல் செயற்பாட்டுக்கு துணை நிற்கின்றார்கள் என்பதையும் உறுதிசெய்வதாக அமைகின்றது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் தண்டனை வழங்கப்படுமென வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குற்றச்செயல்களுக்கு நடவடிக்கை எடுக்காத அரச இயந்திரங்கள். குருந்தூர் மலை தொல்லியல் பகுதி வளாகத்தில் பல்வேறு செயற்பாடுகளை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அங்கு தொல்லியல் திணைக்களத்தினால் மும்மொழிகளிலுமான அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்த இடத்துக்குரிய காணி நிலத்தைச் சுத்தம் செய்தல், மரம் வெட்டுதல், தீ மூட்டுதல், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுதல், அகழ்வு செய்தல், கல் உடைத்தல், வேலி அடைத்தல், குடியேறுதல், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுதல், இவ்விடத்தில் காணப்படுகின்ற தொல் பொருட்களுக்கு பாதுகாப்பின் நிமித்தம் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், எல்லைக்கற்கள், அறிவித்தல் பலகை என்பவற்றை சேதப்படுத்துதல், மாற்றம் செய்தல், இடத்தை மாற்றுதல், களவு செய்தல் அழிவடையச்செய்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது. அத்தோடு இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டால் தொல்பொருளியல் சட்டத்தின் பிரகாரம் பிணை வழங்கமுடியாத பாரிய குற்றமாவதுடன், இக்குற்றங்களில் ஈடுபட்டால் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படுமென குறித்த அறிவிப்புப் பலகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் ஆகிய குற்றச்செயல்கள் அங்கு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் இன்னும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தரப்பினர், அந்தப் பொறுப்பிலிருந்து விலகி நிற்பதாலும், குற்றவாளிகளுக்குத் துணை நிற்பதாலுமே இந்த குற்றச் செயல்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிற தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். குருந்தூர் மலை விவகாரத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தாது அவர்களுக்குத் துணைநிற்கும் அரச இயந்திரங்கள், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கின்ற தமிழர்களின் சைவ வழிபாடுகளுக்கு பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து குழப்பத்தை விளைவிக்கின்றனர். இந்த விடயத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். குருந்தூர் மலையில் கடந்த 14.07.2023 அன்று நீதிமன்றத்தின் அனுமதியுடனும், தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவும் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்குவதற்காக மூட்டியபோது, தொல்லியல் மற்றும் வனப்பகுதிக்குள் தீ மூட்ட முடியாதென சில பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும் குழப்பம் விளைவிக்கப்பட்டது. குழப்பங்களையும் மீறி தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக பொங்கலுக்காகத் தீ மூட்டியபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்வாறு பொங்கலுக்காக மூட்டிய தீயை சப்பாத்துக் கால்களால் மிதித்து அணைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது. இது ஒரு மத நிந்தனைச் செயற்பாடு என சைவமக்கள் அப்போது இதுகுறித்து கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாட்டை நடைபெறவிடாது தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்பட்டனர். அதில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் ஊடகவியலாளர்கள் என அனைவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவலம் அங்கே நடந்தேறியது. பின்னர் இதுகுறித்து முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிஸாரிடம் வினவியபோது, இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பொங்கல் விழாவை நடத்தவிடாமல் தடுத்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த விடயத்தில் பொலிஸார் நீதிமன்றுக்கு கூறிய அந்த விடயம், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம் இல்லை. ஏனெனில் நீதிமன்ற அனுமதியுடன், முறையான சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றியே தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வாறு நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது. அத்தோடு அங்கு குழப்பம் விளைவிக்கப்பட்டால், அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை பொலிஸார் கைதுசெய்திருக்கவேண்டும். ஆனால் இங்கு பொலிஸார் குழப்பங்களை ஏற்படுத்திய பெரும்பான்மை இனப் பௌத்தர்களுடன் இணைந்துகொண்டு தமிழ் மக்களைத் தாக்கி, வழிபடவிடாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது ஏற்புடைய நடவடிக்கையல்ல. இது தமிழ் மக்களைத் திட்டமிட்டு வஞ்சிக்கின்ற ஒரு செயற்பாடாகும். அதனைத் தொடர்ந்து குருந்தூர் மலையில் கடந்த 18.08.2023அன்று குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆல யநிர்வாகத்தினரால் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் பொங்கல் வழிபாடொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பொங்கல் வழிபாடு இடம்பெற்றால் இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்படுமெனத் தெரிவித்து அந்த பொங்கல் வழிபாட்டிற்கு நீதிமன்றிடம் பொலிஸார் தடை உத்தரவைக் கோரியிருந்தனர். எனினும் நீதிமன்றம் அந்தத் தடை உத்தரவை நிராகரித்திருந்தது. இத்தோடு அரச இயந்திரங்கள் தமது தமிழ் மக்கள் மீதான வஞ்சனைச் செயற்பாட்டை நிறுத்தவில்லை. தொடர்ந்து இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாடுகளுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி. ஜயதிலக பல நிபந்தனைகளை விதித்திருந்தார். அந்த நிபந்தனைகளில் முக்கியமாக குருந்தூர் மலையின் நிலம் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திறந்த வெளியில் இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களை பயன்படுத்தி அடுப்பினை தயார் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. அத்தோடு தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிலம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச் சின்னங்களிலிருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படும் இடத்தை பொங்கல் வழிபாட்டிற்கு பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறாக நீதிமன்ற அனுமதியோடு, தொல்லியல் திணைக்கள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இடம்பெற்ற இந்த பொங்கல் வழிபாட்டும் பௌத்த துறவிகளில் குழப்ப முயற்சிகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. இவ்வாறாக நீதிமன்றம் விடுக்கின்ற கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற தரப்புக்கள் பெரும்பான்மையின பௌத்தர்களுக்குச் சார்பாகவும், தமிழ் மக்களை வஞ்சிக்கின்ற வகையிலும் செயற்படுகின்றனர். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிற அவலம் தீரவேண்டும் குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒரு விதமாகவும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு வேறொரு விதமாகவும் அரச இயந்திரங்களால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவலம் தீரவேண்டும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற அந்த அவலநிலை நிலை மாறவேண்டும். https://www.virakesari.lk/article/186816
  4. 23 JUN, 2024 | 06:27 PM டி.பி.எஸ்.ஜெயராஜ் "காப்டன் பிளட் : தீரச்செயல்கள் நிறைந்த அவரது நீள்பயணம்" (Captain Blood : His Odyssey) என்பது பிரபலமான எழுத்தாளர் றஃபீல் சபாட்டினி 1922 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சாகச நாவல். உண்மையான, வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தில் புனைவுப் பாத்திரங்களை உருவாக்குவதில் விருப்பார்வம் கொண்டவர் சபாட்டினி. பனைவினதும் உண்மையினதும் ஒரு கலவையான இந்த நாவல் வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது. காப்டன் பிளட் மிகவும் ஜனரஞ்சகமான நாவலாக விளங்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல வருடங்களாக பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி. இராமச்சந்திரனின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வெளியான வசூலில் சாதனைபடைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் காப்டன் பிளட் நாவலின் ஒரு தழுவலேயாகும். அந்த திரைப்படத்தில் ஆளும் சர்வாதிகாரிக்கு எதிரான கிளர்ச்சியில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தமைக்காக பழிவாங்கப்படும் மணிமாறன் என்ற பெயர்கொண்ட மருத்துவர் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். பிரிட்டனின் வரலாற்றில் 1685ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மன்னருக்கு எதிரான கிளர்ச்சி ஒன்றுக்கு இரண்டாவது மொன்மவுத் கோமகன் தலைமை தாங்கினார். அந்த கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. பல கிளர்ச்சியாளர்கள் அடிமைகளாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டனர். இந்த பின்னணியைக் கொண்டதே சபாட்டினியின் நாவல். நாவலில் சபாட்டினியின் முக்கியமான புனைவுக் கதாபாத்திரம் சமர்செட் பிராந்தியத்தில் வசித்த ஒரு மருத்துவரான டாக்டர் பீற்றர் பிளட். அவர் மொன்மவுத் கிளர்ச்சியில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. ஆனால் மோதல்களில் காயமடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளை வளங்கினார். இரக்க உணர்வுடனான இந்த மனிதாபிமானச் செயல் தேசத்துரோகச் செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு டாக்டர் பிளட் ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தம்பிச்சென்று பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாடு திரும்புவதற்கு முன்னதாக தொடர்ச்சியான பல சாகசச்செயல்களில் ஈடுபடுகிறார். காயமடைந்த மொன்மவுத் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிசெய்து பிறகு ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்ட ஒரு ஆங்கில சத்திரசிகிச்சை மருத்துவரான டாக்டர் ஹென்றி பிற்மனின் வாழ்வை ஓரளவு அடிப்படையாகக் கொண்டே றஃபில் சபாட்டினி டாக்டர் பிளட் பாத்திரத்தை வடித்தார். டாக்டர் பிற்மன் பார்படோஸில் இருந்து தப்பி இறதியில் இங்கிலாந்து திரும்பிவந்தார். அவர் தனது அனுபவங்கள் பற்றி எழுதியதை சபாட்டினி தனது நாவலுக்கு பயன்படுத்திக் கொண்டார். இலங்கை மருத்துவர் "வாழ்வை நகல்செய்யும் கலையின்" விசித்திரமான ஒரு இலங்கையிலும் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உண்மையான வாழ்வில் டாக்டர் பிற்மன், டாக்டர் பிளட், மணிமாறன் ஆகியோரின் கதிக்கு உள்ளானார். இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேதந்திய தமிழ் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரின் நீண்ட வரலாறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது. அத்தகைய சம்பவங்களில் ஒன்று உண்மையான ஹென்றி பிற்மனினதும் புனைவுப் பாத்திரமான பீற்றர் பிளட்டினதும் அதே போன்ற அனுபவங்களைக் கடந்துவந்த வடபகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ் டாக்டரின் கதை. இந்த தமிழ் டாக்டர் 1982ஆம் ஆண்டில் காயமடைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளித்தமைக்காக கைதுசெயயப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். "கறுப்பு ஜூலையில்" வெலிக்கடைச் சிறை படுகொலைகளின்போது கொலைகாரச் சிங்களக் கைதிகள் கும்பலுடன் நேரடியாக சண்டையிட்டு உயிர்தப்பினார். பிறகு இந்த டாக்டர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுடன் சேர்ந்து தப்பிச்சென்று படகு மூலம் இரகசியமாக இந்தியாவுக்குச் சென்றார். 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னரே அவர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்பினார். அந்த உடன்படிக்கையின் பிரகாரம் மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் மருத்துவ சேவை வாழ்வைத் தொடங்கி இறுதியில் அவர் ஒரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் ஜூன் 16ஆம் திகதி தனது 81 வயதில் அமைதியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட டாக்டர் துரைராஜா வில்லியம் ஜெயகுலராஜா அவர்களே நான் இங்கு குறிப்பிடுகின்ற அந்த தமிழ் டாக்டர். இந்த கட்டுரை டாக்டர் ஜெயகுலராஜாவின் சுவாரஸ்யமானதும் நிகழ்வுகள் நிறைந்ததுமான வாழ்க்கை மீது கவனத்தைச் செலுத்துகிறது. இந்த தனித்துவமான ஆளுமை குறித்து மேலும் அறிவதற்கு பேரார்வம் கொண்ட பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள். "ஜெயம் மாமா" எனது தாயாரின் மைத்துனி கிறிஸ்டினாவை (பபா மாமி) திருமணம் செய்தார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனால் அவர் அந்த திருமணத்துக்கு முன்னரே எனது உறவினர். டாக்டர் ரி.டபிள்யூ. ஜெயகுலராஜா 1943 பெப்ரவரியில் திருக்கோவிலில் பிறந்தார். அவரது தாயார் றோஸ் மனோன்மணி அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றினார். அவர்வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியூற்று பகுதியைச் சேர்ந்தவர். ஜெயகுலராஜாவின் தந்தையார் எட்வேர்ட் துரைராஜா கிழக்கு மாகாணத்தின்அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர். ஜெயகுலராஜா திருக்கோவில் மெதடிஸ்ற் தமிழ் பாடசாலை, கல்முனை வெஸ்லி உயர்பாடசாலை, மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். அந்த கல்லூரியின் மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்தே பயின்றார். பாடசாலை நாட்களில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஜெயகுலராஜா மெய்வல்லுநர் போட்டிகள், பட்மின்டன், ரேபிள் ரெனிஸ் ஆகிய விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிக்காட்டினார். இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பிரவேசித்து ஒரு டாக்டராக வெளியேறினார். டாக்டர் முத்துத்தம்பி, டாக்டர் ஆட்டிக்கல ஆகியோரின் கீழ் உள்ளகப் பயிற்சிக் காலப்பகுதியை முடித்துக்கொண்ட டாக்டர் ஜெயகுலராஜா 1971 ஆம் ஆண்டில் திருகோணமலை வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.1972 ஆம் ஆண்டில் திருகோணமலையில் அவரின் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு அவர் அரசாங்க சேவையில் இருந்து விலகி திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் கனிமமணல் கூட்டுத்தாபனத்தில் ஒரு டாக்டராக கடமைகளைப் பொறுப்பேற்றார். புல்மோட்டையில் சில வருடங்களுக்கு பிறகு ஜெயகுலராஜா குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்தது. அவர்களது ஒரே மகன் டானியல் ஜேசனின் யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி கல்வியே அதற்கு காரணம். 1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில்தான் ஜெயகுலராஜாவின் வாழ்க்கை முற்றாக மாறியது. ஜெயகுலராஜாவும் அவரது மனைவியும் மெதடிஸற் திருச்சபையின் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரகள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு ஜெயகுலராஜா புத்தூரில் மெதடிஸ்த் திருச்சபையினால் நிருவகிக்கப்பட்ட சென் லூக்ஸ் வைத்தியசாலையில் பணியாற்றினார். அவரது குடும்பம் வைத்தியசாலைக்கு அண்மையாக இருந்த மருத்துவர்களின் விடுதியில் வசித்தது. ஜெயகுலராஜாவின் சகோதரர் வண. ஜெயதிலகராஜா யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி மெதடிஸ்ற் திருச்சபையில் போதகராக இருந்தார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து இலங்கையின் இனநெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. தனித்தமிழ் நாட்டுக்காக போராடிய ஆயுதமேந்திய பல்வேறு தமிழ் தீவிரவாதக் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கின. அவற்றில் பிரதானமானது விடுதலை புலிகள் இயக்கம். சாவகச்சேரி தாக்குதல் 1982ஆம் ஆண்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய விடுதலை புலிகள் சில பொலிஸ்காரர்களைக் கொன்ற பிறகு பெருமளவு ஆயுதங்களுடன் தப்பிச்சென்றனர். துப்பாக்கிச் சமரில் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சீலன், ரகு, புலேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படடது. வண. ஜெயதிலகராஜாவுடன் சில தொடர்புகளைக் கொண்ட விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டார். அவர் தனது மூத்த சகோதரர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் சென்று விடயத்தைக் கூறினார். சற்று நேரம் யோசித்த ஜெயகுலராஜா தனது சகோதரருடன் காயமடைந்த புலிகள் இருந்த மறைவிடத்துக்கு சென்று மருத்துவ உதவியைச் செய்தார். காயமடைந்த புலிகள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக மேலும் சில தடவைகள் அவர் அவர்களைச் சென்று பார்த்தார். ஜெயகுலராஜாவின் மருத்துவக் கவனிப்பு இல்லையென்றால் காயமடைந்த புலிகளில் ஒருவர் மரணமடைந்திருக்கக்கூடும். மோதல் ஒன்றில் புலிகள் காயமடைந்தது அதுவே முதற் தடவையாகும். பல வருடங்களுக்கு பிறகு சம்பாஷணை ஒன்றின்போது ஆபத்தைப் பற்றி யோசிக்காமல் ஏன் காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை அளித்தீர்கள் என்று நான் ஜெயகுலராஜாவிடம் கேட்டேன். "நான் ஒரு மருத்துவ டாக்டர். மருத்துவத்துறையின் பதவிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளுக்கு நான் கட்டுப்பட்டவன்" என்பதே அவரது பதிலாக இருந்தது. அதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் காயமடைந்திருக்கக்கூடிய எந்தவொரு நபருக்கும் தான் மருத்துவ உதவியைச் செய்திருப்பார்" என்று அவர் மேலும் சொன்னார். காயமடைந்த நபர் ஒரு பொலிஸ்காரராக இருந்தாலென்ன, ஜே.வி.பி. உறுப்பினராக இருந்தாலென்ன ஏன் பொலிசாரினால் சுடப்பட்ட ஒரு குற்றவாளியாகக் கூட இருந்தலென்ன அவர்களுக்கு நான் சிகிச்சை அளித்திருப்பேன். இந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற இலட்சியவாத இளைஞர்கள்" என்று அவர் பதில் கூறினார். அரசு மிகவும் கடுமையான நடவடிக்கையில் இறங்கி குடாநாடு பூராவும் தீவிர தேடுதலை நடத்தியது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இருந்த கத்தோலிக்க மடாலயம் ஒன்றில் சோதனை நடத்திய பாதுகாப்பு அதிகாரிகள் நன்கு தெரிந்த கத்தோலிக்க மதகுருவை சம்பந்தப்படுத்தும் சான்றுகளை பெறக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் நீர்வேலியில் வங்கிப்பணம் கொண்டுசெல்லப்பட்ட வான் ஒன்று 1981 மார்ச் 25 கொள்ளையிடப்பட்டது. அந்த சம்பவத்தில் இரு பொலிஸ்கார்கள் பலியாகினர். நீர்வேலி வங்கிக்கொள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் இயக்கமும் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையாகும். நீர்வேலியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வணபிதா ஆபரணம் சிங்கராயரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக கொழும்புத்துறை மடாலயம் பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் முற்றுகையிடப்பட்டது. வணபிதா சிங்கராயரின் அறையும் சோதனைக்கு உள்ளானது. சில புலிகள் காயமடைந்திருந்தால் அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தினர். சந்தேகத்துக்கிடமான மருந்து கொள்வனவு ஏதாவது இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பார்மசிகளையும் மருந்துக் களஞ்சியங்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியது முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று. வணபிதா சிங்கராயர் வழமைக்கு மாறாக பெருமளவு மருந்துகளையும் பண்டேஜுகளையும் வாங்கியதாக இரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனால் அவர் மீது குறிவைக்கப்பட்டது. வணபிதா சிங்கராயர் 1982 நவம்பரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரின் கைதினை தொடர்ந்து அப்போது நெடுந்தீவு பங்குத்தந்தையாக இருந்த வணபிதா அன்ரன் சின்னராசா கைதுசெயயப்பட்டார். அவரின் கைதும் அதைத் தொடர்ந்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையும் சாவகச்சேரி பொலிஸ்நிலைய தாக்குதல் தொடர்பிலான விசாரணையில் ஒரு முன்னேற்றத்துக்கு வழிவகுத்தன. சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட உண்மையான புலிகள் பிடிபடவில்லை என்றபோதிலும் கூட தாக்குதலில் காயமடைந்த புலிகளுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆட்களை பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யக்கூடியதாக இருந்தது.யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். நித்தியானந்தன், சுண்டிக்குளி மகளிர் உயர்பாடசாலை ஆசிரியையான அவரின் மனைவி நிர்மலா, வண. ஜெயதிலகராஜா மற்றும் டாக்டர் ஜெயகுலராஜா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். இரு கத்தோலிக்க மதகுருமார், ஒரு புரட்டஸ்தாந்து போதகர், ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், ஒரு மருத்துவ டாக்டர், ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டமை குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும் பொதுவில் நாட்டிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுவரை தமிழ்த் தீவிரவாதம் என்பது தமிழ் இளைஞர்களுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமென்றே கருத்தப்பட்து. மதகுருமார் மற்றும் துறைசார் நிபுணர்களின் கைதுகள் ஆயுதப் போராட்டத்துக்கு பரந்ததும் ஆழமானதுமான ஆதரவு இருந்தது என்பதை வெளிக்காட்டியது. இந்த கைதுகளுக்கு முன்னதாக காந்தீய இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு டாக்டரும் கட்டிடக்கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலை முன்னணிக்கு தலைமை தாங்கிய இன்னொரு ஓய்வுபெற்ற மருத்துவ டாக்டரும் ' சுதந்திரன் ' பத்திரிகையின் ஆசிரியரும் கூட கைது செய்யப்பட்டிருந்தனர். இனப்பிளவு மேலும் கூர்மையடைந்தது. சிறில் ரணதுங்க அதேவேளை, அந்த கைதுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அப்போது நான் 'த ஐலணட்' பத்திரிகையின் ஒரு அலுவலக செய்தியாளர். ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளை திரட்டுவதற்காக அன்றைய ஆசிரியர் விஜித யாப்பா என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அப்போது யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக பிரிகேடியர் சிறில் ரணதுங்க இருந்தார். பிறகு அவர் இராணுவத் தளபதியாகவும் வந்தார். லெப்டினண்ட் கேணல் தயா விஜேசேகரவும் மேஜர் சாலிய குலதுங்கவும் அவரது பிரதம உதவியாளர்கள். வட பகுதி பத்திரிகையாளர்களின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பிரிகேடியர் ரணதுங்க (பிறகு லெப்டினண்ட் ஜெனரல்) குருநகரில் செய்தியாளர்கள் மகாநாடொன்றை நடத்தினார். ஜெயகுலராஜாவுக்கும் ஜெயதிலகராஜாவுக்கும் புறம்பாக கைது செய்யப்பட்டவர்களில் இன்னொருவரும் எனக்கு தெரிந்தவராக இருந்தார். நிர்மலா நித்தியானந்தனே அவர். (நித்தியானந்தனை திருமணம் செய்வதற்கு முன்னர் அவர் நிர்மலா இராஜசிங்கம்) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அவர் எனது சமகாலத்தவர். இராணுவக் காவலில் நிர்மலாவின் உடல் பாதுகாப்பு குறித்து யாழ்ப்பாணத்தில் பெருவாரியான வதந்திகள் கிளம்பின. அந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் நிர்மலாவின் பாதுகாப்பு குறித்து நான் கேள்விகளை எழுப்பினேன். என்னைச் சீண்டிய பிறகு பிரிகேடியர் ரணதுங்க நிர்மலாவை அந்த இடத்துக்கு அழைத்துவந்து அவர் பத்திரமாக இருககிறார் என்று ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதையடுத்து நிர்மலாவின் தோற்றம் குறித்து பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டன. அதன் மூலம் வதந்திகளுக்கு முடிவு கட்டப்பட்டது. சாலிய குலதுங்க அந்த நேரத்தில் ஊடகங்களுடன் தொடர்பாடல்களை பேணிவந்தவர் மேஜர் சாலிய குலதுங்க. (அவர் பிறகு மேஜர் ஜெனரல்) அவர் ஒரு நல்ல நண்பராக இருந்தார். டாக்டர் ஜெயகுலராஜா தொடர்பில் குலதுங்கவுக்கு நான் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துவந்தேன். ஜெயகுலராஜா எனது அன்புக்குரிய மாமனார் என்றும் அவரிடம் கூறினேன். பிரிகேடியர் ரணதுங்கவின் உள்ளார்ந்த சம்மதத்துடன் சாலிய எனக்கும் ஜெயகுலராஜாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பை குருநகர் முகாமில் ஏற்பாடு செய்துதந்தார். எந்த இடையூறும் இல்லாமல் நானும் அவரும் தனியாக ஒரு மணிநேரம் பேசினோம். புத்தூரில் எனது மாமியைச் சந்தித்து எனது சந்திப்பு குறித்து கூறி அவரது கவலையையும் ஏக்கத்தையும் தணித்தது நன்றாக நினைவிருக்கிறது. டாக்டர் ஜெயகுலராஜாவும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களும் பிறகு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பனாகொட இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். குருநகரை போலன்றி விசாரணை என்ற பெயரில் அங்கு மோசமான பெருமளவு சித்திரவதைகள் இடம்பெற்றன. பிறகு அவர்களுக்கு எதிராக கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த சட்டம் முதலில் 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பிறகு 1982 முதல் நிரந்தர சட்டமாக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. வெலிக்கடை சிறை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயகுலராஜாவும் மற்றையவர்களும் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் அன்று புலிகளாகவே நடத்தப்பட்டனர். வெலிக்கடைக்கு சென்று ஜெயகுலராஜாவை ஒரு தடவை நான் பார்த்தேன். அன்று பயங்கரவாத தடுப்புச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளைச் சந்திப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது பெயர் டி.பி.எஸ். ஜெயராஜ் என்பதற்கு பதிலாக டி.ஜே.பி.சபாபதி என்று எழுதப்பட்டிருந்த எனது பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி உண்மையாகவே நான் அவரின் ஒரு மருமகன் என்று உரிமை கோரினேன். அவர் என்னைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பற்றி சிந்திக்காமல் தன்னைச் சந்திப்பது குறித்து கவலையடைந்தார். சிறைச்சாலையில் படுகொலைகள் அதற்கு பிறகு பல நிகழ்வுகள் நடந்தேறின. "கறுப்பு ஜூலை" என்று வர்ணிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுமோசமான இன வன்முறை 1983ஆம் ஆண்டில் இடம்பெற்றது. வெலிக்கடையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளும் தாக்குதலுக்கு இலக்காகினர். மொத்தமாக அங்கு 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். ஜூலை 25 திங்கட்கிழமை சிங்களக் கைதிகள் 35 தமிழ்க் கைதிகளை கொலைசெய்தனர். அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குவதற்கு வெளியில் இருந்து கொலைகாரர்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அந்த படுகொலைகளுக்கு பல சிறைக்காவலர்கள் உதவியும் ஒத்தாசையும் புரிந்தனர். பயங்கரவாத தடைச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளின் பாதுகாப்பைப் பேணுவதற்கு வெலிக்கடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவப் பிரவு எதையும் செய்யவில்லை. கொலை செய்யப்பட்ட கைதிகளில் ரெலோ தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் அடங்குவர். இரண்டாவது படுமோசமான படுகொலை ஜூலை 27 புதன்கிழமை இடம்பெற்றது. எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகள் அவர்களின் பாதுகாப்புக்காக சிறைச்சாலைக்குள் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. தமிழ்க்கைதிகள் எதிர்த்துப் போராடினர். ஆனால் 18 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்களில் 11 பேர் மாத்திரமே சாவில் இருந்து தப்பினர். அவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இன்றைய கபினெட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். ஜெயகுலராஜாவும் ஏனைய துறைசார் நிபுணர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜூலை 25 தாக்குதலுக்கு பிறகு ஒன்பது கைதிகள் மேல்மாடியில் இருந்த தங்குமிடத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டிருந்தனர். வணபிதா சிங்கராயர், வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் இரராஜசுந்தரம், ஓய்வுபெற்ற டாக்டர் தருமலிங்கம்,டாக்டர் ஜெயகுலராஜா, பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், விரிவுரையாளர் நித்தியானந்தன், கட்டடக்கலைஞர் டேவிட் ஆகியோரே அந்த ஒன்பது பேருமாவர். அந்த மேல்மாடி தங்குமிடத்துக்கு செல்வதற்கு ஒடுக்கமான படிக்கட்டு ஒன்றே இருந்தது. இவர்களைத் தாக்குவதற்கு வன்முறைக்கும்பல் ஒன்றுகூடியபோது மகாத்மா காந்தியின் தீவிர பக்தனான "காந்தீயம்" இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் இராஜசுந்தரம் "நாங்கள் அவர்களுடன் நியாயத்தைப் பேசி இந்த பிரசசினைக்கு தீர்வைக் காண்போம்" என்று அப்பாவித்தனமாக யோசனை கூறினார். வன்முறைக் கும்பலுடன் சிங்களத்தில் பேசுவதற்காக இராஜசுந்தரம் படிகளில் இறங்கி கீழே சென்றபோது அவரை அவர்கள் தலையில் தாக்கி வெட்டிக் கொலை செய்தனர். மேசைக்கால் ஆயுதங்கள் தமிழ்க் கைதிகளில் ஒரளவு இளம் வயதினராக இருந்தவர்கள் வன்முறைக் கும்பலை எதிர்த்துச் சண்டையிட தீர்மானித்தனர். மதகுருமார் ஆராதனை நடத்துவதற்கு ஒரு சிறிய மேசை கொடுக்கப்பட்டிருந்தது. மேசையை உடைத்து வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் ஜெயகுலராஜா, நித்தியானந்தன் ஆகிய நால்வரும் ஆளுக்கொரு காலை கையிலெடுத்தனர். மாடிப்படி ஒடுக்கமானதாக இருந்ததால் கீழிருந்து மேலே ஒருவர் அல்லது இருவரே ஒரே நேரத்தில் ஏறிவர முடியும். இவ்வாறுதான் நான்கு தமிழ்க் கைதிகளும் தங்களது மேசைக்கால் ஆயுதத்தைப் பயன்படுத்தி வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்து உயிர் தப்பக்கூடியதாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு பிறகு சிறை அதிகாரிகள் வன்முறைக் கும்பலைக் கலைத்ததை அடுத்து தமிழ்க் கைதிகளின் கொடூர அனுபவம் ஒரு அதிசயம் போன்று முடிவுக்கு வந்தது. வெலிக்கடை சிறையில் ஆரம்பத்தில் இருந்த 72 தமிழ்க் கைதிகளில் இரு படுகொலைச் சம்பவங்களில் இருந்தும் 19 பேரினால் மாத்திரமே உயிர் பிழைக்கமுடிந்தது. அவர்கள் அருவருக்கத்தக்க "புலிநாளான (கொட்டி தவச) ஜூலை 29 மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். கைதிகள் பொதிகளைப் போன்று ட்ரக் ஒன்றில் ஏற்றப்பட்டு வீதியால் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் கொழும்பு கோட் ட காலிமுகத்திடலில் பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இயற்கைக் கடன்களை கழிப்பதற்கு கூட அனுமதிக்கப்படாமல் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். மட்டக்களப்பு சிறையுடைப்பு டாக்டர் ஜெயகுலராஜா பல வருடங்களுக்கு முன்னர் தனது பயங்கரமான அனுபவங்களை தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கத்தில் வைத்து என்னிடம் விரிவாகக் கூறினார். மட்டக்களப்புக்கு கூட்டிச்செல்லப்பட்ட பிறகு 1983 செப்டெம்பரில் இடம்பெற்ற சிறையுடைப்பின்போது ஜெயகுலராஜா தப்பிச் சென்றார். மீண்டும் பிடிபடாமல் அவர் இந்தியாவுக்கு இரகசியமாக படகு மூலம் சென்றார். இதையும் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் அடுத்துவரும் கட்டுரையில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/186786
  5. 24 JUN, 2024 | 05:22 PM மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை (24) காலை காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா??, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இங்கு சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டது. சுமார் 100 க்கு மேற்பட்ட காணமல்ஆக்கப்பட்டவர்களின் கலந்து கொண்டதுடன் ஒரு மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது. ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி தமது உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி, கடந்த கால தொடர் போராட்டங்கள் மூலமாக சர்வதேசத்தினுடைய பார்வை எமது பக்கம் திரும்ப பட்டிருக்கின்றது எங்களுடைய மக்களுக்கான நீதி விசாரணை வேண்டும் என்பதனை அழுத்தமாக சர்வதேச நாடுகள் அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தாலும் எங்களுடைய தொடர் போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அதற்கான பொறுப்பு கூற வேண்டிய அவசியம் எமது உறவுகள் நமக்கு கிடைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயங்களை சர்வதேசத்தின் ஊடாக நாங்கள் கொடுத்த பாரிய போராட்டங்கள் ஊடாக சர்வதேச பார்வை திரும்பப் பெற்ற நிலையில் எமது வடக்கு கிழக்கு உள்ள 8 மாவட்டங்கள் இணைந்து 23 ஆம் திகதி தொடக்கம் 30-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறும். நாளைய தினம் கிளிச்சி மாவட்டத்தில் தொடர் போராட்டம் இடம்பெற இருக்கின்றது இவ்வாறு மாறி மாறி வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் உறவினர்களால் இந்த கவன ஈர்ப்பு போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் இந்த போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படும். இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது இனிமேல் இந்த ஆற்கடத்தல்கள் அத்தோடு எங்களுக்கு நடந்த நிலைமைகள் இவருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறான பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டு வருகின்றோம். 2017 ஆம் ஆண்டு தொடக்கம் தனித்துவமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இந்த போராட்டங்களை வடக்கு கிழக்கு இணைந்து செயல்பட்டு இந்த போராட்டங்களை செய்து வருகின்றதன் பிரதிபலனாக இன்று சர்வதேசத்தின் பார்வை எங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தையும் கொண்டு வந்து அவர்களுக்கான நாட்ட ஈடுகளை வழங்குகின்றோம் எனக் கூறி மக்களை பெருமளவு ஏமாற்றி அந்த கோப்புக்களை முடிவுறுத்தி விடுவதற்கான செயல்பாடுகளை சரியாக கள்ளத்தனமான வேலைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர். உண்மையில் நான் அந்த அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்யவில்லை ஆனால் எங்கேயோ இருந்து எங்களுடைய தரவுகளை எடுத்துக் கொண்டு தங்களுக்கு எங்களுடைய ஆவணங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது உடனடியாக வந்து பதிவு செய்யுங்கள் என்று கூறி இந்த அப்பாவி தாய்மாரை மரண பதிவு எடுத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் எந்த ஒரு உதவி திட்டமும் கிடைக்கும் என்று கூறி அவர்கள் கட்டாயப்படுத்தி மரண பதிவுகளையும் கொடுத்து இந்த மக்களை கஷ்டப்படுத்தி ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்தி கொண்டு மன உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு பொய்யான அலுவலகம் அல்லது இலங்கை உள்ளக பொறிமுறையை கொண்டு ஏமாற்றி ஏமாற்றி இந்த வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்து கால இழுத்தடிப்புகளை செய்து உறவுகளை தேடிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இன்று இழந்து இருக்கின்றோம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது எங்களுடைய உண்மையான சாட்சியங்கள் இல்லாமல் போகின்றது. கண்கண்ட சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம் ஆனால் நாங்களும் இல்லாமல் போனால் இந்த கால இழுத்தடிப்புக்கு காரணமே அதுதான் உங்களை இல்லாமல் செய்தால் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்திற்கு குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்று இந்த இலங்கை அரசாங்கமும் அதனோடு சேர்ந்து செயல்படுபவர்களும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள். இளம் சந்ததி இதனை கொன்டு செல்கின்றது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக இனி ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி இந்த காந்தி பூங்கா முன்பாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்களுடைய உரிமைகளுக்காக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்காக நாங்கள் இந்த இடத்தில் ஒன்று கூடி ஒவ்வொரு மாதமும் எமது குரலை கொடுப்போம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் அல்லது சாகும் வரைக்கும் இந்த போராட்டம் தொடரும் என்றார் . https://www.virakesari.lk/article/186851
  6. India (11.2/20 ov) 127/3 Australia Australia chose to field. Current RR: 11.20 • Last 5 ov (RR): 61/2 (12.20) Live Forecast:IND 224
  7. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 05:19 PM (செ.சுபதர்ஷனி) சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நன்கொடைகள், பணப் பரிசுகள், வெற்றிகள், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கு உடனடியாக பதிவுசெய்துக் கொள்ளுமாறு பகிரப்படும் போலி தகவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். போலி இணையதளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்படும் போலி தகவல்கள் வாயிலாக இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள்அதன் வாயிலாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். போலி செய்தியின் இணைப்புகளை அணுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தங்களுடன் இணைக்கப்பட்ட நபர்களின் கணினி, தொலைப்பேசியில் உள்ள தகவல்களைத் திருடி முறைகேடான மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதுடன், இவற்றால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. குறித்த மோசடிக்காரர்கள் தேசிய மற்றும் சமய விழாக்களின் போது இதுபோன்ற செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொது மக்களின் அறியாமையும் அலட்சியமும் இவ்வாறன குற்றங்கள் சமூகத்தில் அதிகரிப்பதற்கு சாதகமாக அமைந்துள்ளன. சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அவர்களை தொடர்புக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு உறுதிப்படுத்த முடியாத செய்திகளை அணுகுவதை தவிர்த்துக் கொள்ளலாம். https://www.virakesari.lk/article/186842
  8. இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி - பொருளாதார தடைகள், இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிப்பது சாத்தியமில்லை : கென்சவேர்ட்டிவ் கட்சி Published By: RAJEEBAN 24 JUN, 2024 | 05:00 PM tamil guardian பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கு நீதி பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர். தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர். கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட்இபசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே ஆகியோர் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமாரும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார். ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம் இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார். தடைகள் இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது. தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். எனினும் முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார். பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல் கனடா நாடாளுமன்றம் மே 18 ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் குறிப்பிட்ட நினைவுநாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார். குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார். இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது அதன்போது மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார். பரந்துபட்ட தடைகள் இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர் வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார். நாங்கள் கருத்துவெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார். சுயநிர்ணய உரிமை சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார். ஆனால் ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார். ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன்இஇலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தொழில்கட்சி இதேவேளை தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார். மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது எனினும் அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் எங்களிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார். இரண்டுவாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதார தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார். அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர் தமிழ் சமூகம் தங்களிற்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c9wwzrpkd1lo
  9. LIVE 51st Match, Super Eights, Group 1, Gros Islet, June 24, 2024, ICC Men's T20 World Cup India (8.1/20 ov) 94/2 Australia Australia chose to field. Current RR: 11.51 • Last 5 ov (RR): 59/1 (11.80) Live Forecast:IND 234
  10. வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  11. கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என பல கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  12. டி20 உலகக்கோப்பை: 10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர்-8 சுற்றில் போராடித் தோற்றது. மாறாக 10 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தோல்வியை சந்திக்காத அணி தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடினாலும், 2 முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. 2009-ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா 2014-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இந்த இருமுறையைத் தவிர அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி தகுதி பெறவில்லை. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை என்ற பெயரை தென் ஆப்ரிக்க அணி காப்பாற்றி வருகிறது. தற்போது மேற்கிந்தியத்தீவுகளை வென்றதன் மூலம் குரூப்-2 பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குரூப்-1 பிரிவில் யாருடன் மோதல் ? ஆனால், அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2வது இடத்துக்கு வரும் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதும். ஆனால், இன்று நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் முதலிடம் பெற்று அரையிறுதி செல்லும். ஆனால், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதாது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனாலும் அரையிறுதியை எந்த அணியும் உறுதி செய்யாது. ஏனென்றால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், குரூப்-1 பிரிவில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தே யார் அரையிறுதி செல்வார் என்பது முடிவாகும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசரவ் நாள் இல்லை, மாறாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், இந்திய அணி அரையிறுதி செல்லும், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும், ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லும். ஆதலால் மழைதான் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்க அணி. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் மழைக் குறுக்கிடவே தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு திருத்தப்பட்டு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, 123 ரன்களைத் துரத்திய தென் ஆப்ரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது. 10 ஆண்டுகளுக்குப்பின் 2014-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியை இறுதிப்போட்டிவரை எய்டன் மார்க்ரம் கொண்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் சீனியர் அணியை அரையிறுதிவரை மார்க்ரம் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் மார்க்ரம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீசத் தொடங்கி, 4 ஓவர்களை முழுமையாக வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளித்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஷம்சி, கேசவ் மகராஜ் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்துவீசியிருந்தனர். தென் ஆப்ரிக்கா என்றாலே வேகப்பந்துவீச்சில்தான் பலம் என்ற நிலையை மாற்றி, சுழற்பந்துவீச்சுக்கு மார்க்ரம் மாற்றியுள்ளார். இந்த போட்டியில் 12 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷம்சி 3 விக்கெட், மார்க்ரம், மகராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பேட்டிங்கில் படுமோசம் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் 58 டாட் பந்துகளை விட்டுள்ளனர். இது ஏறக்குறைய 9.4 ஓவர்களுக்கு சமம். அதாவது 10 ஓவர்களில்தான் 135 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் கெயில் மேயர்ஸ்-ரஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் அணியை ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்தது. இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். சேஸ், மேயர்ஸ் தவிர இருபேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்று ஆட்டமிழந்தனர். டிபெண்ட் சாத்தியமில்லை மிகக்குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பது அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் சாத்தியம். ஆனால், ஆன்டிகுவா, பர்படாஸ் போன்ற பேட்டர்களுக்கு சாதகமான விக்கெட்டில் சாத்தியமில்லை. இருப்பினும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தி, தொடக்கத்திலேயே தென் ஆப்ரிக்காவின் 2 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர். ஆனால் மழைக் குறுக்கீடு முடிந்து ஆட்டம் தொடங்கியபின், மார்க்ரம் (18), ஸ்டெப்ஸ் (29), கிளாசன் (22) ஆகியோரின் கேமியோ ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் போராடினாலும் கடைசி நேரத்தில் யான்சென் 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சரியான உத்தி இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES யான்சென் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இல்லை. அவரை கடைசிவரை நிலைத்து ஆடவும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. யான்சென் பலவீனத்தை அறிந்து சரியான பந்துவீச்சாளரைப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், சரியான உத்திகளை மேற்கிந்தியத்தீவுகள் செயல்படுத்தாமல் விட்டதால் வெற்றியை இழக்க நேரிட்டது என்ற கூற முடியும். தென் ஆப்ரிக்கா மோசமான பீல்டிங் தென் ஆப்ரிக்கா என்றாலே பீல்டிங்கிற்கு பெயரெடுத்தவர்கள். கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோனியே, கல்லினன், மெக்மிலன் என பலரைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். கேப்டன் மார்க்ரம், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேசவ் மகராஜ் என 4 பேரும் கேட்சுகளை கோட்டைவிட்டனர். ரபாடாவை பயன்படுத்தாத மார்க்ரம் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு சிறப்பாக ஒத்துழைத்ததால் கடைசிவரை ரபாடாவை பந்துவீச மார்க்ரம் அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் 18-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். 62 டி20 போட்டிகளில் விளையாடிய ரபாடா இதுபோன்று கடைசிவரை பந்துவீசாமல் இருந்ததில்லை. இதற்குமுந்தைய 61 ஆட்டங்களில் தொடக்கத்திலேயே முதல் 4 ஓவர்களிலேயே ரபாடா பந்துவீசிவிடுவார். ஐபிஎல் தொடர்களில் ரபாடாவை 10 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5வது ஓவருக்குப்பின் ரபாடா ஒருமுறை பந்துவீசியுள்ளார். ஆனால், இதுபோன்று 18-வது ஓவர்வரை முதல் ஓவரைக்கூட வீசாமல் ரபாடா இருந்ததில்லை. ஆனாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 7 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மழை சென்டிமென்ட் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டைஇழந்து மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணியின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடுகிறதோ என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர், 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படுமா என்று நினைத்தனர். ஆனால், 75 நிமிடங்கள் தாமதத்துக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது. பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் தோல்வி அடைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பாவெல் கூறுகையில் “கடைசி வரை போராடிய எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டும். நடுப்பகுதியில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது ரன் ஸ்கோர் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு ஆளாகினோம்,” என்றார். "பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 135 ரன்களையும் டெபெண்ட் செய்ய முடியும் என்று போராடினர். தரவரிசையில் 9வது இடத்தி்ல் இருக்கும் அணிக்கும், 3வது இடத்தில் இருக்கும் அணிக்கும் இடையிலான மோதல் சிறப்பானதாக இருந்தது. கரீபியன் வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது, தொடர்ந்து குழுவாக செயல்பட்டு, மக்களை பெருமைப்படுத்த முயல்வோம். மக்களும் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இரவுவரை இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ஆன்டிகுவா மக்கள், கரீபியன் மக்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cxeeelk03m1o
  13. 2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய படகுகள் கைப்பற்றல்; 204 மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:25 PM 2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 204 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடற்படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186841
  14. ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! சவுதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்றவர்களில், கடும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளது. சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 83 சதவீதமானவர்கள் சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கு யாத்திரைக்குச் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கான யாத்திரையை மேற்கொள்கின்றவர்கள், தங்குமிட வசதிகள் எதுவும் இன்றி நீண்ட தூரம் கடும் வெப்பத்தில் நடந்து செல்ல நேர்வதால், மரணங்களும் அதிகரிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/304443
  15. 24 JUN, 2024 | 02:40 PM ''தமிழகத்தில் சாதி வாரியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பிலுள்ளது என்றும், சாதி வாரியிலான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்'' என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லாததால் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதி வாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எளிதாக இருக்கும்'' என பதிலளித்தார். தொடர்ந்து இது குறித்து பாமக உறுப்பினர் ஜிகே மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு க ஸ்டாலின், ''சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் அதுவும் இந்த கூட்டத்தொடரிலேயேத் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என உறுதியளித்தார். இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய அளவு பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186835
  16. பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘உலகுக்கு வருங்காலங்களில் சிறுகோள்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சிறுகோளின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304410
  17. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 01:53 PM யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபரொருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தூக்கத்தில் இருந்த தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/186830
  18. தீவிர வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு, உலகில் முதன்முறையாக மூளையைக் கட்டுப்படுத்தும் மைக்ரோ சாதனம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சமர்செட்டைச் சேர்ந்த, 13 வயதாகும் குறித்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு லண்டனில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சோதனை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையின் பின்னர், பகல் நேரத்தில் அவருக்கு ஏற்படுகின்ற வலிப்பு நோய்த் தாக்கம் 80 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மண்டையோட்டில் பொருத்தப்படுகின்ற இந்த மூளைக் கட்டுப்பாட்டுக் கருவி, மின்னலைகளை மூளைக்குச் செலுத்தி, வலிப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304450
  19. நாம் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது : இப்போதும் ஒற்றுமையில்லை என செல்வம் கவலை! Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 11:43 AM நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது. துப்பாக்கி சத்தம் இல்லாத போதும் எமது மக்களின் பூர்வீகத்தை ஒழித்து நிலங்களை அபகரிக்கின்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு நிலத்தை பறிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. ஒற்றுமை என்பது இப்போதும் இல்லாமல் இருப்பதை எண்ணுகின்ற போது கவலையாக இருக்கிறதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடை க்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் சிறி சபாரத்தினத்தின் சிலையை ஞாயிற்றுக்கிழமை (23) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக தென்னிலங்கையில் பல சமர்களை செய்து தியாகங்கள் புரிந்து விடுதலைக்காக பாடுபட்ட ஒரு இயக்கமே தமிழீழ விடுதலை இயக்கம். அதன் தலைவருடைய சிலையை இன்று திறந்து வைத்துள்ளோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எங்களது இனத்தையும், எங்களது நிலத்தையும், எங்களது பூர்வீகத்தையும் காப்பாற்ற முடியாது என்பதை சிறி அண்ணாவின் சிலை வெளிப்படுத்துகின்றது. நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது. துப்பாக்கி சத்தம் இல்லாத போதும் எமது மக்களின் பூர்வீகத்தை ஒழித்து நிலங்களை அபகரிக்கின்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு நிலத்தை பறிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. ஒற்றுமை என்பது இப்போதும் இல்லாமல் இருப்பதை எண்ணுகின்ற போது கவலையாக இருக்கிறது. எங்களது இனத்தை காப்பாற்ற இருக்கின்றோம் என்று கூறுகின்ற தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் எல்லாம் வாய் அளவில் தான் இனத்தின் விடுதலை என்கிறார்களே தவிர, இனத்தின் விடுதலைக்காக ஒற்றுமையாக செயற்பட தயாரில்லை. மக்கள் விரும்பும் ஒற்றுமையை அவர்கள் செய்ய தயாரில்லை. தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். விடுதலைப் புலிகள் கூட இந்தியாவில் ஒரு அணியாக இணைந்து செயற்பட்டனர். தமிழீ விடுதலை இயக்கம் ஒற்றுமைக்காக கொண்டு வருகின்ற வாய்புக்களை எந்த விட்டுக் கொடுப்புக்களையும் செய்து எங்களது இனத்தையும் நிலத்தையும் காப்பாற்ற தயாராக இருக்கின்றோம். தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க எப்படி ஒத்துழைத்ததோ அதேபோல் நாங்கள் விட்டுக் கொடுப்புக்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்த எந்த சவால்களையும் சந்திக்க தயாராகவுள்ளோம். மக்கள் தலைவனற்றவர்களாக இருக்கின்றார்கள். கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டும் என விரும்புகிறார்கள். மக்களுக்காக துப்பாக்கி ஏந்தி எவ்வாறு பொது எதிரியை சந்தித்தோமோ அதேபோல் அந்த போராளிகளின் இலட்சியத்தை அடைய வேண்டும். எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட தயாராக இருக்கின்றோம். எம்மை பார்த்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஒட்டுக்குழு என்கிறார்கள். இப்படி பல தேவையில்லாத கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்ற போது எங்களுக்குள் இருந்த வடுக்களை ஒருபக்கம் வைத்து விட்டு எங்களது இனம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகளோடு கைகோர்த்து செயற்பட்டோம் என்பதை பகிரங்கமாக எல்லா மக்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே நாங்கள் ஒட்டுக்குழுக்கள் இல்லை. தேசியத்தை நேசிப்பவர்கள். நாங்கள் இராணுவத்திற்கு எதிராக முதன் முதல் போராடி இருந்தாம். எங்களது போராளிகளும் மரணித்திருக்கிறார்கள். ஆகவே அன்று முதல் நாம் மக்களின் இலட்சியத்தற்காகவே செயற்படுகின்றோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186805
  20. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். இலங்கை கடந்த 2022ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்ற வங்குரோத்து நிலைமையை அறிவித்திருந்தது. தற்போது இலங்கை அந்த நிலைமையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கான விசேட சலுகைகள் பலவற்றை அறிவிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304441
  21. அப்ப @மோகன் அண்ணையை நித்திரை கொள்ள விடுற ஐடியா இல்லையோ அண்ணை.
  22. கட்டுரை தகவல் எழுதியவர், ஹென்ரி ஆஸ்டியர்&ஸ்டீவ் ரோசென்பெர்க் பதவி, பிபிசி நியூஸ், லண்டன்&மாஸ்கோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தான் குடியரசில் (Republic of Dagestan) காவல் துறையினர் மீதும், தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களிலும் (synagogues) நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள், ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் (Orthodox church) பெந்தகொஸ்ட் திருவிழாவின்போது, டெர்பென்ட் மற்றும் மகச்கலா ஆகிய நகரங்களைக் குறிவைத்தனர். இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த குறைந்தது 15 பேர், ஒரு பாதிரியார், மற்றும் ஒரு பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நிகழ்த்தியவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் தாகெஸ்தானில் கடந்த காலங்களில் இஸ்லாமியக் குழுக்கள் தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில், இரண்டு தேவாலயங்கள் மற்றும் இரண்டு யூத வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டன. தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்கலாவில் மரபுவழி திருச்சபையின் பாதிரியார் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 15 பேர் உயிரிழந்ததாக, தாகெஸ்தான் குடியரசு தலைவர் செர்ஜேய் மெலிகோவ் தெரிவித்துள்ளார். காவல்துறை வாகனம் மீது தாக்குதல் பட மூலாதாரம்,REUTERS இத்தாக்குதல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளின்படி, நிகழ்விடத்திற்கு அவசரக் காலச் சேவை வாகனங்கள் வருவதற்கு முன்பு, கருப்பு உடை அணிந்திருந்த தாக்குதல்தாரிகள் காவல்துறையினரின் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மரபுவழி யூதச் சமூகத்தினர் வாழ்ந்துவரும் டெர்பென்ட் நகரில் துப்பாக்கிதாரிகள் யூத வழிபாட்டுத் தலம் மற்றும் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தினர், பின்னர் அந்த வழிபாட்டுத் தலங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. டெலிகிராம் மெசேஜ் செயலியில் அதிகாரபூர்வமற்ற மேஷ் (Mash) எனும் ஊடகம், டெர்பென்ட் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் துப்பாக்கிதாரிகள் தடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. செர்கோகல்-இல் உள்ள ஒரு கிராமத்தில் காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகச்கலா அருகே உள்ள செர்கோகலின்ஸ்கி மாவட்டத்தின் தலைவர் மகோமெத் ஒமரோவ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நிகழ்த்தியவர்களுள் அவருடைய இரண்டு மகன்களும் அடங்குவர் என கூறப்படுகிறது. முந்தைய தாக்குதல்கள் ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகளுள் ஒன்றான தாகெஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தாகெஸ்தான் மற்றும் அதன் அருகிலுள்ள செச்சினியக் குடியரசு, இங்குஷேத்தியக் குடியரசு, கபர்தினோ-பல்கேரியா குடியரசு ஆகியவற்றில் 2007 முதல் 2017 வரையில் காகசஸ் அமீரகம் மற்றும் காகசஸ் இஸ்லாமிய அமீரகம் ஆகிய ஜிகாதி அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளன. கடந்த மார்ச் மாதம் மாஸ்கோவுக்கு அருகே குரோகஸ் சிட்டி ஹால் பகுதியில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றாலும், அதிகாரிகள் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகள் மீது குற்றம்சாட்டினர். அப்போது அதிபர் விளாடிமிர் புதின், “மத நல்லிணக்கம் மற்றும் பல்வேறு மதங்கள், இனங்களுக்கு இடையில் ஒற்றுமைக்கு தனித்துவமான உதாரணமாக ரஷ்யா திகழ்வாதால்", “இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஷ்யா இலக்காகாது,” என்றார். ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி, மாஸ்கோவில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நிகழ்த்துவதற்கான ஐ.எஸ். அமைப்பின் முயற்சியை முறியடித்ததாக மூன்று மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, தங்களின் முதன்மையான எதிரிகள் யுக்ரேன் மற்றும் 'மேற்கு கூட்டணி' என்று ரஷ்ய மக்கள் நம்புகின்றனர். அதிகாரப்பூர்வ விவரங்கள் குறித்த சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, ரஷ்ய மக்களின் நம்பிக்கையை மாற்றுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் தயங்குகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cv222300jevo
  23. அமெரிக்காவை நையப்புடைத்து வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது Published By: VISHNU 24 JUN, 2024 | 09:21 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி -20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை நையப்புடைத்து 10 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. கிறிஸ் ஜோர்டன் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் உடனான 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஜொஸ் பட்லரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை மிகவும் இலகுவாக்கியதுடன் நிகர ஓட்ட வேகத்தையும் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்தது. தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி குழு 2இலிருந்து 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இன்றைய சுப்பர் 8 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்த ஐக்கிய அமெரிக்கா அதன் பின்னர் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எஞ்சிய 7 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிட்டிஷ் குமார் (30), கோரி அண்டசன் (29), ஹாமீத் சிங் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். போட்டியின் 19ஆவது ஓவரில் ஹெட் - ட்ரிக் முறையில் கிறிஸ் ஜோர்டான் விக்கெட்களைக் கைப்பற்றி வரலாறு படைத்தார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது 9ஆவது ஹெட்-ட்ரிக் ஆகும். அத்துடன் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டிய 8ஆவது வீரர் கிறிஸ் ஜோர்டான் ஆவார். ப்றெட் லீ (2007), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (2021), வனிந்து ஹசரங்க (2021), கெகிசோ ரபாடா (2021), கார்த்திக் மெய்யப்பன் (2022), ஜொஷ் லிட்ல் (2022), பெட் கமின்ஸ் (2024 - 2 தடவைகள்) ஆகியோரே ஹெட் - ட்ரிக் பதிவுசெய்த மற்றைய 7 வீரர்களாவர். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 3ஆவது ஹெட் - ட்ரிக்கை கிறிஸ் ஜோர்டான் பதிவு செய்தார். அவர் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாம் கரன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 116 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொஸ் பட்லர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய பில் சோல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வெற்றியுடன் குழு 2க்கான சுப்பர் 8 சுற்று அணிகள் நிலையில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 1.992 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் முதலாம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. ஆட்டநாயகன்: ஆதில் ரஷித். https://www.virakesari.lk/article/186793
  24. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 09:46 AM எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை (24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 507 மீன்பிடி விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படகுகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜ் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, நேற்று இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள், மீனவர்கள் மற்றும் விசைப்படகின் உரிமையாளர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். இந்த வேலை நிறுத்ததால் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/186797

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.