Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 7 28 APR, 2024 | 08:59 PM (எம்.மனோசித்ரா) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தற்போது நாடுகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது. இக்கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/182163
  2. Published By: VISHNU 28 APR, 2024 | 07:08 PM காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182176
  3. கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300441
  4. 28 APR, 2024 | 05:26 PM பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார். பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182161
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் ஏற்படும் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது. இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 30% அதிகரித்த ப்ராஸ்டேட் புற்றுநோய் பட மூலாதாரம்,RITU MARWA படக்குறிப்பு,ரிது மர்வா மற்றும் ராஜேஷ் குமார் லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் குமாருக்கு 2022 அக்டோபரில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அவரது மனைவி ரிது மர்வா பிபிசியிடம் ஒரு தொலைபேசி உரையாடலில், "என் கணவர் சிறுநீரை அடக்கி வைப்பதில் பிரச்னைகளை எதிர்கொண்டார். நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இந்த பிரச்னைக்குப் பிறகு, எங்கள் குடும்ப மருத்துவர் அல்ட்ராசவுண்ட் செய்யச் சொன்னார்," என்றார். பரிசோதனையில் ராஜேஷ் குமாருக்கு ப்ரோஸ்டேட் பெரிதாகி இருப்பது தெரிய வந்ததால், மருத்துவர் அவரை ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் அல்லது பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார். இதையடுத்து எம்.ஆர்.ஐ., பயாப்ஸி ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ராஜேஷ் குமாருக்கு இரண்டாம் நிலை ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ப்ரோஸ்டேட் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES `ப்ரோஸ்டேட்` ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகிறது. ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை. ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது. இந்த சிகிச்சை 68 வயதான ராஜேஷ் குமாருக்கும் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரும் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் பேராசிரியராக இருந்த மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இதுபற்றிக் கூறுகையில், இந்த நோய் வயது அதிகரித்த பிறகு தோன்றும் என்றார். மேலும், இது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்றும் கூறினார். தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. "இதற்கு முன்பு இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது, அதாவது 60 வயது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது," என்று அவர் கூறுகிறார். டெல்லியின் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் விக்ரம் பருவா கௌசிக், "மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததால், ப்ரோஸ்டேட் புற்றுநோயும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்," என்றார். பட மூலாதாரம்,DR SVS DEO படக்குறிப்பு,மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பதாக மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். இந்தப் புற்றுநோய் தரவு, புற்றுநோய் பதிவேட்டில் இருந்து கிடைப்பதாகவும் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர். இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனைத் திட்டம் இல்லாததால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் வழக்குகள் குறைவாக இருப்பதாகவும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார். எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது, ஏனெனில் இதன் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. இது ஒரு வாழ்க்கை முறை நோயா? பட மூலாதாரம்,DR PRADEEP BANSAL படக்குறிப்பு,மருத்துவர் பிரதீப் பன்சல் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறையின் இயக்குநரான மருத்துவர் பிரதீப் பன்சல், ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் மரபணு என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது, ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. மேலை நாடுகளில் இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது, ஏனென்றால் இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் பன்சால். சமீபத்திய லான்செட் அறிக்கைப்படி, ப்ரோஸ்டேட் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. மேலும் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தாமதமான நோயறிதல் ஒரு பெரிய பிரச்னை. ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த நபரை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரின் பி.எஸ்.ஏ அளவும் அந்த நபரின் வயதைப் பொறுத்தது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின்படி, எந்த பி.எஸ்.ஏ அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல. முன்பு 4ng/mL அல்லது அதற்கும் குறைவானது சாதாரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இதைவிடக் குறைவாக உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதையும், இதைவிட அதிகமாக அதாவது 10ng/mL வரை உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாததையும் அவதானிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் கீழ்கண்ட பிரச்னைகள் எழுந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது: அடிக்கடி சிறுநீர் கழித்தல் இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது சிறுநீர் தானாக வெளியேறுதல் சிறுநீரில் ரத்தப்போக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்கிறது, அதன் பிறகு கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்: முதுகு வலி எலும்பு முறிவு எலும்புகளில் வலி இதுகுறித்து டாக்டர் பிரதீப் பன்சால் கூறும்போது, “புற்றுநோய் இளம் நோயாளிகளிடம் (வயது 60-75) கண்டறியப்படுகிறது, அது புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது," என்றார். இதற்கான சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும் ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும், ஏனெனில் இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய். ராஜேஷ் குமார் அறுவை சிகிச்சை செய்து சகஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இது மரபணு சார்ந்த நோயா? பட மூலாதாரம்,GETTY IMAGES புற்றுநோய் என்பது மரபணு சார்ந்த ஒரு நோய், அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு குடும்பத்திலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குடும்பத்தில் யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் 45 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் மார்பகப் புற்றுநோயைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் நிலைமை என்ன? பட மூலாதாரம்,DR VIKRAM BARUA KAUSHIK படக்குறிப்பு,மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் லான்செட் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர் என்றும், அதன் நேர்மறையான விளைவைக் காண 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். "கடந்த 80கள் மற்றும் 90களில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள்." மேலும், அதன் விளைவு இப்போது தெரிவதாகக் கூறுகிறார் அவர். மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் கூறுகையில், அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருப்பதாகவும், அதனால்தான் ப்ராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும், அவர் கூறுகிறார். ஆனால் இந்த மருத்துவர்கள் அனைவரும் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாலும், நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். https://www.bbc.com/tamil/articles/cv2d07rdzq9o
  6. அவுஸ்திரேலியா – இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதி பூண்டுள்ளது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல்சூழலைக்கண்காணித்தல்) எனப்பொருள்படும் ‘Disi Rela’ எனஇந்நடவடிக்கைக்குபெயரிடப்பட்டுள்ளது. இப்புதியகூட்டுநடவடிக்கையில், அவுஸ்திரேலியஎல்லைப்படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) இணைந்து செயற்படும் இதன்அறிமுக நிகழ்வில் இத்திட்டம்தொடர்பில் தெளிவுபடுத்திய Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டுமுகவர் நிறுவன) கொமாண்டர்ரியர்அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy)தெரிவிக்கையில் “Disi Rela நடவடிக்கையானது, இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை கோடிட்டுக்காட்டுகிறது” என்றார். அவர்மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா – இலங்கை உறவை தங்கதர நிலைக்கு (Gold Standard )நாம்ஒப்பிடுகிறோம். Disi Rela திட்டம் தொடர்பான இன்றையஅறிவிப்பானது, அதைபிளாட்டினம் நிலைக்கு கொண்டுசெல்கிறது. இந்ததிட்டமானது, கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இருநாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனநான் எதிர்பார்க்கிறேன்.” என்றார். ஆட்கடத்தல், மனிதகடத்தல்உட்படஏனையகடல்சார்குற்றவகைகள்பற்றியசமூகவிழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட, அவுஸ்திரேலியஎல்லைப்படை (ABF) மற்றும் இலங்கை கடலோரகாவல்படை (SLCG) இடையே செயற்பாட்டு திறன்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதை Disi Rela திட்டம் உள்ளடக்கியுள்ளது. இலங்கை கடலோரக்காவல்படை திணைக்களத்தின்பணிப்பாளர் நாயகம், ரியர்அட்மிரல் பூஜிதவிதான இங்குகருத்துத் தெரிவிக்கையில், “கடல்சார்பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வலுவான சமூகவிழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒருதளத்தை Disi Rela வழங்குகிறது.” என்றார். சந்தேகத்திற்கிடமானஅல்லதுசட்டவிரோதகடல்சார்நடவடிக்கைகள்குறித்து 041 750 1400 எனும்பிரத்தியேகஉடனடிதொலைபேசிஅழைப்புமூலம் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழுநாட்களும்முறைப்பாடு செய்யலாம். https://thinakkural.lk/article/300449
  7. நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/300420
  8. ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இனிமேல் பொதுமக்கள் முதற்கட்ட புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியதில்லை. இந்த புகாரை “ஐஜிபியிடம் சொல்லுங்கள்” (tell IGP ) என்ற இணையதளம் மூலமாக பொலிஸ் நிலையம் நிலையம் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளர், சிரேஷ்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரில் ஒருவருக்கு இதன் நகலை அனுப்புவதற்கான அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது. 22 போலீஸ் நிலையங்களில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் கமாண்டர் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/300424 https://telligp.police.lk/
  9. மனிதாபிமான உதவி விநியோகத்திற்காக படையினரை காசாவிற்கு அனுப்பலாமா? ஆராய்கின்றது பிரிட்டன் 28 APR, 2024 | 12:22 PM மனிதாபிமான உதவிகளை வழங்கும் வாகனத்தொடரணிகளின் பாதுகாப்பிற்காக காசாவிற்கு தனது படையினரை அனுப்புவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா உருவாக்கிவரும் பாரிய தற்காலிக இறங்குதுறை ஊடாக செல்லவுள்ள மனிதாபிமான உதவிகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனது படையினரை பயன்படுத்துவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது. இந்த இறங்குதுறையை அமைக்கும் பணிகள் அடுத்த மாதமளவில் கிழக்கு மத்தியதரைகடலில் பூர்த்தியாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க படையினர் கடலில் இருந்து தரைப்பகுதியில்காலடி எடுத்துவைக்க மாட்டார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வேறு ஒருநாடு மிகவும் சவாலான பகுதிகளில் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கையான மனிதாபிமான உதவி விநியோகத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்நிலையிலேயே இது குறித்து பிரிட்டனின் உள்துறை அமைச்சு ஆராய்கின்றது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இந்த விடயத்தில் சவால்கள் காரணமாக பிரிட்டன் இந்த திட்டத்தை கைவிடலாம் எனவும்தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/182140
  10. 28 APR, 2024 | 11:36 AM ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும், காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக வும், செங்கடல் வழியாக செல் லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடல் பகுதியில் செல்லும் பல நாட்டு கப்பல்கள் மீது ட்ரோன்கள் மூலம் குண்டு வீசியும் ஏவுகணை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கடல் வழியாக ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்றபெயருடைய இந்தக் கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் இந்த எண்ணெய்க் கப்பல் வந்தபோது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கப்பலில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஹவுதி படையினரும் உறுதி செய்துள்ளனர். பனாமா கொடியுடன் வந்துகொண்டிருந்த இந்தக் கப்பல் பிரிட்டன் நாட்டுக்குச் சொந்தமானது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில்தான் இந்த கப்பலை பிரிட்டன் விற்பனை செய்ததாகவும், தற்போது அதன் உரிமையாளர் சீஷெல்ஸில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கப்பல் இப்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க்கில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினாருக்கு சென்றபோதுதான் இந்த தாக்குதலை ஹவுதி படை நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் கப்பலில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. https://www.virakesari.lk/article/182124
  11. பாகிஸ்தான் பெண்ணுக்கு டெல்லி நபரின் இதயத்தை பொருத்திய சென்னை மருத்துவர்கள் - எப்படி சாத்தியமானது? கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 27 ஏப்ரல் 2024 “கராச்சியில் இதை விட நெருக்கமாக வீடுகள் இருக்கும். ஆனால் இவ்வளவு வண்ணங்கள் இருக்காது.” மருத்துவமனையின் பதினொறாவது மாடியில் நின்றபடி, ஜன்னல் வழியாக சென்னை நகரத்தைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தார் சனோபர் ரஷீத். 19 வயதான தனது மகள் ஆயிஷாவுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து நம்பிக்கையோடு இந்தியாவிற்கு வந்த அவரின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை நிறைந்திருந்தது. ஆயிஷாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருக்கு 25% இதய பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. படிப்படியாக இதயம் செயலிழக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள மூத்த இதயவியல் மருத்துவரை காண வந்திருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை இதயத் துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பின் கராச்சி திரும்பிய ஆயிஷாவுக்கு இரண்டு ஆண்டுகளில் தொற்று ஏற்பட்டு, அவரது இதயத்தின் வலதுபுறம் செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு பிறகு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். “பாகிஸ்தானில் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இந்தியா அல்லது கனடாவிற்குச் சென்றால்தான் அது சாத்தியம் என்று மருத்துவர்கள் கூறினர். நாங்கள் தேடிப் பார்த்தபோது இந்தியாதான் சிறந்தது என்பதை அறிந்துகொண்டோம்.” என்றார் சனோபர். சென்னையில் உள்ள மருத்துவரை அழைத்த அவரிடம் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை. “கிளம்பி வாருங்கள், பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறினர்” என்று நினைவு கூறுகிறார் சனோபர். முதல்முறை விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விண்ணப்பித்து விசா பெற்று அவர் இந்தியாவிற்கு வந்தார். “முதல் முறை ஆயிஷா வந்தபோதே அவருக்கு இதய பாதிப்பு அதிகமாக இருந்தது. சிகிச்சைக்கு வந்த பின்னர் மாரடைப்பும் ஏற்பட்டது. அதனால், எக்மோ (செயற்கை இதய நுரையீரல் கருவி) பொருத்த வேண்டியிருந்தது. செயற்கையாக இரத்தம் பம்ப் செய்யும் கருவியையும் பொருத்தினோம். இதன் பின்னர் ஓரளவு உடல் நிலை சீராகியதால் சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பினோம். செயற்கை பம்ப் செயல்பாட்டை கண்காணிக்கும் வசதி பாகிஸ்தானில் இல்லை. இந்த சூழலில் அவருக்கு இரத்த குழாயில் கசிவு ஏற்பட்டது. எனவே அவருக்கு மீண்டும் சிகிச்சை வழங்க வேண்டிய தேவை எழுந்தது.” என்று கூறுகிறார் மூத்த இதயவியல் மருத்துவர். கே ஆர் பாலகிருஷ்ணன். எம் ஜி எம் மருத்துவமனையின் இதய நுரையீரல் மாற்றுப் பிரிவின் இயக்குநரான இவர், ஆயிஷாவுக்கு 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். “மிகவும் தீவிர இதய பாதிப்புடன் ஆயிஷா இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். பல நாட்கள் சுயநினைவு இல்லாமல் தான் இருப்பார். எங்களிடம் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சிறுமி என்பதால் கூடுமான வரை உதவி செய்து அவரை காக்க வேண்டும் என முயற்சித்தோம்” என குறிப்பிட்டார் பாலகிருஷ்ணன். பட மூலாதாரம்,MGM HOSPITAL படக்குறிப்பு,மருத்துவர் கே ஆர் பாலகிருஷ்ணன் டெல்லியில் 69 வயது நபரின் இதயத்தை தானமாக அளிக்க அந்த இந்திய குடும்பத்தினர் தயாராக இருந்தனர். எம் ஜி எம் மருத்துவமனையின் இதய நுரையீரல் மாற்றுப் பிரிவின் இணை இயக்குநர் சுரேஷ் ராவ் கே ஜி “இந்தியாவில் உறுப்பு மாற்றுக் கொள்கையின் படி, இந்தியர் ஒருவருக்கு ஓர் உறுப்பு பொருந்தும் என்றால் அவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே ஆயிஷா பத்து மாதங்கள் காத்திருந்தார். இந்த இதயத்தை எடுத்துக் கொள்ள யாரும் முன் வராததால் ஆயிஷாவுக்கு கிடைத்தது. அந்த இதயம் கிடைக்காவிட்டால், ஆயிஷா இறந்திருக்கலாம், அந்த இதயமும் வீணாகியிருந்திருக்கும். ஆயிஷாவுக்கு அந்த இதயம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்தவுடன், ஆயிஷாவை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். டெல்லியிலிருந்து ஐந்து மணி நேரத்தில் இதயம் மருத்துவமனைக்கு வந்தடைந்தது. ஐந்து மணி நேரம் தனது துடிப்பை நிறுத்தியிருந்த இதயம், புதிய உடலில் பொருத்தப்பட்ட பின்னர் மீண்டும் துடிக்கத் தொடங்க வேண்டும். அவ்வாறு அதன் முதல் துடிப்பை பார்க்கும் போது எங்களுக்கு பரவசமாக இருந்தது” என்றார். பட மூலாதாரம்,MGM HOSPITAL படக்குறிப்பு,மருத்துவர் சுரேஷ் ராவ் கே ஜி சிகிச்சைக்கான நிதி பற்றி குறிப்பிட்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் “ஆயிஷாவின் குடும்பத்திடம் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லை. ஐஸ்வர்யம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியும், எம்.ஜி.எம் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களால் நன்கொடை அளிக்கப்பட்ட தொகை மற்றும் எனது சொந்த பணம் ஆகியவற்றை கொண்டு இந்த சிகிச்சை சாத்தியமானது” என்றார். ஐஸ்வர்யம் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமான இதய சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 175 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் ஆகும். பட மூலாதாரம்,ஆயிஷா ரஷீத் தனது உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு நன்றி கூறிய ஆயிஷா பி.பி.சியிடம் பேசியபோது , “அறுவை சிகிச்சைக்கு பின்னர் மிக நன்றாக உணர்கிறேன். இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறினார். ஊருக்கு சென்ற பின் எனது படிப்பை தொடர நினைக்கிறேன். எதிர் காலத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஆக விரும்புகிறேன்” என்றார். “இந்தியாவில் தங்கியிருப்பது என்பது பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டில் இருப்பது போல தோன்றவில்லை. அங்கேயும் இங்கேயும் எல்லாமே ஒன்று போலத்தான் இருக்கிறது. எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.” என்று கூறினார். சென்னையை சுற்றிப் பார்த்தீர்களா என கேட்டபோது, “உடல் நலமில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில்தான் பெரும்பாலும் நேரத்தை செலவிட்டேன். கிடைத்த வாய்ப்பில் கடற்கரைக்குச் சென்றேன். என் வாழ்நாளில் இப்போதுதான் கடற்கரையை பார்க்கிறேன். ஷாப்பிங் மால் சென்றேன். சென்னையில் உணவுகளை சாப்பிட்டபோது தோசை மிகவும் பிடித்திருந்தது” என்றார். https://www.bbc.com/tamil/articles/c72pvgdzdz3o
  12. 28 APR, 2024 | 12:12 PM சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/182139
  13. நீலகிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் 160 சிசிடிவி நேரலையும் ஒரே நேரத்தில் தடைபட்டது எப்படி? 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 27 ஏப்ரல் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா நேரலை தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரலை தடைபட்ட அந்த 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது? மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி என்ன சொல்கிறார்? ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது? நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டு, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' அறையை கண்காணிக்க 160 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட கேமராக்களின் நேரலை காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27ம் தேதி) இரவு 7:00 மணிக்கு, அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் திடீரென தடைபட்டதால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா மற்றும் அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து, பிரச்னையை சரி செய்தனர். "முதலில் அதிர்ச்சி அடைந்தோம்" பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி திமுக முகவர் விஜயகுமார், " நாங்கள் 'ஸ்ட்ராங் ரூம்' நடவடிக்கைகளை கண்காணிக்க, டிவி அருகில் தான் இருந்தோம். அப்போது, திடீரென அனைத்து திரைகளிலும் ஒட்டுமொத்த கேமராக்களின் நேரலை தடைபட்டதால், அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் கேமரா பதிவு செய்யும் காட்சிகளை எங்களிடம் காண்பித்தனர். அதன் பிறகு தான் நேரலையில் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினோம்," என்றார். "தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்" பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், " இன்று காலையில் இரண்டு நிமிடங்களுக்கு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. இரவு சில நிமிடங்கள் நேரலை தடைபட்டுள்ளது. நேரலை தடைபட்ட உடனே நாங்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தனர். இருந்தாலும் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்," என்றார். 'தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்' இதுகுறித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, "சிசிடிவி கேமராவின் நேரலை தடைபட்ட போது நான் சம்பவ இடத்தில் தான் இருந்தேன். நேரலை அமைப்பின் உபகரணங்களில் 'ஓவர் ஹீட்' காரணமாக டிவிகளுக்கு வரும் நேரலை தான் தடைபட்டதே தவிர, கேமராக்கள் பதிவு செய்வதில் (Recording) எந்த தடையும் இல்லை. அவை வழக்கம் போல் எந்த பிரச்னையுமின்றி இயங்கின. அந்த 20 நிமிடமும் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. சிசிடிவி காட்சிகளை நேரலை செய்வது மட்டுமே தடைப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால், பிரச்சனை ஏதும் இல்லை. நேரலை தடைபட்ட 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் அதனை பார்த்துக் கொள்ளலாம். ," என்றார். ஸ்ட்ராங் ரூம் என்றால் என்ன? தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது. பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
  14. அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் 28 APR, 2024 | 11:22 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182132
  15. 28 APR, 2024 | 01:29 PM உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார். தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 34) ஆவார். உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இம்மரணம் தொடர்பில் நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார். இதன்போது வெளியான அறிக்கையில் அந்த நபர் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182145
  16. மும்பை அணி 6-வது தோல்வி: டெல்லியை கரை சேர்த்த இளம் புயல் பிரேசர் - மும்பை பிளேஆஃப் செல்லுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 27 ஏப்ரல் 2024 ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் “ ரன் திருவிழா” நடந்தது. மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த டெல்லி, அதைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி என இந்த ஆட்டத்திலும் 504 ரன்கள் குவிக்கப்பட்டன. ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து இரு நாட்கள் நடந்த ஆட்டத்திலும் 200க்கும் மேலாக இரு அணிகளும், 500க்கும் மேல் ஒரு ஆட்டத்திலும் தொடர்ந்து குவிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது.இதற்கு முன் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் சேர்த்ததுதான் டெல்லி அணியின் அதிகபட்சமாகும். வாண வேடிக்கையுடன் தொடக்கம் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. காயத்திலிருந்து வார்னர் இன்னும் முழுமையாக மீளாததையடுத்து, பிரேசர் மெக்ருக்குடன் இணைந்து அபிஷேக் போரெல் ஆட்டத்தைத் தொடங்கினார். உட் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலிருந்து பிரேசர் மெக்ருக் அதிரடியில் இறங்கினார். முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய பிரேசர் 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். முதல் ஓவரிலேயே டெல்லி அணி 19 ரன்ரேட்டில் பயணித்தது. பும்ரா வீசிய 2வது ஓவரில் நோபாலில் ஒரு சிக்ஸர், அடுத்து ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி என பிரேசர் 18 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் பும்ரா முதல் ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. 3வது ஓவரை துஷாரா வீசினார். முதல் பந்தில் அபிஷேக் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தைச் சந்தித்த பிரேசர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசிஅந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தனர். 2.4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை மின்னல் வேகத்தில் எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேசர் அதிரடியால் மிரண்ட பாண்டியா 3 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பிரேசர் காட்டடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் பாண்டியா விழிபிதுங்கி நின்றார். 4வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரையும் விட்டு வைக்காத பிரேசர் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி 15 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, அடுத்தபந்தில் பவுண்டரி விளாசினார். ஹர்திக் பாண்டியா வீசிய 5வது ஓவரை துவைத்து எடுத்த மெக்ருக் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது. பாண்டியா வீசிய 7-வது ஓவரிலும் மெக்ருக், அபிஷேக் இருவரு ம் ருத்ரதாண்டவம் ஆடினர். அபிஷேக் போரெல் ஒரு சிக்ஸர் பவுண்டரியும், மெக்ருக் ஒரு சிக்ஸரும் என 21 ரன்கள் விளாசினர். பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து மெக்ருக் ஆட்டமிழந்தார். அவர், 27 பந்துகளில் 84ரன்கள் குவித்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் கிடைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஷாய் ஹோப் அதிரடி அடுத்து களமிறங்கிய , அபிஷேக்குடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். முகமது நபி வீசிய 10-வது ஓவரில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட போரெல் 36 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 3வதுவிக்கெட்டுக்கு கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, ஹோப்புடன் சேர்ந்தார். முகமது நபி வீசிய 12-வது ஓவரில் ஹோப் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் துஷாரா வீசிய 13-வது ஓவரில் ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 12 ரன்கள் சேர்த்தார். உட் வீசிய 14-வது ஓவரை பதம் பார்த்த ஹோப் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3வது விக்கெட்டுக்கு ஹோப் -ரிஷப் பந்த் கூட்டணி 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். உட் வீசிய 17-வது ஓவரை துவைத்து எடுத்த ஸ்டெப்ஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 7வது முறையாக பும்ரா பந்தில் ரிஷப் அவுட் பும்ரா வீசிய 19-வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் பும்ரா வீசிய 46 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பந்த் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 7-வது முறையாக பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்துள்ளார். பும்ரா பந்துவீச்சில் இதுவரை ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். 4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த்-ஸ்டெப்ஸ் கூட்டணி 55 ரன்கள் சேர்த்தனர். 6-வது விக்கெட்டுக்கு வந்த அக்ஸர் படேல், ஸ்டெப்ஸுடன் சேர்ந்தார். துஷாரா வீசிய கடைசி ஓவரில் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. 2.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் அதாவது 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 11.6 ஓவர்களில் 150 ரன்களையும், 16.1 ஓவர்களில் 200 ரன்களையும், 19.4 ஓவர்களில் 250 ரன்களையும் டெல்லி கேபிடல்ஸ் எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை தோல்விக்கு காரணம் என்ன? மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(8), இஷான் கிஷன்(20), சூர்யகுமார் யாதவ்(26) ஆகியோர் ரன்ரேட் நெருக்கடி, அழுத்தம் காரணமாக தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். ஆனால், நடுவரிசையில் கேப்டன் பாண்டியா(46) திலக் வர்மா(63) இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்தனர். இருவரும் 4வது வி்க்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதுதான் மும்பை அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அடுத்ததாக டிம் டேவிட்(37), திலக்வர்மா சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களைத் தவிர பெரிதாக ஏதும் அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே தொடக்க வரிசை பேட்டர்கள்தான். ரோஹித், இஷான் கிஷன், ஸ்கை ஆகிய 3 வீரர்கள் இன்று சொதப்பியதால், ஒட்டுமொத்த ரன்ரேட் நெருக்கடியும், அழுத்தமும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்தது. அதிலும் மிகப்பெரிய இலக்கைத் துரத்தும்போது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்கும் போது பதற்றத்தில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அப்படித்தான் பாண்டியா விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியும் வெற்றிக்கான இலக்கை விடாமல் துரத்திய நிலையில் ராஸிக் சலாம் வீசிய 17வது ஓவர்தான் டெல்லி அணிக்கு திருப்புமுனையாக மாறியது. 24 பந்துகளில் மும்பை அணி வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசிக் சலாம் 17-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 7ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை ரன்ரேட் நெருக்கடியில் தள்ளினார். இந்த ஓவரில் மும்பை அணி கூடுதலாக 10 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி கை மாறியிருக்கும். 210 ரன்கள் வரை மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை ரன்ரேட் பதற்றத்தில் இழந்தது. டிம் டேவிட்(37), முகமது நபி(7), சாவ்லா(10), திலக் வர்மா ஆகியோர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆகியதுமே மும்பை இந்தியன்ஸ் தோல்வி உறுதியாகியது. அதிரடி நாயகன் மெக்ருக் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பிரேசர் மெக்ருக்கின் அதிரடியான பேட்டிங்கும், இளம் பந்துவீச்சாளர் ரஷிக் சலாமின் பந்துவீச்சும்தான். ஜேக் பிரேசரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி பவர்ப்ளே ஓவர் கடந்து 4 பந்துகளில் 100 ரன்களை எட்டிவிட்டது. 2.4 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது. மும்பை பந்துவீச்சை துவைத்து எடுத்த பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்துள்ள சிறந்த தொடக்க வீரராக பிரேசர் திகழ்கிறார். காயத்திலிருந்து வார்னரும் மீண்டுவந்து அணியில் சேர்ந்தால் டெல்லி அணி இன்னும் வலிமை பெறும். பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வீரர் சலாம் அசத்தல் அதேபோல, பந்துவீச்சில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இளம் பந்துவீச்சாளர் அறிமுகமாகிய 2வது போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, நேகல் வதேரா, முகமது நபி விக்கெட்டுகளை சாய்த்து மும்பை அணியை தோல்விக் குழிக்குள் சலாம் தள்ளினார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மெக்ருக் தவிர்த்து, ஷாய் ஹோப் கேமியோ ஆடி 41 ரன்கள் சேர்த்தது, டிரிஸ்டென் ஸ்டப்ஸ் அதிரடியாக 48 ரன்கள் சேர்த்தது என இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர். இது தவிர கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்கள், அபிஷேக் போரெல் 36 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு உதவினர். என்ன சொல்கிறார் பாண்டியா? தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். நாங்களும் இலக்கை விரட்ட முயன்றோம். நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறவிட்டோம். டெல்லி வீரர் மெக்ருக் பேட்டிங் செய்த விதம் என்னை வியக்க வைத்தது. எந்தவிதமான பயமும் இன்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணி முன்னேற்றம் இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனால், நிகர ரன்ரேட்டில் இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணி மைனஸைக் கடக்காமல் 0.276 என்ற ரீதியில்தான் இருக்கிறது. தற்போது 10 புள்ளிகளுடன் 4 அணிகள் உள்ளன. கொல்கத்தா, சன்ரைசர்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் இருப்பதால் முதல் 4 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான்-லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின் முடிவும் புள்ளிப்பட்டியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும். காத்திருக்கும் திருப்பங்கள் டெல்லி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அதில் அனைத்திலும் வென்றால் 8 புள்ளிகள் பெற்று 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். இதில் ஒன்று தோற்றாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகள் பெரிய நெருக்கடி கொடுக்கும். ஏனென்றால், சன்ரைசர்ஸ், கொல்கத்தா, லக்னெள அணிகள் 8 ஆட்டங்களே ஆடியிருப்பதால், இன்னும் அந்த அணிக்கு 6 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள், டெல்லியை விட பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்விகள் என 6புள்ளிகளுடன் 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. அடுத்தடுத்த வெற்றியால் முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது. மும்பை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்களே இருப்பதால், அனைத்திலும் கட்டாய வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இதில் ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பல அணிகள் போட்டியிடும், அப்போது நிகர ரன்ரேட் சிக்கல் ஏற்படலாம். ஆதலால் வரும் ஆட்டங்களில் மும்பை அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும்வகையிலும் விளையாடுவது அவசியமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்று அந்த அணியின் அடுத்த இரு தோல்விகளில் முடிவு எழுதப்பட்டுவிடும். https://www.bbc.com/tamil/articles/c060nmm2ek1o LSG vs RR: ராஜஸ்தானை கரைசேர்த்த சஞ்சு சாம்சன், ஜூரெல் - குழம்பி நின்ற கே.எல்.ராகுல் பட மூலாதாரம்,SPORTZPICS 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக ஐபிஎல் டி20 தொடரில் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி அடித்தாலே அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறி வந்தது. தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக கொல்கத்தாவின் 261 ரன்களை சேஸிங் செய்த பஞ்சாப், எதுதான் பாதுகாப்பான ஸ்கோர் என்று அணிகளை யோசிக்க வைத்துள்ளது. அப்படியிருக்கும்போது, 197 ரன்கள் ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் சற்று கடினமானதுதான். இருப்பினும் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அணிகளின் முன் 197 ரன்கள் இலக்கு இலகுவாகத்தான் தெரியும். அதுபோலத்தான் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் இருந்தது. லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ப்ளே ஆஃப் வாய்ப்பு பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் 0.694 என்ற அளவில்தான் இருக்கிறது, இன்னும் ஒரு புள்ளி அளவைத் தொடவில்லை. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கையில் இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகிவிடும். இ்ப்போது 16 புள்ளிகள் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்றதுதான் என்றாலும், நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகிறது. அதேநேரம், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் 0.059 என்ற பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் தோற்றால்கூட நிகர ரன்ரேட் லக்னெளவுக்கு மைனசில் சென்றுவிடும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் நேற்றைய வெற்றியால் அந்த அணியும் 10 புள்ளிகளுடன் லக்னெள அணிக்கு குடைச்சலாக வரத் தொடங்கியுள்ளது. டாப் 4 அணிகளில் லக்னெள இடம் பெற அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்வது அவசியம். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் சஞ்சு சாம்ஸன்தான். துருவ் ஜூரெலை வைத்துக்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 121 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை அடைந்து அணியை வெற்றிபெற வைத்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஒரு கேப்டன் செய்ய வேண்டிய பணியை சிறப்பாகச் செய்து ஒரு கேப்டனாகவும், சிறந்த பேட்டராகவும் சாம்ஸன் நிரூபித்துள்ளார். சிறப்பாக பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து (4சிக்ஸர், 7பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த சில போட்டிகளில் ஜூரெலின் அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்களை கடக்கவில்லை. ஆனால், ஜூரெலுக்கு தேவையான நம்பிக்கையளித்து, அவரை பேட் செய்ய வைத்த பெருமை சாம்ஸனுக்கே சேரும். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 'சரியான திசையில் செல்கிறோம்' பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “புதிய பந்தில் பேட் செய்வதைவிட, பழைய பந்தில் பேட் செய்தபோது, விக்கெட் நன்கு ஒத்துழைத்தது. இந்த வெற்றி அணியின் ஒற்றுமைக்குக் கிடைத்தது. டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாகப் பந்து வீசினோம். ஒவ்வொரு ஓவரையும் திட்டமிட்டு, நீண்ட ஆலோசனை செய்து பந்து வீசினோம். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் லக்னெள பக்கம் சென்றது. ஜூரெல் தற்காலிகமாக ஃபார்மின்றி இருந்தார், உண்மையில் டி20 கிரிக்கெட்டில் 5வது பேட்டராக வருவது கடினமான பணி. துருவ் திறமை மீது நம்பிக்கை இருந்தது, கடினமாக பேட்டிங் பயிற்சி எடுத்தார். நாங்கள் அணியாகவே சிறப்பாகச் செயல்பட்டோம், அதேபோல அதிர்ஷ்டமும் இருக்கிறது. தவறுகளைக் குறைத்துக்கொண்டதாலேயே வெற்றி எங்களுக்கு வசமானது. தவறுகள் நடப்பது இயல்பு அதை ஒவ்வொரு போட்டியிலும் குறைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. சரியான திசையில் பயணிக்கிறோம் என்று நினைக்கிறேன். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை,” எனத் தெரிவித்தார். இக்கட்டில் சிக்கிய ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய சிக்கலில் தோல்வியை நோக்கிச் சென்றது. 8.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கணினியின் கணிப்பும், லக்னெள அணி வெல்வதற்குத்தான் 86 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணித்தது. கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜூரெல் ஜோடி ஆகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க லக்னெள கேப்டன் கே.எல்.ராகுல் 7 பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 197 ரன்களை எந்தவிதமன சிரமும் இன்றி ஒரு ஓவர் மீதமிருக்கையில் ராஜஸ்தான் சேஸிங் செய்தது. பட்லர், ஜெய்ஸ்வால் அடித்தளம் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர்கள் ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடிதான். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் கொண்டு சென்றனர். பவர்ப்ளே முடிய இரு பந்துகள் இருந்தநிலையில், யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பட்லர் ஃபுல் டாஸ் பந்தைத் தவறவிட க்ளீன் போல்டாகி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை ஸ்டாய்னிஷ் வீச, ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பிஸ்னோயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது வீரராகக் களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்கள் சேர்த்த நிலையில் 41வயது லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அணியை மீட்ட நாயகர்கள் நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், துருவ் ஜூரெல் ஜோடி இணைந்தனர். சாம்ஸன் இந்த சீசனில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஜூரெல் தனது 6 போட்டிகளில் கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் 10 ரன்களைக் கூட கடக்கவில்லை. இதனால், ஜூரெல் எவ்வாறு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கப் போகிறார் என்று எண்ணப்பட்டது. இருவரும் மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 8 பந்துகளில் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து மெதுவாகத் தொடங்கினர். அதன்பின் மிஸ்ரா ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸரும், யாஷ் தாக்கூர் ஓவரில் சாம்ஸன் 3 பவுண்டரிகளும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். மோசின் கான் வீசிய 14வது ஓவரில் இந்த ஜோடியை பிரிக்க லக்னெள அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த ஓவரில் ஜூரெல் அடித்த இரு ஷாட்களிலும் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை யாஷ் தாக்கூர் நழுவவிட்டார். யாஷ் தாக்கூர் கேட்சை நழுவவிடவில்லை, வெற்றியை நழுவவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இந்த வாய்பைப் பயன்படுத்திய ஜூரெல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கேப்டனுக்குரிய பொறுப்புடனும், ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடியாக ஆடிய சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்பதாவது ஓவரில் சேர்ந்த ஜோடியை லக்னெள பந்துவீச்சாளர்களால் ஆட்டத்தின் கடைசிவரை பிரிக்க முடியவில்லை. 7 பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி பந்துவீசியும், சாம்ஸனின் பேட் முன், ஜாலங்கள் தோற்றன, ஜூரெல் பேட்டிங் முன் எந்த உத்தியும் எடுபடவில்லை. குழப்பத்தில் கே.எல்.ராகுல் பட மூலாதாரம்,SPORTZPICS டிரன்ட் போல்ட் தனது முதல் ஓவரில் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நேற்றைய ஆட்டத்திலும் தவறவிடவில்லை. முதல் இரு பந்துகளில் டீ காக் இரு பவுண்டரிகள் அடித்தநிலையில் 3வது பந்தில் குயின்டன் டீகாக்கை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் போல்ட். அடுத்து வந்த ஸ்டாய்னிஷ் ரன் ஏதும் சேர்க்காமல் சந்தீப் சர்மாவின் அருமையான இன்ஸ்விங்கில் க்ளீன் போல்டாகினார். 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது. மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கே.எல்.ராகுலுடன், தீபக் ஹூடா சேர்ந்தார். தீபக் ஹூடாவும் இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார். ஆனால், நேற்றை ஆட்டத்தில் ராகுலுடன், சேர்ந்து அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு லக்னெள 46 ரன்கள் சேர்த்தது. ஆவேஷ் கான் வீசிய 8வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி ராகுல் 21 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்களில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடைந்தார். நிதானமாக பேட் செய்த தீபக் ஹூடா 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் தனது கேரம்பால் பந்துவீச்சால் பிரித்தார். தீபக் ஹூடா 50 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 62 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து வந்த ஆபத்தான பேட்டர் பூரன் 11 ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,SPORTZPICS பதோனி 18 ரன்களுடனும், குர்னல் பாண்டியா 15 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தாத லக்னெள அணி கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும். இந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுல் விக்கெட் கீப்பிங்கின்போது சற்று குழப்பத்துடனே காணப்பட்டார். ஒரு கேட்சையும் கோட்டைவிட்ட ராகுல், கேப்டன்சியை சரியாகச் செய்யவில்லை என்றே தெரிகிறது. சாம்ஸன், ஜூரெல் பாட்னர்ஷிப்பை உடைக்க எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் குழப்பமான முடிவுகளை எடுத்தார். உதாரணமாக சிறந்த லெக் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு வழங்கப்பட்டது, 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய மோசின் கான், யாஷ் தாக்கூருக்கு 4 ஓவர்களும் முழுதாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஸ்டாய்னிஷ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு ஒவரை வீசி 3 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், ஸ்டாய்னிஷ்க்கு ஏன் தொடர்ந்து பந்துவீச ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை. பட மூலாதாரம்,SPORTZPICS பந்துவீச்சாளர்களை ஏமாற்றிய ஆடுகளம் லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கொண்டதாலும், விக்கெட்டில் அதிகமான விரிசல்கள் இருந்ததாலும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவே லக்னெள விக்கெட் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரிதான். ஆனால், லக்னெள அணி பேட் செய்தபோது, ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சஹல் இருவருமே பந்துவீச சிரமப்பட்டனர். பந்துவீச்சு எடுக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அதேபோல லக்னெள சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் ஒத்துழைக்கவில்லை. குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், அமித் மஸ்ரா ஆகிய 3 பேரும் பந்துவீசியும் எடுபடவில்லை. 3 பேரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசிய 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர். இதில் குர்னல் பாண்டியா மட்டும்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். மிஸ்ரா, பிஸ்னோய் பந்துவீச்சு எடுபடவில்லை. https://www.bbc.com/tamil/articles/cll41v3e559o
  17. ரி20யில் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்து உலக சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ் 27 APR, 2024 | 06:44 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 42ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் உலக சாதனையுடன் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. இதன் மூலம் சகலவிதமான ரி20 கிரக்கெட் போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற உலக சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்தது. கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்களே தென் ஆபிரிக்காவினால் கடக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்காக இதற்கு முன்னர் இருந்தது. ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சிக்ஸ்களுக்கும் பவுண்டறிகளுக்கும் பஞ்சமில்லாமல் கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட அப் போட்டியில் 42 சிக்ஸ்கள் மொத்தமாக விளாசப்பட்டது. இதுவும் ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களுக்கான உலக சாதனையாகும். சன்ரைசர்ஸ் - மும்பை ஐபிஎல் போட்டியிலும், பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐபிஎல் போட்டியிலும் இந்த வருடம் தலா 38 சிக்ஸ்கள் மொத்தமாக குவிக்கப்பட்டதே போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிக சிக்ஸ்களுக்கான சாதனையாக இதற்கு முன்னர் இருந்தது. பஞ்சாபின் வெற்றியில் ஜொனி பெயாஸ்டோவின் ஆட்டம் இழக்காத சதம், ப்ரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின. பஞ்சாப் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ப்ரப்சிம்ரன் சிங், ஜொனி பெயாஸ்டோவ் ஆகியோர் பவர் ப்ளேயில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ப்ரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து பெயாஸ்டோவ், ரைலி ருசோவ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ருசோவ் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜொனி பெயாஸ்டோவ், ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். ஜொனி பெயாஸ்டோவ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 108 ஓட்டங்களையும் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களையும் குவித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைக் குவித்தது. பில் சோல்ட், சுனில் நரேன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 62 பந்துகளில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சுனில் நரேன் 32 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைக் குவித்தார். மொத்த எண்ணிக்கை 163 ஓட்டங்களாக இருந்தபோது பில் சோல்ட் 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் (39), அண்ட்றே ரசல் (24) அணித் தலைவர் ஷ்ரயேஸ் ஐயர் (28) ஆகியோரும் சிக்ஸ்களை விளாசி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் இரண்டு அணிகளிலும் துடுப்பெடுத்தாடிய 11 பேரில் ஒருவரைத் தவிர மற்றைய எல்லோரும் சிக்ஸ்கள் விளாசியிருந்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். https://www.virakesari.lk/article/182064
  18. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300389
  19. பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது 27 APR, 2024 | 11:16 AM நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர். சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர். மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார். https://www.virakesari.lk/article/182076
  20. 27 APR, 2024 | 01:51 PM காணாணல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை இன்று சனிக்கிழமை (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது . கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன. இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182090
  21. எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை தீவிரமாகும் - வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா 27 APR, 2024 | 01:18 PM வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30.04.2024க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்டாவனம் அல்லது அக்கினி நாள் / அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடப்படுகிறது. (காண்டாவனம் /அக்கினி நாள் /அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ஆம், 4ஆம் பாதங்களையும் (கால்), கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்). கடந்த சில நாட்களாக இரவு பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது. எதிர்வரும் 27, 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் வட மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல. எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன், நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுதுகளில் பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182089
  22. 27 APR, 2024 | 12:41 PM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்தபோது, கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/182087
  23. நாட்டின் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோய் தொற்றா நோயாகக் காணப்பட்ட போதிலும், பரம்பரை ரீதியாக, அல்லது நீண்ட கால அடிப்படையில் இந்த நோய் உருவாகலாம். இலகுவான மற்றும் சிக்கல்கள் அற்ற மருந்துகளின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டால், ஆஸ்துமா நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போகின்றமை, இதன் காரணமாக ஏற்படக்கூடிய உள மற்றும் சமூக ரீதியான சிக்கல்கள் ஆகிய விளைவுகள் இந்த நோய் கட்டுப்படுத்தப்படாமையினால் ஏற்படக்கூடும். நீண்ட காலத்திற்கு ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாமல் விடுகின்ற பட்சத்தில், சுவாசக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய கோளாறுகளினால் மரணம் ஏற்படலாம். எனினும், ஆஸ்துமாவை இலகுவாகக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/300411
  24. 27 APR, 2024 | 11:36 AM சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் . ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு காலத்தில் தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182077
  25. 27 APR, 2024 | 10:21 AM வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது. இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது. அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/182071

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.