Everything posted by ஏராளன்
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
நேபாளத்தை 6 விக்கெட்களால் வென்றது நெதர்லாந்து Published By: VISHNU 05 JUN, 2024 | 02:40 AM (நெவில் அன்தனி) டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) மிகவும் இறுக்கமாக நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது. நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே நெதர்லாந்து வெற்றிபெற்றது. அனுபவசாலியான மெக்ஸ் ஓ'தௌத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி அடையச் செய்தார். அவரைவிட விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர். 18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது ஓ'தௌத் கொடுத்த இலகுவான பிடியை நேபாள அணித் தலைவர் பவ்டெல் தவறவிட்டார். அடுத்த ஓவரில் அதிரடியாகக் துடுப்பெடுத்தாடிய ஓ'தௌத், பாஸ் டி லீட் ஆகிய இருவரும் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சோம்பால் காமி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அபினாஷ் பொஹாரா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட காரண் கே.சி. 17 ஓட்டங்களையும் குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை. பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டிம் ப்ரிங்ள் https://www.virakesari.lk/article/185340
-
மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள் 4 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இறுதி முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்டிஏ* 292 58 என்டிஏ (பாஜக கூட்டணி) seats, 292 58 seats lost since 2019 இந்தியா** 234 149 இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 234 seats, 149 seats gained since 2019 மற்றவை 17 90 மற்றவை 17 seats, 90 seats lost since 2019 2019 உடன் ஒப்பிடும்போது ஏற்பட்டுள்ள மாற்றம் *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி முழு முடிவுகளையும் பார்க்க நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்த 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்என்ன, அடுத்த 2 இடங்களை பெற்ற வேட்பாளர்களின் வாக்குகள் என்ன என்பது குறித்து இங்கே காணலாம். சந்திரபாபு நாயுடு பாஜகவை ஆட்டுவிப்பாரா? தெலுங்கு தேசத்தின் வியூகம் என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்), 7,96,956 இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக), 2,24,801 மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக), 2,23,904 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக), 4,97,333 இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ), 1,58,111 மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக), 1,13,318 படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), 5,16,628 இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக), 2,90,683 மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக), 1,72,491 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக), 4,13,848 இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக), 1,69,159 மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக), 7,20,16 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக), 7,58,611 இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) 2,71,582 மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 2,10,110 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக), 586044 இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக), 364571 மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக), 164931 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக), 563216 இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக), 256657 மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக), 202325 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக), 568692 இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக), 352990 மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக), 117682 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்), 492883 இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக), 300397 மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக), 214125 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ. மணி (திமுக), 432667 இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக), 411367 மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக), 293629 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக), 547379 இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக), 313448 மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக), 156650 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக), 500099 இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக), 291333 மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக), 236571 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக), 477033 இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக), 406330 மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக), 181882 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக), 561589 இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக), 507805 மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி), 73652 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக), 566085 இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக), 495728 மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக), 127139 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக), 462036 இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக), 432924 மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக), 104690 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக), 562339 இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக), 325773 மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ), 82796 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 472739 இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக), 346811 மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக), 185322 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக), 473212 இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக), 232627 மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக), 220230 படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக), 568200 இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக), 450132 மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), 236490 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக), 533377 இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக), 281335 மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக), 223354 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக), 670149 இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக), 226328 மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக), 112503 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்), 534906 இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக), 368090 மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக), 102482 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக), 542213 இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக), 229119 மூன்றாம் இடம்: ராஜேஷ் (நாம் தமிழர் கட்), 107458 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக), 603209 இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக), 214102 மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக), 161866 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), 455053 இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக), 269157 மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக), 205244 படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக), 505084 இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக), 401530 மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக), 168493 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்), 518459 இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக), 247276 மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக), 166437 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 465044 இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக), 256087 மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி), 131294 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக), 502245 இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக), 182662 மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக), 170613 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), 427677 இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக), 222013 மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக), 195788 பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), 430323 இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக), 220914 மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக), 204804 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக), 571493 இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக), 292668 மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக), 155587 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்), 385256 இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக), 380877 மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக), 166271 படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), 509664 இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை), 342882 மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக), 99780 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக), 540729 இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக), 147991 மூன்றாம் இடம்: விஜயசீலன் எஸ்டிஆர் (தமிழ் மாநில காங்கிர), 122380 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக), 425679 இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக), 229480 மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக), 208825 படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்), 502296 இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக), 336676 மூன்றாம் இடம்: ஜான்சி ராணி எ (அதிமு), 89601 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்), 546248 இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக), 366341 மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக), 52721 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்), 426005 இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக), 289489 மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி), 39603 https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
-
பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்
Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 01:09 PM லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என லெபனானின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனடியாக பதில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் காயமடைந்தார் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/185356
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அகிலேஷ்: உ.பி.யில் பாஜகவின் ராமர் கோவில் உத்தியை உடைத்த சமாஜ்வாதியின் வியூகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அகிலேஷ் யாதவின் வியூகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னிஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராக வந்துள்ளன. ஃபைசாபாத் தொகுதியில் இருக்கும் அயோத்தி நகரில் ராமர் கோவிலை முன் வைத்து பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்தது. ஆனால், அந்த தொகுதியில் மூன்று முறை எம்பியாக இருந்த பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் தோற்கடித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தரப் பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது. `400-ஐ தாண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோதி சவால்விட்டு பரப்புரை செய்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் ஆசையாக இருந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆனால் தேர்தல் முடிவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்திவிட்டது. பாஜக 33 தொகுகளிலும், இந்தியா கூட்டணி 43 தொகுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்எல்டி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதன் விளைவாக பாஜகவால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கு பாஜக 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த முறை உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை. இம்முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 2019 பொதுத் தேர்தலில் உ.பி.யில் பாஜக 63 தொகுதிகளைப் பெற்றிருந்தது. பிஎஸ்பி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும், அப்னா தளம் (சோனேலால்) 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த முறை சாத்தியமாக்க முடியவில்லை. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார். இந்த முறை, காந்தி-நேரு குடும்பத்தின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா அத்தொகுதியில் போட்டியிட்டதால், ஸ்மிருதி இரானியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த முடிவுகள் 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியைத் தோற்கடித்தபோது, 'நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசை ஒரு சாதரண பாஜக தலைவர் அவரது கோட்டையிலேயே தோற்கடித்துவிட்டார்’ என்ற பேச்சுகள் எழுந்தது. இந்த முறை ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக ஒரு சாதாரண வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் பிரதமர் மோதியும் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்த போதிலும், பின்னர் முன்னிலை பெற்றார். ஆனால், இம்முறை வாரணாசியில் மோதி எவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் மோதிக்கு வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1,52,513 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியை கைப்பற்றியிருக்கிறார். இருப்பினும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறார் மோதி. 2019 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி வாரணாசியில் சுமார் 4,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முறை பிரதமர் மோதிக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. 2014 இல், மோதி வாரணாசியில் மொத்தம் 5,81,022 வாக்குகளைப் பெற்றார், இது அங்கு மொத்த வாக்குகளில் 56 சதவீதமாக இருந்தது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகள் கிடைத்தது. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் களத்தில் இருந்தனர். பிரதமர் மோதி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டனர். ராஜ்நாத் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர். அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் மெயின்புரியில் போட்டியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்துதல் போன்ற பிரச்னைகளை சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் கடுமையாக விமர்சித்தன. இடஒதுக்கீடு பிரச்னையை பற்றி இரு கட்சிகளும் மக்களிடையே பேசியது. இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டின. இதனுடன், இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிவீர் திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் எழுந்த கோபம் போராட்டங்களில் பலமுறை பிரதிபலித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இது யோகிக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? உ.பி.யில் தொகுதிகளை பாஜக இழந்திருப்பது, பிரதமர் மோதிக்கு மட்டுமின்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கெட்ட செய்தி என, உத்தரப் பிரதேச மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான் தெரிவித்துள்ளார். ஷரத் பிரதான் கூறுகையில், “பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்பார்க்காத வண்ணம் 33 இடங்கள் தான் கிடைத்துள்ளது. இது பிரதமர் மோதி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை மக்கள் நிராகரித்ததை காட்டுகிறது. மோதி பலம் அதிகரித்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சாமானியர்களை எதிர்க்கட்சிகள் நம்ப வைத்தன. இதுவே உபியில் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. அதனால்தான் தலித் வாக்காளர்களும் மாயாவதி கட்சியை விட்டு வெளியேறி இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். பாஜக ஆட்சியில் இருந்தால் இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் என்ற இந்தச் செய்தி தலித்துகள் மத்தியில் ஆழமாகப் போய் சேர்ந்தது. மாயாவதி ஜாதவ் பிரிவை சேர்ந்தவர். ஆனால், ஜாதவ் இன மக்கள் கூட அவருக்கு வாக்களிக்காமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர்.” என்றார். ஷரத் பிரதான் மேலும் கூறுகையில், “உ.பி.யில் பாஜக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்திருப்பது யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்கும். அமித் ஷாவும், நரேந்திர மோதியும் இந்தத் தோல்விக்கு யோகி மீது குற்றம் சாட்டி, அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்க வாய்ப்புகள் உள்ளன. நரேந்திர மோதி உ.பி.யில் தான் அடைந்த உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியுள்ளார். பிரதான் கூறுகையில், "உ.பி.யில் தன்னை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும், இந்துத்துவா முன் யாரும் நிற்க முடியாது என்றும் யோகி நினைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபித்துள்ளது. இந்திய மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதில்லை. ஸ்மிருதி இரானியின் தோல்வி மோதியின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மோதியின் பாணியிலேயே சென்று ஸ்மிருதி இரானியை சரியாக தோற்கடித்துள்ளார் ராகுல் காந்தி. ஸ்மிருதியை தோற்கடிப்பது ராகுலின் நல்ல உத்தி, அதுவும் ஒரு சாதாரண வேட்பாளரை முன்னிறுத்தி! பட மூலாதாரம்,GETTY IMAGES உபி தோல்விக்கு என்ன காரணம்? ஷரத் பிரதான் கூறுகையில், "இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் நமக்கு இரண்டு முக்கிய விஷயங்களை கூறுகிறது. முதல் செய்தி, தலித்துகள் தனது அடிமைகள் அல்லர் என்பது மாயாவதிக்கு தெரிந்திருக்கும். இரண்டாவது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்திருக்கும்" என்றார். அலஹாபாத் தொகுதியில் இருந்து எம்.பி., ஆன ரீட்டா பகுகுணா ஜோஷி யோகியின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர். இந்த முறை அவருக்கு பாஜக தொகுதி கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக, பாஜக மூத்த தலைவர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜ் திரிபாதிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை உ.பி.யில் பாஜகவுக்கு 33 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது ஏன் என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ரீட்டா பகுகுணா ஜோஷி கூறுகையில், "நாங்கள் ஆட்சி அமைப்போம், ஆனால் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் கிடைத்த வெற்றியை இம்முறை பெறப் போவதில்லை. நாங்கள் உ.பி.யில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டோம், ஆனால் வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் விமர்சனமும் எங்கள் முன் வைக்கப்பட்டது. அயோத்தியிலும் கூட நாங்கள் பின்தங்கியுள்ளோம். இந்த முறை ஏன் இப்படி நடந்தது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.” என்றார். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்குமா என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜோஷி பதிலளிக்கையில், "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது, எந்த பாதிப்பும் ஏற்படாது." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன? இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தெளிவான வியூகத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டி வருகின்றனர். இம்முறை, அகிலேஷ் யாதவ், யாதவ் அல்லாத சாதியினருக்கு கூடுதல் கவனம் செலுத்தி தொகுதிகள் ஒதுக்கினார். முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த முறை அகிலேஷ் யாதவ் 62 பேரில் ஐந்து யாதவ் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தினார், அவர்கள் அனைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2019 இல், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சி 37 தொகுகளில் போட்டியிட்டு 10 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது. 2014 ஆம் ஆண்டில், உ.பி.யில் 78 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது, இதில் மொத்தம் 12 பேர் யாதவ் வேட்பாளர்கள் மற்றும் நான்கு பேர் முலாயம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியர் பங்கஜ் குமார், தொகுதி ஒதுக்கீட்டு வியூகத்திற்காக அகிலேஷ் யாதவை பாராட்டியுள்ளார். பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், “சமாஜ்வாதி கட்சி தொகுதி ஒதுக்கீட்டை மிகச் சிறப்பாக செய்துள்ளது. அயோத்தியில் தலித் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கியது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. அங்கு போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் மூத்த சமாஜ்வாதி உறுப்பினர் ஆவார். அதே போல் பல்லியா தொகுதியில் சனாதன் பாண்டேவுக்கு தொகுதி ஒதுக்கியதும் புத்திசாலித்தனமான முடிவு.” “அகிலேஷ் யாதவ் பிடிஏ ('PDA' or 'Pichde -backward classes or OBCs) என்னும் திட்டத்தை முன்வைத்து அனைத்து சாதியினரும் அதில் சேர்க்கப்பட்டனர், மறுபுறம், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்களைச் செய்தது. பாஜக தொகுதி ஒதுக்கீட்டையும் மிக மோசமான முறையில் செய்தது. தொகுதி ஒதுக்கீடு பற்றி யோகியிடம் ஆலோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். கௌஷாம்பி தொகுதியில், ராஜா பையா தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு தொகுதி ஒதுக்கச் சொன்னார் ஆனால் அமித் ஷா ஒப்புக்கொள்ளவில்லை. அலஹாபாத்தில் நீரஜ் திரிபாதி நிறுத்தப்பட்டார். ஆனால் அவரது தோல்வி தற்போது உறுதியாகி விட்டது. அமித் ஷா டெல்லியில் இருந்து கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்து கொண்டிருந்தது தான் இதற்கு காரணம்” என்று விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும் பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், "யோகியின் ஆலோசனைப்படி தொகுதிகள் வழங்கப்படவில்லை, ஆனால் யோகி மீதும் தவறு உள்ளது. யோகி தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை." "அவர்கள் குஜராத் பாணியில் ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். அதிகார வர்க்கத்தின் பலத்தில் அவர்களின் அரசாங்கம் இயங்குகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை விட காவல்துறையைத்தான் அதிகம் நம்புகிறார்கள். இந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்ஸும் பாஜக சார்பில் இல்லை என்று நினைக்கிறேன். மோதி மிகவும் பலம் மிக்கவர் ஆகி வருகிறார் என்றும் இது தங்களுக்கு நல்லதல்ல என்றும் ஆர்எஸ்எஸ் உணரத் தொடங்கியது.” என்றார். இந்தத் தேர்தலில் மாயாவதி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், இனி அவர் பழைய இடத்தை அடைவது கடினம் என்றும் பேராசிரியர் பங்கஜ் நம்புகிறார். "மாயாவதி இடத்தை சந்திரசேகர் நிரப்பலாம்" என்கிறார் பேராசிரியர் பங்கஜ் குமார். நாகினா தொகுதியில் இருந்து அவர் பெற்ற வெற்றியும் இதையே காட்டுகிறது. தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெறுவதுதான் முக்கியம். உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மோசமான செயல்பாடு, நரேந்திர மோதியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கெடுக்கக்கூடும். மற்றொரு புறம் வட இந்தியாவில் மாநிலக் கட்சிகள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். அமேதி மற்றும் ரேபரேலியிலும் காங்கிரஸ் வலுவாக உருவெடுத்துள்ளது. இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் விருப்பத்திற்கு மாறானது! https://www.bbc.com/tamil/articles/cz77re7lrkpo
-
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள்
மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை Published By: DIGITAL DESK 3 05 JUN, 2024 | 03:27 PM சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று புதன்கிழமை (5) காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை டினோஸா கண்டல் தாவரப் பள்ளி (Dinosha Mangrove Nursery) வழங்கியிருந்தனர். இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன், மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185377
-
பிரித்தானியாவை அச்சுறுத்தும் தட்டம்மை நோய்த்தாக்கம்
ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ததுடன் கடந்த மே மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிக்கு இடையில் Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தைக் கடந்து சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிக காய்ச்சல், இருமல், தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாகத் தோன்றும் சரும அழற்சி என்பன தட்டம்மை நோயின் அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எவரும் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/303172
-
எந்த நாடும் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை தரையிறக்கிய சீனா - என்ன செய்கிறது?
முதலாவதாக நிலவின் இருண்ட பகுதியில் மண்ணை எடுத்த சீனா! சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Change – 6 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில் குறித்த விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு மையம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த விண்கலமானது சேகரிக்கப்பட்ட 2 கிலோ மண் மாதிரியை வெற்றிகரமாக கொண்டுவரும் பணியை செய்து முடித்தால், அவ்வாறு செய்யும் முதல் நாடாக சீனா மாறும். இந்த மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரன், பூமி மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/303169
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பிரதமர் பதவியிலிருந்து மோடி ராஜினாமா: 3-வது முறையாக ஜூன் 8-ல் பதவியேற்பு! பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 😎 பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதற்காக இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது அக்கட்சி. இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது. 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். சனிக்கிழமை பதவியேற்பு: இதற்கிடையே, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 😎 மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://thinakkural.lk/article/303197
-
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள்
வாகன புகை பரிசோதனை! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303182
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்
05 JUN, 2024 | 02:20 PM ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் புதன்கிழமை (5) அதிகாலை தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று, மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் புறப்பட்டு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை அடைந்துள்ளனர். தாய், தந்தை, நான்கு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களான இந்த ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185358
-
பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!
பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க 2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தியுள்ளார். பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கான வழிமுறையாக செயல்படும் தனித்துவமான ஆவணங்கள். குறியீட்டு எண் உட்பட இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்வது சிலவேளை பாதிப்பாக அமையலாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக பலர் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தலாம். உண்மையான உரிமையாளர்களின் தகவல்கள் பிறரால் மாற்றியமைக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/303122
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
இங்கிலாந்து - ஸ்கொட்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது Published By: VISHNU 05 JUN, 2024 | 02:38 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் பி குழு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது. மழையினால் தாமதித்து ஆரம்பமானதும் இடையில் தடைப்பட்டு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுமான போட்டியில் ஸ்கொட்லாந்து விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைக் குவித்தது. மழை காரணமாக 52 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது மைக்கல் ஜோன்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 10 ஓவர்கள் என மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் எஞ்சிய 3.4 ஓவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மேலும் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. மைக்கல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 31 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இதனை அடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 109 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடரப்படாமால் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/185339
-
ரியல் மெட்றிட் கழகத்தில் இணைகிறார் கிலியான் எம்பாப்பே
Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:28 PM (நெவில் அன்தனி) ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார். ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட் கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கால்பந்தாட்ட கழகத்துடன் கிலியான் எம்பாப்பே செய்துகொண்ட 4 வருட ஒப்பந்தம் இந்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி முடிவடைகிறது. எனவே அவர் இலவச இடமாற்றத்தின் அடிப்படையில் ரியல் மெட்றிடில் இணையவுள்ளார். பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விலகி ரியல் மெட்றிட் கழகத்தில் இணையவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் அவர் வாய்மொழிமூலம் தெரிவித்திருந்தார். ரியல் மெட்றிட் கழகத்துடனான ஒப்பந்தத்தில் இப்போது கைச்சாத்திட்டுள்ள எம்பாப்வே, ஜூலை 1ஆம் திகதிக்குப் பின்னர் அக் கழகத்துடன் இணைந்துகொள்வார். லா லிகா கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வீரர்களுக்கான இடமாற்றக் காலம் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற எம்பாப்பே, 2017ஆம் ஆண்டு மொனாக்கோ கழகத்திலிருந்து கடன் அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் அணியில் இணைந்தார். எனினும் 2018இலிருந்தே உத்தியோகபூர்வ ஒப்பந்த அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திதிற்காக விளையாடிவந்தார். அக் கழகத்தில் விளையாட ஆரம்பித்த பின்னர் 256 கோல்களைப் போட்டுள்ள எம்பாப்பே, அக் கழகத்திற்காக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார். ரியல் மெட்றிட் கழகத்தில் 2029வரை 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள எம்பாப்பே, ஒரு பருவ காலத்தில் 15 மில்லியன் யூரோக்களை சம்பாத்திக்கவுள்ளார். அதனைவிட ஊக்கத் தொகையாக 150 மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளார். https://www.virakesari.lk/article/185318
-
சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா? சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 10:22 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், 155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிராகரிப்பார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டமூலம் சட்டமாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/185350
-
புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி - யாழில் கைதான போலி வைத்தியர்
கும்பல் என்றால் தப்பிவிடுவார்கள் என நினைக்கிறேன்.
-
புங்குடுதீவில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
Published By: VISHNU 05 JUN, 2024 | 08:50 AM யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185338
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
இராமலிங்கேஸ்வர் அமைப்பின் செயற்பாட்டாளர் தி.சுந்தரேஸ்சன், சிவசேனை அமைப்பின் உறுப்பினர் த.புவனேந்தீரன், உருத்திரசேனை உறுப்பினர் சுஜீபன், இந்து தன்னார்ந்த தொண்டு சங்கம் தலைவர் வ.சாரகனான்,திரிலங்கா புரி ஆதீனம் தி.விபுலாந்த அடியார்,கோவிற்கடை ஜயப்பன் ஆலயத்தலைவர் த.கலாசாதக்குருக்கள், பசுவதை தடுக்கும் சமூக மன்ற தலைவர் ம.சிவலோகதேசிகசர்மா ஞானசீலன், உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/172816 தேடிப்பார்த்ததில் கிடைத்த விபரங்கள் இவ்வளவு தான் அண்ணை.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக! 05 JUN, 2024 | 09:54 AM இந்தியமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி 8.9 வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் திமுக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . இந்திய கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் களம் கண்டது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த முறை தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 மக்களவை தேர்தலில் 8.19 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது. அதேபோல 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது. https://www.virakesari.lk/article/185348
-
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் - எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்
Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது. ஆகவே சட்டமூலத்தை நாளை (வியாழக்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம். திட்டமிட்டதற்கு அமைய சட்டமூலம் மீதான விவாதம் நாளை இடம்பெறும். பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. ஆகவே எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதின்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். இந்த சட்டமூலத்துக்கு எதிர்தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மின்சாரத்துறை அமைச்சருக்கும், எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது. உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என்பதையே உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளஅரசாங்கம் அவசரப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய செயற்பட வேண்டும். துறைசார் மேற்பார்வை குழுவின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்ற விவகாரம் தொடர்பான குழுவின் உறுப்பினரல்லாதவர்கள் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என சபாநாயகரிடம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். ஆராய்ந்து பதிலளிக்கிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எதுவும் தெரியாது என்று குறிப்பிடாதீர்கள். உங்களுக்கு அதிகாரம் உண்டு என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் நீங்கள் குறிப்பிடும் வகையில் என்னால் செயற்பட முடியாது என்றார். தொடர்ந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தால் 23 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் மின்சார சபையை 12 கூறுகளாக பிரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றையா உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டீர்கள் என்றார். நான் குறிப்பிடும் விடயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. எதிர்ப்புக்களை மாத்திரம் குறிப்பிடுகின்றார்கள். கேள்வி எழுப்பினால் விளங்காதது போன்று அருகில் உள்ள கோப்புக்களை பார்க்கின்றீர்கள் என்றார். மின்கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் மின்நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடுங்கள் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் ஊடாக இச்சட்டமூலம் முறையற்றது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம். இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடையாது என்பதால் முறையற்ற வகையில் செயற்படுகிறது என்றார். இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அப்பாற்பட்டு செயற்பட போவதில்லை. முன்வைக்கப்பட்டுள்ள 12 திருத்தங்களை சட்டமூலத்தில் உள்ளடக்குவோம். கடந்த காலங்களிலும் இவ்வாறான பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது முறையற்றது. கடந்த ஒன்றரை வருட காலமாக இந்த சட்டமூலம் பற்றி பேசப்படுகிறது. சட்டமூலத்தை நாளை வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தயாராகவுள்ளோம். பெரும்பான்மை பற்றி கவலைப்பட வேண்டாம் நிச்சயம் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம். மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகிறார்கள். நாங்கள் அதனை முன்னெடுக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டமூலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக இருந்தால் எதிர்க்கட்டும் என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நாங்கள் முன்வைத்துள்ள திட்ட வரைபில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அதனை காண்பியுங்கள் என்றார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய விமல் வீரவன்ச, இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுக்குக்குச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிடுகிறார் 12 திருத்தங்கள் தானே அவற்றை முன்னெடுக்கலாம் என்று, இதனை அலட்சியப்படுத்த முடியாது. நாட்டின் மின்சார துறையுடன் தொடர்புடைய இந்த சட்டமூலம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆகவே சட்டமூலத்தை நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை பிற்போடுங்கள். முறையான பரிசீலனை செய்யலாம் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, இந்த சட்டமூலத்தின் 12(1) பிரிவு அரசியலமைப்புக்கு முரண் ஆகவே விசேட பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக் செல்ல வேண்டும் என று குறிப்பிட்டுள்ளது. 12(1) பிரிவு நாட்டு மக்களின் சமவுரிமை பற்றி குறிப்பிடுகிறது. ஆகவே இச்சட்டமூலத்தை விரிவாக ஆராய வேண்டும் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிடவில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆகவே அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வியெழுப்பினார். இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ..பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நான் கலந்துக் கொள்ளவில்லை. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை விவாத்துக்கு எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். கிணற்றுத்தவளை போல் சிந்திப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகிறார். ராஜபக்ஷர்களுடன் இருக்கும் போது கிணற்றுக்குள் இருந்து விட்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும் போது கிணற்றுக்கு மேல் வந்து விட்டாரா என்பதை அறிய முடியவில்லை என்றார். https://www.virakesari.lk/article/185288
-
மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் - பிரதமர் மோடி Published By: VISHNU 04 JUN, 2024 | 10:24 PM இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 290-க்கும் அதிகமான இடங்களில் பாரதிய சனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதிய சனதா கட்சி 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/185331
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
உரு சிவ இரண்டெழுத்து தானண்ணை வித்தியாசம்! ஆனால் புதுமுகங்கள் படங்களில் இருக்கினம்!!
-
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்: பல்வேறு தரப்பினரை சந்தித்து மன்னார் சதோச மனித புதை குழியையும் பார்வையிட்டார்
Published By: VISHNU 04 JUN, 2024 | 06:19 PM ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்தார். 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து மன்னார் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடினர். அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதோச மனித புதைகுழியையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார். இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினருடன் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185322
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
Published By: VISHNU 04 JUN, 2024 | 08:59 PM நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/185328
-
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!
அண்ணை பிடிஎப் ஐ யாழில் இணைக்கலாமா? இணைக்கலாமெனில் எவ்வாறு என்று சொல்லுங்கோ.