Everything posted by ஏராளன்
-
சீரற்ற வானிலை காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் மறுநாளும் விடுமுறை 03 JUN, 2024 | 12:56 PM சீரற்ற காலநிலையினால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (4) செவ்வாய்க்கிழமை மற்றும் மறுநாள் (5) புதன்கிழமை வரை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185188
-
தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் - எதிர்ப்பு தெரிவித்து ஐநா அலுவலகத்திடம் சிவில் சமூகம் கடிதம்
Published By: RAJEEBAN 03 JUN, 2024 | 10:59 AM தேர்தல்களை பிற்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர். நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளதை தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சிவில்சமூக பிரதிநிதிகள் பாலித ரங்க பண்டாரவின் கருத்தினை ஜனநாயக விரோத கருத்து என குறிப்பிட்டுள்ளனர். மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பு தேசிய சிவில் அமைப்புகளின் முன்னணி மின்சார பாவனையாளர்கள் சங்கம் உட்பட பல அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் அலுவலகத்திடம் கையளித்துள்ளனர். மே 28ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கை மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் இதன் காரணமாக சமூகத்தில் மிகவும் முரணாண நிலை தோன்றியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல்களிற்காக காத்திருக்கும் மக்களிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரின் தெரிவித்துள்ள விடயம் மிகவும் பாரதூரமானது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாலித ரங்க பண்டாரவின் இந்த அறிவிப்பிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள என தெரிவித்துள்ள இலங்கையின்சிவில் சமூக பிரதிநிதிகள் தேர்தல் ஆணையாளரை அமெரிக்க தூதுவர் சந்தித்துள்ளமை மிக முக்கியமானது இலங்கையின் ஜனநாயகம் குறித்து நம்பகதன்மைமிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பொதுமக்கள் கருதுகின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐநாவும் இலங்கையில் உள்ளவெளிநாட்டு தூதரகங்களும் ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மன்னிப்பு கோரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும் ஜனநாயகம் தொடர்பில் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தடுப்பதற்காக தலையீடு செய்யவேண்டும் எனவும் தங்கள் கடிதத்தில் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/185179
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் ஓமானை சுப்பர் ஓவரில் வென்றது நமிபியா 03 JUN, 2024 | 12:24 PM (நெவில் அன்தனி) நமிபியா - ஓமான் அணிகளுக்கு இடையில் பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் நமிபியா வெற்றிபெற்றது. பிலான் கான் வீசிய சுப்பர் ஓவரில் நமிபியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வைஸ் 13 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர். டேவிட் வைஸ் வீசிய சுப்பர் ஓவரில் ஓமான் ஒரு விக்கெட்டை இழந்து 10 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நசீம் குஷி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸீஷான் மக்சூத் 6 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டு அணிகளும் தத்தமது 3ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஓமான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா கடைசிக் கட்டத்தில் கடும் சவாலை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் 18ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களுடன் சிறந்த நிலையில் இருந்த நமிபியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. குறிப்பாக மெஹ்ரான் கான் வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்ந்தமை நமிபியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. துடுப்பாட்டத்தில் ஜான் ப்ரைலின்க் 45 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 24 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெஹ்ரான் கான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஓமான், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 100 ஓட்டங்களைக் கடந்தது. காலித் கய்ல் 34 ஓட்டங்களையும் ஸீஷான் மக்சூத் 22 ஓட்டங்களையும் அயான் கான் 15 ஓட்டங்களையும் ஷக்கீல் அஹ்மத் 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரூபன் ட்ரம்பள்மான் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டேவிட் வைஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டேவிட் வைஸ் https://www.virakesari.lk/article/185172
-
இந்தியாவின் வரலாற்றில் மிக உயர்வாகப் பதிவான 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்ப அலை: உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு 03 JUN, 2024 | 11:48 AM லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில் ஊர்க் காவல் படையினர் துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் வெயில்தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி பஞ்சாப் ஹரியானா ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடும் மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வெப்ப அலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் தொடர்பான தரவுகளை மத்திய அரசு சேகரித்தது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் முழுவதும் வெப்ப அலை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் முழுவதும் வெப்ப அலை காரணமாக 24849 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மே மாதத்தில் மட்டும் 19189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/185185
-
காசா யுத்தத்தின் எதிரொலி; இஸ்ரேலிய பிரஜைகளிற்கு தடைவிதித்தது மாலைதீவு
03 JUN, 2024 | 10:57 AM இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார்என அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185176
-
எந்த நாடும் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை தரையிறக்கிய சீனா - என்ன செய்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து Chang'e 6 விண்கலம் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 ஜூன் 2024 சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது. Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. மே 3 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், வரலாற்றில் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்திலிருந்து மதிப்புமிக்க பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. நிலவின் மறுபக்கத்தை அடைந்த பின்னர் விண்கலத்தை தொடர்புகொள்வது மிகவும் கடினம் என்பதால், அப்பகுதியில் தரையிறங்குவது ஆபத்து நிறைந்ததாகும். 2019-ம் ஆண்டில் Chang'e-4 விண்கலம் தரையிறங்கியதை தொடர்ந்து, இந்த சாதனையை புரிந்த ஒரே நாடாக சீனா திகழ்கிறது. வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து ஏவப்பட்ட Chang'e 6 விண்கலம், அப்பகுதியில் தரையிறங்குவதற்காக நிலவை சுற்றிவந்தது. பின்னர், பூமியிலிருந்து நிரந்தரமாக மறுபக்கத்தில் உள்ள நிலவின் பகுதியில் தரையிறங்க அந்த விண்கலத்தின் லேண்டர் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து சென்றது. இதற்காக, தடைகளை கண்டறிந்து, அவற்றை தவிர்ப்பதற்காக தானாகவே இயங்கும் அமைப்பு ஒன்று பயன்படுத்தப்பட்டது. இது, மனிதக் கண்ணால் பார்க்கும் வகையிலான கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கும் இடத்தை தேர்ந்தெடுக்க பயன்பட்டதாக, சி.என்.எஸ்.ஏ-வை மேற்கோளிட்டு சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா (Xinhua) செய்தி முகமை தெரிவித்துள்ளது. பாதுகாப்பான தரையிறங்கும் இடத்திற்கு 100 மீட்டர் (328 அடி) மேலே விண்கலத்தின் லேண்டர் சுழன்று, செங்குத்தாக மெதுவாக தரையிறங்குவதற்கு முன்பாக முப்பரிமாண லேசர் ஸ்கேனரை பயன்படுத்தியது. இந்த பணிக்கு Queqiao-2 எனும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் துணைபுரிந்ததாக, சி.என்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது. நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் என்ன ஆராய்ச்சி செய்யப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படபடம் "பல பொறியியல் கண்டுபிடிப்புகள், அதிக அபாயங்கள் மற்றும் பெரும் சிரமங்களை" உள்ளடக்கிய இந்த செயல்பாட்டில், லேண்டர் மூன்று நாட்கள் வரை நிலவின் மேற்பரப்பில் பாறை மாதிரிகளை சேகரிக்கும் என, சி.என்.எஸ்.ஏ கூறியுள்ளது. “யாராலும் இதுவரை பார்த்திராத பாறைகளை நாம் பார்க்கலாம் என்பதால் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளோம்,” என, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிலவின் புவியியல் குறித்த நிபுணர் பேராசிரியர் ஜான் பெர்னெட்-ஃபிஷர் விளக்குகிறார். அமெரிக்க அப்பல்லோ திட்டம் மற்றும் சீனாவின் முந்தைய இத்தகைய திட்டங்களால் கொண்டு வரப்பட்ட நிலவின் பாறைகளை இவர் ஆய்வு செய்துள்ளார். ஆனால், நிலவின் முற்றிலும் வேறுபட்ட பகுதியிலிருந்து வரும் பாறைகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பின் மூலம், கிரகங்கள் எப்படி தோன்றின என்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என அவர் கூறுகிறார். இதற்கு முன்னர் நிலவிலிருந்து சேகரிக்கப்பட்ட பெரும்பாலான பாறைகள், ஐஸ்லாந்து அல்லது ஹவாயில் காணப்படும் எரிமலை பாறைகளை ஒத்தவையே. ஆனால், நிலவின் மறுபக்கத்திலிருந்து கண்டெடுக்கப்படும் பாறைகள் மாறுபட்ட வேதியியல் அம்சங்களை கொண்டிருக்கலாம். “கிரகங்கள் எப்படி தோன்றின, கடினமான மேற்புற படுகைகள் ஏன் தோன்றுகின்றன, சூரிய குடும்பத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பது போன்ற பெரிய கேள்விகளுக்கு பதில் கிடைக்க இது உதவலாம்” என்கிறார் பேராசிரியர் ஜான். இந்த விண்கலம் துளையிடும் கருவி மற்றும் எந்திரம் மூலம் சுமார் 2 கிலோ பொருட்களை சேகரிப்பதை இலக்காக வைத்துள்ளதாக, சி.என்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் இதுவரை அறியப்பட்டதில் தென் துருவ-எய்ட்கென் படுகை மிகப்பெரிய ஒன்றாகும். அங்கிருந்து, நிலவின் உள் மையப் பகுதியின் ஆழத்திலிருந்து பொருட்களை சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் பெர்னெட்-ஃபிஷர் கூறுகிறார். நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதன் தென் துருவம் அதிகம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அங்கு பனிக்கட்டி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அப்பகுதியை புரிந்துகொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வமாக உள்ளன. நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் அமெரிக்காவின் புதிய திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓசியானஸ் புரோசிலாரம் (Oceanus Procellarum) எனும் நிலவில் இருந்து 1.7 கிலோ எடையுள்ள பொருட்களை 2020ஆம் ஆண்டு Chang'e 5 விண்கலம் எடுத்து வந்தது. நிலவில் தண்ணீர் கிடைத்தால், அது அங்கே அறிவியல் ஆராய்ச்சிக்காக தளம் ஒன்றை வெற்றிகரமாக நிறுவுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும். சீனாவின் திட்டம் வெற்றி பெற்றால், மதிப்புமிக்க மாதிரிகளுடன் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும். அப்பொருட்களின் அசல் தன்மையை கூடுமானவரையில் பாதுகாக்கும் பொருட்டு, அவை பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வைக்கப்படும். இந்த பாறைகளை ஆய்வு செய்ய சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர், உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படும். நிலவிலிருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலத்தை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். ஓசியானஸ் புரோசிலாரம் (Oceanus Procellarum) எனும் நிலவில் நாம் பார்க்கும் பகுதியில் 1.7 கிலோ எடையுள்ள பொருட்களை 2020ஆம் ஆண்டு Chang'e 5 விண்கலம் எடுத்து வந்தது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறியவும் நிலவில் நிரந்தர தளத்தை நிறுவுவதற்கான ஆய்வில் ஈடுபடவும் வரும் பத்தாண்டுகளில் மேலும் மூன்று ஆளில்லா விண்கலங்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 2030-க்குள் சீன விண்வெளி வீரரை நிலவில் கால் பதிக்க வைப்பதே பீஜிங்கின் நோக்கமாகும். நாசா 2026 இல் தொடங்கும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ce99znvp1qdo
-
யாழ் அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல் வீடு பலத்த சேதம்
Published By: VISHNU 03 JUN, 2024 | 03:34 AM யாழ் அச்சுவேலி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று பெற்றோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; அச்சுவேலி மேற்கு கருமந்திரதுறை வீதியிலுள்ள பாலசிங்கம் சதானந்தன் என்பவரது வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவர் பண்ணை ஒன்றை நடாத்திவருவதாகவும் இவரின் சகோதரிக்கும் இவருக்கும் இடையே சொத்து சம்மந்தமான பிரச்சனை இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (02) சதானந்தன் சகோதரியின் உறவினர் ஒருவரை தாக்கியதில் அவரின் கை முறிந்துள்ளது, இவ்வாறான நிலையில் இரவு 8 மணிக்கு 6 மோட்டார் சைக்கிளிலும், ஒரு முச்சக்கர வண்டியிலும் சென்ற குழு ஒன்று குறித்த வீட்டின் மீது இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் ஒரு குண்டு மட்டும் வெடித்து தீப்பற்றியதையடுத்து வீட்டின் சமையலறை பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் எதுவிதமான சேதமும் ஏற்படவில்லை என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185162
-
சிறையில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பதுடன், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் சிறையில் இருந்தவாறே போட்டியிடவும் முடியும். நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் பட மூலாதாரம்,GETTY IMAGES தண்டனை பெற்ற ஒருவர் எப்படி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்? ஜார்ஜ் வாஷிங்டன் 1789இல் அமெரிக்காவின் முதல் அதிபரானார், அதன் பின்னர் அதிபர் வேட்பாளருக்கான சட்டப்பூர்வ தகுதி விதிகள் மாறவில்லை. யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் அமெரிக்க வரலாற்றின் பேராசிரியராக பணியாற்றிய இவான் மோர்கன் பிபிசியிடம் பேசுகையில், “அதிபர் வேட்பாளராக இருப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் அவர்கள் அமெரிக்காவில் பிறந்து இருக்க வேண்டும், மேலும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்திருக்க வேண்டும் (35 வயதுக்கு மேல்). அதனால்தான் ஒபாமா உண்மையில் அமெரிக்கக் குடிமகனா இல்லையா என்ற விவாதம் அப்போது எழுந்தது” என்கிறார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அதிபர் வேட்பாளர் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இந்த விதியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆனால் தண்டனை பெற்ற ஒருவர் வெள்ளை மாளிகைக்கு போட்டியிட எந்த தடையும் இல்லை. பேராசிரியர் மோர்கன் கூறுகையில், "புரட்சியில் இருந்து பிறந்தது தான் அமெரிக்கா. முடியாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட எவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறுவதற்கான சாத்தியம் அப்போது இருந்திருக்கலாம்." என்கிறார். 1787-இல் அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய மாநாட்டில் பங்குபெற்ற தலைவர்கள் எவரும் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்படவில்லை, இருப்பினும் சிலருக்கு சிறை செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. "புரட்சி வெற்றியடையவில்லை என்றால், அவர்கள் முடியாட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்காக குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டிருப்பார்கள்" என்று அவர் கூறுகிறார். இதனால் தான் யார் அதிபராகலாம் என்பதில் அரசியலமைப்பை இயற்றியவர்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. இந்த கொள்கை காரணமாக தான் மூன்று வேட்பாளர்கள் சிறையிலிருந்தவாறே அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டனர். யூஜின் வி டெப்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெப்ஸ் முதன்முதலில் 1894இல் சிறையில் அடைக்கப்பட்டார் "சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில், 1920இல் போட்டியிட்ட யூஜின் டெப்ஸ் மிக முக்கியமான வேட்பாளர்", என்கிறார் பேராசிரியர் மோர்கன். டெப்ஸ் முதன்முதலில் 1894-இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தொழிற்சங்கத் தலைவராக, ஒரு ரயில் நிறுவனத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார். ரயிலை மறித்ததற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ராணுவம் இந்த வேலைநிறுத்தத்தை முறியடித்தது. டெப்ஸ் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. இந்த அனுபவம் அவரது அரசியல் பார்வையை பெரிதும் பாதித்தது. "அவர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரானார். 1904, 1908, 1912 மற்றும் 1920-இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்” என பேராசிரியர் மோர்கன் கூறுகிறார். டெப்ஸ் 1900ஆம் ஆண்டிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். "1912இல் ஜனநாயகக் கட்சியின் உட்ரோ வில்சன், குடியரசுக் கட்சியின் வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட், முற்போக்கு வேட்பாளர் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் டெப்ஸ் என நான்கு முனைப் போட்டி நிலவியது." என்கிறார் பேராசிரியர் மோர்கன். டெப்ஸ் தேர்தலில் மிகவும் வலுவாகப் போட்டியிட்டு தோராயமாக 10 லட்சம் வாக்குகளைப் பெற்றார், அதாவது மொத்த வாக்குகளில் 6%, இது அமெரிக்காவில் ஒரு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்ற அதிக வாக்குகள் ஆகும். "ஆனால், முதலாம் உலகப் போரின் போது, அமெரிக்க வாக்காளர்கள் தாங்கள் தேசபக்தியின் அடிப்படையில் போரை ஆதரிக்க வேண்டுமா அல்லது முதலாளித்துவப் போராக அதை எதிர்க்க வேண்டுமா என்று யோசித்தார்கள்?" என்கிறார் பேராசிரியர் மோர்கன். ஆனால் டெப்ஸ் போரை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கர்கள் அதில் சேரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினார். தொடர்ந்து விவரித்த பேராசிரியர் மோர்கன், "1918-இல், போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் போர் வரைவை எதிர்க்க அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் டெப்ஸ்" என்கிறார். அவர் தேசத்துரோக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 1919-இல் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் இருந்தபோது அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும், சிறையில் அவரது உடல்நிலை மோசமடைந்து, 1926-இல் அவர் இறந்தார். லிண்டன் லாரௌச் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1940களில், ஒரு இடசாரியாக லாரௌச்சின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது லிண்டன் லாரௌச் பல்வேறு காரணங்களுக்காக சிறையில் இருந்தவாறு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். 1976 முதல் 2008 வரை, ஒவ்வொரு தேர்தலிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவோ அல்லது வேறு ஏதேனும் கட்சியின் வேட்பாளராகவோ, அவரது பெயர் வாக்குச் சீட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. ஒரு இடசாரியாக லாரௌச்சின் அரசியல் வாழ்க்கை 1940களில் தொடங்கியது, ஆனால் 1970களில் அவர் வலதுசாரிகள் பக்கம் சாய்ந்தார். அவரது விசித்திரமான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், குறைந்த வரிகள் மற்றும் ஜனரஞ்சக வாக்குறுதிகளுடன் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார் லாரௌச். ஆனால் அதில் 2,000 பேருக்கு மேல் இல்லை. அமெரிக்கா தனது சொந்த குடிமக்களை உளவு பார்ப்பதை கடுமையாக விமர்சித்தவர் லாரௌச். வியக்கத்தக்க வகையில் 1986-இல், இல்லினாய்ஸ் மாநிலத்தில் முக்கிய பதவிகளுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனங்களில் லாரௌச் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக பேராசிரியர் மோர்கன் கூறுகிறார். இதன் மூலமாக அவர்கள் அதிக நன்கொடைகளையும் பெற்றனர். பேராசிரியர் மோர்கனின் கூற்றுப்படி, "அது எவ்வளவு தொகை என்பது ஒருபோதும் வெளியே வராது. ஆனால் சிலர் அதை 200 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடுகின்றனர். இந்த நிதியின் மூலம் உள்ளாட்சி, மாநில மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் நிறைய செலவு செய்தார்கள், ஆனால் மிகக் குறைந்தளவிலான வெற்றியைத் தான் பெற்றார்கள்”. 1989-ஆம் ஆண்டில், அவர் அஞ்சல் மோசடிக்காக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். பின்னர் 1992-இல் தேர்தல் வந்தது. லாரௌச் அதில் பங்கேற்க விரும்பினார். சில மாநிலங்களில் அவரது பெயரும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றது. அவர் மொத்த வாக்குகளில் 0.1% அல்லது 27000 வாக்குகளைப் பெற்றார். பின்னர் அவரது தண்டனை குறைக்கப்பட்டு 1994ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் 1996, 2000, 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டார். நிதி திரட்டும் திறமையும், தேர்தல்களில் நிலைத்தன்மையும் இருந்தும் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. லிண்டன் லாரௌச் 2019 இல் இறந்தார். ஜோசப் ஸ்மித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்மோனிசத்தை (Mormonism) நிறுவிய ஜோசப் ஸ்மித், 1844இல் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜோசப் ஸ்மித் 1830-இல் மார்மோனிசத்தை (Mormonism) நிறுவினார். இது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மற்றும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களில் இருந்து வேறுபட்டது. இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. அவர் தனது இயக்கத்திற்குள் பலதார மணம் செய்யும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தினார். "அமெரிக்காவின் முக்கிய மதிப்புகளுக்கு இது ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. பலதார மணம் உலகின் மிக மோசமான குற்றமாக கருதப்பட்டது. ஸ்மித்துக்கு 20 மனைவிகள் இருந்ததாக கூறப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் மோர்கன். ஸ்மித் அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்தவர், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கான ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடி, இல்லினாய்ஸுக்கு வந்து சேர்ந்தார். 1940-களில், மார்மோன்கள் மிசிசிப்பி நதிக் கரையில் தங்களுக்கான சொந்த நகரத்தை நிறுவினர், அங்கு அவர்கள் அமைதியாக வாழவும் பிரார்த்திக்கவும் முடியும் என நம்பினர். ஸ்மித் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மார்மன் போராளிப் படையையும் உருவாக்கினார். பலதார மணமுறை காரணமாக, அவர் மிகவும் பிரபலமடைந்தார். எனவே அவருக்கு பல எதிரிகள் உருவாகினர். ஸ்மித் தனக்கு எதிராக எழுதிய செய்தித்தாள்களின் அச்சு இயந்திரங்களை அழிக்க தனது போராளிகளுக்கு உத்தரவிட்டார். கடைசியில் அவர் சிறை செல்ல அதுவே காரணமாக அமைந்தது. அவர் 1844 தேர்தல்களில் சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளராக இருந்தார். அந்தக் கட்சி பலதார மணத்தை ஊக்குவித்தது. ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்ற ஸ்மித்தின் கருத்துகளை பிரசாரம் செய்தது. எனவே அவரது கருத்துகளால் அவரது எதிரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. சிறைக்கு வெளியே ஒரு கும்பல் அவரைத் தாக்கியது. பின்னர் சிறையில் அவர் மறைந்திருந்த கட்டடத்தில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் 1844 தேர்தலில் சீர்திருத்தக் கட்சி மாற்று வேட்பாளரை அறிவிக்கவில்லை. பட மூலாதாரம்,REUTERS/JANE ROSENBERG எனவே அமெரிக்க வரலாற்றில் சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூன்று அதிபர் வேட்பாளர்கள் உள்ளனர், மேலும் நான்காவதாக ஜோசப் மால்டோனாடோ-பாசேஜ் என்பவர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஜோயி எக்ஸோடிக் (Joe Exotic) என்று அழைக்கப்படும் இந்த ஜோசப், நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமான 'டைகர் கிங்' படத்தின் நட்சத்திரம். 2020ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் மற்றும் தொழில் போட்டியாளர் என்பதால் மற்றொரு மிருகக்காட்சிசாலையின் உரிமையாளரைக் கொலை செய்ய சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 20 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். சிறைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், டிரம்பின் நிலைமை மிகவும் தனித்துவமானதாக இருக்காது, ஆனால் சிறையில் இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிக முக்கியமான நபராக அவர் இருக்கலாம். அவர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும், வட அமெரிக்காவுக்கான பிபிசி நிருபர் ஜான் சுட்வொர்த் கூறியது போல, “பிளவுபட்ட தேசத்தின், 50 சதவீத மக்கள் ஒரு குற்றவாளியை அதிபர் வேட்பாளராகக் கொண்டிருப்பார்கள்”. https://www.bbc.com/tamil/articles/c722zp5xwn1o
- யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் மறைவு
-
மட்டக்களப்பு மட்டிக்கழி அம்மன் பீடம் உள்ள காணியை அபகரித்து மீன்வாடி அமைப்பது இந்து மதத்தை இழிவுபடுத்தும் திட்டமிட்ட செயல் பொது அமைப்புக்கள் கண்டனம்
Published By: VISHNU 03 JUN, 2024 | 03:25 AM மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப்பகுதியில் ஆலைய தீ மிதிப்பின் போது மஞ்சல் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தைச் சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக அபகரித்து வாடி அமைத்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுவருகின்றார். அதற்கு அதிகாரிகளும் உடந்தையாகச் செயற்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனை அகற்றாவிடில் மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராடப் போவதாக அந்த பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மட்டிக்கழி அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஆலைய பரிபாலன சபை மற்றம் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடக மாநாடில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தனர். மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சல் குளிப்பதற்காக பார்வீதியிலுள்ள கடற்கரை பகுதியில் சட்ட ரீதியாக அம்மன் பீடம் அமைக்கப்பட்டு காலம் காலமாக அந்த பகுதியில் மீனவர்கள் கூட மீன்படி படகுகளை நிறுத்தாது மாசடைய செய்யாது மீனவர்களும் ஆலைய பரிபாலனசபையினர் புனித பகுதியாக பராமரித்து வருகின்றனார். இந்த நிலையில் குறித்த காணியை மட்டு மாநகர சபை ஆணையாளர் மீன் வியாபரி ஒருவருக்கு மீன்வாடி அமைப்பதற்கு குத்தகைப்பணமாக ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று உடன்படிக்கை மூலம் அனுமதியளித்ததையடுத்து அவர் அந்த பகுதியை அபகரித்து மீன் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்பாக அலையப் பரிபாலன சபை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மாதர் சங்கங்கள் மீனவர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் இந்து மத்ததை இழிவுபடுத்தும் செயற்பாட்டை கண்டித்து அராங்க அதிபர், பிரதேச செயலாளர், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு கடித மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். ஆனால் அதற்கான தீர்வை பெற்றுதருவதாக தெரிவித்தபோதும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை இருந்தபோதும் பிரதேச செயலாளருக்கு கீழ் உள்ள இந்த அரச காணியை பிரதேச செயலாளரின் அனுமதியின்றி எவ்வாறு மாநகரசபை மீன்வாடி அமைக்க அனுமதிவழங்க முடியும்; இது ஒரு மோசடியான செயல் என்பதுடன் இந்து மதத்தை இழிவு படுத்தும் திட்டமிட்ட செயலாகும் . இந்த இந்து மத இழிவு படுத்தும் செயலுக்கு உறுதுணையாக சில அரச அதிகாரிகளும் மீன் வியாபாரியுடன் நேர்ந்து செயற்படுகின்றனர் எனவே காலம் காலமாக இந்த பகுதி மக்களும் ஆலைய பரிபாலனசபை பராமரித்துவரும் அந்த புனித பகுதியில்; சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் மீன் வாடி உடன் அகற்றப்பட வேண்டும் இல்லாவிடில் இந்து மக்களை அணிதிரட்டி மாநகர சபையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185161
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி ஒருநாள் போட்டியில் 2 முறை சாம்பியன், டி20 போட்டிகளில் 2 முறை சாம்பியன், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் , சர்வதேச அனுபவம் நிறைந்த பல வீரர்கள் இருந்தும் வலிமையான மேற்கிந்தியத்தீவுகள் அணியை கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராட வைத்தது அனுபவம் குறைந்த பப்புவா நியூ கினியா(பிஎன்ஜி) அணி. மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்றைய டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி முன்னாள் சாம்பியன் தரத்துக்கும், தகுதியான வெற்றியாக எடுக்க முடியாது, வெட்கப்பட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் போட்டி முடிந்தபோதே கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் தோற்றுவிடுமோ என்று எண்ணியபோது, தடுமாறித்தான் வெற்றிப்பாதைக்குத் திரும்பி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது. கயானாவின் ப்ராவிடன்ஸ் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் பிஎன்ஜி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதலில் பேட் செய்த பிஎன்ஜி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் இடம்பெற்று போட்டியை நடத்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 புள்ளிகள் பெற்றது. கடந்த 2 உலகக் கோப்பைத் தொடர்களிலும் முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெறக்கூட இல்லை. ஆனால், இந்த முறையும் அதே சூழல் ஏற்பட்டிருக்கும் ஆனால், போட்டியை நடத்தும் நாடு என்பதால் தானாகவே வாய்ப்பைப் பெற்றது. வாட்ஸ்ஆப்பில் பிபிசி தமிழ் ------------------------------------- நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் பட மூலாதாரம்,GETTY IMAGES பிஎன்ஜி அணிக்கு பாராட்டு மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ரோவ்மென் பாவெல் கூறுகையில் “உண்மையில் பிஎன்ஜி அணிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். எளிதாக திட்டமிட்டு அதை சிறப்பாகச் செயல்படுத்தி நல்லகிரிக்கெட் விளையாடினர். இன்னும் கூடுதலாக 15 ரன்களை பிஎன்ஜி சேர்த்திருந்தால் ஆட்டம் கடினமாக மாறியிருக்கும். பந்துவீச்சில் இன்னும் நாங்கள் முன்னேற வேண்டும். ரஸ்டன் சேஸ் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். நெருக்கடியான நேரத்தில் அவரின் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும் பேட்டிங்கில் கோட்டைவிட்டனர். மேற்கிந்தியத்தீவுகளுக்கு வெற்றிக்கான இலக்கு எளிதாக ஓவருக்கு 7 ரன்கள் சேர்த்தாலே கிடைத்துவிடும் என்று இருந்தது. ஆனால், திட்டமிடல் இன்றி பேட்டர்கள் பொறுப்பின்றி பேட் செய்தனர். அதிலும் நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த ரூதர்போர்ட், கேப்டன் பாவெல், பூரன் இருந்தும் யாரும் நிலைத்து ஆடவில்லை. ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் பிஎன்ஜி கரங்களுக்கு மாறியது. அனுபவமற்ற அணிபோல் பந்துவீசாமல் மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை ரன்கள் சேர்க்க திணறவைக்கும் விதத்தில் பந்துவீசினர். 61 ரன்கள்வரை ஒரு விக்கெட் மட்டும் இழந்து வலுவாக பேட் செய்திருந்த மேற்கிந்தியத்தவுகள் அணி, அடுத்த 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 9-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர்கள் வரை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரன்ரேட்டை பிஎன்ஜி பந்துவீச்சாளர்கள் இறுக்கிப் பிடித்தனர். இந்த 6 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 37 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதுதான் ஆட்டத்தை கடைசி நேர பரபரப்பு வரை இழுத்துச் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES 17-ஆவது ஓவரில் திருப்புமுனை ஆட்டம் அனைத்துமே 17-வது ஓவர்களுக்குப்பின்புதான் திரும்பியது. அதுவரை பிஎன்ஜி அணியின் கரங்களே ஆட்டத்தில் மேலோங்கி இருந்தது. ரஸ்டன் சேஸ், ஆந்த்ரே ரஸல் இருவரும் கடைசி நேரத்தில் கேமியோ ஆடாமல் இருந்திருந்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி உறுதியாகியிருக்கும். 17, 18 மற்றும் 19வது ஓவர்களில் சேர்க்கப்பட்ட ரன்கள்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரஸ்டன் சேஸ் தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சேஸ் 27 பந்துகளில் 42 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டர்கள் அடங்கும். ரஸல் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் அணியின்வெற்றிக்கு உதவிய ரஸ்டன் சேஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 வது ஓவரில் ரூதர்ஃபோர்டை 2 ரன்னில் பிஎன்ஜி கேப்டன் ஆசாத் வாலா ஆட்டமிழக்கச் செய்தபின் 7வது வீரராக ஆந்த்ரே ரஸல் களமிறங்கினார். ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ரஸல் களத்துக்கு வந்தபோது மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் தான்சந்தித்த 4வது பந்தில் சிக்ஸர் விளாசி அழுத்தத்தைக் குறைத்தார். அதன்பின் ஆட்டத்தை சேஸ் கையில் எடுத்துக்கொண்டார். வாலா வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடித்து தோல்வியின் பிடியிலிருந்து தங்கள் அணியை மீட்கும்முயற்சியில் இறங்கினார். மொரியாவின் 19-வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து சேஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஏன் இந்த நிலை? மேற்கிந்தியத்தீவுகள் அணி தற்போது எப்படி இருக்கிறது, பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அடங்கிய அணியாக இருந்தாலும், சர்வதேச அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தாலும் உண்மையில் அந்த அணியின் நிலை, வலிமை என்ன என்பதை பிஎன்ஜி அணி முதல் போட்டியிலேயே அம்பலப்படுத்திவிட்டது. மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் தற்போது பிஎன்ஜி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டு டி20 போட்டியிலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டி20 போட்டிகளை ஆய்வு செய்தால் அந்த அணி பெரும்பாலான போட்டிகளில் சேஸிங்கின்போது தடுமாறியுள்ளதும், பல போட்டிகளில் தோல்வி அடைந்ததும் இருக்கிறது என்று கிரிக்இன்போ தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் 2022ம் ஆண்டு தகுதிச்சுற்றுப்போட்டிகளில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்பே அணிகளை வெல்ல முடியாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி கூட பெறவில்லை, கடந்த 50 ஓவர்கள் உலகக் கோப்பையிலும் அந்த அணி இடம் பெறவில்லை. இந்த நிலை இந்த உலகக் கோப்பையிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடர்ந்து வருகிறது. குறைந்த இலக்கை சேஸிங் செய்ய முயலும்போதுகூட மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் பொறுப்பின்றி விக்கெட்டை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிலும் பிஎன்ஜி பந்துவீச்சாளர் அலி நாவோ உலகக் கோப்பையில் தனது முதல் ஓவர் முதல் பந்தை வீசியபோது, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர் சார்லஸ் தேவையின்றி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். சார்லஸ் அடித்த ஷாட் தேவையில்லாதது, பிரண்ட்ஃபுட் வைத்து ஆட வேண்டிய ஷாட்டை கால்காப்பி்ல் வாங்கி வெளியேறினார். அதன்பின் ஆட்டத்தில் சிறிதுநேரம் மழைக்குறுக்கிடவே சிறிதுநேரம் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அடுத்துவந்த நிகோலஸ் பூரன் தொடக்கத்தில் பேட்டிங்கில் திணறினார் அதன்பின் இயல்புக்கு வந்தார். பாவுவின் 6வது ஓவரில் பூரன் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி விளாசினார். பூரன் தடுமாறிய அதேநேரத்தில் பிரன்டன் சிங் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளேயில் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என வலுவாகவே இருந்தது. ஆனால், கரிக்கோ வீசிய 9-வது ஓவரில் லாங்ஆன் திசையில் பூரன் அடித்தஷாட் கேட்சாக மாற 27 ரன்களில் வெளியேறினார். அதன்பின் கேப்டன் வாலா, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை திணறவிட்டார். நிலைத்து பேட் செய்துவந்த கிங்கை 34 ரன்களி்ல் வாலா தனது சுழற்பந்துவீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளேவுக்குபின், 13வது ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 25 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்துவந்த கேப்டன் பாவெல் 2 பவுண்டரிகள் அடித்தநிலையில் சாட் சாப்பர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரூதர்ஃபோர்டும் 2 ரன்களில் விக்கெட் கீப்பர் டோரிகாவிடம் கேட்ச் கொடுத்து வாலா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஆந்த்ரே ரஸல், ரஸ்டன் சேஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெருமையும் வருத்தமும் பிஎன்ஜி அணியின் கேப்டன் ஆசாத் வாலா கூறுகையில் “ என்னுடைய அணியின் முயற்சிகளை நினைத்து பெருமையாக இருக்கிறது, வெற்றியை நழுவ விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இன்னும் 15 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். நாங்கள் போராடியவிதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம், என் வீரர்களின் செயல்பாடு முழுநிறைவு அளிக்கிறது. நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல இது வாய்ப்பு, சவால் நிறைந்தது. எங்களுடைய வீரர்கள் சிறந்த அணிக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை அளித்தனர்” எனத் தெரிவித்தார். வேகப்பந்துவீச்சாளர் மோரியா, சீசே பாவு ஆகியோர் மட்டும் சிறிது கட்டுக்கோப்புடன் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி இருந்தால், ஆட்டம் நிச்சயமாக பிஎன்ஜி அணியின் பக்கம் சாய்திருக்கும். சீசே பாவு ஓவரில் பூரன் அடித்த 18 ரன்கள்தான் கடைசி நேரத்தில் ஆட்டத்தை தீர்மானித்தது. https://www.bbc.com/tamil/articles/cv224pl4kq1o
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்ப சபையில வடைத்தட்டுப்பாடு வந்திருக்குமோ?!
-
அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான பிரதேசங்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் அக்குரஸ்ஸவில் 283.5 மில்லி மீற்றர் மழையும், சாலவ பகுதியில் 280.5 மில்லி மீற்றர் மழையும், பாலிந்தநுவரவில் 276 மில்லி மீற்றர் மழையும், தெரணகல பகுதியில் 267 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இன்றைய தினமும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/302928
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்ப அண்ணை வடை சாப்பிட்டுக் கனகாலமோ?! நான் நம்பமாட்டன் நீங்கள் எங்களை உசுப்பேற்ற சொல்றது போல இருக்கு! இனி அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க!!
-
சீரற்ற வானிலை காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/302946
-
அமெரிக்காவின் ஒகையோவின் அக்ரோனில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஒருவர் பலி 25க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்
02 JUN, 2024 | 10:21 PM அமெரிக்காவின் ஒகையோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அக்ரோன் நகரில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெலி ஏவ் என்ற பகுதியில் துப்பாக்கிபிரயோக சத்தம் கேட்பதாகவும் பலர் சுடப்பட்டுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்றதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன இதுவரை சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து விபரங்களை கோரியுள்ளனர். நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் இந்த பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் குறித்து தகவல்கள் உள்ளவர்கள் மேலும் வன்முறைகள் பழிவாங்கல் இடம்பெறுவதை தடுப்பதற்காக விபரங்களை வெளியிடவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அவசரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/185154
-
'முஸ்லிம் ஆண் - இந்துப் பெண் திருமணம் செல்லாது' என்ற நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போட்டார் பதவி, பிபிசி செய்தியாளர் 2 ஜூன் 2024, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 ஜூன் 2024, 04:00 GMT இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் படியோ முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மே 27 அன்று தீர்ப்பளித்தது. சிலைகளை வணங்கும் அல்லது நெருப்பை வழிபடும் இந்துப் பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்ய இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்றும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் கூட அத்தகைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த முடிவு சிறப்பு திருமணச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங்களுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் தத்தமது மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணம் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் என்ன வழக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆணும் இந்துப் பெண்ணும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர். திருமணத்திற்குப் பிறகு யாரும் மதம் மாறக் கூடாது என்றும், அந்தந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் இருவரும் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு முன்னதாக திருமண பதிவு அதிகாரியிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய திருமணத்தை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இந்த சட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள், இதுதொடர்பாக திருமண பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பித்த பிறகு திருமண பதிவு அதிகாரி 30 நாட்களுக்கான ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த காலகட்டத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று எந்தவொரு நபரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் திருமணம் பதிவு செய்யப்படாது. இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண், வீட்டிலிருந்து நகைகளுடன் வெளியேறியதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த திருமணத்தை நடத்த அனுமதித்தால், ஒட்டுமொத்த குடும்பமும் சமூகப் புறக்கணிப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் ஆட்சேபனையில் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நீதிமன்றம் என்ன சொன்னது? இந்த திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை முதலில் நீதிமன்றம் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் இத்தகைய திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியது. இதற்குப் பிறகு, தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாத திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டம் கூட சட்டப்பூர்வமாக்காது என்றும் நீதிமன்றம் கூறியது. 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நெருப்பு அல்லது சிலைகளை வழிபடும் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் முஸ்லிம் ஆண் செய்துகொள்ளும் திருமணம் செல்லாது என்று கூறியுள்ளது. இருப்பினும், ஒரு முஸ்லிம் ஆண் யூத அல்லது கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டால், அத்தகைய திருமணம் செல்லுபடியாகும் என்று கருதலாம். இருப்பினும், சிறப்பு திருமணச் சட்டத்தை விட தனிநபர் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றும், தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தம்பதியினர் வாதிட்டனர். ஆனால் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இதற்கு உடன்படவில்லை. திருமணத்திற்கு தடை இருந்தால் இந்த சட்டத்தால் அதை செல்லுபடியாக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், போலீஸ் பாதுகாப்பு தொடர்பான அவர்களது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் இந்த முடிவு சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES குடும்ப விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட பல சட்ட வல்லுநர்கள் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உடன்படவில்லை. சிறப்புத் திருமணச் சட்டம் அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், அந்தந்த மதத்தைத் தொடர விரும்பும் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையேயான திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த முடிவில் சிறப்பு திருமணச் சட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கங்கள், "திருமணம் செய்து கொள்பவர்களுள் எந்தவொரு தரப்பினரின் மதம் அல்லது நம்பிக்கையை பொருட்படுத்தாமல்” சிறப்பு திருமணச் சட்டம் அனைத்து இந்தியர்களின் திருமணத்தையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்பவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், அவர்கள் "திருமணத்திற்காக எந்த பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளலாம்" என்று அது கூறுகிறது. இந்த முடிவு குறித்து வழக்கறிஞரும் குடும்ப சட்ட நிபுணருமான மாளவிகா ராஜ்கோடியா கூறுகையில், “இது சட்டப்படி சரியான முடிவு அல்ல. இது உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும். இந்த முடிவு சிறப்பு திருமணச் சட்டத்தின் உணர்வை பிரதிபலிக்கவில்லை. இச்சட்டம், இருவேறு மதங்களுக்கு இடையேயான திருமணங்களை எளிதாக்கும் நோக்கம் கொண்டது" என்றார். இது குறித்து பெண் உரிமை வழக்கறிஞர் வீனா கவுடா கூறுகையில், “இது நீதிமன்றத்தின் அவதானிப்பாக இருந்தாலும் இது மிகவும் தவறானது. இஸ்லாமிய சட்டத்தில் கவனம் செலுத்தும் அதேவேளையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கம் (இது வெவ்வேறு மதத்தவருக்கு இடையிலான திருமணங்களை எளிதாக்குகிறது) மற்றும் காரணங்களையும் நீதிபதி பரிசீலித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார். பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் குடும்பச் சட்டப் பேராசிரியரான சரசு எஸ்தர் தாமஸும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அவர், “இந்த முடிவு சரியானது அல்ல. இதில், சிறப்பு திருமணச் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இஸ்லாமிய சட்டம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், சிறப்பு திருமணச் சட்டம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது” என்றார். மேலும், “தனிநபர் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடத்த முடியாது என்று இந்தத் தீர்ப்பு தவறாகக் கூறுகிறது. எவ்வாறாயினும், இந்தச் சட்டத்தின் கீழ் ரத்த உறவினர்களுக்கிடையிலோ அல்லது வயது வரம்புகளை பூர்த்தி செய்யாத நபர்களுக்கு இடையிலோ திருமணம் செய்து வைக்க முடியாது என, இச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது” என்றார். நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் இதனால் திருமணங்கள் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணங்களை பாதிக்குமா? அவ்வாஅவ்வாறு நடக்கக் கூடாது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இது வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணத்திற்கான உற்சாகத்தை குறைக்கிறது என்று அவர் நம்புகிறார். வீணா கவுடா கூறுகையில், “இது போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவில் நீதிமன்றத்தின் அவதானிப்பு மட்டுமே. எனவே, இது ஒரு உறுதியான முடிவு அல்ல. திருமணத்தின் செல்லுபடியை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை” என்றார். அதேசமயம் மாளவிகா ராஜ்கோட்டியா, “திருமணத்தை நிறுத்த எந்த உத்தரவும் இல்லை. இந்த முடிவின் அடிப்படையில் பதிவாளர் என்ன செய்கிறார் என்பதை இப்போது நாம் பார்க்க வேண்டும்? பதிவாளர்கள் இன்னும் இரு மதத்தவருக்கு இடையிலான திருமணங்களை பதிவு செய்யலாம். திருமணம் செல்லுபடியாகுமா என்பதை நீதிமன்றம் பின்னர் முடிவு செய்யலாம்” என்றார். பேராசிரியை சரசு எஸ்தர் தாமஸ் கூறுகையில், இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், "சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மிகவும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால், வெவ்வேறு மதங்களை சேர்ந்த தம்பதிகளின் திருமணம் செல்லுபடியாகாது என்பதால், அவர்களின் சட்டப்பூர்வ குழந்தைகள் முறைகேடாக கருதப்படுவதற்கு வழிவகுக்கும். இது இஸ்லாமிய சட்டத்திற்கு மட்டும் பொருந்துவது அல்ல" என்றார். பேராசிரியர் தாமஸ் கூறுகையில், “ எந்தவொரு தனிநபர் சட்டத்தின் கீழும் தடை செய்யப்பட்ட திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். இது தனிநபர் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட மற்ற திருமணங்களை பாதிக்கும். உதாரணமாக, பார்சி சட்டம் வேறு மதத்தவரை திருமணம் செய்வதை தடை செய்கிறது. எனவே திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறார்கள். இந்த முடிவு அதற்கு முட்டுக்கட்டை போடும்” என்றார். பேராசிரியர் தாமஸின் கூற்றுப்படி, இது வெவ்வேறு மதங்களைச் சார்ந்த தம்பதிகளுக்கு நல்லதல்ல. பேராசிரியர் தாமஸ் கூறுகையில், “இந்த முடிவு எதிர்காலத்தில் நடைபெறும் இத்தகைய திருமணங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்தனர். நீங்கள் (நீதிமன்றம்) பாதுகாப்பு வழங்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் கதி என்ன? இதுபோன்ற திருமணங்களை எதிர்க்க உறவினர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது" என்றார். மாளவிகா ராஜ்கோடியா கூறுகையில், “இந்த முடிவின் சாராம்சம் என்னவென்றால், வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணங்களை ஊக்கம் இழக்கச் செய்கிறது. இதுவே மிகவும் கவலையளிக்கிறது" என்றார். உத்தர பிரதேசத்தில் இருவேறு மதங்களைச் சேர்ந்த லிவ் இன் உறவில் இருந்த 12 ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த திருமணமான தம்பதிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவு (திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்) சட்டவிரோதமானது அல்ல என்பதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c722r4xj2yjo
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இரைப்பையா உரப்பையா எங்கட மாமா ஒருவர் நக்கலடிக்கிறவர்! அண்ணை நான் நினைக்கிறன் விலைவாசி கூடினபடியால் வடையை சிறிதாக்கிப் போட்டினமோ?!
-
பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராலியில் கவனயீர்ப்பு போராட்டம்!
02 JUN, 2024 | 09:54 PM பசு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பசுவதை தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரி இன்றையதினம் அராலி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அண்மையில் இரண்டு பசுக்களை கொலை செய்யும் கொலைக் களங்கள் முற்றுகையிட்டு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறித்த போராட்டம் அமைந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை சிவபூமி பசுக்களும் எமது தெய்வங்களே, வெட்டாதே வெட்டாதே கன்றுடன் பசுவை வெட்டாதே, கன்றுத்தாச்சி பசுக்களை வெட்டுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்து, காசாவுக்கு ஒரு நீதி இந்துக்களுக்கு ஒரு நீதியா?" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பசுக்களும் போராட்டத்தில் கலந்திருந்தன. உருத்திரசேனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, மாணவர்கள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185141
-
நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும் அமெரிக்காவின் முன்மொழிவை புறக்கணித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜராஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும், ஹமாஸை அழிப்பதற்கு முன்பாக எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், போர் நிறுத்தத்தை நெதன்யாகு ஆதரித்தால், தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் ஆயுதக்குழு அழித்து, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த திட்டம் ஆறு வார போர் நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறும். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், நிரந்தர “சண்டை நிறுத்தம்”, அமெரிக்கா மற்றும் சர்வதேச உதவியுடன் ஒரு பெரிய புனரமைப்புத் திட்டமும் இந்த மொன்மொழிவின்படி செயல்படுத்தப்படும். நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் சனிக்கிழமை தன் சமூக ஊடக பக்கத்தில், “ஹமாஸை அழிக்காமல், அனைத்து பணயக்கைதிகளையும் மீட்காமல் போரை நிறுத்துவதற்கான இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் நான் இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருக்க மாட்டேன் என நெதன்யாகுவிடம் கூறியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். இதே வார்த்தைகளை பிரதிபலித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர், “ஹமாஸை அழிப்பதற்கான குறிக்கோளை கைவிட்டு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இது. பயங்கரவாதத்திற்கு வெற்றியாகவும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் அமையும் பொறுப்பற்ற ஒப்பந்தம் இது” என தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவுக்கு உடன்படுவதைவிட “அரசாங்கத்தைக் கலைப்போம்” அவர் கூறினார். நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பெஞ்சமின் நெதன்யாகு நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றத்தில் மிகக்குறைந்த பெரும்பான்மையையே பெற்றுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க, 6 இடங்களை கொண்டுள்ள ஈடமார் பென்-கவிரின் ஓட்ஸ்மா யெஹுடிட் கட்சி, 7 இடங்களை கொண்டுள்ள ஸ்மாட்ரிக்கின் மத சியோனிச கட்சி ஆகியவற்றை அவரது கூட்டணி நம்பியுள்ளது. இஸ்ரேலின் செல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான யாயிர் லாபிட், இஸ்ரேல் பிரதமருக்கு விரைந்து தன் ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். அவருடைய யேஷ் அடிட் கட்சி 24 இடங்களை கொண்டுள்ளன. “பென்-கவிர் மற்றும் ஸ்மாட்ரிக் இருவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் நெதன்யாகுவுக்கு எங்களின் பாதுகாப்பு வலை இருக்கும்” என்று அவர் கூறினார். போர் நிறுத்தத்தைஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் நகரில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. இதில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் நெதன்யாகுவை பதவி விலகுமாறு வலியுறுத்தினர். இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டு கொண்டு வருவதற்கான பிரசாரத்தை நடத்திவரும் குழு ஒன்று, இஸ்ரேல் பிரதமர் இதனை ஏற்க மறுத்தால் காஸாவில் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்துள்ளனர். பேரணியின் போது தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைக்க முற்பட்டதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிலர் காவலில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் அரசுக்கு எதிரான பிரசாரக் குழுவினர், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கோரியும் நெதன்யாகு பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும் பேரணிகளில் ஈடுபட்டுவருவதால், டெல் அவிவ் நகரில் இத்தகைய போராட்டங்கள் நிரந்தரமாகிவிட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோ பைடன் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை “இறுதிசெய்யுமாறு” இஸ்ரேல் மற்றும் ஹமாஸிடம் எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மத்தியஸ்தர்கள் சனிக்கிழமை கூட்டறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர். "காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய விவாதங்களில் மத்தியஸ்தர்களாக", "அதிபர் ஜோ பைடன் கோடிட்டுக் காட்டிய கொள்கைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன் அரசாங்கம் “காஸாவுக்கு அதிகப்படியான உதவிகளை வழங்குவோம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் “நாங்களும் அதன்படி செல்வோம்” என, முன்னதாக ஹமாஸ் மூத்த அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், “போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை” என, நெதன்யாகுவின் அலுவலகம் சனிக்கிழமை அறிக்கை வாயிலாக தெரிவித்தது. “ஹமாஸ் ராணுவம் மற்றும் அதன் ஆட்சித்திறன்களை அழித்தல், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், இஸ்ரேலுக்கான அச்சுறுத்தலாக காஸா எப்போதும் இருக்காது என்பதை உறுதி செய்தல்” ஆகிய நிபந்தனைகளை இஸ்ரேல் பட்டியலிட்டுள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முன்னதாக “இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,காஸா பகுதி முழுவதிலும் இருந்து பல பாலத்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ள ரஃபாவில் சண்டை தொடர்கிறது. இதனிடையே, காஸாவின் தெற்குப்பதியில் எகிப்துடனான எல்லையில் உள்ள ரஃபாவில் சனிக்கிழமையும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின. வடக்குப் பகுதியில் உள்ள காஸா நகரில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் 36,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸால் நடத்தப்பட்டு வரும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் முன்னெப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலை தாக்கியதைத் தொடர்ந்து இந்த போர் தொடங்கியது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 252 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/c4nnk874p2ko
-
யாழில் கிருமி தொற்றால் பெண் உயிரிழப்பு!
02 JUN, 2024 | 02:49 PM கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குடும்பப்பெண்ணுக்கு நேற்று சனிக்கிழமை (01) சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு அவதியுற்று, மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இவருக்கு ஈரல் பாதிப்படைந்து அதன் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/185121
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : தீ மூட்டிய இளைஞன் கைது 02 JUN, 2024 | 01:36 PM யாழில் இளைஞனால் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (01) பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது, இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/185119
-
உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வு காணப்பட வேண்டும்; வெளியகத் தலையீடுகள் இனத்துருவப்படுத்தலை அதிகரிக்கும் - அலி சப்ரி
Published By: DIGITAL DESK 7 02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
-
யாழ். பொது நூலக எரிப்பு நினைவு தினம் அனுஷ்டிப்பு
02 JUN, 2024 | 11:24 AM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/185089
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
01 JUN, 2024 | 11:27 PM யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082