Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 20 நிமிடங்களுக்கு முன்னர் சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றில், இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2% ஆக இருந்த நிலையில், 2016-2021க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் 21.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது, 43.1 சதவிகிதத்தில் இருந்து 49.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மருத்துவ ரீதியான சிக்கல்கள் குறைந்துள்ள போதிலும் (42.2 சதவிகிதத்திலிருந்து 39.5 சதவிகிதமாக குறைந்துள்ளது) அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்திருப்பதாக, அந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு, பிஎம்சி பிரெக்னன்சி மற்றும் சைல்ட்பர்த் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 2015-26 மற்றும் 2019-21 இல் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளை தொகுத்து, இந்த ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு உடல் எடை குறைவாக உள்ள பெண்களை விட இருமடங்கு அதிகம் என்றும், 35-49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் அறுவைகிச்சை பிரசவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்கிறது அந்த ஆய்வு. அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறித்து இந்த ஆய்வில், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் தமிழ்நாட்டில் அதுவே மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு - சத்தீஸ்கர் ஒப்பீடு இதற்கு இரு மாநிலங்களிலும் உள்ள பொது சுகாதார கட்டமைப்பில் உள்ள வித்தியாசத்தையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. சத்தீஸ்கரில் 2021-ஆம் ஆண்டில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் 77% நிரப்பப்படவில்லை. சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணக்காரர்களே அதிகளவில் செல்வது, அந்த சுகாதார வசதியை ஏழைகள் அணுக முடியாததை காட்டுவதை பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் இதே காலக்கட்டத்தில் 73 சதவிகித ஏழைகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் ஆனால், ஏழைகள் அல்லாதோர் என வரையறுக்கப்பட்டவர்களில் இந்த விகிதம் 64% ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஏழைகள் அல்லாதோருக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏழைகளே அதிகம் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 40% அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரியான 16 சதவிகிதத்தைவிட அதிகம். சத்தீஸ்கரில் இது 10 சதவிகிதமாக உள்ளது. அதேபோன்று, அறுவை சிகிச்சை பிரசவங்கள் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 64.2 சதவிகிதமாகவும் இந்திய சராசரி 49.7 சதவிகிதமாகவும் சத்தீஸ்கரில் 58.9 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து 21.5% அறுவை சிகிச்சை பிரசவங்கள் இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுள்ளன. அறுவை சிகிச்சை பிரசவங்களின் உயர்வுக்கு அப்பெண்களின் சமூக-பொருளாதார காரணிகள், கல்வி, சுகப்பிரசவம் குறித்த பயம் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், எந்த சுகாதார சேவையை அணுகுகிறோம் என்பதை பொறுத்து அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுவது அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நல்ல நாள் பார்த்து நடைபெறும் பிரசவங்கள் மருத்துவக் காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, கர்ப்பிணி 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது 34 வயதுக்கு மேல் இருந்தாலோ, முந்தைய குழந்தைக்கு உண்டான இடைவெளி 24 மாதங்களுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது பிறக்கும் குழந்தை அப்பெண்ணுக்கு நான்காவது அல்லது அதற்கும் மேலான குழந்தை என்றாலோ, அந்த கர்ப்பங்கள் மிகவும் ஆபத்தான கர்ப்பங்கள் என கருதப்படுகிறது. அச்சமயத்தில் அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொள்வது மருத்துவ ரீதியாக நியாயமானது என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம், தேவையற்ற சமயங்களில் அதனை மேற்கொள்வது உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு இத்தகைய பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, சென்னை ஐஐடியின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியரும் இந்த ஆய்வாசிரியர்களுள் ஒருவருமான வி. ஆர். முரளிதரன் பிபிசி தமிழிடம் பேசினார். “இந்திய அளவில் பெண்களிடையே உடல் பருமன் 24 சதவிகிதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஏழை பெண்களிடமும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் ரத்தச்சோகையும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமாகியுள்ளன” என்கிறார் அவர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-ன் படி, தமிழ்நாட்டில் 40 சதவிகித பெண்கள் உடல் பருமனுடன் உள்ளனர். நகர்ப்புறங்களில் படித்த பெண்களிடையே அறுவை சிகிச்சை பிரசவங்களை மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல், தாமாக முன்வந்து அறுவை சிகிச்சை பிரசவம் செய்துகொள்வது அதிகமாகியுள்ளதாக முரளிதரன் கூறுகிறார். இந்தியாவில் ‘நல்ல நாள்’, ‘நல்ல நட்சத்திரம்’ பார்த்து அந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களும் உண்டு என அவர் தெரிவித்தார். இந்த கலாசார காரணிகள் தமிழ்நாட்டிலும் உண்டு என்கிறார் அவர். அறுவை சிகிச்சை குறித்து தாலுகா, கிராம அளவில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். எப்படி தவிர்க்கலாம், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வேண்டும் என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பு இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாசிரியர் வர்ஷினி நீதி மோகன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழைகளுக்கு அதிகளவு சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதை பிபிசியிடம் கூறினார். “தமிழ்நாட்டில் 17% தான் ஏழைகள் என வரையறுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பொது சுகாதார கட்டமைப்பு மிக நன்றாக உள்ளன. பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் செல்கின்றனர். சில சிக்கல்கள் இருந்தால் கடைசிக் கட்டத்தில் தான் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். கர்ப்பகால ஆபத்துகளுடன் தான் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதால் அவர்களுக்கு சிசேரியன் நடக்கிறது என நாம் கருதலாம்” என்றார். அறுவை சிகிச்சை பிரசவங்களை தவறாக சித்தரிப்பது ஆய்வின் நோக்கம் அல்ல என்றும், அறுவை சிகிச்சைகளால் தாய் இறப்பது எந்தளவுக்குக் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார். “சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்புக்கு முழுக்க முழுக்க மருத்துவர்கள்தான் காரணம் என சொல்ல முடியாது. படித்தவர்கள் தாமாகவே அதை தேர்ந்தெடுக்கின்றனர். பிரசவ வலி குறித்த பயம் இருக்கிறது" என்கிறார் வர்ஷினி. கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்கும் நேரம் உட்பட பலவற்றை குடும்பங்கள் தீர்மானிப்பதாக பேராசிரியர் முரளிதரன் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தாமாக சிசேரியனை தேர்ந்தெடுக்கும் பெண்கள் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பிரசவங்களை தேர்ந்தெடுத்த சில பெண் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவருக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “எனக்கு ஏற்கெனவே மூன்று முறை கருக்கலைந்து விட்டது. பின்னர், செயற்கை கருத்தரிப்பின் மூலம் (ஐயூஐ) என்னுடைய 34-வது வயதில் கர்ப்பமானேன். ஏற்கனவே வயதும் சற்று அதிகமாகிவிட்டதால் மேலும் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என, நானும் என் கணவரும் இணைந்தே அறுவை சிகிச்சை செய்துகொள்வதென முடிவெடுத்தோம்" என்கிறார் அவர். ஆனால், தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் இறுதிகட்ட நேரம் வரை தனக்கு சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார். எனினும் தான் அறுவை சிகிச்சையையே தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார். “கருத்தரித்து 34-ம் வாரத்திலேயே அறுவை சிகிச்சையை செய்ய நாங்கள் முடிவெடுத்தோம். மருத்துவர்கள் ஒரு வாரம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தனர். ஆனால் நாங்கள் அதற்கு முன்பாகவே அறுவை சிகிச்சை செய்துகொண்டோம்" என்கிறார் அவர். அவருடைய 25 வயது தங்கையும் எந்த சிக்கல்களும் இன்றி சிசேரியன் பிரசவம் செய்துகொண்டதாக அவர் கூறுகிறார். தங்களின் திருமண நாளன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற விரும்பி அந்நாளை தேர்ந்தெடுத்ததாக அப்பெண் கூறுகிறார். “சுகப்பிரசவத்திற்கு முயற்சித்து கடைசி நேரத்தில் ஏதேனும் அவசரநிலையில் சிசேரியன் செல்லலாம் என மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படி நான் பலரிடம் கேள்விப்பட்டதுண்டு. அதனால், நாங்களே சிசேரியன் செய்ய முடிவெடுத்தோம். 34-ஆம் வாரத்திலேயே அறுவை சிகிச்சை செய்ததால், குழந்தைக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அறுவை சிகிச்சைக்கு முன்னதாக எனக்கு சில ஊசிகள் செலுத்தப்பட்டன” என்றார். எப்போது பிரசவ வலி வரும் என தெரியாததாலும் அச்சமயத்தில் வீட்டில் யாரும் இருப்பார்களா, இல்லையா என்பது தெரியாததாலும் பலர் சிசேரியன் பிரசவங்களை தேர்ந்தெடுக்கின்றனர். சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பெண் கூறுகையில், தான் பிரசவ தேதியை நெருங்கும் சமயத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். எனினும், சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியிருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால், ‘நல்ல நாளில்' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தன் நெருங்கிய உறவினர் கூறியதாக தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "மருத்துவ வளர்ச்சிதான் காரணம்" தமிழ்நாட்டில் தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்-மே கோடைக்காலம்) குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொள்பவர்களும் உண்டு என்கிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத். தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பை எதிர்மறையாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர். “தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், குழந்தைகள் மருத்துவம், தீவிர சிகிச்சை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை (NICU) உட்பட மற்ற துறைகள் நன்றாக வளர்ந்துள்ளது. 2.5 கிலோவுக்கும் குறைவாக எடை கொண்ட குழந்தைகளை பிழைக்க வைக்கிறோம். குறை மாத குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். 24-25 வார குழந்தைகளும் பிழைக்கின்றன. 42 வார குழந்தைகளும் பிறக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம் தான்” என்கிறார் அவர். 2020-ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் (பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8.2 ஆக உள்ளது. மேலும், 2022-2023 இல் பேறுகால இறப்பு விகிதம் (ஒரு லட்சம் பிரசவங்களில்) 52 ஆக குறைந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். “அதே ஆய்வில் சத்தீஸ்கரில் 77% சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் 34 அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுகாதார வசதிகள் அடிமட்ட அளவில் எல்லோருக்கும் சென்றடைந்துள்ளது” என்கிறார் சாந்தி ரவீந்திரநாத். பட மூலாதாரம்,GETTY IMAGES தானாக விரும்பி சிசேரியன் செய்வது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்ளும் அவர், இது தார்மீக ரீதியில் சரியானதா இல்லையா என்பது குறித்த விவாதங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறுவதாக தெரிவித்தார். “பிரசவத்தின் போது தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை முற்றுகை, மருத்துவர்களை தாக்குவது அடிக்கடி நிகழ்கின்றன. அதனால், தாய்-குழந்தையை காப்பாற்ற பாதுகாப்பான வழியாக சிசேரியன் பல சமயங்களில் நடக்கிறது" என்றார். தாமாகவே விரும்பி சிசேரியன் செய்ய சொல்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள், ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என கூறுகிறார் அவர். “எல்லாவற்றையும் தாண்டி எந்த வழியில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்பது அப்பெண்ணின் உரிமை” என்கிறார் மருத்துவர் சாந்தி. உலக சுகாதார மையத்தின்படி, 1985-ம் ஆண்டு முதல் மக்கள்தொகையில் 10-15% அறுவை சிகிச்சை பிரசவங்களையே பரிந்துரைத்துள்ளது. உலகளவில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 2021-ம் ஆண்டின்படி, 21 சதவிகிதமாக உள்ளது என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தேவையற்ற சமயங்களில் அறுவை சிகிச்சை செய்வது தாய், மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. “10-15% என்பதை 1980களில் உலக சுகாதார மையம் பரிந்துரைத்தது,. தற்போது அடைந்திருக்கும் மருத்துவ வளர்ச்சியுடன் இந்த விகிதத்தை மாற்ற வேண்டும்” என்கிறார் மருத்துவர் சாந்தி. "அரசு தீவிரமாக கண்காணிக்கிறது" தமிழ்நாட்டில் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய சுகாதார திட்டம், மருத்துவமனை முதல்வர்கள், இணை இயக்குநர்கள் வாயிலாக ஒவ்வொரு மாதமும் எந்தெந்த மாவட்டங்களில் சிசேரியன் சதவிகிதம் கூடுதலாக இருக்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என விரிவான ஆய்வு நடத்துகிறோம். சிசேரியன் சிகிச்சையை முழுமையாக தவிர்க்க முடியாது. அவர்களின் பாதுகாப்புக்காகவும் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், எவ்வித சிக்கலும் இல்லாமல் இருப்பவர்களுக்கு இயற்கை பிரசவம் தான் ஆக வேண்டும். அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன, நாங்கள் இதை மிக தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். கர்ப்பிணி பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள், மூத்த செவிலியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4n1d2490x7o
  2. மனுதர்ம சாஸ்திரத்தை மொழிப்பெயர்த்த பாரதியின் சிஷ்யன் - ஏன்? - ரவி சுப்பிரமணியம் https://www.facebook.com/FullyNewsy/videos/மனுதர்ம-சாஸ்திரத்தை-மொழிப்பெயர்த்த-பாரதியின்-சிஷ்யன்-ஏன்/1475185023400388/?mibextid=xfxF2i&rdid=V2LVdpydMFzzNfzB
  3. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிதாக அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் இனி ரூ. 2.6 மில்லியன் செலுத்த வேண்டும். அதேபோல், சுயேச்சை வேட்பாளர்கள் ரூ. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 3.1 மில்லியன் செலுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து குறித்த சட்டவிதிகளை திருத்துவதற்கான பிரேரணையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/298613
  4. எனது வீடு எங்கே? ; கான் யூனிசிற்கு மீண்டும் திரும்பிய பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி - முற்றாக அழிக்கப்பட்டுள்ள வீடுகள் Published By: RAJEEBAN 09 APR, 2024 | 12:39 PM காசாவின் கான்யூனிசிற்கு மீண்டும் திரும்பிச்சென்றுள்ள மக்கள் முன்னர் தங்கள் வீடுகள் காணப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகள் காணப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் என்னால் எனது வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை மாக்டி அபு சாஹ்ரூர் என்பவர் தெரிவித்துள்ளார். எனது வீடு எங்கே எனது இடம்எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது முதல்பெயர் ஹனான் என தெரிவித்த பெண்ணொருவர் எனது வலியை வேதனையை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். எங்களின் நினைவுகள் எங்களின் சிறுவயது எங்களின் குடும்பங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என அவர் கலங்கிய குரலில் தெரிவித்துள்ளார். அவர் தனது வீட்டின் சிதைவுகளில் இருந்து மீட்ட பொருட்களுடன் காணப்பட்டார் என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. ஒருமாதகால சண்டைக்கு பின்னர் இஸ்ரேலிய படையினர் கான்யூனிஸ் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன. https://www.virakesari.lk/article/180805
  5. இந்தக் கேள்விகள் என் மனதிலும் வருவதுண்டு. நீங்கள் எழுத்திலே கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி அண்ணை. அற்புதமான சிந்தனை வெளிப்பாடு. என் மனதிற்கு ஆறுதலான எழுத்தாக உணர்கிறேன்.
  6. 09 APR, 2024 | 04:33 PM (எம்.மனோசித்ரா) அரசுக்கு உரித்தான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் குறித்த வங்கிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன. எனவே அவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய பல மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கும் கட்டமைப்பு ரீதியான தேவைப்பாடுகளாகவும், உலக வங்கியினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி கொள்கை செயற்பாடுகளின் கீழான அடிப்படைச் செயற்பாடுகளாகவும் குறித்த மறுசீரமைப்புகளை துரிதமாக அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய குறித்த மறுசீரமைப்பு யோசனைகளை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/180829
  7. Published By: VISHNU 09 APR, 2024 | 06:24 PM இந்திய மீனவர்களின் அத்து மீறிய தொழில் முறையால் நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 257 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாராலும் நடவடிக்கையில்லை கடற்தொழில் அமைச்சாலும் நடவடிக்கையில்லை இது தொடர்பில் அனைத்து துறைசார்ந்த தரப்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்தகைய நிலையில் புதன்கிழமை (10) நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த ஒருங்கிணைப்பு குழூ கூட்டத்திலாவது பாதிக்கப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். https://www.virakesari.lk/article/180846
  8. 09 APR, 2024 | 04:41 PM 2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (10) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 24 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இது பொருந்தும். https://www.virakesari.lk/article/180837
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் உசேன் பதவி, பிபிசி செய்தி பங்களா 9 ஏப்ரல் 2024, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார். ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை. இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, இரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரான் எப்போது, எங்கு இந்தத் தாக்குதலை நடத்தும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ரமலான் மாதத்தின் கடைசி வாரத்திற்கு இடையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இரானுக்குள் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுமா அல்லது இராக் மற்றும் சிரியாவின் மண் இதற்குப் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கும் அதிகம் தெரியவில்லை. இதற்கிடையில், இரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இது நடந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால், இரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இரான் பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்களும் கேள்விக்குட்படுத்தப்படும். இதன் விளைவு, இரானை பலவீனமாகக் கருதும் இஸ்ரேல் எதிர்காலத்தில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும். இரான் முன் உள்ள சவால், அது தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ளக் கூடாது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அது நிரூபிக்க வேண்டும். ஆனால் சிரமம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தொடங்காமல் இரான் இஸ்ரேலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? மற்றொரு கேள்வி என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் திறன் இரானுக்கு இருக்கிறதா? இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடும் திறன் இரானுக்கு இல்லை என்று மத்திய கிழக்கு விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான அலி சத்ரசாதே பிபிசியிடம் தெரிவித்தார். “இரான், தங்கள் நாட்டு மக்களுக்காகவாவது கண்டிப்பாக இஸ்ரேலுக்கு பதிலளிக்க வேண்டும். இது தவிர, தனது நட்பு நாடுகளுடன் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இரான், இஸ்ரேல் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஒரு வலுவான பதிலடியையும் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே இரான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்கிறார் அலி சத்ரசாதே. தொடர்ந்து பேசிய அவர், “தற்போது இரானின் முன்னுரிமை அணுகுண்டு தயாரிப்பதே. ஒரு சில பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி 100 இஸ்ரேலியர்களைக் கொல்வதை விட அணுகுண்டு தயாரிப்பில் முன்னேறுவது தான் அந்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் தாக்குதலையும் இரான் தடுத்து நிறுத்தும்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம். ஹெஸ்புல்லாவின் நிலைப்பாடு என்ன? காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, பல இரான் ஆதரவு குழுக்கள் சிரியா, இராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய குழுக்களைத் தாக்கியுள்ளன. இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பவில்லை. "இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள், அவ்வாறு தாக்குவது மிகவும் கடினம்." என்கிறார் அலி சத்ரசாதே. உலகிலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுவாக உள்ளது ஹெஸ்புல்லா. இது ஒரு நாட்டின் இராணுவ அமைப்பு இல்லை என்றாலும், இதில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் போராளிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சிரியப் போரில் பங்கேற்றதன் மூலம், போர்க்கள அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லாவிடம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இருந்த போதிலும், இரான் சார்பாக ஹெஸ்புல்லா இனி இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஹெஸ்புல்லா இஸ்ரேலின் வலையில் விழ விரும்பவில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும். இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்ரேலுடன் நேரடிப் போரை நடத்தாமல் ஒரு குறியீட்டு பதிலடியை தான் இரான் எதிர்பார்க்கிறது என்று மத்திய கிழக்கு நிபுணர் சத்ரசாதே நம்புகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கில் இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு 'கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை' எடுக்கப்படும் என இரான் அச்சுறுத்தியது, ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை. சுலேமானியின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை. தாக்குதலுக்கு முன்னதாகவே ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வர்ஜீனியா டெக்கின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அண்ட் இன்டர்நேஷனல் அஃபர்ஸைச் சேர்ந்த யூசுப் அஸிஸி பிபிசியிடம், “திரைக்குப் பின்னால் இரானுக்குள் இரு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, இரான் அணுசக்தி நாடாக மாறுவதன் மூலம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் விரும்புகிறது, மறுபுறம் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கி பதிலடி கொடுக்க விரும்புகிறது. இந்தச் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, அணுசக்தியை மேம்படுத்துவதுதான் இரானின் முன்னுரிமையாக இருக்கலாம் என்கிறார் அவர். மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம் மத்திய கிழக்கில் பெரிய போர் எதுவும் வெடிப்பதை இரான் விரும்பவில்லை. இரானுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களுக்கு அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது. இரண்டாவதாக இரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புகின்றன. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள் இரானை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இது தவிர, இராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது ராணுவ வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்தக் கூடிய தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. எவ்வாறாயினும், சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறையால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "உங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம், விலகி இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார். தனது சமூக ஊடகச் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இரானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக ஜம்ஷிதி கூறினார். இரானிடம் இருந்து அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வ செய்தி வந்துள்ளதாக அமெரிக்க செய்தி சேனலான சிபிஎஸ் (CBS) உறுதிப்படுத்தியுள்ளது. இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு எச்சரிக்கை கடிதத்தையும் அமெரிக்கா எழுதியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ஒருபுறம், எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துணியக்கூடாது என்று இரான் விரும்புகிறது, மறுபுறம் மத்திய கிழக்கில் புதிய போரைத் தொடங்கவும் இரான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரான் குழப்பத்தில் உள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் பிபிசியிடம் பேசுகையில், “இரான் உண்மையில் ஒரு 'காகிதப் புலி' என்பதை உலகிற்கு காட்ட, இஸ்ரேல் ஒரு பதற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார். "இந்த விஷயத்தில் இரான் பதிலளிக்கவில்லை என்றால், அது ஒரு 'காகிதப் புலி' தான் என்றும், பதிலடி கொடுக்கும் திறன் அதற்கு இல்லை என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்," என்று ஒரு பெயர் கூற விரும்பாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி இராக்கில் படுகொலை செய்யப்பட்டார். இப்போது இரான் என்ன செய்யும்? இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு யூத நிறுவனங்களை இரான் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இரான் தனது அணுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். யுரேனியத்தை சிறப்பாக செறிவூட்டுவதன் மூலம், அணு குண்டுகளை தயாரிக்க அதை பயன்படுத்த முடியும் அல்லது இரான் அணு ஆயுதங்களை மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த நடவடிக்கை இரானுக்கு பாதகமாக அமையக்கூடும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இரான் இதைச் செய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்க முன்வரும். வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் (Center for Strategic and International Studies) மத்திய கிழக்கு நிபுணர் ஜான் ஆல்டர்மேன், இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை இரான் எடுக்காது என்று நம்புகிறார். “இஸ்ரேலுக்கு பாடம் கற்பிப்பதில் இரானுக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக, தாங்கள் பலவீனமாக இல்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு காட்டவே இரான் விரும்புகிறது" என்று ஜான் கூறுகிறார். இரான் இனி எந்தப் பாதையில் செல்லும்? இந்த விவகாரம் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் முடிவைப் பொறுத்து தான் அமையும். https://www.bbc.com/tamil/articles/c3g7dr79gzjo
  10. ஐ.பி.எல். தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் Published By: VISHNU 09 APR, 2024 | 07:13 PM நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விலகியதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வனிந்து ஹசரங்க இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். வனிந்து ஹசரங்கவுக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு தெரிவித்திருந்தது. அதன்படி வனிந்துவுக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வியாஸ்காந்த் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வலை பந்துவீச்சாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180847
  11. சூரிய கிரகணம்: பகல் நேரத்தில் அமெரிக்கா இருளில் மூழ்கிய நிசப்தமான தருணம் - கண்ணைக் கவரும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,JEFF OVERS/BBC கட்டுரை தகவல் எழுதியவர், ஹாலி ஹாண்டெரிச் பதவி, பிபிசி செய்தியாளர், வாஷிங்டன் 9 ஏப்ரல் 2024, 02:38 GMT முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (திங்கள், ஏப்ரல் 8 – இந்தியாவில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர். இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது. இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது. பட மூலாதாரம்,HECTOR VIVAS/GETTY IMAGES படக்குறிப்பு, மெக்சிகோவின் மசாட்லான் கடற்கரையில் சூரிய கிரகணத்தைக் காணும் குழந்தைகள் இது முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகரத்துக்கு அருகில், இந்திய நேரப்படி இரவு சுமார் 11:40 மணிக்குத் தென்பட்டது. வட அமெரிக்க கண்டத்தை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கடந்த முழு கிரகணம், இறுதியாகத் தென்பட்டது கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெக்சிகோவில் முழு சூரிய கிரகணத்தின் போது சூழ்ந்த இருள் கிரகணம் தென்பட்ட மூன்று நாடுகளிலும் பல மக்கள் பொது வெளிகளில் கூடி, ஆரவாரத்துடன் அதனைக் கண்டுகளித்தனர். பட மூலாதாரம்,HENRY ROMERO/REUTERS படக்குறிப்பு, இந்த நிகழ்வைக் காண மக்கள் விசேஷ பாதுகாப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர் ‘எங்கும் இருள் சூழ்ந்தது’ முதலில் நிலாவின் விளிம்பு சூரியனைத் தொடுவதுபோலத் தோன்றியது. தொடர்ந்து நிலா சூரியனை முழுவதுமாக மறைத்தது. கிரகணத்தின் உச்சத்தில், முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலாவின் விளிம்பைச் சுற்றியும் சூரியனின் ஒளிவட்டம் மட்டுமே தென்பட்டது. பட மூலாதாரம்,ANGELA WEISS/GETTY IMAGES படக்குறிப்பு, முழு கிரகணத்தின் போது நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் வானம் இருண்டது கிரகணத்தின்போது வெப்பநிலை திடீரெனச் சரிந்தது. எங்கும் நிசப்தம் சூழ்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்தில் தனது தந்தையுடன் கிரகணத்தைக் கண்ட மாணவியான ஏடி, கிரகணத்தின்போது எங்கும் கும்மிருட்டு சூழ்ந்ததாகக் கூறினார். “மீண்டும் வெளிச்சம் வந்தபோதுதான் வெட்டுக்கிளிகள், பறவைகள் ஆகியவை சத்தம்போடத் துவங்கின,” என்றார் அவர். பட மூலாதாரம்,ANGELA WEISS/GETTY IMAGES படக்குறிப்பு, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் தெரிந்த சூரிய கிரகணம் வானியல் ஆர்வலரான டார்சி ஹோவர்ட், கிரகணத்தைக் காண்பதற்காக மத்திய ஆர்கன்சாஸில் உள்ள தனது வீட்டிலிருந்து மிசௌரி நகரத்திற்கு வந்திருந்தார். மோசமான வானிலை காரணமாக தான் கிரகணத்தைப் பார்ப்பது தடைபடக்கூடாது என்பதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். மிசௌரொயின் உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 2 மணிக்கு முழு கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஒரு ‘வினோதமான இருள்’ சூழ்ந்ததாக ஹோவர்ட் கூறினார். "வேறு ஏதோ உலகில் இருப்பதுபோன்ற உணர்வு எழுந்தது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,HENRY ROMERO/REUTERS படக்குறிப்பு, முதலில், நிலவின் விளிம்பு சூருயனைத் தீண்டுவதுபோலத் தெரிந்தது அமெரிக்காவில் பலரும் இந்தக் கிரகணத்தைத் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளாக மாற்றிக்கொள்ள விரும்பினர். முழு கிரகணம் நிகழும்போது திருமணம் செய்துகொண்டனர். அர்கான்ஸாஸ் மாகாணத்தில் அமெரிக்கா முழுதும் இருந்து வந்திருந்த 300 ஜோடிகள் முழு கிரகணம் நிகழ்ந்த தருணத்தில் திருமணம் செய்து கொண்டனர். பட மூலாதாரம்,MARIO TAMA/GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின்போது அர்கான்ஸாஸ் மாகாணத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் கிரகணத்தின்போது பட்டப்பகலில் நட்சத்திரங்கள் தென்பட்டன. மக்கள் அவற்றை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால் பல அமெரிக்க நகரங்களில் முழு சூரிய கிரகணம் தென்படவில்லை. இருந்தும் இந்த வானியல் நிகழ்வு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க் நகரத்தில் கிரகணத்தைக் காணக் கூடிய மக்கள் உதாரணமாக நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மாடியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் பிறைபோன்ற பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES கனடாவில் முடிவடைந்த கிரகணம் நயாகரா நீர்விழ்ச்சி இருக்கும் அமெரிக்க-கனடா எல்லையின் இருபுறமும் மக்கள் கிரகணத்தைக் காணக் குவிந்திருந்தனர். இப்பகுதியில் வானிலை மோசமாக இருந்தாலும், முழு கிரகணத்தின் வேளையில் மேகமூட்டம் விலகி, வானியல் நிகழ்வைக் காணமுடிந்தது. கனடாவின் மோன்ரியால் நகரத்தில் உள்ள மெக்-கில் பல்கலைகழகத்தில் 20,000 பேர் கூடியிருந்தனர். முழு கிரகணம், கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில் இறுதியாகத் தென்பட்டது. https://www.bbc.com/tamil/articles/ckk7gg51r0vo
  12. சிறுவர் முதல் பெரியோர் வரை ஆண் பெண் பேதமற்று பழகவேண்டியது நீச்சல். சுற்றி அடைத்து வைத்துள்ள கோவில் கேணிகளை திறந்து விடுங்கோப்பா! பல ஆயிரம் பேர் நீச்சல் வல்லுனர்களாக போட்டிகளிலும் வெல்லலாம்.
  13. காசநோய் கண்டவர்கள் 6 மாதச் தொடர் மருத்துவ சிகிச்சையில் குணமடைவார்கள் என பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தவர். என்னுடைய கிராமத்தில் பழைய நோயாளிகள் இருவரை தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பிற்காக விசாரித்தபோது தெரிந்துகொண்டேன்.
  14. Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 09:37 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும். புற்றுநோயைப் பொறுத்தவரையில் நிற மூர்த்தம் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் மற்றும் சமூகத்தில் வயதானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போது புற்றுநோயின் தாக்கம் வேகமாக உணரப்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் சூலகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்று நோய்கள் இனம் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தமட்டில் புற்று நோய்களை இனம் காணுவதற்கான ஆய்வு கூட வசதிகள் காணப்படுகின்ற நிலையில் மேலதிக ஆய்வுகளுக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் தை மாதம் 60 பேரும் பெப்ரவரி மாதம் 49 பேரும் மார்ச் மாதம் 60 பேரும் ஏப்ரல் மாதம் 52 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும். 40-60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை கண்டறியும் மனோ கிராம் சிகிச்சை மூலம் கண்டறியலாம். குறித்த சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் பெண்கள் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் புகைத்தல் வெற்றிலை போடுதலால் மற்றும் மதுபானம் அருந்துவதால் வாய் மற்றும் ஈரல் புற்று நோய் ஏற்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் இறந்துள்ளனர். இரைப்பை புற்று நோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளதுடன் ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எட்டு பேர் இறந்துள்ளனர். சுவாசாப் புற்றுநோயினால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 08 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்று நோயினால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 04 பேர் இறந்துள்ளனர். கருப்பைப் புற்றுநோயினால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். கருப்பை கழுத்து புற்று நோயினால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பை புற்று நோயினால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயினால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்று நோய்களினால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் இறந்துள்ளனர். தைரொய்ட் சிறப்பு கழலையில் ஏற்பட்ட புற்றுநோயினால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையை பொருத்தவரையில் நரம்பியல் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பில் வைத்திய பரிசோதனைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. உடலில் இயல்பு நிலைக்கு மாறாக ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் கண்காணித்து வருவதோடு சந்தேகங்கள் இருந்தால் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும். ஆகவே புற்றுநோய் தொடர்பில் ஆண், பெண் இருபாலரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாக காணப்படுவதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180779
  15. வீட்டுத்திட்ட பணிகளை பூரணப்படுத்த இரண்டாவது கட்ட நிதி உதவி வழங்கப்பட்டது. 08/04/2024 வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் பூரணப்படுத்த வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் 11/03/2023 இல் வைப்பிட்டுள்ளனர். 1) சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த அமரர் இராமநாதன் உதயசங்கரன் நினைவாக மகன் திரு உ.சிவசங்கரன்(கனடா) 30000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த வழங்கியுள்ளார். 2) திரு துரைசிங்கம் துர்க்கைநாதன்(கனடா) 20000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த வழங்கியுள்ளார். இரண்டாவது தடவையாக 03/04/2024 இல் 50000ரூபாவை மூவர் இணைந்து வழங்கி இருந்தனர். 3) தெய்வேந்திரம் குவைத் 20000(லண்டன்) ரூபாவை வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த நன்கொடை அளித்துள்ளார். 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் நவரத்தினம் கருணைதாசன்(கரன்) நினைவாக சகோதரன் திரு.ந.நவறஞ்சன் 15000 ரூபா வீடு கட்டும் பணியை பூரணப்படுத்த நன்கொடை அளித்துள்ளார். 5) திரு.சி.தேவகுமாரன் (சுழிபுரம்) வீடுகட்டும் பணியை பூரணப்படுத்த 15000 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரை மொத்தமாக 1 லட்ச ரூபா சி.ரஜிந்தனின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. பங்களித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வீட்டுத்திட்ட பணிகளை பூர்த்திசெய்ய மேலும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா தேவைப்படுகிறது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்கள் உங்களால் இயன்ற நன்கொடையை திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிற்கு வழங்கி ஒரு குடும்பத்தை புதுமனையில் வாழ உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்காணொளியை பார்த்து சி.ரஜிந்தன் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்பு கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448 +94779591047
  16. பகல் நேரத்தை இருளாக்கிய மிகப்பெரிய சூரிய கிரகணம் Published By: DIGITAL DESK 3 09 APR, 2024 | 10:17 AM இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நேற்று திங்கட்கிழமை (08) நிகழ்ந்தது. இந்த முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (இலங்கையில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர். இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது. இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது. இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 9.12 மணிக்கு ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இலங்கை நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்கு ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால் இலங்கையில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. https://www.virakesari.lk/article/180786
  17. துடுப்பாட்டத்தில் கொல்கத்தா பிரகாசிக்கத் தவறியது; சென்னைக்கு இலகுவான 7 விக்கெட் வெற்றி Published By: VISHNU 09 APR, 2024 | 12:15 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 22ஆவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களைப் போன்று கவனக்குறைவாக துடுப்பெடுத்தாடாமல் நிதனாத்தைக் கடைப்பிடித்தவாறு வெற்றியை மாத்திரம் குறிவைத்து சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்களைப் துடுப்பெடுத்தாடி அதனை நிறைவேற்றிக்கொண்டனர். ரச்சின் ரவிந்த்ரா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோதிலும் டெரில் மிச்செல், ஷிவம் டுபே ஆகியோருடன் சிறப்பான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியின் வெற்றியை அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் உறுதிசெய்தார். இரண்டாவது விக்கெட்டில் டெரில் மிச்செலுடன் 55 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த ருத்துராஜ் கய்க்வாட், 3ஆவது விக்கெட்டில் ஷவம் டுபேயுடன் மேலும் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தார். டெரில் மிச்செல் 27 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 28 ஓட்டங்களையும் பெற்றனர். ருத்துராஜ் கய்க்வாட் 67 ஓட்டங்களுடனும் எம்.எஸ். தோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் வைபாவ் அரோரா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. பவர் ப்ளே நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையிலிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் சமயோசிதமாக பந்துவீசி கொல்கத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தனர். பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தவறான அடி தெரிவுகளால் பிடிகளைக் கொடுத்து ஆட்டம் இழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் சுனில் நரேன் 27 ஓட்டங்களையும் அங்கரிஷ் ரகுவான்ஷி 24 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 33 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தனது 100ஆவது பிடியை எடுத்த ரவிந்த்ர ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் அரிய மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். ஐபிஎல் வரலாற்றில் 1000 ஓட்டங்கள், 100 விக்கெட்கள், 100 பிடிகள் என்ற அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டிய வீரர் என்ற பெருமையை ரவிந்த்ர ஜடேஜா இன்று பெற்றுக்கொண்டார். இத்தகைய சாதனையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஜடேஜா இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/180771
  18. சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை 09 APR, 2024 | 09:53 AM சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் எனப் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி - NCB) போலீஸார் சம்மன் வழங்கினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. மேலும், ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/180783
  19. Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 10:23 AM மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார். பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார். அக்கரைப்பற்று மற்றும் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியிருந்தார். https://www.virakesari.lk/article/180780
  20. Published By: VISHNU 09 APR, 2024 | 02:43 AM இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன "அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்" என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளிலும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், “இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம். நுகர்வோருக்குக் கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதன்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. "முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்" என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, "அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்" என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். https://www.virakesari.lk/article/180774
  21. Published By: VISHNU 09 APR, 2024 | 02:49 AM தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (8) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை (NEPF 2023-2033) நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இது நமது நாட்டின் நீண்டகால இலவசக் கல்வி பாரம்பரியத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. கல்வியில் அரசின் பொறுப்பைத் திரும்பப் பெறுதல், அரச கல்விக்கான ஒதுக்கீடுகளைக் கைவிடுதல், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை (UGC) ஒழித்தல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி NEPF திட்டம் கல்வி முறையை முழுவதுமாக லாபம் ஈட்டும் வணிகமாக மாற்றுகிறது. இந்த சீர்திருத்தங்கள் கல்வியின் தரம் மற்றும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நலனை விட லாபத்தை முதன்மைப்படுத்துகின்றன. பல்கலைக்கழக மட்டத்தில் கட்டண விதிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், உயர்கல்விக்கான அரச நிதியை திரும்பப் பெறுவதன் மூலமும், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் சமூக கட்டமைப்பில் மையமாக இருந்த கல்விக்கான சம அணுகல் கொள்கையை NEPF குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், NEPF இன் பொருளாதாரம் சார்ந்த பாடங்கள் மற்றும் டிஜிட்டல் மீது கவனம் செலுத்துகிறது, கல்வியறிவு விமர்சன சிந்தனை மற்றும் குடியுரிமை போன்ற கல்வியின் பரந்த இலக்குகளைப் புறக்கணிக்கிறது. மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துகிறது. இந்த குறுகிய அணுகுமுறை தற்போதுள்ள வர்க்கப்பிளவுகளை ஆழப்படுத்தவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்த கூடிய வகையிலும் அச்சுறுத்துகிறது. முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, கல்விக்கான நியாயமான அணுகல் மற்றும் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் பேணுதல் ஆகியவற்றிற்கான பொறுப்பை வழங்குவதற்கான பல்வேறு உடன்படிக்கைகளுக்கு இலங்கையின் சர்வதேச கடமைகளை மீறுகிறது. மாறாக, முன்மொழியப்பட்ட கொள்கையானது இலவச கல்வியின் முற்றுப்புள்ளியாக செயற்படும். மக்களின் செலுத்தும் திறனை பொருட்படுத்தாமல் குடிமக்கள் என்ற வகையில் பெறுவதற்கான உரிமையை பறிக்கிறது. NEPF நிர்வாகம், நிதி, தர உத்தரவாதம் ஆகியவற்றில் அரசின் பங்கை கடுமையாக மாற்றுகிறது. இந்த சவால்களுக்கு விடையிருக்கும் வகையில் FUTA, NEPF க்கான எதிர்ப்பைத் திரட்டி, இலங்கையில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும். அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களைத் திரும்பப் பெறவும், சந்தை சக்திகளை விட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். FUTA, சமூகத்தின் அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட பிரிவுகளுடன் சேர்ந்து, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கும். இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகையில், இந்த முக்கியமான போராட்டத்தில் எங்களுடன் சேருமாறு அனைத்து குடிமக்களையும் அழைக்கிறோம். அனைத்து இலங்கையர்களும் அவர்களின் பின்னணி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கடந்து, எல்லோரும் சேர்ந்து கல்வி அடிப்படை உரிமையாக இருப்பதை உறுதி செய்யலாம். இறுதியாக, கல்வி போன்ற இன்றியமையாத விடையங்களின் கொள்கை வகுப்பதை ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக மாறவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று FUTA கடுமையாகக் கோருகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/180772
  22. சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்த கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது. இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்குத் தொடங்கியது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த தவறான கற்பிதங்கள் உள்ளிட்டவை குறித்து, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இந்த முழு சூரிய கிரகணத்திற்கு உலகம் முழுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது எதனால்? பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம். சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது. மேலும், நிலப்பகுதியில் சூரிய கிரகணம் தெரிவதென்பது மேலும் அரிதான ஒன்று. கடல் பகுதியில் கூட சூரிய கிரகணம் தென்படலாம். குறிப்பிட்ட இந்த முழு சூரிய கிரகணம் தென்பட்ட மிகப் பெரும்பான்மையான பகுதி நிலப்பகுதியாக இருந்தது. இது, அமெரிக்கா கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தைப் மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அம்மக்களுக்குக் கிடைத்தது. இந்த முழு சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததற்கான காரணம் என்ன? நிலா பூமியை சுற்றி வரும்போது, கோழி முட்டை போன்று நீள்வட்டப் பாதையில் சுற்றும். எனவே, ஒரு சமயத்தில் நிலா பூமிக்கு அருகிலும் மற்றொரு சமயத்தில் பூமியிலிருந்து தொலைவிலும் இருக்கும். ஒரு பொருள் அருகிலிருக்கும் போது பெரிதாகவும் தொலைவிலிருந்தால் சிறியதாகவும் தெரியும் என்பது நமக்குத் தெரியும். அதனால், நிலா பூமியை சுற்றிவரும்போது குறிப்பிட்ட சமயத்தில் நிலா அளவில் பெரிதாகத் தெரியும். மற்றொரு சமயத்தில் சிறியதாகத் தோன்றும். சிறியதாக தோன்றும் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சிறிது நேரத்திற்குத்தான் கிரகணம் நீடிக்கும். ஏனென்றால் அளவில் சிறியதாக தோன்றும் நிலாவால் சூரியனை சிறிது நேரத்திற்குத்தான் மறைக்க முடியும். ஆனால், அதுவே நிலா பெரிதாக இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முழு சூரிய கிரகணம், நிலா பெரிதாக இருப்பதற்கு சற்றேறக்குறைய அருகாமையில் இருந்ததால் இவ்வளவு நேரம் நீடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்? கோள வடிவிலான பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால், அமெரிக்காவில் சூரியன் தெரிந்தால் இந்தியாவில் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணம், அமெரிக்காவுக்கு நேராக நிலவு, அதற்கு நேர்கோட்டில் சூரியன் இருக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் தெரியவில்லை. சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது ஏற்கனவே இந்தியாவில் இரவுதான். அதனால், அதனை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த சூரிய கிரகணத்தின்போது நாசா ராக்கெட்டுகள், விமானங்கள் மூலம் பல ஆய்வுகள் செய்துள்ளன. இந்தியா சார்பில் ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா? பள்ளியில் எல்லோரும் இந்த சோதனையை செய்திருப்போம். ஒரு காந்தத்தை காகிதத்தின் அடியில் வைத்துவிட்டு, காகிதத்தின் மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தப்புலக் கோடுககளை கண்டறிந்திருப்போம். அம்மாதிரி சூரியனுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனை சுற்றியும் அதேபோன்று காந்தப்புலக் கோடுகள் தோன்றும். ஆனால், சூரியனின் காந்தப்புலக் கோடுகள் ‘இடியாப்பம்' போன்று இருக்கும். ஆனால், பூமியை சுற்றியிருக்கும் காந்தப்புலத்தைப் பார்த்தால், அழகாக வாரிய கூந்தல் போன்றிருக்கும். சூரியனின் காந்தப்புலத்தின் வடிவம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து சூரியனிலிருந்து சூரியப்புயல் உண்டாகும். எனவே, சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால், சூரியப்புயலை நாம் முன்கூட்டியே கணிக்கலாம். சூரியனின் காந்தப்புலங்களை முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே நம்மிடம் உள்ள தகவல்களை வைத்து காந்தப்புலம் இப்படி இருக்கும் என, கணினிவழி உருவாக்கி வைத்துள்ளோம். இது சரியா, இல்லையா என்பதை முழு சூரிய கிரகணத்தின்போது தான் பார்க்க முடியும். அந்த ஆராய்ச்சியைத்தான் இந்தியா நேற்று செய்தது. நம்முடைய கணிப்பில் ஏதேனும் பிழை இருந்தாலும் அடுத்த சூரிய கிரகணத்தில் தான் அதை சரிசெய்ய முடியும். கொல்கத்தாவில் உள்ள ஐசர் (IISER) நிறுவனத்தின் சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. முனைவர் நந்தி என்பவர் இந்த ஆய்வை வழிநடத்தினார். உலகளவில் இந்த சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முதன்மை இலக்கு, சூரியனின் காந்தப்புலங்களை ஆராய்வதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் சூரியப்புயல் என்பது என்ன? அதனை நாம் ஏன் முன்கூட்டியே அறிய வேண்டும்? சூரியப்புயல் பூமியை தாக்கினால், பூமியை சுற்றிவரக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். கடலில் ஏற்படும் புயலை முன்கூட்டியே அறிவது எப்படி முக்கியமோ, அதேபோன்று செயற்கைக்கோள்களை காப்பாற்ற சூரியப்புயல்களை கவனிப்பதும் முக்கியம். இந்தியாவுக்கு மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விண்வெளியில் இருக்கிறது. அதற்கு சேதம் ஏற்படாமல் இருக்க சூரியப் புயல்களை கண்காணிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையை ஆராய்வதற்கான தேவை என்ன? விலங்குகளை பொறுத்தவரைக்கும் ஒரு நாளில் திரும்பி எப்போது தன் கூடடைய வேண்டும் என்று தோன்றும்? உயரப் போகும் ஒளி மங்கும்போதுதான் தோன்றும். அதாவது சூரியன் மறையும்போது தோன்றும். அதற்கு எந்த சைரன் ஒலியும் கிடையாதே. இயற்கை ஒளிதான் அதற்கான சமிக்ஞை. சூரிய கிரகணத்தின் போது ஒளி மங்குவதால், இரவாகிவிட்டது என விலங்குகளெல்லாம் தன் கூடடைகிறது. ஒளியை வைத்துக்கொண்டு விலங்குகள் எப்படி காலத்தைக் கணிக்கின்றன என்பதற்காகத்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் விலங்குகளின் மீது நடத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாசா ஏன் விமானங்களில் சூரிய கிரகணத்தைத் துரத்திச் சென்றது? நிலப்பரப்பிலிருந்து அந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது? சாதாரணமாக நிலப்பரப்பில் இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். ஆனால், சூரிய கிரகணத்தின் பாதை தொடங்கும் இடத்தில் நான் விமானத்தில் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வோம். சூரியன் செல்லும் அதே வேகத்தில், பாதையில் நான் விமானத்தை ஓட்டிச்சென்றால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல், சூரியனை முழு கிரகணமாக பார்க்க முடியும். அரை மணிநேரத்தில் காந்தப்புலக் கோடுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் பார்க்க முடியும். அதற்காகத்தான் விமானத்தில் சென்று ஆய்வு செய்தனர். இந்தியாவிலும் 1996-ம் ஆண்டில் ஏற்கனவே விமானத்தில் சென்று முயற்சி செய்தோம். ஆனால், அந்த சமயத்தில் அம்முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை. அதன்பின், 2004-ம் ஆண்டிலும் முயற்சி செய்தோம். அப்போதும் வெற்றியடையவில்லை. விமானம் சீராக செலுத்தப்பட வேண்டும். அதனால், வானிலை நிகழ்வுகளும் அதன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாகும். கடந்த காலத்தில் சூரிய கிரகணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குறித்தும் த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு “ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்ன சொல்கிறதென்றால், ஒளி நேர்க்கோட்டில் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்வோம். இடையில் அதிக நிறையுள்ள ஒரு பொருள் இருந்தால், அந்த ஒளியின் பாதையை லேசாக மாற்றிவிடும். அந்த பாதை மாற்றத்தால், பூமிக்கு ஒளி வந்து சேரும்போது, அந்த ஒளி ஏற்பட்ட இடம் வேறு இடம் என நினைத்துக்கொள்வோம். அதனால், சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனிலிருந்து ஓர் ஒளிக்கதிர் வருகிறதென்றால், எவ்வளவு வளைந்து வரும்? அந்த பார்வைத் தோற்றம் குறிப்பிட்ட விண்மீன் எங்கு இருப்பதாகக் காட்டும் என கணக்கிட்டனர்? சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனை நம்மால் பார்க்க முடியாது. ஏனெனில், சூரியனின் வெளிச்சம் அதை மறைத்துவிடும். ஆனால், முழு சூரிய கிரகணத்தின்போது வானம் இருட்டாகிவிடும் என்பதால், அந்த விண்மீன்கள் தெரியும். அதனைப் புகைப்படம் எடுக்க முடியும். அப்படித்தான் ஒளி வளைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார்" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன். ஹீலியம் கண்டுபிடிப்பு சூரிய கிரகணத்தின்போது நிகழ்ந்த மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஹீலியம். சூரியனுக்கு கிரேக்க மொழியில் ஹீலியோஸ் என்று பெயர். “சூரிய ஒளியை கிரகணத்தின்போது ஆராய்ந்த போதுதான் அதுவரை நாம் பார்க்காத தனிமம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அந்த தனிமத்தை சூரியனில் மட்டும் பார்த்ததால் ஹீலியம் என்று பெயர் வைத்தனர். அதன்பிறகுதான் ஹீலியம் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பு 1868 ஆம் ஆண்டு இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத்தின்போதுதான் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார் வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் சார்ந்து மதம், கலாசாரம் ரீதியாக கூறப்படும் வழக்கங்கள் குறித்த உண்மையை விளக்கினார் த.வி. வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் சூரிய கிரகணம் குறித்து மதம், கலாசாரம் சார்ந்து சொல்லப்படுபவை குறித்து… சூரிய கிரகணத்தின்போது உணவு கெட்டுப்போகும் என்றெல்லாம் கூட சொல்வார்கள். தர்ப்பை புல்லை உணவில் போட்டால் உணவு நன்றாக இருக்கும், இல்லையென்றால் உணவு கெட்டுப்போய்விடும் என இன்றும் சொல்வார்கள். இதுகுறித்தெல்லாம் 1981-ல் இந்தியா ஆராய்ச்சி செய்துள்ளது. கிரகணத்தின்போது உணவில் நுண்ணுயிரிகள் ஏதேனும் வளருகிறதா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் வளரவில்லை. இவையெல்லாம் கட்டுக்கதை. கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாதா? அது இந்தியாவில் இருக்கக்கூடிய நம்பிக்கை. அமெரிக்காவில் கர்ப்பிணிகள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கின்றனர். அங்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இந்தியாவில் தோன்றிய ஓர் சூரிய கிரகணத்தின்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்தோம். என் மனைவிக்கும் ஒன்றும் ஆகவில்லை. என் குழந்தையும் நன்றாகத்தான் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நியூஜெர்சியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சூரிய கிரகணத்துடன் ஒப்பிடுகிறார்களே, சூரிய கிரகணத்தின்போது திடீர் வெள்ளம் ஏற்படும் என்ற தகவல்களும் இதையொட்டி டிரெண்டானதே? இது தேவையற்ற அச்சம் காரணமாக பரப்பப்படும் போலிச் செய்தி. தினமும் உலகளவில் சிறிதும் பெரிதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படும். ஆனால், சூரிய கிரகணத்திற்கும் நிலநடுக்கத்திற்கோ, வெள்ளத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ‘இயற்கை நிகழ்வுகளெல்லாம் கடவுளின் சாபம்’ என குழப்புகின்றனர். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், நாகசாகி, மஸ்கட், திமூர், ஜம்மு-காஷ்மீர் (அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் மேல்) உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டன. இந்தியாவில் பண்டைய காலத்திலும் சூரிய கிரகணம் குறித்து இத்தகைய நம்பிக்கைகள் இருந்தனவா? கிரகணம் குறித்த இத்தகைய நம்பிக்கைகள் பண்டைய இந்தியாவில் இல்லை. இந்தியாவில் 8, 9-ம் நூற்றாண்டுகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்த அடிப்படைவாதத்தின்போதுதான் அறிவியல் கருத்துக்களுக்கு சவால் ஏற்பட்டது. அதேமாதிரி, ஐரோப்பாவில் 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் இத்தகைய கண்ணோட்டம் உருவானது. அரேபிய பகுதிகளிலும் 13, 14-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய கருத்துக்கள் தோன்றின. எல்லா பகுதிகளிலும் மத அடிப்படைவாதம் எழுந்தபோதுதான் இத்தகைய மூடநம்பிக்கைகளும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களும் தோன்றின. அமெரிக்காவிலும் இத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்க்கும் குழுக்கள் உள்ளன. https://www.bbc.com/tamil/articles/ceke957d4yvo
  23. இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்ச தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு - ராஜ்நாத் சிங் விமர்சனம் 09 APR, 2024 | 10:07 AM இலங்கைக்கு கச்சதீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என இந்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும், பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறியுள்ளது. பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி, இன்று ரூ.26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் 6ஜி-க்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில்தான் கிடைக்கிறது. இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனே காரணம். இதன் காரணமாக நாட்டில் சாமானிய குடிமகன்கள் கூட சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் செய்து பயனடைந்து வருகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்திலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமே 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு. இந்த 2 கட்சிகளும் சேர்ந்துதான் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்தன. இதனால் அவர்கள் தமிழர்கள், மீனவர்கள் உரிமை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தேசம் தான் முதன்மையானது என்பது எங்கள் நோக்கம். ஆனால், குடும்பம் தான் முதன்மையானது என்பது எதிர்க்கட்சியினரின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமாகா மாவட்டத் தலைவர் தினகரன், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து ராஜ்நாத் சிங் நேற்று மாலை ராஜபாளையத்தில் பிரச்சாரம் செய்தார். ராஜபாளையம் சொக்கர் கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். https://www.virakesari.lk/article/180784
  24. 08 APR, 2024 | 05:49 PM புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்குத் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்குக் காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர். அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கையளிக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தார். வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள் குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 212 குடும்பங்களுக்குக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடம் கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 2550 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவும், கண்ணிவெடி அகற்றலுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், மலசலக்கூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் வழங்கப்படும். இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 50 புதிய நனோ நீர் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180729
  25. கொலரா அச்சம்: மீன்பிடி படகில் தப்பிக்க நினைத்த மக்கள்… நீரில் மூழ்கி 91 பேர் பலி! கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டின் நம்புலா மாநிலத்தில் கொலரா பற்றிய தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியின் காரணமாக, மக்கள் அந்த நிலப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றுவருகின்றனர். அதன் ஒருபகுதியாகவே ஒரு கோரசம்பவம் நடந்திருக்கிறது. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரை மாநிலமான நம்புலாவிலிருந்து சுமார் 130 பேரை ஏற்றிக்கொண்டு மீன்பிடிப் படகு ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்தப் படகில் அளவுக்கு மீறிய நபர்களை ஏற்றியிருக்கவே கூடாது. ஆனால், அளவுக்கு மீறிய பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 91 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக பேசிய நம்புலா மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ, “படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் படகு மூழ்கியதாக அறிகிறோம். பல குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர். பலரைத் தேடி வருகிறோம். ஆனால் கடல் நிலைமைகள் மீட்புப்பணியைக் கடினமாக்குகிறது. படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். https://thinakkural.lk/article/298458

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.