Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:51 PM இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும். சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
  2. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
  3. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை ) 23 மாவட்டங்களில் உள்ள 33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு 116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
  4. 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185294
  5. லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
  6. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
  7. மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303069
  8. குர்பாஸ், இப்ராஹிம், பாறூக்கி ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் உகண்டாவை வீழ்த்தியது ஆப்கான் 04 JUN, 2024 | 12:20 PM (நெவில் அன்தனி) கயானா, ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கும் உகண்டாவுக்கும் இடையிலான 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சி குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்றாஹிம் ஸத்ரான் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களும் பஸால்ஹக் பாறூக்கியின் 5 விக்கெட் குவியலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை மிகவும் இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்கான இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் பகிர்ந்த பிரிக்கப்படாத 170 ஓட்டங்களே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும். ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் 46 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மொஹமத் நபி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்றயன் மசாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொஸ்மஸ் கிவுட்டா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 185 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் ரொபின்சன் ஒபுயா (14), ரியாஸாத் அலி ஷா (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 5 ஓவர்களில் 9 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக பதிவான சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். அவரைவிட நவீன் உல் ஹக் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி https://www.virakesari.lk/article/185283
  9. 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்டிஏ* 295 என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231 இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17 மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக) பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக) படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
  10. உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
  11. சர்வதேச ரி20யில் இலங்கையை குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருட்டிய தென் ஆபிரிக்காவுக்கு இலகுவான வெற்றி Published By: VISHNU 03 JUN, 2024 | 11:35 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் டி குழுவுக்கான ஆரம்ப போட்டியில் இலங்கையை 77 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. அன்றிச் நோக்கியாவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லியமான பந்துவீச்சு தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கியது. இந்தப் போட்டியில் இலங்கை பெற்ற 77 ஓட்டங்கள் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை ஆகும். நசவ் செயற்கை ஆடுகளத்தில் முதல் தடவையாக விளையாடப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தப் போட்டி இலங்கையின் பந்துவீச்சுக்கும் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என எதிர்வுகூறப்பட்டது. ஆனால் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டியாக இது அமைந்திருந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணியில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் இருவரும் பின்வரிசையில் இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (3), கமிந்து மெண்டிஸ் (11), அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (0), சதீர சமரவீர (0), குசல் மெண்டிஸ் (19), சரித் அசலன்க (6) ஆகிய அறுவரும் ஆட்டம் இழக்க 12 ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது. ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுன் ஷானக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார். மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். மஹீஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 78 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் ஆபிரிக்காவுக்கும் துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை. ஆரம்ப வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸின் சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் தவறவிட்டார். குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குவின்டன் டி கொக் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (51 - 3 விக்.) மேலும் 7 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், ஹென்றிச் க்ளாசன் (19 ஆ.இ.), டேவிட் மில்லர் (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 20 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன்: அன்றிச் நோக்கியா https://www.virakesari.lk/article/185248
  12. இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 10:47 AM லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 3940 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை 712 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/185272
  13. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றார். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது. அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் அப்போது கூறப்பட்டன. சீன உளவுக்கப்பல் விவகாரம், மாத்திரமன்றி இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்திய ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக கூறி டெல்லி அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்தது. இவ்வாறானதொரு நிலையில், சுமார் ஓருவருடத்திற்கு பின்னர் கடந்த வருடம் ஜுலை மாதம் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம், மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீராகவும் செயல்திறன் மிக்கதாகவும் தற்போது காணப்படுகின்றது. இலங்கையில் இந்தியாவின் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதரத்துடன் இலங்கை இணைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தேர்தலில் வெற்றிப்பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185265
  14. Published By: VISHNU 04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக் ( Bonnie Horbach) அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச் சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன் அரச செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நெதர்லாந்து நாட்டுத் தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach), கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா, போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க் பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
  15. Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
  16. Published By: VISHNU 04 JUN, 2024 | 03:03 AM யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார். சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது. அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோசடியில் ஈடுபட்ட நபர், போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185253
  17. ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு Published By: VISHNU 03 JUN, 2024 | 08:46 PM ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் ரி-20 உலகக் கிண்ணம் (2024) கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஆடவருக்கான ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் (2024) வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மிளிரும் கோப்பையையும் மொத்தப் பரிசுத் தொகையான குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெறுவார்கள். இது போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ரி-20 உலகக் கோப்பையை விட, இது 850,000 டொலர் அதிகமாகும், அங்கு வெற்றி பெற்ற இங்கிலாந்து 1.6 மில்லியன் டொலர் பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இரட்டிப்பாகியுள்ளது. 2022 இல் 5.6 மில்லியனில் டொலர் இருந்த பரிசுத்தொகை இந்த ஆண்டு 20 அணிகள் கொண்ட போட்டியில் 11.25 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது. அதாவது மற்ற அணிகளுக்கும் பரிசுத் தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185246
  18. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை! இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 10.04 வீதமானவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதேவேளை பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார் . இவ்வருட பரீட்சை பெறுபேறுகள் சாதனை அதிகரிப்பை காட்டுவதாக தெரிவித்த அவர், விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இது 64.33 வீதமாகும் எனவும் தெரிவித்தார். மூன்று பாடங்களிலும் 10,484 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும், இது 3.9 வீதமாகும் எனவும் ஜெயசுந்தர தெரிவித்தார். இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 190 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார் . 2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303000
  19. இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் தயார் நிலையில்! எந்தவொரு அனர்த்த அழைப்புகளுக்கும் உடனடியாகப் பதிலளிப்பதற்காக இலங்கை விமானப்படையின் BELL 412 ஹெலிகொப்டரை நெலுவ பொது மைதானத்தில் தயார் நிலையில் வைத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/303016
  20. உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் பல நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரியை எட்டியுள்ளது. கான்பூரிலும் தொடர்ந்து வெப்பம் அலை நிலவுகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வரப்படும் இறந்த உடல்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அன்று, கான்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அங்கித் சுக்லா பிபிசி இந்திக்காக செய்தி சேகரிக்கச் சென்ற போது, அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார். நகரின் பல்வேறு இடங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேசமயம், 30க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அடையாளம் தெரிந்த மற்றும் தெரியாத சடலங்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டதால், பிணவறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்ததால் மருத்துவர் ஒருவரின் உடல்நிலையும் மோசமடைந்தது. அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் பட மூலாதாரம்,ANKIT SHUKLA 32 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தியுள்ளார். “பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். இறந்த உடல்களை வைக்க தனி அறையும், ஏ.சி.யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று (சனிக்கிழமை) பிரேத பரிசோதனைப் பணிகளை கவனித்து வருகிறது. 19 உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. இன்னும் 14 உடல்களுக்கான சோதனை நடந்துவருகிறது. 32 அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்காக குறைந்தது 48 மணிநேரம் இங்கு வைக்கப்படும்." என அலோக் ரஞ்சன் கூறினார். கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் கூறுகையில், ''இன்னும் உடல்கள் வரவுள்ளன. அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இறந்த உடல்களை ஐஸ்கட்டிகளில் வைக்க ஆலோசனை செய்யப்பட்டது, ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக இதைச் செய்ய முடியவில்லை.” என்றார். கான்பூரில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அன்றைய நாளில் உத்தரப் பிரதேசத்தின் மிகவும் வெப்பமான நகரமாக கான்பூர் இருந்தது. நகரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனையில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மரணங்கள் வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படல்லை, ஆனால் 'இது அதீத வெப்பத்தின் விளைவு தான்' என கான்பூரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிஷ்சந்திரா ஒப்புக்கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின் இறுதிச் சடங்குகளை செய்த தனிராம் பாந்தர் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக, தினமும் 10-12 சடலங்கள் வருகின்றன. இங்கு போதிய டீப் ஃப்ரீசர் (Deep freezer) இயந்திரங்கள் மற்றும் ஏ.சி இல்லாததால், சடலங்களை பெற்றுக் கொள்ள வருபவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். உரிமை கோரப்படாத ஏராளமான சடலங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன” என்றார். ஊர்க்காவல் படையினர் 6 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,@INDIAMETDEPT பிபிசி இந்திக்காக மிர்சாபூரில் இருந்து ஹரிஷ் சந்திர கேவட். உத்தரபிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிர்சாபூர் மற்றும் பல்லியா மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மிர்சாபூரில் அதீத வெப்பம் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமையன்று, கடும் வெயிலில் வாக்களிக்க மிர்சாபூருக்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வெப்பத்தினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உயிரைக் கூட இழந்தனர். அதில் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். இது தவிர, தேர்தல் பணியில் இல்லாத மேலும் இரண்டு ஊர்க்காவல் படையினரும் உயிரிழந்துள்ளனர். ஊர்க்காவல் படையினர் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்பு படம் வாக்குபதிவு இயந்திரங்களை வைப்பதற்கான ‘ஸ்ட்ராங் ரூம்’ (Strong room) மிர்சாபூரின் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மஜ்வா பிளாக்கின் கட்கா சாவடியில் நிறுத்தப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினர் பேசுகையில், "நாங்கள் 31ஆம் தேதி இரவு 11 மணிக்கு வந்தோம், ரயிலில் இருந்து இறங்கி, ஸ்ட்ராங் ரூமுக்கு நடந்து சென்றோம், அங்கு எங்களுக்கான பேருந்து மற்றும் சாவடியைத் தேடத் தொடங்கினோம். பேருந்துகள் அங்கும் இங்கும் நின்று கொண்டிருந்தன” என்றார்கள். மேலும், “எங்கள் பேருந்தில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, பேருந்தின் மேற்கூரையிலிருந்து நெருப்பு மழை பொழிவது போல் இருந்தது, நாங்கள் அனைவரும் வியர்வையில் நனைத்திருந்தோம், எங்கள் கண்கள் எரிந்தன.” “குடிநீர் என்ற பெயரில் இரண்டு டேங்கர்கள் மட்டுமே இருந்தன, நிழலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லை, பேருந்துகள் ஒரு வரிசையில் நிறுத்தப்படவில்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டு, மூன்று மணிநேரத்திற்கு மேலாக பேருந்துகளில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் மதியம் 12 மணிக்குப் பிறகு தான், நாங்கள் வாக்குச் சாவடிக்குக் கிளம்பினோம்." என்று ஊர்க்காவல் படையினர் கூறினார்கள். அங்கு வந்திருந்த தேர்தல் அலுவலரிடம் பேசியபோது, 'இதற்கு தான் பொறுப்பல்ல' என்று அவர் திட்டவட்டமாக பதிலளித்தார். வசதிகள் குறித்த கேள்விக்கு, "அன்று காலை மேகமூட்டமாக இருந்தது, அது மட்டுமல்லாது வாக்குச்சாவடிகளில் கூலர் (Cooler) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது" என்று அவர் பதிலளித்தார். வாக்குச்சாவடியில் இருந்த ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், “வாக்களிப்பு நிலையத்திற்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு, நிழலும் மின்விசிறிகளும் கிடைப்பதால் சற்று நிம்மதியாக இருக்கும், ஆனால் எங்களுக்கு? நாங்கள் நாள் முழுவதும் வெளியில் வெயிலில் உட்கார்ந்து வேலை செய்கிறோம், எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்றார்கள். சோன்பத்ராவில் 9 தேர்தல் பணியாளர்களும், வாரணாசியில் 3 பேரும் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES கௌரவ் குல்மோகர், பிபிசி இந்திக்காக. வெள்ளிக்கிழமை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பதோஹியில் 43.7 டிகிரி செல்சியஸ், வாரணாசியில் 43 டிகிரி செல்சியஸ், மிர்சாபூரில் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை, சோன்பத்ராவில் மொத்தம் 9 வாக்குச்சாவடி ஊழியர்கள் வெப்ப அலைக்கு இறந்துள்ளனர். சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராபர்ட்ஸ்கஞ்ச் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தேர்தல் பணியாளர் குழு புறப்பட இருந்தது. மதியம் 11 முதல் 2 மணிக்குள் சில வாக்குச்சாவடி பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனர்." என்றார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு போலீஸ்காரர் உட்பட 3 வாக்குச்சாவடி பணியாளர்கள் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நோயாளிகள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்த் பாண்டே (குமாஸ்தா) மற்றும் மேலும் ஒருவர் என இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப அலையால் இறந்துள்ளனர்." என்றார். தகவலின்படி, வாரணாசியிலும், 3 வாக்குச்சாவடி ஊழியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கடுமையான வெப்பத்தால் இறந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. பல்லியாவின் சக்பஹவுதீன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ராம்பச்சன் சவுகான் என்ற எழுபது வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்த கிராமத் தலைவர் அருண்ஜெய் சவுகான் பிபிசியிடம் பேசுகையில், "ராம்பச்சன் சுமார் 5 நிமிடம் வாக்குப்பதிவு வரிசையில் நின்றிருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் அவர் ஆரோக்கியமான ஒரு நபர் தான்” என்று கூறினார். பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்திர குமார் பிபிசியிடம் பேசுகையில், “துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டின் அறிக்கையின்படி, அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதே சமயம், பல்லியாவில் வெப்பம் காரணமாக வேறு யாரும் இறக்கவில்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/ce553jm44zko
  21. கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் 03 JUN, 2024 | 03:26 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185209
  22. நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா? - விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன? Published By: RAJEEBAN 03 JUN, 2024 | 03:24 PM உண்மை ஐக்கியம் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான சட்டத்தின் நகல்வரைபில் ஆணைக்குழுவிற்கு வழக்குரைஞர் அல்லது நீதித்துறை அதிகாரங்களை வழங்கும் விதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் தேவைகளிற்கு தீர்வை காண்பதற்காக விசேட நீதிமன்றத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மை நல்லிணக்க பொறிமுறை நீதித்துறை அதிகாரங்களை கொண்டிருக்கவேண்டுமா அல்லது அதன் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து விசேட நீதிமன்றமொன்றை உருவாக்கவேண்டுமா என தனதுஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தமை குறித்த ஐலன்ட் நாளிதழின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனினும் நீதித்துறை அதிகாரங்களை வழங்குவது விசேட நீதிமன்றத்தை அமைப்பது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க முடியும்என அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார். எந்த சட்டமும் நடைமுறைக்கு வருவதற்கு நாடாளுமன்றத்தின்அங்கீகாரம அவசியம் ,உத்தேச சட்டம் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை அதிகாரத்தை கொண்டிருக்கவேண்டுமா அல்லது விசேட நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமா என தீர்மானிக்கவேண்டியது நாடாளுமன்றமே என அவர் தெரிவித்துள்ளார். விசேட நீதிமன்றத்தை நிறுவவேண்டும் என்றால் அரசமைப்பின் ஷரத்துக்கள் பிறதொடர்புடைய சட்டங்கள் நீதித்துறை சட்டம் ஆகியவற்றை கவனமாக பரிசீலிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நிலைமாற்றுக்கால நீதியின் முறையின் நோக்கம் உண்மையை நிலைநாட்டுவதற்கான தளத்தை உருவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடு வழங்குதல் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீளநிகழாமையை உறுதி செய்தல் மனித உரிமை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் கிரிமினல் குற்றவாளிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க உதவுதல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் வெளியாகியுள்ள உத்தேச சட்டத்தின் தற்போதைய வரைவு தனிநீதிமன்றத்தை நிறுவும் அளவிற்கு செல்லவில்லை எனவும் அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார். எனினும் ஆணைக்குழுபின்பற்றிய உண்மையை கண்டறியும் செயல்முறையின்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலிக்க உதவும் விதிமுறைகள் இதில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் வன்முறைகள் மீளநிகழாமையில் கவனம் செலுத்தும் நிலைமாற்றுகாலநீதிபொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்து அவசியம் என கலாநிதி குணவன்ச தெரிவித்துள்ளார். 1983 முதல் 2009வரையிலான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் உள்நாட்டு போர் போன்றன பல அடிப்படை காரணங்களை கொண்டுள்ளன அவற்றை கவனமாகபரிசீலிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அனைத்து பங்குதாரர்களும் ஏற்க கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185211
  23. 03 JUN, 2024 | 01:00 PM (எம்.நியூட்டன்) ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (02) விஜயம் செய்ததுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார். நல்லை ஆதீனத்துக்குச் சென்ற ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் கலந்துகொண்டார்கள். அதனை தொடர்ந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு சென்று, பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். மேலும், இந்தியா - இலங்கை இடையேயான பாக்கு நீரிணையை கடந்த சிறுவன் தன்வந்தை சந்தித்து பாராட்டுகளையும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185191

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.