Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Naam Tamizhar Performance Analysis: டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் இந்த தேர்தலில் சாதித்தது என்ன?
  2. Published By: VISHNU 11 JUN, 2024 | 01:35 AM யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமதி உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிசாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் நூறு வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/185793
  3. Published By: VISHNU 11 JUN, 2024 | 01:29 AM அராலி வடக்கு பகுதியில் 10ஆம் திகதி திங்கட்கிழமை இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/185792
  4. வங்கதேசம் தோற்கக் காரணமான ஒரு பந்து - எல்லைக் கோட்டை கடந்தபோதும் 4 ரன் வழங்கப்படாதது ஏன் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிக்காகக் கடினமாகப் போராடியும் ஒரேயொரு பந்து சாதகமாக அமையாததால் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்காவுக்கு அதுவே நல்வாய்ப்பாக அமைந்துபோனது. போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதில் அந்தப் பந்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அது வங்கதேசத்துக்கு சாதகமாக அமைந்திருந்தால் சூப்பர் ஓவராக அமைந்திருக்கும். அது தவறியதால், தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. நியூயார்க்கில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் டி பிரிவில் 20-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்ரிக்க அணி. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது. 114 ரன்கள் எனும் குறைந்த இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்கா இந்த வெற்றி மூலம் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றாலும் கணித ரீதியாக நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கும் வாய்ப்பு இருப்பதால், இன்னும் ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 3 ஆட்டங்களையும் முடித்துவிட்ட தென் ஆப்ரிக்கா அடுத்ததாக 4-ஆவது ஆட்டத்துக்காக செயின்ட் லூசியாவுக்கு புறப்படுகிறது. அதேசமயம் வங்கதேச அணி 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 2 வெற்றிகளைப் பெற்றால், சூப்பர்-8 சுற்றுக்கு நல்ல ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறவும் வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்த இரு ஆட்டங்களையும் நல்ல ரன்ரேட்டில் வெல்வது வங்கதேசத்துக்கு அவசியம். ஆதலால், குரூப் டி பிரிவில் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வதை தென் ஆப்ரிக்கா மட்டும் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. நேபாளத்துடன் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதில் பெரிதாக தடையிருக்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்பாராத முடிவுகளைத் தரும் நியூயார்க் மைதானம் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த அதே நியூயார்க் மைதானத்தில் வேறு விக்கெட்டில் தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் ஆட்டம் நடந்தது. இந்த மைதானத்தில் பெரிதாக ரன்களை எதிர்பார்க்க முடியாது, குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்வதில் இரு அணிகளும் மல்லுக்கட்ட வேண்டிய நிலைதான் இருந்தது. பாகிஸ்தான் அணியைக்கூட 119 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி. ஆனால், நேற்றை ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களை அடித்தநிலையில் அந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலை பந்துவீச்சாளர்களுக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர்களும் தங்களுக்கான கடினமான பணியைச் செய்து, 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர். அதன்பின் ஹிர்தாய், மெகமதுல்லா ஆட்டத்தை திருப்பி வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், நம்பிக்கையை கைவிடாத தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியாகப் பந்துவீசி வங்கதேசத்தை முடக்கினர். தென் ஆப்ரிக்க அணி 113 ரன்களைக் கூட எடுத்ததற்கு கிளாசன்(46), மில்லர்(29) ஆகியோர்தான் காரணம். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம். இவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால், தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். தென் ஆப்ரிக்க அணியின் மானம் காத்த கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வங்கதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடந்த ஆட்டத்தைப் போன்று இந்த ஆட்டத்திலும் ஹிர்தாய், மெகமதுல்லா அணியை தூக்கி நிறுத்தினர். ஆனால், கடைசி நேரத்தில் இருவரும் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லைக் கோட்டைக் கடந்தும் 4 ரன்கள் வழங்கப்படாதது ஏன்? இந்த ஆட்டம் உண்மையில் சூப்பர் ஓவரில் முடிந்திருக்க வேண்டியது. வங்கதேசம் தோற்ற 4 ரன்கள், பவுண்டரியாக வழங்கப்பட்டிருந்தால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் 3வது சூப்பர் ஓவர் ஆட்டமாக அமைந்திருக்கும். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரை மெகமதுல்லா எதிர்கொண்டார். 2-ஆவது பந்தை மெகமதுல்லா ப்ளிக் ஷாட் மூலம் அடிக்க முயன்றபோது, கால்காப்பில் பந்துபட்டு லெக்பை மூலம் பவுண்டரி சென்றது. ஆனால், கால்காப்பில் மெகமதுல்லா வாங்கியதைப் பார்த்த தென் ஆப்ரிக்க வீரர்கள் நடுவரிடம் அவுட் அப்பீல் செய்யவே, நடுவரும் அவுட் வழங்கினார். ஆனால், இதை எதிர்த்து மெகமதுல்லா 3வது நடுவரிடம் அப்பீல் செய்தார்.இதை ஆய்வு செய்த 3வது நடுவர், கால்காப்பில் வாங்கிய பந்து தவறான திசையில் சென்றதாகக் கூறி, அவுட் வழங்கியதை ரத்து செய்தார். ஆனால் லெக்பை மூலம் பவுண்டரி சென்றதற்கு பவுண்டரி வழங்கவில்லை. ஒருவேளை பவுண்டரி வழங்கியிருந்தால், ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் வந்திருக்கும். ஆனால் ஐசிசி விதி டிஆர்எஸ்(3.7.1.) விதிப்படி, “ நடுவரின் முடிவு அவுட்டாக இருக்கும்போது, பேட்டர் அப்பீல் செய்து அவுட் ரத்து செய்யப்பட்டால் அந்த பந்து “டெட்பால்” என அறிவிக்கப்படும். பேட்டிங் செய்யும் அணி விக்கெட்டை பாதுகாக்கலாம், ஆனால், அதனால் கிடைத்த ரன்கள் செல்லாததாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் வங்கதேசத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய 4 ரன்கள் கிடைக்கவில்லை. ஒருவேளை களநடுவர் அவுட் வழங்காமல், லெக் பை என அறிவித்திருந்தால், சூப்பர் ஓவரில் ஆட்டம் முடிந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்காவின் 3 தலைவலிகள் தென் ஆப்ரி்க்க அணிக்கு அதன் முதல் 3 வரிசை ஆட்டக்காரர்களின் பேட்டிங் ஃபார்ம் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இந்த 3 பேட்டர்களும் சேர்ந்து 9 இன்னிங்ஸ் ஆடி வெறும் 61 ரன்கள் சேர்த்துள்ளனர், சராசரியாக 6.77 ரன்கள் மட்டும்தான். உகாண்டா, பிஎன்ஜி அணி பேட்டர்களின் சராசரியைவிடக் குறைவாகும். இதில் பெரிய தலைவலியாக இருப்பது ஹென்ட்ரிக்ஸ் பேட்டிங்தான். கடந்த 3 போட்டிகளில் 4,3,0 என்று ஹென்ட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். இவர்கள் 3 பேரும் 3 ஆட்டங்களிலும் ஆட்டமிழந்தவிதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்த ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 5-வது ஓவரில்டக்அவுட்டில் வெளியேறினார். டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி முதல் 5 ஓவர்களில் முதல் 4 விக்கெட்டுகளை இழப்பது இதுதான் முதல்முறை. ஆனால், கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்துதான் அணிக்கு கவுரமான ஸ்கோரைக் கொண்டு வந்தனர். அதிலும் மில்லருக்கு நேற்று பிறந்தநாள். 13 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டிய மில்லருக்கு கேட்ச் வாய்ப்பை லிட்டன் தாஸ் தவறவிட்டதால் 29 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்காவை இறுக்கிய வங்கதேசம் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் தமிம் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் பேட்டிங் முதுகெலும்பை நொறுக்கிவிட்டார். 4 ஓவர்கள் வீசிய தமிம் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைப் பயன்படுத்தி ரிஷாத் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மானும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி தென் ஆப்ரிக்க அணியின் ரன் சேர்ப்புக்கு பெரிய தடைக்கற்களை போட்டனர். ரிசாத் ஹூசைன், முஸ்தபிசுர், தமிம் ஆகிய 3 பேரும் கடைசி 3 ஓவர்களை வீசி டெத் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தினர். அதிலும் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய ஸ்கோர் வராமல் தடுத்தனர். தஸ்கின் அகமதுவும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிஷாத் ஹூசைன் தனது முதல் 3 ஓவர்களில் 28 ரன்களை வழங்கிய நிலையில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஒட்டுமொத்தத்தில் வங்கதேசத்தின் பந்துவீச்சு தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES “வெற்றி பெற வேண்டிய ஆட்டம்” தோல்வி அடைந்த வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ கூறுகையில் “ஒவ்வொருவரும் பதற்றத்துடன் இருந்தோம். ஜேக்கர் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், நடக்கவில்லை. தன்சித் கடந்த இரு ஆட்டங்களாக தீவிரமாகப் பயிற்சி செய்தார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பது அவசியமாக இருந்ததை அவர் செய்து கொடுத்தார். இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றிருக்க வேண்டும், வெற்றியை நெருங்கியபோதும், கடைசி இரு ஓவர்களை தென் ஆப்ரிக்க சிறப்பாகப் பந்துவீசியது. கிரிக்கெட்டில் இதுபோன்ற முடிவுகள் நடக்கும்.” எனத் தெரிவித்தார். கடைசி ஓவரில் என்ன நடந்தது? 114 ரன்கள் எனும் குறைவான ஸ்கோர், ஓவருக்கு 5 ரன்கள் சேர்த்தாலே வென்றுவிடலாம் என்ற நிலையில், தன்சித் ஹசன்(9), சான்டே(14), லிட்டன் தாஸ்(9), சஹிப்(3) என முதல் 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அணியை சிக்கலில் தள்ளினர். ஹிர்தாய், மெகமதுல்லாவின் போராட்டம்தான் ஆட்டத்தை கடைசிவரை நகர்த்தி வந்தது. 18-வது ஓவரில் ரபாடா எடுத்த ஹிர்தாய்(37) விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. செட்டில் ஆன பேட்டர் ஆட்டமிழந்ததும் வங்கதேசத்துக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேசவ் மகராஜ் இதுவரை வீசியதே இல்லை. பரிசோதனை முயற்சியாக நேற்று பந்துவீசியபோது, முதல்2 பந்துகளில் 4 ரன்களை வங்கதேசம் சேர்த்தது. 3வது பந்தை ஜேக்கர் அலி தூக்கி அடிக்க லாங் ஆன் திசையில் கேட்சானது. 4-வது பந்தில் ஒரு ரன். 5-வது பந்தை கேசவ் ஃபுல்டாஸாக வீசவே மெகமதுல்லா சிக்ஸருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் மார்க்ரம் கடினமான கேட்சைப் பிடித்தபோது வங்கதேசத்தின் தோல்வி உறுதியானது. கடைசிப்பந்தில் ஒரு ரன் சேர்க்கவே வங்கதேசம் போராட்டம் முடிவுக்கு வந்தது. https://www.virakesari.lk/article/185784
  5. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆனால், மூன்று அடுக்குகளை கொண்டு பலப்படுத்தப்பட்ட ஜன்னல்களால் விமானத்திற்குள் ஆலங்கட்டி மழை ஊடுருவவில்லை. மணித்தியாலத்திற்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணிக்கும் போது ஆலங்கட்டி மழை அல்லது பிற கடினமான பொருட்களால் தாக்கப்பட்டால் உடைந்து போகாமல் இருப்தை உறுதிப்படுத்த விமானத்தின் கண்ணாடிகள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இந்நிலையில், சேதத்தை பொருட்படுத்தாமல் விமானம் பத்திரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த எம்மேலி ஓக்லி என்ற பயணி சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் , "நாங்கள் தரையிறங்குவதற்கு சுமார் 20 நிமிடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மேகத்திற்குள் நுழைந்தோம், விமானத்தில் கொந்தளிப்பு தொடங்கியது." என்றார். இதேவேளை 2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்ட விமானம் பத்திரமாக தரையிறக்கிய பின்னர் விமானி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185800
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரேல் பதவி, அறிவியல் ஆசிரியர் 10 ஜூன் 2024, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா? இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட நான்காவது விண்கலம் இது. சீன விண்கலம் சந்திரனின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் முதற்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டன. கடந்த 12 மாதங்களில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சந்திரனின் மேற்பரப்பில் விண்கலங்களை தரையிறக்கியுள்ளன. பிப்ரவரியில், அமெரிக்க நிறுவனமான இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் ( Intuitive Machines) நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனமாக உருவெடுத்தது. அதனை தொடர்ந்து மேலும் பல தனியார் நிறுவனங்கள் விண்கலங்களை நிலவில் தரையிறக்க தயாராகி வருகிறது. நாசா சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் 2026இல் சந்திரனில் தரையிறங்க உள்ளனர். மற்றொரு புறம், 2030-க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவோம் என்று சீனா கூறுகிறது. விரைவான பயணத் திட்டத்துக்கு பதிலாக, சந்திரனில் நிரந்தர தளங்களை உருவாக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இன்றைய யுகத்தில் பெரும் அதிகார அரசியல் உருவெடுத்து வரும் நிலையில், இந்த புதிய விண்வெளிப் பந்தயம் பூமியில் நிலவும் போட்டிச் சூழலை நிலவு வரை கொண்டு செல்ல வழிவகுக்கும். கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் ஜஸ்டின் ஹோல்காம்ப் கூறுகையில், “சந்திரனுடனான நமது உறவில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. விண்வெளி ஆய்வின் வேகம் நமது சட்டதிட்டங்களை மீறுகிறது" என்று அவர் எச்சரிக்கிறார். 1967 ஆம் ஆண்டு ஐநா உடன்படிக்கை எந்த நாடும் சந்திரனை சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறுகிறது. அவுட்டர் ஸ்பேஸ் உடன்படிக்கை (Outer Space Treaty) சொல்வது என்னவெனில், `சந்திரன் அனைவருக்கும் சொந்தமானது. அதில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆய்வும் அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும் அனைத்து நாடுகளின் நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம் இந்த உடன்படிக்கை மிகவும் அமைதியான ஒத்துழைப்பான சூழலை குறிக்கிறது. ஆனால், இந்த விண்வெளி உடன்படிக்கை ஒத்துழைப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக சர்வதேச பனிப்போர் அரசியலை உருவாக்கி உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்ததால், விண்வெளி ஒரு ராணுவப் போர்க்களமாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவியது. எனவே ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக எந்த அணு ஆயுதங்களையும் விண்வெளிக்கு அனுப்பக் கூடாது என்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் தற்போதுள்ள புதிய விண்வெளி யுகம் அன்றைய காலகட்டத்தில் இருந்ததை விட வித்தியாசமாக தோன்றுகிறது. இந்த சந்திர யுகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் என்னவென்றால், நவீன கால நிலவு பயணங்களை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் மட்டும் திட்டமிடவில்லை, தனியார் நிறுவனங்களும் திட்டங்களை வகுத்து, போட்டியிடுகின்றன. ஜனவரியில், பெரெக்ரைன் (Peregrine) என்ற அமெரிக்க நிறுவனம் மனித சாம்பல், டிஎன்ஏ மாதிரிகள், பிராண்டிங் பெயர் கொண்ட விளையாட்டு பானம் ஆகியவற்றை சந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்தது. ஆனால் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறி அத்திட்டம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை சந்திரனுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்தது பெரும் விவாதத்தை தூண்டியது. நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்தின்படி மனித குலத்திற்கு பயனளிக்கும் ஆய்வை மட்டுமே சந்திரனில் மேற்கொள்ள வேண்டும் என்ற விவாதத்தைத் தூண்டியது. "எங்களுக்கு திறன் இருப்பதால், சாத்தியம் என்பதால், நாங்கள் சந்திரனுக்கு பொருட்களை அனுப்ப முயற்சிக்கிறோம். இதற்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை,” என்கிறார் விண்வெளி வழக்கறிஞரும், ஃபார் ஆல் மூன்கைண்டின் நிறுவனருமான மிச்செல் ஹான்லன். இந்த நிறுவனம் சந்திரனில் தரையிறங்கும் தளங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்களின் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைக்கும் ஒரு அமைப்பாகும். "தற்போது சந்திரன் நாம் அணுகக்கூடிய தூரத்தில் உள்ளது, எனவே அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கிவிட்டோம்," என்று அவர் கூறுகிறார். சந்திரனுக்கு செல்ல திட்டம் வகுக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், தேசிய நிறுவனங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் பாலிசி அண்ட் லாவின் இயக்குனர் சைத் மோஸ்தேசார் கூறுகையில், "எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசால் விண்வெளிக்கு செல்ல அங்கீகரிக்கப்பட வேண்டும், இது சர்வதேச ஒப்பந்தங்களால் வரையறுக்கப்படும். ” என்கிறார். பட மூலாதாரம்,REUTERS நிலவில் கால் பதிக்கும் திட்டங்களால் ஒரு பெரிய கௌரவம் கிடைப்பதாக உலக நாடுகள் கருதுகிறது. இந்தியாவும் ஜப்பானும் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு, `உலகளாவிய விண்வெளி வீரர்கள்’ என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நாடு, வேலை வாய்ப்புகள் மற்றும் புதுமைகள் மூலம் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொண்டு வர முடியும். அதே சமயம் இந்த `மூன் ரேஸ்’ ஒரு பெரிய பரிசையும் வழங்குகிறது. அது `அதன் எண்ணற்ற வளங்கள்’. தற்போது சந்திரனின் நிலப்பரப்பு தரிசாகத் தோன்றினாலும், அதில் அரிதான நிலப்பரப்புகள், இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் மற்றும் ஹீலியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன, இவை சூப்பர் கண்டக்டர்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கனிமங்களின் மதிப்பீடுகள் பில்லியன்கள் முதல் குவாட்ரில்லியன்கள் வரை பெருமளவில் வேறுபடுகின்றன. எனவே சிலர் சந்திரனை நிறைய பணம் சம்பாதிக்கும் இடமாக பார்க்கிறார்கள். சந்திரனின் வளங்கள் ஒரு மிக நீண்ட கால முதலீட்டாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்திர வளங்களைப் பிரித்தெடுத்து பூமிக்கு கொண்டு வருவதற்கு, தேவையான தொழில்நுட்ப வழிகள் கண்டறியப்பட வேண்டும். 1979 இல், ஒரு சர்வதேச ஒப்பந்தம் சந்திரனின் வளங்களை எந்த நாடும் அல்லது அமைப்பும் சொந்தமாகக் கோர முடியாது என்று அறிவித்தது. ஆனால் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை - 17 நாடுகள் மட்டுமே இதில் பங்கேற்கின்றன. அமெரிக்கா உட்பட சந்திரனுக்குச் சென்ற எந்த நாடுகளும் இந்த ஒப்பந்த்தில் இல்லை. உண்மையில், அமெரிக்கா 2015 இல் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதன்படி அதன் குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எந்த ஒரு விண்வெளிப் பொருளையும் பிரித்தெடுக்கவும், பயன்படுத்தவும் மற்றும் விற்கவும் அது அனுமதிக்கிறது. "இது சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது," என்று மைக்கேல் ஹன்லோன் என்னிடம் கூறினார். "அமெரிக்காவை பின்பற்றி மெதுவாக, மற்ற நாடுகளும் இதே போன்ற தேசிய சட்டங்களை கொண்டு வந்தன. அதில் லக்சம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவையும் அடங்கும்.” என்றார். மிகவும் தேவையான ஒரு வளம்: தண்ணீர். "அப்பல்லோ விண்வெளி வீரர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட முதல் சந்திரனின் பாறைகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, அவை முற்றிலும் உலர்ந்ததாக கருதப்பட்டன" என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் விளக்குகிறார். "ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உண்மையை நாங்கள் கண்டறிந்தோம். அந்த சந்திரப் பாறைகளில் பாஸ்பேட் படிகங்களில் சிக்கியிருக்கும் தண்ணீரின் சிறிய தடயங்கள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்." என்றார். சந்திரனின் துருவப்பகுதிகளில், இன்னும் நிறைய தண்ணீரின் சுவடு இருக்கிறது என்று அவர் சொல்கிறார் - அதன் பள்ளங்களுக்குள் பனிக்கட்டிகள் உறைந்துக் கிடக்கின்றன. வருங்காலத்தில் நிலவுக்கு செல்பவர்கள் அதன் தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம், ஆக்ஸிஜனை உருவாக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி வீரர்கள் ராக்கெட் எரிபொருளை உருவாக்க பயன்படுத்தலாம், அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்தெடுத்து அதனை சந்திரனில் இருந்து செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் பயணிக்கலாம். சந்திரன் ஆய்வு மற்றும் சந்திர பயணங்கள் தொடர்பாக ஒரு புதிய வழிகாட்டும் கொள்கைகளை நிறுவ அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின்படி "சில புதிய விதிகள் தேவைப்பட்டாலும், சந்திரனில் உள்ள வளங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக `அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தத்திற்கு' (Outer Space Treaty) இணங்க வேண்டும்” என்கிறது. இதுவரை 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் சீனா இந்த பட்டியலில் இல்லை. சந்திர ஆய்வுக்கான புதிய விதிகள் ஒரு தனிப்பட்ட தேசத்தால் வழிநடத்தப்பட கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். "இது உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் வகுக்கப்பட வேண்டும், ஏனெனில் இது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது," என்று சைட் மோஷெட்டர் என்னிடம் விளக்குகிறார். வளங்களுக்கான அணுகல் மற்றொரு மோதலையும் ஏற்படுத்தும். சந்திரனில் நிறைய இடங்கள் இருந்தாலும், பனியால் நிரம்பிய பள்ளங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளே முக்கியத்துவம் பெறும் ‘சந்திர ரியல் எஸ்டேட்’ தளங்கள் ஆகும். அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் அந்த ஒரே இடத்தை கைப்பற்ற விரும்பினால் என்ன நடக்கும்? ஒரு நாடு அந்த பகுதியில் தளம் அமைத்தவுடன், மற்றொரு நாடு தங்கள் தளத்தை சற்று நெருக்கமாக நிறுவினால் என்ன நடக்கும்? அதனை தடுப்பது எப்படி? லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் விண்வெளிக் கொள்கை மற்றும் சட்ட ஆராய்ச்சியாளரான ஜில் ஸ்டூவர்ட் கூறுகையில், "அண்டார்டிக்குடன் இதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒப்புமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த கண்டத்தில் இருப்பதைப் போல சந்திரனிலும் ஆராய்ச்சி தளங்கள் அமைக்கப்படலாம்." என்கிறார். ஆனால் ஒரு புதிய சந்திர தளத்தை நிறுவுவது பற்றிய முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்பது பெரிய கேள்விக்குறி. எடுத்துக்காட்டாக, சந்திரனில் அமைக்கப்படும் தளங்களின் அளவீடுகள் எப்படி இருக்கும்? இவற்றை முடிவு செய்யப்போவது முதலில் சந்திரனில் தளம் அமைக்கப் போகும் நாடு தான். "நிச்சயமாக சந்திரனில் தளங்கள் அமைக்கும் செயல்பாட்டில் முதல் மூன்று நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்," என்று ஜில் ஸ்டூவர்ட் கூறுகிறார். "முதலில் அங்கு சென்று முகாம் அமைக்கும் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒரு சிறிய சலுகை இருக்கும். அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் என்று அர்த்தம் இல்லை, ஆனால் அந்த இடத்தில் சுதந்திரமாக தளம் அமைக்க முடியும்” என்கிறார் அவர். தற்போதைய சூழலில், அங்கு முதலில் குடியேறுபவர்கள் அமெரிக்கா அல்லது சீனாவாக இருக்கலாம், ஏற்கனவே பதற்றமான அவர்களின் உறவுக்கு மத்தியில் புதிய போட்டியைக் கொண்டு வருகிறது. அவர்கள் அங்கு தர நிலையை அமைக்க வாய்ப்புள்ளது. முதலில் அங்கு வருபவர்களால் நிறுவப்பட்ட விதிகள் காலப்போக்கில் நிரந்தர விதிகளாக மாறும். இவை அனைத்தும் தற்காலிகமாக தோன்றலாம். ஆனால் என்னிடம் பேசிய சில விண்வெளி நிபுணர்கள், மற்றொரு பெரிய சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை நாம் மீண்டும் காண வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். சந்திரன் ஆய்வில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது புதிய நடத்தை நெறிமுறைகள் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் ஆபத்தும் நிறைய இருக்கிறது. வானத்தில் பிரகாசமாக ஒளிரும் சந்திரன் தேயும் போதும் மீண்டும் முழுமையாகத் தெரியும் போதும் நமக்கு நிலையான துணையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் புதிய விண்வெளிப் பந்தயம் தொடங்கும் போது, சந்திரன் எந்த மாதிரியான இடமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் - மேலும் அது பூமிக்குள் நடக்கும் போட்டிகள் அரங்கேறும் ஒரு தளமாக மாறும் அபாயம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cg33n37del4o
  7. இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேலிய படையினர் - - தீர்ப்பு நாளின் பயங்கரம் போல காணப்பட்ட இஸ்ரேலின் பயணக்கைதிகள் மீட்பு நடவடிக்கை 10 JUN, 2024 | 04:19 PM theguardian. சனிக்கிழமை காலை நுசெய்ரெட்டின் சந்தை மும்முரமாக காணப்பட்டது. அங்கு காணப்பட்டவர்களில் ஆசியா அல் நெமெரும் ஒருவர். தனது சகோதரிக்கு தேவையான மருந்துகள் எஞ்சியிருக்ககூடிய மருந்தகத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார். அன்சாம் ஹரோன் எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக மகளிற்கு புத்தாடையை வேண்டும் எதிர்பார்ப்புடன் அங்கு காணப்ட்டார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய படையினர் தரைவழியாக உள்ளே வந்தவேளை காசாவின் இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அவ்வேளை ஹரோனின் வீடு விமானக்தாக்குதலால் அழிக்கப்பட்டது. எனினும் ரபாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் மீண்டும் இந்த பகுதிக்கு வந்துசேர்ந்தனர். நுசெய்ரட் சந்தை எப்போதும் சனக்கூட்டம் நிரம்பியது, இப்போது இந்த பகுதிக்கு அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் அது மேலும் நெரிசலாக காணப்பட்டது என்கின்றார் 29 வயதான ஹரோன். அவர் தனது உறவினருடன் தங்கியிருக்கின்றார். அவர் தனது பிள்ளைகளிற்காக ஆடைகளை தெரிவுசெய்வதில் ஈடுபட்டிருந்தவேளையே இஸ்ரேலின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது, அவர் ஒருநொடி கூட சிந்திக்காமல் வெளியில் ஓடி பிள்ளைகள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். வெளியே தீர்ப்பு நாளின் பயங்கரம் போல ஒரு காட்சியை கண்டேன் என்கின்றார் அவர், பதற்றமடைந்த மக்கள் அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு முயன்றுக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் ஹெலிக்கொப்டர்களும் ஆளில்லா விமானங்களும் தாக்குதலில் இணைந்துகொண்டன, இந்த தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், அவர்களுடைய சிதைந்த உடல்கள் வீதி எங்கும் சிதறிக்கிடப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அனைவரும் அச்சத்துடன் காணப்பட்டனர் அலறினார்கள் என தெரிவிக்கும் அவர் நான் நின்றிருந்த வீதி 50 மீற்றர் நீளமானது, ஆனால் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்தார். எனக்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் அச்சம் காரணமாக மயங்கிவிழுந்தார், வீதியோரங்களில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தவர்கள் அவற்றை கைவிட்டுவிட்டு ஒடினார்கள்" அங்கிருந்து தப்பியோட முயன்றவர்களில் காசாவின் வடக்கினை சேர்ந்த பொறியியலாளரான எல்நெமெரும் 37 ஒருவர். நான் ஏனைய பெண்களுடன் வீதியில் நடந்துகொண்டிருந்தேன், நாங்கள் கடும் அச்சத்தின் பிடியில் சிக்கினோம் என அவர் தெரிவித்தார். அவர்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்திருக்ககூடிய மருத்துவநிலையங்கள் பாடசாலைகளை தவிர்த்துவிட்டு அங்கிருந்து ஒடினார்கள். இஸ்ரேல் மருத்துவமனைகளையும் பாடசாலைகளையும் தாக்குவதால் பொதுமக்கள் தற்போது அங்கு தஞ்சமடைவதை தவிர்த்துள்ளனர். எனினும் ஹெலிக்கொப்டர் ஒன்று அப்பகுதிக்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்ததும் அங்கு காணப்பட்ட மக்கள் கடும் பீதியில் சிக்குண்டனர். எல்நெமர் அதிர்ச்சியால் மயக்கமடைந்த பெண் ஒருவரை இழுத்துக்கொண்டு அங்கு காணப்பட்ட வீடொன்றிற்குள் தஞ்சமடைந்தார். சந்தைக்கு அருகில் உள்ள தொடர்மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் இந்த உக்கிர தாக்குதலை மேற்கொண்டது என்பது பொதுமக்களிற்கு உடனடியாக தெரியாது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக 270 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 600 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரபாவிலிருந்து வரும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் போல தங்களை காண்பித்தவாறு வீட்டுத்தளபாடங்கள் ஏற்றப்பட்ட டிரக்கில் நுஸ்ரெய்ட்டின் மத்திய பகுதிக்கு வந்த இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலின் செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. காரிலும் டிரக்கிலும் இஸ்ரேலிய படையினர் வந்துசேர்வதை தனது உறவினர் ஒருவர் பார்த்தார் என தெரிவிக்கின்றார் ராத் தவ்பிக் அபு யூசுவ். அவர் தற்போது இந்த தாக்குதலின் போது காயமடைந்த மகனை மருத்துவமனையில் பாராமரித்து வருகின்றார். சிலர் டிரக்கிலிருந்து இறங்கினார்கள் வீட்டிற்கு முன்னாலிருந்தவர்களிற்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அனைவரையும் கொலை செய்ய தொடங்கினார்கள் என அவர் தெரிவிக்கின்றார். இதன் பின்னரே குண்டுவீச்சு ஆரம்பமானது. தனது படையினர் தாக்கப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.100 பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது தெரியாது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185763
  8. 71 பேருடன் 'கூட்டணி' அமைச்சரவையை நடத்துவதில் மோதி முன்னுள்ள மிகப்பெரிய சவால் பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 10 ஜூன் 2024, 13:45 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியின் 71 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் 36 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்), இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 11 பேர் அமைச்சரவையில் உள்ளனர். கடந்த மோதி அரசாங்கத்தின் பிரபல முகங்களான ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதேசமயம், ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரும் மோதி தலைமையிலான மூன்றாவது அரசில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார். தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்பு மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தனர். மொத்தம் 33 பேர் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் வாரிசுகள் 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அமைச்சரான வாரிசுகள் யார்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப்படம்) முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் 7 பேர் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அமைச்சரான ஜெயந்த் சௌத்ரி, முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பேரன். சிராக் பஸ்வான் பிகாரின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார். பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூரின் மகனும், எம்.பி.யுமான ராம்நாத் தாகூருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்து பதவியை இழந்த ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாபில் காலிஸ்தானிகளால் கொல்லப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். மகாராஷ்டிர மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவின் மருமகள் ரக்ஷா காட்சேவுக்கும் ஆட்சியில் இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2021ல் பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசில் ஜிதின் பிரசாதா அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜிதின் பிரசாதா காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பிரசாத்தின் மகன். மக்களவைத் தொகுதியில் கேரளாவில் பாஜகவுக்கு முதல் வெற்றியை தந்துள்ள நடிகர் சுரேஷ் கோபியும் அமைச்சராக்கப்பட்டுள்ளார். புதிய அரசில் 27 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 10 அமைச்சர்கள் பட்டியல் சாதியினர், 5 பேர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் 5 பேர் சிறுபான்மையினர். இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மைக் குழுவான முஸ்லிம்கள் மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. அதாவது, புதிய அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சிராக் பஸ்வான் (கோப்புப்படம்) அரசாங்கத்தில் பிரதமர் உட்பட மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறும்போது, “இப்போதுதான் பதவியேற்பு விழா நடந்தது, அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தும் சவாலை பாஜக எதிர்கொள்கிறது. அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சியை நடத்துவதற்குப் பழகிவிட்ட பிரதமர், கூட்டணிக் கட்சிகளை எப்படி நிர்வகிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கு எந்தத் துறை கிடைக்கும் என்பது, அரசு எந்த அளவுக்குச் சுமூகமாக இயங்கும் என்பதை முடிவு செய்யும்” என்றார். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் பாஜக திருப்திப்படுத்த வேண்டும், எனவே துறைகளை பகிர்ந்தளிக்க நேரம் ஆகலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால், அக்கட்சியிலிருந்து யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. பிரபுல் படேல் காங்கிரஸ் தலைமையிலான முற்போக்குக் கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தவர், அவரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. அதிதி ஃபட்னிஸ் கூறுகையில், “தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இணையமைச்சர் பதவிக்கு அக்கட்சி உடன்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முரண்பாடு ஏற்பட்டால், அது எதிர்காலத்தில் மகாராஷ்டிரா அரசியலை பாதிக்கலாம்” என்றார். மாநில பிரதிநிதித்துவம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மனோகர் லால் கட்டார் (கோப்புப்படம்) ஹரியானா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தவிர, ராவ் இந்தர்ஜித் சிங், கிருஷண் பால் குர்ஜார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பத்து மக்களவைத் தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில், இந்த முறை பாஜக 5 இடங்களை இழந்துள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் குழுவில் ஹரியானாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்னிஸ் நம்புகிறார். உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இம்முறை ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதிதி ஃபட்னிஸ் கூறும்போது, "உ.பி.யில் இருந்து ராஜ்நாத் சிங், ஜிதின் பிரசாத் போன்ற பழைய தலைவர்களைத் தவிர, புதிய முகங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இருந்து அனுப்ரியா படேல், கிர்த்தி வர்தன் சிங், கமலேஷ் பாஸ்வான், பி.எல்.வர்மா, பங்கஜ் சௌத்ரி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் எஸ்.பி. பாகேல் உட்பட மொத்தம் பத்து அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்” என்றார். கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்த நிலையில், அங்கிருந்து இரண்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தானில் இருந்து கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், பூபேந்திர யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், சாவித்ரி தாகூர் மற்றும் வீரேந்திர வர்மாவைத் தவிர சிவராஜ் சிங் சௌகான், ஜோதிராதித்ய சிந்தியா என மொத்தம் நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்த பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 40 இடங்களைக் கொண்ட பிகாரில் மொத்தம் 8 அமைச்சர்கள் உள்ளனர். அதேசமயம், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிராவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அங்கிருந்து மொத்தம் 5 அமைச்சர்கள் உள்ளனர். ராம்தாஸ் அத்வாலேவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத தமிழ்நாட்டிற்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து மொத்தம் 5 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தெலங்கானாவிலிருந்து இரண்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES நரேந்திர மோதியின் இந்த புதிய அரசு, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் நிலையற்றதாகவே இருக்கும் என்ற யூகங்கள் உள்ளன. இருப்பினும், அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது சாத்தியமில்லை என்று அதிதி ஃபட்னிஸ் நம்புகிறார். ஃபட்னிஸ் கூறுகையில், “இரண்டு பெரிய கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டுமே தங்கள் சொந்த நலன்களையும் கருத்தில் கொள்ளும். ஐக்கிய ஜனதா தளம் குழப்பம் விளைவித்தால், பிகாரில் அதன் ஆட்சி கவிழும். மாநிலத்தில் ஆட்சியை நடத்துவதற்கு தெலுங்கு தேசம் பாஜகவைச் சார்ந்திருக்கவில்லை என்றாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வோம் என்பதை அக்கட்சி மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் உறுதியற்ற அச்சம் அவ்வளவு உண்மையானது அல்ல” என்றார். ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரியின் கருத்து சற்று வித்தியாசமானது. கூட்டணி ஆட்சியை நடத்துவதற்குத் தேவையான அனுபவம் பிரதமர் நரேந்திர மோதிக்கு இல்லை என்று ஹேமந்த் அத்ரி நம்புகிறார். ஹேமந்த் அத்ரி கூறுகையில், “நரேந்திர மோதி இதுவரை ஏகபோக ஆட்சியையே நடத்தி வந்திருக்கிறார், ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்திருக்கிறார். கூட்டணிக் கட்சிகளுடன் மோதி எவ்வளவு பொருந்திப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறுதிப் பெரும்பான்மை அரசுக்கும், கூட்டணி ஆட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அரசு எந்தளவுக்கு ஸ்திரமாக இருக்கும் என்பதை துறைகளை ஒதுக்கீடு செய்வதுதான் தெளிவுப்படுத்தும்” என்றார். முந்தைய ஆட்சியின் போது, பிரதமர் நரேந்திர மோதி பண மதிப்பிழப்பு போன்ற பல பெரிய முடிவுகளை எடுத்தார். தனது விருப்பப்படி ஆட்சியை தொடர்ந்து நடத்தி வரும் நரேந்திர மோதி, கூட்டணி சார்ந்து தன்னை மாற்றிக் கொள்வாரா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹேமந்த் அத்ரி கூறுகையில், “குஜராத்தில் இருந்து டெல்லி வரையிலான மோதியின் அரசியல் பயணம் ‘தனியாக நடக்க வேண்டும்’ ('Ekala Chalo') என்ற கொள்கையின் அடிப்படையிலேயே உள்ளது. இந்த ஆட்சியில் ஒருவரின் சொந்த விருப்பம் சாத்தியப்படாது. மோதி தனது விருப்பத்தைப் பின்பற்றாமல் ஆட்சியை நடத்த முடியுமா என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி” என்கிறார். மோதி முன்னுள்ள மிகப்பெரிய சவால் என்ன? பட மூலாதாரம்,ANI கடந்த அரசாங்கத்தின் பெரும்பாலான மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் புதிய அரசாங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 81 வரை உயரலாம். இதன் பொருள் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த அரசாங்கத்தில் மொத்தம் 24 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை முப்பது என உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் மற்ற அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிகமாக இருக்கும். இதுவரை, நரேந்திர மோதியின் ஆட்சியில், மற்ற அமைச்சர்கள் அவரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றினர். ஆனால் இப்போது பிரதமர் நரேந்திர மோதியே கூட்டணிக் கட்சிகளின் தலையீடுகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பிரதமர் மோதிக்கு வலுவான தலைவர் என்ற பிம்பம் உள்ளது, அவர் தனது கொள்கைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்றவர். பிரதமர் மோதியும் இந்திய மக்களுக்கு பல பெரிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற பெரிய வாக்குறுதிகளை அவர் அளித்த நிலையில் அவற்றை முந்தைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமர் மோதியின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுவது, அவர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து இப்போது அவர் பொறுப்பேற்க வேண்டும். ஹேமந்த் அத்ரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோதியிடம் இப்போது எண்ணிக்கை பலமோ, தார்மீக பலமோ இல்லை. பிரதமர் நரேந்திர மோதி 400-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கூட்டணி பெறும் என்று கூறிய நிலையில் அது நிறைவேறவில்லை. மோதி ஒரு சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இது 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மோதியின் மிகப்பெரிய பலமாக இருந்தது, ஆனால் இந்த புதிய அரசாங்கத்தில் இதுவே அவரது மிகப்பெரிய பலவீனமாக இருக்கும். இப்போது அவர் மேடையில் இருந்து என்ன சொன்னாலும், அது யதார்த்தத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும்" என்றார். https://www.bbc.com/tamil/articles/c722lxd62j6o
  9. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் கை முழுவதும் வீங்கி, சற்று நீல நிறமாக மாறியுள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் வயோதிப பெண் "கொடிய" புருலி அல்சர் (Buruli ulcer) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக அரியவகை "சதை உண்ணும்"நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு கிருமித் தொற்று ஆகும். நோயை கட்டுப்படுத்த வைத்தியர்கள் வயோதிப பெண்ணின் இடது கையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஏனெனில் அவர் சுயநினைவுடன் இருந்தால் அவருடைய வலியை "தாங்க முடியாமல்இருக்கும்" என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தோல் மற்றும் மென்மையான திசுக்களை சேதப்படுத்தும் புருலி அல்சர், கொசுக்கள் மற்றும் பிற விலங்குகளால் பரவுகிறது. இந்த நோய் அவுஸ்திரேலியாவில் பல மாநிலங்களில் முன்னர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185755
  10. ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் தீவிரவலதுசாரிகள் - பிரான்ஸ் ஜேர்மனி அரசியலில் குழப்பம் Published By: RAJEEBAN 10 JUN, 2024 | 12:25 PM ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சிகள் பெரும் வெற்றிபெறலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐரோப்பாவில் நிச்சயமற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் மூன்று நாட்கள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில் தீவிர வலதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம் என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 720 ஆசனங்களில் 150க்கும் அதிகமான ஆசனங்களை வலதுசாரி கட்சிகள் கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி போன்ற அதிக ஆசனங்களை கொண்டுள்ள நாடுகளில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில் மரைன் லெ பென்னின் தீவிரவலதுசாரி கட்சி வெற்றிபெறும் என்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர்இமானுவேல் மக்ரோன் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான புதிய திகதிகளை அறிவித்துள்ளார். தீவிரவலதுசாரி கட்சி 31 வீத வாக்குகளை பெறும் மக்ரோனின் ரெனசான்ஸ் கட்சிக்கு 15 வீத வாக்குகளே கிடைக்கும் என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.சோசலிச கட்சிக்கு 14 வீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பிரான்ஸில் மக்ரோனிற்கு ஏற்பட்ட பின்னடைவை போன்று ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் ஸ்கோல்சும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவருடைய சோசல் டெமோகிரட் கட்சிக்கு 14 வீத வாக்குகளே கிடைக்கும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 29வீத வாக்குகள் கிடைக்கும் தீவிரவலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி 16.5 வீத வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஐந்து வருடகாலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பாதையை தீர்மானிக்கும். இந்த தேர்தல் முடிவுகள் தற்போது ஐரோப்பாவில் ஆளும் அரசாங்கங்கள் மீதான மக்களின் கருத்தினை வெளிப்படுத்துபவையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185734
  11. Published By: VISHNU 10 JUN, 2024 | 08:44 PM யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/185789
  12. யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்தார் சஜித் பிரேமதாச 10 JUN, 2024 | 04:19 PM பாரபட்சமற்ற வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றும் திங்கட்கிழமை (10) போராட்டம் இடம்பெற்றது. போராட்ட இடத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். தமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இதன்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த போராட்டத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஷ் உள்ளிட்ட அமைப்பாளர்களும் உடனிருந்தனர். https://www.virakesari.lk/article/185757
  13. யாழ். வடமராட்சி கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையின் திறன் விருத்தி வகுப்பறை சஜித்தினால் திறப்பு! Published By: DIGITAL DESK 7 10 JUN, 2024 | 03:00 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்க்காக வருகை தந்த இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர். பாடசாலை அதிபர் அ.பவானந்தன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமா சந்திரா பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் தொழிலதிபர் கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இத் திட்டத்தின் கீழ் திறன் விருத்தி தொலைக்காட்சி, 5 கணனிகள் என்பன வழங்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185744
  14. கிரிக்கெட்: இந்தியாவிடம் தோற்றதால் கொந்தளிக்கும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஜூன் 2024, 08:39 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தான் அணி அவர்களின் சொந்த நாட்டிலேயே கோபமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோல்விக்குப் பிறகு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு சமயத்தில் போட்டி பாகிஸ்தானின் கைவசம் இருப்பதுபோல தோன்றியது. ஆனால் போட்டியின் திசையை திருப்பி இந்தியா வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப்போட்டியில் இந்தியா 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தானால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஷோயப் அக்தர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் சொல்வது என்ன? கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணியின் திறமை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். அணித் தேர்வு மற்றும் வீரர்களின் செயல்பாடு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், “இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை. ஒரே பந்து போட்டியின் திசையை மாற்றியது. பாகிஸ்தான் அணியின் மன உறுதி மற்றும் அதை ஆடுகளத்தில் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆகிய எல்லாமே கேள்விக்குறியாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். "இது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். வெற்றிபெறும் வாய்ப்பும் இருந்தது. 46 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அணியிடம் ஏழு பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆனால் அணியால் போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-ஹக் தனது யூடியூப் சேனலான 'மேட்ச் வின்னர்' இல், ”பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது, ஆனால் இந்திய அணி அதைக்காட்டிலும் சிறப்பாக விளையாடியது,” என்று குறிப்பிட்டார். “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அதை விட சிறப்பாக இருந்தது. குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் இந்திய அணி தன் தைரியத்தை இழக்கவே இல்லை,” என்றார் அவர். ”பேட்டிங் செய்யும்போது ’எடுக்கவேண்டிய ரன்களின் சராசரி’ ஏழு ரன்களுக்கு மேல் செல்ல பாகிஸ்தான் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தானின் கையில் விக்கெட்டுகள் இருந்தன, இருந்தபோதிலும் அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை,” என்று இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டார். ‘‘பாகிஸ்தானின் பேட்டிங் மோசமாக இருந்தது. இமாத் வாசிம் மோசமாக பேட்டிங் செய்தார். அவர் இரண்டு மூன்று முறை ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். 23 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் அவுட்டும் ஆகவில்லை, ஸ்கோரும் செய்யவில்லை. ரிஸ்வான் நிறைய நேரம் விளையாடினார். ஆனால் போட்டியை முடிக்க முடியவில்லை. இந்த போட்டியை வைத்து அணியின் நிலை என்ன என்பதை பாகிஸ்தான் ஆழமாக சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் விமர்சனம் பட மூலாதாரம்,X.COM SCREENGRAB "என்னிடம் வார்த்தைகள் இல்லை. வருத்தத்தை மட்டுமே தெரிவிக்க முடியும். பாகிஸ்தான் 120 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. இந்த ஆடுகளத்தில் இந்தியா 35 முதல் 40 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தது. ஆனால் அவர்களது பந்துவீச்சாளர்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் நம்மால் 120 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. நீங்கள் அதிக ரன் கொடுக்கிறீர்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் எப்போதுமே சொல்கிறோம். ஏனென்றால், இது பேட்ஸ்மென்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது,” என்று ஷாஹித் அஃப்ரீதி தெரிவித்தார். “இன்றைய தோல்வியால் பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டது. மோசமான அணித் தேர்வு, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் பயிற்சிப் போட்டிகளைத் தவிர்த்தது போன்றவை பாகிஸ்தானை இந்த நிலைக்கு தள்ளியுள்ளன. இனி பாகிஸ்தான் தீவிரமாக சிந்திக்க வேண்டும்,” என்று டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவை சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். போட்டிக்கு முன் ராஜா எக்ஸில்," இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கடந்த ஏழு டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி ஒவ்வொரு முறையும் வென்றது," என்று எழுதியிருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியாவின் மட்டைவீச்சுக்கு பிறகு செய்த ட்வீட்டும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பந்துவீச்சுக்குப் பிறகு அவர் எக்ஸ் தளத்தில், "நியூயார்க்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அற்புதமாக பந்து வீசியது. இந்தப் போட்டியில் அபாரமான ஆட்டம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் அணி சிறப்பாக சேஸ் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்திய அணியின் ஸ்கோரை பாகிஸ்தான் அணியால் அடிக்க முடியவில்லை. இதனால் வெற்றி கைநழுவியது. டெல்லி காவல்துறையின் டிவீட் பாகிஸ்தானின் தோல்வியை கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெல்லி போலீசார், "எங்களுக்கு இரண்டு சத்தம் கேட்டது. ஒன்று 'இந்தியா... இந்தியா என்ற கோஷம்'. மற்றொன்று டிவி உடையும் சத்தமாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்த முடியுமா," என்று குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,X.COM SCREENGRAB இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியை 119 ரன்கள் மட்டுமே எடுக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனுமதித்தனர். இந்திய அணி 19 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக்குறைவான ஸ்கோர் இது. பின்னர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது போட்டியில் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதிபோல இருந்தது. ஆனால் ஒரு பந்து போட்டியை மாற்றியது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாபர் ஆசம் ஆரம்பத்திலேயே வெளியேறினார். ஆனால் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டில் தொடர்ந்து இருந்தார், அவர் விளையாடும் வரை பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 15வது ஓவரில் பந்து வீச வந்த ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே ரிஸ்வானின் ஸ்டம்புகளை எகிற வைத்தார். இங்கிருந்து பாகிஸ்தான் அணி பலவீனமானது. 19வது ஓவரில் பும்ரா மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து இஃப்திகார் அகமதின் விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/czkkpd9kk84o
  15. 10 JUN, 2024 | 12:16 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை (10) புதுடில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185731
  16. 10 JUN, 2024 | 12:57 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (10) டில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185730
  17. முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரிய பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303474
  18. 10 JUN, 2024 | 01:52 PM யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185736
  19. தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். “இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சோப்பைப் பயன்படுத்துவதேயாகும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்” எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/303471
  20. ஓமான் அணியுடனான போட்டியில் 7 விக்கெட்களால் இலகுவாக வென்றது ஸ்கொட்லாந்து 10 JUN, 2024 | 10:44 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (9) இரவு நடைபெற்ற பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமான் அணியை 7 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது. ப்றெண்டன் மெக்முலனின் அதிரடி அரைச் சதம், ஜோர்ஜ் முன்சேயின் திறமையான துடுப்பாட்டம் என்பன ஸ்கொட்லாந்தின் வெற்றியை இலகுவாக்கின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஓமான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ப்ராதிக் ஆதவேல் 54 ஓட்டங்களையும் அயான் கான் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துதுவீச்சில் சபியான் ஷெரிப் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 13.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றிபெற்றது. ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே, 3ஆம் இலக்க வீரர் ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் திறைமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர். முன்சே 41 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெக்முலன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் மெத்யூ க்ரொஸுடன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். மெக்முலன் 31 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ரொஸ் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: ப்றெண்டன் மெக்முலன். https://www.virakesari.lk/article/185715
  21. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 10:12 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெற்றது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/185714
  22. ஜேவிபியின் நேற்யை மாநாட்டில் சிஐடியின் முன்னாள் இயக்குநர் - சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் - பல முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிப்பு Published By: RAJEEBAN 10 JUN, 2024 | 11:13 AM தேசிய மக்கள் சக்தியின் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பின் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் சிஐடியின் முன்னாள் அதிகாரிகள் உட்பட ஓய்வு பெற்ற பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய மாநாட்டில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸ், இராணுவ அதிகாரிகள், நீதித்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டு என்பது உண்மையில் நியாயபூர்வமான ஜனநாயக அமைப்பு என தெரிவித்துள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண பொலிஸார் மீது தாக்கம் செலுத்தும் நோக்கமோ அல்லது அல்லது பொலிஸ் துறைக்கு மீள திரும்பும் நோக்கமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மேடையில் ஏறவேண்டாம் என பல தரப்பினரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது, எனக்கு மாத்திரமல்ல ஏனைய முன்னாள் அதிகாரிகளிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் கூட விடுத்துள்ளனர் எனவும் ரவிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார். அவர் மொனராகல பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார், பின்னர் தொலைபேசியில் ஒருவர் அவரை தொடர்புகொண்டு முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார். ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டினை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ரவி செனிவிரட்ண இரண்டு வருடங்களின் முன்னர் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டோம் நாங்கள் எங்கள் கரிசனைகள் கேள்விகள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இந்த குழுவினர் நேர்மையானவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம் இன்றைய அரசியலில் நேர்மையானர்வகள் குறைவு என ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் தங்கள் நோக்கங்களிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய தயாராகயிருக்கின்றார்கள். இது இன்று சமூகத்தில் அரிதாக காணப்படக்கூடிய விடயம். மேலும் அவர்கள் எங்கள் கேள்விகளிற்கு எல்லாம் தெளிவான பதிலை வழங்கினார்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் இருப்பதை வெளிப்படுத்தினார்கள், அதன் பின்னர் நாங்கள் அவர்களுடன் இணைய தீர்மானித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185721
  23. கண்டியில் காணாமல் போன மாணவி ஹரிவதனி சடலமாக மீட்பு! Published By: VISHNU 10 JUN, 2024 | 01:41 AM காணாமல் போன கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே அம்மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது… சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185704
  24. கடைசி வரை திக் திக்: 119 ரன் மட்டுமே எடுத்த இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே கடைசிப் பந்து வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பாக ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ரிஷப் பந்த் - அக்ஸர் படேல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 119 ரன் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. 120 ரன்னை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, அதற்கும் குறைவாக பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியது எப்படி? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கோலி, ரோகித் அவுட் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடிக்கவே இந்திய அணி 8 ரன்களுடன் தொடங்கியது. நசீம் ஷா வீசிய 2வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்த நிலையில் 3வது பந்தில் கவர் திசையில் அடிக்கமுற்பட்டு உஸ்மான் கானிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார். 3வது ஓவரை ஷாகின்ஷா அப்ரிதி வீசினார். 4வது பந்தில் ரோஹித் சர்மா டீப் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட்டை ஹேரிஸ் ராப் கேட்ச்பிடிக்கவே 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரு முக்கிய, பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திய உற்சாகத்தில் பாகிஸ்தான் அணியினர் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அக்ஸர் படேல் சிறப்பான கேமியோ சூர்யகுமாருக்குப் பதிலாக, யாரும் எதிர்பாரா வகையில் அக்ஸர் படேல் களமிறங்கி, ரிஷப் பந்த்திடம் இணைந்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய அக்ஸர் படேல், அதிரடிக்கு மாறினார். அப்ரிதி வீசிய 5வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். 6-வது ஓவரை முகமதுஅமிர் வீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் தேர்டுமேன் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், ஸ்லிப்பில் நின்றிருந்த இப்திகார் கேட்ச்சை தவறவிட்டதால் பவுண்டரி சென்றது. 2வது பந்தையும் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே அந்த கேட்சையும் பாகிஸ்தான் தவறவிட்டது. 5வது பந்தில் ரிஷப் பந்த் மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார். பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது. நசீம் ஷா வீசிய 8-வது ஓவரில் அக்ஸர் படேல் இறங்கி அடிக்க முற்பட்டு க்ளீன் போல்டாகி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,EPA ஸ்கை, துபே ஏமாற்றம் அடுத்துவந்த சூர்யகுமார் வந்தவுடன் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இமாத் வாசிம் வீசிய 8-வது ஓவரில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே இந்த ஷாட்டிலும் கிடைத்த கேட்சை பிடிக்க பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். ரிஷப் பந்துக்கு மட்டும் கடைசி 14 பந்துகளில் 4 கேட்சு வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். ஹாரிஸ் ராப் வீசிய 10-வது ஓவரில் ரிஷப் பந்த் எஸ்ட்ரா கவர், ஃபைன் லெக், ஆகிய திசைகளில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 10ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது. இமாத் வாசிம் வீசிய 11வது ஓவரில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸீவீப் முறையில் பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஹாரிஸ் ராப் வீசிய 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் அமீரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 148 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை எதிர்த்து அடிக்க முடியாமல் சூர்யகுமார் மிட்ஆப் திசையில் அடிக்கவே கேட்சானது. அடுத்து, ஷிவம் துபே களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 13-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துபே, வாசிம் பந்துவீ்ச்சுக்கு திணறினார். 14-வது ஓவரை நசீம் ஷா வீசினார்.களத்துக்கு வந்தது முதல் பேட்டிங்கில் திணறிய ஷிவம் துபே, நசீம் ஷாவிடமே கேட்ச் கொடுத்து3 ரன்னில் வெளியேறினார். டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் என்று நம்பப்பட்ட சூர்யகுமார், துபே இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES எகிறிய பந்துகள்... சிதறிய விக்கெட்டுகள்... முகமது அமீர் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் தூக்கி அடிக்கவே, பாபர் ஆஸம் இந்த முறை சரியாக கேட்ச்பிடிக்கவே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜடேஜா வந்த வேகத்தில் மிட்ஆப் திசையில் வாசிமிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலிமையாக இருந்த இந்திய அணி அடுத்த 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அர்ஷ்தீப் களமிறங்கி, ஹர்திக்குடன் சேர்ந்தார். இந்திய அணியின் எந்த பேட்டரும் இந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடமுடியவில்லை. ஆடுகளத்தில் பந்து நினைத்துப்பார்க்க முடியாத வகையில் எகிறியது, சில நேரங்களில் பந்து நின்று பேட்டரை நோக்கி வந்ததால் ஷாட்களை அடிக்க சிரமப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா 119 ரன்னுக்கு ஆல்அவுட் அமீர் வீசிய 17-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பவுண்டரி விளாசினார். 2வது பந்தை அர்ஷ்தீப் தோள்பட்டையில் வாங்கி வலியால் துடித்தார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து பெரிய ஷாட்டுக்கு முயன்றும் முடியவில்லை. ஹாரிஸ் ராப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பாண்டியா தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார், 3வது பந்தையும் தேர்டுமேன் திசையில் பவுண்டரிக்கு விரட்ட தடுக்கப்பட்டது. 4வது பந்தை லெக்திசையில் பாண்டியா தூக்கி அடிக்கவே அது இப்திகாரிடம் கேட்சானது. ஹர்திக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பும்ரா வந்தவேகத்தில் இமாத்வாசிமிடம் தூக்கி அடித்து கேட்ச் பயிற்சி அளிப்பதுபோல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 19-வது ஓவரை அப்ரிதி வீசினார். முகமது சிராஜ் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் ரன் எடுக்க முயற்சிக்கவே, அர்ஷ்தீப் சிங்9 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார். இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தோல்விக்கு வி.கே.பாண்டியனும் ஒரு காரணமா? அரசியலில் இருந்து விலகல்9 ஜூன் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் தரமான பந்துவீச்சு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பீல்டிங்தான் மோசமாக இருந்ததேத் தவிர பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை கட்டம் கட்டி தூக்கினர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு அதை செயல்படுத்தினர். ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் மட்டுமே 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மற்ற எந்த பேட்டரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42, அக்ஸர் படேல் 20 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம். மற்றவகையில் நடுவரிசையில் எந்த பேட்டரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. பாகிஸ்தான் பீல்டர்களுக்கு கேட்ச் பயிற்சி அளித்ததுபோன்று துபே, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இந்திய பேட்டர்கள் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியதே விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES இதைவிட முக்கியமனது, பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சு. முகமது அமீர், ஹாரிஸ் ராப், நசீம் ஷா ஆகியோர் லைன் லென்த்தில் கச்சிதமாக பந்துவீசியதால் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களால் முயற்சிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 180 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால், நடுவரிசை பேட்டர்களின் மோசமான செயல்பாடு, பொறுப்பற்ற பேட்டிங்கால் 60 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது. பந்து பட்டு வலியால் துடித்த ரிஸ்வான் 120 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. புதிய பந்தில் பும்ராவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் ஓவரில் எந்த விக்கெட் வீழ்ச்சியும், திருப்பமும் ஏற்படவில்லை. 2வது ஓவரை சிராஜ் வீசினார். முதல் பந்திலேயே பாபர் ஆஸம் பவுண்டரி விளாசினார். அடுத்தடுத்த பந்துகளை சிராஜ் கட்டுக்கோப்பாக வீசினார். கடைசிப்பந்தை ரிஸ்வான் அடிக்கவே சிராஜ் பீல்டிங் செய்து ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ரிஸ்வான் வலது முழங்கையில் பந்து படவே வலியால் துடித்தார். கேட்சை கோட்டை விட்ட துபே 3வது ஓவரை பும்ரா வீசினார் பவுண்டரி அடிக்க ரிஸ்வான், பாபர் ஆஸம் முயன்றும் முடியவில்லை. ரிஸ்வான் அடித்த ஷாட்டை தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டார். பும்ரா வீசிய 5வது ஓவரில் பாபர் ஆசம் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். அடுத்த பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து பாபர் ஆஸம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து உஸ்மான் கான் களமிறங்கி, ரிஸ்வானுடன் சேர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் 9வது ஓவரில் 50 ரன் 6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். பவர்ப்ளே ஓவரை பயன்படுத்திய ரிஸ்வான் சிக்ஸர் விளாசி ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஒருவிக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது. சிராஜ் வீசிய 7-வது ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய பாகிஸ்தான் அணி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 8-வது ஓவரை ஜடேஜா வீசினார். ரிஸ்வான், உஸ்மான் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் ரன்னாக சேர்த்தனர். பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. 9-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். உஸ்மான் கவர் திசையில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்து 9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 50 ரன்களைக் கடந்தது. மோதி அமைச்சரவை 3.0 - 30 கேபினட் அமைச்சர்கள், 41 இணை அமைச்சர்கள் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்பம் தந்த அக்ஸர் படேல் 10-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். முதல் 4 பந்துகளில் தடுமாறிய ரிஸ்வான் 5வது பந்தில் பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். 11வது ஓவரை அக்ஸர் படேல் வீசவந்தார். முதல் பந்திலேயே உஸ்மான் விக்கெட்டை கால்காப்பில் வாங்கவைத்து 13 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து ஃபக்கர் ஜமான் களமிறங்கினார். 4வது பந்தில் ஜமான் சிக்ஸர் விளாசினார். 12-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்திலேயே ஜமான் தேர்டுமேன் திசையில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு 6 ரன் கிடைத்தது. 13-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் வீசிய பவுன்ஸரில் தேவையின்றி ஷாட் அடிக்க முற்பட்டு ஜமான் 13 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இமாத் வாசிம் களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டு்மே பாகிஸ்தான் அணி எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது. 14-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இமாத் வாசிம், பேட்டில் பட்டு அவுட்சைட் எட்ஜில் பட்டு பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை பும்ரா ஓவர் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது. விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. 15-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே ரிஸ்வானை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் பும்ரா. களத்தில் செட்டில் ஆன ரிஸ்வானை 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து சதாப் கான் களமிறங்கினார்.இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளி்த்தார். 16-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். இமாத் வாசிமிற்கு படம் காட்டிய அக்ஸர் படேல், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடியளித்தார். பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் 9ஆக அதிகரி்த்து நெருக்கடி அதிகரித்தது. 17-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் 3வது பந்தை ஷார்ட் பாலாக வீசவே, சதாப் கான் தூக்கி அடிக்கவே ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். சதாப்கான் 4 ரன்னில் ஆட்டமிழந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். இந்த ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய 18-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 8 ரன்களைச் சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES துருப்புச்சீட்டு பும்ரா 19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த பும்ரா, அடுத்த 2பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 4-வது பந்தில் இப்திகார் ஒருரன்னும், 5வது வந்தில் வாசிம் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசிப்பந்தை பும்ரா ஃபுல்டாஸாக வீச இப்திகார் தூக்கி அடிக்கவே அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இப்திகார் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் இமாத் வாசிம் 15 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்து நசீம் ஷா களமிறங்கினார். 2வது பந்தில் நசீம் ஷா ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு ரன் எடுத்தார். 4வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் நசீம் ஷா ஒரு ரன் அடிக்கவே பாகிஸ்தான் 6 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அக்ஸர் படேல் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார். https://www.bbc.com/tamil/articles/cn0018pj3pgo
  25. 09 JUN, 2024 | 08:14 PM நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார். பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையின் கழக மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் மாணவி சயிந்தினி ஊடகத்துக்கு மேலும் தெரிவிக்கையில் , எனக்கு கல்வியும், கிரிக்கெட் விளையாட்டும் இரு கண்கள். தேசிய மட்டத்தில் விளையாடுவதற்கு இப்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் வீரர்கள் தெரிவாகும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் வடக்கிலிருந்து நான் முதல் பெண்மணியாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது. நான் இப்பொழுது மன்னார் பேசாலை சென்.பற்றிமா ம.ம.வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்று வருகின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பரீட்சையில் தோற்ற இருக்கின்றேன். இதன் பின் நான் கொழும்பில் தங்கியிருந்து சிறந்த பயிற்ச்சிகளை பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றேன். இருந்தும் எங்கள் வீட்டின் பொருளாதாரம் இதற்கு ஒரு தடையாக இருக்குமோ என்ற அச்சமும் இருக்கின்றது. இந்த முயற்சிக்கு எனக்கு உதவிகள் கிடைக்குமாயின் எனது பாடசாலைக்கும் , மாவட்டத்துக்கும் , மாகாணத்துக்கும் பெருமையை ஈட்டிக் கொடுக்கும் கனவை நனவாக்கிக் கொள்வேன். சக வீராங்கனைகளுடன் கொழும்பில் நான் பயிற்சி பெறும்போது நான் மட்டுமே தமிழ் பெண்மணி. எனக்கு அவர்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாது. இதனால் எனக்கு ஆரம்பத்தில் பெரும் அச்சமாகக் காணப்பட்டது. இருந்தும் எங்களுக்குள் மொழி புரிந்துணர்வு இல்லாதபோதும் அவர்கள் எனக்கு காட்டிய அன்பும் பாசமும் எனது அச்சத்தை தற்பொழுது தளர்த்தியுள்ளது. எனக்கு இப்பொழுது சிங்கள மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டுள்ளது. நான் இதற்கான முயற்சியை நான் முன்னெடுக்க இருக்கின்றேன். உண்மையில் நான் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்குள் உட்புகுவதற்கு எனது பயிற்றுவிப்பாளர் ரி.பிறேமன் டயஸ் அண்ணா , பெனட் சேர் , ரூபன் சேர் , கொலின்றா ரீச்சர் எனது பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாகாண விளையாட்டு அதிகாரிகள் லங்கா சேர் . றொகான் சேர் . செல்வா சேர் , சுரேஸ் சேர் போன்ற பலரின் முயற்சியே இன்று நான் இந்த நிலையில் இருக்கின்றேன். உண்மையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் எனது பெற்றோர் இவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்காவிடில் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185677

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.