Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 13 JUN, 2024 | 07:12 AM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/185965
  2. Published By: VISHNU 13 JUN, 2024 | 04:34 AM (இராஜதுரை ஹஷான்) தமிழர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவார். 13 ஆவது திருத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே தேசியம் தொடர்பாக பெரும்பான்மையினத்தவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் குறிப்பிடாத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்துக்கு சென்று தமிழ் மக்களிடம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தான் முழுமையாக அமுல்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான மக்கள் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் இதுபோன்று கருத்துரைக்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உண்மை நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் 13 ஆவது திருத்தம் பற்றி பேசியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த 22 ஆவது திருத்த தனியார் பிரேரணையில் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வலியுறுத்தலுக்கமைய 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்தும் வகையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ,1987 ஆம் ஆண்டு இந்து – லங்கா ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.இருப்பினும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டு அவர் அவ்வாறு செயற்படவுமில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூற்றுக்களை வெளியிட முன்னர் 13 ஆவது திருத்தத்தின் வரலாற்றை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போது அதன் பாரதூரம் மற்றும் திருத்தங்களின் உண்மை நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். இந்து –அமெரிக்க பூகோள நோக்கம் இந்து – அமெரிக்க நோக்கத்துக்காக பிரிவினைவாத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.இந்தியாவின் தற்போதைய அரசியல் மாற்றம் இதற்கு முன்முனைப்புடன் செயற்படுகிறது. தேசியத்தின் தலைமீது தொங்கவிடப்பட்டுள்ள கூர்மையான வாள்கள் இந்து – லங்கா ஒப்பந்தம் மற்றும் 13 ஆவது திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக நிலவிய கடுமையான எதிர்ப்பினால் அவற்றை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற முடியாத சூழல் காணப்பட்டது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் 13 ஆவது திருத்தம் தேசியத்தின் தலைமீது கட்டப்பட்டுள்ள கூர்மையான வாள்'என்று குறிப்பிட்டனர். திருத்தங்கள் ஊடாக வாள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அவிழ்ப்பது பாரியதொரு குற்றமாகும். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் ஆகிய காரணிகளால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை மாத்திரம் நீக்குவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.13 ஆவது திருத்தம் இல்லாமல் நாட்டுக்கு பொருந்தும் வகையில் பிரிவினைவாத அம்சங்கள் இல்லாத வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.சிறுபான்மை இனத்தவர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைப்புக்கு பதிலாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பார். ரணில் – சஜித் ஒரு குழையின் தேங்காய்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளார்கள். இவ்விருவரில் எவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பார்கள். ஆகவே இவ்விருவரின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மையின மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/185961
  3. குவைத் தீ விபத்து : "இந்தியர்கள் 43 பேர் இறந்திருக்கலாம்" - தற்போதைய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) குவைத் தீ விபத்தில் 42 அல்லது 43 இந்தியர்கள் இறந்திருக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். அவர் இன்று காலை டெல்லியிலிருந்து குவைத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன், ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேசிய அவர்,"உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன. எனவே டி என் ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது. இந்த தீ விபத்தில் 48 அல்லது 49 பேர் மொத்தம் உயிரிழந்திருக்கலாம், அதில் 42 அல்லது 43 பேர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது" என்று தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து, குவைத் அரசிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " குவைத் நிதி அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தீ விபத்து குறித்து பேசினேன். குவைத் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டேன். தீ விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, இதற்கு பொறுப்பு யார் என்பது கண்டறியப்படும் என உறுதி அளித்தார். உயிர் இழந்தவர்களின் உடல்களை விரைவாக அனுப்பி வைக்க கோரினேன். காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்ற பிறகு நிலைமை குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி கூறுகிறது. அவர்கள் குவைத்தின் அல்-அதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. +965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். உயிர் பிழைத்த நபர் தகவல் குவைத் தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் ஒருவர் பேசுகையில், "நான் 5வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தேன், திடீரென அருகில் இருந்தவர்கள் கதவை தட்டி அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்த போது வெறும் கரும்புகையாக இருந்தது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், என் அறையின் கதவை தட்டியவர்கள் உயிர் பிழைக்க வேறு பகுதிக்கு ஓடிவிட்டார்கள். அதனால், அருகே இருந்த அறையில் இருந்தவர்களது கதவை நாங்கள் தட்டவில்லை. எங்கள் வீட்டின் சன்னல் சற்று பெரிதாக இருந்ததால் அதன் வழியாக எங்கள் அறையில் தங்கியிருந்த 4 பேரும் தப்பித்துவிட்டோம். ஆனால், எங்கள் அறையின் அருகே இருந்தவர்களின் அறையில் உள்ள ஜன்னல் மிகச்சிறியது, அதனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை." என்று கூறினார். மணமான 9 மாதங்களில் உயிரிழந்த நபர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உமருதீன் ஷமீரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்களது தொலைபேசிக்கு அழைத்து போது, பக்கத்து வீட்டுக்காரர் பதிலளித்தார். 29 வயதான அவர் ஓட்டுநர் ஆவார். குவைத்தில் இந்தியருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், இந்த தீவிபத்தில் உயிரிழந்தார். "அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சில மணி நேரங்களுக்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. 9 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அவருக்கு திருமணம் நடந்தது. அவரது பெற்றோர் பேசும் நிலையில் இல்லை,'' என பிபிசி ஹிந்தியிடம் அவரது அண்டை வீட்டுக்காரர் கூறினார். அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. குவைத்தில் உமருதீனின் நண்பர் நௌஃபல் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், ``அவரது குடும்பத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் மூன்று கட்டிடங்கள் தள்ளி தங்கியுள்ளேன். நாங்கள் அனைவரும் ஒரே எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். உமருதீனும் அங்கே ஒரு தொழிலாளி. கட்டிடத்தில் யார் இருந்தார்கள், யார் இல்லை என்று சொல்வது கடினம்’’ என்றார். "எண்ணெய் நிறுவனத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அதிகாலை 0130 மணியளவில் வேலைக்குச் சென்ற ஏழு பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள், அவர்கள் முழு அதிர்ச்சியில் உள்ளனர்,'' என்று நௌஃபல் கூறினார். நௌஃபலின் கூற்றுப்படி, கட்டடத்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள். குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். ஆனால், பிபிசி ஹிந்தியிடம் பேசிய கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் (கேஎம்சிசி) குவைத் பிரிவுத் தலைவர் ஷர்புதீன் கோனெட்டு, ``தீயில் இறந்த அல்லது காயமடைந்தவர்களின் உடல்களை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். அடித்தளத்தில் இருந்து ஆறு மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 11 இந்தியர்கள் இறந்துள்ளனர் மற்றும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். உடல்களை அடையாளம் காண சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம், ”என்று கூறினார். அவர் அப்போது, தீ விபத்து நடந்த இடத்தில் இருந்தார். விபத்திற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,@INDEMBKWT/X படக்குறிப்பு,குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். இந்த சம்பவத்தை குவைத் உள்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை காலை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறியதை காண முடிந்தது. குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள இந்த 6 மாடி குடியிருப்பின் ஒரு சமையலறையில் இருந்து தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது கட்டடத்தில் 160 தொழிலாளர்கள் இருந்தனர். அனைத்து தொழிலாளர்களும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார்கள். குவைத் உள்துறை அமைச்சர் ஃபஹத் யூசுப் அல் சபா சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், “கட்டட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்றார். குவைத் ஊடக அறிக்கையின்படி, இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குவைத் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். குறிப்பாக கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புத் துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே குவைத் சார்ந்துள்ளது. குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தரம் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@INDEMBKWT/X இந்திய பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் தீ விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தக் கட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள குவைத்தின் அல்-அதான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத்தில் பணிபுரியும் தமிழர் கூறியது என்ன? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,தீ விபத்து நடந்த இடத்தில் குவிந்துள்ள குவைத் காவல் துறையினர் குவைத்தில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசிக்கிறார் மணிகண்டன். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவர். பணிக்காக குவைத் சென்றுள்ள இவர், நடந்த சம்பவம் குறித்து விவரித்தார். "குவைத்தில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரப் பணிக்கு செல்வார்கள். வேலையை முடித்துவிட்டு அதிகாலை குடியிருப்புக்கு திரும்பி வந்தவர்களில் சிலர் உணவு சமைத்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் சமையலறை உள்ளது. அப்போது சமையலறையில் பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது." என்று கூறினார். அதிகாலை நேரம் என்பதால் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்ததாகவும், சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்ததாகவும் கூறினார் மணிகண்டன். "இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை." என்று கூறுகிறார் அவர். அயலக தமிழர் நலத்துறை உதவி எண்கள் குவைத் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களைப் பெற அயலக தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: இந்தியாவிற்குள் எனில் +91 1800 3093793 வெளிநாடு எனில் +91 80 69009900 +91 8069009901 https://www.bbc.com/tamil/articles/cg33zz5ywgdo
  4. சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்; தர்மசங்கடமான நிலையில் நியூஸிலாந்து 13 JUN, 2024 | 11:11 AM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 4ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்கா (டி குழு), அவுஸ்திரேலியா (பி குழு), இந்தியா (ஏ குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன. மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து பெரும்பாலும் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கக்கூடிய தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது. ஏனெனில், இக் குழுவில் இரண்டாம் இடத்திலுள்ள ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளுடன் கொண்டுள்ள 5.225 என்ற மிகச் சிறந்த நேர்மறை நிகர ஓட்ட வேகத்தை நியூஸிலாந்து கடப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அதேவேளை, ஆப்கானிஸ்தான் தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடையும் என எதிர்பார்க்க முடியாது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் 11 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், தனி ஒருவராக போராடிய ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பின்வரிசை வீரர்களுடன் இணைந்து கடைசி 9 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். 8ஆவது விக்கெட்டில் ரோமாரியோ ஷெப்பர்டுடன் 27 ஓட்டங்களைப் பகிர்ந்த ரதர்ஃபர்ட், பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் குடாகேஷ் மோட்டியுடன் 37 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கடைசி 13 பந்துகளில் மோட்டி ஒரு பந்தை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் இருந்தார். ரதர்ஃபர்ட் 39 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட நிக்கலஸ் பூரன் (17), அக்கீல் ஹொசெய்ன் (15), அண்ட்றே ரசல் (14), ரொமாரியோ ஷெப்பர்ட் (13) ஆகிய நால்வர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆரம்பத்திலிருந்து ஓட்டங்களைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 11 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அதன் பின்னர் மேலும் 4 விக்கெட் கள் சரிந்ததுடன் மேலதிகமாக 76 ஓட்டங்களே பெறப்பட்டது. துடுப்பாட்டத்தில் க்ளென் பிலிப்ஸ் (40), பின் அலன் (26), மிச்செல் சென்ட்னர் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் https://www.virakesari.lk/article/185977
  5. Published By: VISHNU 13 JUN, 2024 | 02:58 AM வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர் கட்டைக்காட்டிலிருந்து 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 படகுகளுடன் குறித்த 16பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரைக் கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத மீன்பிடிக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களை காங்கேசன் துறையில் இருந்து வரும் டோரா படகுகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலேயே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/185958 ஒளி பாய்ச்சி மீன்பிடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என யாராவது தெரிந்தவர்கள் கூறுங்க.
  6. யாழ். அனலைதீவில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள் தமிழகத்தில் மீட்பு Published By: DIGITAL DESK 3 13 JUN, 2024 | 10:17 AM யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல்போன இருவரும் தமிழகத்தில் உயிருடன் கரையொதுங்கியுள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியுள்ளனர். வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திற்கு கிழக்கே சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில், வங்காள விரிகுடா கடலில், இரு மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர். மீனவர்கள் இருவரையும், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு - வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம்) விசாரணை மேற்கொண்டு வருகின்றார். அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185967
  7. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,விஞ்ஞானி அனடோலி மஸ்லோவ், 77 கட்டுரை தகவல் எழுதியவர், செர்ஜி கோரியாஷ்கோ பதவி, பிபிசி ரஷ்யா 11 ஜூன் 2024 ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில் தனது நாடு உலகிலேயே முன்னணியில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அடிக்கடி பெருமை கொள்கிறார். ஆனால் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் அறிவியல் பிரிவில் பணிபுரியும் ரஷ்ய இயற்பியலாளர்கள் சமீப ஆண்டுகளில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இதனை ஒரு அதீதமான ஒடுக்குமுறையாகப் பார்க்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள். அவர்களில் மூன்று பேர் இப்போது இறந்துவிட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விளாடிஸ்லாவ் கல்கின் என்னும் 68 வயதான கல்வியாளர். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ரஷ்யாவில் உள்ள டாம்ஸ்கில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்டது. கறுப்பு முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய நபர்கள் காலை 4 மணிக்கு வந்து, அலமாரிகளை ஆராய்ந்து, அறிவியல் சூத்திரங்கள் அடங்கிய காகிதங்களைக் கைப்பற்றினர் என்று அவரின் உறவினர் ஒருவர் கூறுகிறார். கல்கினின் மனைவி டாட்டியானா இதுகுறித்து பேசுகையில், "என் கணவருடன் என் பேரக்குழந்தைகளுக்கு சதுரங்கம் விளையாட பிடிக்கும். தாத்தா எங்கே என்று அவர்கள் கேட்கின்றனர். அவர் வேலை தொடர்பாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினேன்” என்று விவரிக்கிறார். ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவையான எஃப்.எஸ்.பி. (FSB), இந்த வழக்கைப் பற்றி பேசுவதைத் தடை செய்துள்ளதாக அவர் கூறுகிறார். 2015 முதல் இதுவரை 12 இயற்பியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்துடன் அல்லது அதில் பணிபுரியும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் அனைவரும் தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், நாட்டின் ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். ரஷ்யாவின் தேசத் துரோகம் தொடர்பான விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியமாக நடத்தப்படுகின்றன. எனவே அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,KOLKER FAMILY படக்குறிப்பு,கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த லேசர் நிபுணர் டிமிட்ரி கோல்கர் மருத்துவமனையில் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் 'தீவிரமான குற்றச்சாட்டுகள்' ரஷ்யாவின் அரசு (கிரெம்ளின்) வெளியிடும் அறிக்கைகள் "குற்றச்சாட்டுகள் தீவிரமானவை" என்று மட்டுமே கூறுகிறது. சிறப்பு சேவைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்கின்றன. ஆனால் சக விஞ்ஞானிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் கூறுகையில், விஞ்ஞானிகள் ஆயுத மேம்பாட்டில் ஈடுபடவில்லை என்றும் சில வழக்குகள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் வெளிப்படையாக பணிபுரிவதை அடிப்படையாகக் கொண்டவை என்றும் கூறுகிறார்கள். வெளிநாட்டு உளவாளிகள் ஆயுத ரகசியங்களைப் பெற முயற்சி செய்கிறார்கள் என்ற பிம்பத்தை எஃப்எஸ்பி உருவாக்க விரும்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஹைப்பர்சோனிக் என்பது மிக அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஏவுகணைகளைக் குறிக்கிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே திசையை மாற்றும் திறன் வாய்ந்தது. வான் பாதுகாப்பு அரண்களை தகர்க்க வல்லது. யுக்ரேன் மீதான போரில் இரண்டு வகையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஷ்யா கூறுகிறது. 1.கின்சல் - விமானத்திலிருந்து ஏவப்படுபவை 2. சிர்கான் - கப்பலில் இருந்து ஏவப்படுபவை இருப்பினும், யுக்ரேன் தரப்பு, சில கின்சல் ஏவுகணைகளை அதன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது. இது ரஷ்ய ஏவுகணைகளின் திறன்களைப் பற்றி கேள்வி எழுப்புகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விஞ்ஞானிகளின் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கல்கின் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில், அவருடன் இணைந்து பல ஆய்வு இதழ்களை எழுதிய மற்றொரு விஞ்ஞானி வலேரி ஸ்வெஜின்ட்சேவ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான டாஸ் ஒரு ஆதாரத்தை சுட்டிக்காட்டி, "ஸ்வெஜின்ட்சேவ் கைது செய்யப்பட்டதற்கு 2021 இல் இரானிய இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை காரணமாக இருக்கலாம்” என்கிறது. கல்கின் மற்றும் ஸ்வெஜின்ட்சேவ் ஆகிய இருவரும் அதிவேக விமானங்களுக்கான காற்று பயன்பாட்டு வழிமுறைகள் பற்றிய கட்டுரையை ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விஞ்ஞானிகள் 2022 கோடையில், ரஷ்ய மத்திய பாதுகாப்பு அதிகாரிகள், இன்ஸ்டிடியூட் ஆஃப் தியரிட்டிகல் அண்ட் அப்ளைடு மெக்கானிக்ஸ் (ITAM) என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த கல்கின் மற்றும் ஸ்வெஜின்ட்சேவ் ஆகிய இருவரையும் கைது செய்தது. ஸ்வெஜின்ட்சேவ் அந்த ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரும் அதிவேக காற்றியக்கவியல் துறை சார்ந்த ஆய்வகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கள் மூன்று சக ஊழியர்களுக்கு ஆதரவாக பல விஞ்ஞானிகள் ஒரு கடிதம் எழுதி அதனை இணையத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த கடிதத்தில், கைது செய்யப்பட்ட விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமான அறிவியல் முடிவுகளுக்கு பெயர் பெற்றவர்கள் என்றும், தங்கள் நாட்டின் நலன்களுக்கு எப்போதும் உண்மையுள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் இருவரின் அறிவியல் சார்ந்த ஆய்வு கட்டுரைகள் வெளிப்படையாக பகிரப்பட்டது என்றும் கடிதத்தில் எழுதியிருந்தனர். அந்த ஆய்வு கட்டுரையில் தடைசெய்யப்பட்ட தகவல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ITAM-இன் நிபுணர் ஆணையம் மீண்டும் மீண்டும் சரிபார்த்தது, ஆனால் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அது கூறியது. ரஷ்ய மனித உரிமைகள் மற்றும் சட்ட அமைப்பான ஃபர்ஸ்ட் டிவிஷன் வழக்கறிஞர் யெவ்ஜெனி ஸ்மிர்னோவ் கூறுகையில், "ஹைப்பர்சோனிக் என்னும் தொழில்நுட்பத்தால் மக்களை சிறையில் அடைத்து வருகின்றனர்” என்றார். ஸ்மிர்னோவ் 2021 இல் ரஷ்யாவிலிருந்து ப்ராக் நகருக்குச் செல்வதற்கு முன்பு, தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் சிலருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டார். அதன் பிறகு தன் பணி பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தார். "குற்றம்சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளில் யாருக்கும் பாதுகாப்புத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் உலோகங்கள் எவ்வாறு சிதைகின்றன போன்ற அறிவியல் கேள்விகளை ஆய்வு செய்வது மட்டும் தான்” என்று அவர் கூறுகிறார். "இது ராக்கெட் தயாரிப்பது பற்றியது அல்ல, ஆனால் வெளிப்புற செயல்முறைகள் பற்றிய ஆய்வுகளை பற்றியது தான்.” என்று அவர் கூறுகிறார். மேலும் இந்த கண்டுபிடிப்புகள் ஆயுத மேம்பாட்டாளர்களால் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாதுகாப்பு அமைப்பு Vs விஞ்ஞானிகள் 2016-இல் விளாதிமிர் லாபிஜின் கைது செய்யப்பட்ட போது இந்த கைது நடவடிக்கைகள் தொடங்கின. தற்போது 83 வயதாகும் அவரை சிறையில் அடைத்தனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் ரஷ்ய விண்வெளி முகமையின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனமான `TsNIIMash’ இல் 46 ஆண்டுகள் பணியாற்றினார். ஏரோடைனமிக் கணக்கீடுகளுக்கான மென்பொருள் தொகுப்பை ஒரு சீனத் தொடர்பு இணைய முகவரிக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் தான் பகிர்ந்த பதிப்பில் எந்த ரகசிய தகவலும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். "பொது தளத்தில் வெளிப்படையாக பகிரப்பட்டது" என்பதை அவர் மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறுகிறார். "ஹைப்பர்சோனிக்ஸ் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த ஆயுதங்களை உருவாக்கும் செயல்பாட்டில் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள்’’ என்று லாபிஜின் பிபிசியிடம் கூறினார். சைபீரியாவில் உள்ள லேசர் இயற்பியல் நிறுவனத்தில் நிபுணரான டிமிட்ரி கோல்கர் கைது செய்யப்பட்ட மற்றொரு விஞ்ஞானி. அவர் தீவிரக் கணைய புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது 2022 இல் கைது செய்யப்பட்டார். சீனாவில் அவர் ஆற்றிய உரைகளின் அடிப்படையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர், ஆனால் அவர் உரையாற்றிய பாடங்கள் அனைத்தும் ரஷ்ய மத்திய பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டவை. அவருடன் ஒரு ரஷ்ய உளவாயும் பயணம் செய்தார். கோல்கர் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 54 வயதில் இறந்தார். தன் அடையாளத்தை வெளியிட விரும்பாத, கைது செய்யப்பட்ட விஞ்ஞானியின் சக ஊழியர் ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு அமைப்பு மற்றும் விஞ்ஞானிகளுக்குள் ஒரு மோதல் உள்ளது. விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் தங்கள் ஆய்வு கட்டுரைகளை வெளியிட விரும்புகின்றனர். வெளிநாட்டு சக ஊழியர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள நினைக்கின்றனர். ஆனால், வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு எழுதுவது தாய்நாட்டிற்கு துரோகம் என்று எஃப்.எஸ்.பி. நினைக்கிறது," என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,TOMSK POLYTECHNIC INSTITUTE படக்குறிப்பு,விளாடிஸ்லாவ் கல்கின் `ITAM ’ ஆய்வு நிறுவன விஞ்ஞானிகளும் இதே கருத்தை கூறுகின்றனர். "எங்கள் ஆய்வுப் பணிகளை எப்படித் தொடர்வது என்பது எங்களுக்குப் புரியவில்லை" என்று அவர்களின் கடிதத்தில் பதிவிட்டிருந்தனர். "இன்று நம்மை வெகுமதி பெற வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு... நாளை குற்றவியல் வழக்குக்கு காரணமாகிறது." என்றும் கூறப்பட்டுள்ளது. திறமையான இளம் ஆய்வாளர்கள் அறிவியலை விட்டு வெளியேறும் அதே வேளையில், விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளில் ஈடுபட பயப்படுகிறார்கள் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அந்தக் கடிதத்துக்கு ஆதரவு திரண்டது. மற்ற நிறுவனங்கள் கைது செய்யப்பட்ட தங்கள் விஞ்ஞானிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்குகளும் விஞ்ஞானிகளின் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற இரண்டு விஞ்ஞானிகளின் மீதான விசாரணை, ஹைப்பர்சோனிக் சிவிலியன் விமானத்தை உருவாக்கும் ஐரோப்பிய திட்டமான ஹெக்ஸா ஃப்ளை (Hexafly) தொடர்பானது என்று அவ்வழக்கில் பணியாற்றிய வழக்கறிஞர் ஸ்மிர்னோவ் தெரிவித்தார். அந்த திட்டம், இப்போது முடிக்கப்பட்டு, ஐரோப்பிய விண்வெளி முகமையால் வழிநடத்தப்பட்டு 2012 இல் தொடங்கியது. ஐரோப்பிய விண்வெளி முகமை, "சம்பந்தப்பட்ட ரஷ்ய மற்றும் ஐரோப்பிய தரப்புக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அனைத்து தொழில்நுட்ப பங்களிப்புகளும் பரிமாற்றங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டன" என்று பிபிசியிடம் கூறியது. இரண்டு விஞ்ஞானிகளுக்கும் கடந்த ஆண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்களில் ஒருவரை மறுவிசாரணை செய்ய ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிற கைது நடவடிக்கை, ஏரோடைனமிக்ஸ் பற்றிய ஆய்வு தொடர்பானது. ஒரு விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது தொடர்பான இந்த ஆய்வு, ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தால் நிதியளிக்கப்பட்டது. பெல்ஜியத்தில் உள்ள வான் கர்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்ளூயிட் டைனமிக்ஸால் நடத்தப்பட்டது. விஞ்ஞானிகளில் ஒருவரான விக்டர் குத்ரியாவ்ட்சேவின் மனைவி ஓல்காவின் கூற்றுப்படி, "வோன் கர்மன் (von Karman) நிறுவனத்திற்கு அனுப்பிய ஆராய்ச்சியில் ஒரு போர்க்கப்பல் போல தோற்றமளிக்கும் ஒரு வட்டமான கூம்பு வடிவ அமைப்பை பற்றி எஃப்எஸ்பி புலனாய்வாளர்கள் கேள்வி எழுப்பினர். பட மூலாதாரம்,ITAM 'உளவு பித்து' 2011 முதல் 2013 வரை இயங்கிய இந்த திட்டம், "மிகத் தெளிவாக ராணுவ ஆராய்ச்சி பற்றியது அல்ல” என்று அந்நிறுவனம் கூறுகிறது. மனித உரிமைக் குழுக்கள் இதில் ஒரு மாதிரியை கவனித்துள்ளன. ஸ்மிர்னோவ் கூறுகையில், "தனிப்பட்ட உரையாடல்களின் போது ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் உயரதிகாரிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஹைப்பர்சோனிக் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழக்குகள் போடப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.” புதினின் ஈகோவைப் புகழ்வதற்கும் பாராட்டு வாங்கவும், உளவு அதிகாரிகள் ரஷ்ய ஏவுகணை ரகசியங்களை வெளியிடும் நபர்களை வேட்டையாடுகிறார்கள் என்ற தோற்றத்தை மத்திய பாதுகாப்பு அமைப்பு கொடுக்க விரும்புகிறது என்று அவர் நம்புகிறார். மெமோரியல் மனித உரிமைகள் மையத்தில் ரஷ்ய அரசியல் கைதிகளை ஆதரிக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும் செர்ஜி டேவிடிஸ், "உளவு பித்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலை" பற்றி பேசுகிறார், குறிப்பாக யுக்ரேனில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது நடக்கிறது. டேவிடிஸின் அமைப்பு ரஷ்யாவில் தடைச் செய்யப்பட்டதால் லித்துவேனியாவில் தற்போது இயங்கி வருகிறது. அங்கிருந்து பேசிய அவர், "வழக்குகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பு அமைப்பு புள்ளிவிவரங்களை போலியாக உருவாக்குகிறது" என்று அவர் நம்புகிறார். ஸ்மிர்னோவ் கூறுகையில், எஃப்எஸ்பி அமைப்பு சில சமயங்களில் சந்தேகத்திற்குரியவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றவர்களை சிக்கவைத்தால் அவர்களுக்கு மிகவும் மென்மையான தண்டனைகளை வழங்குகிறது என்கிறார். ``குத்ரியவ்ட்சேவுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது, அதன் கீழ் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வேறொருவரை நோக்கி விரல் காட்டுவார் என்று நினைத்தார்கள்” என்று அவரது மனைவி ஓல்கா கூறுகிறார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவர் 2021 இல் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார், 77 வயதில், அவரது வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துப் போனார். பட மூலாதாரம்,BAUMAN MOSCOW STATE TECHNICAL UNIVERSITY படக்குறிப்பு,லேபிஜின் ஓய்வுபெற்ற ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு ஜெனரல் அலெக்சாண்டர் மிகைலோவ் கூறுகையில், எஃப்எஸ்பி ராணுவ தொழில்நுட்பத்தின் "ரகசியத்தை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார். மூன்று ITAM விஞ்ஞானிகளில் ஒருவரான அனடோலி மஸ்லோவுக்கு மே மாதம் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு "சரியான காரணங்கள்" இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். 1990களில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் விரிவடைந்ததன் விளைவுதான் தற்போதைய தேசத்துரோக வழக்குகளின் அதிகரிப்புக்கு காரணம் என்கிறார் ஜெனரல் மிகைலோவ். இது சோவியத் காலத்திலிருந்து அணுகுமுறையில் மாற்றத்திற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறுகிறார், "அந்த காலக்கட்டத்தில் அரசு ரகசியங்களை அணுகக்கூடியவர்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டனர். அவற்றை வெளியிடும் பொறுப்பைப் புரிந்துகொண்டனர்" என்று அவர் கூறுகிறார். கல்கினைப் பொறுத்தவரை, முகமூடி அணிந்த காவலர்கள் வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. முதல் மூன்று மாதங்கள் அவர் தனிமைச் சிறையில் கழித்ததாக அவரது உறவினர் கூறுகிறார். அவரது மனைவி டாட்டியானா, ஒரு சிறிய அறையில் தனிமையில் நாட்களை கழிக்கும் அவருடன் கண்ணாடி தடுப்பு வழியாக தொலைபேசியில் பேச முடியும். தன்னையும் கைது செய்தால் நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் அவர் அங்கேயே தனிமையில் அமர்ந்திருப்பது அதிகம் பாதிக்கிறது என்கிறார். பட மூலாதாரம்,LEFORTOVO COURT PRESS SERVICE படக்குறிப்பு,அலெக்சாண்டர் குரானோவ் ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட மற்ற விஞ்ஞானிகள்: அலெக்சாண்டர் ஷிப்லியுக், 57, ITAMஇன் இயக்குனர், 2022 இல் கைது செய்யப்பட்டார், விசாரணைக்காக காத்திருக்கிறார். ஹைப்பர்சோனிக் அமைப்புகளுக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அலெக்சாண்டர் குரானோவ் 2021 இல் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 2024 இல் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ரோமன் கோவலியோவ், TsNIIMash இல் விளாதிமிர் குத்ரியாவ்ட்சேவின் சக ஊழியர், இவருக்கு 2020 இல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 2022 இல் இறந்தார். https://www.bbc.com/tamil/articles/cljj518g06do
  8. 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்டவருக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் 12 JUN, 2024 | 08:19 PM 4 வயது சிறுமி தாக்கப்படும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞருக்குப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோன் தலைமையில் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டது. இந்த சன்மானம் வழங்கும் நிகழ்வு இன்று (12) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அண்மையில் வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தாக்குதலுக்குள்ளான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/185945
  9. United States of America 110/8 India (2.2/20 ov, T:111) 10/2 India need 101 runs in 106 balls. Current RR: 4.28 • Required RR: 5.71 Win Probability:IND 93.62% • USA 6.38%
  10. கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஜூன் 2024, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்தே இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கின்றன. ஜாம்பவான் அணிகளை கத்துக்குட்டி அணிகள் தோற்கடிக்கும் நிகழ்வு வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவையும் தீர்மானிப்பதில் நட்சத்திர பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை விட, ஆடுகளங்கள்(விக்கெட்) முக்கியக் காரணியாக மாறிவிட்டன. இதுவரை இருபதுக்குக்கும் மேற்பட்ட லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் எந்தெந்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்லும் என்பதை கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. முன்னாள் சாம்பியன்கள், வலிமையான அணிகள்கூட சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், கத்துக்குட்டி அணிகள், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அணிகளும் கூட சூப்பர்-8 வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள 5 அணிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெறும். எந்த குரூப்பில் எந்தெந்த அணிகள் முதலிரு இடங்களைப் பிடிக்கும் என்பது கடைசி லீக் ஆட்டம் வரை சஸ்பென்ஸாகவே இருக்கும் என்பது போலவே அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் வந்துள்ளன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். குரூப்- ஏ: பாகிஸ்தான் நிலைமை பரிதாபம் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளது. இதில் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். ஆதலால், பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வது சந்தேகத்துக்குரிய ஒன்றுதான். பாகிஸ்தான் அணியை விட கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் அமெரிக்கா அணி வலுவாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு வரும் 16ம் தேதி ஃப்ளோரிடா நகரில் அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. ப்ளோரிடா நகரில் அன்றைய தினம் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றாலும், அமெரிக்கா அணியின் கடைசி 2 லீக் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14ம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். அவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் என்பதால் வெளியேற வேண்டியிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் அணி இன்னும் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறது. குரூப்-பி: இங்கிலாந்துக்கு சிக்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி தற்போது 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் இரு லீக் ஆட்டங்களில் நமீபியா, ஓமன் அணிகளுடன் மோதுகிறது. இரு அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வென்றால் 5 புள்ளிகளுடன் முடிக்கும். தற்போது ஸ்காட்லாந்து அணியும் 5 புள்ளிகளுடன் முடித்தால் நிகர ரன்ரேட் பார்க்கப்படும். அந்த வகையில் இ்ங்கிலாந்து அணி தனது அடுத்த 2 வெற்றிகளிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பிரமாண்ட வெற்றியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், நிகர ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து சூப்பர்-8 சென்றுவிடும். ஸ்காட்லாந்து அணி, தற்போது 3 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 2.164 என வலுவாக இருக்கிறது. இந்த ரன் ரேட்டும், புள்ளிகளும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு சவாலாகத்தான் இருக்கும். இங்கிலாந்து அணி கட்டாயமாக அடுத்த இரு போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணியின் நிகர ரன்ரேட்டைவிட உயர்வாக வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் ஸ்காட்லாந்து அணி மிகமோசமாகத் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால்தான் அதன் நிகர ரன்ரேட் குறையும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து கடும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் நிலை சிக்கலாகிவிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES சி பரிவில் நியூசிலாந்து பரிதாபம் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையே சூப்பர்-8 சுற்றுக்குள் செல்வதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிடம் தோற்றது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. தற்போது மைனஸ் 4.200 புள்ளிகளில் மோசமான நிலையில் நியூசிலாந்து இருக்கிறது. இன்னும் 3 போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு இருக்கும் நிலையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நிச்சயம் இரு அணிகளுக்கும் சவாலானது. ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்றுவிட்டால், அடுத்து வரும் இரு ஆட்டங்களில் பப்புவா நியூ கினி, உகாண்டா அணிகளை எளிதாக வென்று 6 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு கடும் போட்டியளிக்கும். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் மாபெரும் வெற்றியுடன் முடித்து நிகர ரன்ரேட்டை ஆப்கானிஸ்தானைவிட அதிகமாக உயர்த்துவது அவசியம். கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் தோற்றாலும், 4 புள்ளிகளோடு, நியூசிலாந்து போட்டியிட்டாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES குரூப்-டி: இலங்கை வெளியேறுவது உறுதி குரூப் டி பிரிவில் இலங்கை அணி அடுத்தடுத்த தோல்விகள், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒருபுள்ளியுடன் இருக்கிறது. அடுத்து வரும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வென்றாலும் 3 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் இலங்கை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. https://www.bbc.com/tamil/articles/cmll8x087ylo
  11. குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர் இந்தியர்கள் - இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான கட்டிடத்திலேயே அனர்த்தம் 12 JUN, 2024 | 06:00 PM குவைத்தில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பலர் இந்திய தொழிலாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில் இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை குவைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான குழுமத்திற்கு சொந்தமானது. இன்று அதிகாலை கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்டதீ மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட தகவல்படி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையேஇ குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கம் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185942
  12. United States of America 110/8 India (0.3/20 ov, T:111) 1/1 India need 110 runs in 117 balls. Current RR: 2.00 • Required RR: 5.64 Win Probability:IND 92.45% • USA 7.55%
  13. மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கின்றேன் - பைடன் Published By: RAJEEBAN 12 JUN, 2024 | 12:55 PM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிப்பேன் என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை மீறினார் அமெரிக்க நீதிபதியொருவர் தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்கும் ஒருவரின் குடும்ப உறுப்பினர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இதுவே முதல்தடவை. துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனையாளர் இல்லை என ஹன்டர் பொய்சொன்னமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும் போதைப்பொருளிற்கு அடிமையானவேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை அரசாங்க ஆவணத்தில் தான்போதைப்பொருளை பயன்படுத்தவில்லை அதற்கு அடிமையாகவில்லை என ஹன்டர் பைடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வேளை கொக்கெய்ன் பாவனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பிரதான குற்றச்சாட்டாக காணப்பட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் ஏடிஎவ் ஆவணத்தில் பொய்யான தகவல்களை வழங்குவதும் போதைப்பொருளை பயன்படுத்துபவர் துப்பாக்கி வைத்திருப்பதும் அமெரிக்காவில் கடும் குற்றம் இதற்கு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் டெலாவெயர் வில்மிங்டனிற்கு சென்ற பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஹன்டர் பைடனை கட்டித்தழுவியுள்ளார். நான் ஜனாதிபதி நான் தந்தையும் கூட நானும் ஜில்லும் மகனை நேசிக்கின்றோம். இன்று அவரின் நிலையை பார்த்து பெருமிதம் கொள்கின்றோம் என தெரிவித்துள்ள பைடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் ஹன்டர் மேல்முறையீடு செய்வது குறித்து ஆராய்ந்துவரும் இவ்வேளை நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். தனது மகனிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என பைடன் முன்னர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/185901
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி 11 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது. கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது. குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். இதனை ரவிச்சந்திரன் அஷ்வினை விட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது. போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்தார்: “டி20யில் விக்கெட்டுகளை எடுப்பது ஒரு கொடுங்கனவு போன்றது. இதை நான் சொல்லும் போதெல்லாம் மக்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். டி20யில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இது பும்ராவை போன்று பந்துவீச்சாளரின் சொந்த திறனைப் பொறுத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார். “பொதுவாக பந்துவீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். அடுத்த ஓவரில் சக பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாது. மெதுவாக ஆனால் நிச்சயமாக, போட்டியின் போக்கை சுயநலமற்ற பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்றும் அஷ்வின் பதிவிட்டிருக்கிறார். "விக்கெட்டுகளை பெறுவது இறுதி இலக்கு அல்ல" பட மூலாதாரம்,GETTY IMAGES போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா பேசிய வார்த்தைகள் அஷ்வினின் கூற்றை எதிரொலித்தது. பும்ராவின் எண்ணங்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவை என்பதையும் அவர் எவ்வளவு வியூகமாக பந்து வீசுகிறார் என்பதையும் அவரின் பேச்சு பிரதிபலிக்கிறது. பும்ரா பேசுகையில், "போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் போது பந்துவீச்சாளராக நாம் பொறுமை இழந்து விடக்கூடும். பந்து வீசுபவர்கள் முழு பலத்துடன் சிறந்த பந்தை வீச முயற்சிப்பார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன். நாங்கள் விளையாடத் தொடங்கியதும், ஸ்விங் மற்றும் சீம் குறைந்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில் நாம் துல்லியமாக வியூகம் வகுக்க வேண்டும். ஏனென்றால், பந்துவீச்சில் மாயம் செய்து விடலாம் என்று நினைத்து அவசரம் காட்டினால், எதிரணிக்கு ரன்களை எடுப்பது எளிதாகிவிடும், மேலும் அவர்கள் இலக்குக்கு ஏற்ப பேட் செய்து வென்றுவிடுவர். எனவே, நாம் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ஆம், அழுத்தத்தை அதிகரித்து, பெரிய பவுண்டரி லைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் சூழலை நம் நன்மைக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்து நாங்கள் செய்தோம். முதலில் அழுத்தத்தை உருவாக்கினோம், அதன்பின்னர் அனைவரும் விக்கெட்டுகளைப் பெற்றோம்.” என்றார். கடினமான நியூயார்க் ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Nassau County International Cricket Stadium) எதிர்பாராத விதமாக மிகவும் கடினமாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆட்டத்துக்கு நடுவே மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. . ரிஷப் பந்த் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும், ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஆமிர் 2 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். எதிரணிக்கு குறைந்த இலக்கு என்று கவலைப்படாத பும்ரா "சிறு வயதில் இருந்தே பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜஸ்பிரித் பும்ரா கூறுகிறார். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும் போது, அவர்களுக்கு உள்ளிருந்து மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது, ஆனால் அது பும்ராவின் நோக்கத்தில் எந்த பதற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றியது. பும்ராவின் பந்துவீச்சில், ஃபைன் லெக்கில் ரிஸ்வானின் கேட்சை ஷிவம் துபே தவறவிட்ட போது பாகிஸ்தான் 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வான் 7 ரன்களில் இருந்தார். ஐந்தாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை (13) அவுட் செய்து பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் ஆக இருந்தது. 13வது ஓவரில் 73 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. திருப்புமுனையாக அமைந்த ரிஸ்வானின் விக்கெட் முகமது ரிஸ்வான் உறுதியாக நின்று விளையாடி கொண்டிருந்தார். அவர் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார், போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் போவதாகத் தோன்றியது. அதன் பின்னர் 15வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார். பும்ராவின் முதல் பந்து நல்ல லென்த்தில் வீசப்பட்டது. பந்து பவுன்ஸாகி மேலெழுந்ததும், ரிஸ்வானை தடுமாற வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. ரிஸ்வான் அவுட் ஆனவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது. இறுதியில் பாகிஸ்தானுக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் ஓவரில் இமாத் மற்றும் இஃப்திகார் 9 ரன்கள் எடுத்தனர், இலக்கு 12 பந்துகளில் 21 ரன்கள், ஆனால் பும்ரா 19வது ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகாரை (5) அவுட்டாக்கியது மட்டுமல்லாமல், மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 18 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் சமநிலை முக்கியம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு, வாட்ஸ்அப் குழுவில் எனது சீனியர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது - “நல்லது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான நல்ல போட்டியைப் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் போட்டியின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். போட்டிக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா இதேபோன்ற கருத்தை ட்வீட் செய்தார், “பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் போது மட்டுமே எனக்கு போட்டி மீது ஆர்வம் இருக்கும். பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தால், எனக்கு அந்த போட்டியை பார்க்க விருப்பமில்லாமல் நான் டிவியை அணைக்க விரும்புகிறேன். “ என்று பதிவிட்டிருந்தார். `வெல் டன்’ என்று சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், “இந்திய ஊடகங்கள் விராட் கோலி போன்றவர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. தொடர்ந்து பேட்ஸ்மேன்களை பாராட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா எந்த ஆரவாரமும் இல்லாமல் தனித்து வெற்றி பெற்றார். பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த வீரர். முகமது கைஃப் எக்ஸ் தளத்தில் , "ஜஸ்பிரித் பும்ரா ஆகச் சிறந்த ஆட்டத்தின் வெற்றியாளர்- எந்த வடிவத்திலும் எந்த சூழ்நிலையிலும் உலகின் எந்த மூலையில் ஆட்டம் நடந்தாலும் அவர் வெற்றியாளர் தான்” வீரேந்திர சேவாக் கூறுகையில், "தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடியவர் பும்ரா. என்ன ஒரு அபாரமான ஆட்டம். இந்த நியூயார்க் வெற்றி சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார். விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி ஒரு வருடத்திற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பிய விமர்சகர்களை அமைதிப்படுத்தினார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக, அவர் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை. அவர் கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை 2024 இல் சிறப்பாக விளையாடினார். போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பும்ரா, "ஒரு வருடத்திற்கு முன்பு இதே நபர்கள் தான் நான் மீண்டும் விளையாட முடியாது, என் கேரியர் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள், இப்போது அவர்களின் கேள்வி மாறிவிட்டது" என்று கூறினார். சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ராவை பாராட்டினார், "பும்ரா அற்புதமாக விளையாடி வருகிறார், அவரின் திறனை நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், அதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்த உலகக்கோப்பை முடியும் வரை அவர் இந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் பந்து வீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள் ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவர். கிரிக்கெட்டின் அனைத்து மூன்று ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முதல் பந்து வீச்சாளர் பும்ரா. பும்ரா 2013 இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். அணியை ஐந்து முறை சாம்பியனாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஒரு நாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பும்ரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியையும், தனது முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தையும், முதல் டி20யில் டேவிட் வார்னரையும், முதல் டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸையும் வீழ்த்தியுள்ளார். `ஆபத்தான பந்துவீச்சாளர்’ பட மூலாதாரம்,GETTY IMAGES 30 வயதான ஜஸ்பிரித் பும்ரா, அவரது வழக்கத்திற்கு மாறான அதிரடி பந்துவீச்சு மற்றும் திறமையால், உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பந்து அவரின் கையை விட்டு வெளியேறினால், அதன் போக்கை பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினம். ஐபிஎல் போட்டியின் போது, லசித் மலிங்கா துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார். அவரின் டெத் ஓவர்களை விளையாடுவது எந்த பேட்ஸ்மேனுக்கும் எளிதானது அல்ல. நிஜத்தில் பந்துவீச்சு அவ்வளவு வேகமாக இல்லாத போதும், பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்து வீசப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது அவரது தனித்துவமான பாணி. ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் ஒரு இணையதளத்தில் அளித்த பேட்டியில், "பந்தின் வேகத்தை மதிப்பிடுவது பேட்டிங்கின் முக்கிய பகுதியாகும். சிறந்த வீரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசரப்படாத அவர்களின் திறமை தான்” என்றார். https://www.bbc.com/tamil/articles/cw44g4ywynjo
  15. 12 JUN, 2024 | 12:44 PM யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர் இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று இவரை மோதியுள்ளது. இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185900
  16. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925
  17. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 11:47 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது. உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன. உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் மேற்படி சமய நிகழ்வு நடைபெற்றது. அனைத்து மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தின் மூலம் சமாதானம் மற்றும் ஒற்றுமையை விருத்தி செய்யும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையத்தின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுர, செயலாளர் ஜயந்த பீரிஸ், சர்வதேச மனித உரிமைகள் பூகோள வழிநடத்தல் தலைவர் கலாநிதி எம். ஏ. சீ. மஹசும், அதன் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் குபேரலிங்கம், ஆலோசகர் நசீம் மற்றும் ஊடகப்பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சர்வமத தலைவர்களால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கலாநிதி சுதத் தேவபுரவிற்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றது. நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. உலக பெளத்த சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையத்தின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இலங்கை பல மத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு. அரசியல் தலைமைகளின் தலையீடு பொதுமக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எம்மவர் மத்தியில் சமாதானத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில் காலத்துக்கேற்ற சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். அரசியல் உட்பூசல்களையும் கடந்து மனித உரிமைகள் பணியகம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்போடு தமது சேவையை வழங்கி வருகிறது. அவர்களின் மகத்தான சேவை மக்களுக்கு அவசியம் என்றார். படப்பிடிப்பு: ஜே.சுஜீவ குமார் https://www.virakesari.lk/article/185892
  18. காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவென் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி 21 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரிகள், தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது உணர்ந்ததைப் போலவே அவர்களும் உணர்வார்கள். பிளிங்கனின் விமானம் தரையிறங்கும் போது, அவர் சோர்வாகவும் சலிப்பாகவும் உணர்ந்திருக்கக் கூடும். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களில் மத்திய கிழக்கிற்கு பிளிங்கன் மேற்கொண்ட எட்டாவது பயணம் இதுவாகும். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் அரசியல் மற்றும் பாலத்தீன கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது ஆகியவை மிகவும் சிக்கல் நிறைந்த செயல்பாடுகள். ஆனால் தற்போது அது முன்னெப்போதையும் விட மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது, ஏனெனில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தனது அரசியல் கூட்டாளியான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) உடன் அதிபர் நெதன்யாகுவின் போர்க்குழு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இருவருமே ஓய்வுபெற்ற ஜெனரல்கள், அவர்கள் தலைமைத் தளபதிகளாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையை வழிநடத்தினர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அமெரிக்காவின் முன்மொழிவு மற்றும் நெதன்யாகுவுக்கு நெருக்கடி பென்னி காண்ட்ஸ் போர்க்குழு அமைச்சரவையில் அமெரிக்காவின் விருப்பமான பிரமுகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் மீண்டும் எதிர்க்கட்சியில் இருப்பதால், நாட்டில் புதிய தேர்தல்களைக் கோருகிறார். இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்று வாக்கெடுப்பு நடத்துபவர்கள் மத்தியில் முதன்மையான தேர்வாக இருப்பது பென்னி காண்ட்ஸ் தான். ஆனால் நெதன்யாகு தனது கூட்டணியுடன் சமரசமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார். ஏனெனில் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 64 இடங்களை இந்த கூட்டணி அவருக்கு வழங்குகிறது. இந்த கூட்டணி, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் தலைமையிலான இரண்டு தீவிர தேசியவாத பிரிவுகளின் ஆதரவை சார்ந்துள்ளது. இதை குறிவைத்து தான் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனின் வியூகம் இஸ்ரேலிய அரசியலுடன் மோத நினைக்கிறது. காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்புகிறார். அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது பிளிங்கனின் வேலை. அதே சமயம் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் நெதன்யாகுவின் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்று பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் அச்சுறுத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தலைவர்கள் தீவிர யூத தேசியவாதிகள், எனவே ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். காஸா உட்பட மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையே உள்ள அனைத்துப் பகுதிகளும் யூதர்களின் நிலம் என்று அவர்கள் நம்புகிறார்கள். யூதர்கள் அங்கே குடியேற வேண்டும் என்றும் பாலத்தீனர்கள் தானாக முன்வந்து காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். முந்தைய போர் நிறுத்தத் திட்டங்களைப் போல இந்தத் திட்டமும் வீண் போகக் கூடாது என்பதற்காக ஆண்டனி பிளிங்கன் இம்முறை மத்திய கிழக்கை அடைந்துவிட்டார். இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மூன்று போர்நிறுத்த தீர்மானங்களை தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தத்தை விரும்புகிறார். இது அமெரிக்காவின் ஒப்பந்தமா? பட மூலாதாரம்,GETTY IMAGES அதிபர் பைடன், மே 31 அன்று, ஒரு உரையில், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் புதிய முன்மொழிவை ஏற்குமாறு ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்போது ஐநா தீர்மானத்தின் ஆதரவை பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் மூன்று பகுதிளாக உள்ளது. முதலாவதாக, ஆறு வார போர்நிறுத்தத்தை பற்றியது. அந்த சமயத்தில், காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் மற்றும் சில இஸ்ரேலிய பணயக்கைதிகளும் பாலத்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். அதன் பிறகு, ஒப்பந்தத்தின்படி அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இறுதியில் காஸாவின் மறுசீரமைப்புப் பணிகள் நடக்கும். பைடன் கூறுகையில், இஸ்ரேலியர்கள் இனி ஹமாஸை எண்ணி பயப்பட வேண்டாம். ஏனெனில் அவர்களால் இனி அக்டோபர் 7-ஐ போன்ற சம்பவத்தை (தாக்குதல்) மீண்டும் நிகழ்த்த முடியாது என்றார். அதிபர் பைடனும் அவரது ஆலோசகர்களும் இந்த பணியில் சிக்கல்கள் இருக்கும் என்பதை அறிவர். காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறி, போருக்கு முடிவு கட்டுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், காஸாவின் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் நான்கு பணயக்கைதிகளை விடுவித்தது. இதில் பல பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அதிகாரிகள் கூற்றுபடி 274 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இந்த சம்பவம் ஹமாஸ் முன்வைக்கும் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள பல தரப்பினர் தனது முன்மொழிவை எதிர்ப்பார்கள் என்பதும் பைடனுக்குத் தெரியும். எனவே, "இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைமையை வலியுறுத்தியுள்ளேன். எவ்வளவு அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை” என அவர் தனது உரையில் தெரிவித்தார். அமைதி காக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா எதிர்பார்த்தது போல், பைடனின் போர்நிறுத்த முன்மொழிவை பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் கடுமையாக எதிர்த்தனர். இந்த ஒப்பந்தம், தாங்கள் அங்கம் வகிக்காத போர்க்குழு அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. இருப்பினும், பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்த பின்னரே, பென் க்விர் போர்க்குழு அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்தார். ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று அவர் எச்சரித்தார். இதுவரை, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரண்டும் பைடனின் போர்நிறுத்த முன்மொழிவில் எந்த உறுதிப்பாட்டையும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், போர் நிறுத்த முன்மொழிவின் சில பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை, இறுதி செய்யப்பட வேண்டும் என்று பைடன் ஒப்புக்கொண்டார். முன்மொழிவின் சில பகுதிகளில் உள்ள தெளிவின்மை, ராஜதந்திர சூழ்ச்சிக்கு இடம் அளிக்கலாம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது, போரை நீடிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்ற பொதுவான புரிதல் இருக்க வேண்டும். காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் அவ்வாறு செய்ய ஒப்புக்கொள்வார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அக்டோபர் 7ம் தேதியில் இருந்து தான் பின்பற்றி வரும் அதே பாதையையே பின்பற்ற அவர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பெருமளவில் பாலத்தீன மக்கள் உயிரிழந்தது, ஹமாஸை பலவீனப்படுத்தவில்லை, மாறாக அதன் நோக்கத்தை வலுப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது அவர்களைப் பொறுத்தவரை, ஹமாஸின் இருப்பே அவர்களின் வெற்றி. 37,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டது (காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி) இஸ்ரேலுக்கு உலகளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நெதன்யாகுவுக்கு கடினமான பாதை பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலில், நெதன்யாகு தனது போர்க்குழு அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை இழந்துள்ளார். காண்ட்ஸ் மற்றும் இசென்கோட் இருவரும் பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏதுவாக தற்காலிக போர் நிறுத்தத்தை விரும்பினர். இப்போது அவர்கள் இருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்காததால், நெதன்யாகு, பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோரால் பாதிக்கப்படலாம். ஒருவேளை ஆண்டனி பிளிங்கன் அவர்களுடன் பேசி, லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தும் வகையில், பணயக்கைதிகளை மீட்கும் ஒரு உடன்பாட்டை எட்டலாம். நெதன்யாகு தனது அரசாங்கத்தைப் பணயம் வைத்து, தேர்தலில் சவாலை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை. தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எட்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதன் காரணமாக என்ன அரசியல், உளவுத்துறை மற்றும் ராணுவத் தவறுகள் நடந்தன என்பதை அந்த ஆணையம் ஆராயும். அல்லது நெதன்யாகு இஸ்ரேலின் நீண்ட காலம் பிரதமராக இருந்த காலத்தில் கற்றுக்கொண்ட சூழ்ச்சி மற்றும் பிரசாரத்தின் நுட்பங்களையும் பயன்படுத்தலாம். நெதன்யாகு ஜூலை 24 அன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv22vl4pv6vo
  19. 12 JUN, 2024 | 03:09 PM தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல; வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாக தொகுதிகள் பெற்றிருப்போம்” என்றார். இதையடுத்து நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். இது பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பிய தற்போதைய பாஜக தலைவர் இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் எல்லாம் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என்று விமான நிலைத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஆந்திராவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. https://www.virakesari.lk/article/185919
  20. கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் கலைந்துவிட்டது Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 09:55 AM (நெவில் அன்தனி) புளோரிடா, லௌடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது. இப் போட்டி முடிவை அடுத்து இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் கலைந்துவிட்டது கலைந்து போயுள்ளது. இதனை அடுத்து இலங்கைக்கும் நேபாளத்துக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையும் நேபாளமும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்தன. ஆனால், முழு நாளும் கடும் மழை பெய்ததால் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றிபெற்றால் அல்லது நேபாளம் அதன் எஞ்சிய 2 போட்டிகளில் எதிர்பாராத விதமாத வெற்றிபெற்றால் இலங்கை முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும். இப் போட்டியைக் கண்டுகளிக்க நேபாள இரசிகர்கள் பெருமளவில் அரங்குக்கு சென்றிருந்தபோதிலும் இறுதியில் மழையினால் ஏமாற்றத்துடன் வெளியேறினர். https://www.virakesari.lk/article/185880 நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது 12 JUN, 2024 | 10:16 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் சிறிது நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நமிபியாவை 9 விக்கெட்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது. இடைவேளை உட்பட சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி 22.4 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டி முடிவுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முதலிடத்தில் அவுஸ்திரேலியா இருக்கிறது. அடம் ஸம்பாவின் 4 விக்கெட் குவியல், துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. இப் போட்டியில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அடம் ஸம்ப்பா, ஆடவர்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஏற்கனவே மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த தனது சக நாட்டு வீராங்கனைகள் மெகா ஷூட், எலிஸ் பெரி ஆகியோருடன் 3ஆவது அவுஸ்திரேலியராக ஸம்ப்பா இணைந்துகொண்டுள்ளார். நமீபியாவை 72 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர் அவுஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது. ட்ரவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். டேவிட் வோர்னர் 20 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 17 ஓவர்களில் சகல விக்கெட்களையம் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 36 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப வீரர் மைக்கல் வென் லிங்கென் 10 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை. பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா https://www.virakesari.lk/article/185883
  21. மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி 11 JUN, 2024 | 05:49 PM மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த விமானப்படை விமானம் நேற்று தொடர்பை இழந்தது. https://www.virakesari.lk/article/185853
  22. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 11:42 AM போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி. பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய சைவ சமயத் தலைவர்கள், போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தபோது இடதுசாரி தலைவர்களாக இருந்த நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என ஆதங்கம் வெளியிட்டனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என கோரிய போது எனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான். எனக்கு அதன் வலி தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களில் சைவ ஆலயங்கள் அழிக்கப்படும் நிலையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என சைவ சமயத் தலைவர்கள் சுட்டிக்காட்டியபோது, சமயத்தின் பெயரால் சண்டை பிடிக்கக் கூடாது என தெரிவித்த அனுர குமார திஸாநாயக்க, நாம் ஆட்சிக்கு வந்தால் கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள அழிவடைந்த ஆலயங்கள் மீள புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து தென்னிலங்கை வேட்பாளர்கள் வடக்கிற்கு வருகின்ற போக்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதையும் வெளிப்படையாக பேசவில்லை என்றும் அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/185884
  23. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்தில் கழிவறைக்குச் சென்ற இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் மயங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் விஷ வாயு கசிவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேரில் ஆய்வு செய்த, முதல்வர் பாதாள சாக்கடைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். என்ன நடந்தது? புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் செவ்வாய்கிழமை காலை கழிவறைக்கு சென்றபோது, மயங்கி விழுந்துள்ளார். கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகள் காமாட்சி (வயது 55) கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளார். தாயை தேடிச்சென்ற அவரும் அலறல் சத்தத்துடன் தாய் அருகில் மயங்கி விழுந்துள்ளார். கழிவறைக்குச் சென்றவர்கள் சத்தம் போட்டதை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வேகமாக வந்து மயங்கி கிடந்த அவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு வீட்டில் கழிவறைக்குச் சென்ற சிறுமி செல்வராணி (வயது 16) அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியலட்சுமி வீட்டில் கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளனர். இவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செந்தாமரை மற்றும் காமாட்சி முன்பே இறந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. சிறுமி செல்வராணி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு நடந்த தீவிர சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். கழிவறையில் மயங்கி விழுந்த பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ வாயுக் கசிவா? இதனிடையே, கழிவறை பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு இருந்த காரணத்தால், விஷ வாயு தாக்கி உயிரிழப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இதனையடுத்து, முதற்கட்டமாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிட்ட அதிகாரிகள், கழிவுநீர் வாய்க்கால்களை உடைத்து வாயு மற்றும் கழிவுகளை வெளியேற்றிறனர். இதனிடையே, தகவல் அறிந்து வந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு கழிவறைக்கு சென்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படும் நிலையில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காலை 11 மணி வரையில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாள சாக்கடையில் எங்கும் விஷ வாயு கசிவு இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதுநகர் பகுதி மக்கள் தற்காலிகமாக தங்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார். சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக சூழ்நிலையை விளக்கி கூறி மக்களை வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றினர். சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தம் ரத்து சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். வீடு வீடாக அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த பின்னரே விஷவாயு வெளியேற்றம் அல்லது பிற காரணம் தெரியவரும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவும் தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். “புதுநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைகளில் நச்சு வாயு வெளியேறுவதற்கு தனியாக பைப் லைன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி அமைக்கப்பட்ட பைப்–லைன்களிலிருந்து பல இடங்களில் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதை அதிகாரிகள் அப்போதே கண்காணித்து இருக்க வேண்டும்” என்றார். இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சம் நிவாரணம் விஷ வாயு தாக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும், 15 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணமும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறும் போது, “பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டதுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார். “துர்நாற்றம் வீசுவதை முன்பே புகாரளித்தோம்” - அதிகாரிகள் மீது குற்றம் சாட்டும் மக்கள் ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி, சில நாட்களாகவே,வீடுகளில் உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வெளிவருவதாக கூறினார். “இதுதொடர்பாக கனகன் ஏரி கழிவுநீர் வாய்க்கால் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் அரசும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . அதிகாலை நேரத்தில் இந்த பகுதியில் எப்பொழுதுமே துர்நாற்றம் வீசும். அதை தவிர்ப்பதற்கு வீடுகளில் ஸ்பிரே அடித்துக் கொள்வோம்” என்றார் மேலும் கனகன் ஏரி அருகில் நடைபயிற்சிக்கு செல்லும் பொழுது மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் இனியாவது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி கோரிக்கை முன் வைத்தார். விஷ வாயு கசிவு எப்படி ஏற்படும்? சமூக செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் புதுச்சேரி சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், “முறையாக அமைக்கப்படாத பாதாள சாக்கடைகளிலிருந்து மீத்தேன் உருவாகி குழாய் வழியாக வீட்டினுள் பயன்படுத்தப்படும் கழிவறைக்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது. மக்களிடமும், அரசிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகின்றது” என்றார். தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை , மக்காத குப்பை என்று பிரித்து போடாமல், சில நேரங்களில் குழ்ந்தைகளின் டயபர், பெண்களில் நாப்கின் போன்றவற்றை கழிவுநீர் கால்வாய்களில் நேரடியாக போடுவது ஆபத்தானது என்று திடக் கழிவு மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர். இவை கழிவு நீரில் கலந்து பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். இது குறித்து பேசிய பாடம் நாராயணன், “கழிவுகள் கலக்கும் போது, மிக எளிதாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த இடத்தில் மீத்தேன் உருவாக வாய்ப்பு உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அரிப்பு ஏற்படுத்தாமல் இருத்தல் அவசியம். சிமெண்ட் குழாய்களின் கட்டமைப்பு உடைதல், அரித்தல்,விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கழிவறையில் துர்நாற்றமோ, மூச்சு திணறலோ ஏற்பட்டால் உடனடியாக கதவை திறந்து வெளியே வரவேண்டும்” என்றார். https://www.bbc.com/tamil/articles/c0ddglj9x7wo
  24. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:36 AM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்த்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185886

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.