Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர். இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
  2. Published By: DIGITAL DESK 7 02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
  3. டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
  4. மிகப்பழைய 'கிரிக்கெட் பகையாளர்கள்' வரலாற்றை ரி-20 உலகக் கிண்ணத்தில் புதுப்பிக்கும் கனடா - ஐக்கிய அமெரிக்கா 01 JUN, 2024 | 11:16 PM (நெவில் அன்தனி) டெக்சாஸ், டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் அறிமுக அணிகளான கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் மோதவுள்ள போட்டியுடன் 20 நாடுகள் பங்குபற்றும் 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டி ஐக்கிய அமெரிக்காவில் ஜுன் மாதம் 1ஆம் திகதி இரவு ஆரம்பிக்கின்றது. (இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (02) காலை 6.00 மணி) உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பழைமையான 'கிரிக்கெட் பகையாளர்கள்' (போட்டியாளர்கள்) என்ற வரலாற்றைக் கொண்ட கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் அதனை ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியின் மூலம் புதுப்பிப்பது விசேட அம்சமாகும். அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் 1877இல் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு 33 வருடங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் 3 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதாகவும் அப் போட்டியில் 23 ஓட்டங்களால் கனடா வெற்றிபெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இப்போது 180 வருடங்கள் கழித்து இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மோதவுள்ளன. இணை வரவேற்பு நாடு என்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா நேரடி தகுதியைப் பெற்றதுடன் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட கனடா தகுதிபெற்றது. க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி விளையாட இருப்பது இதுவே முதல் தடவையாகும். எனினும், டலாஸில் கிரிக்கெட் ஆர்வம் பெரிய அளவில் இல்லாத நிலையில் அங்கு நடைபெறவுள்ள எல் ஏ கெலக்ஸி - எவ் சி டலாஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கால்பந்தாட்டத்திற்கே அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டிக்கு சீரற்ற கால நிலை தடையாக இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெறவிருந்த இரண்டு பயிற்சிப் போட்டிகள் கடுங்காற்றுடன் கூடிய மழையினால் கைவிடப்பட்டிருந்தது. எது எவ்வாறாயினும், ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவே வெற்றிபெறக்கூடிய அணி என அனுமாணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப் போட்டியை கனடா இலகுவில் நழுவ விடாது என்ற அபிப்பிராயமும் கூடவே இருக்கிறது. சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் 5 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான ஐக்கிய அமெரிக்கா இதுவரை விளையாடிய 28 போட்டிகளில் 16 வெற்றிகளை ஈட்டியதுடன் 10 தோல்விகளைத் தழுவியுள்ளது. கனடாவுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை ஈட்டிய ஐக்கிய அமெரிக்கா 2 தோல்விகளைத் தழுவயது. இதேவேளை கடந்த 2 மாதங்களில் ஐக்கிய அமெரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் கனடாவை 4 - 0 எனவும் பங்களாதேஷை 2 - 1 எனவும் வெற்றிகொண்டிருந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடொன்றுக்கு (பங்களாதேஷ்) எதிராக விளையாடிய முதலாவது தொடரிலேயே வெற்றிபெற்றதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா வரலாறு படைத்தது. மறுபக்கத்தில் 2008இல் சர்வதேச ரி20 கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கனடா, 58 போட்டிகளில் 30 வெற்றிகளை ஈட்டியதுடன் 25இல் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டி மழையினால் தடைப்படாமல் விளையாடப்பட்டால் இரண்டு நாடுகளுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை முன்னாள் நியூஸிலாந்து வீரர் கோரி அண்டர்சன் பெறுவார். அவர் இப்போது ஐக்கிய அமெரிக்காவுக்கு விளையாடி வருகிறார். ரோலோவ் வென் டேர் மேர்வ் (தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து), டேர்க் நெனிஸ் (நெதர்லாந்து, அவுஸ்திரேலியா), டேவிட் வைஸ் (தென் ஆபிரிக்கா, நமிபியா), மாக் செப்மன் (ஹொங்கொங், நியூஸிலாந்து) ஆகியோரே இரண்டு நாடுகளுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய மற்றைய நால்வராவர். இது இவ்வாறிருக்க, 2102இல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியனான இந்திய அணியில் இடம்பெற்றவரும் அப்போது எதிர்கால பிஷென் சிங் பேடி என பேசப்பட்ட வருமான ஹார்மீத் சிங் சகலதுறைகளிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் முதல்தர கிரிக்கெட் விளையாடிய கலீம் சானா, இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் விளையாடிய மொனான்க் பட்டேல் (அணித் தலைவர்), கயானாவில் விளையாடியவரும் இணை உறுப்பு நாடுகளில் அதிவேக பந்துவீச்சாளருமான ஜெரெமி கோர்டன், இலங்கை மற்றும் கனடா ஆகியவற்றின் முன்ளாள் வீரர் புபுது தசநாயக்க (தற்போதைய பயிற்றுநர்) முன்னாள் கனடா வீரர் நிட்டிஷ் குமார் ஆகிய அனைவரும் புலம்பெயர்ந்தவர்களாவர். கனேடிய அணியிலும் பலர் இந்திய, பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் வம்சாவழியினராவர். அவர்களில் ஜெமெய்க்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆரோன் ஜோன் திறமையான துடுப்பாட்ட வீரர் ஆவார். 16 போட்டிகளில் 2 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் மொத்தம் 713 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அணித் தலைவர் சாத் பின் ஜவார் ஒருவரே சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்களையும் ஓட்டமற்ற ஓவர்களாக பதிவு செய்த சாதனையாளர் ஆவார். பனாமாவுக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்களிலும் ஓட்டம் கொடுக்காமல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். அணிகள் ஐக்கிய அமெரிக்கா: மொனான்க் பட்டேல் (தலைவர்), ஸ்டீவன் டெய்லர், அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிட்டிஷ் குமார், கோரி அண்டர்சன், ஹார்மீத் சிங், ஷெட்லி வென் ஷோல்வைக், ஜஸ்தீப் சிங், அலி கான், சௌராப் நேட்ராவல்கர். கனடா: சாத் பின் ஸபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், நவ்னீத் தாலிவால், ரய்யான் பத்தான், நிக்கலஸ் கேர்ட்டன், பர்கத் சிங், ஷ்ரோயாஸ் மொவ்வா, நிக்கில் டுட்டா, டிலொன் ஹேலிகர், ஜெரமி கோர்டன், கலீம் சானா. https://www.virakesari.lk/article/185080
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கண்டிப்பதும், சில நேரங்களில் அடிப்பதும் குழந்தைகளின் மனதில் வாழ்நாள் வடுவாகப் பதிந்து, ஒரு தனி மனிதராகத் திறம்பட அவர்கள் வளர்வதையே பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதுகுறித்த புரிதல் தற்போது இந்திய சமூகத்தில் ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அதேவேளையில், இன்றைய சூழலில் மற்றொரு பிரச்னையும் குழந்தை வளர்ப்பில் உருவெடுத்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து, மிகவும் பாதுகாத்து வளர்ப்பதால் அவர்கள் மிகவும் பலவீனமான மனத்துடன் வளர்வார்கள் என்று எச்சரிக்கின்றனர். ஒரு குழந்தையாகத் தனது தந்தையிடம் வாங்கிய வசைகளையும் அடிகளையும் நினைவுகூரும் சமூக ஊடக பிரபலமான அஷ்மிதா இந்தக் கூற்றுகளை ஆமோதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை தனது குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் வளர்ப்பு முறை ஆறாத வடுவாக மனதில் பதிந்துவிட்டது. இருப்பினும், அதைத் தமது குழந்தைகளுக்கும் கடத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பட மூலாதாரம்,THE PHOTO TODAY “நான் குழந்தையாக இருக்கையில், அப்பா வாங்கிக் கொடுத்த ஒரு பொம்மையை உடைத்தால் அதற்காக என் அப்பா அடிப்பார், கடுமையாகத் திட்டுவார். அந்த பொம்மை எனக்காக வாங்கியதுதானே, என் விருப்பப்படி விளையாட உரிமை உள்ளது அல்லவா என்ற புரிதல் அவர்களுக்கு இருந்ததில்லை. இது என்னை மனதளவில் ஒரு குழந்தையாக வெகுவாகப் பாதித்தது. இன்றளவும் அவர்களின் இத்தகைய அணுகுமுறைகளால் ஏற்பட்ட வடு என்னைப் பின்தொடர்கிறது. ஆகையால்தான், நான் என் குழந்தைகளின் மனதில் அப்படிப்பட்ட வடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” குழந்தை வளர்ப்பைப் பொருத்தவரை, அதீத கண்டிப்பு மனதளவில் அவர்களை மிகவும் பலவீனமாக்கிவிடும் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதே, ஒரு பெற்றோராக இந்த அணுகுமுறைக்குக் காரணம் எனக் கூறும் அவர், அதேவேளையில் தேவையான சூழ்நிலைகளில் கண்டிப்பதும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிப்பதும் ஒரு தனிமனிதராக அவர்களை மேம்படுத்தும் எனக் கூறுகிறார். குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தை வளர்ப்பில் இரண்டு விதமான அணுகுமுறைகள் மிகவும் ஆபத்தானவை என்கிறார் மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன். “முதலாவதாக குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளர்ப்பது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்வது. இந்த அணுகுமுறை பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் காணப்பட்டது. இது எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு ஆபத்தானதோ, அதே அளவுக்கு அதீத செல்லமும் பாதுகாப்பும் கொண்ட இப்போதைய வளர்ப்பு முறையும் ஆபத்தானது,” என்கிறார் அவர். “இரண்டாவதாக, வீட்டிற்கு வெளியிலேயே அதிகமாக விடாமல், வெளியே சென்றால் வெயிலில் கறுத்துவிடுவார்கள் எனவும் கீழே விழுந்தால் அடிபட்டுவிடும் எனவும் மிகத் தீவிரமாகப் பாதுகாத்து (over-protective), குழந்தைகளின் பொருந்தாத விருப்பங்களைக் கூட பெற்றோர் பூர்த்தி செய்வது, எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பது ஆகியவையும் தவறான வளர்ப்பு முறைதான்.” என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன். “இதனால் குழந்தைகள் மிகவும் பலவீனமான மனத்துடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிவின்றி வளர்வார்கள். இது எதிர்காலத்தில் மன உறுதியில்லாத நபராக அவர்கள் வளர்வதற்கும், எளிதில் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கும் தள்ளக்கூடும்,” என்று கடுமையாக எச்சரிக்கிறார் அவர். குழந்தைகள் சமூகத்தில் ஒரு தனிமனிதராக முழுமை பெற்று வளர்வதற்கு நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ளப் பெற்றோர் அனுமதிக்க வேண்டியது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார். அவரது கூற்றின்படி, இந்த இரண்டுமே குழந்தைகள் வளர்வதில் எதிர்மறையான தாக்கத்தையே செலுத்துகின்றன. “குழந்தைகளுடன் எப்போதும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். அதேபோல் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, பேசிக்கொண்டிருப்பது, வெளியே செல்வது, கண்டிப்பு தேவையான இடத்தில் நேர்மறையான கண்டிப்புடன் இருக்கும் அதேவேளையில் நட்புடனும் பழகுவதே நேர்மறையான தாக்கத்தை குழந்தைகளின் வளர்ப்பில் செலுத்தும்.” என்கிறார் அவர். டாக்சிக் பேரன்டிங் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தை வளர்ப்பில் “அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற மனநிலையில் தமது குழந்தைகளை வளர்ப்பதே டாக்சிக் பேரன்டிங்” என்றும் கூறும் அவர், அது இன்றும் தொடர்வதாகவும் அதன் வடிவம்தான் மாறிவிட்டதாகவும் கூறுகிறார். இதற்கு நேர்மாறாக அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையை அதன் போக்கில் வளர விடுவதே முறையான குழந்தை வளர்ப்பு என்று தெரிவிக்கிறார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ். உதாரணத்திற்கு முந்தைய தலைமுறைகளில் குழந்தைகளின் படிப்பை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது அதிகம் நிலவியதாகச் சொல்லப்படும் நிலையில், அந்த அணுகுமுறை இன்னமும் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒருவிதத்தில் அது உண்மைதான் எனக் கூறும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், முன்பைப் போன்ற அதீத கண்டிப்பு இல்லையென்றாலும் படிப்பு குறித்து அறிவுரைகளுடன் எப்போதும் நச்சரித்துக்கொண்டே இருப்பது, உணர்வு ரீதியாக குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்பாடுகள் இன்னும் நீடிப்பதாக அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,PUZHUDHI அதோடு, பெற்றோர் அறிவுரைகளை மிகச் சுருக்கமாகவும் திறம்படவும் வழங்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தும் அவர், “தினமும், எந்நேரமும் அறிவுரைகளைக் கொட்டுவதைவிட, நேர்மறையான அணுகுமுறையுடன், அவர்களின் ஓய்வுநேரங்களில் சுருக்கமான அறிவுரைகளை வழங்க வேண்டும். தேவையற்ற அறிவுரைகளைத் தவிர்க்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார். குறிப்பாக, தமது குழந்தைகளுக்காக பெற்றோர் எவ்வளவு செலவு செய்கிறார்கள் எனச் சொல்லிக்காட்டுவது, மற்ற குழந்தைகளுடனான ஒப்பீடுகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார். குறிப்பாக, அவர்களது குற்றவுணர்ச்சியையும் பயம் மற்றும் பதற்றத்தையும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கிறார். நவீன பெற்றோர்கள் எதிர்கொள்ளும் புதிய சிக்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய நவீன பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்வதாக நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூறுகிறார். இன்றைய சூழலில் சமூக ஊடக பின்னணியில்தான் ஒருவர் தனது வாழ்வை வடிவமைத்துக் கொள்வது அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய டிஜிட்டல் உலகம் குழந்தைகளின் வாழ்வில் மிகவும் அஞ்சத்தக்க வகையில் தாக்கம் செலுத்துவதாகவும் வலியுறுத்துகிறார். அவரது கூற்றுப்படி, ஒரு குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து உட்கார வைப்பது அதன் எதிர்காலத்திற்கு 200% நல்லது அல்ல. “அந்த செல்போனுடன் குழந்தை அதிக நேரம் இருக்கும்போது, அதில் பல தவறான வழிகாட்டுதல்களை பெறக்கூடும். "தவிர்க்க முடியாத பல தவறான விஷயங்களை செல்போனில் விளம்பரங்களின் ஊடாக குழந்தைகளைச் சென்றடைகிறது. உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், எதைப் பார்க்கின்றனர் என்பதைக் கண்காணித்து, நெறிமுறைப்படுத்த வேண்டியது மிக அவசியம்,” என்று வலியுறுத்துகிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுக்க நினைத்தாலும், அதை ஒரு கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறுவதும் டாக்சிக் பேரன்டிங் தான் என்கிறார் குஷ்பு. “சுதந்திரமாகவே இருந்தாலும், அளவுக்கு மீறும்போது நஞ்சாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” பட மூலாதாரம்,KHUSHSUNDAR/INSTAGRAM அதை ஆமோதிக்கும் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், “இன்றைய சூழலில் 10 அல்லது 11 வயதிலேயே இருபாலர்களுமே மனதளவில் கணிசமான முதிர்ச்சியை அடைந்துவிடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சிறுவயதிலேயே ஆபாசப் படம் பார்க்கும் பழக்கமும் டிஜிட்டல் அணுகல்களால் எளிதில் கிடைத்துவிடுகிறது.” இத்தகைய விஷயங்களை பெற்றோர்கள் முற்றிலும் கண்காணிப்பது இப்போது சவாலாகி வருவதாகத் தெரிவிக்கிறார். “சிறுவயதில் குழந்தைகளை அமைதிப்படுத்த செல்போன் கொடுத்துப் பழக்கும்போது, அந்தக் குழந்தையின் வாழ்வில் அந்தச் சாதனம் ஓர் அங்கமாகத் தொடங்குகிறது. அதில் இருந்துதான் இந்தப் பிரச்னைகளும் தொடங்குகின்றன. குறிப்பாக இருதரப்பும் வேலைக்குச் செல்லும் சூழலில், குழந்தைகளை முழு நேரமும் கவனித்துக்கொள்ள பெற்றோர்கள் உடன் இருப்பதில்லை. கூடவே அவர்கள் கையில் செல்போனும் இருக்கிறது. இத்தகைய நிலை, குழந்தைகளுக்கு ஓர் ஆபத்தான மெய்நிகர் சூழலை உருவாக்குகிறது,” என்கிறார் அவர். இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்க பெற்றோர்கள், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறார் மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன். குழந்தைகள் கையில் எப்போது செல்போன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய சூழலில் குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பது என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. இந்நிலையில், அவர்களிடம் அதை எப்போது கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்பது குறித்துப் பேசியபோது, “குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அதை அவர்கள் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்,” என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன். அடிப்படையில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயமாக செல்போன்களை காட்டக்கூடாது என உறுதியாகக் கூறும் அவர், அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை சில நெறிமுறைகள் உள்ளன என்கிறார். "இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மணிநேரம் வரை டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதிலும், ஒரே நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அவர்களது தினசரி வாழ்வில் இருக்கும் விளையாட்டு, குடும்பத்தினர் உடனான நடவடிக்கைகள், உணவு மற்றும் உறக்கத்திற்கான நேரம் ஆகியவை போக நேரமிருந்தால் மட்டுமே இந்த நேரத்தை ஒதுக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்படி ஏதும் குறிப்பிட்ட நேர நிர்ணயம் இல்லையென்றாலும், அதேபோல் அவர்களது பள்ளி நேரம், விளையாட்டு, குடும்ப நேரம், உணவு மற்றும் உறக்கம் ஆகியவை போக மீதமிருக்கும் நேரத்தில் மட்டுமே அனுமதிக்கலாம். இதுபோக, உணவு நேரத்திலோ, உறங்கும் நேரத்திலோ கட்டாயமாக டிஜிட்டல் சாதனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என வலியுறுத்துகிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன். அதேவேளையில், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் என்ன செய்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. அவரது கூற்றுப்படி, கற்றல் தொடர்பான எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கலாம், ஆனால் சமூக ஊடகங்கள், வீடியோ கேம்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான உள்ளடக்கங்கள் ஆகியவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. மேலும், “அவ்வப்போது குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை அருகிலிருந்து கவனித்து, அதுகுறித்து அவர்களுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் உரையாடல்களை (Co-Tutoring) நிகழ்த்த வேண்டும். இது குழந்தைகள் மத்தியில் சிந்தனைத் திறனை வளர்க்கும்.” என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை ரீல்ஸ் செய்ய வைப்பது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியப் பிரச்னையாக ரீல்ஸ்களை எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் முன்வைக்கிறார். அவரது கூற்றுப்படி, ஒரு குழந்தையை ரீல்ஸ் செய்ய வைப்பது என்பது தவறான அணுகுமுறை. “ஒரு குழந்தைக்கு அதன் புகைப்படமோ, வீடியோவோ சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்போது அதன் விளைவுகள் – நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எதுவாக இருப்பினும் – என்ன என்பது தெரியாது. அப்படியிருக்கையில், அந்தக் குழந்தை எதிர்காலத்தில் விவரம் தெரியும்போது இத்தகைய செயல்களைப் பற்றிய விருப்பமின்மை ஏற்படலாம். அது அவர்களை மனதளவில் பாதிக்கும்,” என்கிறார் அவர். இந்தக் கருத்துடன் உடன்படுகிறார் சமூக ஊடக பிரபலமான அஷ்மிதா. “என் குழந்தையை லாப நோக்கத்துடனோ, கட்டாயப்படுத்தியோ நான் இன்ஸ்டா ரீல்ஸ்களில் பங்கெடுக்க வைப்பதில்லை. அதேவேளையில், அவர்களின் விருப்பம் என்பது மிகவும் முக்கியம். குழந்தைகளை அவர்களின் போக்கில் வளர விடுவதே மிகவும் தேவையான ஒன்று.” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதுகுறித்துப் பேசிய மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன், “குழந்தைகளை கட்டாயப்படுத்தி ரீல்ஸ் செய்ய வைப்பது அவர்களது மனநலனை பாதிக்கும். அதோடு, சட்டத்திற்குப் புறம்பான வகையில் அவர்களைக் காட்சிப்படுத்துவதும் தவறு,” என்று வலியுறுத்துகிறார். அதேவேளையில், இப்படியாக ரீல்ஸ் செய்வதில் ஈடுபடும் குழந்தைகளைப் பெற்றோர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவற்றின் மீது ஒரு தீவிர ஈடுபாடு வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். அதாவது, எப்போதும் ரீல்ஸ் செய்வதில் குறியாக இருக்கும் வகையிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனே சுதாரித்து, குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி, ரீல்ஸ் செய்வதை நிறுத்தி, திசைதிருப்ப வேண்டியது அவசியம். https://www.bbc.com/tamil/articles/cv227zp3jvwo
  6. மோசமான உணவு நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதுடன் பல நோய்களையும் உண்டு பண்ணுகிறது. எது மோசமான உணவு என்றால் எது மலிவானதோ, எளிதாக கிடைக்கிறதோ அதுவே மோசமான உணவு. கடந்த சில ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது. உடல் நலத்தை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இன்று அரிசி, கோதுமை விலை குறைவு, அதை விட மைதா விலை மலிவு. பலவிதமான காய்கறிகளையும் பனீர், டோபு, சிக்கன், சீஸ் உள்ளிட்ட புரதங்களையும் சேர்த்த சாலட்டைப் பண்ணுவதற்கு ஆகும் செலவுக்கு இரண்டு நாளைக்கு சோறு, குழம்பு வைத்து சாப்பிடலாம் (காய்கறி விலை மிக மிக அதிகமாகி விட்டது; சிக்கன் கிலோ முன்னூறைத் தாண்டி விட்டது. அரிசி விலை என்றுமே உயராது. இலவசமாகவே கிடைக்கிறது. மைதா விலை ஏறுவதே இல்லை.). ஒருவருக்கு ஒருநாளைக்கான 60-80 கிராம் புரதத்தை அடைய செய்யும் செலவுக்கு பத்து நாட்களுக்கு மாவுச்சத்து உணவுகளை ஜாலியாக சாப்பிடலாம். மேலும் காய்கறிகளை வாங்கி கழுவி நறுக்கி வாயிலிட்டு மென்று சாப்பிடும் சிரமத்துக்கு ரெண்டு தோசை ஊற்றி சாப்பிடுவது, புரோட்டாவை பிய்த்துப் போட்டு முழுங்குவது எளிது. மூன்று முட்டைகள் சாப்பிட்டால் ஒருநாளைக்குத் தேவையான புரதத்தின் நான்கில் ஒரு மடங்கே கிடைக்கும். நீங்கள் கவனமாக தேடிப் பிடித்து சாப்பிடாவிட்டால் மொத்த நாளுக்குமான புரதத்தை அடைய முடியாது. ஆனால் ஒருநாளைக்கான மாவுச்சத்தை ஒரே மதிய வேளை சாப்பாட்டில் அடைந்துவிடலாம். இது சாப்பாட்டுக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த உலகில் பயனற்றவை சுலபமாக, மலிவாக கிடைக்கும். கடந்த ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த மலிவான உணவை சுவையாக மாற்ற முடிந்ததும், அதன் உற்பத்தியை தொழில்மயமாக்கி அதை உறையிலிட்டு செயற்கை சுவையூட்டிகளையும் அதிக சர்க்கரையை / உப்பை சேர்த்து மலிவான விலையில் நமக்குத் தர முடிந்ததுதான். இதனால் இந்தியாவில் சாப்பிட உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் இன்று அனேகமாக இல்லை, ஆனால் சத்தான உணவு இன்றி நோயுறுபவர்கள் அதிகம். அமெரிக்காவில் இதைக் குறித்து செய்த ஆய்வில் வேலையின்றி தெருவில் வசிப்பவர்கள் அங்குள்ள பீட்ஸா துரித உணவுக் கடைகளில் இருந்து மீதமாகும் உணவை வாங்கி சாப்பிடுவதால் மிகவும் உடல் பருத்து பல நோய்களுடன் வாழ்வதைப் பற்றி கண்டறிந்தார்கள். அதாவது நாம் பகட்டு உணவாக கருதுவதே இன்று ஏழைகள் உண்டு உடல் நலிவது. இன்னொரு பக்கம், மேல்மத்திய வர்க்கமும் பணக்காரர்களும் இந்த சுவையான மலிவான உணவை விட்டு விலகி சுவையற்றதாக கருதப்படும் காய்கறிகள், சுட்ட கறி, மாவுச்சத்து குறைவான உணவுகளை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளில் இருந்து மத்திய வர்க்கம் வரை இன்று அதிகமாக கொழுத்து நீரிழிவு, மாரடைப்பு ஆகிய நோய்களால் தவிக்க மேல்மத்திய, மேற்தட்டினர் அதிக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இந்த மலிவான உணவைப் பற்றிப் பேசும் போது இன்று உடலுழைப்பு குறைந்துவிட்டதால் மாவுச்சத்து தேவைக்கு மிகுதியாகிறது எனக் கூறுகிறோம். இது உண்மையல்ல. 300-400 கிராம் மாவுச்சத்தானது கடுமையாக உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் அதிகமானதே. எந்த உடலுழைப்பாளியாலும் இந்தளவுக்கு உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது, சாப்பிட்டவுடன் தூங்கவே தோன்றும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உடலுழைப்பாளிகள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நொறுக்குத்தீனி, சாக்லேட், பிரியாணி, சரக்கு, பொரித்த கறித்துண்டுகள் என நள்ளிரவு இரண்டு மணிவரை உண்டார்களா? இல்லை. 2-3 முறைகள் தான் அவர்கள் உண்டார்கள். என்னதான் அரிச்சோறு உண்டிருந்தாலும் அவர்களால் 160 கிராமுக்கு மேல் மாவுச்சத்தை உண்டிருக்க முடியாது (அரைக்கிலோ சோறிலே கூட140 கிராம் மாவுச்சத்து தான்.). பிரச்சினை உடலுழைப்பு குறைந்ததல்ல நமது மலிவான உணவு உற்பத்தி மிகுந்துவிட்டதே. சூமோ மல்யுத்த வீரர்கள் ஒருநாளைக்கு 7000-10000 கலோரிகள் (சிலநேரங்களில் 20,000 கலோரிகள்) உட்கொள்வார்கள் எனில் நம்மில் பலரும் 5000 கலோரிகளாவது குறைந்தது சாப்பிடுகிறோம். நமது உணவுச்சந்தை அனைவரையும் சூமோ மல்யுத்த வீரர்களை போல சாப்பிட வைக்கிறது. நம் உடலால் இதை கையாள முடியவில்லை. சூமோ மல்யுத்த வீரர்களைப் போல நம்மால் 6-8 மணிநேரங்கள் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி செய்யவும் முடியாது. பிரச்சினை நம் உடலுழைப்பு இன்மை அல்ல. இன்றைய நோய்வாய்ப்பட்ட நவீன சமூகம் மலிவான உணவு சந்தையின் சோதனை எலிகள் மட்டுமே. இந்த தொழில்மயமாக்கப்பட்ட உணவுச்சந்தையில் இருந்து விடுபடும் போதே நம்மால் தரமான உணவை நோக்கி கவனம் செலுத்த முடியும். காய்கறிகளின், பழங்களின், புரத உணவின் விலையை குறைக்க முயல முடியும். ஜப்பானியர்கள் சோயா உணவுகளை புரதத்துக்காக பயன்படுத்துவது இதற்கு நல்ல உதாரணம் - அவர்கள் சோயாவை டோபூ, மிஸோ, நாட்டோ என பலவிதங்களில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருநாளைக்கு தேவையான புரதத்தின் பாதியை அனேகமாக அவர்கள் சோயாவில் இருந்து பெறுகிறார்கள். மிருக கறியைப் போல் அன்றி சோயா உணவில் கொழுப்பு மிக மிக குறைவு. (சோயாவில் உள்ள ஐசோபிளேவேன்கள் ஆபத்து விளைவிப்பது மிக மிக அதிகமாக தினமும் உட்கொள்ளும் போது மட்டுமே. ஜப்பானியர்களுக்கு அதனால் எஸ்டிரோஜென் பிரச்சினையே ஏற்படுவதில்லை. பாரம்பரிய ஜப்பானியர் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள்.) அவர்களுடைய மரபான உணவு புரதத்தை அதிகமாக இவ்வாறு சோயாவில் இருந்து இயற்கையாக கிடைக்கும் மீனில் இருந்து பெற்றுத் தருகிறது. நார்ச்சத்தும் ஊரில் கிடைக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது வழி கிடைக்கிறது. மேலைநாட்டு உணவுகளின் தாக்கம் வரும்வரை ஜப்பானியருக்கு சத்தான உணவுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. சத்தான உணவுகளை மலிவாக அவர்கள் உற்பத்தி செய்தார்கள். ஆனால் மேற்கத்திய மலிவான உணவுகள் பரவிட, மூன்றாம் உலக நாட்டு அரசுகள் அரிசி, கோதுமை உற்பத்தியிலே கவனம் செலுத்த சத்துணவுகளின் (காய்கறிகள்) உற்பத்தி குறைந்து விலை அதிகமாகியது (நம்மூரில் பசுமைப்புரட்சி). முதலாம் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிய, வேலைகள் குறைய அங்கும் சத்தான உணவு விலை அதிகமாகி பீட்ஸா, சாண்ட்விட்ச் ஒப்பீட்டளவில் மலிவாகியது. இப்போது இந்தியாவில் ஒரு கிலோ கேரட் வாங்கும் பணத்தில் பாதியிருந்தாலே நீங்கள் ஒரு பெரிய கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். மூன்று பாக்கெட் கிரீம் பிஸ்கட் / ஐந்து கேக்குகள் / பெரிய சாக்லேட் பார் சாப்பிடலாம். கவனியுங்கள் - சர்க்கரை, மைதா, எண்ணெய்யால் செய்யப்படும் அவசியமற்ற உணவுகளின் விலை பெரிய மாற்றமின்றி தொடர்கிறது. ஆனால் காய்கறி, பழம், தண்ணீர் என அவசியமானவற்றின் விலை அதிகமாகி விட்டன. பொதுவாக தேவை அதிகமாக விலை அதிகமாகும் என்பார்கள். இது உண்மையெனில் சர்க்கரை, மைதாவின் விலையே உலகெங்கும் அதிகமாக வேண்டும். ஆனால் எது குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதன் விலையே அதிகமாகிறது. ஏனெனில் சந்தை அதன் உற்பத்தியை திட்டமிட்டு குறைக்கிறது. ஒரு கிலோ வெள்ளரிக்காயின் விலைக்கு நான்கில் ஒரு மடங்கு இருந்தால் இரண்டு சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். ஒரு கிலோ நாட்டுத்தக்காளியின் விலைக்கு 12 சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். நமது உணவு சந்தையும் அரசும் சேர்ந்து ஏன் துரித உணவை மட்டும் அனைவராலும் வாங்கக் கூடிய அளவுக்கு மலிவாக வைத்திருக்கிறது? ஒரு நல்ல கடையில் இரண்டு தோசை சாப்பிடும் பணத்தில் நீங்கள் ஆறு வேளைகள் துரித நூடில்ஸ் சாப்பிட முடியும் எனில் இந்த சந்தை நம் சாமான்யர்களிடம் சொல்வதென்ன? அரசும், சந்தையும் நமது பெரும்பான்மை மக்கள் சமூகத்தை வெறுமனே மைதா, சர்க்கரை, ரசாயன நிறமூட்டி, சுவையூட்டிகளை மட்டும் சாப்பிட விரும்புகின்றன. இன்று சின்ன குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை பசிக்கும் போது சாப்பிட விரும்புவது மாகி நூடுல்ஸ் எனும் விஷத்தை தான். சுவையினால் மட்டுமல்ல அதன் விலையினாலும் தான். சமச்சீராக உணவு உண்ட மரபான சமூகங்களையும் இவர்கள் பருவச்சூழலை மாற்றி, அரசின் திட்டங்களை திருத்த வைத்து, சந்தையின் போக்கை மாற்றி மலிவான சத்தில்லாத உணவுகளை மட்டும் உண்ண வைத்து கெடுத்துவிட்டார்கள். இந்த சந்தையை ஆதரிப்பவர்கள் இரண்டு பெரும் இந்திய பஞ்சங்களைக் குறிப்பிட்டு இன்று நாம் பசியில்லாமலாவது இருக்கிறோமே, நவீன சந்தை நம்மை காப்பாற்றவே செய்துள்ளது என்பார்கள். ஆனால் ஒரு வசதியான உண்மையை மறைத்துவிடுவார்கள் - அந்த பஞ்சங்கள் காலனிய ஆட்சியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. வெள்ளையர்கள் வரும் முன்பு இங்கு அப்படியான பஞ்சங்கள் இருக்கவில்லை. காலனியாதிக்க அரசு நமது வளத்தை முழுமையாக சுரண்டி, உற்பத்தி முறைகளை ஒழித்து, பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியதாலே நாம் மீண்டு வர அரை நூற்றாண்டுக்கு மேலானது. அல்லாவிடில் நாம் உலகின் வளமான தேசங்களில் ஒன்றாக இருந்திருப்போம். நவதாராளவாதம் வழியாக தொடுக்கப்படும் இரண்டாம் நவகாலனியாதிக்க யுத்தமே இந்த மலிவான உணவுகளால் நம் சந்தையை நிறைக்கிறது. அதுவே நம்மை நோயாளிகளாக, பலவீனர்களாக ஆக்குகிறது. என்ன வித்தியாசம் எனில், முன்பு போல் அன்றி, நாடுகள் குறித்த பாரபட்சமின்றி அமெரிக்கர்களையும், இங்கிலாந்தினரையும் நம்மை இந்த தாராளவாத உணவு லாபி ஒரே போல அழிக்கிறது. உலகம் முழுக்க மெலிந்த எலும்புக் கூடுகளுக்குப் பதில் கொழுத்து நோய்வாய்ப்பட்டவர்கள். முன்னவர்கள் விரைவில் செத்தார்கள் எனில் பின்னவர்கள் மெல்ல மெல்ல துன்புற்று சாகிறார்கள். Posted 3 hours ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/06/blog-post_1.html @Justin அண்ணை உங்கள் கருத்துகளை சொல்லுங்கோ.
  7. பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 1 ஜூன் 2024, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் முழுக்கமுழுக்க முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவியிருக்கிறது இந்தியா. சென்னை ஐஐடி-யில் 2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வியாழக்கிழமை (மே 30) காலை 07:15 மணிக்கு அக்னிகுல் தயாரித்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘அக்னிபான்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் ஒரே தனியார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுதளம் அக்னிபானை உருவாக்கிய அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஒற்றை-நிலை ராக்கெட், 'அக்னிகுல் அக்னிலைட்' என்று பெயரிடப்பட்ட என்ஜினால் ஆற்றல் பெறும். இது முழுக்க முழுக்க முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான உலகின் முதல் ராக்கெட் என்ஜின் என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ஆலோசகர் சத்யநாராயணன் ஆர். சக்ரவர்த்தி கூறுகிறார். 3டி அச்சு என்ஜின் என்பது ராக்கெட் என்ஜின் தயாரான விதத்தைக் குறிக்கும் தொழில்துறை பயன்பாட்டு குறியீடு ஆகும். அதாவது, கணினி வடிவமைப்பு மற்றும் 3டி ஸ்கேனர் மூலம் ராக்கெட் ஒவ்வொரு கட்டமாக மிக துல்லியமாக தயாரிக்கப்படும். முப்பரிமாண அச்சு என்பதால் இந்த என்ஜினில் பாகங்களை இணைக்க வெல்டிங் செய்ய தேவையில்லை. ஆகவே தான், இது ஒற்றை பாக முப்பரிமாண அச்சு என்ஜின் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி துறையில் 3டி தொழில்நுட்பம் பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS விண்வெளித் துறையில் 3டி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் 3டி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை ஆராய்ந்து வருகின்றன. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ஆலோசகரும் சென்னை ஐஐடி-யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறை பேராசிரியருமான சத்யநாராயணன் ஆர். சக்ரவர்த்தி, “வெவ்வேறு நாடுகளில் ராக்கெட் என்ஜினின் பல்வேறு பாகங்களைத் தனித்தனியாக 3டி அச்சுத் தொழில்நுட்பம் மூலம் தயாரித்துள்ளனர். அந்தப் பாகங்களை ஒன்றாக இணைக்க, அவற்றைப் பற்றவைக்க (வெல்டிங் செய்ய) வேண்டும். அந்த இணைப்புகள் உறுதியானதாக இருப்பது முக்கியம். வெல்டிங் செய்வதால் என்ஜினின் எடை கூடும். நாங்கள் தயாரித்துள்ள ஒற்றைப் பாக என்ஜினில் எந்த வெல்டிங்கும் தேவைப்படாது. எனவே என்ஜினின் எடை அதிகரிக்காது,” என்றார். இந்த ராக்கெட் 30 முதல் 300 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லக் கூடியது என்று அதை உருவாக்கிய குழுவினர் தெரிவிக்கின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி, “நேற்று விண்ணில் ஏவப்படும் போது, ராக்கெட்டில் செயற்கைக்கோள் எதுவும் இல்லை. இது புவியின் துணைச் சுற்றுப்பாதை வரை மட்டுமே ஏவப்பட்டது. ஆனால் இதன் திறன் 300 கிலோ எடையை 700 கி.மீ உயரம் வரை தூக்கிச் செல்லக் கூடியது. அடுத்த சில மாதங்களில் அது சோதித்துப் பார்க்கப்படும்,” என்றார். பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS 3டி அச்சு எப்படி வேலை செய்கிறது? கணினி மூலம் என்ஜினின் தேவையான வடிவத்தைப் பொறியாளர்கள் வடிவமைக்கிறார்கள். என்ஜினில் இருக்கும் சிறிது முதல் பெரிது வரையிலான அனைத்து பாகங்களும் டிஜிட்டலில் வடிவமைக்கப்படும். பிறகு ரொட்டியை வெட்டுவது போல, இந்த வடிவத்தை அடுக்கடுக்காக பிரித்து, 3டி பிரிண்டர் அதை முழுமையாகப் படித்துக் கொள்ளும். பின்னர், எந்தப் பாகத்தை தயாரிக்க விரும்புகிறோமோ, அதற்குத் தேவையான உலோகக் கலவையை நன்கு பொடியான வடிவத்தில் இயந்திரத்தில் உட்செலுத்த வேண்டும். அக்னிகுல் ராக்கெட்டின் என்ஜின் நிக்கல் கலவையில் (Nickel Alloy) தயாரிக்கப்பட்டது. இந்தப் பொடியை உருக்கி, தேவையான வடிவத்தில் பிரிண்டர் பரப்புகிறது. பிறகு ஒரு கேக்கின் மீது கிரீம் தடவுவது போல, பிரிண்டர் ஒவ்வொரு அடுக்காகக் கீழிருந்து மேலாக தயாரிக்கும். ஒவ்வொரு அடுக்கும் தயாரான பிறகு, அடுத்த அடுக்கை சேர்க்கும் முன்பு அதனை குளிரச் செய்து திடப்படுத்த வேண்டும். முழு என்ஜினும் நிறைவடையும் வரை இந்தச் செயல்முறை தொடர்கிறது. அச்சிட்டு முடிந்த பிறகு, அதிகப்படியான பொருளை அகற்றுவது அல்லது மேற்பரப்பை மெருகூட்டுவது போன்ற சில திருத்தங்கள் செய்யப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,3டி பிரிண்டர் (சித்தரிப்புப் படம்) தரையிலேயே நடத்தப்பட்ட சோதனைகள் ராக்கெட்டில் என்ஜின் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரத்தைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வக சூழலைத் தாண்டி, புவியின் சுற்றுச்சூழலில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க அழுத்தச் சோதனைகள், வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படும். “நாங்கள் என்ஜினின் பல்வேறு பாகங்களை 3டி மூலம் தனித்தனியாகத் தயார் செய்து, தையூரில் உள்ள சென்னை ஐஐடி-யின் ஆய்வு வளாகத்தில் 30-40 முறை தரையிலிருந்தே சோதனை செய்துள்ளோம். என்ஜினைத் தரையில் நிறுத்த எவ்வளவு அழுத்தம் தேவைப்படுகிறது, என்ஜினின் உந்துசக்தி வ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்,” என்கிறார் பேராசிரியர் சக்ரவர்த்தி. என்ஜின் அனைத்து சோதனைகளையும் கடந்தவுடன், அது ஒரு முழுமையான ராக்கெட்டாக ஒருங்கிணைக்கப்படத் தயாராக உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பு எரிபொருள் தாங்கிகள், வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பிற கூறுகளுடன் இணைக்கப்படும். பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS படக்குறிப்பு,ராக்கெட்டில் என்ஜின் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது மண்ணெண்ணெயில் இயங்கும் ஒரே ராக்கெட் இந்த என்ஜின் திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் நாட்டின் ஒரே ராக்கெட். “பொதுவாக ராக்கெட்டின் கீழ் நிலையில் உள்ள என்ஜினில் திட எரிபொருள் மற்றும் எரிவாயு பயன்படுத்தப்படும். அவை எரிவாயு தாங்கிகள் தயாரிக்கப்படும் போதே நிரப்பப்பட வேண்டும். இந்த செமி க்ரையோஜெனிக் என்ஜினில் திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டுமே மிக எளிதாகக் கிடைக்கக் கூடியவை. ராக்கெட்டை ஏவுதளத்துக்குக் கொண்டு சென்ற பிறகு இதை நிரப்பிக் கொள்ளலாம். எனவே, ராக்கெட்டைக் கையாள்வது எளிமையாக இருக்கும். இந்த என்ஜினை மறு உபயோகம் செய்து கொள்ளலாம்,” என்கிறார் அக்னிகுல் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் கிரிதர். “இந்த முறையில் உருவாக்கப்படும் என்ஜினின் திறன் பிரின்டரின் அளவைப் பொருத்தே அமைகிறது. பெரிய பிரின்டராக இருந்தால், பெரிய என்ஜின் தயாரிக்கலாம். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லலாம். நாங்கள் பயன்படுத்தியது ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட பிரின்டர், இதுதான் இப்போதைக்கு இந்தியாவிலேயே பெரிய 3டி பிரிண்டர்,” என்று விளக்குகிறார் பேராசிரியர் சக்ரவர்த்தி. என்ஜினைத் தயாரிக்கும் செலவும் காலமும், 3டி அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் பன்மடங்கு குறைகிறது. “3டி அச்சு முறையில் தயாரிக்கப்படும் ஒரு என்ஜினை தயார் செய்ய 72 மணிநேரமே ஆகும். ஆனால் வழக்கமான முறையில் தயாரிக்க 2 முதல் 3 மாதங்கள் ஆகும். மேலும் 3டி அச்சு மூலம் தயார்செய்ய வழக்கமான முறையில் ஆகும் செலவில் பத்தில் ஒரு மடங்கே செலவாகும். இந்த ராக்கெட்டுகள் சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சிப் பூங்காவில் 'அக்னிகுல் ராக்கெட் தொழிற்சாலை'யில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு இரண்டு என்ஜின்களை இங்கே தயார் செய்ய முடியும்,” என்கிறார் அக்னிகுல் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் கிரிதர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் விண்வெளித் துறையில் தனியார்மயம் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது 'ஒற்றை நிலை ராக்கெட்' ஆகும். அதில் ஒரு என்ஜின் மட்டுமே இருந்தது. அடுத்ததாக இரட்டை நிலையிலான ராக்கெட்டைச் சோதித்துப் பார்க்கவுள்ளது அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம். மேலும் இந்த ராக்கெட் ஒவ்வொரு முறையும் ஒரே எண்ணிக்கையிலான என்ஜின்களைக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் எப்படி விரும்புகிறார்களோ, அப்படி அதை வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். "முதல் நிலையில், நான்கு முதல் ஏழு என்ஜின்கள் இருக்கலாம், தேவைப்படும் திட்டங்களுக்கு இரண்டாவது சிறிய நிலை சேர்க்கப்படும். இரண்டு வாரங்களில் தேவையான பொருளை ராக்கெட்டில் பொருத்தித் தரமுடியும் என்று உறுதியளிக்கும் அக்னிகுல் தற்போது பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தும் எதிர்காலத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தலாம்," என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு 'ஸ்கை ரூட்' என்ற தனியார் நிறுவனம் தனது ராக்கெட்டை விண்ணில் ஏவியது முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதன்பிறகு, இந்தியாவின் இரண்டாவது தனியார் ராக்கெட்டாக அக்னிபான் விண்ணில் பாய்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் விண்வெளித் துறையை தனியார்மயமாக்குவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் 2020-ஆம் ஆண்டில் விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் தனியாருக்கான கதவு திறக்கப்பட்டது. “அக்னிபான் ராக்கெட் வணிக ரீதியாகத் தேவைப்படுபவருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் திட்டம். புகைப்படங்களைப் பதிவு செய்வது, தொலைதொடர் இணைப்புகளை உருவாக்குவது எனப் பல்வேறு காரணங்களுக்காகச் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்,” என்கிறார் கிரிதர். https://www.bbc.com/tamil/articles/cyxxj919290o
  8. 01 JUN, 2024 | 08:12 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (01) மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/185072
  9. பையா மேற்கிந்திய அணி அவுசிற்கு சாத்தியிருக்கு பயிற்சிப் போட்டியில்!
  10. அப்ப இந்த 6, 15, 24 என்ன மாதிரி என்று சொல்லுங்க பாப்பம்?!
  11. பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கங்கள் வெல்பவர்களுக்கு பணப்பரிசுகள்; சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு! 01 JUN, 2024 | 11:53 AM (ஆர்.சேதுராமன்) எதிர்வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வெல்பவர்கள் அனைவருக்கும் பணப்பரிசுகளை வழங்கப்போவதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அச்சங்கம் புதன்கிழமை (29) தெரிவித்துள்ளது. இதன்படி, பாரிஸ் 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 100,000 அமெரிக்க டொலர்களும் வெள்ளிப் பதக்கத்துக்கு தலா 50,000 டொலர்களும், வெண்கலப் பதக்கத்துக்கு தலா 25,000 டொலர்களும் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது. இப்பரிசுத்தொகையை போட்டியாளர், பயிற்றுநர் மற்றும் தேசிய சம்மேளனத்துக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதன்படி, தங்கப்பதக்கத்துக்கு வழங்கப்படும் 100,000 டொலர்களில் போட்டியாளர் 50,000 டொலர்களைப் பெறுவார். அவரின் தேசிய சம்மேளனத்துக்கும் பயிற்றுநருக்கும் தலா 25,000 டொலர்கள் வழங்கப்படும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் உமர் கிரேம்லேவ் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்யும் உரிமையை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடமிருந்து (ஐ.பி.ஏ) சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஓ.சி) நீக்கியுள்ள நிலையில் அச்சங்கம் இப்பணப்பரிசு அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் ஐ.ஓ.சியினால் பணப்பரிசுகள் வழங்கப்பட்டதில்லை. எனினும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மெய்வன்மைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 50,000 டொலர் வழங்கப்படும் என மெய்வன்மைப் போட்டிகளுக்குப் பொறுப்பான வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (சர்வ.தேச மெய்வல்லுநர் சங்கங்களின் சம்மேளனம்) கடந்த மாதம் அறிவித்தது. இத்தீர்மானத்துக்கு வேறு பல விளையாட்டுகளின் சர்வதேச சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குத்துசண்டையில் 3 பதக்கங்களுக்கும் பரிசு வழங்குவதாக ஐ.பி.ஏ. அறிவித்துள்ளது. ஐ.பி.ஏ. அறிவிப்பின்படி, மெய்வன்மைப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களைவிட குத்துச்சண்டையில் தங்கம் பெறுபவர்களுக்கு இரு மடங்கு பரிசுத்தொகை வழங்கப்படும். சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐ.பி.ஓ) ரஷ்ய எரிவாயு நிறுவனமான கேஸ்புரோமின் ஆதரவுடன் இயங்குகிறது. ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளை இச்சங்கமே முன்னர் ஏற்பாடு செய்துவந்தது. எனினும், நிர்வாகம், நிதி, போட்டி மத்தியஸ்தம் முதலியன தொடர்பான சர்ச்சையின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் குத்துச்சண்டை ஏற்பாட்டு உரிமையும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஐ.ஓ.சியே ஏற்பாடு செய்தது. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலும் ஐ.ஓ.சி.யே குத்துச்சண்டை போட்டிகளுக்கு பொறுப்பாக உள்ளது. ஐ.பி.ஏ.வுக்கான தனது அங்கீகாரத்தை கடந்த வருடம் ஐ.ஓ.சி. நீக்கியிருந்தது. https://www.virakesari.lk/article/185032
  12. வட மாகாணத்தில் இருந்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தகுதி இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகின. இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சையில் 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 173,444 பேர் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2023 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/302911
  13. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2024 | 04:00 PM அடுத்த 50ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் இடமாக பொதுநூலகம் விளங்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் ஆசியாவின் பிரமாண்ட நூலகத்திற்காக நூல்களை சேகரிக்கும் வகையில் புத்தக திருவிழா என்னும் நிகழ்வின் ஊடாக புத்தகங்களை சேகரிக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மட்டக்களப்பில் இந்த பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில் அதன் நிர்மாண பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காணவுள்ள நிலையில் இந்த நூல் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மு.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி சிவலிங்கம், வவுனியா போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன், இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஆனந்தா சுவாமிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது புத்தக திருவிழாவினை ஆரம்பித்துவைக்கும் வகையில் நூல்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது பெருமளவானோர் புத்தகங்களை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த உயரிய பணிப்பு அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழுவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நூலகத்திற்கு மூன்று இலட்சம் நூல்களை பெறும்நோக்கில் இந்த செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்களையும் உதவுமாறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. சிங்கள பேரினவாதிகளினால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சோகமான ஒரு நாள் இன்று. நீங்கள் எதனை எரித்தாலும் பிழையான விடயங்கள் நிலைத்திருக்காது, சரியானவை சரியான இடத்தில் சேரும் என்பதை அப்படியானவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் மிகப்பெரும் செய்தியை வழங்கியுள்ளதாகியுள்ளார்கள். மூன்று இலட்சம் நூல்களுடன்தான் பொதுநூலகம் திறக்கப்படும். நாங்கள் திறப்பது புத்தக சாலை. அதனை திறப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். பாடசாலை கல்வியை கற்று வைத்தியராகவும் பொறியியலாளராகவுரும் வருவது கல்வித்துறையின் அடிப்படை விடயம். கண்டுபிடிப்புகள் புதிய மாற்றங்கள் மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேரறிஞ்ஞர்களை உருவாக்குவதுதான் புத்தகங்களின் பணியாகும். அந்த பணிக்கான அத்திபாரத்தினையே நாங்கள் இடுகின்றோம். https://www.virakesari.lk/article/185057
  14. இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி வெற்றி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. https://thinakkural.lk/article/302898
  15. 01 JUN, 2024 | 04:10 PM நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று சனிக்கிழமை ( 01) தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார். நயினாதீவு - குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும். மற்றும் குறிகட்டுவான் - நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185049
  16. எமது சிறிய கிராமசேவகர் பிரிவில் இருந்து நீண்ட காலத்தின் பின் உள்ளூரிலே கல்வி கற்று மருத்துவ பீடத்திற்கு முதலாவது மாணவி தெரிவாகியுள்ளார்.
  17. Published By: RAJEEBAN 01 JUN, 2024 | 10:44 AM யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் யோசனையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆறுவாரகால யுத்தநிறுத்த திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி காசாவில்பொதுமக்கள் அதிகமாகவாழும் பகுதிகளில்; இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவார்கள். மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் பணயக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜோபைடன் முன்வைத்துள்ள திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தினை சாதகமாக பரிசீலிக்கவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி யுத்த நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்தில் முழுமையான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்படுவார்கள். பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் விடுதலையும் காசாவின் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினர் விலக்கிக்கொள்ளப்படுவதும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185024
  18. இந்தியாவில் கடும் வெப்பம் ; 85 பேர் உயிரிழப்பு 01 JUN, 2024 | 10:20 AM கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதேவேளை, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் வெப்பம் காரணமாக அனைத்து பாடசாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முன்பள்ளிபாடசாலைகள் வருகிற 8 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185017
  19. Published By: RAJEEBAN 01 JUN, 2024 | 10:59 AM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து எங்களின் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்தியாவிற்கு சென்ற நான்கு இலங்கையர்கள் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன அவர்களின் சகாக்கள் கூட விசாரிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தொடரும் விசாரணைகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் மததீவிரவாதிகள் இல்லை அவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்கள் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் உள்ளோம் என்பதை பொதுமக்களிற்கு உறுதியாக தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185025
  20. சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் 20வது நினைவேந்தல் நிகழ்வு 01 JUN, 2024 | 10:49 AM AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் 20வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (31) மாலை திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். மட்டக்களப்பில் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185022
  21. 01 JUN, 2024 | 10:41 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடையவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இவர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்ற வழியில் பதுங்கியிருந்த இனந்தெரியாத சந்தேகநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சத்தம் கேட்ட போது அவரது மனைவி வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ள வேளை மனைவியையும் தாக்கி அவரிடம் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185019
  22. யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்தி Published By: VISHNU 01 JUN, 2024 | 02:47 AM வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/185011
  23. Published By: VISHNU 01 JUN, 2024 | 02:44 AM ( எம்.நியூட்டன்) திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் அக்கறை எடுத்தல் வேண்டும் . சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தமிழர்களின் தலையாய கோவிலாகிய திருக்கோணேச்சரத்தை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். திருக்கோணேச்சரத்துக்கு செல்லும் பாதையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அவ்விடத்தில் இருந்து நீக்கி அவர்களுக்கு மாற்று ஒழுங்கு செய்யவும். கோணேச்சரத்துக்கு செல்லும் பக்தர்களின் புனித வழிபாட்டுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். திருக்கோணேச்சர இடையூறுகளைச் திருப்பணிக்கு தொல்லியல் திணைக்களம் பல்வேறு செய்து வந்துள்ளது. இவ்விடையூறுகளை நிறுத்தி திருக்கோணேச்சரத்தின் பாரிய திருப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்து உதவுங்கள். திருக்கோணேச்சர புனித தீர்த்தமாகிய பாபநாசம் தீர்த்தக்கரையை புனருத்தாரணம் செய்து பொதுமக்கள் அவ்விடத்தில் தமது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். திருக்கேதீச்சர ஆலயத்தை இந்திய அரசு கருங்கற் கோயிலாக புனர்நிர்மாணம் செய்தது போல் திருக்கோணேச்சரத்தையும் அழகாக நிர்மானிப்பதற்கு இந்திய அரசிடம் வேண்டுதல் விடுவிக்கப்பட்டது. அவர்கள் அக்கறையாக இருப்பதாக தகவல்கள் திரட்டினார்கள் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேற்படி விடயங்கள் தொடர்பாக மதிப்பார்ந்த ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு நன்றியோடு வேண்டுகிறோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/185010
  24. Published By: VISHNU 01 JUN, 2024 | 02:37 AM யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றித் தருமாறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை நேரில் பார்வையிட்டார். இதன்போது அங்கு காணப்படும் அசுத்தமான சூழலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளருடனும் தொடர்பு கொண்டு நிலமைகள் தொடர்பாக பிரஸ்தாபித்தார். https://www.virakesari.lk/article/185009
  25. யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் Published By: VISHNU 01 JUN, 2024 | 02:16 AM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடரேற்றபட்டது. தொடர்ந்து ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊடகவியலாளர் ஐயாத்துரை நடசேனின் நினைவுரையும் இடம்பெற்றது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 2004 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசன் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185008

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.