Everything posted by ஏராளன்
-
வட மாகாணத்தில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
நனோ நீர் சுத்திகரிப்பு மையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு! திறந்துவைப்பு 06 APR, 2024 | 04:02 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர்ந்த கிராமங்களில் நனோ தொழில்நுட்பத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்வழங்கல் அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான செல்வாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட செல்வச்செழிப்பு நீர்பாவனையாளர் சங்கத்திற்கான நனோ நீர் சுத்திகரிப்பு மையம் சனிக்கிழமை (6) பாவனைக்காக கையளிக்கப்பட்டது. செல்வச்செழிப்பு நீர் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சிவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அதீதிகளாக கலந்துகொண்டு குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நாடாவினை வெட்டி திறந்து வைத்திருந்தனர். இந்நிகழ்வில் அமைச்சர்களுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆனந்த கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன்,திட்டமிடல் பணிப்பாளர் திரு.கி.ஸ்ரீ பாஸ்கரன்,கரைச்சி பிரதேச செயலர் திரு.த.முகுந்தன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் திரு. இரட்ணம் அமீன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி திரு.மதிவதனன் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,அரசியல் பிரமுகர்கள்,பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://www.virakesari.lk/article/180588
-
சமூக ஒழுக்கத்தை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை, புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று(5) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298305
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
US Earthquake: ஆட்டம் கண்ட Liberty Statue; அமைதியான UN Officials; பதறிப்போன மக்கள். Shocking Footage
-
பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!
Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 03:54 PM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது. https://www.virakesari.lk/article/180593
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஜலதோஷத்தை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளனவா? உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? பூண்டு ஜலதோஷத்திற்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த விஷயங்கள் உண்மையா என்பதைப் பார்ப்போம். பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா? "பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர். பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம். "குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை." கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பூண்டு குறைக்குமா? இரானில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் 20 கிராம் பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவையை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர். முடிவுகள் நேர்மறையாக இருந்தன. இந்தப் பரிசோதனையில் கொழுப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் குறைவதாகக் காட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வைப் பார்த்தால், நமக்கு நேர் எதிரான பதில் கிடைக்கிறது. இந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூண்டு கொழுப்பைக் குறைக்கிறது என்பது கட்டுக்கதை எனக் கூறி 2007இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். "லேசான கொழுப்பு கொண்ட 200 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் ரத்தத்தில் கொழுப்பு குறையவில்லை.” தனக்கு ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் கார்ட்னர் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பேராசிரியர் கார்ட்னர் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார். "எங்கள் ஆய்வு 200 பேரை உள்ளடக்கியது. இது ஆறு மாத ஆய்வு. இந்த ஆய்வு தேசிய சுகாதார நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டது," என்கிறார் கார்ட்னர். "எங்கள் ஆய்வு மிகவும் துல்லியமானது. இருப்பினும், இந்தக் கட்டுக்கதைகள் உண்மையா என்பதை அறிவது சுவாரஸ்யமானது,” என்கிறார் கர்ட்னர். பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்தவொரு பெரிய அளவிலான ஆய்வின் மூலமும் அவற்றை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா? நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார். மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். "பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது." இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார். பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது. "வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது." சளி குணமாகுமா? சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார். உணவில் பூண்டை எப்படி அதிகம் பயன்படுத்துவது என்பது குறித்து சமையல் கலை நிபுணர் லின்ஃபோர்ட் கூறினார். உங்கள் விருப்பப்படி பூண்டை உணவில் பயன்படுத்தலாம் என்றார். நீங்கள் பூண்டின் சுவையை விரும்பினால், உங்கள் சமையலில் பூண்டு விழுதைப் பயன்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் நீங்கள் பூண்டின் மணத்தை மட்டும் விரும்பினால், பூண்டு பற்களை ஆலிவ் எண்ணெயில் வறுத்து பின்னர் அதை வடிகட்டி, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் சாலட்டில் பூண்டு சுவையை நீங்கள் விரும்பினால், சாலட் கிண்ணத்தின் உட்புறத்தில் பூண்டு பற்களைத் தேய்க்கலாம். பூண்டு அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். பூண்டு மென்மையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாறினால், அது கெட்டுப் போனதாக அர்த்தம். அதை சமையலில் பயன்படுத்த வேண்டாம். பூண்டு அனைவருக்கும் நல்லதா? பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும். துரதிருஷ்டவசமாக, பூண்டு சிலருக்கு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக குடல் எரிச்சல் (IBS) கொண்டவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என வான் டி போயர் கூறுகிறார். எனவே, இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூண்டின் சுவையை அதிகரிக்க சமைக்கும்போது பூண்டு கலந்த எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி. இந்த முறையில் பயன்படுத்துவது, குடல் எரிச்சல் உள்ளவர்களைக் குறைவாகவே பாதிக்கும். https://www.bbc.com/tamil/articles/c13d3kg3155o
-
காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES / ANADOLU படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களை படிக்கும் காஸா மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டெஃபனி ஹெகார்டி & அகமது நூர் பதவி, பிபிசி உலக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த வெளியேற்ற எச்சரிக்கைகளில் குறிப்பிடத்தக்க பிழைகள் இருப்பதை பிபிசி பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தன. குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்த அந்த எச்சரிக்கைகளில் சில மாவட்டங்களின் பெயர்களும் அதில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்தகைய தவறுகளால், சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாகக் கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கைகள் குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருப்பதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நிராகரித்துள்ளன. பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட எச்சரிக்கைகள் என்பது பொதுமக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு கூறு மட்டுமே எனத் தனது அறிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. சூழ்நிலைகள் மோசமாக இருந்தால் ஒழிய, பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தாக்குதல்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக வெளியிட வேண்டுமென சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கூறுகிறது. ஹமாஸுக்கு எதிரான தனது போரைத் தொடர்வதால், பொதுமக்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் தனது எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த அமைப்பு காஸாவின் வரைபடத்தை நூற்றுக்கணக்கான எண்ணிடப்பட்ட தொகுதிகளாகப் பிரிக்கிறது. ஆனால் இந்த எண்ணற்ற தொகுதி அமைப்பானது காஸா மக்களுக்குப் பழக்கப்பட்டதல்ல. மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது, தாங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருக்கிறோமா இல்லையா என்பதை காஸா மக்கள் கண்டறிய, அந்தப் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் ஆன்லைன் வரைபடத்தை (மாஸ்டர் பிளாக்) இஸ்ரேல் தயாரித்துள்ளது. ஜனவரியின் பிற்பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சார்பாக எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிடப்பட்ட ஒரு பதிவில், க்யூஆர் குறியீடு வழியாக மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகுவதற்கான இணைப்பு வழங்கப்பட்டது. படக்குறிப்பு, காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால் எங்களிடம் பேசிய காஸா மக்கள் சிலர், இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும், எச்சரிக்கைகளில் உள்ள பிழைகளைப் புரிந்துகொள்வதற்கும், வரைபடத்தைப் பார்த்து புதிய வழிகளைக் கண்டறியவும் கடினமாக இருப்பதை விவரித்துள்ளனர். ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் டெலிகிராமில் உள்ள ஐடிஎஃப்-இன் அரபி மொழி சமூக ஊடக சேனல்களை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அங்கு எச்சரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பதிவுகளை நாங்கள் கண்டோம். ஒரே எச்சரிக்கை மீண்டும் மீண்டும், சில நேரங்களில் சிறிய மாற்றங்களுடன், தொடர்ச்சியான நாட்களில் அல்லது வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட்டு, பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பகிரப்பட்ட எச்சரிக்கைகளையும் நாங்கள் தேடினோம். காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக ஐடிஎஃப் கூறுகிறது. டிசம்பர் 1 முதல் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளில் பிபிசி கவனம் செலுத்தியது. ஏனெனில் சர்வதேச அழுத்தத்தின் கீழ் வந்த பிறகு, முன்பைவிட மிகவும் துல்லியமான வழிமுறைகளை வழங்கும் ஒரு வழியாக தனது பிளாக் அமைப்பை டிசம்பர் 1 முதல் ஐடிஎஃப் தொடங்கியது. இந்தத் தேதிக்குப் பிறகு நாங்கள் கண்டறிந்த ஐடிஎஃப் அமைப்பின் பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் 26 தனித்தனி எச்சரிக்கைகளாகப் பிரித்தோம். பெரும்பான்மையானவர்கள் மாஸ்டர் பிளாக் அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன, ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. ஆன்லைன் எச்சரிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி செய்திகள் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாக ஐடிஎஃப் அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது. காஸாவில் சாலை மார்க்கமாகச் சென்று விரிவான அறிக்கைகளைப் பெறுவது சாத்தியமில்லை. தொலைபேசி நெட்வொர்க் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் பற்றிய ஆதாரங்களை பிபிசியால் சேகரிக்க முடியவில்லை. பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன. அவற்றை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற காஸா மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. அவை, சமூக ஊடகப் பதிவில் இருந்த 12 எச்சரிக்கைகள், அதில் தொகுதிகள் அல்லது சுற்றுப்புறங்கள் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது, ஆனால் அதனுடன் உள்ள வரைபடத்தில் அந்தப் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை. ஒன்பது பகுதிகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதனுடன் இருந்த சமூக ஊடகப் பதிவில் பட்டியலிடப்படவில்லை. பத்து எச்சரிக்கைகள், தொகுதிகள் இரண்டாகப் பிரித்து காட்டப்பட்டிருந்தன. ஆனால் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் எல்லையை நிர்ணயிக்கும் அளவுக்கு அந்த வரைபடம் விரிவாக இல்லை. ஏழு எச்சரிக்கைகளின் வரைபடத்தில் ‘பாதுகாப்பு’ பகுதிகளை சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் வெளியேற வேண்டிய பகுதிகளையும் சேர்த்தே சுட்டிக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிழைகள் குறித்து நாங்கள் ஐடிஎஃப் அமைப்பிடம் கேட்டபோது, அது வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. மேலும், ஒரு எச்சரிக்கையில் ஒரு மாவட்டத்தில் இருக்கும் பகுதிகள் மற்றொரு மாவட்டத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றொன்று இரண்டு பகுதிகளின் தொகுதி எண்களை இணைத்துக் கொடுத்துள்ளது. மூன்றாவதாக, பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள சில தொகுதிகள் காஸாவின் எதிர்பக்கத்தில் உள்ளது போல வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பிழைகள் பற்றி நாங்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையிடம் கேட்டபோது, அவர்கள் வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. ஆனால் சமூக ஊடக பதிவுகளின் செய்தி போதுமான அளவு தெளிவாக உள்ளது எனக் கூறினர். மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல வரைபடத்தில் அம்புகள் பயன்படுத்தப்படும்போது, ’அம்புகள் பொதுவான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன என்பது வெளிப்படையான ஒரு விஷயம்தான்’ எனவும் பதிவுகளின் செய்தியில் முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியது. இந்தத் தவறுகள் மற்றும் பிழைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் ‘பயனுள்ள மேம்பட்ட எச்சரிக்கைகளை’ வழங்குவதற்கான இஸ்ரேலின் கடமையை மீறக்கூடும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் எதிக்ஸ், சட்டம் மற்றும் ஆயுத மோதல் பிரிவின் இணை இயக்குநர் ஜானினா டில் கூறுகிறார். “பெரும்பாலான எச்சரிக்கைகளில் பிழைகள் இருந்தாலோ அல்லது பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குத் தெளிவில்லாமல் இருந்தாலோ, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டிருக்கும் செயல்பாட்டை இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யவில்லை என அர்த்தம்” என்று கூறுகிறார் அவர். “இந்த எச்சரிக்கைகளின் நோக்கம் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகும். அதன் பிழைகள் அவர்களின் செயல்பாட்டை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது,” என எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான குபோ மக்காக் கூறுகிறார். 'பெரிய விவாதம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் காஸா தொழிலதிபர் சலே பார்த்துள்ளார். காஸா நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சலே, டிசம்பரில் மத்திய காஸாவில் உள்ள நுசிராட்டில் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்த போது அங்கு மின்சாரம், தொலைபேசி சிக்னல்கள் இல்லை என்றும், நீண்ட நேரம் இணையத் தடை இருந்தது என்றும் கூறுகிறார். ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் அவர் பார்த்துள்ளார். தனக்கு ஐடிஎஃப் அமைப்பின் வெளியேற்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இறுதியில், எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள தரவு நெட்வொர்க்குகளை அணுகக்கூடிய சிம் கார்டு பயன்படுத்தும் ஒருவரைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியேறுவதற்கான எச்சரிக்கை குறித்த பதிவைக் கண்டார். "பல குடியிருப்புத் தொகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் எந்தத் தொகுதியில் வசித்தோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுவொரு பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது," என்று சலே கூறுகிறார். சலேவால் எப்போதாவதுதான் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. போருக்கு சற்று முன்பு பிரிட்டனில் வசிக்கும் அவரது மனைவி அமானிக்கு ஒரு செய்தி அனுப்பினார். அவரது மனைவியால், ஆன்லைனில் இருந்த ஐடிஎஃப் அமைப்பின் மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகி, கணவர் சலே எங்கிருக்கிறார் என்பதைக் குறிப்பிட முடிந்தது. ஆனால், முகநூலில் இருந்த வெளியேற்ற எச்சரிக்கையைத் திரும்பிப் பார்க்கையில், சலே தங்கியிருந்த தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்ததை தம்பதியினர் உணர்ந்தனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில், சலே குழந்தைகளுடன் வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவரது குடும்பத்தில் சிலர் போர் அடுத்த கட்டத்தை எட்டும் வரை அங்கேயே இருந்தனர். சலே புரிந்துகொள்ள முயன்ற அந்த வெளியேற்ற எச்சரிக்கை குறித்த முகநூல் பதிவை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அதில் பல குழப்பமான அம்சங்கள் இருப்பதைக் கண்டோம். பதிவின் செய்தியில், 2220, 2221, 2222, 2223, 2224 மற்றும் 2225 ஆகிய தொகுதிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஐடிஎஃப் அமைப்பின், இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஐடிஎஃப்-இன் ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்தில் இருப்பவை. ஆனால் அந்தப் பதிவில் உள்ள வரைபடத்தில், ஆறு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தொகுதி 2220 எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு, பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை. இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜனவரியில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிரான வாதத்தின் ஒரு பகுதியாக, தனது தடுப்பு எச்சரிக்கை அமைப்பை சர்வதேச நீதிமன்றத்தின் முன்வைத்தது இஸ்ரேல் அரசு. “இஸ்ரேல் அரசு குடிமக்களைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், முழுப் பகுதிகளையும் காலி செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக வெளியேற்றப்படும் வகையில் விரிவான வரைபடத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும்” வாதிட்டனர் இஸ்ரேலின் வழக்கறிஞர்கள். அவர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைத்த ஒரு சமூக ஊடக எச்சரிக்கை பதிவில், இரண்டு பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது. பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை. படக்குறிப்பு, பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. ஐடிஎஃப் அதன் அரபு ட்விட்டர் கணக்கு மூலம், வெளியேற்றப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள தங்குமிடங்களின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்கி வருவதாகவும் இஸ்ரேலிய வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால் பிபிசி பகுப்பாய்வு செய்த அனைத்து பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தங்குமிடங்களின் பெயர்கள் அல்லது அவற்றின் சரியான இருப்பிடங்களை வழங்கும் எந்த எச்சரிக்கையையும் நாங்கள் காணவில்லை. பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. 26 எச்சரிக்கைகளில் ஒன்பது தொகுதிகளின் எண்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் பெயர்கள் கலவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. மற்ற ஒன்பது எச்சரிக்கைகளில் தொகுதி எண்கள் இல்லை. ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பதிலாக அவை சுற்றுப்புறப் பகுதிகளைத்தான் பட்டியலிட்டன. அதில் பெரும்பாலும் தொகுதிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன, எண்கள் இல்லை. இந்த சுற்றுப்புறப் பகுதிகளின் சரியான தொகுதிகளைத் தீர்மானிக்க பிபிசியால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 32 பேரை உள்ளடக்கிய அப்து குடும்பம், போரின் தொடங்கிய நேரத்தில் காஸா நகரத்திலிருந்து மத்திய காஸாவிற்கு தப்பிச் சென்றது. பின்னர், டிசம்பரில், ஒரு விமானத்தில் இருந்து கைவிடப்பட்ட எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் அவர்களுக்குக் கிடைத்தது. பிபிசிக்கு கிடைத்த குடும்ப வாட்ஸ்அப் குழுவில் உள்ள செய்திகள் மூலம், அந்த துண்டுப் பிரசுரத்திற்கு அர்த்தம் என்னவென்று இரண்டு நாட்களாக அவர்கள் வாதிட்டதால் அவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அதில் வெளியேற வேண்டிய அக்கம்பக்கத்தினரின் பட்டியல் இருந்தது, ஆனால் குடும்பத்தாரால் அந்த இடங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலிருந்த எச்சரிக்கை செய்தி, "அல்-புரிஜ் முகாம் மற்றும் பத்ர், வடக்கு கடற்கரை, அல்-நுஷா, அல்-சஹ்ரா, அல்-புராக், அல்-ரவ்தா மற்றும் அல்-சஃபா ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் இருந்து வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது." அவர்கள் அல்-சஹ்ரா மற்றும் பத்ரை ஆகிய பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அவை வாடி காஸா ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளன. "வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில்" அல்-ரவ்தா அல்லது அல்-நுஷாவின் பகுதிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. "அவர்கள் இங்கேயே தங்கி கடுமையான தரைப் போரில் சிக்கிக் கொள்ள வேண்டுமா, அல்லது இங்கிருந்து வெளியேறி, அவர்களுக்குக் கிடைத்த ஒரே தங்குமிடத்தை விட வேண்டுமா?" என்று அப்து குடும்பத்தினர் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களில் தவறாக குறிக்கப்பட்டிருந்த இடங்கள் சிலர் "டேர் அல்-பாலாவில் உள்ள தங்குமிடங்களுக்கு" செல்லுங்கள் என்று கூறிய எச்சரிக்கை தகவலைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் அந்த இடத்தைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்து திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அப்படி நாங்கள் இறந்தால், ஒன்றாகவே இறப்போம் என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஓரிகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஜமோன் வான் டென் ஹோக் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டி நியூயார்க் கிராஜுவேட் சென்டரின் கோரே ஷெர் ஆகியோரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட காஸாவின் அழிவு குறித்த செயற்கைக்கோள் தரவு, அவர்கள் விட்டுச் சென்ற பகுதியைவிட அதிக அழிவைக் காட்டியது. செயற்கைக்கோள் தரவுகள், அந்தக் குடும்பம் தப்பியோடிய டெய்ர் அல்-பாலா பகுதி இந்தக் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான தாக்குதலுக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை "இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு அங்கு நிலவிய பொதுமக்கள் நடமாட்டம் குறித்த தரவுகளை" குறுக்கு சோதனை செய்ததாகவும், அவை குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இல்லை என்றும் கூறியது. இந்த எச்சரிக்கைகள் மூலம் "காஸா பகுதியில் எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும்" அது கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/czrzxm1rg2do
-
கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்க தீர்மானம்!
கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார். சுமார் 10,000இற்கு விற்பனை செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் 7,000இற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298359
-
யாழில் வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன; மீனவர்களுக்கு பாராட்டு
Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 12:26 PM யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன. கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன. குறித்த டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர். டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/180577
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
CSK vs SRH: 'மினி தோனி'யாக மாறிய பேட் கம்மின்ஸ் - சிஎஸ்கே-வை சிறைபிடித்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மைதானத்தின் விக்கெட்டை(ஆடுகளம்) ஒரு கேப்டனும், பந்துவீச்சாளர்களும் விரைவாக உணர்ந்துகொண்டாலே எதிரணியை எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியும், ரன் குவிப்பை தடுத்து, வெற்றியை எளிதாக்க முடியும். எந்த அளவுக்கு விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு வெற்றியின் கடினம் தீர்மானிக்கப்படும். அந்த உத்தியை நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸும், பந்துவீச்சாளர்களும் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறைபிடித்தனர். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் பிளஸ் 0.409 ஆக இருக்கிறது. சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து பெறும் 2வது வெற்றி இது. தவறவிட்ட சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS உண்மையில் 4வது இடத்துக்கு சன்ரைசர்ஸ் அணி வரவேண்டியது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கடைசி 30 ரன்களை சேர்க்க அதிகமான ஓவர்களை பேட்டர்கள் வீணடித்தனர். சன்ரைசர்ஸ் வசம் 8 விக்கெட்டுகள் வரை இருந்த நிலையில் துணிச்சலாக பெரிய ஷாட்களுக்கு முயன்றிருக்கலாம். அவ்வாறு பெரிய ஷாட்களை அடித்து இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டியிருந்தால், லக்னௌ அணியைவிட நிகர ரன்ரேட்டில் முன்னேறி 4வது இடத்துக்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால், தேவையின்றி கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் மெதுவாக பேட் செய்து, நிகர ரன்ரேட்டை கோட்டைவிட்டனர். சிஎஸ்கேவுக்கு கட்டம் சரியில்லை அதேநேரம் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்தாலும், அதன் நிலை குறையாமல் தொடர்ந்து 3வது இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் நிகர ரன்ரேட் 0.517 ஆகக் குறைந்துவிட்டது. ஒரு நேரத்தில் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த சிஎஸ்கே அணி தற்போது பாதியாகக் குறைந்துவிட்டது. இப்போதே பரபரப்பு பட மூலாதாரம்,SPORTZPICS தற்போது புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5 அணிகள் இருக்கின்றன. இந்த 5 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் குறைந்த இடைவெளியே இருப்பதால் அடுத்தடுத்து வரும் ஆட்டங்கள், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னௌ, குஜராத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் பெறும் வெற்றிகள், சந்திக்கும் தோல்விகளைப் பொறுத்து அதன் இடங்கள் மாறிக்கொண்டே செல்லும். ஐபிஎல் தொடங்கி பாதி அட்டவணைப் போட்டிகள் முடியும் முன்பே சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு, புள்ளிகளைப் பெற அணிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்டநாயகன் அபிஷேக் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை நேர்த்தியாக, மிகச் சரியாகச் செய்து கொடுத்ததால்தான், சிஎஸ்கே போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக பேட்டர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது. அதிலும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சேர்த்து சிறப்பான கேமியோ ஆடி பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியை பாதிக் கடலை கடக்க வைத்தார். பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்க்க அபிஷேக் அதிரடியே காரணம். வெற்றிக்கான பாதையையும் எளிதாக்கியதால் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. கம்மின்ஸின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பட மூலாதாரம்,SPORTZPICS புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரை ஜடேஜா எதிர்கொண்டார். 4வது பந்தை புவனேஷ்வர் யார்க்கராக வீசவே, பந்தைத் தட்டிவிட்டு ஜடேஜா ஓட முயன்றார். ஆனால், பந்தைப் பிடித்த புவனேஷ்வர் ஜடேஜாவை ரன்-அவுட் செய்ய ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடியதால், அவர் மீது பந்து பட்டது. கிரிக்கெட் விதியின்கீழ் பேட்டர் ஓடும்போது ஸ்டெம்பை மறைத்து ஓடக்கூடாது. ஆனால், ஜடேஜா அவ்வாறு ஓடியதால் 3வது நடுவரிடம் அப்பீல் சென்றது. ஆனால், இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ் நடுவரிடம் சென்று அப்பீல் வேண்டாம் தேவையில்லை என்று கூறித் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார். மினி தோனியாக மாறி கம்மின்ஸ் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட்டது. மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எனும் பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால், அதே மைதானம்தான் ஆனால் கறுப்பு மண் கொண்ட விக்கெட்டாக இருந்தது. இந்த விக்கெட் மாறுதலை கேப்டன் கம்மின்ஸும், சக பந்துவீச்சாளர்களும் விரைவாகப் புரிந்து கொண்டதால் தங்கள் பந்துவீச்சை அதற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டனர். இந்த கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் பந்து பேட்டர்களை நோக்கி என்னதான் விரைவாக வீசினாலும் மெதுவாகவே செல்லும் என்பதைப் புரிந்துகொண்ட பந்துவீச்சாளர்கள், ஸ்லோவர் பால், ஸ்லோபவுன்சர் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள், மிகச் சரியாகப் பலன் அளித்து சிஎஸ்கே பேட்டர்களை வெல்ல முடிந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான ஸ்லோவர் பந்துகளை வீசி சிஎஸ்கே பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தனர். குறிப்பாக உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஏராளமான ஸ்லோவர் பந்துகளையும், பேட்டர்களை ஏமாற்றும் விதத்தில் ஸ்லோ ஷார்ட் பவுன்சர்களையும் வீசி ரன்சேர்ப்புக்கு பெரிய கடிவாளம் போட்டனர். 'ஹோம் ஓர்க்' செய்த கம்மின்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS இதனால் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், உனத்கட் ஆகியோரின் நிகர ரன்ரேட் 7 சராசரிக்கும் மேல் செல்லவில்லை. அதிலும் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியை கோட்டைவிடாமல் இருந்தால் இன்னும் குறைந்திருக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேரும் சேர்ந்து 34 டாட் பந்துகளை வீசியுள்ளனர், அதாவது ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்களாக மாறியுள்ளன. ஆடுகளத்தின் தன்மையையும், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு விளையாடுவார்கள், எந்தப் பந்துவீச்சில் பலவீனம், யாருக்கு எவ்வாறு பந்து வீசலாம் என்பதை கேப்டன் கம்மின்ஸ் நன்கு படித்து “ஹோம்ஓர்க்” செய்து வந்திருந்தார். அதனால்தான், ஒவ்வொரு பேட்டருக்கு ஏற்றாற்போல், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்துவீசி எந்த பேட்டரையும் களத்தில் நங்கூரமிடவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர்ந்து கொண்ட கம்மின்ஸ், சக பந்துவீச்சாளர்களுக்கும் எவ்வாறு பந்துவீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி சிஎஸ்கே பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் சித்தரவதை செய்தார். பட மூலாதாரம்,SPORTZPICS குறிப்பாக ஷிவம் துபே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு பேட் செய்யக் கூடியவர், ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கம்மின்ஸ் விரைந்து முடிவெடுத்தார். மார்க்கண்டே, ஷான்பாஸ் ஓவர்களை ஷிவம் துபே குறிவைத்து சிக்ஸர், பவுண்டரிகளா அடித்தவுடன், கம்மின்ஸ் அடுத்தடுத்து நடராஜன், உனத்கட்டை பந்துவீசச் செய்து துபேவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில் ஷிவம் துபேயின் விக்கெட்டை கம்மின்ஸ் தனது பந்துவீச்சில் எடுத்துக் கொடுத்தார். ஃபீல்டிங் அமைப்பதிலும் கம்மின்ஸ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். எந்தப் பந்துவீச்சாளரைப் பயன்படுத்தினால் எந்தப் பந்துவீசுவார், அதற்கு ஏற்றாற்போல், பேட்டர் எவ்வாறு ஷாட்களை அடிப்பார் என்பதை மனக்கணக்கில் புரிந்து கொண்டு ஃபீல்டிங்கை அருமையாக கம்மின்ஸ் அமைத்தார். இந்த ஆட்டத்தில் ஒரு கேட்சை கூட விக்கெட் கீப்பர் கிளாசன் பிடிக்கவில்லை, மாறாக மைதானத்தில் நின்றிருந்த பீல்டர்களே கேட்சுகளை பிடித்தனர். தோனி கேப்டனாக இருக்கும்போது, எதிரணியின் ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்துச் செயல்படுவார். பந்துவீச்சிலும் அதற்கு ஏற்ற வகையில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டே இருப்பார். எந்த மைதானமாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைந்து புரிந்துகொண்டு பந்துவீச்சாளர்களை அதற்கு ஏற்றாற்போல் மாற்றுவார். தோனி செய்த அத்தனை பணிகளையும் நேற்று கம்மின்ஸ் கேப்டன்சியில் காண முடிந்தது. அதனால்தான் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் தோனிக்கு எதிராக “மினி தோனி”யாக செயல்பட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது. அபிஷேக் அதிரடியால் ‘டென்ஷன்’ குறைந்தது பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் எளிய இலக்கு என்பதைப் புரிந்து கொண்டு தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தார். டிராவிஸ் ஹெட் பொறுமையாக ஆட, அபிஷேக் வெளுத்து வாங்கினார். முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் ஒரு நோபால் சிக்ஸர் என 27 ரன்களை குவித்தார். தீபக் சஹர் வீசிய 3வது ஓவரிலும் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அபிஷேக் தனது கேமியோவை நிறைவு செய்தார். அடுத்து வந்த மார்க்ரம், ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் ரன்ரேட் குறையாமல் கொண்டு சென்றதால் பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ். வெற்றிக்கான இலக்கில் பாதியைக் கடந்திருந்தது. 8.5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை அடைந்தது. சவாலான மார்க்ரம் பேட்டிங் பட மூலாதாரம்,SPORTZPICS தீக்சனா வீசிய 10வது ஓவரில் ரவீந்திராவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஹெட் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3வது விக்கெட்டுக்கு வந்த ஷான்பாஸ் அகமது, மார்க்ரமுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். பொறுப்புடனும், நேர்த்தியாகவும் பேட் செய்த மார்க்ரம், சிஎஸ்கே பவுலர்கள் தன்னை ஆட்டமிழக்கச் செய்ய எந்த வாய்ப்பும் வழங்கவில்லை, பெரிய ஷாட்களுக்கும் செல்லவில்லை. ஆனால், ஷான்பாஸ் பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது பலன் அளிக்கவில்லை. 35 பந்துகளில் மார்க்ரம் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் மொயீன் அலி பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு மார்க்ரம் கால்காப்பில் வாங்கி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக பேட் செய்த ஷான்பாஸ் ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் சேர்த்து மொயீன் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். பட மூலாதாரம்,SPORTZPICS ஏமாற்றிய கிளாசன் ஐந்தாவது விக்கெட்டுக்கு கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் சேர்ந்தனர். குறைவான இலக்கு இருந்தாலும் பெரிய ஷாட்களுக்கு செல்ல இருவரும் தயங்கினர். நிதிஷ் குமார் துணிச்சலாக ஒரு பவுண்டரி அடித்தார், கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. தீபக் சஹர் ஓவரில் நிதிஷ் ஒரு சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார். கிளாசன் 10 ரன்களிலும், நிதிஷ் குமார் 14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணி 8.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய நிலையில் அடுத்த 66 ரன்களை சேர்க்க 10 ஓவர்களை தேவையின்றி எடுத்துக்கொண்டு வெற்றியைத் தள்ளிப் போட்டது. 5 ஓவர்கள் குறைவாக இலக்கை அடைந்திருந்தால் சன் ரைசர்ஸ் நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு அருகே வந்திருக்கும். சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன? சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. பலமான பேட்டிங் வரிசையை வைத்துள்ள சிஎஸ்கே அணியால், நேற்றைய ஆடுகளத்தில் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதற்குக் காரணம் பேட்டர்கள் ஆடுகளத்தை நன்றாகப் புரிந்து கொண்டு பேட் செய்யாததும், பெரிய ஷாட்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தததும்தான். பட மூலாதாரம்,SPORTZPICS ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் ஆடிப் பழகியவர். திடீரென இந்திய ஆடுகளத்துக்கு ஏற்ப மாறும்போது கடந்த 2 போட்டிகளாகத் தடுமாறுகிறார். ரஹானே அனுபவம் நிறைந்த பேட்டராக இருந்தாலும் 105 கி.மீ வேகத்தில் உனத்கட் வீசிய ஸ்லோவர் பந்துவீச்சுக்கு விக்கெட்டை இழந்தார். பெரும்பாலான சிஎஸ்கே பேட்டர்கள் ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்சர்கள், ஷார்ட் பவுன்ஸர்கள் விளையாடுவதற்குத் திணறுகிறார் என்பது நேற்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியால் 78 ரன்கள் சேர்க்க முடிந்த நிலையில், சிஎஸ்கே அணியால் பவர்ப்ளேவில் 30 ரன்கள் குறைவாக 48 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. பவர்ப்ளே ஓவர்களை சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்திய அளவுக்கு சிஎஸ்கே பேட்டர்கள் பயன்படுத்தவில்லை. சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பவுன்டரி அடிக்க 16 பந்துகளை முயற்சி செய்தனர் என்றால் சிஎஸ்கே பேட்டர்கள் 8 பந்துகளில் மட்டுமே முயன்றனர். சிஎஸ்கே பேட்டர்களின் பலவீனத்தை உணர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதால் கடைசி 7 ஓவர்களில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. டேரல் மிட்ஷெல்(13) நடராஜன் வீசிய ஸ்லோவர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துதான் ஓரளவுக்கு கௌரமான ஸ்கோர் வருவதற்குக் காரணமாக அமைந்தது. அதிலும் சுழற்பந்துவீச்சை துபே வெளுக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு வேகப்பந்துவீச்சுக்கு மாற்றி அவரையும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். ஷிவம்துபே 45 ரன்களை கழித்துப் பார்த்தால் சிஎஸ்கே ஸ்கோர் 120 ரன்கள்தான். பெரிய பேட்டர்களான ரவீந்திரா(12), கேப்டன் கெய்க்வாட்(26), ரஹானே(35), மிட்ஷெல்(13) ஆகியோர் ஏமாற்றினர். பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசிய அளவுக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் புரிந்து பந்துவீசவில்லை. அதாவது ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்ஸர்கள் பெரிதாக சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வீசவில்லை. வழக்கமாக வேகப்பந்துவீச்சு, வழக்கமான சுழற்பந்துவீச்சு என்ற போக்குதான் வெற்றியை இழக்க வைத்தது. அதிலும் முகேஷ் சௌத்ரி 2022, டிசம்பர் மாதத்துக்குப் பின்பு முதல்முறையாக நேற்றுதான் போட்டியில் பங்கேற்றார் என்றால் அவரின் பந்துவீச்சு எந்தத் தரத்தில் இருந்திருக்கும். அதனால்தான் முதல் ஓவரிலேயே 27 ரன்களை வாரிக் கொடுத்தார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் சுழற்பந்துவீச்சாளர்களும் வேகத்தைக் குறைத்து மணிக்கு 90 கி.மீக்குள் வீசியிருந்தால், பந்து நன்றாக டர்ன் ஆகி இருக்கும், சன்ரைசர்ஸ் பேட்டர்களின் ரன்வேகம் குறைந்திருக்கும். ஆனால், தீக்சனா, ஜடேஜா,மொயீன் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களும் மணிக்கு 98 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்து வீசினர். ஆனால் அவ்வப்போது வேகத்தைக் குறைத்து மொயீன் அலி பந்துவீசியபோது பந்து நன்கு டர்ன் ஆனதைக் காண முடிந்தது. அதன்பின்புதான் அவர் பந்துவீச்சில் வேகத்தை சற்று குறைத்தார். அதேபோல வேகப்பந்துவீச்சில் தேஷ்பாண்டே, சஹர், முகேஷ் சௌத்ரி என ஒருவருமே பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு அழுத்தம் தரவில்லை. பந்துவீச்சில் வேறுபாடுகளைக் கொண்டு வரவில்லை. குறிப்பாக ஸ்லோவர் பால், பவுன்ஸர்கள் என்ற ஆயுதத்தை மறந்துவிட்டனர். பதிரணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இருவரும் இல்லாத வெற்றிடம் நன்கு தெரிந்தது. பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தவில்லை பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நன்கு பந்து வீசினர். கடைசி 5 ஓவர்களை எங்கள் பேட்டர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. நல்ல நிலையில் இருந்து அதைப் பராமரித்துக் கொண்டு செல்லத் தவறிவிட்டோம். கறுப்பு மண்ணில், ஸ்லோவர் பந்துகளைத் தவறவிட்டோம். பந்து தேய்ந்தபின் இன்னும் பேட்டர்களை நோக்கி மெதுவாக வரத் தொடங்கியது. விக்கெட் நன்கு புரிந்துகொண்டு சன்ரைசர்ஸ் பந்து வீசினர். பவர்ப்ளேவில் நாங்கள் நன்கு பந்து வீசவில்லை, அவர்கள் பவர்ப்ளேவில் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர். நாங்கள் 175 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். பவர்ப்ளே ஓவர்ளில் நன்கு பந்துவீசி இருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும். கடைசி நேரத்தில் லேசான பனியும் இருந்தது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c1dvdellm59o
-
வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியாக 1,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது - ரஜித் கீர்த்தி தென்னகோன்
05 APR, 2024 | 08:51 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாகச் செலுத்தியுள்ளதாகவும், 2024 பெப்ரவரி வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டியில் எவ்வித நிலுவைகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் வெள்ளிக்கிழமை (05) வௌியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 760.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 7.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மேற்கூறியவாறு செலுத்தப்பட்டுள்து. மேலும், ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கு 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் EFF 23-26 திட்டத்திற்கு 9.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நோர்டிக் அபிவிருத்தி நிதியத்திற்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திற்கு 29.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 489.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி அரசாங்கம் 1,338.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவு பதிவைக் கருத்தில் கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன கடன் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், இருதரப்பு கடன்கள் மற்றும் வட்டியாக 571.0 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடன்கள் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான இணக்கப்பாடுகளை எட்ட உரிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடனும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரிஸ் சமவாய நாடுகளுடன் கடன் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதோடு, 2024 பெப்ரவரி இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 450.7 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. கடந்த காலத்தில் இடை நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்காக, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, குவைட், பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா, சீனா அபிவிருத்தி வங்கி, சீன - ஹங்கேரி, இந்திய மற்றும் அமெரிக்க எக்சிம் வங்கி உட்பட கிட்டத்தட்ட 25 நிதி நிறுவனங்களுடன், இலங்கை இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்களை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி தனது டொலர் கையிருப்பை வெளிநாட்டு நாணயங்களில் அதிகரித்துக் கொண்டு உள்நாட்டின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியவைக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களை செலுத்தி முடித்த பின்பே இந்தக் கடன்கள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான கொடுக்கல் வாங்கல் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், ஜப்பானிய யென்கள், கனேடிய டொலர்கள் ஆகிய நாணய அலகுகளில் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த பலதரப்பு, இருதரப்பு மற்றும் உள்நாட்டுக் டொலர் கடன்களை செலுத்திய பின்னர், நாட்டின் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக (4950 மில்லியன் டொலர்கள்) ஆக அதிகரித்துள்ளது. அதிக வட்டி விகிதத்தில் அரசாங்கம் பெற்றுள்ள 4,439.2 மில்லியன் டொலர் வணிகக் கடன்கள் மற்றும் வட்டியை மறுசீரமைக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதுடன், மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முடியும் வரை பணம் செலுத்தப்படாது. 2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தின் கீழ், அதாவது வருடத்திற்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. அப்போது வங்கிகளில் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தில் இருந்து 15% அதிக வட்டி விகிதத்தைக் குறைக்க பணம் வழங்கியது திறைசேரி. 2015ஆம் ஆண்டு வர்த்தக வங்கிகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இந்த வட்டி விகிதம் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 இலட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 12 இலட்சம் சிரேஷ் பிரஜைகள் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதம் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டளவில், இந்த கூடுதல் வட்டியை செலுத்துவதற்காக திறைசேரி ஒரு காலாண்டிற்கு 20 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதன்படி, திறைசேரி வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபாவை இதற்காக செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த செயல்முறை 2022 ஒக்டோபர் 01 முதல் நிறுத்தப்பட்டது. 50% இற்கும் அதிகமான சிரேஷ் பிரஜைகள் தங்கள் வட்டித் தொகையை மாதந்தோறும் பெறுகின்றனர். தற்போதைய நிதி நிலைமையின் படி இதற்காக வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபா கூடுதல் தொகையை அரசசாங்கத்தால் தாங்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது. 2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும். வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைக் பெற்றுக்கொள்ள, தற்போதைய VAT இன் மதிப்பு 1% இனால் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில், சில சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டால், அதற்கான பணத்தைத் திரட்டும் வழியையும் பகிரங்கப்படுத்த வேண்டும். மத்திய வங்கியின் கொள்கையானது வட்டி விகிதங்களைக் குறைத்து, இலாபம் ஈட்டுவதற்கு போட்டி முறையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகும். கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து 30% வங்கி வட்டி விகிதத்தை நெருங்கி, மக்கள் கடன் பெறுவதற்கு கூட மூலதனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், நாடு வங்குரோத்தாகிப்போனதைப் பார்த்தோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்த நேரத்தில் முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180546
-
தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – உருக்கமான கடிதம்
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸார் ராதாகிருஷ்ணன் மற்றும் குறித்த பெண் வீட்டாரிடம் பேசி, அவர்களை சமாதானம் செய்தார்கள். மாலை 4.30 மணியளவில் பொலிஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ராதாகிருஷ்ணன் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். இரவு சிறிது நேரம் தங்கி இருந்த அவர் மனைவியிடம் எனது வீட்டுக்கு சென்றுவிட்டு, காலையில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமாக எழுதிய கடிதம் மற்றும் செல்போன் வாட்ஸ்அப் பதிவை பொலிஸார் கைப்பற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டினர். எனவே அவர்கள் தான் என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம். எனக்கு விருப்பம் இல்லாமல் இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியாது என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் தந்தை தனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். இதனையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/298259
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அநுரவுடன் சுமந்திரன் சந்திப்பு ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்துச் சுட்டிக்காட்டு 05 APR, 2024 | 08:51 PM (ஆர்.ராம்) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது ‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்து அநுரகுமாரவுக்கு சுமந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு மற்றும் வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பு ஆகியவற்றில் பங்கேற்பதற்காகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (4) யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இதன்போதே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், வங்கியாளர் தொழிற்சங்கத்தினருடனான சந்திப்பின்போது அநுரகுமார திசாநாயக்க, இந்தியா பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கின்றது. அங்கு இன ஒற்றுமை காணப்படுவதோடு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். அப்துல்கலாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவருடைய சுட்டிக்காட்டல்களை அவதானித்திருந்த நான், பின்னர் அவருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் சிறுபான்மை, மற்றும் நலிவுற்ற சமூகத்தினர் அவ்விதமான பதவிகளுக்கு வருவதற்கும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவுவதற்கும் காரணமொன்று உள்ளது எனக் குறிப்பிட்டேன். அச்சமயத்தில் அநுர, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்தியாவில் அவ்விதமான நிலைமைகள் நிலவுவதற்கு அங்குள்ள அதிகாரப்பகிர்வு முறை ஒருகாரணமாக இருக்கின்றபோதும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது தான் என்ற விடயத்தினை குறிப்பிட்டேன். அத்துடன், அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன். இதேநேரம், வடக்கு,கிழக்கில் உள்ள சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதோடு, தொடர்ச்சியாகப் பரஸ்பர கலந்துரையாடல்களை முன்னெடுப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/180544
-
தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டி அவர்கள், கடந்த 200 நாட்களாக இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இப்பிரச்னையில் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றது. என்ன பிரச்னை? மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லை பகுதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலம் காணப்படுவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பண்ணையாளர்கள் இந்தப் பகுதிகளிலேயே தமது கால்நடைகளை (மாடுகள் மற்றும் ஆடுகள்) வளர்த்து வருகின்றனர். வேளாண்மையின் போது, பாரம்பரியமாக ஆடு, மாடுகளை மேச்சல்நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் இந்தப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ‘ஆடு மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன’ இந்த நிலையில், மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சல்நிலப் பகுதியை அண்மித்து, பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் குடியேறி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் அத்துமீறி குடியேறியுள்ள மக்கள், அந்தப் பகுதிகளில் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு புதிதாகக் குடியேறியவர்களின் விளைநிலங்களுக்குள், அப்பகுதியில் ஏற்கெனவே கால்நடை மேய்த்து வந்தவர்களின் மாடுகள், ஆடுகள் நுழைந்தால், அவற்றைப் பல்வேறு விதமாக சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் சொல்கின்றனர். கால்நடைகளைக் கூரிய ஆயுதங்களால் வெட்டுதல், மின்சார வேலிகளை அமைத்து அவற்றைச் சிக்க வைத்தல், வெடி வைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தி தமது கால்நடைகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் கொன்று வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் பிபிசி தமிழிடம் வழங்கிய இறந்த மாட்டின் புகைப்படம் அத்துடன், மேச்சல் தரையில் புல்களுக்கு கிருமிநாசினிகள் தெளிப்பதால், அதனூடாக தமது கால்நடைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலையில், கடந்த 9 மாத காலப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துள்ளதாகத் தெரிவித்து, பண்ணையாளர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், உணவு கிடைக்காததால் பல மாடுகள் மற்றும் ஆடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், மேச்சல்நிலப் புல்தரையை அத்துமீறிய குடியேற்றவாசிகள் தீக்கிரையாக்கி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, 200 நாட்களாக தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர் 200 நாட்களைக் கடந்த போராட்டம் இந்நிலையில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றை எதிர்த்தும், கால்நடை பாதுகாப்பு, பூர்வீக நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சுழற்சி முறை போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தப் போராட்டத்தின் 200வது நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்று வரை செவிசாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்தப் போராட்டத்தில் பண்ணையாளர்கள் மாத்திரமன்றி, சமய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் கண்ணம்மா பிபிசி தமிழிடம் தங்கள் பாட்டன், பூட்டி காலத்திலிருந்து 200 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். படக்குறிப்பு, தர்மலிங்கம் கண்ணம்மா “கடந்த 200 நாட்கள் போராட்டத்தில் நாங்களும் பிள்ளைகளை இந்த வெயிலில் கூட்டி வந்து போராடி வருகின்றோம். ராணுவம், போலீஸ் எல்லாம் வந்து தீர்த்து தருகின்றோம் எனச் சொல்கின்றார்கள். ஆனால் இன்னும் முடிவு வரவில்லை. ஆடு மாடுகளை கம்பியில் கொல்கிறார்கள். மாடுகளை கட்டுவதற்கு மேச்சல் தரையை எங்களுக்குத் தர வேண்டும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம்," என தர்மலிங்கம் கண்ணம்மா கூறினார். தனது மாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இதுவரை தனக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை என பண்ணையாளர் தெய்வேந்திரன் தெரிவிக்கின்றார். “எங்களுடைய நிறைய மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய மாடுகளை வெட்டி விட்டார்கள். என்னுடைய 10 மாடுகள் வரை வெட்டுப்பட்டுள்ளன. கடந்த 7-8 மாதங்களாக தொழில் இல்லாமல் இருக்கின்றோம். அரசாங்கம் எந்தவிதமான நிவாரணமும் தரவில்லை. பண்ணையாளர்கள் அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். போலீசில் முறைப்பாடு செய்துள்ளோம்," என தெய்வேந்திரன் கூறுகிறார். படக்குறிப்பு, சினித்தம்பி நிமலன் ‘அரசியல்வாதிகள் பார்க்க வரவில்லை’ இப்பிரச்னை குறித்து ஆராய்வதற்கு அரசியல்வாதிகள் வந்த போதிலும், அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என கால்நடை வளர்ப்பு, கமநல அமைப்பு மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார். போராட்டத்தின் சாதகமான ஒரு சில நிலைமைகள் வந்த போதிலும், அது நிலைக்குமா நிலைக்காதா என்பது தெரியாமல்தான் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். “எங்களுடைய மாடுகளுக்கு நடக்கின்ற அச்சுறுத்தல்கள், எங்களுடைய மாடுகள் சாவது எல்லாவறையும் பார்த்து எங்களுக்கு வாழ்வதா சாவதா என்றே தெரியவில்லை. ஜனாதிபதி வந்தபோது, சட்டவிரோதமாக வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றலாம் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. மூன்று மாதம் பயிர் செய்த பின்னர் அவர்கள் வெளியேறுவார்கள். அதற்குப் பின்னர் மாடுகளைக் கட்டலாம் என போலீசார் சொன்னார்கள். அந்த நிலைமையும் இல்லை. இன்று ஆதரவற்ற நிலைமையில் இந்த பண்ணையாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்,” என்றார். மேலும், “பால் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம். யாரும் உதவவில்லை. அந்த நிலைமையைப் பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது எந்தவொரு அரசியல்வாதிகளோ வரவில்லை. பார்க்க வந்தால் அவர்களை உள்ளே விடவும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும்," சினித்தம்பி நிமலன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, நாகேஸ்வரன் மிரேக்கா ‘இது அரசு நடத்தும் நிழல் யுத்தம்’ தமிழ் மக்கள் பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டு போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு நடத்தி வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் நாகேஸ்வரன் மிரேக்கா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வடக்கு-கிழக்கு பகுதிகளைப் பொருத்த வரையில் தமிழ் மக்கள் பல அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள், என்று அவர் தெரிவித்தார். “அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரச்னை என்பது இன்று-நேற்று நடக்கும் பிரச்னை அல்ல. இது பல ஆண்டுகளாக இந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னை,” என்றார். “கடந்த 9 மாதங்களாக சுமர் 1,750 மாடுகள் இறந்திருக்கின்றன. வாய்க்கு வெடி வைத்தும், மின்சார வேலிகளில் தாக்கப்பட்டும், ஆயுதங்களால் வெட்டியும் இந்த மாடுகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்துள்ளனர்,” என்றார் அவர். “வாழ்வாதார்ததை இழக்கக்கூடிய இடத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல நீதிமன்ற உத்தரவுகள் இந்த மக்களுக்கு சார்பாக வந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகளைக் கூடப் பொருட்படுத்தப்படுவதில்லை. இந்தப் பிரச்னைக்கு 200 நாட்கள் போராடியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த மக்கள் காலப்போக்கில் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டுப் போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றது,” என்கிறார் நாகேஸ்வரன் மிரேக்கா. மேலும், சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே இப்பிரச்னைக்கு தீர்வை ஏற்படும் முடியும் தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, மயிலத்தமடு மேய்ச்சல்நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காணமுடிந்தது மயிலத்தமடு மேய்ச்சல் நிலம் இப்போது எப்படி இருக்கிறது? மயிலத்தமடு பிரச்னை வலுப்பெற்றுள்ள நிலையில், அந்தப் பகுதிக்குள் செல்ல அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர் இலங்கையின் போலீசார் மற்றும் ராணுவத்தினர். மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதி, மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 60கி.மீ. தொலைவில், வனப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த மேய்ச்சல் நிலத்துக்குள் செல்லும் பிரதான வீதியில் பாதுகாப்பு அரணொன்றை அமைத்துள்ள போலீசார் மற்றும் ராணுவத்தினர், உள்ளே செல்பவர்களுக்கு டோக்கன்களை வழங்கி, பெயர்களைப் பதிவு செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். எனினும், இந்தப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருவதை அங்கு சென்ற பிபிசி குழுவினரால் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், மட்டக்களப்பு - கிரான் வழியாக மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் உதவியுடன் பிபிசி தமிழ் சென்றது. நாம் சென்ற பகுதி வனப் பகுதி என்பதுடன், செல்லும் வழியில் ராணுவ முகாம்கள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் மாத்திரமே உள்ள செல்ல முடியும் என்ற நிலையில், சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியைச் சென்றடைந்தோம். பிரதான வழியாகச் செல்ல விவசாயிகளுக்கு மாத்திரம் பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்குகின்ற நிலையில், நாம் மற்றைய வழியாக உள்ளே பிரவேசித்து அங்குள்ள சூழ்நிலையை ஆராய்ந்தோம். படக்குறிப்பு, மேய்ச்சல்நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது வெளியேறுவதைத் தடுத்த பாதுகாப்புத் துறை மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதிக்குள் சென்றவுடன், ஆடுகளையும், மாடுகளையும் காண முடிந்தது. மேய்ச்சல் நிலத்தை அடுத்து புதிய விவசாய நிலங்கள், சிறுசிறு வீடுகள் மற்றும் டிராக்டர் இயந்திரம் ஆகியவற்றைக் காண முடிந்தது. இவ்வாறு காணப்படும் விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் இயந்திரம் ஆகியன சட்டவிரோத குடியேற்றவாசிகளுடையது என நம்முடன் வந்திருந்த மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS பட மூலாதாரம்,MYLATHAMADU PROTESTERS அத்துடன், மேய்ச்சல் நிலப் பகுதியில் அங்காங்கே இறந்த மாடுகளின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், தோல், எலும்பு எச்சங்கள் ஆகியவற்றைக் காண முடிந்தது. அத்துடன், மேய்ச்சல் தரையின் ஒரு பகுதி தீக்கிரையாகியிருந்த நிலையில், அது சட்டவிரோத குடியேற்றவாசிகளால் தீ வைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றைக் கண்ட பிபிசி குழு, மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பகுதியிலிருந்து பிரதான வீதியாக வெளியேறிய சந்தர்ப்பத்தில், பாதுகாப்புப் பிரிவினர் அங்கிருந்து வெளியேற நமக்கு இடையூறு விளைவித்தனர். செய்தியாளர்கள் எப்படி உள்ளே நுழையலாம் என்று நம்மோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேற பாதுகாப்புப் பிரிவினர் நமக்கு அனுமதி வழங்கினர். அரசாங்கம் என்ன சொல்கிறது? இந்தப் பிரச்னை தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்தார். அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மேய்ச்சல் நிலப் பிரச்னை இரண்டு தரப்பான விவசாயிகளுக்கு இடையில் காணப்படுகின்றது என்றார். “கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இடையில் இந்தப் பிரச்னை காணப்படுகின்றது. இந்த இரண்டு தரப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார். படக்குறிப்பு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் பேசிய அவர், விவசாயம் செபவர்கள் மேய்ச்சல் நிலத்தில் புற்களைப் பயிரிடும் போது, கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் என்றார். “அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் செய்கின்றோம்,” என்றார். போராட்டம் செய்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “போராடுபவர்கள் பல கருத்துகளைச் சொல்வார்கள். அந்த இடத்தை ராணுவம் கட்டுப்படுத்தவில்லை. இது இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் யுத்தமும் இல்லை. இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை. இனஅழிப்புக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார். மேலும், “இது அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படும் பிரச்னையாகவே இதைப் பார்க்கிறோம்," என்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான். இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/clm73edmz78o
-
பாடத்திட்டத்தை நவீன மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்
பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயமாக்குவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது. 57 ஆரம்ப பாடசாலைகளிலும் 113 இடைநிலைப் பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10-க்கான பாடத்திட்டமே நவீனமயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டம் நவீனமயமாக்கப்படவுள்ளது. பாரம்பரிய கற்பித்தல் முறையில் இருந்து விலகி மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே பாடத்திட்ட நவீனமயமாக்கலின் நோக்கம் ஆகும். புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பரீட்சைக்காக கற்றல் எனும் மனப்பான்மையை மாணவர்களிடமிருந்து நீக்கி, புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298262
-
2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் - மத்தியஸ்தர் இரேஸ்மஸ்
'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ் 05 APR, 2024 | 06:20 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த இங்கிலாந்து உலக சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இறுதிப் போட்டியில் மராயஸ் இரேஸ்மஸ், குமார் தர்மசேன ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர். நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக்கு கடைசி ஒவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ட்ரென்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசினார் பென் ஸ்டோக்ஸ். அடுத்த பந்தை பென் ஸ்டோக்ஸ் விசுக்கி அடிக்க மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசை திரும்பிய பந்து எல்லைக் கோட்டை கடந்து சென்றது. அவ்வேளையில் ஸ்கொயார் லெக் மத்தியஸ்தராக இருந்த இரேஸ்மஸ், தலைமை மத்தியஸ்தராக இருந்த குமார் தர்மசேனவிடம் 6 ஓட்டங்கள் என சைகை செய்தார். இதனை அடுத்து எண்ணிக்கை பதிவாளர்களை நோக்கி 6 ஓட்டங்கள் என தர்மசேன கைகை செய்தார். பென் ஸ்டோக்ஸும் ஆதில் ராஷித்தும் 2 ஓட்டங்களை எடுத்ததாகவும் எறிபந்தினால் 4 ஓட்டங்கள் கிடைத்ததாகவும் அப்போது கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களுக்கு பதிலாக 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது தவறு என இப்போது இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பதால் 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவரது 'காலம் கடந்த ஞானம்' தெரிவிக்கிறது. மாட்டின் கப்டில் பந்தை எறிந்தபோது பென் ஸ்டோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பது சலன அசைவுகளில் நிரூபணமாகியது. இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிகைக்கு அண்மையில் இரேஸ்மஸ் தெரிவித்திருந்ததாவது: ''மறுநாள் காலை நான் காலை வுக்கு செல்வதற்காக எனது அறைக் கதவைத் திறந்த அதேநேரம் குமார் தர்மசேனவும் அவரது அறைக் கதவைத் திறந்தார். அப்போது அவர் 'நாங்கள் பாரிய தவறு இழைத்தோம் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' என என்னிடம் கூறினார். அப்போதுதான் நான் அதை அறிந்தேன். ஆனால், மைதானத்தில் நாங்கள் வெறுமனே ஆறு என எங்களுக்குள்ளே கூறிக்கொண்டோம். ஆறு, ஆறு, அது ஆறு என கூறினோமே தவிர துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்களா என்பதை கவனிக்கவில்லை. அவ்வளவுதான்' என்றார். இந்தத் தவறுக்காக மட்டும் அவர் வருந்தவில்லை. இன்னும் ஒரு தவறை 'தவறுதலாக' செய்திருந்தார் இரேஸ்மஸ். நியூஸிலாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரொஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார். பந்துவீச்சுப் பகுதி விளிம்பில் (wide of the crease) இருந்து மார்க் வூட் வீசிய பந்து ரொஸ் டெஸ்லரின் முழங்காலுக்கு மேல் பட்டது. களத்தடுப்பில் எல்.பி.டபிள்யூ.வுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் ரொஸ் டெய்லர் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பிட்டார். நியஸிலாந்து தனது மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவுசெய்திருந்ததால் ரொஸ் டெய்லர் மீளாய்வு செய்ய முடியாதவராக களம் விட்டகன்றார். 2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வெற்றிகர மீளாய்வுக்கான வாய்ப்பே அனுமதிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக இரேஸ்மஸ் என்ன கூறினார் தெரியுமா? 'அது சற்று உயர்வாக இருந்தது. ஆனால் அவர்கள் மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவு செய்திருந்தார்கள். ஏழு வாரங்கள் நீடித்த உலகக் கிண்ணப் போட்டியில் நான் இழைத்த ஒரே ஒரு தவறு அதுதான். அதனால் நான் பின்னர் மிகுந்த கவலை அடைந்தேன். ஏனெனில் அதனை நான் சரியாக தீர்மானித்திருந்தால் தவறு இழைக்காதவனாக உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருப்பேன். மேலும் எனது அந்தத் தீர்ப்பு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் சிறந்த வீரர்களில் அவரும் (ரொஸ் டெய்லர்) ஒருவர்' என இரேஸ்மஸ் குறிப்பிட்டார். இந்த மத்தியஸ்தர்தான் (இரேஸ்மஸ்) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு 'டைம்ட் அவுட்' தீர்ப்பு வழங்கியவர் ஆவார். அவரேதான் இப்போது 'டைம்ட் அவுட்' ஆன நிலையில் 2019 உலகக் கிண்ண தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோன்று ஏஞ்சலோ மெத்யூஸின் டைம்ட் அவுட் ஆட்டம் இழப்பு தொடர்பாக இரேஸ்மஸ் காலம் கடந்து தவறை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. ஆனால், குமார் தர்மசேன அப்போது என்ன கூறியிருந்தார் தெரியுமா? உலகக் கிண்ணப் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் 'எனது தீர்மானம் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை' என குறிப்பிட்டிருந்தார். 'போட்டிக்கான சகல மத்தியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது' என அவர் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/180545
-
இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை
15 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 15 ஆம் திகதி இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்காக 15 மீனவர்களுக்கும் தலா 1000 மற்றும் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை அவர்கள் செலுத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. கடற்படையினரை தாக்கியதாக தெரிவித்து சுமத்தப்பட்டிருந்த 03 ஆம் 04 ஆம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுச்சொத்தான கடற்படையின் படகை சேதப்படுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த 05 ஆவது பிரதான குற்றச்சாட்டின் கீழ் மீனவர்களுக்கு எதிராக 03 இலட்சம் ரூபா அபராதமும் 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். https://thinakkural.lk/article/298264
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
அமெரிக்காவின் நியுஜேர்சியை தாக்கியது சிறிய பூகம்பம் 05 APR, 2024 | 08:41 PM அமெரிக்காவின் நியுஜேர்சியை பூகம்பம் தாக்கியுள்ளதாகவும் நியுயோர்க்கில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும தகவல்கள் வெளியாகின்றன. பூகம்பம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பூகம்பமா என அவ்வேளை உரையாற்றிக்கொண்டிருந்த சேவ்தவசில்ரன் பிரதிநிதி கேள்வி எழுப்பினார். புரூக்ளினில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அமெரிக்காவின் பல நகரங்களை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180552
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது - அமைச்சர் டக்ளஸ் 05 APR, 2024 | 08:50 PM பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் உண்மைகளை அறிவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுயலாப அரசியலுக்கான கபடத்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பொன்னாவெளிப் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை இன்று (05) மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முற்பட்டவேளை, சில அரசியல் தரப்புக்களால் தவறாக வழிநடத்தப்பட்ட சிலர், ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆய்வின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நிதானமான முறையில் கலந்துரையாடி உண்மைகளை புரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே அங்கிருந்த பலர் காணப்பட்டனர். இதனால், குறித்த தரப்பினருக்கு உண்மைகளை தெளிவுபடுத்துவது உடனடியாக சாத்தியமில்லை என்பதை புரிந்துகொண்ட அமைச்சர், தன்னுயை முயற்சியை இடைநிறுத்தி திரும்பிய போதிலும், மக்களுக்கு நன்மைகளை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு நடவடிக்கைகளை தொடர்வதற்கான பணிகள் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180549
-
வைகை இலக்கியத் திருவிழா 2024
சோழ மன்னனின் பொறாமையும் ஆவேசமும்.. வடக்கில் இருந்த ராஜாவின் நிலை என்ன? https://www.facebook.com/100043983976036/videos/968465944187593?__so__=watchlist&__rv__=video_home_www_playlist_video_list முத்தமிழ்னு பேசுவாங்க.. ஆனால் யாருக்கும் இது தெரியாது! - பாண்டியக்கண்ணன் https://www.facebook.com/FullyNewsy/videos/முத்தமிழ்னு-பேசுவாங்க-ஆனால்-யாருக்கும்-இது-தெரியாது-பாண்டியக்கண்ணன்/721051806580297/
-
தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் - யாழில் அநுரகுமார
Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 11:30 AM நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். 'இலங்கையின் முன்னேற்றம் இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் இணைந்து செல்லும்போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும். எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும். ஆகையினால் அனைவரது முன்னேற்றத்துக்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும். இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள். எனவே, அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180491
-
கச்சத்தீவை திரும்பப் பெற இந்தியா பேச்சுவார்த்தையா? இலங்கை அமைச்சர் என்ன சொல்கிறார்?
கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் எண்ணம் இல்லை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழன், ஏபர்ல் 5) யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார். கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார். இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகின்றனர். கச்சத்தீவு விவகாரம் கச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசின் பதில் என்ன? கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார். அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார். “1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார். மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார். அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார். மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன? இந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம். “இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார். மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார். மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுகின்றார். ‘வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் நாங்கள் செல்லவேண்டிய நிலை வரலாம்’ வாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார். ''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர். “கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/cv2yxz0qqxeo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவுக்கு எல்லைகள் ஊடான விநியோகங்களை தற்காலிகமாக அனுமதிக்கிறது இஸ்ரேல் Published By: SETHU 05 APR, 2024 | 12:13 PM தனது எல்லைகளுக்கு ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது. அத்துடன், காஸாவின் வடபகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலிய நகரான அஷ்தோத்திலுள்ள துறைமுகத்துக்கு ஊடாக விநியோகங்களை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாகவும், ஜோர்தானிலிருந்து வரும் உதவிகளை அதிகரிப்பதற்கு அனுமதித்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸா விடயத்தில் தனது கொள்கையில் கடும் மாற்றம் ஏற்படலாம் என அமெரிக்க எச்சரித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/180497
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பரபரப்புக்கு மத்தியில் குஜராத்தை ஒரு பந்து மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றி கொண்டது பஞ்சாப் Published By: VISHNU 04 APR, 2024 | 11:55 PM (நெவில் அன்தனி) அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் ஷஷான்க் சிங் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் குஜராத் டைட்டன்ஸை ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகொண்டது. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 17ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. ஷஷாங்க சிங் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ப்ரப்சிம்ரன் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை உறுதிசெய்தன. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் வீண்போனது. அணித் தலைவர் ஷிக்கர் தவான் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தொடர்ந்து ஜொனி பெயாஸ்டோவ் (22), ப்ர்ப்சிம்ரன் சிங் (35) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சாம் கரன் (5) களம் புகுந்த சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஸிம்பாப்வே சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். (111 - 5 விக்.) இந் நிலையில் ஷஷாங்க் சிங், ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது விக்கெட்டில் 19 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜிட்டேஷ் ஷர்மா 8 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் கிங்ஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 22 பந்துகளில் பகிர்ந்த 43 ஓட்டங்கள் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கான திருப்பு முனையாக அமைந்தது. 17 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்ற அஷுட்டோஷ் ஷர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்து வைட் ஆனதுடன் 2ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங்கினால் ஓட்டம் பெறமுடியவில்லை. கடைசி 4 பந்துகளில் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 3ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங் ஒற்றை ஒன்றை எடுத்து ஷஷாங்க் சிங்குக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அடுத்த பந்தை பவுண்டறி நோக்கி விசுக்கிய ஷஷாங்க் சிங், வெற்றி ஓட்டத்தை லெக் பை மூலம் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் நூர் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் அணித் தலைவர் ஷுப்மான் கில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் 4 இணைப்பாட்டங்களில் பங்காற்றி குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தார். ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் கேன் வில்லியம்ஸனுடன் 2 ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷனுடன் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் விஜய் ஷன்கருடன் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் பகிர்ந்தார். கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன் 33 ஓட்டங்களையும் விஜய் ஷன்கர் 8 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் ராகுல் தெவாட்டியாவுடன் மேலும் 35 ஓட்டங்களைப் ஷுப்மான் கில் பகிர்ந்தார். ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஷுப்மான் கில் 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். இந்த எண்ணிக்கையே இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் புதன்கிழமை பெற்ற 85 ஓட்டங்களே இதற்கு முன்னர் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. ராகுல் தெவாட்டியா 8 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/180465
-
இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பு இருக்கலாமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் "இன்சுலின் எதிர்ப்பு" பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அல்லது உணவுமுறைகள் இருப்பதாகக்கூறும் புத்தகங்கள் வெளியாகின்றன. இது பற்றிய வீடியோக்களும் பகிரப்படுகின்றன. ·இன்சுலின் எதிர்ப்பு’ வகை 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட கடுமையான மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தச்சொல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்சுலின் எதிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன? இதை சரி செய்ய முடியுமா? சாப்பிடாமல் இருப்பது அதாவது ஃபாஸ்டிங் அதை கட்டுப்படுத்த உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். இன்சுலின் என்றால் என்ன? கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் மனித உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. உடலில் அதை சேமித்து சக்திக்காக பயன்படுத்த அது அனுமதிக்கிறது. கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் இன்சுலின் பின்வரும் வழிகளில் செயல்படுகிறது: உடல் நீங்கள் உண்ணும் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் முதன்மை ஆதாரமாக கருதப்படுகிறது. குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் நகர்கிறது, மேலும் இன்சுலின் வெளியிட கணையத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்குள் நுழைய இன்சுலின் உதவுகிறது. இதனால் அது ஆற்றலுக்காக பயன்படுத்தப்படலாம் அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக அது சேமிக்கப்படும். குளுக்கோஸ் உடல் செல்களுக்குள் நுழைந்து, ரத்தத்தில் அதன் அளவு குறையும் போது, இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அது கணையத்திற்கு சமிக்ஞை செய்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பு ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள், இன்சுலினுக்கு ஏற்றவாறு செயல்படாமல் இருக்கும்போது ஏற்படும். இது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது. கணையம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸின் அளவை அகற்ற அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஹைப்பர் இன்சுலினீமியா என அழைக்கப்படுகிறது. பலவீனமான செல் செயல்பாட்டை ஈடுசெய்ய கணையம் போதுமான இன்சுலினை சுரக்கும் வரை, ரத்த சர்க்கரை அளவு ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும். இருப்பினும் இன்சுலினுக்கான செல் எதிர்ப்பு அதிகரித்தால், அது உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு வழிவகுக்கிறது. இது காலப்போக்கில் வகை 2 நீரிழிவு மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ·ஃபிராங்க்ளின் ஜோசப், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையில் ஆலோசகர் மருத்துவர் ஆவார். அவர் நாளமில்லா சுரப்பியியல், நீரிழிவு மற்றும் உள்உறுப்புகள் மருத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் Dr Frank's Weight Loss Clinic இன் நிறுவனரும் ஆவார். இன்சுலின் எதிர்ப்பு என்பது "மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படும் ஒரு சிக்கலான நிலை" என்கிறார் அவர். சரியான காரணம் நபருக்கு நபர் மாறுபடலாம். இது உருவாவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்: பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்புடையது. இன்சுலின் எதிர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன? உடல் பருமன்: அதிகப்படியான உடல் கொழுப்பு, குறிப்பாக வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்பை உடையது. உடல் உழைப்பின்மை: வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். மரபியல்: சிலர் மரபணு ரீதியாக இன்சுலின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். மோசமான உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்த உணவு இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். இந்த உணவுகள் ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். நாள்பட்ட மன அழுத்தம்: கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினின் திறனில் தலையிடலாம். இன்சுலின் எதிர்ப்பிற்கு இதுவும் பங்களிக்கிறது. தூக்கமின்மை: தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம், இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை பாதிக்கும். தூக்கமின்மையானது ஹார்மோன் அளவை சீர்குலைத்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். சில மருத்துவ நிலைமைகள்: பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்), குஷிங்ஸ் சிண்ட்ரோம் மற்றும் ஃபேட்டி லிவர் நோய் போன்ற நிலைமைகள் இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம். முதுமை: வயதாகும்போது செல்கள் இன்சுலினின் சொல்படி கேட்பது குறையும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்," என்கிறார் பேராசிரியர் வாசிம் ஹனிஃப். ரமலான் நோன்பு ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் நீரிழிவு சிகிச்சை மருத்துவ குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே நோன்பு பற்றி முடிவுசெய்ய வேண்டும்,” என்று பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் நாளமில்லாசுரப்பியியல் பேராசிரியரும், நீரிழிவு நோய்க்கான மருத்துவ இயக்குநருமான வாசிம் ஹனிஃப் கூறினார். "உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்,"என்றார் அவர். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே இன்சுலின் சென்ஸிடிவிட்டியை மேம்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார். கூடுதலாக உண்ணா நோன்பு காலங்களில் சில நபர்களுக்கு எடை இழப்பு அல்லது உடல் கொழுப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் குறிப்பாக பருமனான நபர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம்." ”இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் மீது ரமலான் நோன்பின் விளைவு, வயது, பாலினம், ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகள், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு அளவுகள் போன்ற காரணிகளைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்,” என்று அவர் மேலும் கூறுகிறார். "ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். நோன்பு காலத்தில் பாதுகாப்பான உண்ணாவிரத நடைமுறைகள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையை உறுதி செய்வது முக்கியம். சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை அவர்கள் பெறவேண்டும்." " உடல்நல நன்மைகளை அதிகரிக்க, இண்டர்மிடெண்ட் (இடைப்பட்ட) ஃபாஸ்டிங் அல்லது முழு ஃபாஸ்டிங்கின் போது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்" என்று அம்மானைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முறை ஃபாஸ்டிங் அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கிறார் டாக்டர். நிதின் கபூர் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் நல்லதா? இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது, பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகிறார்கள். பகலில் நீண்ட நேரம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, உணவுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும். டாக்டர். நிதின் கபூர், தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பியல் (நீரிழிவு, உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் பற்றிய ஆய்வு) பேராசிரியராக உள்ளார். இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்கால் வளர்சிதை மாற்ற நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்ட எந்த டயட்டும் நோயாளியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த வகையான உணவு அல்லது உண்ணாவிரதத்திலும், "நீண்ட கால நிலைத்தன்மையை" அவர் கோடிட்டுக்காட்டுகிறார். "உங்கள் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்ய முடியுமா?.நீங்கள் 15 பவுண்டுகளை இழக்க விரும்பலாம். ஆனால் நீங்கள் டயட்டிங்கை நிறுத்தினால் அது ஆவேசத்துடன் திரும்பி வரும்." இந்த வகை டயட் பற்றிய ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து வருகிறது என்றாலும் இது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார். "உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை மாற்றாமல் உடல் பருமன் இல்லாதவர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது என்பதை 2015 இல் செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது." இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இது மேம்பட்ட இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பு இருப்பவர்களுக்கு பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள் இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. இருப்பினும், இன்சுலின் எதிர்ப்பு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் (குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி), உயர் ரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடு அளவுகள் (கொழுப்பின் மோசமான வடிவம்), குறைந்த HDL கொழுப்பு ( நல்ல வடிவம்), மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும் என்று பேராசிரியர் ஜோசப் சுட்டிக்காட்டினார். இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தினால் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தால் அந்த நபருக்கு மற்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார். அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும். இந்த அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் இன்சுலின் எதிர்ப்பு உள்ள அனைவருக்கும் இந்த எல்லா அறிகுறிகளும் இருக்காது என்று என்று அவர் வலியுறுத்துகிறார். "கூடுதலாக, இந்த அறிகுறிகள் மற்ற சுகாதார நிலைமைகளையும் குறிக்கலாம், எனவே சரியான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம்,” என்றார் ஜோசப். "டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்க இன்சுலின் எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேலாண்மை முக்கியம்". பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப். மிகவும் கடுமையான நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும் சாத்தியகூறு என்ன? இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் அல்லது நிர்வகிக்கப்படாவிட்டால் அவர்களில் சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப். "ஆனால் இது மரபியல், உடல் பருமன், உடல் செயல் தன்மை, உணவு, வயது மற்றும் இனம் போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது.” "சில இனக்குழுக்கள் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு காகசியர்களை ஒப்பிடும்போது வகை 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது" என்று அவர் மேலும் கூறினார். கிளைசெமிக் அமைப்பு என்றால் என்ன? கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உணவுகளை வகைப்படுத்த பயன்படும் ஒரு அமைப்பாகும். நாம் உண்ணும் உணவு ரத்த சர்க்கரையின் அளவை, விரைவாகவோ, மிதமாகவோ அல்லது மெதுவாகவோ அதிகரிக்கச் செய்கிறது என்பதை இது காட்டுகிறது. மெதுவாக உடைபடும் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில காய்கறிகள், பழங்கள், இனிப்பு சேர்க்காத பால், பருப்பு வகைகள், முழு தானிய ரொட்டி மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கும். மறுபுறம், சர்க்கரை, சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள், வெள்ளை உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை அரிசி ஆகியவை உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள். இது ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாகிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட உணவு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க கிளைசெமிக் குறியீடு மட்டும் போதாது என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, பெரும்பாலான சாக்லேட் வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகம்.அதே நேரம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை அல்ல. எடுத்துக்காட்டாக, தர்பூசணி போன்ற சில பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை நன்மை தரக்கூடியவை. எனவே, உணவு ஆரோக்கியமானதாகவும், சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன. இன்சுலின் எதிர்ப்பு குணமாகக்கூடியதா? "வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகளின் மூலம் இன்சுலின் எதிர்ப்பை பெரும்பாலும் மாற்றியமைக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் கணிசமாக மேம்படுத்த முடியும்" என்கிறார் பேராசிரியர் ஜோசப். ”இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். கூடவே மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்." என்று ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் குறிப்பிட்டார். ஜோசப் மற்றும் அல்-அப்தாலத் இருவரும் வழங்கிய இரண்டாவது அறிவுரை, வழக்கமான உடற்பயிற்சியை பராமரிக்க வேண்டும் என்பதுதான். எடையை குறைப்பது, குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்தலாம். நாள்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதும் முக்கியமானது என்று பேராசிரியர் ஜோசப் கூறுகிறார். "தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது நன்மை பயக்கும்," என்றார் அவர். போதுமான அளவு தூங்குவதும் மிகவும் முக்கியம். இறுதியாக, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன. மருந்து உதவுமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும். https://www.bbc.com/tamil/articles/cd1786jrzj2o
-
இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
05 APR, 2024 | 10:07 AM மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கைகடற்படையினர் அடிக்கடி கைதுசெய்கின்றனர். மேலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலைசெய்யப்படுகின்றனர். ஆனால், படகுகளை ஓட்டிச் செல்லும் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், படகுகளையும் இலங்கை அரசு விடுவிப்பதில்லை. தற்போது 6 மாத சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களையும், 4 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், 2 நாட்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால், தங்களின் விசைப்படகுகளில் கருப்புக் கொடியை ஏற்றவும் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/180481