Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நெதர்லாந்தின் கடும் சவாலுக்கு மத்தியில் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர் Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 09:51 AM (நெவில் அன்தனி) நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் (இலங்கை நேரப்படி சனிக்கிழமை) நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்த நசவ் ஆடுகளத்தில் நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 104 ஒட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால், அந்த வெற்றி தென் ஆபிரிக்காவுக்கு இலகுவாக வந்துவிடவில்லை. ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர ஆகியோரின் பொறுப்பணர்வுடன்கூடிய துடுப்பாட்டங்களே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன. தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. குவின்டன் டி கொக் (0) முதல் பந்திலேயே தவறான கணிப்பு காரணமாக ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ரீஸா ஹென்றிக்ஸ் (3), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (0), ஹென்றிக் க்ளாசன் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க, தென் ஆபிரிக்கா 5ஆவது ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. மிகவும் இக்காட்டான வேளையில் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்து அணிக்கு தெம்பூட்டினர். ஸ்டப்ஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (77 - 5 விக். கடைசி 3 ஓவர்களில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் டேவிட் மில்லரால் 9 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் மாக்கோ ஜென்சன் (3) ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் மில்லர் 18 ஓட்டங்களை விளாசி அரைச் சதம் குவித்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய டேவிட் மில்லர் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் விவியன் கிங்மா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. 12ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தது. மத்திய வரிசை வீரர்களான சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் (40), லோகன் வென் பீக் (23) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர். அவர்களைவிட விக்ரம்ஜித் சிங் (12), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஒட்நீல் பாட்மன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டேவிட் மில்லர். https://www.virakesari.lk/article/185628 அக்கீல் ஹொசெய்ன் அற்புதமான பந்துவீச்சு; மேற்கிந்தியத் தீவுகளுக்கு மிகப் பெரிய வெற்றி 09 JUN, 2024 | 11:13 AM (நெவில் அன்தனி) உகண்டாவுக்கு எதிராக கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (9) (இலங்கை நேரப்படி) காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலம் அற்புதமாக பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் 134 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 84 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே மேற்கிந்தியத் தீவுகளின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் திறமையை வெளிப்படுத்தினர். ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் (44), அண்ட்றே ரசல் (17 பந்துகளில் 30 ஆ.இ.), அணித் தலைவர் ரோவ்மன் பவல் (23), நிக்கலஸ் பூரண் (22), ஷேர்ஃபேன் ரதஃபோர்ட் (22) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ப்றயன் மசாபா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 12 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 39 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஜுமா மியாகி (13 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பந்துவீச்சில் அக்கீல் ஹொசெய்ன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். இதுவே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பதிவான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆகும். அவரைவிட அல்ஸாரி ஜோசப் 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: அக்கீல் ஹொசெய்ன் https://www.virakesari.lk/article/185646
  2. 09 JUN, 2024 | 12:50 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதல்விகள் வழமைக்கு மாறாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர். ரஸ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் புட்டினின் புதல்விகள் கலந்துகொண்டுள்ளனர். மரியா வொரொன்ட்சோவாவும் கட்டரினாஎடிகோனோவாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 30 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் 2013 இல் புட்டின் விவகாரத்து செய்த முதல் மனைவியின் பிள்ளைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. தனது பிள்ளைகள் விஞ்ஞான கல்வித்துறையில் பணிபுரிவதாகவும் தனக்கு பேரப்பிள்ளைகள் உள்ளதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்- எனினும் அது ஒருபோதும் உறுதி செய்யப்படவில்லை.' உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஸ்ய இராணுவத்திற்கு உதவியமைக்காக 2022 இல் கட்டரினாஎடிகோனோவாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மரியா வொரொன்ட்சோவாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. புட்டினின் சொத்துக்கள் அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2019 முதல் 2022ம் ஆண்டிற்குள் மருத்துவநிறுவனம் ஒன்றின் ஊழியராக பணிபுரிந்து மரியா வொரொன்ட்சோவா 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் சம்பாதித்தார் என ரஸ்யாவின் ஊழலிற்கு எதிரான அமைப்பு இந்த வருடம் குற்றம்சாட்டியிருந்தது. புட்டின் தனது மகள் குறித்த விபரங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றார். https://www.virakesari.lk/article/185657
  3. சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன? படக்குறிப்பு,சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் கால கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஜூன் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் கடந்து நாடுகளை வென்ற சோழர்களின் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சி முறை, ராஜேந்திர சோழனின் வெற்றிகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு இணையாக, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் பற்றி வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட இன்றளவும் விவாதிக்கிறார்கள். இதற்கு பொன்னியின் செல்வன் நாவலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சோழர் வரலாற்றில் மன்னருக்கு இணையான அதிகாரங்களுடன் இளவரசர் ஆதித்த கரிகாலன் வலம் வந்தார் என்பதற்கான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டம் அருகே ஏமப்பூர் கோவிலில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது? என்பது குறித்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் நம்மிடம் விரிவாக விளக்கம் அளித்தார். அத்துடன், ஆதித்த கரிகாலன் ஆட்சிக்குட்பட்டிருந்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆதித்த கரிகாலன் குறித்து கூறும் செய்திகள் என்ன என்றும் அவர் விளக்கம் தந்தார். ஏமப்பூர் கல்வெட்டு கூறுவது என்ன? சோழர் காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெயரை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன என்ற போதிலும் இளவரசர் ஆதித்த கரிகாலனின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் மன்னருக்கு இணையாகவே பொறிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் ரமேஷ். விழுப்புரம் அருகே ஏமப்பூரில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று தொடங்குகிறது. இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் ரமேஷ், "ஆதித்த கரிகாலன் ஆட்சியின் நான்காவது ஆண்டான பொது ஆண்டு 960 -ல் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு என்று இந்த ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் மூலவருக்கு (இறைவனுக்கு) காலம் முழுவதும் (சந்திரன்- சூரியன் உள்ள வரை ) விளக்கு ஏற்றுவதற்காக 96 ஆடுகளை இந்த கோவில் அறங்காவலர் பான் மகேஸ்வரர் என்பவரிடம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கின்றது" என்றார். “இந்தக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனின் ஆட்சியைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது என்ற அவர், ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் இதன் மூலம் அறிய முடிவதாக கூறினார். ஆனைமங்கல செப்பேடு படக்குறிப்பு,ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. "சுந்தர சோழன் தன் மூத்த மகனான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறார். எனவே தான் இப்பகுதியில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன" என்று அவர் கூறினார். சிறு வயதிலேயே வீரத்துடன் விளங்கிய ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதைக் குறிக்கும் வகையில், "இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்," என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு. இந்த கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ளது. "ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டி கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு செருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏமப்பூர் கல்வெட்டிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதை படித்தும் காண்பித்தார். ஏரி பராமரிப்பு கல்வெட்டு திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர் கிராமத்தில் மயிலாடும்பாறையில் உள்ள கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்படுகிறார். தொடர்ந்து அந்த கல்வெட்டில் "ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும் என்று கல்வெட்டு செய்தியையும் அவர் விளக்கிக் கூறினார். தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் "ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 ஆகும். ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை (தொண்டை நாடு பகுதி) தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தார். பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் மிக வலிமை வாய்ந்த இளவரசர் ஆவார்." என்று கூறினார். ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் "கி.பி. 966- ல் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்" என்று ஆதித்த கரிகாலனின் பேராசிரியர் ரமேஷ் வரலாற்றை விவரித்தார். படக்குறிப்பு,ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 என்று கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய கல்வெட்டு ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனாலும் எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்று முழு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் குற்றவாளிகள் பெயர்களை அவர்களின் நிலத்தை கையகப்படுத்தியது குறித்த இக்கல்வெட்டு செய்தியால் அறியலாம். "ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. ஆனால் ஆதித்த கரிகாலனை எதற்காக கொலை செய்தார்கள், யார் அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது போன்ற தகவல்கள் அதில் இல்லை." என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c0xx4z4ey06o
  4. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயங்கமாட்டேன் - சஜித் பிரேமதாச 09 JUN, 2024 | 06:21 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதற்கே சிலர் அச்சமடைகின்றனர். ஆனால் நான் அதற்கு தயங்குபவன் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13ஆவது திருத்தம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்துக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (9) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு உறுதியளித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் பொய்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கூறிவருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தம் நிச்சயம் அமுல்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை. இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும். அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும். 13ஆவது திருத்தம் குறித்து பேசும்போது பல தலைவர்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு கேட்காதது போல் பாசாங்கு செய்வர். அல்லது அது பற்றிய பேச்சினை உதாசீனப்படுத்துவார்கள். ஒரு சிலர் அது தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர். இவ்வாறு பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகளாக நடந்துகொண்டாலும் நாம் இவ்விடயத்தில் நேர்மையாகவே நடந்துகொள்கின்றோம். எனவே எவ்வித பேதமும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். பல்வேறு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளித்தாலும், பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய உதவிகளையே நான் வழங்கி வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் பணியாற்றாது இருந்தாலும், நானும் எனது குழுவும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம். இனவாதத்தைப் பரப்பி தமது வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தமது வாக்குகள் குறித்து சிந்திப்பவர்களே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நான் அவ்வாறு செயற்படவில்லை. வட மாகாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைவரான பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன். இப்பிரதேசத்தில் தனியான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்துத் தரப்படும். இந்தியாவில் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலும் அதுபோன்ற நிறுவனங்களை நிறுவி, சர்வதேச தரத்தில் அமைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் நிறுவப்படும். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைக் பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/185686
  5. Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 08:11 PM தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் பறிபோகப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது. எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையவுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேவேளை இந்திய பிரதமராக மோடி மீண்டும் தெரிவானமை தமக்கு மகிழ்ச்சியே என தெரிவித்த அவர், இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/185682
  6. Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 04:55 PM யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார். கைதான பெண் வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அப்பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் தங்க நகைகள் பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பெண், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். https://www.virakesari.lk/article/185676
  7. சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், புதிய கொவிட் மாறுபாடு அதன் தீவிரப் போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/303392
  8. புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது, மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார். பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக என்றும் அவர் கூறினார். எனவே புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/303407
  9. 09 JUN, 2024 | 11:20 AM (நமது நிருபர்) தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளையும் அவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் எனும் குற்றத்துக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் 21.11.2022 அன்று வழங்கிய கட்டளைகளினால் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யும் கட்டளைகள் வழங்கியிருந்ததுடன் அதன் அடிப்படையில் இந்த படகுகள் மயிலிட்டி துறைமுகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. இக்கட்டளைகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்குகள் படகு உரிமையாளர்களால் தொடரப்பட்டன. இவ்வழக்கில் படகு உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த கட்டளைகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இரத்து செய்து கட்டளையாக்கியிருந்தது. தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளையும் கடற்றொழில் உபகரணங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான உரிமைக்கோரிக்கையை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 03 மாத காலத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு படகு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜனுடன் சட்டத்தரணிகள் சாரா ஹரிபிரவீன், சபிஷாந்த் மோகன் தோன்றியதோடு எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185641
  10. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருவார். பன்முகத் திறமை கொண்ட இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவரிடம் ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேட்கும் போது, நடக்கும் போது நடக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இந்து என்பவருக்கும் இன்று (ஜூன்.9) திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. முன்னதாக இவர்களது திருமண பத்திரிக்கை வெளியாகி வைரல் ஆனதையடுத்து தங்களது பிரைவெசியை மதித்து மணமக்களை மனதார வாழ்த்துங்கள், திருமணம் முடிந்ததும் புகைப்படங்கள் பகிர்கிறேன் என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் மணமகளின் உறவினர்கள் மற்றும் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று திருத்தணியில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் கச்சேரியில் பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/303423
  11. 9 ஜூன் 2024, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் டெல்லி வந்துள்ளனர். சார்க் நாடுகளின் (SAARC) தலைவர்களுக்கும் விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. படக்குறிப்பு,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பதவியேற்பு விழாவிற்கு வந்த பிரபலங்கள் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, மற்றும் கௌதம் அதானி, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். பட மூலாதாரம்,BJP பட மூலாதாரம்,BJP பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டம் பட மூலாதாரம்,ANI பிடிஐ செய்தி முகமையின் படி, இன்று நண்பகல் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா, எல். முருகன், ஜெய் ஷங்கர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 2014ஆம் ஆண்டு முதல், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு முன்பாக இவ்வாறு கூட்டம் நடத்துவதை மோதி வழக்கமாக வைத்திருக்கிறார். இதில் கலந்துகொள்பவர்களே அமைச்சர்களாக நியமிக்கபப்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பேசிய நரேந்திர மோதி, அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் எப்போதும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். "உங்களுக்கு எந்த வேலை ஒதுக்கப்பட்டாலும், அதை நேர்மையாகச் செய்யுங்கள், தன்னடக்கம் உள்ளவர்களை மக்கள் நேசிப்பதால் பணிவாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார் மோதி. இந்தக் குழுவில், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகிய புதிய முகங்களும் காணப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,ARVIND YADAV/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES டெல்லியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறார் நரேந்திர மோதி. நேரு, 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோதி, 2014, 2019, 2024 என மூன்றாவது முறையாக பிரதமராகிறார். இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் டெல்லியில், குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தவிர, சுமார் 2,500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி முகமையான பிடிஐயிடம் தெரிவித்தார். டெல்லி போக்குவரத்து காவல்துறையும் போக்குவரத்து தொடர்பான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது, "டெல்லியின் சில சாலைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள சாலைகளில் அரசுப் பேருந்துகளும் அனுமதிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளது. பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA படக்குறிப்பு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தடைந்தார். இந்தியா வந்தடைந்த வெளிநாட்டுத் தலைவர்கள் நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் இந்தியா வந்துள்ளனர் . இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள கணக்கில், "பிரதமர் தாஷோவின் இந்த பயணம் இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார். மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியா வந்துள்ளதாக அரசாங்க ஒளிபரப்பு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,@MEAINDIA படக்குறிப்பு,மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இன்று டெல்லிக்கு வந்தார். டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இந்தியா வந்ததை அடுத்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இன்று டெல்லிக்கு வந்தார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலின் சமூக ஊடகப் பதிவின் படி, "பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதுதில்லி மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை விமான நிலையத்தில் செயலாளர் (மேற்கு) பவன் கபூர் வரவேற்றார். இந்தியாவும் மாலத்தீவுகளும் கடல்சார் நட்பு நாடுகள் மற்றும் நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடுகள்” எனப் பதிவிட்டுள்ளார். முகமது முய்ஸு மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்தது. அவரது தேர்தல் பிரச்சாரமும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருந்தது. தற்போது அவர் இந்தியா வந்த பிறகு, இரு நாட்டு உறவில் புதிய பிணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cv221x9zxn2o
  12. நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க 274 அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தனது தந்தையுடன் இணைந்த 27 வயதான நோவா அர்கமனி கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் திரின் பதவி, பிபிசி மத்திய கிழக்கு நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8), இஸ்ரேலிய படைகள் நுஸ்ரத் அகதிகள் முகாமுக்கு அருகில் ஹமாஸ் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழுவால் நடத்தப்படும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் இந்த மோதலில் 100-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர் என்று கூறியிருக்கிறது. இந்த மோதலையடுத்து நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர். ஹமாஸின் பிடியில் இருந்த நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டிருக்கிறது. பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் ராணுவம் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதேசமயம், இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து பின்னர் தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர். நோவா அர்கமனி (27), அல்மோக் மிர் (22), ஆண்ட்ரி கோஸ்லோவ் (27), சலோமி ஜீவ் (41) ஆகியோர் சனிக்கிழமை மீட்கப்பட்டனர். கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று நோவா இசை விழாவில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் இஸ்ரேலிய குடிமக்கள் கடத்தப்பட்டனர். பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட அவர்களை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையின் போது, நுசெய்ரத் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இஸ்ரேலிய ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவின் அல்-அக்ஸா மற்றும் அல்-அவ்தா ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 70 சடலங்கள் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதலில் அல்-நுஸ்ரத் அகதிகள் முகாமைச் சுற்றி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அரசாங்கத்தால் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் தீவிரமான குண்டுவெடிப்புகள் நடந்ததற்கான தடயங்களைக் காட்டுகின்றன. மருத்துவமனைகள் படுகாயம் அடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. இறந்த சடலங்களும் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிகிச்சை அளிக்கக் கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படங்களும் இந்த பகுதிகளில் அதிகம் பகிரப்பட்டது. படக்குறிப்பு,மீட்கப்பட்ட பணயக்கைதிகள் அவர்களது குடும்பத்தினரை சந்தித்தனர் 'உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் நடவடிக்கை' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல பாலத்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் உளவுத்துறை துல்லியமாக வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். அதன் கீழ், நஸ்ரத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் இருந்து பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்கப்பட்டப் பணயக்கைதிகள் நலமாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அவர்கள் தங்களின் குடும்பங்களைச் சந்திக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவத்தினரைப் பாராட்டினார். இந்த நடவடிக்கை துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்டதாக நெதன்யாகு பாராட்டியுள்ளார். "உயிருடன் இருந்தாலும் சரி, இறந்திருந்தாலும் சரி, கடைசி பணயக்கைதியை மீட்கும் வரைக்கும் நாங்கள் போராடுவோம். அவர்களுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்,” என்றார். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் படைகள் ஹமாஸின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார். மீட்கப்பட்ட பணயக்கைதிகள் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஹமாஸ் சிறையிலிருந்து மீட்கப்பட்ட பிணைக் கைதி இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்ட பணயக்கைதிகளில், நோவா அர்கமணி (சீன வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய குடிமகன்) அக்டோபர் 7 அன்று நோவா திருவிழாவில் இருந்து கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவரை ஹைமாஸ் கடத்தி சென்றபோது, 'என்னைக் கொல்லாதீர்கள்!' என்று கூச்சலிட்டார். ரஷ்யாவை பூர்விகமாக கொண்ட கோஸ்லோவ் 2022-இல் இஸ்ரேலுக்கு வந்தார். ஜீவ் என்பவரும் ஒரு ரஷ்யர். இருவரும் நோவா திருவிழாவில் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் கடத்தப்பட்டனர். மிர் ஜான் என்பவர் கடத்தப்பட்டதற்கு மறுநாள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர இருந்தார். ஆனால் அதற்குள் ஹமாஸால் கடத்தப்பட்டார். மீட்கப்பட்ட பணயக்கைதிகளின் குடும்பங்கள் இது ஒரு அசாத்திய நடவடிக்கை என்று கூறியுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஹமாஸ் பிடியில் உள்ள 120 பணயக்கைதிகளையும் மீட்க வேண்டும் என்று இந்த குழு இஸ்ரேலிய ராணுவத்திற்கு நினைவூட்டியுள்ளது. மேலும், உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒருபுறம், பணயக்கைதிகளை விடுவித்ததில் இஸ்ரேலில் கொண்டாட்டச் சூழல் நிலவுகிறது, ஆனால் மறுபுறம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களின் சடலங்கள்,கோரத் தாக்குதலின் சுவடுகளீன் புகைப்படங்கள் வெளியாகின்றன. பிபிசி வெரிஃபையின்படி, மத்திய காஸாவில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் நஸ்ரத் பகுதி மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளும் நஸ்ரத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அல்-அக்ஸா மருத்துவமனை வெளியிட்டுள்ள காணொளியில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் தரையில் படுத்துக் கிடப்பதைக் காண முடிகிறது. மேலும் ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தப் பகுதியில் 400 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சர்வதேசத் தலைவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவை பூர்விகமாக கொண்ட கோஸ்லோவ் 2022 இல் இஸ்ரேலுக்கு வந்தார். இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பாலத்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அல்-நுஸ்ரத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'இஸ்ரேலிய ராணுவத்தால் நடத்தப்படும் இனப்படுகொலை' பற்றி ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். "காஸாவில் அரங்கேறி வரும் மற்றொரு படுகொலை சம்பவம் பற்றிய செய்திகள் நெஞ்சை பதற வைக்கின்றன. நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுப் பிரதிநிதி ஜோசப் போரல் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணயக் கைதிகளை விடுவிக்கும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமல்படுத்த முயற்சிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பணயக் கைதிகளை விடுவிக்க ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று தீவிர வலதுசாரி கூட்டாளிகள் கூறினர். இஸ்ரேலிய ராணுவம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் சனிக்கிழமை நடந்த மீட்பு நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது அழுத்தத்தில் இருக்கும் நெதன்யாகுவுக்கு அடுத்தக்கட்ட செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலிய போர் துறை அமைச்சர் பென்னி கான்ஸ் சனிக்கிழமை தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டார். கான்ஸ் விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதிக்குள் காஸாவில் போருக்குப் பிந்தைய திட்டத்திற்கு நெதன்யாகு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவி விலகப்போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'இஸ்ரேல் சொந்த நிபந்தனைகளை விதிக்க முடியாது' பட மூலாதாரம்,GETTY IMAGES நஸ்ரத் முகாமுக்கு அருகே இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர். நஸ்ரத்தில் இஸ்ரேலின் மீட்பு நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அனைத்து பாலத்தீனியர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதிக்காது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பிணைக் கைதிகளாக சிறைப் பிடிக்கப்பட்டனர். இந்த பணயக்கைதிகளில் 116 பேர் இன்னும் பாலத்தீனத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வார போர் நிறுத்தத்திற்கு ஈடாக 105 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இன்னும் 240 பாலத்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று, ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 36,801-ஐ எட்டியுள்ளது என்று கூறியது. https://www.bbc.com/tamil/articles/ckrrmxljp57o
  13. 4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல் 08 JUN, 2024 | 01:34 PM 4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185589
  14. இந்தியா பயணமானார் ஜனாதிபதி! 09 JUN, 2024 | 09:45 AM மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா பயணமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இந்தியன் ஏர்லைன்ஸின் AI-282 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்துள்ளார். இலங்கை இராஜதந்திரிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமானம் முற்பகல் 11.40 மணிக்கு இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185630
  15. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம் இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர். ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம் நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது. அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சால்ட், பட்லர் நம்பிக்கை சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார். வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர்கள் ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது. விக்கெட் சரிவு இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார். லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES யாரும் அரைசதம் அடிக்கவில்லை டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர். இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது. பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பாடங்களைக் கற்றுக்கொண்டோம்" வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார். இங்கிலாந்துக்குச் சிக்கல் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும். https://www.bbc.com/tamil/articles/ce441vxgddwo
  16. 08 JUN, 2024 | 03:59 PM "பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, அதிமுக மீண்டும் வலிமை பெறும்" என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. ''நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது இல்லை. ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும் . மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் தான் அதிகம் வருகிறது. புள்ளி விவர கணக்குப்படி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் விரைவில் சீரமைக்கப்படும். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக - புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது.‌ வெற்றி வரும் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள்.‌ இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் அதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால்.. தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலிமை பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன். நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார். https://www.virakesari.lk/article/185605
  17. 08 JUN, 2024 | 05:39 PM சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் சென்று, இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அவ்வாறான மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் விடுவிக்கப்பட்டு, நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (8) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில், மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2023ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடியிருந்தார்கள். அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களுடைய குடும்பத்தினர் எமது கட்சியை நாடியிருந்தனர். நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று, இவ்விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். அதனையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவர்களும் நாடு திரும்பியுள்ளனர். அதேபோல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை தாண்டி, இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் பல காலங்களாக சிறையில் வாடும் நிலை காணப்பட்டது. இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், அவை எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்புகொண்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும், விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 மீனவர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்துக்குச் சென்று நன்றி தெரிவித்ததோடு ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/185616
  18. வாழ்த்துகள் வஜினா பாலகிருஸ்ணன். இந்த கௌரவிப்பின் ஊடாக ஏனைய அவரைப் போன்ற மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். நான் நினைக்கிறேன் அவரது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
  19. 4.6 W Moeen Ali to Warner, OUT David Warner b Ali 39 (16b 2x4 4x6) SR: 243.75 END OF OVER 5 15 runs • 1 wicket AUS: 70/1CRR: 14.00 Travis Head 30 (14b 1x4 3x6) Moeen Ali 2-0-18-1 Mark Wood 1-0-22-0
  20. வார்னர் ஒரு முடிவோட வந்துள்ள மாதிரி தெரிகிறது! END OF OVER 4 22 runs AUS: 55/0CRR: 13.75 David Warner 35 (13b 1x4 4x6) Travis Head 19 (11b 2x6) Mark Wood 1-0-22-0 Jofra Archer 1-0-8-0 ஹெட்டும் முழங்கிறார்! அப்ப இங்கிலண்ட் ஊஊஊஊ வா?
  21. Published By: VISHNU 08 JUN, 2024 | 09:40 PM யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2024" இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது . யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது நூலக முன்பாக நிறைவடைந்தது. சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185624
  22. அண்ணை குருவை மிஞ்சிய சீடனாகிவிட்டீர்கள். வாழ்த்துகள். DRINKS 16th Match, Group D, New York, June 08, 2024, ICC Men's T20 World Cup Netherlands 103/9 South Africa (10/20 ov, T:104) 32/4 South Africa need 72 runs in 60 balls. Current RR: 3.20 • Required RR: 7.20 • Last 5 ov (RR): 20/0 (4.00) Win Probability:SA 77.23% • NED 22.77% LIVE 17th Match, Group B, Bridgetown, June 08, 2024, ICC Men's T20 World Cup Australia (2.1/20 ov) 26/0 England England chose to field. Current RR: 12.00 Live Forecast:AUS 185
  23. பட மூலாதாரம்,MSSRF கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று, ஜூன் 8, உலகப் பெருங்கடல்கள் தினம். இதனை முன்னிட்டு, மீனவக் குடும்பத்திலிருந்து வந்து, தற்போது கடல்சார் ஆராய்ச்சியாளராக மீனவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் வேல்விழி தன் அனுபவங்களை இங்கே பகிர்கிறார்.) சிறுவயதில், மீன்பிடிக்க நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் தன் அப்பாவுக்காக, மாலை நேரத்தில் கடற்கரையில் தன் தாயுடன் காத்திருந்த பொழுதுகள் இன்னும் வேல்விழியின் நினைவில் உள்ளன. கூடவே, புயல், மழை காலங்களில் அப்பா எப்போது வீடு திரும்புவார் என குடும்பத்தில் எல்லோரும் அச்சத்தின் பிடியில் இருந்த நாட்களையும் அவர் அடிக்கடி நினைவுகூர்வார். “அப்பாவுக்குச் சொந்தப் படகு கிடையாது. என் சிறுவயதில் சிறுபடகு ஒன்றில் மீனவத் தொழிலாளியாக இருந்தார் அப்பா. பின்னர் பெரிய படகு ஒன்றில் மீனவத் தொழிலாளியாக இருந்தார். கடலுக்குச் சென்றால் எப்போது வீடு திரும்புவார் என்றே தெரியாது. நாங்கள் வளர்ந்த சமயத்தில் மீனவர்களுக்கென புயல் எச்சரிக்கை கூட கிடையாது. புயல், மழை காலங்களில் ஒவ்வொரு தடவையும் முட்டி அளவுக்குத் தண்ணீர் வந்துவிடும். அவையெல்லாம் எங்களுக்குப் பழக்கமான விஷயங்கள்,” என்கிறார் வேல்விழி. புயல், மழை காலங்களிலும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும்போதும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நம்பியார்நகர் எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேல்விழிக்கு கடல் புதிதல்ல. தன் தந்தை சிங்காரவேலுவிடம் இருந்து கைவரப்பெற்ற கடல் குறித்த தன் அனுபவங்களையும், தான் படித்த கடல் உயிரியல் மூலம் கிடைத்த அறிவியல் அனுபவங்களையும் இணைத்து இன்று கடல்சார் பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பாடு, நீடித்த கடல்சார் வாழ்வாதாரம், காலநிலை தகவமைப்பு குறித்த விழிப்புணர்வை மீனவ சமுதாயத்திற்கு ஏற்படுத்துதல் என, பல பணிகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறார் வேல்விழி. நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ‘ஃபிஷ் ஃபார் ஆல்’ (Fish For All Centre) மையத்தை வழிநடத்திவருகிறார். நரேந்திர மோதிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நிதீஷ், சந்திரபாபுவின் கோரிக்கைகள் என்னென்ன?8 ஜூன் 2024 'உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில்' தன் சிறுவயது அனுபவங்கள் எப்படி இந்த துறையில் கால்பதிக்க உதவியது என்பது குறித்தும் தான் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் வேல்விழி. “சிறுவயதில் அப்பா ஒரு மீனவராகப் பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும். கடல் சீற்றம் அதிகமாக உள்ள நாட்களில், தஞ்சை மாவட்டத்தில் கடலோர கிராமமான மல்லிப்பட்டினம் சென்று அங்கு அப்பா மீன்பிடிப்பார். அங்கு சீற்றம் அவ்வளவாக இருக்காது என்பதால் 2-3 மாதம் எங்களைப் பிரிந்து அங்கு இருப்பார். மழை பெய்யும் சமயங்களில் அப்பா வரவில்லையென்றால் எல்லோரும் பயத்திலேயே இருப்போம். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில் இந்த மீன்பிடி தொழில்,” என்கிறார் வேல்விழி. சிறுவயது அனுபவங்கள் தான் அவரை கடல் உயிரியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க உதவியதாக கூறுகிறார் அவர். அதற்காக, சமூக-பொருளாதார ரீதியாக பல தடைகளையும் சந்தித்ததாக அவர் தெரிவிக்கிறார். “எங்கள் கிராமத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். 12-ஆம் வகுப்புவரை முடிப்பது அரிது. ஆனால், அம்மா-அப்பா இருவருமே நான் படிக்க வேண்டும் என நினைத்தனர். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் பி.எஸ்சி விலங்கியல் படித்தேன். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றேன்,” என்கிறார் வேல்விழி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பின்னர், குடும்ப வறுமை காரணமாக எம்.பில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி, தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் வேல்விழிக்கு ஏற்பட்டிருக்கிறது. “வீட்டில் படிக்க வைப்பதற்கான சூழல் இல்லை. 2002-இல் சுவாமிநாதன் அறக்கட்டளையில் வேலைக்குச் சேர்ந்தேன். என் முதல் வேலையே ராமேஸ்வரம் மண்டபத்தில் தான்,” எனக்கூறும் வேல்விழி, அதனை தன் கிராமத்திலிருந்த பலரும் ஊக்குவிக்கவில்லை என்கிறார். அவருடைய ஊரிலிருந்து ராமேஸ்வரம் சுமார் 265 கி.மீ. தொலைவில் உள்ளது. 2016-ஆம் ஆண்டு மத்திய மீன்வளத்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் சுமார் 9 லட்சம் மீனவக் குடுமபங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 575 மீனவ கிராமங்களில் 2,01,855 மீனவக் குடும்பங்களில் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர். இதில், 1,96,784 மீனவக் குடும்பங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள், 1,83,683 குடும்பங்கள் வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளனர். “வேலைக்குச் சென்றுகொண்டே தான் பின்னர் நான் கடல் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் (பிஹெச்.டி) முடித்தேன். இருளர் பழங்குடி மீனவ சமூகத்தினர் குறித்துதான் நான் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றேன். அந்தச் சமயத்தில் எங்கள் கிராமத்தில் பிஹெச்.டி வரை படித்தவர்கள் யாரும் இல்லை. மீனவச் சமூகப் பெண்கள் இப்போது படித்தாலும் மற்ற துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். அறிவியல் சார்ந்த துறைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை,” என்கிறார். சுனாமி தந்த அனுபவங்கள் இந்தியா மட்டுமல்லாமல் அறிவியல் துறையில் பெண்களின் பங்கு குறைந்தளவிலேயே உள்ளது. 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் சுமார் 57,000 பெண் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதாகவும் இது மொத்த ஆராய்ச்சியாளர்களுள் 16.6% என்றும் அப்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலஙகளவையில் தெரிவித்தார். மீனவச் சமுதாயத்திலிருந்து அறிவியல் துறையில் கால்பதித்துள்ள வேல்விழிக்கு, அது பல தடைகளுடனும் புறக்கணிப்புகளுடனும் தான் வருகிறது. “கிராமத்திலிருந்து வந்துள்ளோம் என்பதால் இந்தத் துறையில் உள்ள மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் பேசும்போது தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் பேசும்போது நாம் சரியாக பேசுகிறோமா, நாம் பேசுவது அவர்களுக்குப் புரிகிறதா என சந்தேகங்கள் இருக்கும். மற்றவர்கள் என்னிடம் நன்றாகப் பேசினாலும் உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருந்தது. பல முயற்சிகள் எடுத்து அதிலிருந்து மீண்டேன்,” என்கிறார் வேல்விழி. வேல்விழியை பொறுத்தவரை 2004-இல் ஏற்பட்ட சுனாமி ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. அதில் தன் குடும்பமும் மீனவ சமுதாயம் கண்ட இன்னல்களுமே அதுசார்ந்து பல அறிவியல்-தொழில்நுட்ப ரீதியான முயற்சிகளை எடுக்க உந்துசக்தியாக இருந்திருக்கிறது. “சுனாமியின்போது, என் பெரியம்மா, பெரியப்பா என உறவினர்கள் உட்பட பலரையும் இழந்தோம். எங்கள் ஊரில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர். நான் அப்போது ஊரில் இல்லாததால் அம்மா-அப்பா உயிருடன் இருக்கிறார்களா என்பதுகூட தெரியாத நிலை. பின்னர், என் ஊருக்கு வந்து பார்த்தேன். என் உறவுக்கார பெண் ஒருவர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு கழு மரத்தில் அவரது முடி சிக்கி அதில் அவர் மாட்டிக்கொண்டதால் உயிர் பிழைத்தார். அதை அவர் என்னிடம் அழுதுகொண்டே சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணும் அவருடைய மூன்று குழந்தைகளும் எங்கே என்றுகூட தெரியவில்லை,” என சுனாமி ஏற்படுத்திய வடுக்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் வேல்விழி. 'மீனவ நண்பன்' பிறந்த கதை சுனாமிக்குப் பிறகு பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்ல பயந்ததாகக் கூறுகிறார் வேல்விழி. அதன் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கை அமைப்புகளை மீனவர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தில் இணைந்து, 2007-இல் ‘மீனவ நண்பன்’ எனும் செயலியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் வேல்விழி. “பேரிடர் காலங்களில் என்ன மாதிரியான நுணுக்கமான தகவல்களைக் கொடுத்தால் மீனவர்கள் பாதுகாப்பாக வர முடியும் என்பது எனக்குத் தெரியும். ‘ஆபத்தான பகுதிகள்’, 'இந்தியா-இலங்கை’ எல்லை குறித்த பகுதிகளை அந்த செயலியில் அளித்தோம். அலையின் உயரம் உட்பட்ட தகவல்களை வழங்கினோம். இதற்கு என்னுடைய படிப்பும் வளர்ந்த சூழலும் உதவியது. 10 ஆண்டுகள் அதில் முக்கிய கவனம் செலுத்தினேன். முன்பு அந்த மாதிரியான அமைப்புகள் இல்லை. அப்போதெல்லாம் ஃபீச்சர் போன் தான். பின்னர் ஆண்ட்ராய்டு போனுக்குக் கொண்டு சென்றோம்,” என தன் கனவுத்திட்டத்தை உருவாக்கியது குறித்து விளக்கினார். இந்தச் செயலி, கடல்வழிப் பயணத்தில் வழிகாட்டியாகத் திகழ்கிறது. வானிலை குறித்த நிகழ்நேர தகவல்கள், பேரிடர் முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது இந்தச் செயலி ஏழு கடலோர மாநிலங்களில் 9 மொழிகளில் மீனவர்களுக்காகச் செயல்பட்டுவருகிறது. 75,000 பதிவிறக்கங்களைக் கண்டுள்ளது. புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்தச் செயலி துணைபுரிந்திருக்கிறது. இந்தச் செயலி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. பவன் கல்யாண்: ஆந்திர அரசியலைத் தலைகீழாகப் புரட்டுவதற்கு முதற்புள்ளியை வைத்தவர்7 ஜூன் 2024 '198 முறை கடலுக்குச் சென்றிருக்கிறேன்' இதுதவிர, மீனவப் பெண்களுக்கான பயிற்சித் திட்டங்கள், வாழ்வாதாரம் குறித்த பயிற்சிகள், கடல்சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை மீனவர்களிடம் கொண்டு சேர்த்தல் என பல பணிகளை சுவாமிநாதன் அறக்கட்டளை மூலமாக மேற்கொண்டு வருகிறார் வேல்விழி. “இதுவரை 198 முறை கடலுக்குச் சென்றிருக்கிறேன். மீனவர்களுக்கான பயிற்சிகளை கடலுக்குள் சென்றுதான் சொல்லித் தருவோம். ஆண்களை அழைத்துக்கொண்டு கடலுக்குச் செல்வதில் எனக்குப் பிரச்னை இல்லை,” என்கிறார். நீடித்த கடல்சார் வாழ்வாதாரத்திற்கு வைர வடிவிலான வலைகளை பயன்படுத்தாமல், சதுர கண்ணி வலைகளை தங்கள் இழுவை வலையில் இணைத்து மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் வேல்விழி. இதனால் சிறுமீன்கள், சிறு நண்டுகள் வலைகளில் சிக்காமல் கடலிலேயே இருக்கும் என்றும் கழிவுகளும் வலையில் சிக்காது என்றும் அவர் கூறுகிறார். அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்குகிறார். “சிறுமீன்கள், சிறுநண்டுகள், சினையான நண்டுகளைப் பிடிக்கக் கூடாது என மீனவர்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்வோம். பெண்களுக்கு மீன் சார்ந்த மதிப்புகூட்டு பொருட்களை தயாரிப்பது குறித்த பயிற்சிகளை வழங்குகிறோம்,” என்கிறார். இதுவரை, 23,000-க்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளித்துள்ளதாக கூறுகிறார். அதில் 17,000-க்கும் அதிகமானோர் பெண்கள். இவர்களுள் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுதொழில்முனைவோராக மாறியுள்ளதாகவும் கூறுகிறார் இதுதவிர, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் விதமாகப் பிச்சாவரத்தில் சதுப்புநிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு பெண்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார், வேல்விழி. “சவாலான சூழல்களில் பணி செய்யும் துறையை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறனை வளர்க்க வேண்டும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் மீனவ மக்களிடம் பேசும்போது அவர்கள் சில தீர்வு சொல்லும்போது எல்லா பிரச்னைகளும் போய்விடும். எனக்கு மனசோர்வு என்றால் அவர்களிடம் சென்று பேசினால் சரியாகிவிடும்,” என பகிர்கிறார் வேல்விழி. அறிவியல் - தொழில்நுட்பத்தைச் சமூகத்திற்கு கொண்டுசேர்ப்பதுதான் முதன்மையானது, சமூகத்தின் பிரச்னைகளை தீர்ப்பதுதான் அறிவியலின் வேலை என்பதுதான் அறிவியல் மீது வேல்விழி கொண்டிருக்கும் நம்பிக்கை. https://www.bbc.com/tamil/articles/c977683j092o
  24. இலங்கை குறித்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாறாது; உட்கட்டமைப்பு திட்டங்கள் ஏனைய கொள்கைகள் தொடர்பில் கடும் அழுத்தங்களை கொடுப்பதை இந்தியா குறைத்துக்கொள்ளும் - இராஜதந்திர ஆய்வாளர்கள் கருத்து Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 11:50 AM ECONOMYNEXT SHIHAR ANEEZ இந்தியாவின் பிரதமராக இரண்டு தடவை பதவிவகித்துள்ள நரேந்திரமோடி இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறை எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தேர்தல்முடிவுகள் இலங்கை தொடர்பான அவரது கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையுடனான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆக்ரோசமான உந்துதல் குறையலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெற தவறியுள்ளதுடன் மாநில கட்சிகளின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 272 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 ஆசனங்னகளை கைப்பற்றியுள்ளது எனினும் நரேந்திரமோடியின் பாஜகவிற்கு 240 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன. இதன் காரணமாக 28 ஆசனஙகளை கைப்பற்றிய இரண்டு மாநில கட்சிகள் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக மாறியுள்ளன. இலங்கையில் நிலம் எண்ணெய் எரிவாயு மற்றும் மின் இணைப்பிற்கு இந்தியா அதிக அழுத்தம் கொடுத்துவருகின்றது. மேலும் தனியார் துறையுடன் இணைந்து இலாபகரமான மீள்புதுப்பித்தக்க எரிசக்தி மற்றும் துறைமுக திட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. நரேந்திரமோடியின் சிறிய வித்தியாசத்திலான வெற்றியின் தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கேள்விபதில்கள் கேள்வி- இலங்கை குறித்த இந்திய வெளிவிவகார கொள்கையின் முக்கிய மாற்றங்கள் என்ன ? பதில்- கடந்த தடவையை விட குறைவான ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் மோடி அரசாங்கம் இலங்கையுடன் தனது வலுவான ஈடுபாட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்தும். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கிய சகா இந்தியா.நிதிமற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இலங்கை குறித்து இதுவரை காலமும் பின்பற்றிய அதேகொள்கையை இந்தியா பின்பற்றும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் ஏற்கனவே இரண்டு நாடுகளும் ஆராய்ந்துள்ள திட்டங்களிற்கான அழுத்தங்களை இந்தியா தொடரக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மற்றும் கப்பல்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை இந்தியா தொடரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆய்வாளர்கள் மோடி 9ம் திகதி மீண்டும் பதவியேற்றதும் மீண்டும் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வார் என தெரிவித்துள்ளனர். இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஏனைய கொள்கைகள் தொடர்பிலான இந்தியாவின் உந்துதல்கள் அழுத்தங்களின் வேகம் குறைவடையலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை வெளியேறச்செய்வேன் என தேர்தல் வாக்குறுதியளித்த முகமது முய்சு மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகியுள்ளதை தொடர்ந்து மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிராந்தியத்தில் இலங்கையுடன் மாத்திரமே இந்தியாவிற்கு சுமூகமான உறவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இந்தியா குறித்த எதிர்மறையான உணர்வுகள் உருவாவதற்கு கடந்த காலங்களில் சில விடயங்கள் குறித்து இந்தியா கடுமையான அழுத்தங்களை கொடுத்தமையே காரணம் என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் இந்தியா இவ்வாறு கடும் அழுத்தங்களை கொடுப்பதை குறைத்துக்கொள்ளும் அல்லது கைவிடும் என தெரிவித்துள்ளனர். மாலைதீவில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் இலங்கையை இந்தியா இழக்க முடியாது என இராஜதந்திர ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்தியா இலங்கையின் நலனிற்கு எதிரானது என கருதப்படும் திட்டங்கள் கொள்கைகள் குறித்து கடும் அழுத்தங்களை கொடுப்பதை கைவிடும் என தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர் இந்திய அரசாங்கம் இலங்கையின் அரசநிறுவனங்கள் மற்றும் ஏனைய திட்டங்களை பெற்றுக்கொள்ள முயல்வது குறித்து தீடிரென இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளதை கடந்த சில மாதங்களில் உருவாகியுள்ளதை பார்க்க முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் மக்களால் நியாயமற்றது கருதப்படும் சில விடயங்களில் இந்தியா விட்டுக்கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185592
  25. திறந்த வெளிச்சிறைச்சாலையில் சிக்குண்டுள்ளோம் - பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் வீதியில் நடமாடவும் பயமாக உள்ளது - டியாகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 03:22 PM By Alice Cuddy & Swaminathan Natarajan, BBC News டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் ருவாண்டாவை திறந்தவெளிசிறைச்சாலை என வர்ணித்துள்ளார். குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு அனுப்புவதற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பிரிட்டனின் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையில், அங்குள்ள நான்கு குடியேற்றவாசிகளை சந்திப்பதற்காக பிபிசி ருவாண்டாவிற்கு சென்றுள்ளது. இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையை சேர்ந்த சிறிய குழுவினர் டியோகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். எங்களிற்கு பல மருத்துவ தேவைகள் உள்ளன, கடந்த காலங்களில் நாங்கள் பாலியல் வன்முறை சித்திரவதைகளிற்கு உள்ளாகியுள்ளோம். இவற்றிற்கு எல்லாம் சிகிச்சை தேவைப்படுகின்றது, ஆனால் ருவாண்டாவில் அது கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வாராந்தம் 50 டொலர் பெறுமதியான உணவினையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகின்றனர். எனினும் பிரிட்டனிற்கும் ருவாண்டாவிற்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் அவர்கள் தொழில்புரிய முடியாது. இலங்கையர்கள் நால்வரும் தாங்கள் வீதிகளில் துன்புறுத்தல்கள் பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். அவர்கள் தாங்கள் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தங்களை தாங்களே சிறைவைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவர்கள் பிரிட்டன் தாங்கள் வாழ்வதற்கு நிரந்தரமான இடமொன்றை கண்டுபிடிப்பதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். டியாகோகார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தற்கொலை செய்ய முயன்ற இலங்கை தமிழர்களே ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவமருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள அவர்கள் தலைநகர் கிஹாலியின் புறநகர் பகுதியில் உள்ள தொடர்மாடியில் வசிக்கின்றனர், அவர்களின் வாடகையை பிரிட்டன் செலுத்துகின்றது. ருவாண்டாவில் இவர்களின் சட்ட அந்தஸ்த்து பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களின் சட்ட அந்தஸ்த்திலிருந்து வேறுபட்டது என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். மிகவும் பாதிக்கப்படக்கூடிய அகதிகளுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கான ருவாண்டாவின் திறன் குறித்த அவர்களது எதிர்மறையான அனுபவங்கள் தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன என இரண்டு இலங்கையர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தனது நாட்டின் மருத்துவ துறை மீது முழுமையான நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள ருவாண்டாவின் அதிகாரியொருவர் இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து வெளியிட்ட அச்சத்தை ஏனையவர்கள் எவரும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட நால்வரும் பிரிட்டனிற்கு செல்வதற்கு முயற்சிக்கவில்லை, மாறாக அவர்கள் டியாகோகார்சியாவில் புகலிடக்கோரிக்கையை முன்வைத்தனர் - இங்கு அமெரிக்கா- பிரிட்டனின் இரகசிய இராணுவதளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2021 ஒக்டோபர் மாதம் அந்த தீவிற்கு சென்ற இலங்கையர்களில் இவர்களும் அடங்குகின்றனர். தாங்கள் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடுவதாகவும் கனடாவிற்கு செல்ல முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்கள் சொந்த நாட்டில் - இலங்கையில் தாங்கள் பாலியல்வன்முறை சித்திரவதைக்கு உள்ளானதாக நாங்கள் ருவாண்டாவில் சந்தித்த இலங்கையர்கள் நால்வரும் தெரிவித்தனர். 15 வருடத்திற்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்த காலங்களில் தொடர்பை பேணியதால் சிலர் இந்த மனித உரிமை மீறல்களை அனுபவித்துள்ளனர். மிகவும் அமைதியான வீதியில் இரண்டு படுக்கை அறைகளை கொண்ட தொடர்மாடியில் தங்கியுள்ள அழகு(பெயர்மாற்றப்பட்டுள்ளது) தான் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் தனது தனிமையும் எதிர்காலத்தை பற்றி நிச்சயமின்மையும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என குறிப்பிடுகின்றார். எங்களுக்கு இங்கு உரிய மருத்துவசிகிச்சைகள் கிடைக்கவில்லை நாங்கள் மனோநல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளோம், என தெரிவிக்கும் 23 வயது அழகு நாங்கள் எங்கள் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் எங்களிற்கு உதவக்கூடிய நிலையில் இல்லை எனவும் குறிப்பிடுகின்றார். ருவாண்டாவின் மருத்துவபணியாளர்கள் எங்களிடம் சீற்றத்துடன் நடந்துகொண்டனர் சத்தமிட்டனர் என அவர் தெரிவிக்கின்றார். ஒருமுறை தற்கொலை செய்ய முயன்றவேளை தன்னை கைதுசெய்த அவர்கள் தன்னை மீண்டும் டியாகோகார்சியாவிற்கு அனுப்பபோவதாக எச்சரித்ததாக தெரிவித்தார். அவருடன் அந்த தொடர்மாடியில் தங்கியுள்ள 26வயது மயூரா தான் உளநலஆற்றுகையை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கின்றார்.எனக்கு உரிய மருந்துகள் கிடைப்பதில் நல்ல முறையில் உரையாட முடிவதில்லை இதன் காரணமாக நான் மருத்துவமனைக்கு செல்லவிரும்பவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். https://www.virakesari.lk/article/185537

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.