Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 04 MAY, 2024 | 12:11 AM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார். அதற்கமைய இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனம்மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படும் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பார்வையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்த போது, இந்த திட்டத்திற்கான ஆற்றல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திருகோணமலை எண்ணெய் தாங்கிகளையும் பார்வையிட்டார். அங்கு லங்கா ஐ.ஓ.பி.எல்.சி.யின் முதலீடுகள் மூலம் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. லூப்ரிகண்ட் கலப்பு ஆலை மூலம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் கிரீஸ் உற்பத்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியா - இலங்கை எரிசக்தி கூட்டாண்மைக்கு பங்களிக்கும், எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இதே வேளை மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ.ஓ.சி.பி.எல்.சி. மருத்துவ உபகரணத்தை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர், திருகோணமலை எண்ணெய் தாங்கி முனையத்துக்கு அருகில் வசித்து வரும் மக்களுக்கு உணவுப் பொருட் பொதிகளையும் வழங்கி வைத்தார். இதே வேளை இலங்கை மக்கள் தங்கள் சொந்த வீடுகள் என்ற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் திருகோணமலையில் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்ட மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இதன் போது மக்களை மையப்படுத்திய திட்டத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருகோணமலையில் உள்ள விமானப்படை தளத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படை டோர்னியர் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/182625
  2. பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை! 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக அறிவித்து பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளை கணினி மயமாக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி அட்டையில் மேலதிக பாடங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ள போதிலும் அந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300848
  3. இந்திய மீனவர்கள் மூவர் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தின் இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மூவரும் படகோட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கிணங்க, இன்று மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300829
  4. கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு - வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி பட மூலாதாரம்,SPOORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது. அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன. கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்," என்றார். தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். "எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும். கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. "மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்," என்று விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி "அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்" என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. ஆட்டநாயகன் வெங்கடேஷ் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர். கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார். டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது. பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம். வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 'தொடர்ந்து போராடுவோம்' பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார். "இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது. இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா? சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது. பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம். https://www.bbc.com/tamil/articles/cjr7zl7lqp4o
  5. பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர். "இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார். இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார். 'கறை படிந்த வரலாறு' பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள். விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது. "கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP "இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார். கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். "இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார். தீராத சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள் கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள். அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார். கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட. பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. 'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo
  6. ஐசிசி ரி20 உலகக் கிண்ண மத்தியஸ்தர் குழாத்தில் இலங்கையின் மடுகல்லே, தர்மசேன Published By: VISHNU 03 MAY, 2024 | 06:40 PM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோர் அடங்குகின்றனர். ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க 20 கள மத்தியஸ்தர்களும் 6 போட்டி தீர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருடாந்த ஐசிசி விருதுகளில் 2023க்கான வருடத்தின் அதிசிறந்த மத்தியஸ்தருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருதை வென்ற ரிச்சர்ட் இலிங்வேத், இலங்கையின் குமார் தர்மசேன, நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, அவுஸ்திரேலியாவின் போல் ரைஃபல் ஆகியோரும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இவர்கள் நால்வரும் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மற்றும் 3ஆவது, தொலைக்காட்சி மத்தியஸ்தர்களாக கடமையாற்றி இருந்தனர். இதேவேளை ஐசிசி ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 தீர்ப்பாளர்களில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லேயும் ஒருவராவார். அவர், இருபாலாருக்குமான சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 780 போட்டிகளில் தீர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார். 2022 ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லே கடமையாற்றி இருந்தார். ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் மத்தியஸ்தர்களாக கிறிஸ் ப்றவுண், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபானி, மைக்கல் கோ, ஏட்றியன் ஹோல்ட்ஸ்டிக், ரிச்சர்ட் இலிங்வேர்த், அலாஹுடின் பலேக்கர். ரிச்சர்ட் கெட்ல்பறோ, ஜெயராமன் மதனகோபால், நிட்டின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, அஷான் ராஸா, ரஷித் ராஸா, போல் ரைஃபல், லெங்டன் ரூசியர், ஷஹித் சய்க்காத், ரொட்னி டக்கர், அலெக்ஸ் வாஃப், ஜோயல் வில்சன், அசிப் யாக்கூப் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர். தீர்ப்பாளர்களாக டேவிட் பூன், ஜெஃப் குறோ, ரஞ்சன் மடுகல்லே, அண்டி பைக்ரொவ்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர். https://www.virakesari.lk/article/182615
  7. சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து பொலிஸார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தென்காசி மாவட்டம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர். அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அபாய சங்கிலியை இழுத்தும் நிற்காத ரெயில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில்தான் கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்தார். கை கழுவும் இடத்தில் இருந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தபோது கஸ்தூரி தவறி கீழே விழுந்தார். உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வரும் காலங்களில் அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கலி செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர். https://thinakkural.lk/article/300787
  8. 03 MAY, 2024 | 05:18 PM காசா மோதல் குறித்த செய்திகளை செய்தியறிக்கையிடுவதில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திவரும் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிற்காக 2024 உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்களை யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது. பெரும் ஆபத்து காணப்படுகின்ற போதிலும்தொடர்ந்து செய்தியறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு ஆதரைவையும் அங்கீகாரத்தையும்; வழங்குவதற்காக இந்த விருது அவர்களிற்கு வழங்கப்படுகின்றது என விருது தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடினமான ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் துணிவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஆட்ரிஅசோலே பாராடடியுள்ளார். ஒக்டோபரில் மோதல் ஆரம்பித்த பின்னர் 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182601
  9. Published By: VISHNU 03 MAY, 2024 | 07:27 PM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, மே தின கூட்டத்தில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ராஜபக்ஷர்களும் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்ஷர்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது.இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ராஜபக்ஷர்களுக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எவருமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ராஜபக்ஷர்கள் செயற்படுகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்ஷர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள கூடாது. ராஜபக்ஷர்களிடமிருந்து விலகி செயற்படுவது ஜனாதிபதியின் அரசியலுக்கு சிறந்ததாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/182617
  10. நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை! நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அடிக்கடி நிழலில் ஓய்வு எடுப்பது சிறந்ததாகும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி நீராகாரங்களைப் பருகுவதுடன், வீட்டில் உள்ள நாட்பட்ட நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/300794
  11. 03 MAY, 2024 | 05:39 PM வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது. தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி மஹராஜ் தெரிவித்தார். உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் நடைபெற்றது. மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, மலர்மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ..." பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு சுவாமி விபுலானந்தரின் துறவறத்தின் நூற்றாண்டு நிகழ்வாக அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், அவர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182604
  12. 03 MAY, 2024 | 05:36 PM உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சிலம்பம் போட்டியை முதல்முறையாக 5 நாடுகளின் பங்கு பெற்றதுடன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளமையட்டு பெருமை அடைகிறேன். யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம் இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன். அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம். இலங்கை சிவலீமன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நாளைய தினம் சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சிலம்பம் போட்டிகள் மாலை வரை இடம்பெற்று பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறும். ஆகவே குறித்த போட்டியில் பங்கு பெற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182599
  13. Published By: VISHNU 03 MAY, 2024 | 07:37 PM மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (3) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றை விற்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/182618
  14. அண்ணை யாரைப் பிராண்டி விட்டு!! முட்டைக் கோப்பியை குடிக்க?!
  15. கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் - பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி - பெரும் பதற்ற நிலை Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 03:53 PM அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிகளில் மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம் எழுப்பிவருகின்றனர். நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/182495
  16. உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவில் நீடிக்கும் அடக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன. இரான் உட்பட பிற நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பலர் சிறை தண்டனை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் எதிர்கொள்கின்றனர். பிபிசி உலக சேவையின் இயக்குனர் லிலியன் லாண்டோர் கூறுகையில், "அவர்கள் செய்தியாளராக பணியைத் தொடர ஒரே வழி, தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது." என்றார். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, பிபிசி அதன் பெரும்பாலான பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியிருந்தது. அதன்பிறகு பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, அதே சமயம் ஆண் ஊழியர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். மியான்மர் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் செய்தியாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சுதந்திரமாக செய்தி சேகரிக்கவோ பதிவிடவோ முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நூற்றுக்கணக்கான பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பணியாற்றி வருகின்றனர். "நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் பிபிசி பாரசீக செய்தியாளர் ஜியார் கோல். அவர் செய்தி சேகரிக்க எங்கு சென்றாலும், எந்த அறைக்குள் நுழைந்தாலும், முதலில் தப்பிக்கும் வழி உள்ளதா என்பதையே தேடுகிறார். "எனது வீட்டில் நிறைய பாதுகாப்பு கேமராக்கள் உள்ளன, என் மகளின் பள்ளியை மாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் எச்சரிக்கப்பட்டேன்" என்கிறார். 2007 இல் இருந்து ஜியார் இரானுக்குச் செல்லவில்லை. அவரது தாயார் இறந்த போது கூட, இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாயின் கல்லறையைப் பார்க்க எல்லை அருகே பதுங்கி இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி புற்றுநோயால் இறந்ததில் இருந்து ஜியார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். "எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், என் மகள் என்ன ஆவாள் என்பது மட்டும் தான் எப்போதும் என் மனதில் இருக்கும் ஒன்று" என்று அவர் கூறுகிறார். "இரானிய ஆட்சி அபாரமாக வளர்ந்துள்ளது. அவர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றனர். இரான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதால் சர்வதேச அரங்கில் இரான் பற்றி என்ன நினைக்கிறது என்பதை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை." படக்குறிப்பு,நினா நசரோவா தனது கணவர் மற்றும் 16 மாத குழந்தையுடன் 2022 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த ஜோடி கின்ஸ்பர்க் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் நாடுகளை விட்டு வெளியேறும் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் நிதி மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவது 225% அதிகரித்துள்ளது” என்றார். மேலும் பேசிய அவர் "சிறையில் உள்ள செய்தியாளர்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு நாங்கள் சரியாக கணித்து விட்டோம். செய்தியாளர்கள் கொல்லப்படுவது 2015 க்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரஷ்யா, இரான் மற்றும் செளதி அரேபியா போன்ற ராஜ்யங்கள், தங்கள் நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பதிவாகும் செய்தி அறிக்கைகளை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்கின்றன ” என்றார். யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து பிபிசி ரஷ்யன் செய்தியாளர் நினா நசரோவா தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. நினாவின் கணவரும் செய்தியாளர் தான். மாஸ்கோவில் இருந்து விமானம் புறப்பட்டதும், தனது கணவரை உற்று நோக்கினார். அவர் அழுது கொண்டிருந்ததை நினாவால் உணர முடிந்தது. "நான் உணர்வற்றுப் போனேன்," என்கிறார் நினா. புதிய தணிக்கை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். "நான் போர் வரப்போகிறது என்று எச்சரித்தேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம்” என்றார். நினா தங்கள் 16 மாத மகன், இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒரு டிராலியை எடுத்துக்கொண்டு ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு மலிவான டிக்கெட்டை முன்பதிவு செய்து புறப்பட்டார். அங்கு ஒரு வாரம் கடந்தது, பின்னர் அவர்கள் துபாயில் நாட்களை கழித்தனர், அவர்கள் போர் மூள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விடுமுறையை திட்டமிட்டு பணம் செலுத்தி ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் மாண்டினீக்ரோவிற்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு, லாட்வியன் தலைநகரான ரிகாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு பிபிசி நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய ஊழியர்களுக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில், நினாவின் சக ஊழியரும், பிபிசி ரஷ்ய செய்தியாளருமான இலியா பரபனோவ், "வெளிநாட்டு உளவாளி" என்று முத்திரை குத்தப்பட்டார். "தவறான தகவல்களை பரப்பினார்" மற்றும் போரை எதிர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இதை இலியாவும் பிபிசியும் நிராகரித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'இரான் இன்டர்நேஷனல்’ தொகுப்பாளர் தனது லண்டன் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரது காலில் கத்தியால் குத்தினர். சமீபத்தில் பிரிட்டிஷ் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பிரிட்டனில் வசிக்கும் பிபிசி பாரசீக ஊழியர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தனர். படக்குறிப்பு,பிபிசி பாரசீக தொகுப்பாளர்கள் ஃபர்னாஸ் காசிசாதே (இடது) மற்றும் ரானா ரஹிம்பூர் (வலது) இருவரும் இரானை விட்டு வெளியேறினர். 2022 ஆம் ஆண்டில் பிபிசி பாரசீக தொகுப்பாளர் ராணா ரஹிம்பூரின் கார் உடைக்கப்பட்டிருந்தது, ஒட்டு கேட்கும் சிறிய மைக் போன்ற சாதனம் உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார். அவர் நினைத்தது போலவே அவர் தனது தாயுடன் நடத்திய உரையாடல் பதிவு செய்யப்பட்டு இரானிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் ஆட்சியை ஆதரித்து பேசுவது போல் எடிட் செய்யப்பட்டது. இதனால் போட்டி ஊடகங்கள் அவரை இழிவு படுத்த இந்த சம்பவத்தை பயன்படுத்தியபோது, ராணா ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். "இந்த அரசு தரப்பு அதன் மிகவும் நுட்பமாக தந்திரமாக செயல்படுகிறது. எங்களை இழிவு படுத்தவும், மிரட்டவும் மற்றும் இறுதியில் எங்களை அமைதிப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனக்கு நடந்திருப்பது அது தான்" என்று ராணா கூறுகிறார். இது அவரது நண்பர்களையும் சக ஊழியர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. பிபிசி பாரசீகத்தின் மற்றொரு தொகுப்பாளரான ஃபர்னாஸ் காசிசாதே கூறுகையில், "இரானில் உள்ள எனது அம்மாவை நான் அலைப்பேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும், யாரோ நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது பயமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் எங்களை அழிக்க எளிதில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும்." என்றார். அவர் 21 ஆண்டுகளாக இரானுக்கு திரும்பவில்லை. மேலும் அவரும் அவரின் ஒன்பது சக ஊழியர்களும் நாட்டில் இல்லாத போது தங்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சமீபத்தில் கண்டுபிடித்தனர். இரானிய நீதித்துறையில் இருந்து ஹேக்கர்கள் இந்த தகவல்களை கசியவிட்டனர். முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி பாரசீக ஊழியர்கள் மீது வன்முறை, வெறுப்பு பேச்சு மற்றும் மனித உரிமை மீறல்களை தூண்டுவதாக குற்றம் சாட்டியது. ஃபர்னாஸின் கணவர் வலைப்பதிவில் எழுதியதற்காக 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஃபர்னாஸும் அவரது கணவரும் தங்கள் ஆறு மாத மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாடுகளை விட்டு வெளியேறிய பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஃபர்னாஸின் தந்தை இரானின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார், அவருக்கு மிரட்டல் விடுத்தனர், அவர் தனது மகளை திரும்பி வரச் சொல்லும்படி அவரை வற்புறுத்தினர், மேலும் அவரது பேரக்குழந்தைகள் எங்கு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியும் என்று கூறி மிரட்டியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில், ஃபர்னாஸின் சகோதரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் . அவரது வயதான பெற்றோர்கள் அவரைப் பார்த்து கொள்ள முடியாமல் போராடினர். ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். அடுத்த ஆறு மாதங்களில் அவருடைய தந்தையும் இறந்துவிட்டார். "இந்த இழப்புகளில் இருந்து என்னால் முழுமையாக மீள முடியவில்லை. நான் உண்மையில் என் குடும்பத்திற்காக என் அம்மாவுக்காக அங்கு இருக்க விரும்பினேன். என்னால் முடியவில்லை" என்றார் ஃபர்னாஸ். "நான் இனி இந்த செய்திகளை, இந்த கொலை மிரட்டல்களை இனி கண்டுகொள்ள மாட்டேன். எனக்கு வரும் குறுந்தகவல்களை இனி திறக்க மாட்டேன். சில சமயங்களில் பாலியல் ரீதியாகவும் அசிங்கமாகவும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்" என்கிறார் ஃபர்னாஸ். பிபிசி பாஷ்டோவைச் சேர்ந்த ஷாஜியா ஹயாவிற்கு, நாட்டை வருத்தமாக இருந்தாலும் கூடவே குற்ற உணர்வும் இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டை முழுவதுமாக கைப்பற்றிய போது, அவரது பெற்றோரையும் சகோதரரையும் காபூலில் விட்டுவிட்டு அவர் தனியாக பிரிட்டனுக்கு வெளியேற்றப்பட்டார். "இரவு 02:00 மணியளவில் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயத்தில் என்னால் என் தம்பியை கட்டிப்பிடித்து விடை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளித்தது. நான் இங்கே சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒரு வகையான சிறையில் இருக்கிறார்கள். தலிபான்கள் என் வேலையை காரணம் காட்டி என் குடும்பத்தினரை தண்டிப்பார்களோ என்று கவலையாக உள்ளது, அதனால் என் குடும்பத்தினரிடம் யாராவது என்னை பற்றி கேட்டால் அதை மறுக்கும்படி கூறியிருக்கிறேன்” என்றார். ஷாஜியாவுக்கு நாட்டை விட்டு வெளியேற பின்னரும், இணையத்தில் இடைவிடாத தொல்லை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷாஜியா உள்ளிட்ட பல பிபிசி பத்திரிகையாளர்களுக்கு இணையம் வழியாக மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. ஒரு உலக சேவை பத்திரிகையாளர், தன் சொந்த நாட்டில் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தன் அடையாளத்தை மறைத்து சில தகவல்களை பகிர்ந்தார். அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், அவரது அரசாங்கம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிடுமோ என்பது தான், அப்படி பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டால் நாடற்றவர்கள் ஆகிவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் தொலைதூரத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பற்றி செய்தி வாசிப்பது கடினமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். ஷாஜியா ஆப்கானிஸ்தானைச் சுற்றிப் பயணித்து, மக்களிடம், குறிப்பாக பெண்களிடம், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசி வருகிறார். அப்படி பேட்டி அளித்தால் எந்த ஆபத்தும் வராது என மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இரானில் சாதாரண மக்கள் பிபிசியுடன் பேச அஞ்சுகின்றனர். பேட்டி அளிக்க கூடாது என அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். நினா தனது வேலை மிகவும் கடினமானது என்று கூறுகிறார். எங்குமே பயணிக்க முடியாமல், மேசையில் அமர்ந்து வேலை செய்தல், தன் திறமையை பறித்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறார். முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நினாவால் கலந்து கொள்ள முடியவில்லை. தன் மகனை அனைவரும் பாராட்டுவதை கண்டு ரசிக்க முடியவில்லை. "காதல் இருக்கிறது, ஆனால் சற்று தொலை தூரமாகி விட்டது" என்கிறார் நினா. புலம்பெயர்ந்து வாழ்வதும் வேலை செய்வதும் ஒரு வகையான `பாதி வாழ்க்கை’ என்று தன் சூழலை விளக்குகிறார் ஃபர்னாஸ். "நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன், நான் இப்போது பிரிட்டிஷ் நாட்டின் குடிமகன் ஆகிவிட்டேன் என்று அவ்வளவு சுலபமாக நம்மால் வாழ முடியாது. இந்த சூழலில் என் வாழ்க்கையை உண்மையில் முழுமையாக வாழ முடியாது. நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம், ஆனால் எங்கள் மனம் இன்னும் எங்கள் நாட்டில் தான் வசிக்கிறது” என்கிறார் ஃபர்னாஸ். https://www.bbc.com/tamil/articles/ceq3z06yp84o
  17. நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்கள் புறக்கணிப்பா? இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் ராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிர்ச்சி... ஆச்சர்யம்... உலகக்கோப்பைக்கு 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் அணி அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் உலகில் தவறாமல் பேசப்படும் சொற்கள் இவை. எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அதுவும், நாடெங்கும் ஐபிஎல் கிரிக்கெட் ஜூரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் டி20 அணி அறிவிப்பு வெளியாகியிருப்பது கூடுதல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. கிரிக்கெட் நேரலையில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உலகக்கோப்பை இந்திய அணித் தேர்வு குறித்து அலசி, ஆராய்ந்து வரும் வேளையில் சமூக ஊடகங்களில் ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியில் தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது குறித்து அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தின் கருத்து அதற்கு உரம் சேர்ப்பதாக அமைந்தது. தமிழ்நாட்டு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் பத்ரிநாத்தின் பேச்சைக் குறிப்பிட்டு, இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்த ஏமாற்றத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த ரசிகர்களின் சமூக ஊடக விமர்சனங்கள் இன்னும் ஓயாத நிலையில், அந்த அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கரும், அணி கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை அளித்துள்ளனர். இந்திய அணி தேர்வில் அவர்கள் கடைபிடித்த அணுகுமுறை என்ன? உலகக்கோப்பையை வெல்வதற்கான எந்தெந்த உத்திகளின் அடிப்படையில் இந்திய அணியை அவர்கள் தேர்வு செய்தார்கள்? இந்திய அணி தேர்வில், குறிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காததில் ரசிகர்கள் விமர்சிப்பதைப் போல அரசியல் விளையாடியுள்ளதா? இந்திய அணி தேர்வு எவ்வாறு நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இடம் பிடித்திருந்தனர். ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் மாற்று வீரர்களாக, சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நடராஜன் சேர்க்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அந்த விநாடியே, இந்தியா முழுவதும் அதுகுறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் வேளையில் அறிவிப்பு வெளியானதால் அது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுவிட்டது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இந்திய அணி தேர்வு குறித்த தங்களது பார்வையை பதிவிடத் தொடங்கிவிட்டனர். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 பத்ரிநாத் கூறியது என்ன? காட்சி ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் தங்கள் பங்கிற்கு கிரிக்கெட் சேவையாற்றின. அவற்றில் தோன்றிய கிரிக்கெட் நிபுணர்கள் இந்திய அணியில் தேர்வான வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் போன வீரர்களின் ஆட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் தங்களது விமர்சனப் பார்வைகளை முன்வைத்தனர். அந்த வரிசையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், இன்றைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தின் கருத்து, சமூக ஊடகங்களில் நடராஜனுக்காக களமாடிய தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது. "இந்திய அணியில் நடராஜன் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். 500 விக்கெட் எடுத்த அஸ்வினின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளிவிஜய் இந்தியாவின் தலைசிறந்த 5 சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர். அவர் 2 இன்னிங்ஸ் சிறப்பாக ஆடாவிட்டால் கேள்வி எழுப்புகிறார்கள், " என்று அவர் தெரிவித்தார். அத்துடன், தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் நடராஜனுக்கு ஆதரவாக பத்ரிநாத் கருத்துப் பதிவிட்டிருந்தார். "அர்ஷ்தீப் அல்லது கலீல் அகமதுவுக்கு மேலாக நடராஜன் பெயர் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் செயல்பாடு எப்படி? நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த அதிருப்தியில் இருந்த தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் குமுறலை பத்ரிநாத்தின் கருத்து இன்னும் அதிகப்படுத்திவிட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு நடராஜனின் செயல்பாட்டை பாராட்டு சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். நாமும் ஐபிஎல் இணையதளத்தில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்தோம். அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.68. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல். புள்ளிவிவரம் கூறியது. அவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 15ஆக உயர்த்திக் கொண்டுள்ள நடராஜன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான நீலத் தொப்பியை வசப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் பாண்டியா தேர்வு பற்றி ரசிகர்கள் கேள்வி நடப்பு ஐ.பிஎல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் சஞ்சு சாம்ஸன், ஷிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். தற்போதைய இந்திய அணியில் சிறந்த கிளாசிக் பேட்ஸ்மேனாக கருதப்படும் லோகேஷ் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகியோருடனான போட்டியில் பின்தங்கியுள்ளார். நடு வரிசையில் அதிரடி காட்டும் ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்து வெளியேறிய பிறகு இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத, நடப்பு ஐ,பி.எல். தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என்று எதிலுமே பெரிதாக ஜொலிக்காத ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்ததுடன், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும் கூட, ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த தனது கருத்தை பதிவிட்டிருந்தார். "மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா மீது தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 தமிழ்நாடு அமைச்சர் கருத்து அதேநேரத்தில், நடப்பு ஐ.பிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவே ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருமே இதற்கு நேரடியாக கருத்துப் பகிர்ந்தார். தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "இது விரிவாக விவாதிக்கப்படுவது சிறப்பான ஒன்று. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு பலமுறை அவர்களுக்குரிய இடத்தைக் கொடுக்காமல் டெல்லி மறுத்துள்ளது. இது சமீப காலமாக அதிக அளவில் நடக்கிறது. இது ஆட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. பல விளையாட்டுகளிலும் டெல்லி இவ்வாறுதான் குறுகிய பார்வையுடன் செயல்படுகிறது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் குறித்து டெல்லி பெரும்பாலான நேரங்களில் பாராமுகமாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டதுடன், பத்ரிநாத் தனது மனதில் பட்டதை பேசியதற்காக பாராட்டியும் இருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 "நடராஜனை தேர்வு செய்திருக்க வேண்டும்" ஹர்திக் பாண்டியா தேர்வு, நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்காதது, பத்ரிநாத் கருத்து மற்றும் ரசிகர்களின் விமர்சனம் குறித்து விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி.ராமன், பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். பத்ரிநாத் ஆதங்கம் குறித்துக் கேட்ட போது, "பத்ரிநாத்தின் கருத்தை ஓரளவு ஏற்றுக் கொள்லாம். ஆனால், அத்துடன் அப்படியே உடன்பட முடியாது. தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு சிறந்த தேர்வாக இருந்திருப்பார். பும்ரா அல்லது முகமது சிராஜூக்குப் பதிலாக நடராஜனை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு அடுத்த இடத்தை நடராஜனுக்கு வழங்கி இருக்கலாம். அர்ஷ்தீப், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கலாம்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி தேர்வு எப்படி நடக்கிறது? இந்திய அணியில் இடம் பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 2 மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என்ற பத்ரிநாத் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சமீபத்திய ஆணடுகளில் இந்திய அணிக்காக முரளி விஜய், அஸ்வின், நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் என பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணியில் மும்பை, கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களே அதிகம் இடம் பிடித்து வந்தனர். அதுவே, சமீப காலமாக மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பிடிக்கின்றனர். தற்போதைய அணியிலும் கூட 8 அல்லது 9 வீரர்கள் மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்." என்றார் சுமந்த் சி.ராமன். அப்படி என்றால் வீரர்கள் தேர்வில் அரசியல் இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனம் உண்மைதானா? என்று கேள்வி எழுப்பிய போது, "அது அப்படி அல்ல. இந்திய அணி தேர்வாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கிளப்களுக்கும், அகாடமிகளுக்கும் அடிக்கடி செல்வார்கள். அங்கே, வீரர்களின் திறமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. அதுதவிர, தேர்வாளர்களுடன் அறிமுகமாகி சில வீரர்கள் ஓரளவு பரிச்சயத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். சில வீரர்கள் தங்களது திறமையால் தேர்வாளர்களை நேரடியாக கவர்வதும் உண்டு. அணி தேர்வு என்பது வெறும் ரன்கள், விக்கெட்டுகள் அடிப்படையில் மட்டும் நடக்காது. அணியில் உத்தி சார்ந்து சில தேவைகள் எழும் போது, திறமையான ஆட்டத்தால் நேரில் கவர்ந்த அல்லது பரிச்சயமான வீரர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வாளர்கள் கருதும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். எல்லோரும் மனிதர்கள் தானே. புள்ளிவிவரங்களைக் காட்டிலும் நேரடி சந்திப்புகளும், திறமையால் ஏற்பட்ட ஈரப்பும் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும் தானே. இதுவே, மும்பை மற்றும் டெல்லி வீரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கிறது. நான் சொல்ல வருவது மும்பை மற்றும் டெல்லியில் வசிக்கும் வீரர்களை. ரஞ்சி, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு விளையாடுபவர்களாக இருக்கலாம்." என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஹர்திக் பாண்டியா தேர்வு ஏன்?" டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும், கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டபடியே ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் கடந்த அக்டோபருக்குப் பிறகு விளையாடாத, தற்போது நல்ல ஃபார்மிலும் இல்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்?அவரை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? என்பனவற்றை நியாயப்படுத்த இருவருக்குமே சற்று நேரம் பிடித்தது. "ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார்" என்ற அகார்கர், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடுகிறார். உலகக்கோப்பையில் எங்களது முதல் போட்டியில் ஆட இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் உள்ளது. அதற்கு அவர் தனது பார்மை மீட்டுவிடுவார்" என்று குறிப்பிட்டார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது, இந்திய அணிக்கு ஹர்திக் சேர்க்கும் வலிமையை, இப்போதைய நிலையில் குறிப்பாக பந்துவீச்சில் வேறு யாரும் தர முடியாது. அவரது உடல் தகுதி மிக முக்கியமானது. ஐ.பிஎல். இதுவரையிலும் அவருக்கு சிறப்பானதாகவே இருக்கிறது." என்று அகார்கர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக வீரர்களில் யார் பெயர் பரிசீலிக்கப்பட்டது? பந்துவீச்சு கூட்டணி தேர்வு குறித்துப் பேசிய ரோகித் சர்மா, "4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவிச்சாளகள் மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுழற்பந்துவீச்சில் குல்தீப், சாஹல் ஆகியோருடன் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் பலம் சேர்ப்பார்கள். எதிரணியைப் பொருத்து ஆடும் 11 வீரர்களை இறுதி செய்வோம்" என்றார். இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களில் ஒருவர் கூட ஆஃப் ஸ்பின்னர் இல்லை. அனைவருமே இடது கை பந்துவீச்சாளர்கள். ஆகவே ஆஃப் ஸ்பின்னரை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த ரோகித், அதுகுறித்து அணி நிர்வாகம் நிறைய விவாதித்ததாக கூறினார். "துரதிர்ஷ்டவசமாக அதில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. அவர் சமீப காலமாக அதிக போட்டிகள் விளையாடவில்லை. ஆகவே, அஸ்வினா அல்லது அக்ஸர் படேலா என்பதாகவே விவாதம் இருந்தது. அஸ்வின் நீண்ட காலமாக சர்வதேச டி20 கிரிக்கெட் ஆடவில்லை. அதேநேரத்தில், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் விளையாடிய போது அக்ஸர் படேல் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அத்துடன், பேட்டிங்கிலும் நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேனை களமிறங்க விரும்புகையில் அதற்கான சிறந்த தெரிவாக அக்ஸர் படேல் இருப்பார்" என்று கூறினார். அதேபோல், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும், ஷிவம் துபேவும் பந்துவீச்சிலும் அணிக்கு வலுசேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன்? வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கக் கூடிய டி20 உலகக்கோப்பைக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன் என்ற கேள்வி இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே இருந்து வருகிறது. நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்ரிநாத் கூட, 4 சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதே கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்த போது பதிலளித்த ரோகித் சர்மா, "அதுதொடர்பாக விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்து எதிரணி கேப்டன்களும் இதனை கேட்பார்கள். அதனால் சுருக்கமாக பதிலளிக்கிறேன். 4 சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். அங்கே நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம். அங்குள்ள சூழல் எங்களுக்கு நன்றாக தெரியும். போட்டிகள் காலை 10 அல்லது 10.30 மணிக்கு தொடங்கவுள்ளன. அதில் டெக்னிக்கலாக சில விஷயங்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீசில் எனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்வேன். 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததற்கு காரணம் உள்ளது. அதனை அங்கே நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் நிச்சயம் கூறுவேன்." என்று தெரிவித்தார். டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. https://www.bbc.com/tamil/articles/cljd0rgdk4go
  18. Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 11:54 AM அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த வீட்டை பயன்படுத்துவதற்காக தனது சம்பளத்தில் 20 வீதத்தை மாகாண சபை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்றும், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் உரிய தொகையை மத்திய மாகாண சபை உரிய முறையில் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, ரம்புக்வெல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளநிலையில், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை இழந்துள்ளமையினால், அவரது அமைச்சுப் பதவியில் இருந்து குறித்த இல்லத்தை பயன்படுத்துவதற்கு மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கோரி மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/182544
  19. லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 12:37 PM லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182565
  20. நடராஜனுக்கு பர்ப்பிள் தொப்பி - ராஜஸ்தானை 1 ரன்னில் வீழ்த்திய ஹைதராபாத்தின் துல்லியமான யார்க்கர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மே 2024, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரின் 5வது பந்துவரை ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் இருந்த நிலையில் கடைசிப்பந்தில் ஆட்டம் சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பி வெற்றி பெற்றதை யாராலும் கணித்திருக்க முடியாது. சன்ரைசர்ஸ் அணியினருக்கு கூட தாங்கள் வெற்றி பெறுவோமா என்பதில் சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ஆனால் முடிவு அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. அதேசமயம், ராஜஸ்தான் அணியினருக்கும் எப்படித் தோற்றோம் எங்கு தோற்றம் என்பது புதிராக இருந்தது. 19-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்குக் குறையாமல் இருந்துவந்தநிலையில் கடைசி ஓவரிலும் வெற்றிக்கு அருகே சென்று கோட்டைவிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு? இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் 8வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில், நிகர ரன்ரேட் 0.622 என்று இருக்கிறது. இன்னும் ராஜஸ்தான் அணிக்கு 4 லீக் ஆட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முதல் இரு இடங்களைப் பிடித்துவிட முடியும். சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. நிகர ரன்ரேட் 0.072 என்று வைத்துள்ளது. சிஎஸ்கே அணி 4ஆவது இடத்தில் இருந்தநிலையில் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் அடுத்துவரும் 3 ஆட்டங்களில் வென்றால்தான் சன்ரைசர்ஸ் சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இல்லாவிடில், 16 புள்ளிகளோடு இருந்தால், நிகர ரன்ரேட் சிக்கல் வந்துவிடும். சன்ரைசர்ஸ் அணிக்கு, மும்பை(மே6), லக்னோ(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. மும்பை அணியை ஏற்கெனவே சன்ரைசர்ஸ் தோற்கடித்திருப்பதால், 2-ஆவது முறையும் தோற்கடித்தால், மும்பையின் ப்ளே ஆஃப்கனவு முடிந்துவிடும். அதேபோல பஞ்சாப், குஜராத் அணிகள் சன்ரைசர்ஸ் அணியுடன் தோற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும். இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை, எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவும் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் போட்டியில் என்ன நடந்தது? சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் அனுபவமான பந்துவீச்சுதான். அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை கடைசி ஓவரிலும் முதல் ஓவரிலும் வெளிப்படுத்திவிட்டார். முதல் ஓவரிலேயே பட்லர், சாம்ஸன் இரு பெரிய ஆபத்தான பேட்டர்களை டக்அவுட்டில் வெளியேற்றி ராஜஸ்தான் அணிக்கு பெரிய ஷாக் அளித்தார். முதல் ஓவரில் புவனேஷ்வர் இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.. கடைசி ஓவரிலும் அவரது துல்லியமான பந்துவீச்சு தொடர்ந்தது. 13 ரன்களுக்குள் முடக்க வேண்டும் என்ற நிலையில், கடைசிப்பந்தில் பாவெலுக்கு கால்காப்பில் வீசி அவுட் ஆக்கி சன்ரைசர்ஸ் அணிக்கு புவனேஷ்வர் வெற்றி தேடித்தந்தார். 4 ஓவர்கள் வீசி 41ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,SPORTZPICS கடைசிப் பந்து வெற்றி பற்றி கம்மின்ஸ் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ அற்புதமான போட்டி. கடைசிப்பந்துவரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நான் நினைக்கவில்லை. இது டி20 கிரிக்கெட் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். புவனேஷ்வர் 6 யார்கர்களை வீசி அற்புதமாக பந்துவீசினார். கடைசிப்பந்தில் நிச்சயம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லும் என நினைத்தேன். நடராஜன் அருமையான யார்கர் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் அணியும் நன்கு பேட்செய்தனர், ஆனால் தொடக்கத்தில்தான் விக்கெட்டுகளை இழந்தனர். தரமான வீரர்கள் என்பதால் கடைசிவரை எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பைத் தரவில்லை. நிதிஷ் குமார் சிறப்பாக பேட் செய்து இக்கட்டான சூழலில் நல்ல ஸ்கோர் செய்தார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டு வீரர் நடராஜன் எட்டிய புதிய மைல்கல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள்வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடராஜன் புதிய மைல்கல் எட்டினார். சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை நடராஜன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார். 89 டி20 போட்டிகளில் நடராஜன் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரின் எகானமி 9 ரன்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு முன் நடராஜன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது, 55 போட்டிகளில் 63 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்த 3-ஆவது பந்துவீச்சாளராக நடராஜன் இருக்கிறார். முதலிடத்தில் புவனேஷ்வரும், 2வது இடத்தில் ரஷித் கானும் உள்ளனர். ஆட்டத்தை மாற்றிய கடைசி 2 ஓவர்கள் 18-ஆவது ஓவர்கள் வரை ஆட்டத்தின் வெற்றி ராஜஸ்தான் அணி பக்கமே இருந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் துருவ் ஜுரெல், ரோவ்மென் பாவல் இருந்தனர். 19-ஆவது ஓவரை கேப்டன் கம்மின்ஸ் வீசினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவர் என்பதை கம்மின்ஸ் இந்த ஓவரில் வெளிப்படுத்தினார். முதல் பந்தைச் சந்தித்த துருவ் ஜுரெல்(1) யார்க்கராக வீசப்பட்ட பந்தை லெக்திசையில் மடக்கி அடிக்க அபிஷேக்கிடம் கேட்சானது. அடுத்து அஸ்வின் களமிறங்கி 2வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஸ்ட்ரைக்கே பாவெலிடம் கொடுத்தார். தொடர்ந்து 3 பந்துகளை டாட் பந்துகளாக கம்மின்ஸ் வீசி பாவெலை திணறடித்தார். கடைசிப்பந்தை கம்மின்ஸ் வைடு யார்க்கராகவீச, அதை பாவெல் சிக்ஸருக்கு விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த ஓவரில் கம்மின்ஸ் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி ஓவரில் புவனேஷ்வர் நிகழ்த்திய திருப்பம் கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை பாவெலிடம் வழங்கினார். 2ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 3வது பந்தில் பாவெல் பவுண்டரி அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தனார். புவி வீசிய 4ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 5-வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்செல்லும் 2 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. பாவெல் கடைசிப்பந்தை எதிர்கொள்ள அதை புவி லோஃபுல்டாசாக வீசவே, பாவெல் கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணியிடம் இருந்த வெற்றியை சன்ரைசர்ஸ் அணி பறித்துக்கொண்டது என்றே கூறலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ரியான் பராக்-ஜெய்ஸ்வால் கூட்டணி ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே கேப்டன் சாம்ஸன், பட்லர் இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 3ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால், பராக் கூட்டணி அதிரடியைக் கைவிடவில்லை, 4.5 ஓவர்களில் ராஜஸ்தான் 50 ரன்களை எட்டியது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தனர். 9.6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதத்தையும், 31 பந்துகளில் ரியான் பராக் ஒரு அரைசதத்தையும் விளாசினர். இருவருமே ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் தேவையற்ற ஒரு ஸ்விட்ச் ஹிட்ஷாட் ஆட முயன்று நடராஜன் பந்துவீச்சில் க்ளீன்போல்டாகி 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருவரும் 3வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஜெய்ஸ்வால் விக்கெட்தான், சன்ரைசர்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புக் கதவுகளை திறந்தது. அதுவரை ஆட்டம் ராஜஸ்தான் அணி பக்கம்தான் இருந்தது. அடுத்த சிறிறு நேரத்தில் ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தநிலையில் கம்மின்ஸ் பந்தவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹெட்மயர் ஒருசிக்ஸர், பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 3பேட்டர்கள் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணியை நெருக்கடிக்குள் தள்ளினர். கடைசி நேரத்தில் ரோவ்மென் பாவல் அதிரடியாக ஆடினாலும், எதிர்முனையில் அவரின் அழுத்தத்தைக் குறைக்கும் பேட்டர்கள் இல்லை. கடந்த போட்டியில் சிறப்பான அரைசதம் அடித்த ஜூரெல் இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். 5-ஆவது முறையாக 200 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மட்டும் 5வது முறையாக 200 ரன்கள் ஸ்கோரைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக்(12) ரன்னில் ஆவேஷ் கானும், அன்மோல்பிரித் சிங்கை(5) ரன்னில் சந்தீப் குமாரும் வீழ்த்தி தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தனர். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மிகக்குறைவாக 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/c14k8g9nlnno
  21. அகோர வெயிலோட இலவச இணைப்பாக தடிமன், காய்ச்சல், இருமல். இருமல் தான் இன்னும் மாறாதாம்.
  22. 03 MAY, 2024 | 09:35 AM நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03) முடிவடைகிறது . இதேவேளை , பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182531
  23. கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும். இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300770
  24. 03 MAY, 2024 | 10:28 AM ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர். அவர்கள் பொது நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் விமர்சனத்துடனான ஆய்வுகளை முன்வைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் அதிகாரம் மக்கள் நீடித்திருப்பதை உறுதி செய்கின்றனர். https://www.virakesari.lk/article/182540
  25. 28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்டிக்காட்டினார். மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, பெண்களின் பொருளாதார பங்களிப்பு குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’ என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் தியாகராஜன் கருத்து வெளியிட்டார். ‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது. எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’ என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன். இதில் பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது. குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது. இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது. அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது. இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன். எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன? அவற்றை எவ்வாறு திருத்துவது? என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன். அந்த அனுபவம், அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது. மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும். அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will) முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும். முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது. அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர் ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது. அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது. முறையை மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம். கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர். அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது. நீங்கள் இந்த நூற்றாண்டை எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். ஸ்கடேினேவிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும், மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது. பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள், அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது. பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும். பிரசவ மரணம் குறைவடையும். அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான சுமை குறைவடைகிறது. அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள் பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும். ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும். இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை. இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம். இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது. கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள். தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும். இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி 1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார். ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின. தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் என்ற விடயம் வெளிக்காட்டவில்லை. அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை. பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே முதலீடு செய்து இருக்கின்றன என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும். ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை. காரணம் நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது. அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன். எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை. மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது. இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும். மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன. இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன். ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல. இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது. நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை. எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும். அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும். அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம். கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா? பதில் இது முதலமைச்சர் ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கேள்வி நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது. உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? பதில் நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும். காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும். அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன. சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம். ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும். அதில் இணைந்து செயற்பட ஆற்றல் காணப்படுகிறது. மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம். கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு) இடம் பெற்றுள்ளது. அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது. 50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த எதனையும் செய்யவில்லை. ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது. இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். கேள்வி தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது. நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். முன்னாள் நிதி அமைச்சர். பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது. உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நானே பயணம் செய்திருக்கிறேன். ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும். தொடர்புகள், பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும். என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது. உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? பதில் இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும். அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார். நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன். வலது கையில் இருப்பது மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும். உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம். எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. https://www.virakesari.lk/article/182174

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.