Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி: ரி20இல் அடம் ஸம்ப்பா 300 விக்கெட்கள் பூர்த்தி Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 10:40 AM (நெவில் அன்தனி) ஒமானுக்கு எதிராக பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் சற்றநேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியா 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அதேவேளை அப் போட்டியில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் அடம் ஸம்ப்பா சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களைப் பூர்த்திசெய்து மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். மாக்கஸ் ஸ்டொய்னிஸில் அபார சகலதுறை ஆட்டம், டேவிட் வோனரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீரர்கள் ட்ரவிஸ் ஹெட் (12), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (14), க்ளென் மெக்ஸ்வேல் (0) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. அவுஸ்திரேலியா 9ஆவது ஓவரில் 3 விக்கெட்ளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் டேவிட் வோனர், மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டனர். மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் வோனர் 56 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மெஹ்ரான் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 165 ஓட்டங்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அயான் கான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட மெஹ்ரான் கான் (27), அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் (18), ஷக்கீல் அஹ்மத் (11) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/185420
  2. 06 JUN, 2024 | 11:02 AM ரோயல்பார்க் கொலை குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது. ரோயல்பார்க் கொலையாளி டொன் சமந்த ஜீட் அந்தனி ஜயமஹவிற்கு ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின் கீழ் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாமைக்காக ரோயல்பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட இரண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்புகளை நீக்குமாறு மூன்றுநீதிபதிகள் அடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன மேற்படி பிரதிவாதிக்கு பொதுமன்னிப்பை வழங்கியவேளை மனுதாரரின் அடிப்படை உரிமைகளையும் பொதுநம்பிக்கை கோட்பாட்டையும் மீறியுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டு அமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்ப்பை கருத்திற் கொண்டுஇ ஜூட் ஜயமஹாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185424
  3. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார் Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 10:44 AM தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை அரசாங்கம் சேர்த்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் 2024 மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2387/02 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 210 நபர்கள் மற்றும் 15 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. “காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டதும் 2023ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 2335/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின், குழுக்களின் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.” என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தன. இதற்கமைய, கடந்த வருடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீம் உட்பட 91 பேரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு, அஹ்னாப் ஜசீமின் பெயர் முதன்முறையாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் கூறாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீமின் பெயரைச் சேர்த்தமையால், தொழில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையால் அவர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டிருந்தார். https://www.virakesari.lk/article/185417
  4. தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் - உருத்திரகுமாரன் Published By: RAJEEBAN 06 JUN, 2024 | 09:55 AM தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் - என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்காலத்தின் முதலாவது தொலைத்தொடர்பு அமர்வு ஜூன் மாதம் 1ந் திகதி நடைபெற்றது. அதில் சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதில் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தினார்கள். இந்த அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது 1972 அரசியல் அமைப்புச்சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ நாங்கள் தமிழர்கள் பங்குதாரர்கள் அல்ல அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக்கட்டுப்படுத்த முடியாது. கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அத் தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையிதான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகவேதான் இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டுசந்திரிக்காவின் தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்கவில்லை. 2005 இல் ரணில் விக்கிரமசிங்க எங்களிற்கு எதிராக சர்வதேச சதிவலைப் பின்னலை பின்னுவதன் காரணமாக அவர் ஜனாதிபதியாக வருவது தமிழர்களிற்கு நன்மை பயக்காது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்ததனர். சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எப்போதுமே ஒரு உத்தி சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது. நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அவ் அடிப்படையிலேயே சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. இன்று மூன்றுதெரிவுகள் சிறிலங்கா தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன. 1- சிங்களத்துடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளைதருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். 2- ஜனாபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். 3- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் 70 ஆண்டு கால அரசியல் வரலாறு சிங்களத்துடன் எவ்வளவுபேரம் பேசினாலும் சிங்களம் எதனையுமே அமுல் நடத்தாது. சிங்கள புத்திஜீவிகள் மாறிவிட்டார்கள் என்ற ஒது கருத்து இன்றைக்கு முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள்ஆகிவிட்டன. இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ ஒருசிங்கள அரசியல் தலைவரோ ஒரு சிங்கள மாணவத்தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும்இல்லை மன்னிப்பும் கேட்கவும் இல்லை. “அறகளவில்” சிங்களவர்கள் போட்ட கோஷம் கோத்தபாய ஒரு திருடன்என்று ஆனால் கோத்தபாய ஒரு கொலைகாரன் என்றுகூறவில்லை. பேரினவாதம் சிங்கள அரசியல் கலாச்சாரம்தமிழர்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்க சம்மதிக்காது. எனவே பேரம் பேசுவது என்ற கதையை தமிழ்த்தலைவர்கள் கைவிடவேண்டும். சிங்களத்துடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட அமுல் நடத்த முடியவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் இரண்டாவது தெரிவு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண்டுவரலாம்இ சுயநிர்ணயத்திற்கான திரட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறினார். தமிழ் பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை சிங்கள தொலைக்காட்சியில் பேசலாம்என்று கூறி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை சிறுமைப்படுத்தவேண்டாம் என அரசியல் தலைவர்களைகேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன் நாங்கள் இன்று பேசவேண்டிய சமூகம் உலக சமூகம். மேலும் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாடு எமது அடுத்த கட்ட அரசியல் நிகழ்வான பொதுவாக்கெடுப்பிற்கு உதவும் எனவும் கூறினார். நாங்கள் சிங்களத் தலைமையை பகிஷ்கரிக்கின்றோம் என்ற அடிப்படையில் இரண்டாவது தெரிவை தமிழர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் எனக் கூறினார். இதன் மூலம் தமிழ்பொதுவேட்பாளர் நிலைப்பாட்டையும் தமிழ் தேசிய மக்கள்முன்ன்ணியின் பகிஷ்கரிப்பின் நிலைப்பாட்டையும் இணைக்கலாம் தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை தமிழ்மக்களிடம் இருந்து பெறமுடியாமல் இதுக்கக்கூடும். ஆனால் நாங்கள் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கத்தான் வேண்டும். சிலர் சர்வதேச சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை விரும்பமாட்டார்கள் எனக் கூறலாம். நாங்கள் சர்வதேச சக்திகளின் விருப்பிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கத் தேவையில்லை. எங்களுடையஅரசியல் விருப்பங்களை நாங்கள் சர்வதேச சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். இன்றுவரை சர்வதேச சக்திகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களுடைய பூகோள அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்றார்களேயொழிய தமிழர்களிற்கு நீதி வழங்க வேண்டிய செயற்பாடுகளில்ஈடுபடவில்லை. 2015 ஆம் ஆண்டு மகிந்தா சீனாவின் பக்கம்சாய்வதால் நல்லாட்சி வரும் என்று சொல்லி தமிழர்களை பாவித்து சர்வதேச சமுதாயம் மகிந்தாவை நீக்கியது சர்வதேச சமுதாயத்திடம் நாம் பேரம் பேச வேண்டுமேயொழிய அவர்களை சந்தோஷப் படுத்திக் கொள்ளக்கூடாது. https://www.virakesari.lk/article/185418
  5. டி20 உலகக் கோப்பை: பேட்ஸ்மேன்களின் உடலை ரணமாக்கிய நியூயார்க் ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 ஜூன் 2024, 03:22 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் குறைந்த ரன்கள், பேட்டர்களின் உடலை ரணமாக்கும் விக்கெட், சமனற்ற ஆபத்தான ஆடுகளம் ஆகியவற்றைக் கொண்ட நியூயார்க் ஆடுகளத்தில்தான் நேற்று டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 8-வது லீக் ஆட்டம் நடந்தது. நியூயார்க்கில் நேற்று குரூப் ஏ பிரிவில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் 8-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. 97 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி சார்பில் 3 ஓவர்கள் வீசி ஒருமெய்டன், 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இதே மைதானத்தில்தான் வரும் 9ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கு நடந்த இரு ஆட்டங்களும் குறைந்த ஸ்கோர் கொண்டவையாக இருந்தன. பாகிஸ்தான், இந்திய அணியிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் இந்த ஆடுகளத்தில் நடக்கும் போட்டி வல்லவனுக்கு வல்லவன் யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அதேநேரம், பேட்டர்களுக்கு சாதகமில்லாத வகையிலும், பேட்டர்களின் உடலை பதம்பார்க்கும்விதத்திலும் ஆடுகளம் அமைந்திருப்பது ஆபத்தானது என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் கூறுகையில் “ நியார்க் மைதானத்தில் உள்ள ஆடுகளம் ஆபத்தின் எல்லையில் இருக்கிறது” என்று எச்சரித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் எப்படி? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ புதிய மைதானம், புதிய இடம், எப்படி இருக்கும் என்பது விளையாடும்போதுதான் தெரியும். இதில் விழுந்த அடி எனக்கு லேசாக வலிக்கிறது. ஆடுகளம் செட்டில் ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளது. டெஸ்ட் போட்டி பந்துவீச்சை மனதில் வைத்து பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். அர்ஷ்தீப் வலதுகை பேட்டர்களுக்கு அருமையாக ஸ்விங் செய்தார்.” “இங்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்தால், அவர்களுக்குத்தான் வாய்ப்பு. இந்தத் தொடரில் வேறு இடத்தில் ஆட்டம் நடக்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புப் பெறுவார்கள்.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கலாம். இந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை தயார் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் ப்ளெயிங் லெவனில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப்பங்களிப்பு செய்யும் ஆட்டமாக அமைவது அவசியம். பேட் செய்ய கடினமாக இருந்தாலும் நிதானமாக ஆடினால், ரன்களைச் சேர்க்க முடியும்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளத்தில் பிரச்னையா? நியூயார்க்கில் உள்ள இஷன்ஹோவர் பார்க்கில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தில் அமைக்கப்பட்ட விக்கெட்டில் 2-ஆவது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவும் அதிகம் என்பதால், பேட்டர்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் சிரமம். அது மட்டுமல்லாமல் விக்கெட் சீராக இல்லாமல் எந்த இடத்தில் பந்து பிட்ச்சானால் எப்படி பவுன்ஸ் ஆகும் என்பது தெரியாமல் இருந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதே நிலைமை நேற்றைய ஆட்டத்திலும் அயர்லாந்து பேட்டர்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இந்திய அணி பேட் செய்யும்போதும், தொடக்கத்தில் ரோஹித் சர்மா ரன் சேர்க்க மிகவும் தடுமாறி 20 பந்துகள்வரை மெதுவாகவே ஆடினார். ஆனால், ஒரு கட்டத்தில் தீர்க்கமாக முடிவெடுத்து அதிரடியாக ஆடித்தான் ரன்களைச் சேர்த்தார். அதிலும் ஜோஷ்லிட்டில் வீசிய வேகப்பந்துவீச்சில் திடீரென வந்த பவுன்ஸர் ரோஹித் சர்மாவின் தோள்பட்டையை தாக்கவே, வலி தாங்க முடியாமல், ரிட்டயர் ஹர்ட் ஆகினார். ஐசிசி சார்பில் நடக்கும் இதுபோன்ற சர்வதேச போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பரிசோதிக்காமல் விட்டார்களா, இதுபோன்று தரமற்ற ஆடுகளத்தில், குழிபிட்ச்சில் போட்டி நடத்தலாமா என்ற கேள்வியை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக வைத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அடிலெய்ட் ஆடுகள வடிவமைப்பாளர் நியூயார்க்கில் உள்ள இந்த ஆடுகளத்தை அமைப்பதற்காகவே ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட்ஓவல் மைதானத்தின் தலைமை பிட்ச் வடிவமைப்பாளர் டேமியன் ஹோவை பணிக்கு அமர்த்தியது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஆடுகளத்தை வடிவமைத்து “ட்ராப்-இன் பிட்ச்” முறையை கொண்டுவந்து இங்கு ஐசிசி அமைத்தது. இந்தியா-வங்கதேசம் இடையிலான பயிற்சிப்போட்டி நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த ஆடுகளத்தின் வடிவமைப்புப் பணியே நடந்து முடிந்துள்ளது. இன்னும் விக்கெட் இறுகி செட் ஆவதற்குள் ஆட்டம் நடப்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் 16 போட்டிகளில் 8ஆட்டங்கள் நியூயார்க் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. அதில் குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் இந்த விக்கெட்டில்தான் நடக்க இருக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகலில் நடக்கும் ஆட்டமாக இருக்கும். இந்திய அணியும் தனது 3 லீக் ஆட்டங்களை நியூயார்க் மைதானத்தில்தான் விளையாட இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "ஐபிஎல் போட்டி போன்று இருக்காது" இந்த ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “ நியூயார்க்கில் நடக்கும் ஆட்டங்கள் பகலில்தான் இருக்கும், பந்து நன்றாக ஸ்விங் ஆகும், சீமிங் இருக்கும். ஆதலால் பேட்டர்கள் ஐபிஎல் போன்று 240 ரன்கள் வரை அடிக்கலாம் என்பதை மறந்துவிட்டு, இன்னிங்ஸை எவ்வாறு தொடங்கலாம், மோசமான பந்துகளை மட்டும் எவ்வாறு பெரிய ஷாட்களாக மாற்றலாம் என்பதை கணித்து ஆட வேண்டும். 240 ரன்கள் ஸ்கோர் என்பது இந்த ஆடுகளத்தில் சாத்தியமில்லை. பேட்டர்களுக்கு இங்கு நடக்கும் ஆட்டங்கள் வித்தியாசமான சவாலாக இருக்கும்.” என்றார். “ஆடுகளத்தை வடிவமைத்த டேமியன் ஹோவ் பேசியதை கேட்டேன். நியூயார்க் ஆடுகளம், பேட்டர்களுக்கும், பந்துவீ்ச்சாளர்களுக்கும் சமமான போட்டியை உருவாக்கும் விதத்தில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைத்தது. மற்றவகையில் பேட்டர்கள் ஒவ்வொரு பந்தையும் நன்கு மனதில் வைத்து விளையாடும் விதத்தில் இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த ரன் திருவிழாவுக்கு நேர் எதிராகவே இந்த ஆடுகளம் இருக்கும்” எனத் தெரிவித்தார் பான்டிங். பட மூலாதாரம்,GETTY IMAGES 8 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்துவீச்சாளர்கள் நியூயார்க் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து இந்திய அணி நேற்று 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கியது. அயர்லாந்து அணியின் 8 விக்கெட்டுகளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட், அர்ஷ்தீப் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் வெளிப்பட்ட சீமிங், ஸ்விங், பவுன்ஸர்கள் அயர்லாந்து பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தன. பேட்டிங் செய்வதற்கு கடுமையாக போராடிய அயர்லாந்து பேட்டர்கள், 16 ஓவர்களில் சுருண்டனர். இந்திய அணியின் பேட்டர்களும் பேட்டிங் செய்தபோது, அயர்லாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்பு அதிரடிக்கு மாறினார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், சூழலை உணர்ந்த ரோஹித் சர்மா அதிரடியாக 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரோஹித் 52 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜோஸ் லிட்டல் பந்துவீச்சில் தோள்பட்டையில் பந்துபட்டு வலியால் துடித்து ரிட்டயர்ஹர்ட் முறையில் வெளியேறினார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 4ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையையும், 600-வது சிக்ஸரையும் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அயர்லாந்து திணறல் அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தபோது, முதல் இரு ஓவர்கள் எவ்வாறு ஆடுகளம் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடனே அர்ஷ்தீப், சிராஜ் பந்துவீசினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய பந்துகள் மின்னல் வேகத்தில் சென்றது, நிலையற்ற பவுன்ஸ் ஆனது, விக்கெட் கீப்பர் கைகளுக்கு செல்லும்முன்பே ஸ்விங் ஆகியதைப் பார்த்தபின், சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் ஸ்விங் பந்தை அடிக்க முயன்று பால் ஸ்ட்ரிங் 2 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் பால்ப்ரிங் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் அயர்லாந்து 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இந்திய வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து பேட்டர் ஹேரி டெக்டர் கையுறையிலும், தொடைப்பகுதியிலும் பந்தால் அடி வாங்கி பேட் செய்தார். பொறுமையிழந்த டெக்டர் 4 ரன்னில் பும்ரா வீசிய ஷார்ட் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குறிப்பாக காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசி வரும் பும்ரா பந்துவீச்சை தொடுவதற்கே அயர்லாந்து பேட்டர்கள் அஞ்சினர். துல்லியமான லென்த், இன்கட்டர், ஸ்விங் என அயர்லாந்து பேட்டர்களை பும்ரா தனது பந்துவீச்சால் மிரட்டினார். பும்ராவின் ஓவரில் ஒரு பவுண்டரி கூட அயர்லாந்து பேட்டர்கள் அடிக்கவில்லை, 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின் அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அக்ஸர் படேல் பந்துவீச்சில் கூட பேரி மெக்ரத்தி விக்கெட்டை இழந்தார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த அயர்லாந்து 50 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அயர்லாந்து அணியில் கேரத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும். https://www.bbc.com/tamil/articles/cjrry7edr9ko
  6. யாழ் பல்கலையில் பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் Published By: VISHNU 06 JUN, 2024 | 09:34 AM தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் 05ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/185409
  7. Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்க வேண்டும். அது தொடர்பில் இந்த சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து, இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது தற்போது மிகவும் யோக்கியமானதாகும். விசேடமாக உலகளாவிய அதிகார கேந்திர நிலையங்களை பார்க்கும் போது உண்மையாகவே இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது நிச்சயமாக செயற்படுத்தக்கூடியதாகும். அதனால் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிர்ந்தர உறுப்புரிமையை வழங்கவேண்டும் என்ற பிரேரணை இந்த சபைக்கு முன்வைக்கிறேன். பாராளுமன்றத்தில் இருக்கும் 225பேரும் இதனை அனுமதிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/185372
  8. நாடாளுமன்றத் தேர்தல்: தோல்வியைத் தழுவிய பாஜகவின் 13 மத்திய அமைச்சர்கள் பட மூலாதாரம்,SOCIAL MEDIA 5 ஜூன் 2024, 14:44 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த 10க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், இதரவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளோடு இனைந்து பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக அரசின் கடந்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும்கூட இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதில் முக்கியத் தலைவர்களான ஸ்மிருதி இரானி முதல் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் வரை அடங்குவர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பாஜகவின் நிலை என்ன? - தென்னிந்தியாவின் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி6 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மிருதி இரானி (அமேதி) பட மூலாதாரம்,SMRITIIRANI / INSTAGRAM படக்குறிப்பு,ஸ்மிருதி ராணி அமேதி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வென்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 167,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ராஜீவ் சந்திரசேகர் (திருவனந்தபுரம்) பட மூலாதாரம்,RAJEEV CHANDRASEKAR / INSTAGRAM படக்குறிப்பு,ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சரவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் ராஜீவ் சந்திரசேகர், இந்த முறை காங்கிரசின் பிரபலமான தலைவர் சசி தரூரை எதிர்த்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கினார். ஆனால், 358,155 வாக்குகள் பெற்ற சசிதரூர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் சந்திரசேகரை தோற்கடித்தார். ராஜீவ் சந்திரசேகர் ஒட்டுமொத்தமாக 342,078 வாக்குகளை பெற்றுள்ளார். தமிழ்நாடு: திமுக கூட்டணிக்கு கடும் நெருக்கடி அளித்த மக்களவை தொகுதிகளும் அதன் பின்னணியும்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 'தேர்தல் அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி?5 ஜூன் 2024 அர்ஜுன் முண்டா (குந்தி) பட மூலாதாரம்,ARJUN MUNDA / INSTAGRAM படக்குறிப்பு,அர்ஜுன் முண்டா ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டாவும் இந்த முறை தோல்வியைத் தழுவியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி தொகுதியில் போட்டியிட்ட அர்ஜுன் முண்டா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கலி சரண் முண்டாவைவிட 149,675 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். அவர் வாங்கிய மொத்த வாக்குகள் 361,972. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் ஆர்கே சிங் (அர்ரா) பட மூலாதாரம்,R K SINGH / X படக்குறிப்பு,ராஜ்குமார் சிங் பாஜக அமைச்சரவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜ்குமார் சிங் இந்த முறையும் பிகாரின் அர்ரா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவரால் வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) (எல்) கட்சியின் வேட்பாளர் சுதாமா பிரசாத் 529,382 வாக்குகள் பெற்று, 59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகிலேஷ்: உ.பி.யில் பாஜகவின் ராமர் கோவில் உத்தியை உடைத்த சமாஜ்வாதியின் வியூகம்8 மணி நேரங்களுக்கு முன்னர் அஜய் குமார் மிஸ்ரா (கெரி) பட மூலாதாரம்,AJAY MISRA / FACEBOOK படக்குறிப்பு,அஜய் குமார் மிஸ்ரா உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி சம்பவத்தைப் பலரும் மறந்திருக்க மாட்டோம். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் குமார் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உத்கர்ஸ் வர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். உத்கர்ஸ் வர்மா 557,365 வாக்குகளும், அஜய் குமார் 523,036 வாக்குகளும் பெற்றுள்ளனர். பட மூலாதாரம்,KAILASHBAYTU / INSTAGRAM படக்குறிப்பு,கைலாஷ் செளத்ரி கைலாஷ் செளத்ரி (பர்மர்) மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கைலாஷ் செளத்ரி ராஜஸ்தானின் பர்மர் தொகுதியில் களம் கண்டார். ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இருவர் இவரை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிட்டனர். அந்தத் தொகுதியின் வெற்றியாளரான காங்கிரஸ் கட்சியின் உம்மேதா ராம் பெனிவால் 704,676 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளரான 586,500 வாக்குகளையும், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கைலாஷ் செளத்ரி 286,733 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியமைக்க கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியுமா?4 ஜூன் 2024 மகேந்திர நாத் பாண்டே (சண்டௌலி) பட மூலாதாரம்,MAHENDRA NATH PANDEY / INSTAGRAM படக்குறிப்பு,மகேந்திர நாத் பாண்டே மத்திய கனரக தொழில்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் மகேந்திர நாத் பாண்டே உத்தர பிரதேசத்தின் சண்டௌலி தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்துக் களம் கண்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரேந்திர சிங் 474,476 வாக்குகள் பெற்று, 21,565 வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திர நாத் பாண்டேவை வெற்றி பெற்றுள்ளார். மகேந்திர நாத் பெற்ற மொத்த வாக்குகள் 452,911. பட மூலாதாரம்,SADHVI NIRANJAN JYOTI / X படக்குறிப்பு,சாத்வி நிரஞ்சன் ஜோதி சாத்வி நிரஞ்சன் ஜோதி (ஃபதேபூர்) உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தோல்வியைத் தழுவியுள்ளார். இவர் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் இணை அமைச்சர் ஆவார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் நரேஷ் சந்திர உத்தம் பட்டேலைவிட 33,199 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார் நிரஞ்சன் ஜோதி. நரேஷ் சந்திர உத்தம் பட்டேல் 500,328 வாக்குகளையும், நிரஞ்சன் ஜோதி 467,129 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மோதி, யோகி ஆகியோருக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?5 ஜூன் 2024 சஞ்சீவ் பால்யன் (முஸாஃபர் நகர்) பட மூலாதாரம்,SANJEEV BALYAN / X படக்குறிப்பு,சஞ்சீவ் பால்யன் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான சஞ்சீவ் பால்யன் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே முஸாஃபர் நகர் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக் 470,721 வாக்குகள் பெற்று, 24,672 வாக்கு வித்தியாசத்தில் சஞ்சீவை தோற்கடித்தார். சஞ்சீவ் பால்யன் ஒட்டுமொத்தமாக 446,049 வாக்குகளைப் பெற்றுள்ளார். பட மூலாதாரம்,V. MURALEEDHARAN / X படக்குறிப்பு,வி முரளிதரன் வி. முரளிதரன் (அட்டிங்கல்) கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சருமான வி. முரளிதரன் மூன்றாமிடம் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷ் 328,051 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி ஜாய் 327,367 வாக்குகளையும், வி. முரளிதரன் 311,779 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?16 ஏப்ரல் 2024 இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத் துறை வரை: மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள்2 ஏப்ரல் 2024 பட மூலாதாரம்,SUBHAS SARKAR / X படக்குறிப்பு,சுபாஷ் சர்க்கார் சுபாஷ் சர்க்கார் (பங்குரா) மேற்கு வங்கத்தின் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சரான சுபாஷ் சர்க்காரும் தோல்வியடைந்துள்ளார். 609,035 வாக்குகள் பெற்றுள்ள இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அரூப் சக்ரபூர்த்தியைவிட 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். பட மூலாதாரம்,NISITHPRAMANIK / INSTAGRAM படக்குறிப்பு,நிஷித் பிராமனிக் நிஷித் பிராமனிக் (கூச்பெஹார்) மத்திய உள்துறை இணையமைச்சரான நிஷித் பிராமனிக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் தொகுதியில் போட்டியிட்ட இவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியாவிடம் தோற்றுள்ளார். திரிணாமூல் வேட்பாளர் 788,375 வாக்குகளையும், நிஷித் பிராமனிக் 749,125 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? - பிபிசி கள ஆய்வு17 ஏப்ரல் 2024 சென்னை, கோவை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி?20 ஏப்ரல் 2024 பட மூலாதாரம்,L MURUGAN / X படக்குறிப்பு,எல். முருகன் எல். முருகன் (நீலகிரி) தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான எல். முருகன் இந்த முறை நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட வேட்பாளர்களை எதிர்த்துக் களம் கண்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. 232,627 வாக்குகள் மட்டுமே பெற்ற முருகன், 473,212 வாக்குகள் பெற்ற ஆ.ராசாவிடம் 240,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். https://www.bbc.com/tamil/articles/c844d8k8j8po
  9. என்னப்பா கூட்டாளிகள் 1, 2, 3 என அணிவகுத்திருக்கினம்!! Ireland (15.6/20 ov) 96/10 India India chose to field. Current RR: 6.00 • Last 5 ov (RR): 47/3 (9.40)
  10. Ireland (15.2/20 ov) 83/9 India India chose to field. Current RR: 5.41 • Last 5 ov (RR): 34/2 (6.80) Live Forecast:IRE 94 இலங்கையின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை தாண்டிவிட்டார்கள்.
  11. Published By: VISHNU 05 JUN, 2024 | 08:36 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவானது, நேற்றையதினம் கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்தது. குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். இச்சந்திப்பின்போது சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடத்தில் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகின்றார்கள். இருப்பினும் அவர்கள் வழங்கி வருகின்ற ஆணையைக் கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும். அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்து கோண்ட உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை. அரசியலமைப்பில் உள்ள விடயங்களைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தயக்கங்களைத் தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்றது. மேலும் தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆகவே அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தையும் கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் என்றார். தமிழ் பொதுவேட்பாளர் இதேநேரம், வடக்கு,கிழக்கில் பேசுபொருளாகியுள்ள தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் சம்பந்தனிடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் கேள்விகளைத் தொடுத்திருந்தனர். அதற்குப் பதிலளித்த சம்பந்தன், தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது. அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும். சமகால சூழல்களின் அடிப்படையில் தமிழ்மக்களை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதால் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. பொதுவேட்பாளர் மூலோபாயத்தினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்றார். தேர்தலை பிற்போடல் சட்டச் சிக்கல்களும் இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள் தேர்தலை பிற்போடுவதற்கான சூழல்கள் சம்பந்தமாகவும், அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் சம்பந்தமாகவும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தர். அவர், இலங்கையில் ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியன காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றார்கள். உண்மையில் எதிர்வரும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றபோது அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல்கள் நடத்தப்படாத நிலைமைக்கு இடமளிக்கப்போவதில்லை. இதேநேரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அரகலய போராட்டத்துடன் பாராளுமன்றமும், ஜனாதிபதியும் மக்களின் ஆணையை இழந்து விட்டார்கள். அதன் காரணமாகவே ஜனாதிபதியும், பிரதமரும் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்கள். அவ்விதமான நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் தேர்தல் நடத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேநேரம், ஜனாதிபதி தற்போது நான்கு ஆண்டுகள் தான் பதவியிலிருந்தார். அவர் தனக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது என்ற அடிப்படையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கின்றார். ஆனால் அவரால் அவ்விதமாகத் தேர்தலை பிற்போட முடியாது. அதற்குச் சட்டத்தில் எந்த இடமும் வழங்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் அவரால் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/185405 ஐயாவையே பொதுவேட்பாளர் ஆக்கினால் சில நேரம் ஒத்துக்கொள்ள வாய்ப்பிருக்கு!
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி பதவி, பிபிசி நியூஸ், இஸ்லாமாபாத் 5 ஜூன் 2024, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராவது பற்றி பாகிஸ்தானிடம் இருந்து அவ்வளவு உற்சாகமான கருத்துகள் வெளியாகவில்லை. நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார் என்பதை வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தவர்களால் உணர முடிகிறது. இருப்பினும் பாஜக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகளின் எதிர்கால திசை எப்படி இருக்கும், அதன் சாத்தியமான விளைவுகள் ஆகியவை குறித்தே பாகிஸ்தானில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி. மறுபுறம் பொதுமக்கள் இதுபற்றிப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார். எல்லை தாண்டிய அரசியல் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தானியர்கள் பொதுவாக ஆர்வமாக இருப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை மோதி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது தலைப்புச் செய்தியே தவிர வேறு ஏதும் இல்லை. வழக்கமான அக்கறையின்மை மற்றும் இந்திய அரசியலைப் பற்றிய புரிதலின்மை தவிர இந்த ஆர்வமின்மைக்கு மற்றொரு காரணம், நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடி. மக்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியத் தேர்தல் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்: அதிமுகவின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதா?4 ஜூன் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பிரதமர் தனது தேர்தல் பேரணிகளின் போது பாகிஸ்தானை இழிவுபடுத்திப் பேசியது பாகிஸ்தான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் தேர்தல் பிரசாரத்தின்போது மோதி இந்திய முஸ்லிம்களை குறிவைத்தார் என்று கூறப்படுவதை அடுத்து, அவர்களின் நல்வாழ்வு குறித்த கவலை பாகிஸ்தானியர்களிடையே காணப்படுகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது இந்திய முஸ்லிம்களுக்கு நல்ல செய்தியல்ல என்பது இங்கு (பாகிஸ்தான்) நிலவும் கருத்து. அடுத்து வரும் பாஜக அரசு அவர்களை எப்படி நடத்தும்? இங்குள்ள மக்கள் அதை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இந்திய பிரதமர் தனது தேர்தல் பேரணிகளின்போது பாகிஸ்தானை 'இழிவுபடுத்திப் பேசியது' பாகிஸ்தான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அவரது தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை. ஆயினும்கூட மோதி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சில சமூக ஊடக பயனர்கள் பாராட்டுகிறார்கள். நரேந்திர மோதியின் ஆட்சியின் கீழ் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இரு நாடுகளும் கடினமான அணுகுமுறையை எடுத்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறை வளைந்து கொடுப்பதாக இல்லை. இந்த சூழ்நிலையில், பாஜக அரசின் பாகிஸ்தானுக்கு எதிரான தோரணை தொடரும் என்று இஸ்லாமாபாத் கருதுகிறது என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸின் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் குர்ரம் அப்பாஸ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுகமாக ஆதரவளிக்கும் குர்ரம் அப்பாஸ் கருதுகிறார். பாகிஸ்தான் மிகவும் ஆவேசமான மற்றும் அதிக தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை சமாளிக்க வேண்டும். மேலும் காஷ்மீர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீதான பதற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்று டாக்டர் அப்பாஸ் மேலும் தெரிவித்தார். “இந்த கட்டத்தில் பாகிஸ்தானுடனான உறவை இயல்பாக்குவதில் பொருளாதார அல்லது அரசியல் பலன் எதுவும் இல்லை என்று இந்தியாவில் அரசியல் மற்றும் செயல் உத்தி வட்டாரங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரிகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வீடு புகுந்து தாக்குவோம்" (அடுத்த நாட்டுக்குள் புகுந்து தாக்குவது) என்று பலமுறை மிரட்டல் விடுத்தார். இது தேர்தல் பரப்புரையின் போது பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய கொள்கை. அதனால் பகைமைப் போக்கு தொடரும். பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் கொள்கைகளை இந்தியா தொடர்ந்து முன்வைக்கும்.” பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுகமாக ஆதரவளிக்கும் என்றும் குர்ரம் அப்பாஸ் கருதுகிறார். பாகிஸ்தானின் மற்றொரு கவலை, தனது மண்ணில் தன் குடிமக்கள் இந்திய கையாட்களால் கொல்லப்படுவது ஆகும். “பாகிஸ்தானைத் தாக்குவது பாஜகவுக்கு உதவிகரமாக இருக்கும் வரை, அரசியல் ரீதியாக எந்தவொரு இயல்பு நிலையையும் எதிர்பார்ப்பது சிந்தனையில் மட்டுமே சாத்தியம். இருப்பினும், எல்லையில் படைகுறைப்பு யோசனை, தூதாண்மை முயற்சிகள் மற்றும் பரஸ்பர நண்பர்கள் மூலம் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கும்" என்று டாக்டர் அப்பாஸ் மேலும் கூறினார். இந்தியாவுடன் வர்த்தகத்தைத் திறப்பது குறித்தும் பாகிஸ்தான் கோடிட்டுக்காட்டியுள்ளது. இருப்பினும் அவ்வாறு நடப்பது சந்தேகமே என்று டாக்டர் குர்ரம் அப்பாஸ் கருதுகிறார். “வர்த்தகம் தொடர்பாக இஸ்லாமாபாத் காத்திருந்து செயல்படும் கொள்கையை கடைப்பிடிக்கும். வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது மறுபக்கத்திலிருந்து வரும் சமிக்ஞையைப் பொறுத்தது. நேர்மறையான அறிகுறி இருந்தால், பாகிஸ்தான் உடனடியாக செயல்படும்.” “நிலைமையை இயல்பாக்குவது நடக்க இயலாத ஒன்றாகவே தோன்றுகிறது”: தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்துள்ளன?4 ஜூன் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்புப் பேச்சு இந்திய வாக்காளர்களை ஈர்க்கிறது. அவர்கள் அதை தொடர்ந்து பறை சாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக அதை தந்திரமாகப் பயன்படுத்தி மக்கள் ஆதரவை பெறுகின்றனர் என்று இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவின் இந்தியா குறித்த ஆய்வாளரான மரியம் மஸ்தூர் கருதுகிறார். 2019 இல் புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வைத் தூண்டி மோதி தனது ஆதரவாளர்களைத் திரட்டினார் என்று மரியம் கூறுகிறார். “பல ஆண்டுகளாக இந்திய வாக்காளர்களிடையே பாகிஸ்தானுக்கு எதிரான உணர்ச்சியை மோதி தூண்டிவிட்டுள்ளார். இந்தப் பின்னணியில், இந்தியாவில் உள்ள எந்த அரசியல் அமைப்பும் இஸ்லாமாபாத்துடன் இயல்பு நிலையைப் பற்றி பேசத் துணியும் என்று நான் கருதவில்லை.” இதற்கு நேர்மாறாக சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசியலில் இந்தியா ஒரு விஷயமாக இருக்கவில்லை என்று மரியம் கூறினார். இருப்பினும் இப்போதும் சிறிதளவு நம்பிக்கை இருப்பதாக டாக்டர் குர்ரம் அப்பாஸ் வாதிடுகிறார். ”பிரதமர் மோதியின் கடைசி பதவிக்காலம் இதுவாக இருக்கலாம். எனவே அவர் தனக்கென ஒரு மரபை (legacy) உருவாக்க முயற்சிப்பார் என்று பலர் நம்புகிறார்கள். அவர் தனக்காக எந்த வகையான மரபை உருவாக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் இருக்கும். அது சமாதானத்தை ஏற்படுத்துபவர் என்ற நேர்மறையான மரபா அல்லது பிரித்தாளும் எதிர்மறையான மரபா?" இந்திய தேர்தல் முடிவுகளை அமெரிக்கா எப்படி பார்க்கிறது? பட மூலாதாரம்,ANI அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் பிரிவின் நிபுணர், பேராசிரியர் முக்தாதர் கான் கூற்றுபடி: அமெரிக்கா அரசாங்கம் இந்தியா தொடர்பாக தெளிவான கொள்கைகளைக் கொண்டுள்ளது. இந்தியா உடனான உறவை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது. குறிப்பாக சீனாவை கையாள்வதில் இந்தியாவின் பங்கு முக்கியம் என்று அமெரிக்கா எண்ணுகிறது. இருப்பினும், துளசி கபார்ட் போன்ற சில பழமைவாத தலைவர்களைத் தவிர, அமெரிக்க அரசியல்வாதிகள் பலருக்கு மோதியை பிடிக்கவில்லை. அதேநேரம் பல அமெரிக்க தலைவர்கள் இந்தியாவுடனான உறவு குறித்து `இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உறவு’ என்று கூறியுள்ளனர். சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா முற்றிலுமாக அமெரிக்கா பக்கம் நின்றால், சர்வதேச அளவில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கம் 21ஆம் நூற்றாண்டு முழுவதும் நீடிக்கும். ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கு எதிராக மாறி, சீனா மற்றும் ரஷ்யாவுடன் கைகோர்த்தால், மேற்கத்திய ஆதிக்கம் இந்த நூற்றாண்டுடன் முடிவுக்கு வரும். அதனால் அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியம். தற்போது மோதியை சமாளிப்பது வெளிநாடுகளுக்கு மிகவும் கடினமாகிவிட்டது, ஏனெனில் சமீபகாலமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் தீவிரமாகிவிட்டது. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டில் நடந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அந்த நேரத்தில் மோதி பலவீனமாகி விடுவார் என சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். மோதி கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு சென்ற சமயத்தில், சர்வதேச அளவில் அவரது மதிப்பு உயர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் மோதி அரசாங்கத்துக்கும் அந்தஸ்து பாதிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை பலவீனமாகியதாக கருதப்படுகிறது. மறுபுறம், வெளியுறவுக் கொள்கை குறித்து ராகுல் காந்தி, சசி தரூர் போன்ற தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இம்முறை மோதி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இனி வரும் காலங்களில் அவர் தன்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது அமெரிக்க ஊடகங்களின் கருத்து. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பலர், இந்த முறையும் `மோதிஜி’ பிரதமராக வருவார் என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cv22qdlz851o
  13. LIVE 8th Match, Group A, New York, June 05, 2024, ICC Men's T20 World Cup Ireland (11/20 ov) 49/7 India India chose to field. Current RR: 4.45 • Last 5 ov (RR): 23/5 (4.60) Live Forecast:IRE 74 ஐபிஎல் பார்த்துவிட்டு உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்ப்போர் இந்த பந்துவீச்சாளர்களா இவ்வளவு பயங்கரமாகப் போடுகிறார்கள் என வியக்கப் போகினம்!
  14. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள்! 05 JUN, 2024 | 07:16 PM உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு இன்று புதன்கிழமை (05) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் சுற்றாடல் சார் கண்காட்சி இதன்போது நடைபெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக 'நலம் மிகுந்த நாடு' எனும் கருப்பொருளுக்கு அமைவான கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பாடல், கலை கலாசார நிகழ்வுகளும் சுற்றாடல் சார்பான உரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டன. இன்றைய நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி, மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/185403
  15. 05 JUN, 2024 | 07:17 PM ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை இன்று புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி), மாகாண காணி ஆணையாளர், யாழ். பிராந்திய பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் என பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றும் பணி, மீள்குடியேற்றம், இயற்கை வளங்கள், முதலீட்டுத் திட்டங்கள், முன்னுரிமைபடுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள், பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் அதிகம் தேவைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அவர்களுக்கான உள்ளூர், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும், நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் கூறினார். அத்துடன் புலம்பெயர் உறவுகள், வடக்கிலுள்ள தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் உறவுகளால் வடக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச், முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன், சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளும்போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை எனவும் அவர் இதன்போது வினவினார். மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் எனவும் ஆளுநர் கூறினார். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் செயற்படும் சர்வதேச அமைப்புகள் வடக்கில் இதுவரையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், அனைத்து துறைகளுக்குமான அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185402
  16. சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது. சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது. ஆண் விந்துவில் போதிய உயிரணுக்கள் இல்லாமை, இருக்கும் உயிர் அணுக்களும் போதிய சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல், பெண்ணின் உடலில் எழும் எதிர்ப்புச் சக்தி ஆணின் விந்தணுக்களைச் செயலிழக்கச் செய்தல்,விரையில் அடிபடுதல், விரையில் ரத்தக் கட்டி, விரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ஆணுக்கு உயிர் அணுக்களில் எதிர்ப்பு சக்தி உண்டாகி இதனால் கரு தங்காது. அப்படியே கரு உருவானாலும் கருப்பையில் பதிந்து வளராமல் போகலாம். அப்படியே வளர்ந்தாலும் சில சமயம் அது உயிரற்ற கருவாகவும் இருக்க வாய்ப்புண்டு. கருப்பை வாயில் சுரக்கும் திரவத்திலும், கருமுட்டை இருக்கக்கூடிய திரவத்திலும் கூட இந்த எதிர்ப்பு சக்தி உண்டு. இதனை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து முறியடித்து விடலாம். தற்போது சோதனைக் குழாய் முறையில் கரு, கருப்பையில் பதிந்து வளர்வது 20 முதல் 30 சதவிகிதமாக உள்ளது. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் கரு நிலையிலேயே சிதைந்து விடுவதாலும், பிறந்தபிறகு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு காரணமாக இறந்து விடுவதாலும் ஆண்குழந்தைகள் பிறப்புக் குறையக் காரணமாகிறது. பெண் குழந்தைகளுக்கு எதையும் தாங்கும் சக்தி கருவிலேயே உருவாகிவிடுகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் வரை இயற்கைக் கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம். அதன் பின்னும் குழந்தைப் பேறில்லாவிட்டால் மருத்துவரை அணுகலாம். இதுவரை பெண்களுக்குக் குறைபாடு இருந்ததால் சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி அதைக் கருப்பையில் செலுத்திக் குழந்தைகள் உருவாக்கப்பட்டன. இப்போது ஆணில் உயிர் அணுவில் அசைவோ, சுறுசுறுப்போ இல்லாவிட்டாலும் இண்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் முறை மூலம் பெண்ணின் கரு முட்டையை ஒரு நுண்ணிய ஊசியினால் பிடித்து மற்றொரு மெல்லிய கண்ணாடி ஊசியின் மூலம் வீரியம் இல்லாத உயிர் அணுவை எடுத்துப் பெண் முட்டையினுள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகின்றது. பிறந்த உடனேயே ஆண்குழந்தைக்கு விரைக்கொட்டை கீழே இறங்காமல் இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் அறுவை சிகிச்சை செய்து அதைச் சரியான நிலையில் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படும். இதேபோல் விந்து உற்பத்தி இல்லாவிட்டாலும் இம்மருத்துவ முறைகளால் பயன் இல்லை. இடுப்பு அழற்சி நோய், பிறப்புறுப்பு நோய்கள், நார்த்திசுக் கட்டிகளால் ஏற்படும் ஃபைப்ராய்டு எனப்படும் புற்றுநோய், நீர்த்திசுக் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாற்றம், கருப்பை நீக்கம், எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையைப் பாதிக்கும் பிரச்சனை. இவற்றாலும் கர்ப்பம் தரிப்பது சிரமம். இதனால் தவறான திசு வலி ஏற்பட்டுக் கருவுறுதல் சிரமமாகும். எண்டோமெட்ரியோஸில் ஏற்பட்டால் கருப்பையின் உட்புறம் வளரவேண்டிய திசுக்கள் கருப்பையின் வெளியே, பின்னால், குடல்கள், சிறுநீர்ப்பை, இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள், ஃபலோபியன் குழாய்களில் வளரும். இதனால் திசுக்கள் தடித்தல் உடைதல் ஏற்பட்டு அதிக இரத்தப் போக்கு ஏற்படும். ஆனால் சிக்கிய திசுக்கள் வெளியேறாமல் அந்தப் பகுதியை எரிச்சலடையச் செய்து இறுதியில் வடுக்களுக்கு வழிவகுக்கும். இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படும். எண்டோமெட்ரியோஸிஸால் வலி மிகுதல், உடலுறவின் போது வலி, மாதவிடாயின் போது மற்றும் இடைப்பட்ட காலத்திலும் இரத்தப் போக்கு, மனச்சோர்வு, தூங்க இயலாமை, பாலியல் ஆசை குறைதல், மலட்டுத்தன்மை, குமட்டல், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் மூட்டுவலி ஆகியன உண்டாகின்றன. இதற்கு வலி மருந்துகள், பேட்ச்கள் மற்றும் பிறப்புறுப்பு வளையங்கள் போன்ற ஹார்மோன் சிகிச்சைகள், ப்ரோஜெஸ்டின் – ஒன்லி மாத்திரைகள் மற்றும் டானசோல், செயற்கை ஸ்டீராய்டு ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன. பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவை மாதாதிர சுழற்சியை நிறுத்திவிடும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறியவும் கூடுதல் திசுக்களை அகற்றவும் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகின்றது. மயோமெக்டோமி என்பது கருப்பையின் ஆரோக்கியமான திசுக்களை வெளியே எடுக்காமல் நார்த்திசுக் கட்டிகளை அகற்ற மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை. மயோமெக்டோமிக்குப் பிறகும் பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியும். மயோலிசிஸ் என்பது நார்த்திசுக்கட்டிகளில் ஒரு ஊசி செருகப்பட்டு லேப்ராஸ்கோபி மூலம் வழிநடத்தப்படுகிறது. மின்சாரம் அல்லது முடக்கம் மூலம் நார்த்திசுக்கட்டிகள் அழிக்கப்படுகின்றன. கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் (UFE) என்பது நார்த்திசுக் கட்டிக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களில் ஜெல் துகள்களைச் செலுத்தி இரத்த விநியோகத்தைத் தடுக்கப் பயன்படுகின்றது. இதனால் நார்த்திசுக் கட்டி சுருங்கும். நார்த்திசுக் கட்டிகள் கொண்ட பெண்களும் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது சிசேரியன் மூலம் குழந்தைப் பிறக்கும் அபாயம் மற்றவர்களை விட ஆறுமடங்கு அதிகம், நஞ்சுக் கொடி சீர்குலைவு, யோனி சரிவரத் திறக்காமை, பிரசவத்துக்கு முன் நஞ்சுக்கொடி கருப்பையின் சுவரில் இருந்து உடைந்து விடுவது, இது நிகழும்போது கருவுக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருத்தல், குறைப்பிரசவம், போன்றவை நிகழலாம். ஹிஸ்டரோசல் பிங்கோகிராம் என்பது பெண்களின் கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு இமேஜிங் செயல்முறை. கருப்பையில் செலுத்தப்படும் கதிரியக்கச் சாயத்தைப் பயன்படுத்தி எக்ஸ்ரே மூலம் காட்சிப்படுத்தப்படும் முறையாகும். பெண்களில் கருவுறாமை என்பது ஹார்மோன், உருவக் கட்டமைப்பு மற்றும் தம்பதிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள் சார்ந்ததாகும். கோல்போஸ்கோபி என்பது கருப்பை வாய், பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்புக்குழாய் ஆகியவற்றை உருப்பெருக்கிக் கருவி மூலம் ஆய்வு செய்யப் பயன்படுகின்றது. டி&சி என்பது டைலேஷன் மற்றும் க்யூரேட்டேஜ் என்பது கருப்பை வாயை விரிவுபடுத்துவதையும், கருப்பைப் புறணியின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதையும் மேலும் கருப்பையின் உட்பக்கத்தை உரசித் தேய்த்தல் மற்றும் துருவித் தூய்மையாக்குவதையும் குறிக்கின்றது. ஆரம்பகால கருக்கலைப்பு மற்றும் கருப்பையில் எஞ்சி இருக்கும் திசுக்களை அகற்ற இது பயன்படுகிறது. மேற்கண்ட சோதனைகள் மூலம் கருத்தரிக்காமைக்கான காரணங்களைக் கண்டறித்து சிகிச்சை மேற்கொண்டால் அனைவருக்குமே கருத்தரிக்கும் வாய்ப்பு உருவாகும். http://honeylaksh.blogspot.com/2024/06/17.html
  17. யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது - தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோருகின்றனர் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 05:21 PM 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன்பொலிஸார்வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விவகாரம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இரண்டாவது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகின்றது. இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தரபாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிஸ் தளபதி டொமினிக் மேர்பி இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய பாரதூரமான சம்பவங்களை போல இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இந்த சம்பவம் குறித்து தகவல்கள் உள்ளவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்களை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம் நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. இந்த விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித்தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர், குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் - பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பிணையின் கீழ் உள்ளார் இது 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். 2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார், விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/185396
  18. Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ பிள்ளைகளுக்கோ பயனற்றது. பொருத்தமற்ற கல்வி முறைமையினால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது : கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வித்துறை இன்று வரை வழமைக்கு திரும்பவில்லை. இந்த காலப்பகுதியில் பொதுப் பரீட்சைகளை நடத்த முடியாமல் போனது. கற்றல் நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியாமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. இதனால் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கல்வித்துறையில் ஆசிரியர்கள் முதலானோரின் சம்பளம் தொடர்பான முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். இந்நிலையில், நடைமுறை கல்வி முறைமை தற்போதைய பிள்ளைகளுக்கு பொருத்தமானதாகவும் இல்லை. இந்த முறைமையால் நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ, உலகத்துக்கோ எந்தப் பிரயோசனமும் இல்லை. பொருத்தமான சிறந்த கல்வி முறை இருக்குமானால், நாட்டின் பிள்ளைகள் இந்தளவுக்கு பிரச்சினைகளை எதிர்நோக்கமாட்டார்கள். உளவியல் ரீதியில் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் மற்றைய நாடுகளில் எப்படி கல்வி முறைமை உள்ளது என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. 10 வயது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் என்று கூறி எந்தளவுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. சிறந்த பாடசாலைக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையே இது. கிராமிய பாடசாலைகளில் வசதிகள் இருந்தால் ஏன் இந்த நிலைமை ஏற்படப்போகிறது? வளங்கள் பகிரப்படுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் கிடைக்காத பாடசாலைகளும் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/185395
  19. தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் - தியாகராஜா நிரோஷ் 05 JUN, 2024 | 05:27 PM போராட்ட பயணப்பாதையில் இனத்துக்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தியாகி பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவுநாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபூணுகின்றோம். "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 05 ஜூன் 1975ஆம் ஆண்டு சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் இச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இன விடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகிறது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூருகிறது. அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழியிலான அணுகுமுறைகள் பயனற்றுப்போன சூழ்நிலையில், அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப் போராட்ட வீரனாகவே பொன்.சிவகுமாரன் செயற்பட்டார். பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப் போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகிறது. தமிழ் மாணவர்களுக்கு எதிராக திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்துக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம்" என்றார். https://www.virakesari.lk/article/185389
  20. என்னக்கா நீங்களும் சொல்லேல, @suvy அண்ணையும் சொல்லேல! பாப்பம் வேறு சாத்திரிமார்😊 ஏதும் அறியத்தருவினமோ என்று!
  21. 05 JUN, 2024 | 04:31 PM பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 1975 ஜூன் 05ஆம் திகதி சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் அச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு, உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில், அச்சிலை மீள எடுத்து, முன்பிருந்த பகுதி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. இந்த சிலையை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் திறந்துவைத்தார். https://www.virakesari.lk/article/185386
  22. அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம் 05 JUN, 2024 | 04:21 PM இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்துள்ளதாவது- இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதானி கிரீன் எனர்ஜி (ஸ்ரீலங்கா) லிமிடெட் மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் இரண்டு காற்றாலைகளுக்கு தற்காலிக அனுமதியைப் பெற்றது. முக்கியமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு 2024 மே 6 ம் திகதி அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த விலைக்கும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் தற்போதைய உலகளாவிய விலைக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. மேலும் உலகின் இடம்பெயர்ந்த பறவைகளின் முக்கியமான பாதையான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத தீங்கு விளைவிப்பதாக சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கரிசனை எழுப்பப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க விடயங்கள் காரணமாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 11 விண்ணப்பங்களை முக்கிய அரச அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் அமைச்சரவை அலுவலகம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நிதி அமைச்சு நிலையான எரிசக்தி அதிகாரசபை மத்திய சுற்றாடல் அதிகாரசபை இலங்கை மின்சார சபை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன. இந்த விண்ணப்பங்கள் பின்வருவனவற்றைப் பற்றிய தகவல்களைத் கோருகின்றன: 1. விலைமானுக்கோரல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வத் தன்மை: இலங்கை அரசாங்கம் விலைமானுக்கோரல்களை மேற்கொண்டதா அல்லது முன்மொழிவுகள் பெறப்பட்டதா என்பது குறித்த விவரங்கள். 2. மதிப்பீடு மற்றும் தேர்வு செயன்முறை: மதிப்பீடு மற்றும் தேர்வு செயல்முறையானது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அடிப்படை நியமங்கள் தெளிவுபடுத்துதல் விலைமானுக்கோரல்களின் மதிப்பீடு மற்றும் விலைமானுக்கோரலில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம்/ நபர் தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் நபர்களை அடையாளம் காண்பது மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டமானது அரசாங்கத்திற்கு-அரசாங்கம் இடையேயான ஏற்பாடா என்பது பற்றி தெளிவுபடுத்துதல். 3. விலை நிர்ணயம் மற்றும் செலவு நன்மைகள்: இலங்கைக்கான எரிசக்தி மற்றும் செலவு நன்மைகளை நிரூபிக்கும் ஆவணங்கள் திட்டத்திற்காக தீர்மானிக்கப்பட்ட அலகு விலை மற்றும் சந்தை விகிதங்களை விட அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். 4. தேவை மற்றும் அபாய மதிப்பீடுகள்: திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தேவைகளின் மதிப்பாய்வு மற்றும் அபாய மதிப்பாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் சாத்தியமான அபாயங்களை தவிர்க்கும் முறைகள். 5. முடிவெடுக்கும் செயன்முறை: கோரப்படாத திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் முன்மொழிவு கோரிக்கைகளுக்கான பதில்கள் மற்றும் முடிவெடுக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்கள் தகவல்தொடர்புகள் பகுப்பாய்வுகள் மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள்ஃகுறிப்புகள் ஆகியவற்றின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதிகள். 6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பகுப்பாய்வு மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதற்கான முடிவை விவரிக்கும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள். 7. காணி கையகப்படுத்துதல்: மன்னார் மற்றும் பூநகரியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா காணிகள் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுகிறதா? கையகப்படுத்த அனுமதிக்கப்பட்ட காணிகளின் அமைவிடம் பரப்பு மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். இந்த தகவல் கோரிக்கைகளில் பலவற்றிற்கு இதுவரை முழுமையான மற்றும் சரியான நேரத்தில் பதில்கள் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகளிடம் மேன்முறையீடு செய்வதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நமது நாட்டின் வளங்களின் பாதுகாவலராகக் கருதப்படும் அரசாங்கம் இந்த முக்கியமான திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/185385

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.