Everything posted by ஏராளன்
-
முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
மதுரை: உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை அருகே முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த முதியவர்கள் ரீல்ஸ் வீடியோ உருவாக்குவது எப்படி? சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது எப்படி? அதற்காக எவ்வாறு தயாராகின்றனர்? முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளின் ரீல்ஸ் டிரெண்டானது எப்படி? மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட திருநகர் பகுதியில் அடைக்கலம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் கணவர் அல்லது மனைவி, குழந்தையை இழந்த மற்றும் சொந்தகளால் கைவிடப்பட்ட 27 முதியவர்கள் உள்ளனர். கடந்த 2020 ஆண்டு கொரோனா காலத்தில் அடைக்கலம் முதியோர் இல்லம் துவங்கப்பட்டு கொடையாளர்களிடமிருந்து நிதியைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கிருக்கும் தாத்தா, பாட்டிகளின் நடனத்திற்கு இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரீல்ஸ் வீடியோ துவங்கியது எப்படி? தாத்தா, பாட்டி வீடியோவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் முதியோர் இல்லப் பராமரிப்பாளர் வி.நாகலட்சுமி. இது பற்றி பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது இல்லத்தில் அனைத்து முதியோரையும் சேர்ப்பது கிடையாது. கணவன், குழந்தையற்ற மற்றும் குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் என 27 பேரை பராமரித்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய முதியோர்களுக்கு தன்னார்வலர்கள், மக்கள் உணவு அளிப்பது மற்றும் அது தொடர்பான காணொளிகளை வீடியோவாக பதிவு செய்து எங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டோம். இங்குள்ள சில முதியவர்கள் காய்கறி தோட்டம் அமைத்து அசத்தினர். அதனையும் வீடியோவாக பதிவு செய்தோம். ஆனால் அதற்கு பெரிய அளவிலான பார்வையாளர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை", என்கிறார் அவர். ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வையாளர்கள் எட்டியது "எங்களது இல்லத்திற்கு வரும் தன்னார்வலரான கல்லூரி மாணவர் அருண்ராஜ் என்பவர் வைரலாக இருந்த "பொதியை ஏற்றி வண்டியில" என்கிற கிராமியப் பாடலின் காணொளிக்கு எங்கள் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியை நடனமாடப் பயிற்சிக் கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த காணொளி லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதனை முதியோர்களிடம் காண்பித்தபோது அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். எப்போது நடனம் ஆடுவோம் எனக் கேட்கத் துவங்கினர்", என்றார் நாகலெட்சுமி. சமூக வலைதளத்தால் கிடைத்த உதவிகள் "எங்களது தாத்தா பாட்டிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து எங்களது இல்லத்திற்கு ஒரு வேளைக்குத் தேவையான தொகையை பலர் அனுப்ப துவங்கினர். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சில படங்களின் விளம்பரத்திற்காக எங்களது தாத்தா - பாட்டியை வீடியோ எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதற்கு சிறு தொகையும் கொடுத்தனர். அந்தப் பணத்தில் முதியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தினோம்", எனக் கூறுகிறார். இந்த முதியோர் இல்லத்தில் பலர் தங்களுடைய திருமண நாள், பிறந்த நாளை கொண்டாட வருகை தருகின்றனர். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு உணவை பரிமாறி மகிழ்ச்சியடைகின்றனர். முதியோர்களிடம் வாழ்த்துகளைப் பெற்று ஒரு வேளை உணவுக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுக் கொள்கின்றனர். முதியவர்கள் மதிய நேரத்தில் சிறிது நேரம் தொலைக்காட்சியில் தொடர்களை பார்த்து தங்களது பொழுதைக் கழிக்கின்றனர். மாலை நேரத்தில் கோழிகள் பராமரிப்பு, கிளியிடம் விளையாட்டு என சுறுசுறுப்பாக மாறி நடனமாடுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். முதியோர் இல்லத்தின் பின்பகுதியில் இருக்கும் இடத்தில் தாத்தா பாட்டிகள் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். அவர்களுக்கு நாகலெட்சுமி, கல்லூரி மாணவர் அருண்ராஜ் ஆகிய இருவரும் பயிற்சி அளிக்கின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்ததால் இங்கே வந்துவிட்டேன் என்கிறார் ஆர். ராக்காயி. பிபிசியிடம் பேசிய அவர் , "தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எனது மகன் விபத்தில் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் எனது கணவரும் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். அங்கு இருக்கக் கூடிய எனது உறவினர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை. அதனால் கிளம்பி இங்கு வந்து விட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இல்லத்தில் வசித்து வருகிறேன். இங்கே எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். நடனம் ஆடுவதால் மகிழ்ச்சியாக இங்கே நிம்மதியுடன் இருக்கிறேன்", என்றார். 'கொரோனாவால் வாழ்க்கையே மாறிப் போச்சு' மகன், மகள் இருந்தும் ஐந்து ஆண்டுகளாக இல்லத்தில் தங்கி இருப்பதாக கூறுகிறார் எஸ்.மாரியப்பன். "எனது மனைவி 2003-ல் இறந்து விட்டார். நான் எனது மகன் கோவையில் பணிபுரிந்து நிறுவனத்தில் நானும் பாதுகாவலராக பணியில் இருந்தேன். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் வயதானவர்களை வேலையில் இருந்து நீக்கினார்கள். அதில் எனக்கும் வேலை போனது. அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் எனது மருமகளுக்கு விருப்பமில்லை. மகளின் வீட்டில் தங்குவதற்கு வசதியுமில்லை. எனவே, நான் இங்கே வந்துவிட்டேன். எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கேதான் இருந்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஆடுகிறேன். நடனமாடுவது எனக்கு பிடித்து இருக்கிறது", என்றார். 'உறவினர் என்னை அழைத்தாலும் போக மாட்டேன்' "எனது மனைவி இறந்த பிறகு நான் இந்த இல்லத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னை எனது அண்ணன் தான் இங்கே சேர்த்துவிட்டார். வீட்டில் நான் நடனமாடுவேன். அந்த பழக்கத்தில் இங்கே நடனமாடுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனது அண்ணன் தம்பிகள் அதனைப் பார்த்துவிட்டு வரும்போது நன்றாக இருப்பதாக கூறுவார்கள் இங்கு இல்லத்திற்கு எங்களை பார்க்க வரும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ச்சி அடைவேன். உறவினர்கள் என்னை மீண்டும் அழைத்தாலும் நான் போக மாட்டேன். இங்கேயே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்", என்றார் ராஜகோபால் 'தப்புத்தப்பாக நடனம் ஆடுவோம்' "எனது கணவருடன் 40 ஆண்டுகள் வாழ்ந்தேன். அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மகனுக்கு திடீரென மனநல பாதிப்பு ஏற்பட்டது. அவனை ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு தர்காவிற்கு அழைத்துச் சென்றும் பலன் இல்லை. தற்போது அவன் சாலைகளில் சுற்றி திரிகிறான். என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனது மகள் வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் இங்கே வந்துவிட்டேன். இங்கே உணவு, உடை தவிர அதிர்ஷ்டமாக நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது", என்றார் பிரேமா "நாங்கள் நடனத்தை தப்புத்தப்பாக ஆடுவோம். ஆனாலும் அவர்கள் எங்களுக்கு பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள்" என்கிறார் அவர். 'முதியோரை துன்புறுத்துவதாக விமர்சனம்' வீடியோவில் முதியோரை நடனமான வைத்து சிரமப்படுத்துவதாக விமர்சனம் வந்ததாக கூறுகிறார் தன்னார்வலர் க. அருண்ராஜ். பிபிசியிடம் பேசிய அவர், "இங்கே இருக்கும் முதியவர்கள் அனைவரும் சாலை ஓரங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் கிடைத்துள்ளது. ஆனால் மன மகிழ்ச்சி மற்றும் உடல் நலத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தில், நடனமாட வைத்து அதனை பதிவேற்றம் செய்தோம். துவக்கத்தில் அவர்களை துன்புறுத்துவதாக எங்களை விமர்சனம் செய்தனர். ஆனால், இது அவர்களுக்கு ஒரு மனதில் புத்துணர்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது என்பதை நாங்கள் விளக்கினோம். தொடர்ந்து வீடியோக்கள் அதிகம் பார்வையாளர்களை எட்டியது", என்றார் ரீல்ஸ் வீடியோ உருவாவது எப்படி? தொடர்ந்து பேசிய அவர், "தாத்தா பாட்டிகளை வைத்து நடனமாட வைப்பது மிகவும் கடினமான செயல். குழு நடனமாக இருந்தால் ஒரு வீடியோவை எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால், அவர்கள் நாம் சொல்லிக் கொடுக்கும் நடன அசைவுகளை எளிதில் மறந்து விடுவார்கள். மீண்டும், மீண்டும் சொல்லிக் கொடுத்து வீடியோவை எனது செல்போனில் எடுத்து, எடிட் செய்து, அதனைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறோம். இது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை வைத்து எடுத்த வீடியோக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கணினியில் காண்பிக்கும் போது தாத்தா பாட்டிகள் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர்", என்றார். இந்த தாத்தா பாட்டிகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் சமீப நாட்களுக்கு முன்பாக ஒரு லட்சம் பின் தொடர்பவர்களை எட்டியதை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c4nxjxj1ynvo
-
புதனும் புதிரும்
5ஆம் பகுதியும் வாசித்துவிட்டேன் அண்ணை.
-
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைக்க கத்தார், ஜோர்தான் முயற்சி; நாளை இறுதிப் போட்டி Published By: VISHNU 09 FEB, 2024 | 10:57 PM (நெவில் அன்தனி) தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ணம் கத்தார் 2023 இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கவுள்ள கத்தாரும் ஜோர்தானும் சம்பியன் பட்டத்தை சூடி வரலாறு படைக்க முயற்சிக்கவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், கிண்ணத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது. மறுபுறத்தில் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வென்ற வரலாறு படைக்க எண்ணியுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்றும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. கத்தார் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர்கள் இடமிருந்து வலமாக: அல்மோயிஸ் அலி, அக்ரம் அலி, ஹசன் அல் ஹைதோஸ் ஏனெனில் ஆசிய கண்டத்தில் முதலாவது மகுடத்தை ஜோர்தானுக்கு பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் ஹீசெய்ன் அம்மூடா எதிர்பார்த்துள்ளார். அதேவேளை, கத்தார் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதன் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் திகழ்கிறார். அத்துடன் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைய கத்தார் முயற்சிக்கவுள்ளது. கத்தார் அணியினர் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) - 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கத்தார் வெற்றிகொண்டிருந்தது. முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது. ஜோர்தான் அணியில் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரதான வீரர் இடமிருந்து வலமாக யஸான் அல் நய்மாத், மூசா அல் தமாரி, யஸான் அல் அராப் ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கத்தாருடன் விளையாடிய சிநேகபூர் போட்டியில் ஜோர்தன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்தார். ஜோர்தான் அணியினர் இதேவேளை, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள கத்தார், சிறந்த நிலையில் இருக்கிறது. இம் முறை இறுதிப் போட்டியில் தனது அணி அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கத்தார் பயிற்றுநர் மார்க்ஸ் லோப்பெஸ் நம்பிக்கை வெளியிட்டார். https://www.virakesari.lk/article/176006
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து சாதனை; இலங்கையின் வெற்றிக்கு மத்தியில் ஆப்கனும் சாதனை Published By: VISHNU 09 FEB, 2024 | 11:32 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த சாதனைமிகு இரட்டைச் சதத்தின் உதவியுடன் 42 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் சார்பாகவும் 6ஆவது விக்கெட்டில் இணைப்பாட்ட சாதனை நிலைநாட்டப்பட்டபோதிலும் இலங்கையின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியாமல் போனது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களைக் குவித்தது. பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 210 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக முதலாவது இரட்டைச் சதத்தை விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டைச் சதம் குவித்த 10ஆவது வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார். சச்சின் டெண்டுல்கார்தான் முதன் முதலில் சரவ்தேச ஒருநாள் கிரிக்கேட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்தவர். அவரைத் தொடர்ந்து விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கேல், மார்ட்டின் கப்டில், பக்கார் ஸமான், இஷான் கிஷான், ஷுப்மான் கில், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அவர்களுக்கு அடுத்து பெத்தும் நிஸ்ஸன்கவும் இதே வரிசையில் இரட்டைச் சதம் குவித்து அசத்தினர். ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். அத்துடன் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். அவிஷ்க பெர்னாண்டோவுடன் 158 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த பெத்தும் நிஸ்ஸன்க, 3ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் மேலும் 120 ஓட்டங்களை சதீர சமரவிக்ரவுடன் பகிர்ந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றனர். அணித் தலைவர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் பரீத் அஹ்மத் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் 5 விக்கெட்களை வெறும் 55 ஓட்டங்களுக்கு இழந்த ஆப்கானிஸ்தான் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அஸமத்துல்லா ஓமர்ஸாய், மூத்த அனுபசாலி மொஹமத் நபி ஆகிய இருவரும அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 242 ஓட்டங்களைக் பகிர்ந்து இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர். மொஹமத் நபி தனது 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் அஸமத்துல்லா ஓமர்ஸாய் கன்னிச் சதத்தைப் பெற்றார். சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானின் அவர்கள் இருவரும் அதிசிறந்த இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானின் 6ஆவது விக்கெட்டுக்கான அதி சிறந்த இணைப்பாட்டமாகவும் இது அமைந்தது. மொஹமத் நபியின் விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் வீழ்த்தியதன் மூலம் இணைப்பாட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 256 ஓட்டங்களே ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த இணைப்பாட்டமாகும். மொஹமத் நபி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். மொஹமத் நபிக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 149 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமலிருந்தார். பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/176009
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
தொடருங்கோ பேராசானே...
-
அயோத்தி இராமர் கோயிலுக்கு செல்லும் நாமல்!
இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார் ! Published By: DIGITAL DESK 3 10 FEB, 2024 | 02:22 PM இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/176035
-
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை
ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் - ஜனாதிபதி Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 01:15 PM ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம். அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும். இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும். மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும். இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம். சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176033
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
காசாயுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அதன் செல்வாக்கிற்கு பாதிப்பு – ஜனாதிபதி கருத்து Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 11:56 AM காசா யுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அந்த நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது பாதிக்கப்படலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீன, ரஸ்ய, ஈரானிய மூலோபாயங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை மிகச்சரியான தாக்குகின்றன அமெரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன எனவும ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் காசா யுத்தம் கூடிய விரைவில் முடிவிற்கு வரவேண்டும். அதன் பின்னர் ஐந்து வருடங்களிற்குள் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவேண்டும் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இடம்பெறுகின்ற ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தமும் அதன் பின்னரான மேற்குலகின் தடைகளும் வளமிக்க செழிப்பான பொருளாதாரம் சீனாவிலும் மேற்கு இந்து சமுத்திரத்திலும் புதிய சந்தைகளை கண்டறிய உதவியுள்ளது. உதாரணமாக ரஸ்யாவின் கச்சா எண்ணெய் வளைகுடாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றது. துபாய் தற்போது உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களின் நிதிசந்தையாக மாறியுள்ளது. லண்டனின் இடத்தை அது கைப்பற்றியுள்ளது. ரஸ்யா ஈரானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கும் முக்கிய நாடாக ஈரான் காணப்படுகின்றது. ரஸ்யா, தென்னாபிரிக்கா, மியன்மார் போன்ற இந்துசமுத்திர நாடுகளுடன் கடல்சார் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையில் பிளவினை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்களிப்பை செய்தது. ஈரானும் அதன் சகாக்களும் தற்போது மேற்காசியாவில் முக்கியமானவர்களாக மாறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176029
-
திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் - இந்தியா ஆலோசனை
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்த ஆலோசனையை கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு 10 FEB, 2024 | 02:30 PM இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். https://www.virakesari.lk/article/176032
-
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்
10 FEB, 2024 | 03:14 PM வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனது 72வது வயதில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும், இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப் பட்டதாரி ஆனார். யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளர் ஆனார். மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றினார். கலை இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவரது ஒரு மகனான பரணிதரன் கடந்த சில ஆண்டுகளாக ஜீவநதி எனும் இலக்கிய மாத சஞ்சிகையினை வெளியிட்டு வருகிறார். கலாமணியின் தந்தையார் தம்பிஐயா புகழ்பூத்த அண்ணாவியார் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176045
-
வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது
10 FEB, 2024 | 03:12 PM வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 வயதுடையவர்களாவர். கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காரானது அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை சேவை நிலையம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/176041
-
பாகிஸ்தானில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் - மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தம்
பாகிஸ்தான் தேர்தல்: அதிக இடங்களில் வென்ற இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் உள்ள வாய்ப்புகள் பட மூலாதாரம்,REUTERS 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வியாழக்கிழமையன்று நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறி, தனது ஆதரவாளர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவளித்து தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருபுறம், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்களைத் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரையிலான தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களின் மகத்தான வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசியுள்ளார். இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரை வெளியிடப்பட்டுள்ளது. அவரது குரலில் வெளியாகியுள்ள அந்த அறிக்கை பிடிஐ மற்றும் இம்ரான் கானின் எக்ஸ் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இம்ரான் கான் என்ன பேசினார்? பட மூலாதாரம்,IMRAN KHAN/X அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் அந்த அறிக்கையில், “வாக்களிப்பதன் மூலம் உண்மையான சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளீர்கள். 2024 தேர்தலில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் வாக்குகளால் லண்டனின் திட்டம் தோல்வியடைந்துள்ளது,” என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குறித்து இம்ரான் கான் பேசியபோது, “30 தொகுதிகளில் பின்தங்கியிருந்த போதிலும் வெற்றி உரை நிகழ்த்தப்பட்டதாக” கூறினார். இம்ரான் கான், “மோசடி தொடங்குவதற்கு முன்பு, நாம் 150 இடங்களை வென்றிருந்தோம்,” என்று கூறினார். படிவம் 45இன் தரவுகள்படி, நாம் 170 தொகுதிகளை வென்றுள்ளோம் என்றார். இருப்பினும் இதுவரையிலான முடிவுகளின்படி, இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். பிடிஐ கட்சி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், அவர்கள் தரப்பில் அதுகுறித்த எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. இம்ரான் கான் தனது கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் வாக்குகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்ட வீடியோவில் இம்ரான் கானின் சொந்தக் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,EPA கடந்த வியாழனன்று பாகிஸ்தானில் 266 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், பிடிஐ கட்சியை ஆதரித்த 84 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வேட்பாளர்கள் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 51 இடங்களிலும் மற்ற வேட்பாளர்கள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை வெற்றிபெற்றுள்ள இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்களில், பிடிஐ கட்சியின் தலைவர் பாரிஸ்டர் கௌஹர் அலி கான், மூத்த துணைத் தலைவர் லத்தீப் கோசா, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர், கட்சி உறுப்பினர் அலி அமின் கந்தாபூர் ஆகியோரும் அடக்கம். இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தேர்தல் ஆணையம் ரத்து செய்து, அவரகளது தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். தேர்தல் ஆணையத்தின் முடிவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பிடிஐ வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல் வெவ்வேறு சின்னங்களின் கீழ் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டதற்கு இதுவே காரணம். இந்தத் தடைகளை மீறியும் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. சுயேட்சை வேட்பாளர்களுக்கு மற்ற கட்சிகள் அழைப்பு பட மூலாதாரம்,EPA தேர்தல் சட்டங்களை மேற்கோள் காட்டி, தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளில் சேர வேண்டிய தேவை சட்டப்பூர்வமாக இல்லையென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது, அவர்கள் விரும்பினால் தேசிய அல்லது மாகாண சபையில் சுதந்திரமான நிலையிலேயே இருக்க முடியும். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ஆய்வாளர் ரஃபியுல்லா காக்கரின் கூற்றுப்படி, ஒரு சுயேட்சை வேட்பாளரின் அரசியல் கட்சி இணைவது குறித்த நோக்கம் அவரது அரசியல் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது, ஓர் அரசியல் சித்தாந்தத்துடன் தன்னை இணைத்துக்கொள்வது, நாடாளுமன்றத்தில் தீவிரமாகப் பங்கு வகிப்பது ஆகியவற்றைப் பொறுத்தது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, இந்த வேட்பாளர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும். அதன்போது அவர்கள் அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று அவர் பிபிசியிடம் கூறினார். தேர்தல் ஆணைய விதிகளின்படி, சுயேட்சை வேட்பாளர்கள், வாக்குச் சீட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள கட்சியில் மட்டுமே சேர முடியும். “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி செயல்படவில்லை. எனவே இந்த சுயேட்சை வேட்பாளர்கள் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பெரிய சவாலாக இருக்கும்” என்று ரஃபியுல்லா காக்கர் கூறுகிறார். தேர்தலுக்கு முன், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள், தாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். சுயேட்சை வேட்பாளர்களுக்கு நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ அழைப்பு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பல மணிநேரம் தாமதத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியது. இதுவரை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிடிஐ கட்சி கைபர் பக்துன்க்வாவிலும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி பஞ்சாபிலும் முன்னிலையில் இருக்கின்றன. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சிந்து மாகாணத்தில் முன்னிலை வகிக்கிறது. கைபர் பக்துன்க்வாவில் சுயேட்சை வேட்பாளர்களின் வியக்கத்தக்க வெற்றிக்குப் பிறகு, அவர்களுக்கு இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து தங்களுடன் இணைவதற்கு வாய்ப்புகள் வருகின்றன. சுயேட்சை வேட்பாளர்களை பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணையுமாறு பிலாவல் பூட்டோ அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்களைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, “இதில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். சுயேட்சை வேட்பாளர்கள் பிடிஐ-இல் சேர அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக அவர்கள் விரும்பினால் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சிறிய கட்சியுடன் கூட்டணியை உருவாக்கலாம்,” என்று கூறினார். தற்போது பாகிஸ்தான் ஒரு ‘பிளவுபட்ட ஆணையை’ நோக்கி நகர்வதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். “வடக்கு பஞ்சாபில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றாலும், மத்திய பஞ்சாபில் தோல்வியடைந்து வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரிஃப் 80 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 50 அல்லது 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் இணைந்தால் அது கட்சியின் பலத்தை அதிகரிக்கும்,” என்று கூறுகிறார். இந்தக் குழப்பங்களுக்கு நடுவில், நவாஸ் ஷெரிஃப் என்.ஏ-15 மன்செரா தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான ஷாஜாத் முகமது கஸ்டஸ்ப் கானிடம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். மற்றொருபுறம் அவர் லாகூரில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்ந்தெடுக்க முடியுமா? பட மூலாதாரம்,EPA சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியுமா எனக் கேட்டபோது, அவர்களால் அவ்வாறு செய்ய முடியும் என்றார் ரஃபியுல்லா காக்கர். பாகிஸ்தானில் 266 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தங்களுக்கு 134 இடங்கள் இருந்தால், அதை முழுகையாகச் செய்ய முடியும் என்கிறார் அவர். எப்படியிருப்பினும், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதமரைத் தேர்வு செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. https://www.bbc.com/tamil/articles/ck56131e0kyo
-
புதனும் புதிரும்
4ஆம் பகுதி இப்பதான் கண்ணில பட்டது. கிட்ட கிட்ட வந்திட்டுதோ பொலீஸ்?! தொடருங்கோ ஐயா.
-
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா: பல கோடி இந்தியர்களின் பசிப்பிணி தீர்த்த பசுமைப் புரட்சியின் சிற்பி
பட மூலாதாரம்,MSSRF MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 28 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 (பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கட்டுரை மறு பகிர்வு செய்யப்படுகிறது) இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த இவர், சர்வதேச அளவில் தனது வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்பட்டவர். சுதந்திர இந்தியாவில் வேளாண்மை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட, பங்களிப்புச் செய்த விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் மிக முக்கியமானவர். 60களிலும் 70களிலும் இந்தியாவின் பசியைப் போக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை. இந்தியா சுதந்திரமடைந்தபோது 1943ஆம் ஆண்டின் வங்கப் பஞ்சம் ஏற்படுத்திய வடு மாறாமலேயே இருந்தது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விவசாய ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த முக்கியமான காலகட்டத்தில்தான் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்ற எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வுப் பணிகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்தன. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழங்களில் தனது படிப்புகளை முடித்த சுவாமிநாதன், 1947ல் மரபியல் மற்றும் தாவரப் பெருக்கம் குறித்த படிப்பிற்காக இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில் இணைந்தார். 1949ல் மரபணு குறித்த தீவிர ஆராய்ச்சிப் பிரிவான சைடோஜெனிடிக்ஸில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இதற்கு நடுவில் இந்திய காவல் பணி தேர்வில் தேர்ச்சியடைந்தாலும்கூட, அவருக்கு நெதர்லாந்தில் மரபணுவியல் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் இந்திய காவல் பணிக்குப் பதிலாக மரபணுவியல் படிக்கும் வாய்ப்பைத் தேர்வுசெய்தார். இதற்குப் பிறகு கேம்ப்ரிட்ஜில் தனது பி.எச்டி பட்டத்தையும் பெற்றார். படிப்புகளை முடித்த பிறகு, 1954ல் இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியா ஒரு மிகப் பெரிய உணவு நெருக்கடியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய அளவில் கோதுமையை பிஎல் - 480 ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்துவந்தது. பட மூலாதாரம்,MSSRF MEDIA அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லாக் ஒரு குட்டை ரக கோதுமையை உருவாக்கியிருந்தார். அவரைத் தொடர்புகொண்ட எம்.எஸ். சுவாமிநாதன், அதன் மாதிரிகளைக் கோரினார். 1963ல் இந்தியாவுக்கு வந்த போர்லாக், பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். அந்தக் குட்டை ரக கோதுமை இந்தியாவுக்கு பலனளிக்கும் எனத் தோன்றியது. ஆகவே அவற்றைத் தர ஒப்புக் கொண்டார். விரைவிலேயே நேரு மரணமடைந்துவிட, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றார். எஃகு, சுரங்கம், கனரக பொறியியல் துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் விவசாயத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இப்படித்தான் இந்திய பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து ஊன்றப்பட்டது. உலகின் பிச்சைப் பாத்திரம் என்று 1960களில் கேலிசெய்யப்பட்ட இந்தியாவை, உலகின் உணவுப் பாத்திரம் என்று அழைக்கும் வகையில் மாற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்கிறார் அவருடைய மாணவரும் சக விஞ்ஞானியுமான சி.ஆர். கேசவன். "எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு மிகச் சிறந்த அடிப்படை அறிவியலாளர். அவருக்கு விவசாய அறிவியல் மட்டுமல்ல, பல துறைகளிலும் நிபுணத்துவம் இருந்தது. வெளிநாடுகளில் அவருக்கு பேராசிரியராக வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவர் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார். இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகு, நிறைய அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, சைட்டோ ஜெனிடிக்ஸிலும் கதிரியக்க உயிரியலிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1960களின் இந்தியாவுக்கு நிறைய உணவு தானிய தேவை இருந்தது. இந்தியர்கள் புழுக்களைப் போல பெருகி வருவதால் நாம் நம் தானியங்களை வழங்கி அவர்களைக் காப்பாற்றிவிட முடியாது என பல அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள். பசியோடு இருந்த இந்தியா உலகம் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டது. இந்தியா உலகின் பிச்சைப் பாத்திரமாக வர்ணிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்தார். மரபணு மாற்றத்தால் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய கோதுமை முதலில் உருவாக்கப்பட்டது. பிறகு அரிசி உருவாக்கப்பட்டது. 1967ல் இது துவங்கியது. சில ஆண்டுகளிலேயே நிலைமை மாறியது. உலகின் பிச்சைப் பாத்திரமாக இருந்த இந்தியா, உலகின் உணவுக் களஞ்சியமாக மாறியது" என்கிறார் சி.ஆர். கேசவன். பட மூலாதாரம்,MSSRF MEDIA மரபணு மாற்றப்பட்ட குட்டை ரக கோதுமை, கூடுதல் விளைச்சலை அளிக்கும் என பரிந்துரைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். ஆனால், அந்த காலகட்டத்தில் அரசுக்குள்ளிருந்தும் வெளியிலும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் புதிய ரகம் இந்தியச் சூழல்களைத் தாங்குமா, பெரிய அளவில் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. விவசாயிகளிடமும் தயக்கம் இருந்தது. இதையடுத்து ஒரு சிறிய இடத்தை இந்தக் கோதுமையை விளைவித்துக் காட்டினார் சுவாமிநாதன். இதையடுத்து இதனைப் பரவலாக பயிரிட விவசாயிகள் முன்வந்தனர். முதற்கட்டமாக பஞ்சாபிலும் ஹரியானாவிலும் இவை பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே இதற்கு நல்ல பலன் இருந்தது. பஞ்சாபில் 1965-66ல் 33.89 லட்சம் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது. "ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. பசுமைப் புரட்சியால் களஞ்சியங்களில் தானியங்கள் குவிந்தன. ஆனால், அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. ஆகவே மக்களின் பசி தீரவில்லை. இந்த முரண்பாட்டைத் தீர்க்க ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தார். பசியைத் தீர்க்க பசுமைப் புரட்சி மட்டும் போதாது என்பதை உணர்ந்தார். மேலும், பசுமைப் புரட்சி ஒரு நீடித்து நிற்கக்கூடிய வழிமுறை அல்ல என்பதையும் அவர் கணித்தார். 80களிலும் 90களிலும் இதற்கென அவர் சில வழிகளை முன்வைத்தார். அதுதான் Evergreen Revolution என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில், அதிக அளவில் ரசாயனங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தத் தேவையில்லை" என்கிறார் சி.ஆர். கேசவன். பட மூலாதாரம்,MSSRF MEDIA 1966 ஜூலையில் இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக எம்.எஸ். சுவாமிநாதன் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அது வேகமாக விரிவடையத் துவங்கியது. ஆறு பிரிவுகளுடன் இயங்கிவந்த அமைப்பு, 23 ஆய்வுப் பிரிவுகளைக் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது. அரிசி, கோதுமை, தானியங்கள், விவசாயத்தில் அணு ஆய்வு, தண்ணீர் தொடர்பான தொழில்நுட்பம் என மிகப் பெரிய அளவில் அந்த அமைப்பின் ஆய்வுகள் விரிவடைந்தன. வேளாண் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலின் தலைமை இயக்குநராகவும் மத்திய அரசின் செயலராகவும் 1972ல் எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். 1979ல் மத்திய அரசின் முதன்மைச் செயலராகவும் ஆனார் சுவாமிநாதன். இதற்கு அடுத்த ஆண்டு மத்திய திட்டக் குழுவில் நியமிக்கப்பட்டார். I987ல் அவருக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த நிதியை வைத்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிலையத்தை உருவாக்கினார். "உணவு உற்பத்தி அதிகரித்த பிறகு, அவற்றை மக்கள் வாங்கும் அளவுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் அவர். இந்தக் காரணத்திற்காகவே எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனை எம்.எஸ். சுவாமிநாதன் உருவாக்கினார். இதன் மூலம், பல கிராமங்களில் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சியளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்" என்கிறார் சி.ஆர். கேசவன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அறிவியலை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்று, அறிவியலை வைத்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றவர் எனலாம் என்கிறார் கேசவன். பட மூலாதாரம்,MSSRF MEDIA "எம்.எஸ். சுவாமிநாதன், இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் மிகச் சிறந்த மனிதரும்கூட. தன்னுடைய நிலைப்பாடுகளோடு மாறுபடும் கருத்துகளையும் கவனிக்கக்கூடியவர். அதுதான் அவருடைய சிறப்பான அம்சம்" என்கிறார் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய விவசாயம் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் மூத்த பத்திரிகையாளரான பி. சாய்நாத். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் அளித்த அறிக்கைகள் மிகமிக முக்கியமானவை என்கிறார் அவர். 2004ல் இந்திய விவசாய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் ஐந்து அறிக்கைகளை சமர்ப்பித்தது. "விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு. அது பிறகு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. அதனுடைய அறிக்கை, எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை என்றே அழைக்கப்பட்டது. இந்திய விவசாயத்தின் முதல் செயல்திட்டமாக இந்த அறிக்கையைச் சொல்லலாம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த அறிக்கையைக் கவனித்தார்கள். இந்திய விவசாயிகளுக்கு இரண்டே இரண்டு ஆங்கில வார்த்தைகள் தெரியும் என்றால், அது "சுவாமிநாதன் ரிப்போர்ட்" என்பதுதான். இந்த அறிக்கைதான் குறைந்தபட்ச ஆதார விலையை எப்படி நிர்ணயிப்பது எனக் கூறியது. அதாவது, உற்பத்திச் செலவோடு கூடுதலாக 50 சதவீதத்தை இணைந்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர். இதன் முதல் அறிக்கை 2004ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை 2006 அக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து வந்த அரசுகள் அந்தக் கமிஷனின் அறிக்கையை கொன்றுவிட்டன. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் அந்த அறிக்கையை உருவாக்கியிருந்தபோதிலும் எந்த அரசுகளுமே இந்த அறிக்கையைப் பற்றி விவாதிக்க ஒரு மணி நேரத்தைக்கூட நாடாளுமன்றத்தில் ஒதுக்கவில்லை பட மூலாதாரம்,MSSRF MEDIA எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுவோம் என்று தற்போதைய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதனை இப்போதுவரை செயல்படுத்தவில்லை. மாறாக, அதனைச் செயல்படுத்தினால், சந்தை விலைகளைத் தாறுமாறாக்கிவிடும் என்பதால், அவற்றை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது" என்கிறார் சாய்நாத். விதர்பா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவர் நேரில் கண்டபோது அழுதுவிட்டார் என்கிறார் சாய்நாத். "நான் ஒரு முறை அவரைச் சென்னையில் சென்று சந்தித்தபோது, 'நீங்கள் விதர்பா பகுதியைப் பற்றி எழுதுபவை மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன' என்றார். 'நீங்கள் அங்கு வந்து பாருங்களேன்' என்று அவரை அழைத்தேன். அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் அவருடைய ஆணையத்தின் மேலும் இரண்டு உறுப்பினர்களுடன் விதர்பாவுக்கு வந்தார். நாங்கள் முக்கியமான இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய விலாஷ்ராவ் தேஷ்முக் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்கு சாய்நாத் என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வேன் என்று கூறிவிட்டார். தற்கொலை செய்துகொண்ட 3 - 4 விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்றோம். அவருக்கு அப்போதே வயது 80க்கு மேல் ஆகியிருந்தது. இரண்டாவது வீட்டிற்குச் செல்லும்போதே அவர் அழுதுவிட்டார். முகத்தை மூடிக்கொண்டு அழுதார். இதை என்னால் மறக்க முடியாது" என நினைவுகூர்கிறார் பி. சாய்நாத். பட மூலாதாரம்,MSSRF MEDIA 2007ல் அப்போதைய மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தது. அவர் உருவாக்கிய எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நீடித்த ஆற்றல், விவசாய உற்பத்தி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பங்களிப்புச் செய்துவருகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் முன்னெடுத்த பசுமைப் புரட்சி குறித்து பிற்காலத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி நிலத்தில் ரசாயனத்தைக் கொட்டி மாசுபாடுத்தவதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினார்கள். இது குறித்து அவருடைய பார்வை என்னவாக இருந்தது? "பசுமைப் புரட்சியைப் பொறுத்தவரை, வசதியான விவசாயிகள் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று நினைத்தார். ரசாயனமும் உரமும் பெரிய அளவில் இதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்த பார்வையும் மாறியிருந்தது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்கியதில்லை. அதுதான் அவரை மிகப் பெரிய மனிதர்களில் ஒருவராக்குகிறது" என்கிறார் சாய்நாத். அதேபோல, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்தும் பிற்காலத்தில் அவர் தனது கருத்துகளை மாற்றிக்கொண்டார் என்கிறார் சாய்நாத். எம்.எஸ். சுவாமிநாதன் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மனைவி மீனா சுவாமிநாதன் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இந்தத் தம்பதிக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் என மூன்று மகள்கள். https://www.bbc.com/tamil/articles/cq5800pndepo
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் Published By: DIGITAL DESK 3 10 FEB, 2024 | 09:34 AM அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/176016
-
இந்தியா - இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை
Published By: VISHNU 09 FEB, 2024 | 11:38 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர். தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/176010
-
கைதிகளின் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை!
10 FEB, 2024 | 10:29 AM சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களமர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டிலுள்ள முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது . இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கைதியின் கைரேகைகளைப. பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்பள்ளி தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176022
-
பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா
Polappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.
-
பாகிஸ்தானில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் - மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தம்
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை - நவாஸ் ஷெரிஃப் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 பிப்ரவரி 2024, 07:56 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் நேற்று (வியாழன், பிப்ரவரி 😎 நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரிஃப் மற்றும் இம்ரான் கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின்படி, இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் உள்ளனர். ஆனால், பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான நவாஸ் ஷெரிஃப், தனது தலைமையிலான முஸ்லீம் லீக்(பிஎம்எல்-என்) கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ள அவர், “இதற்கு முன்னாலும் பாகிஸ்தானை கடினமான நேரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம். அதை மீண்டும் செய்வோம்,” என்று கூறியுள்ளார். மேலும், இம்ரான் கான் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் சுயேட்சை வேட்பாளர்களும் தன்னுடன் இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர். ஆனால், நவாஸ் ஷெரிஃப்பின் இந்தக் கருத்துக்கு பிடிஐ கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அந்தக் கட்சி, “நவாஸ் ஷெரிஃப் வெட்கமின்றிப் பேசி வருவதாக” தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், நவாஸ் இந்தத் தேர்தலைக் கைப்பற்ற முயலும் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதுவரையிலும் பிஎம்எல்-என் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் சுயேட்சை வேட்பாளர்கள் 86 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிபிசி உருது சேவை அளித்துள்ள தகவலின்படி, சுயேட்சை வேட்பாளர்கள் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது பிடிஐ கட்சியுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தனக்கு தனிப் பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள நவாஸ் ஷெரிஃப், கூட்டணி அமைத்து அரசு அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தேர்தல் பல சர்ச்சைகளுக்கிடையே பாகிஸ்தனின் தேர்தல் நேற்று (வியாழன், பிப்ரவரி 8)நடந்து முடிந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர். தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது. பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை ‘கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்தது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, நவாஸ் ஷெரீப் யார் இந்த நவாஸ் ஷெரீப்? முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டில், உடல்நிலை காரணமாக அவர் ஜாமீனுக்கு மனு செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி, சிறைபடுத்தப்பட்டுள்ள தனது பரம எதிரியான இம்ரான் கானின் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார். ஷரீப்புக்கு அரசியல் மறுபிரவேசம் ஒன்றும் புதிதல்ல. 1999-இல் நடந்த இராணுவம் அவரது இரண்டாவது பதவிக்காலத்தை கவிழ்த்த பிறகு, 2013-ஆம் ஆண்டில் சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமரானார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இம்ரான் கான் சிறைபிடிக்கப்பட்டும் ஆதிக்கம் செலுத்தும் இம்ரான் கான் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டாலும், தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தொடர்கிறார். கணிப்புகளின்படி, 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் அவரது பிடிஐ ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். சிலருக்கு, கான் ஒரு புரட்சிகரமான ஹீரோ. அவரது எதிரிகளுக்கு, அவர் அதிகார வெறிபிடித்தவர் மற்றும் ஊழல்வாதி. தேர்தலில் வென்று நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் அவர் எதிரிகளால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இப்போது ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 170-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இது அவரை தேர்தலில் இருந்து வெளியேற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தினர். https://www.bbc.com/tamil/articles/c3g0jx2zy9ro
-
கூகுள், அமேசான்: இலவச சேவைகள் மூலம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி? இதில் பயனர்களுக்கு என்ன பாதிப்பு?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ் மால்டோனாடோ பதவி, பிபிசி உலக சேவை 7 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ் மற்றும் மரியானா மஸ்ஸுகாடோ ஆகிய மூன்று கல்வியாளர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயன்றனர். இன்றைய டிஜிட்டல் சந்தை யுகத்தில் இந்தத் தளங்களின் சக்தியை விளக்கும் ஒரு கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர். இந்த தளங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த நிறுவனங்கள் நம் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் விளம்பரதாரர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெற்று அதிக பணம் சம்பாதிக்கின்றன என இந்த மூன்று கல்வியாளர்களும் கூறினார்கள். கூகுள் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் உள்ள தேடுபொறிகள்(search engine) முதலில் பயனரின் 'ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை' அதாவது வணிக விளம்பரங்களைக் காட்டுகின்றன. அவை ஆர்கானிக் முடிவுகள் எனப்படும் உண்மையான தேடல் முடிவுகள் அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது அவர்களின் கோட்பாடு. ஆர்கானிக் தேடல் முடிவுகள் பணம் செலுத்தப்படாத பட்டியல்களாகும். அவை தேடுபொறி முடிவுகள் பக்கங்களில் (SERPs) தோன்றும். இவை பயனர்கள் தேடும் சொல்லுடன் தொடர்புடையவை. இந்த வழியில், இந்தக் கோட்பாட்டை உருவாக்கியுள்ள கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் தோன்றுவதற்கு பணம் செலுத்துமாறு விளம்பரதாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, பின்னர் பயனர்களுக்கு(Users) 'மோசமான தேடல் முடிவுகளை' வழங்குகின்றன. கூகுள் மற்றும் அமேசான் செய்தித் தொடர்பாளர்கள் பிபிசி முண்டோவிடம், பயனர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதற்குப் பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட, 'அதிநவீன அல்காரிதம்'களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக, கூகுள் செய்தித் தொடர்பாளர், அவர்களின் தேடுபொறி 80 சதவீத தேடல்களில் வணிக விளம்பரங்களைக் காட்டாது என்று கூறினார். "நாய் உணவு" மற்றும் "பிரைடல் ஷூக்கள்"(Bridal Shoe) போன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே இதைச் செய்யும் என்று அது கூறியது. இருப்பினும், இந்த தளங்கள் சந்தையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை தவறாகப் பயன்படுத்துவதாக கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிம் ஓ'ரெய்லி அல்காரிதம் வருமானம் என்றால் என்ன? டிம் ஓ'ரெய்லி பிபிசி முண்டோவிடம் பேசினார். அவர், அல்காரிதத்தின் மூலமாகப் பெறப்படும் வருமானம் என்றால் என்ன? அது எப்படி நுகர்வோரின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது என்பது குறித்து விளக்கினார். இவர் கணினி துறையில் வல்லுநர். “அல்காரிதம் பற்றப் பேச வேண்டும் என்றால், அவைதான் இந்தச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கருவிகள்,” என்றார் அவர். கூகுள் மற்றும் அமேசானில் தேடல் முடிவுகளைக் காட்ட, அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிபிசி பேசிய மூன்று கல்வியாளர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் சந்தையில் பணியாற்றுவதற்கான முக்கிய விஷயம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும். அடிப்படையில், இந்தப் பெரிய இணையதளங்கள் அனைத்துமே மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்காரிதம்களை நன்கு பயன்படுத்தப் பழகியவை. “மிகப் பெரிய அளவிலான உள்ளடக்கத்தில் இருந்து நாம் விரும்புவதையும், நமக்குத் தேவையானதையும் பிரித்தெடுக்க அவை உதவுகின்றன,” என்றார் ஓ'ரெய்லி. நீங்கள் தேடும் சிறந்ததை கூகுள், அமேசான் தருகிறதா? கல்வியாளர்கள் இந்த கோட்பாட்டை "அல்காரிதமிக் ரெண்ட்ஸ் ஆஃப் அட்டென்ஷன்" (Algorithmic Rents of Attention) எனக் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால், இதுவரை கட்டுப்பாட்டு அமைப்புகள் பயனர்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்த தளங்கள் பயனர்களின் தரவை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொண்டு அவர்களின் தரவை தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு வாதம் உள்ளது. பயனர்களில் செயல்பாட்டை கண்காணிக்க அவர்களின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கவலையும் உள்ளது. ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகாடோவும் இந்த விஷயத்தைத் மறுக்கவில்லை. ஆனால், இந்த முறைகேடுகள், அந்த அல்காரிதம் எவ்வாறு நம் கவனத்தைக் கட்டுப்படுத்தி பணமாக்குகின்றன என்பதைப் பொறுத்தது என்கிறார்கள். "தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மையான பிரச்னை" என்றார் ஓ'ரெய்லி. நாம் அமேசானில் எதையாவது தேடும்போது, லட்சக்கணக்கான பொருட்களில், நாம் எதைத் தேடினோம் என்பதைக் காட்ட அல்காரிதம் அமைப்புகள் நிறைய தரவுகளைப் பயன்படுத்துகின்றன. அப்போது மக்களுக்குப் பயன்படும் சிறந்த மற்றும் மலிவான பொருட்களை அவை காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால், நம் தரவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருள். "ஆனால் சில நேரங்களில் அந்நிறுவனங்கள் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் காட்டாது. அதற்குப் பதிலாக, நிறுவனங்களுக்கு எது நல்லது? எது லாபம் தரக் கூடியது? என்பதை மட்டும் காட்டுகிறார்கள். அங்குதான் முறைகேடு நடக்கிறது,'' என விளக்கினார் ஓ'ரெய்லி. இலவச சேவை மூலம் பல ஆயிரம் கோடி கிடைப்பது எப்படி? பட மூலாதாரம்,X @ILANSTRAUSS "அல்காரிதமிக் ரெண்ட்ஸ் ஆஃப் அட்டென்ஷன்"(Algorithmic Rents of Attention) கோட்பாட்டின் படைப்பாளிகள், பயனர்களுக்குச் சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக தேடுபொறிகளை மேம்படுத்த பல ஆண்டுகளாக முயன்ற இந்தத் தளங்கள், இப்போது பயனர்களுக்கு "மோசமான முடிவுகளை" காட்டுகின்றன. அதன் மூலம் இந்தத் தளங்கள் தற்போது அதிக லாபம் தருகின்றன. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. "எங்கள் விளம்பர தர அமைப்புகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்கிறோம். எங்கள் அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், மக்களுக்குப் பயனுள்ள, பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள்," என கூகுள் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொருட்களை வழங்குவதற்காக மேம்பட்ட வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல்(Machine Learning) ஆகியவற்றில் இருந்து பயனடைவதற்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட முடிவுகளைக் காட்டுகிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான விளம்பரங்களைக் காட்டுகிறார்கள். இதனால், பிராண்டுகள்(தனியார் நிறுவனங்கள்) லாபம் ஈட்டுகின்றன,'' என கூகுளை போலவே அமேசான் நிறுவனமும் பதிலளித்தது. "டிம் ஓ’ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ், மரியானா மஸ்ஸூகாடோ ஆகியோரின் ஆராய்ச்சியானது கூகுள் தேடலில் விளம்பரம் செய்வதால் மக்கள் மற்றும் விளம்பரதாரர்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை," என கூகுள் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார். நிறுவனங்களின் இந்த விளக்கத்தை கோட்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள். அமேசானை எடுத்துக்கொண்டால், "நீங்கள் எந்தப் பொருளையும் தேடும்போது, இந்த தளம் சிறந்த மதிப்புரைகள் மற்றும் விலைகளுடன் உள்ள பொருட்களை முதலில் காட்டாது. முதலில் பணம் செலுத்திய உற்பத்தியாளரின் பொருட்களையே காட்டுகிறது” என்று உதாரணத்துடன் விளக்கினார்கள். இதன் விளைவாக, அமேசான் இன்று விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.15 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. முதலில் அவர்கள் வணிக விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக உள்ளனர். "விளம்பரதாரர்கள் புதிய வாடிக்கையாளர்களை அடைய உதவுவதில் அமேசான் மிகவும் ஆர்வமாக உள்ளது" என ஓ'ரெய்லி கூறினார். விளம்பரங்களின் விலை எப்படி உயர்ந்தது? "இப்போது அவர்கள் இந்த பெரிய வணிகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் தளத்தில் விளம்பரங்களைக் காட்ட, முதலில் பணம் செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களுக்கான இந்த விலைகளை அமேசான் படிப்படியாக அதிகரித்து வருகிறது," என ஓ'ரெய்லி விளக்கினார். ஒரு கிளிக்கிற்கான விளம்பரதாரர்களின் விலை 2018 இல் சராசரியாக $0.56 ஆக இருந்தது, 2021 இல் $1.2 ஆக உயர்ந்துள்ளது. அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பல தசாப்தங்களாக சில்லறை வணிகங்களில் விளம்பரம் ஒரு பகுதியாக உள்ளது. இந்த விளம்பரங்கள் நிகழ்நேர செயல்பாட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூகுள் கூறுகிறது. கூகுள் இந்த விலையை முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. ஆனால் இது விளம்பரதாரர்களின் சலுகைகளைப் பொறுத்தது என்று நிறுவனம் கூறுகிறது. பயனர்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES இது பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது? "அமேசானில் அடிக்கடி பார்க்கும் பொருட்களைத் தேடும்போது, பயனர்கள் எதை அதிகம் கிளிக் செய்கிறார்கள் என்ற பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். இது எங்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,'' என இக்கோட்பாட்டை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர். "அமேசானின் ஆர்கானிக் தேடுபொறி, தேடல் வார்த்தையின் அடிப்படையில் 5 முதல் 50 இடங்களில் அதிக பணம் செலுத்தியுள்ள நிறுவனங்களின் விளம்பர பொருட்கள் தோன்றுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார் டிம் ஓ'ரெய்லி. விளம்பரத்திற்கு பணம் செலுத்தும் பொருட்களின் விலைகள் சராசரியாக 17 சதவீதம் அதிகமாக இருந்ததாக அவர் கூறினார். "குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கும், சிறந்த விலையில் பொருட்களைப் வாங்குவதற்கும் நீங்கள் தேடுபொறிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அமேசான் கூறுகிறது. ஆனால், இது உங்களை அதிக விலையுள்ள பொருட்களை வாங்க வைக்கும் என்று ஓ'ரெய்லி விமர்சித்துள்ளார். ஓ'ரெய்லி கூறுகையில், பல ஆண்டுகளாக, குறிப்பாக கூகுள், நமக்கு முன்னால் இருப்பது சிறந்தது என்று நம்ப வைத்துவிட்டது. இது அந்தத் தளங்களுக்குத் தெரியும். அதனால்தான் பயனர்களை கிளிக் செய்ய சில பொருட்களை எங்கு காட்டுவது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று இந்த வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றனர். "வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் தேவைகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்கிறார்கள்" என்று அமேசான் கூறுகிறது. வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகடோ ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த உத்தி மிகவும் லாபகரமானது, ஆனால் நிலையற்றது என்று எச்சரிக்கின்றனர். "நிறுவனங்கள் மக்களின் தேவையை புறக்கணித்து தங்களுக்கு ஏற்றாற்போல் சேவை செய்யத் தொடங்கும் போது பணத்தை இழக்க நேரிடும்," என்றார் ஓ'ரெய்லி. இந்த கோட்பாட்டின் ஆசிரியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இது நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். மைக்ரோசாப்ட் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய போது இதுபோன்ற முயற்சிகள் பின்வாங்கின என்கிறார் ஓ'ரெய்லி. "அமேசானுக்கும் கூட, அது அதன் பயனர்களை ஏமாற்றுகிறது எனத் தெரியும்," என்றார் அவர். "வாடிக்கையாளர் அனுபவத்தைப் பற்றிய பெரும்பாலான கருத்துகள் நேர்மறையானவை. வாடிக்கையாளர்களும் எங்கள் பொருட்களை கிளிக் செய்து, அவர்கள் வணிகம் செய்தும் தளத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அந்தப் பொருட்களை பின்னாளில் வாங்குகிறார்கள்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் கூறினார். பயனர்கள் இதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்று வரும்போது, முதலில் சந்தேகத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியமான விஷயம் என்று ஓ'ரெய்லி கூறுகிறார். இந்த தளங்களில் நீங்கள் பார்க்கும் முதல் பொருள் அல்லது இணைப்பு சிறந்தது என்று நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cz7krw53y8go
-
தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகம் - வெறிட்டே ரிசர்ச் ஆய்வு தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகமாக உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வெறிட்டே ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார கட்டணத்தில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மின்சார விநியோக செலவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள குடும்பங்கள், ஏனைய தெற்காசிய நாடுகளில் உள்ள மின்கட்டணத்தை விடவும் 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்கட்டணத்தை செலுத்துகின்றன. மாதாந்தம் 100 முதல் 300 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் குடும்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 100 அலகு மின்சாரத்தை பெறுவதற்கு 2,078 ரூபாய் செலவிடப்படுகின்ற நிலையில் இலங்கையில் 5,280 ரூபாய் செலவிடப்படுவதாக அந்த நிறுனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்ட மின் கட்டண குறைப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கட்டண குறைப்பு 4 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மின்கட்டண சிக்கலை குறைந்த அளவிலேயே தீர்க்கும் என வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தனியார் நிறுவனமான ரிவிதனவியிடம் இருந்து 100 மொகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக குறித்த நிறுவனம் 132 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது. https://thinakkural.lk/article/291115
-
பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை! – பொலிஸ் பேச்சாளர்
பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதேவேளை, எவரேனும் ஒருவர், போலியான முறைப்பாடுகளை வழங்குவாராயின் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன், போலி முறைப்பாடுகளின் ஊடாக எந்தவொரு நபரேனும் பாதிக்கப்படுவாராயின், அது விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/291097
-
இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
Published By: VISHNU 09 FEB, 2024 | 09:13 PM உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். https://www.virakesari.lk/article/175994
-
சென்னை: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. அதில் என்ன பிரச்னை? சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று காலையில் சுமார் 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் அனுப்பப்பட்டது. அந்த மின்னஞ்சலில், "உங்கள் பள்ளிக்கூடத்தில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எந்தப் பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை எடுக்கக்கூடியவை. நேரம் குறைந்துகொண்டே வருகிறது. உடனடியாக எல்லோரையும் கட்டடத்தில் இருந்து வெளியேற்றவும். இல்லாவிட்டால் இந்தத் துயரத்தைத் தவிர்க்க முடியாது. இது ஒன்றும் வேடிக்கையல்ல. உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எல்லாக் குழந்தைகளின் உயிரும் இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. காவல்துறையை உடனடியாக அழைத்து, இந்தத் துயரத்தை நிறுத்தவும்," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் ஆறு பள்ளிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. அந்தந்தப் பள்ளிக்கூடங்களில் இருந்த மாணவர்களின் பெற்றோருக்கு செய்தி அனுப்பப்பட்டு, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து வந்து சோதனை நடத்தியது. இதற்குப் பிறகு மேலும் 7 பள்ளிகளுக்கும் இதேபோல மின்னஞ்சல் மிரட்டல் வந்தது. அங்கேயும் காவல்துறை சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தச் சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தபோதும், நகரம் முழுவதும் இந்தச் செய்தி பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவொரு பொய்யான மிரட்டல் என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை அறிவிப்பை வெளியிட்டபோதும், பதற்றம் நீங்கவில்லை. பிற்பகல் இரண்டு மணி வரை இந்தப் பதற்றம் நீடித்தது. இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னையின் கூடுதல் ஆணையர் பிரேம் சின்ஹா, ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்துதான் எல்லாப் பள்ளிகளுக்கும் மிரட்டல் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெடிகுண்டு மிரட்டலை அனுப்ப, jhonflow1@protonmail.me என்ற மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மிகச் சிக்கலான வழக்கு என்பதால், முழுமையான விவரங்களை இப்போது வெளியிட முடியாது எனக் கூறியிருக்கிறார். ப்ரோட்டோன் மின்னஞ்சல் சேவையைப் பொறுத்தவரை, முழுமையான என்க்ரிப்ஷனை (End to End encryption) பயன்படுத்தி வருகிறது. இதனால், இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். ப்ரோட்டோன் மெயிலின் அலுவலகங்கள் மற்றும் சர்வர்கள் ஸ்விட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தனியுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையானவை என்பதால், மின்னஞ்சலைப் பயன்படுத்துவோர் குறித்த தகவலைப் பெற அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே கோரிக்கைகளை அனுப்ப வேண்டியிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜிமெயில், அவுட்லுக் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பினால், உடனடியாக அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்குக் காரணம், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கின்றன. ஆகவே அவை இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அவற்றிடம் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்தால் 36 மணிநேரத்தில் தகவல்களைத் தந்துவிடுவார்கள். ஆனால், ப்ரோட்டோன் மெயில் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஆகவே, இதுபோன்ற கோரிக்கைகளை அவர்கள் பரிசீலிக்கவே மாட்டார்கள். இதனால் இன்டர்போல் மூலமாகத்தான் தகவலைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு சற்றுத் தாமதமாகிறது. இன்டர்போல் மூலம் செல்லும்போது 15 - 20 நாட்களுக்குள் தகவல் கிடைத்துவிடும்," என்கிறார் சைபர் குற்றப்பிரிவு வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். சென்னை நகர காவல்துறையின் இன்டர்போலுக்கான நோடல் அதிகாரி மூலம், இந்த மின்னஞ்சல் முகவரியின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c3gd4e8r3rro
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
Published By: VISHNU 09 FEB, 2024 | 06:51 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட முன்னைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை இலங்கை குவித்தது. அந்த மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதவானது. பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசி 10ஆவது வீரராக இரட்டைச் சதம் குவித்தார். பெத்தும் நிஸ்ஸன்க, 88 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களையும் 44 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களையும் பகிர்ந்தார். https://www.virakesari.lk/article/175999