Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 12 FEB, 2024 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இது தொடர்பில் யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும். இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம். அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள். இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு. இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். https://www.virakesari.lk/article/176204
  2. இலங்கை, மொரிஷியசில் 'யுபிஐ சேவை' அறிமுகம் - இந்தியர்கள் பணம் எடுத்துச் செல்ல தேவையில்லை பட மூலாதாரம்,FB LIVE SCREEN SHOT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 15 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல இலத்திரனியல் பண பரிமாற்று முறையான (UPI) இலங்கையில் இன்று (12) அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை மாத்திரமன்றி, மொரிஷியஸ் நாட்டிலும் இன்று இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இந்த அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர். ஆன்லைன் மூலம் இந்த அங்குரார்பண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பிரபல பணபரிமாற்று முறையான லங்கா கியூஆர் (Lanka QR) மற்றும் லங்கா பே (Lanka PAY) நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்தை 2018ம் ஆண்டு பெற்றுக்கொண்ட லங்கா கியூஆர் மற்றும் லங்கா பே நிறுவனத்துடன் இணைந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. பட மூலாதாரம்,ANI இந்திய பிரஜைகளை இலக்காக கொண்ட திட்டம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய நாட்டு பிரஜைகளை இலக்காக கொண்டு இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுபிஐ பண பரிமாற்று நடவடிக்கைகளை அவ்வாறே இலங்கையிலும் தற்போது மேற்கொள்ள முடியும். 2013ம் ஆண்டு இலங்கைக்கு 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். 2013ம் ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 844 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இவ்வாறு நாளுக்கு நாள் இலங்கைக்கு வருகைத் தரும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் பின்னணியில், இந்திய சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணத்தை இலக்குப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்திய பணத்தை டாலராக மாற்றி, இலங்கைக்கு கொண்டு வருவதுடன், இலங்கையில் அதனை மீண்டும் இலங்கை ரூபாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் இதற்கு முன்னர் காணப்பட்டது. எனினும், இந்த திட்டத்தின் ஊடாக இனி இந்திய பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லங்கா கியூ நிறுவனத்துடன் யுபிஐ கைகோர்த்துள்ள நிலையில், இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது தமது யுபிஐ கியூஆர (UPI QR) ஸ்கேன் செய்வதன் ஊடாக தமது கொடுப்பனவுகளை இலகுவாக செலுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரஜையொருவர் தனது இந்த முறையின் ஊடாக கொடுப்பனவை இலங்கையில் மேற்கொள்ளும் போது, அவரது இந்திய வங்கிக் கணக்கிலுள்ள பணம் குறைவடைந்து, இலங்கை வர்த்தகரின் வங்கி கணக்கில் இலங்கையில் ரூபாவில் அது வைப்பு செய்யப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு இடையில் இனிவரும் காலங்களில் டாலர் பயன்பாடு தேவைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயை நேரடியாகவே இலங்கை ரூபாயாக பரிமாறும் வகையிலேயே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை மார்ச் 2024க்குள் 65,000 ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. திட்ட அமலாக்கம் எப்படி? இந்த திட்டத்தின் அமலாக்கம் தொடர்பில் லங்காபே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷன்ன டி சில்வா, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார். ''இலங்கையில் 3 லட்சத்து 80 ஆயிரம் மத்திய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தற்போது லங்கா கியூஆர் முறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணபரிமாற்று முறையில் தற்போது இந்த முறை பிரபல்யமடைந்துள்ளது. இந்த கியூ ஆர் முறையில் வர்த்தகரின் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவரை காலம் இலங்கையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவுடன் கைகோர்த்துள்ளோம். இந்தியாவில் கியூ ஆர் முறையை பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். இந்த நடைமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இந்திய பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தனது இந்திய ரூபாயை பணத்தை டாலராக மாற்ற வேண்டும். அவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் அந்த டாலரை மீண்டும் இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும். இலங்கை ரூபாயை பெற்ற பின்னரே தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். இது பாரியதொரு நடைமுறையாக இருந்தது. இந்தியாவில் கோடிக்கணக்கான யுபிஐ பயனாளர்கள் இருக்கின்றார்கள். இந்திய பிரஜைகள் இனி இலங்கைக்கு வரும் போது, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டிய தேவை கிடையாது. கியூ ஆரை ஸ்கேன் செய்து, கட்டணங்களை செலுத்த முடியும். உடனடியாக இந்திய கணக்கிலிருந்து பணம் குறைவடைந்து, இலங்கை கணக்கில் இலங்கை ரூபாவில் பணம் வைப்பிலிடப்படும். பணபரிமாற்று முறையின் போது எந்தவொரு நபரும் அச்சப்பட தேவையில்லை. இதுவே பாரிய நன்மையாக காணப்படுகின்றது" என லங்கா பே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷன்ன டி சில்வா தெரிவித்தார். இலங்கையர்களுக்கான நன்மை ''இலங்கையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வங்கி கணக்குகள் இருந்த போதிலும், பெரும்பாலான வர்த்தகர்கள் அதனை பயன்படுத்துவதில்லை. அதனால், வர்த்தகர்களுக்கான வருமானம் குறித்த தகவல்கள் வங்கிக்கு தெரிவதில்லை. அதனால், பெரும்பாலான வர்த்தகர்களுக்கு வருமானம் கிடைக்கின்ற போதிலும், வங்கியினால் கிடைக்க வேண்டிய கடன் வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இதுவரை காணப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் ஊடாக வங்கிக்கு வர்த்தகர்களின் வருமானம் குறித்த தகவல்கள் தெரிய வரும். அதனால், வங்கியின் ஊடாக கிடைக்கும் சலுகைகளை இனி வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக சமூக பிரச்னைக்கு தீரவு கிடைக்கின்றது. அதேபோன்று, பணத்தை அச்சிடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாரிய பணம் செலவிடப்படுகின்றது. பணம் அச்சிடுவதற்காக தலா தேசிய வருமானத்திலிருந்து 1.5 வீதமான தொகை செல்கின்றது என கணிப்பிடப்பட்டுள்ளது. அதனை விநியோகிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதனை மீள்சுழற்சி செய்ய வேண்டும். அதனால், தலா தேசிய வருமானத்திலிருந்து பெருமளவான தொகையை செலவிடாது பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறான புதிய நடைமுறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைக்கின்றது. அதேபோன்று, சுற்றுலா பயணிகளுக்கு இனி இலங்கைக்கு வருகைத் தந்து தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள மத்திய, நடுத்தர, பாரிய வர்த்தகர்களுக்கு மாத்திரமன்றி, வர்த்தக நோக்குடன் வருகைத் தரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் இனி பல நன்மைகள் கிடைக்கும். இந்த நடைமுறை அறிமுகப்படுத்துவதன் ஊடாக இரண்டு தரப்பினருக்கும் இவ்வாறான பல நன்மைகள் கிடைக்கும்." என அவர் கூறினார். இந்தியர்கள் ஒரு முறை அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்? இந்த நடைமுறையின் ஊடாக ஒரே தடவையில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயை ஸ்கேன் செய்து, கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என லங்கா கியூ ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது. ''குறிப்பாக 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றால், ஐந்து தடவைகள் கியூஆரை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை மத்திய வங்கி ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. ஆகக் குறைந்த தொகை என்ற ஒன்று இந்த முறையில் கிடையாது. இது இலங்கைக்கு மாத்திரமே பொருத்தமானது. இந்தியா சார்பில் ஏதேனும் கொடுப்பனவு வரையறைகள் இருக்கக்கூடும். ஆனால், இலங்கையில் ஒரே தடவையில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். இதனை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து மத்திய வங்கி ஆராய்ந்து வருகின்றது. எந்தவொரு கொடுப்பனவையும் இதனூடாக மேற்கொள்ள முடியும்." என நிறுவனம் குறிப்பிடுகின்றது. இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு பொருந்துமா? ''ஒவ்வொரு படிமுறையாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, முதல் படிமுறையாக இலங்கைக்கு வருகைத் தரும் இந்திய பிரஜைகளுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது படிமுறையில் அதனை நாம் செயற்படுத்தவுள்ளோம். இலங்கை பிரஜையொருவர் இந்தியாவிற்கு செல்லும் பட்சத்தில், அவருக்கு இந்த முறையை பயன்படுத்தும் வசதி இரண்டாவது படிமுறையில் வழங்கப்படும்." என அவர் கூறுகின்றார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து பல்லாயிரம் வருடங்களாக நாணய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் இன்றும் நாணயமற்ற தொழில்நுட்ப ரீதியிலான கொடுக்கல் வாங்கலாக இரு நாடுகளுக்கும் இடையில் இன்று மாற்றம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ''இந்திய - இலங்கை உறவில் இது மற்றொரு முக்கியமான தருணமாக கருதுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் ராமர் கோயிலை திறந்து வைத்தீர்கள். அதற்கு நான் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். இந்தத் திட்டம் நமக்கு இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவை பிரதிபலிக்கிறது. நமது இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பயன்படுத்திய நாணயங்கள் இன்றும் நமது அருங்காட்சியகங்களில் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தென்னிந்திய நாணயங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அந்த உறவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதையே இன்று செய்கிறோம். எங்களுக்கு இனி நாணயங்கள் தேவையில்லை. லங்கா கியூஆர் மற்றும் NIPL இணைந்துள்ளன. அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதனால் எமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இம்முறையைப் பயன்படுத்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ள முடியும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மற்றும் இலங்கைக்கும் மும்பைக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறன. குறிப்பாக வர்த்தகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் சுமார் 400,000 வர்த்தகர்கள் தொடர்புபட்டுள்ளதாக கருதுகிறேன். எனவே, இந்திய - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இதனை அடையாளப்படுத்தலாம். எனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமரும் நானும் வெளிப்படுத்திய "தொலைநோக்கு அறிக்கையை" செயல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்மையில் பேர்த்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் நான் கலந்துரையாடினேன். இந்த வேலைத்திட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம். மேலும் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கருத்து "இந்திய பெருங்கடலில் மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பு நாளாகும். நாங்கள் எங்கள் வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இன்று இணைக்கின்றோம். இந்த ரூபே (RuPay) திட்டத்தின் ஊடாக இலங்கை மற்றும் மொரிஷியஸ் நன்மை அடையும் என எதிர்பார்க்கின்றோம். இந்தியாவின் அண்டைய நாட்டு முதல் கொள்கை என்ற அடிப்படையில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு நாடுகளுடனும் புது டெல்லியின் அதிகரித்து வரும் இருதரப்பு பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்திய சேவை தொடங்குகின்றது." என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/czd7vw9envgo
  3. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் 6 முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1. 2024.02.23ம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். 2. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 2024.02.23 ம் திகதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். 3. குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் 1500 ரூபா ஆகும். 4. வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும். 5. கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும். 6. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176197
  4. பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சட்டப்பேரவையில் தேசிய கீதத்திற்கு போதுமான மரியாதை தரப்படவில்லை என்றும் கூறி, உரையை வாசிக்க மறுத்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா? அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது. இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாஸனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். "ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும். இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று கூறினார். சபாநாயகர் இதனைச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார். இதற்குப் பிறகு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17ஐத் தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். "2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்" என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன? நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் ஆறு சதவீதத்தையும் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும். மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம், மற்ற மாநிலங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற அணுகுமுறையால், முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். இதுதவிர, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் சாதனைகளும் ஆளுநரின் உரையில் இடம்பெற்றிருந்தன. ஆளுநர் ஆர்.என். ரவியின் முந்தைய சட்டப்பேரவை சர்ச்சைகள் தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்ற பிறகு, ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை எழுவது இது இரண்டாவது தடவை. கடந்த ஆண்டும் ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த உரையில் இருந்த சில வரிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தார். சில வாசகங்களை சேர்த்தும் படித்தார். ஆனால், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசித்தார். இதற்குப் பிறகு, இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில்,"தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அவையைவிட்டு அவசரஅவசரமாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் மரபு தொடங்கியது எப்போது? மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராரும் கடலுடுத்த" எனத் துவங்கும் பாடல் அரசு விழாக்களின் துவக்கத்தில் பாடப்படும் என 1970 மார்ச் 11ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, பொது நிகழ்ச்சிகளில், அரசு விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. "ஏதோ எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென ஆளுநர் இதைச் செய்ததைப் போல இருக்கிறது. ஆளுநர் உரையின் சில அம்சங்கள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென கூறுகிறார் ஆளுநர். எந்தெந்தப் பகுதிகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல், பொத்தாம்பொதுவாக பல பகுதிகள் ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன். "தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு நல்லது அல்ல" ஆனால், இதுபோலச் செயவது தமிழ்நாட்டில் பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "உங்களுக்கு ஏற்பிருக்கிறதோ, இல்லையோ, தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க அண்ணாமலை ஏதோ முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆளுநர் இதுபோலச் செயல்படுவது பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும். இதைப் பார்க்கும் சாதாரண மக்கள், ஆளுநர் ஏன் இப்படிச் செய்கிறார், பா.ஜ.க. சொல்லித்தான் இதைச் செய்கிறாரா என்று யோசிப்பார்கள். அரசு எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் அவருடைய வேலை. முழுமையாகப் படிக்க விருப்பமில்லையென்றால், முதல் பத்தியையும் கடைசிப் பத்தியையும் வாசிக்கலாம். அதுபோல பல ஆளுநர்கள் செய்திருக்கிறார்கள். ஆளுநர் உரையையே ஏற்கவில்லையென அவர் சொல்ல முடியாது" என்கிறார் ஷ்யாம். தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 90களின் துவக்கத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான மோதல் இருந்துவந்தது. "ஆனால், அப்போதும் சென்னா ரெட்டி மரபுகளை மீறியதில்லை. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, விதிகளை மீறக்கூடிய ஆலோசனைகளை யாராவது அளித்தால் 'unbecoming of Governor' என்று கூறி அதனை மறுத்துவிடுவார் சென்னாரெட்டி" என்று நினைவுகூர்கிறார் ஷ்யாம். ஆளுநர் உரை வாசிக்கப்படுவது இதற்கு முன்பாக தவிர்க்கப்பட்டுள்ளதா? இந்தியாவில் ஆளுநர் ஒருவர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க மறுத்த சம்பவங்கள் இதற்கு முன்பு அரிதாக நிகழ்ந்திருக்கின்றன. மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த பத்மஜா நாயுடு, 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநர் உரையை வாசிக்க வந்தபோது உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர் தனது உரையை வாசிக்க முடியவில்லை. இதையடுத்து உரையின் பிரதிகள் உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் கல்கத்தா நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஆளுநர் உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டதால் அது படிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1969ல் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் சார்பில் அஜோய் முகர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அந்த ஆண்டு மார்ச் ஆறாம் தேதியன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது. அந்த ஆளுநர் உரையில் மத்திய அரசை விமர்சித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய ஆளுநரான தர்மவீரா, அந்த வரிகளைப் படிக்க மறுத்திவிட்டார். இதையடுத்து, உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டுப் படித்ததற்காக அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் துவங்குவதாக இருந்தது அவைக்கு வந்த ஆளுநர் , ஆளுநர் உரையின் 62 பக்க உரையைத் தவிர்த்துவிட்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். அத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டு ஆளுநர் வெளியேறினார். மொத்தமே 4 நிமிடங்கள்தான் ஆளுநர் அவையில் இருந்தார். 2020ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த பகுதியில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் தான் படிக்க வேண்டும் என முதல்வர் கூறுவதால், அதனைப் படிப்பதாக கூறிப் படித்தார். பட மூலாதாரம்,ANI தமிழக ஆளுநரின் விளக்கம் என்ன? இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் பின்வருமாறு.. பிப்ரவரி 9ஆம் தேதி ஆளுநர் உரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக இருந்தன. பின்வரும் அறிவுரைகளுடன் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது: தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது. மேலும், ஆளுநர் உரையானது அரசின் சாதனைகளை, கொள்கைகளை, திட்டங்களைச் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான தகவல்களை, பாரபட்சமான அரசியல் பார்வைகளைச் சொல்வதாக இருக்கக்கூடாது. ஆனால், அரசு ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டது. பிப்ரவரி 12ஆம் தேதியன்று சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திய ஆளுநர், ஆளுநர் உரையின் சில அம்சங்கள் உண்மைக்கு மாறாக இருப்பதால் அதனை வாசிக்க முடியாது என் கூறினார். சபாநாயகர் தமிழ் வடிவத்தை படிக்கும்போது ஆளுநர் முழுவதுமாக அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் வாசிக்கப்படும் என கருதி ஆளுநர் எழுந்தார். ஆனால், ஏற்கனவே இருந்த நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார். இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார். https://www.bbc.com/tamil/articles/cd1wz1ydyejo
  5. Published By: VISHNU 12 FEB, 2024 | 08:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறைக்கைதிகள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர்கள் சமூகத்துக்குப் பயனுள்ள நபர்களாக உருவாக்குவதை நோக்காகக்கொண்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் தொழில்துறை அபிருத்தி சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (12) நீதி அமைச்சில் இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கு முன்னால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் தொழில்துறை அபிவிருத்தி சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து சிறைச்சாலைகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு இந்த நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு தொழிலதிபர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுவதுடன் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் கைதிகளுக்காகத் தொழில் அபிவிருத்தி சபை மற்றும் சிறைச்சாலை திணைக்கள சான்றிதழ் வழங்கிவைக்கப்படும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176227
  6. பிறகும் ஒரு புதிரா?! உங்கள் தொடருக்கு நன்றி கவி ஐயா.
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன. “மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன” என்ற ‘இயற்கையின் தேர்வில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தார் சார்லஸ் டார்வின். அதற்கு முன் நம்பப்பட்டு வந்த கடவுள், படைப்பு, மனித தோற்றம், உயிர்களின் பரிணாமம் குறித்த அனைத்து சித்தாந்தங்களையும் இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கு பின் டார்வினின் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அறிவியல் உலகத்தால் முன்னேற முடியவில்லை. அத்தகைய மாபெரும் ஆய்வு முடிவை சார்லஸ் டார்வின் பொது உலகிற்கு கொண்டு வர 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். சொல்லப்போனால் அதை அவர் வெளியிடவே இல்லை. உண்மையில் அந்த ஆய்வு புத்தகம் வெளிவர காரணம் யார்? அதனால் ஏற்பட்ட சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் உலகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்தார். யார் இந்த சார்லஸ் டார்வின்? பிரிட்டனின் ஷ்ரூஸ்பரி நகரில் 12 பிப்ரவரி 1809ஆம் ஆண்டு வளமையான குடும்பத்தில் பிறந்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். இவரது தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி, அப்பாவோ மருத்துவர். முதலில் தனது தந்தை விருப்பப்படி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், மருத்துவம் படிக்க சென்ற டார்வின், அது பிடிக்காமல் அறிவியல் மீது ஆர்வம் கொண்டார். அங்கேயே பேராசிரியர்கள் மூலம் அறிவியல் சார்ந்து பல விஷயங்களையும் கற்றுக் கொண்டுள்ளார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பில் சேர்ந்தார். கடவுள் மீது அவ்வளவு பற்றெல்லாம் இல்லாத டார்வினுக்கு தனது உண்மையான அறிவியலை ஆய்வு செய்ய, இந்த இடம் அதிக நேரம் தந்ததால் அங்கேயே படித்து 1831ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். டார்வினின் உலகப்பயணம் 1831ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பரிந்துரைத்ததன் பேரில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்த எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. இதை தனது ஆய்வுக்கு நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட டார்வின் அடுத்த ஐந்தாண்டுகளில் 4 கண்டங்களுக்கு 3000த்திற்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டார். இந்தப் பயணத்தில்தான் உயிரிகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை அறிந்துக் கொண்டார். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்த உயிரிகளுக்கு வெவ்வேறு விதமான உடலமைப்புகள் இருப்பதை அவர் அறிந்துக்கொண்டார். 1838ஆம் ஆண்டு பயணத்தில் இருந்து திரும்பிய டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால், அவர் அதை உடனே வெளியிடவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தனது கப்பல் பயணம் குறித்த புத்தகத்தை ‘The Voyage of Beagle’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் டார்வினின் குடும்பம் அடுத்தடுத்த இறப்புகளால் நிலைகுலைந்து போயிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1831-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடுகளுக்கு எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. நிலைகுலைந்து போன டார்வினின் குடும்பம் டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். ஆனால், 1 மகன் மற்றும் இரு மகள்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர். இதற்கு காரணம் டார்வின் தனது குழந்தைகளை கண்டுகொள்ளாததும், அவர் மத நம்பிக்கைகளை பின் பற்றாததும் தான் என்று எம்மா நம்பினார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சி போர் நடந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த இறப்புகளால் டார்வினும் மனம் தளர்ந்து போயிருந்தார். இந்நிலையில் புத்தகம் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரும் இதே கோட்பாட்டை மையமாக கொண்டு தனது ஆய்வை செய்திருப்பது டார்வினுக்கு தெரிய வர இருவரும் ஒரே சமயத்தில் பிரிட்டனின் முன்னணி இயற்கை சார் வரலாற்று அமைப்பான லின்னியன் சொசைட்டிக்கு தங்களது ஆய்வறிக்கையை சமர்பிக்கின்றனர். பட மூலாதாரம்,VENKATESAN படக்குறிப்பு, விஞ்ஞானி வெங்கடேசன் கண்டுகொள்ளாத லின்னியன் சொசைட்டி ஆனால், அந்த அமைப்போ இருவது படைப்பையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முதலில் புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர். ஆர். வெங்கடேசன். டார்வினின் முதல் புத்தகம் வெளியானது குறித்து அவருடன் பேசிய போது பல புதிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவரின் தகவல்படி, “டார்வின் தனது புத்தகத்தை வெளியிடவில்லை. அவர் அந்த ஆய்வு தகவல்களை, தனது மனைவிக்கு ஒரு சிறு குறிப்போடு சேர்த்து ஒரு பழைய பெட்டியில் மூடி வைத்துவிட்டார்” “அந்த புத்தக குறிப்பின் மீது ‘Origin of Species by Natural Selection I think so’என்று குறிப்பிட்டு, அவரது மனைவிக்கு எழுதிய குறிப்பில், எனது அருமை மனைவியே, இந்த குறிப்புகளை புத்தக நிலையத்திற்கும் , நண்பர்களுக்கும் அனுப்பி விடவும்” என்று எழுதியிருந்தார் என்கிறார் ஆர். வெங்கடேசன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றத்தை டார்வின் வெளியிடவில்லை அதற்கு காரணம் மேலே சொன்னது போல டார்வினின் குடும்ப நிலை. இது குறித்து பேசிய வெங்கடேசன், “தொடர்ந்து நிகழ்ந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணம் டார்வினின் அணுகுமுறை மற்றும் மத பழக்கங்களை கடைபிடிக்காமல் இருந்ததுதான் என்று எம்மா சண்டை போட்டார். ஆனாலும், டார்வின் செய்வதும் சரி என்ற நிலைப்பாட்டில் எம்மா இருந்தார். எனவே நீ சொன்னால் அதை பிரசுரிக்க அனுப்புகிறேன் என்று சொல்லி எம்மாவே அந்த புத்தக குறிப்பை முதன் முதலில் புத்தக நிலையத்திற்கு அனுப்பினார்” என்கிறார். அவரது ஆய்வுகளை கண்டு மிரண்டு போன புத்தக நிலையம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று அந்த ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டது. குறிப்பாக அந்த ஆய்வு மக்கள் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் அறிவியலை கொண்டு சேர்த்தது என்கிறார் வெங்கடேசன். இந்த புத்தகம் வெளியான பிறகு பல்வேறு பதிப்புகளை கண்டது. இதன் ஒவ்வொரு பதிப்புகளிலும் விமர்சனங்களுக்கான பதிலையும் சேர்த்து பதிப்பித்தார் டார்வின். அப்படி இப்புத்தகத்தின் 5 வது பதிப்பில் தான் “Survival of the fittest” என்ற பதத்தை கொண்டு வருகிறார் அவர். இந்த வாசகம் தத்துவவாதி ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவருடையது. தன்னுடைய புத்தகத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் இதை கடன் வாங்கி கொண்டார் டார்வின். ஆனாலும், அதன் பொருள் தற்போதைய காலகட்டத்தில் வேறு வகையில் பயன்படுத்தப்படுவதை டார்வின் அறிந்தால் மனமுடைந்திருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை தக்கன பிழைக்கும் (Survival of the fittest) என்பதன் உண்மைப் பொருள் என்ன? சார்லஸ் டார்வின் கூற்றுப்படி இதன் அர்த்தம், ‘தக்கன பிழைத்துக்கொள்ளும்’ என்பதே ஆகும். அதாவது பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டு பொருத்திக் கொள்ளும் உயிரினமே தொடர்ந்து வாழும். இதுகுறித்து பேசிய ஆர்.வெங்கடேசன், “இது வெவ்வேறு இனங்களுக்கு பொருந்துமே தவிர, ஒரு இனத்திற்குள் இருக்கும் ஒரே உயிரிக்கு பொருந்தாது. உதாரணமாக மனிதர்களில் பலம், பணம், சமூக அந்தஸ்து பொருந்தியவர்களே பிழைப்பார்கள் என்று சொல்வது தவறு. இதை டார்வினே தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு இனம் அது வாழும் இயற்கை சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்பதே இதன் அறிவியல் விளக்கம்” என்று கூறுகிறார். டார்வின் எதிர்கொண்ட மதரீதியான தாக்குதல்கள் ஏற்கெனவே பின்பற்றி வரும் பழமையான கோட்பாடுகளை எதிர்த்து புதிய கோட்பாடு உருவாகும் போது எதிர்ப்புகள் கிளம்புவது இயல்பு. அப்படி டார்வினின் கோட்பாட்டுக்கும் எதிர்ப்பு எழுந்தாலும், கலீலியோ அல்லது டார்வினுக்கு முந்தைய ஆய்வாளர்களுக்கு நடந்த கொடுமைகள் நடக்கவில்லை என்கிறார் வெங்கடேசன். அதற்கு காரணமாக அன்றைய காலத்தில் வளர்ந்து வந்த ஜனநாயகத் தன்மை மற்றும் டார்வினுடைய சமூக நிலை ஆகியவற்றை முன்வைக்கிறார் அவர். டார்வினே தேவாலயத்தை சேர்ந்தவராகவும், இறையியல் படித்தவராகவும் இருந்தார். எனவே அங்கிருந்தே ஒருவர் வெளியே வந்து இந்த கேள்விகளை முன்வைக்கிறார் என்றே பார்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார் வெங்கடேசன். அதே சமயம் டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை. தனது குடும்பத்துடன் தேவாலயத்திற்கு செல்லும்போதும் கூட அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்து கொள்வாராம். கடவுளை மறுத்து பேசுவதை கையில் எடுக்காமல், தனக்கு முன் இருந்த கோட்பாடுகளை மட்டுமே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதனால், அவருக்கு பெரிதாக எதிர்ப்பு எழவில்லை என்கிறார் வெங்கடேசன். அப்படி பொதுவெளியில் டார்வின் கோட்பாடுகள் விமர்சனத்தை சந்தித்த போதெல்லாம் அவரை விட, அதை எதிர்கொண்டு விவாதித்து ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் உயிரியலாளர் தாமஸ் ஹக்ஸ்லி தான். பல முக்கியமான கூட்டங்களில் டார்வினின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக பேசி வெற்றி பெற்றுள்ளார் இவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள சார்லஸ் டார்வின் சிலை டார்வின் ஏன் தேவை? என்னதான் 170 ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை டார்வின் வெளியிட்டிருந்தாலும் இன்னமும் வெகுமக்கள் மனித பிறப்பு குறித்த பழைய நம்பிக்கைகளையே பின்பற்றி வரும் சமயத்தில் டார்வினின் கோட்பாடு முக்கியமாகிறது என்கிறார் ஆர்.வெங்கடேசன். “சமீபத்தில் கூட NCERT பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதற்க்கு காரணமாக அதிக பாடச் சுமை கூறப்படுகிறது. ஆனால், அறிவியலின் அடிப்படையே படிக்காமல் எப்படி அடுத்த கட்டத்தை படிப்பது? அதனால்தான் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அந்த பாடங்களை நீக்க கூடாது என்று அந்த துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவிக்கிறார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன். https://www.bbc.com/tamil/articles/cyej7yeer1xo
  8. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் - இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு 12 FEB, 2024 | 09:33 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இன்று அந்த திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழில்நுட்பநிறுவனங்களின் அழுத்தங்களை தொடர்ந்தே அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என தொழில்நுட்பநிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176154
  9. பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு புதுடெல்லியில் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் இலங்கையின் பொருளாதார சவால்கள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பேசப்பட்டதாகவும், அயல் நாட்டுக்கான முன்னுரிமை மற்றும் இந்தியப் பெருங்கடலின் முன்னுரிமை கடல்சார் முன்முயற்சி என்ற கருப்பொருளின் கீழ் இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்றும் பேசப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரஜைகளுக்கு சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், கட்டாயம் இலங்கைக்கு செல்லுமாறு மும்பை நகரில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்த நாட்டு பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இடதுசாரி தலைவரை இலங்கை அதிபராக்க இந்தியா விரும்புகிறதா? இலங்கையில் இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்தப் பயணம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுமா என கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் அரச கொள்கை ஆய்வுப் பிரிவின் பிரதானி கலாநிதி பிரதீப் பீரிஸிடம் பிபிசி வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், ''நாட்டு மக்கள் வாக்களித்தாலும், இலங்கை அதிபரைத் தெரிவு செய்வது நாட்டிற்கு வெளியிலுள்ள நபர்கள்" எனக் கூறினார். ''நாட்டைச் சூழவுள்ள பூகோள அரசியலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடாமல், இலங்கையின் எதிர்காலத் தலைவராக எப்போதும் வர முடியாது." ''இலங்கையில் இருந்து நாம் வாக்களித்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களால் வாக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன." ''பெரும்பாலும், அநுரகுமார திஸாநாயக்க அல்லது தேசிய மக்கள் சக்தி நாட்டின் அதிபர் பதவியைக் கைப்பற்ற விரும்புமானால், கட்டாயம் உலகின் வலுவான நாடுகளுடன் ஏதோவொரு புரிந்துணர்வை வைத்துக்கொள்வது அவசியமாகின்றது." ''அப்படியில்லையென்றால், இலங்கையிலுள்ள பிரதான கட்சி ஒன்றுக்கு அதிகாரத்திற்கு வர முடியாது" ''அதனாலேயே, அநுர குமார திஸாநாயக்க இந்த விஜயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். அதனாலேயே இந்தியாவும் அழைப்பு விடுத்திருக்கின்றது." ''தென் சீனா மற்றும் தெற்காசியாவின் பூகோள அரசியல் என்றும் இல்லாதளவிற்கு தற்போது தீவிரமடைந்துள்ளது." ''அதற்கான காரணம், தனி அதிகாரத்திற்குப் பதிலாக, கூட்டு அதிகாரம் என்ற கலாசாரத்திற்கு உலகம் தள்ளப்படுகின்றது." ''இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த வளையத்திற்குள் தமது அதிகாரங்களை வைத்துக்கொள்வதற்கு விருப்பம் காணப்படுகின்றது. அதனால், எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் நபர்கள் தமது திட்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ளும் தேவை அவர்களுக்கு உள்ளது." ''அதனாலேயே அவரை அழைத்திருக்கக் கூடும். அதில் சற்று நேர்மறை அம்சங்களும் காணப்படுகின்றன," என கலாநிதி பிரதீப் பீரிஸ் தெரிவிக்கின்றார். ''இந்தியப் பெருங்கடல் வளையத்தின் அதிகாரம் மிகுந்த தரப்பினர், தமக்கு அவநம்பிக்கை கொண்ட குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தடுப்பதற்கும், அவ்வாறான குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் என எண்ணும் பட்சத்தில் அவர்களுடன் ஏதோ ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி செய்வார்கள்," என அவர் கூறுகின்றார். இதில் இரண்டு விடயமே தற்போது இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்திகளைத் தற்போது அவதானிக்கும்போது, சோசலிச அரசியலில் இருந்து விடுப்பட்டு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சமூக ஜனநாயக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். இந்திய ஊடகங்கள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் தற்போது மிகப் பிரபலமான அரசியல் கட்சியாக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு, இந்தியா அதிகாரபூர்வ அழைப்பை விடுத்துள்ளமையானது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று என தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இந்தியாவின் புது தில்லி, அகமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது அரச அதிகாரிகள், வணிக சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், விவசாயம் மற்றும் தொழில்சாலைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அநுரவின் இந்திய விஜயம் குறித்து, சமூக ஊடக பதிவுகள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறித்து இலங்கைக்குள் சமூக ஊடகங்களில் கலவையான கருத்துகளைக் கொண்ட பதிவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, தனது எக்ஸ் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். இந்தச் சந்திப்பானது மிகச் சிறந்த நடவடிக்கை எனவும், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்படுகின்ற இந்து - பசுபிக் கொள்கை உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொலைநோக்குப் பார்வை குறித்த அறிக்கையை தேசிய மக்கள் சக்தி ஆதரிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதைச் சாதகமாக்கிக் கொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் திட்டங்களை முன்னெடுக்கும்போது, அதானி குழுமத்திற்கு எந்தவித பிரச்னையும் வராது எனவும், மக்கள் விடுதலை முன்னணி எந்தவொரு எதிர்ப்பையும் இனி தெரிவிக்காது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளித்துள்ள பயனாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ''நாம் இந்தியாவை எதிர்க்கவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயமானது அவசரமாக இடம்பெற்றது அல்லவென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிபிசிக்கு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பிற்கு அமைய, முன்னதாகவே இந்த விஜயம் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறுகின்றார். இதேவேளை, இந்தியாவிற்கு எதிராக கருத்துகளைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பிபிசிக்கு கருத்து தெரிவித்தார். ''நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவை எதிர்க்கவில்லை. எமது நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்களை எடுக்கும்போது நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். நாம் நாடொன்றை எதிர்க்க மாட்டோம். அது நகைச்சுவையான ஒன்று. எந்தவொரு விடயத்திலும் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் காணப்படும் பட்சத்தில், அதை நாம் எதிர்த்தோம்," என அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c2xjkgd358ko
  10. 12 FEB, 2024 | 10:19 AM தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இரு அணிகளையும் சேர்ந்த ச.குகதாசன், ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது, திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிறிநேசனும் பொதுச் செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேசப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும், முதலில் யார் ஒரு வருடம் பதவி வகிப்பது என்பது தொடர்பில் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இன்றி முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முடிவுகள் எட்டப்படாத நிலை ஏற்பட்டது. இருவரும் தாம் பொதுச் செயலாளராக வருவதற்குரிய காரணங்களை நியாப்படுத்தியிருந்தனர். எனினும், இருவரும் பேசி இரண்டு நாட்களுக்குள் முடிவு தருமாறு கூறி நடைபெற்ற இரகசிய கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176153
  11. பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்மி ஸ்டாலர்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் , பிபிசி நியூஸ் 11 பிப்ரவரி 2024 உலகின் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்கும் கனவு சமீபத்திய ஆய்வுகளால் ஒரு படி முன்னேறியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அணுக்கரு இணைவின் (Nuclear fusion) மூலம் உருவாக்கப்படும் ஆற்றலின் அளவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில் இங்கிலாந்தை தளமாக கொண்டு இயங்கும் ஜெஇடி ஆய்வகம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அணுக்கரு இணைவு என்பது நட்சத்திரங்களுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு செயல்முறையாகும். இருவேறு அணுக்கள் ஒன்றாக இணைந்து பெரியளவிலான ஆற்றலை வெளிப்படுத்துவதே இந்த செயல்முறை. இதன் மூலம் வளிமண்டலம் வெப்பமாகாமல் அதிக அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய விஞ்ஞானிகள், “ இதற்கு முன்பு படைத்திராத புதிய சாதனையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்” என்று தெரிவிக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சியின், சமீபத்திய இறுதிப் பரிசோதனையில் இம்முடிவு கிடைத்துள்ளது. இதை இங்கிலாந்தின் அணுசக்தி அமைச்சர் ஆண்ட்ரூ போவி "ஃபிட்டிங் ஸ்வான்சாங்" என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION படக்குறிப்பு, “ பூமியில் அணுக்களை ஒன்றாக இணைக்க, சூரியனை விட 10 மடங்கு அதிகமான வெப்பநிலை தேவை" இந்த அணுக்கரு இணைவு செயல்முறைதான் சூரியனுக்கு ஆற்றலை வழங்குகிறது. இந்த செயல்முறையில் சிறிய துகள்களின் மீது அழுத்தத்தை போட்டு அவற்றை சூடாக்கி ஒன்றிணைத்து பெரியவையாக மாற்றுவதன் மூலம் ஆற்றல் உருவாகிறது. வர்த்தக ரீதியில் இதை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால், கார்பன் உமிழ்வே இல்லாமல் அள்ளஅள்ளக் குறையாத தூய்மை ஆற்றலை உருவாக்க முடியும். இந்த செயல்முறையை சாத்தியப்படுத்த காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போல வானிலையை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் அணுக்கரு இணைவு ஆய்வாளர் டாக்டர் அனீகா கான், இது நேரடியானதல்ல என்று கூறுகிறார். இது குறித்து அவர் விவரிக்கையில், “ பூமியில் அணுக்களை ஒன்றாக இணைக்க, சூரியனை விட 10 மடங்கு அதிகமான வெப்பநிலை தேவை. அதாவது கிட்டத்தட்ட 10 கோடி செல்சியஸ். அத்துடன், போதுமான அளவு அதிக அடர்த்தி கொண்ட அணுக்கள் நீண்ட காலத்திற்கு தேவை” என்கிறார். தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனையில் 5 நொடிகளில் 69 மெகாஜுல் ஆற்றல் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் 4 முதல் 5 முறை சூடான குளியலுக்கு தேவைப்படும் ஆற்றல் மட்டுமே. இதன்மூலம் நாம் அணுக்கரு இணைவு மின் நிலையங்களை உருவாக்கும் கனவை அடைய இன்னும் வெகு தூரம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் ஒவ்வொரு சோதனையிலும் நாம் ஒரு படி நெருக்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பட மூலாதாரம்,GETTY IMAGES லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விண்வெளி, பிளாஸ்மா மற்றும் காலநிலை ஆராய்ச்சி சமூகத்தின் தலைவர் பேராசிரியர் ஸ்டூவர்ட் மாங்கிள்ஸ் இது குறித்து கூறுகையில், "ஜெஇடி நடத்தியுள்ள இறுதி சோதனையின் புதிய முடிவுகள் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.. "உண்மையில் இந்த முடிவு சர்வதேச கூட்டு உழைப்பின் சக்திக்கு உதாரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் உழைப்பில்லாமல் இந்த முடிவுகள் கிடைத்திருக்க சாத்தியமில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த ஐரோப்பிய டோரஸ் (JET) கூடம் , 1970 களின் பிற்பகுதியில் ஆக்ஸ்போர்டில் உள்ள குல்ஹாமில் நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி வரை இதுவே உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட இணைவு (fusion) சோதனை உலையாக இருந்தது. ஆனால், டிசம்பரில் இதன் அனைத்து சோதனைகளும் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், இதற்கு முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அணு ஆராய்ச்சித் திட்டமான ‘Euratom’ மூலம் நிதியளிக்கப்பட்டது. அதேசமயம் இது இங்கிலாந்து அணுசக்தி முகமையால் இயக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளாக இந்த கூடம் இங்கிலாந்து, ஐரோப்பா, சுவிட்சர்லாந்து மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து பணிபுரியும் இடமாக இருந்து வருகிறது. இந்த கூடம் பத்தாண்டுகள் அல்லது அதற்கு கொஞ்சம் அதிகமான காலம் செயல்படும் வகையில் தான் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அடுத்தடுத்த சோதனை வெற்றியடைந்ததால் அதன் செயல்பாடு நீட்டிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சோதனை முடிவானது, 1997 இல் நடத்தப்பட்ட இதேபோன்ற சோதனைகளின் முடிவை விட மூன்று மடங்கு அதிகம். இதுகுறித்து Eurofusion-இன் திட்ட மேலாளர் பேராசிரியர் அம்ப்ரோஜியோ ஃபசோலி கூறுகையில், "இணைவு ஆற்றலின் வளர்ச்சியில் எங்களது வெற்றிகரமான செயல் விளக்கம் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறோம் என்பதையும் தாண்டி, இதுவரை செய்யாத விஷயத்தை செய்துள்ளோம் மற்றும் இணைவு இயற்பியல் குறித்த எங்களது புரிதலும் ஆழமாகியுள்ளது" என்று தெரிவிக்கிறார். இங்கிலாந்து அணுசக்தி மற்றும் தொடர்புகள் துறை அமைச்சர் ஆண்ட்ரூ போவி இதுகுறித்து பேசுகையில், "1983 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக செய்யப்பட்ட அனைத்து முக்கியமான பணிகளில், ஜெஇடி-இன் தற்போதைய பரிசோதனை முடிவுகளே உச்சமாக அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இணைவு ஆற்றல் கனவை நாம் நெருங்கியுள்ளோம். இதற்கு ஆக்ஸ்போர்டுஷையரை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவிற்கு நன்றி" என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION படக்குறிப்பு, தேசிய ஆய்வு திட்டங்களுக்கு £650 மில்லியன் நிதியை ஒதுக்குவதாக இங்கிலாந்து அறிவித்தது. ஆனால், ஐரோப்பிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் இங்கிலாந்தின் எதிர்கால பங்கு குறித்த தெளிவு இல்லை. காரணம், பிரெக்சிட்(Brexit) வெளியேற்றத்திற்கு பிறகு, ‘Euratom’ திட்டத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி அதில் மீண்டும் சேர வேண்டாம் என்ற முடிவையும் கடந்த ஆண்டு இங்கிலாந்து எடுத்துள்ளது. அதற்கு பதிலாக தேசிய ஆய்வு திட்டங்களுக்கு £650 மில்லியன் நிதியை ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. Euratom திட்டத்தை ஆய்வு செய்ய ஜெஇடி அமைப்பை தொடர்ந்து ஐடிஇஆர்(ITER) எனப்படும் கூடம் பிரான்ஸை மையமாக கொண்டு தொடங்க திட்டமிடப்பட்டது. முதலில் இதை 2016 ஆம் ஆண்டில் திறக்கலாம் என திட்டமிடப்பட்டது. அதற்கு சுமார் 5 பில்லியன் யூரோ வரை செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால், பிறகு அதன் மதிப்பானது முன்பை விட நான்கு மடங்கு வரை அதிகரித்ததன் காரணமாக இந்த கூடத்தை அமைக்கும் திட்டம் 2025 க்கு மாற்றப்பட்டது. எனவே இதன் முழு வீச்சிலான செயல்பாடுகளை 2035 வரை எதிர்பார்க்க முடியாது. அதே போல் ‘Euratom’ திட்டத்தில் இங்கிலாந்து மீண்டும் இணையாமல் இருப்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், ITER திட்டத்தில் ஏற்படும் தாமதங்களும் அதில் ஒரு பங்கைக் வகிப்பதாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,UK ATOMIC ENERGY AUTHORITY / EUROFUSION படக்குறிப்பு, நாட்டிங்ஹாம்ஷயரில் உலகின் முதல் இணைவு மின் நிலையத்தை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது அணுக்கரு இணைவு மின் நிலையத்தை அமைக்க இங்கிலாந்து திட்டம் - எப்போது திறப்பு? அதே சமயம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர ஜீரோ துறையின் செய்தித் தொடர்பாளர், " ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களோடு ஒன்றிணைவதில் ஏற்படும் தாமதம், தங்களது சொந்த இணைவு திட்ட உத்தியை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை இங்கிலாந்துக்கு வழங்குகிறது." என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணுசத்தி ஆணையத்தின் அதிகாரியான இயன் சாப்மேன் வியாழன் அன்று வெளியிட்ட அறிவிப்பில், இங்கிலாந்து எதிர்காலத்தில் ITER உடன் இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாகக் கூறினார். 2040 ஆம் ஆண்டில் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் நாட்டிங்ஹாம்ஷயரில் உலகின் முதல் அணுக்கரு இணைவு மின் நிலையத்தை உருவாக்க இங்கிலாந்து அரசாங்கம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து இன்டஸ்ட்ரியல் ஃப்யூஷன் சொல்யூஷன்ஸ் என்ற புதிய அணுசக்தி அமைப்பால், இந்த ஸ்டெப் (Spherical Tokamak for Energy Production) திட்டம் செயல்படுத்தப்படும். https://www.bbc.com/tamil/articles/cge74enwvd7o
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திட வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், "எட்டு பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் இந்தியக் கடற்படையினர் கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டிருந்தது இரு நாடுகளுக்கிடையே அரசுமுறை பதற்றத்தை அதிகரித்து வந்தது. கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர்? இந்த இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காரணத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின் வாயிலாகவே அறிய முடிகிறது. அவற்றின்படி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள். இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி அப்போது கூறினார். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்தன. கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது. இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள். கடந்த 2023-ஆம் ஆண்டு, இவர்களது மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவால் கடந்த ஆண்டு டிசம்பரில், துபாயில் நடைபெற்ற சிஓபி28 மாநாட்டின் போது, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல்தானியை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அப்போது, கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலம் குறித்தும், இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இருதரப்பு உறவுகள் குறித்து இருவருக்கும் இடையே நல்லமுறையில் விவாதம் நடந்ததாக தெரிவித்திருந்தார். இந்திய அரசு, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து அனைத்து சட்ட வாய்ப்புகளிலும் செயல்படுவதாகவும் கூறியிருந்தது. இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் இந்த 8 இந்தியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவிக்க மத்திய மோதி அரசுக்கு பெரிய அழுத்தம் எழுந்தது. காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த இந்தியர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. பட மூலாதாரம்,@HARDEEPSPURI எரிவாயு ஒப்பந்தம் இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cn3nekp853ko
  13. ரஃபாவில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலி - இரண்டு பணயக்கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேல் தெரிவிப்பு Published By: RAJEEBAN 12 FEB, 2024 | 10:49 AM ரஃபாவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இரண்டு பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை அந்த நகரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் விமானதாக்குதலினால் உயிரிழந்த 20 பாலஸ்தீனியர்களின் உடல்கள் குவைத் மருத்துவமனையில் உள்ளன என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அதிகாரிகள் 12 உடல்கள் ஐரோப்பிய மருத்துவமனையிலும் ஐந்து உடல்கள் அபுயூசுவ் அல் நசார் மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குண்டுவீச்சினால் இரண்டு மசூதிகளும் பலவீடுகளும் சேதமடைந்துள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதேவளை காசாவின் தென்பகுதியில் உள்ள ரஃபாவில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவர்மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள் இஸ்ரேலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/176167
  14. தகவலுக்கு நன்றி அண்ணை. நம்மட கணனிக்கு ஆபத்தில்லாவிட்டால் சரி.
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சர்வப்பிரியா சங்வான் பதவி, பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் எந்தவொரு வாடிக்கையாளரும் உணவுப் பொருட்களை வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் பின்புறத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அதைப் படிக்கத் தெரிந்தால் அந்த பாக்கெட்டை, அந்த உணவுப்பொருளை நீங்கள் வாங்கவே மாட்டீர்கள். ஆனால், குறிப்பிட்ட உணவுப்பொருள் உடல்நலத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை அறிய முடியாத வகையிலும் வாடிக்கையாளர்களுக்குப் புரியாத வகையிலும் இந்தத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. பாக்கெட்டில் உள்ள ஊட்டச்சத்து குறித்த தகவல்களைப் பார்த்தே உள்ளே இருக்கும் உணவின் தரத்தை மதிப்பிட கற்றுக் கொள்ளலாம். எந்தவொரு உணவுப் பொருளையும் வாங்குவதற்கான அடிப்படை என்னவென்றால், அதில் சில அளவு வைட்டமின்களும் தாதுக்களும் இருக்க வேண்டும். மேலும், அதன் அளவும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும். முதலில், இந்தியாவில் செய்யப்படும் உணவு லேபிளிங் ஓர் ஆரோக்கியமான நபரின் உணவின் அளவு 2,000 கிலோ கலோரிகள் என்று கருதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத் தரமாகக் கருதி, ஒவ்வொரு உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள் (RDA -Recommended Dietary Allowance) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உணவு லேபிளிங் தேவைகளை அமைப்பதற்குப் பொறுப்பாகிறது. இந்த அமைப்பு லேபிளிங் விதிகளை முடிவு செய்து மேற்பார்வை செய்கிறது. பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் என்பது, அறிவியல் தகவல்களின் அடிப்படையில், ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இந்த அளவு ஊட்டச்சத்து போதுமானது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீர்மானித்துள்ளது. FSSAI வழிகாட்டுதல்களின்படி, கார்போஹைட்ரேட்டுகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 130 கிராம். பதப்படுத்தப்பட்ட வேர்க் கடலையின் 30 கிராம் பாக்கெட்டை நீங்கள் சாப்பிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் லேபிளின்படி, அதில் 24 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, இது பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவில் தோராயமாக 18 சதவீதம். அதாவது, பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை பாக்கெட்டுகளில் இருந்து 18 சதவீதம் கார்போஹைட்ரேட் கிடைத்துள்ளது. நீங்கள் 100 கிராம் பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை சாப்பிட்டால், அன்றைய கார்போஹைட்ரேட்டில் 80 சதவிகிதம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், நாள் முழுவதும் கார்போஹைட்ரேட் உள்ள மற்ற பொருட்களைச் சாப்பிட்டால், கண்டிப்பாக அன்றைய கார்போஹைட்ரேட் வரம்பை மீறுவீர்கள். பரிமாறும் அளவு: பாக்கெட்டின் பின்புறத்தில் 'சர்விங் சைஸ்' (serving size) லேபிளை காணலாம். மற்ற அனைத்துத் தகவல்களும் இந்த `சர்விங் சைஸ்` அளவை அடிப்படையாகக் கொண்டது. பல பாக்கெட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட `சர்விங் சைஸ்` உள்ளன. இந்தியாவில், உணவு பாக்கெட் லேபிள்களில் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் 100 கிராம் அளவுக்குத்தான் ஊட்டச்சத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் 100 கிராமுக்கு மேல் அதைச் சாப்பிட்டால், குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப அந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் சேரும். இந்த உணவில் என்ன கூறுகள் உள்ளனவோ, அவை இறங்கு வரிசையில் லேபிளில் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, எந்த ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளதோ அது முதலில் வரும், எது குறைவாக உள்ளதோ அது கடைசியாக வரும். என்னென்ன ஊட்டச்சத்துகள்? பட மூலாதாரம்,GETTY IMAGES அனைத்து உணவு பாக்கெட்டுகளிலும் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் அளவுகள் பற்றிய தகவல்களை வழங்குவது அவசியம். நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நான்கு கூறுகள் உள்ளன. மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு/சோடியம் மற்றும் சர்க்கரை. இந்தக் கூறுகள் அனைத்தும் உங்கள் எடை மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரையை நீங்கள் எந்தப் பெயரில் அழைத்தாலும் அதில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எந்த சத்தும் இல்லை. அதிக சர்க்கரையை உட்கொள்வது உங்கள் கலோரிகளை நிரப்புகிறது. அதன் விளைவாக நீங்கள் பசி உணர்வை இழப்பதால் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தத்தின் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்கும் உடலின் திறனும் பாதிக்கப்படுகிறது. அதிக சர்க்கரை, தேன், வெல்லம், கார்ன் சிரப், கார்ன் சர்க்கரை, பிரக்டோஸ் உள்ள உணவுகளில் கவனமாக இருங்கள். பிரௌன் சுகர், கரும்பு சர்க்கரை, கார்ன் ஸ்வீட்னர், டெக்ஸ்ட்ரோஸ், மால்டோஸ், பழச்சாறு செறிவு மற்றும் குளுக்கோஸ் ஆகியவையும் சர்க்கரை வகைகள்தான். இவை எதுவும் ஆரோக்கியமான சர்க்கரைகள் அல்ல. ஒரு ஜூஸ் பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் ஜூஸ் பாக்கெட் என்றாலும், அதன் லேபிளில் உள்ள தகவல்கள் வெறும் 100 மி.லி.க்கு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். 100 மி.லி. ஜூஸ் குடித்தால், அதில் கிடைக்கும் மொத்த சர்க்கரை 12.6 கிராம். இதில், தனித்தனியாகச் சேர்க்கப்படும் சர்க்கரை 8.3 கிராம், இது உங்கள் உடலுக்குத் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம். ஒரு சிறிய டம்ளர் ஜூஸில் இருந்து தினசரி சர்க்கரையில் பாதியைப் பெறுவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதேநேரத்தில், இந்த ஜூஸ் பாக்கெட்டில் 18 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் தேவை. எனவே, வைட்டமின் சி காரணமாக நீங்கள் சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸை குடித்தால், உங்கள் உடலுக்கு அதிக தீங்கு ஏற்படும். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள புள்ளி விவரங்களை FSSAI பின்பற்றுவது அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் வேறுபட்டதாக இருக்கலாம். ஓர் ஆரோக்கியமான நபருக்கு தினசரி உணவில் தேவைப்படும் சராசரி ஊட்டச்சத்து அளவு ஆர்.டி.ஏ எனப்படும். இந்தியாவில், இது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கூட்டாகச் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, FSSAI சர்க்கரை சேர்க்கும் வரம்பை 50 கிராமாக வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வரம்பைவிட இருமடங்கு அதிகம். உப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவும் குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். வழக்கமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பு இருக்காது என நீங்கள் நினைக்கும் கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உப்பு இருக்கிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக ஒரு தேக்கரண்டிக்குச் சமம். சில பொருட்களின் லேபிள்களில் உப்புக்குப் பதிலாக சோடியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் சோடியத்தின் அளவை 2.5-ஆல் பெருக்கி உப்பின் அளவை அறியலாம். சோடியத்தின் அளவு ஒரு நாளைக்கு 2300 மி.கி அல்லது 2.3 கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் 18 கோடியே 80 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே அதைப் பற்றி அறிய முடிகிறது. இதில், 30 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES உணவுப் பாக்கெட்டுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பின் அளவைப் பாருங்கள். ஆரோக்கியமான உணவுக்கு, நிறைவுற்ற கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதேநேரம், நிறைவுறா கொழுப்பை முற்றிலும் தவிர்க்கவும். வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை நிறைவுற்ற கொழுப்புகள். ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்புகள். உதாரணமாக, 100 கிராம் பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரிகள், 51 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 35 கிராம் கொழுப்பு உள்ளது. நீங்கள் நாள் முழுவதும் 2,000 கிலோ கலோரி உணவை எடுத்துக் கொண்டால், அதில் 20-35 சதவீதம் கொழுப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, 44-78 கிராம் கொழுப்பு. இப்போது பாருங்கள், ஒரு பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரி மற்றும் 35 கிராம் கொழுப்பும் கிடைக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. 13 வகையான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அதிக கொழுப்பு, மரணத்துக்குக்கூட காரணமாகிறது. கடந்த ஆண்டு உடல் பருமன் காரணமாக உலகம் முழுவதும் 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நார்ச்சத்து பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு சர்விங்குக்கு 5 கிராம் நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள். FSSAI ஊட்டச்சத்து தொடர்பான சில நிபந்தனைகள் மற்றும் விதிகளை வரையறுத்துள்ளது. உதாரணமாக, 100 கிராம் தயாரிப்பில் உள்ள நார்ச்சத்து 6 கிராமுக்கு மேல், அதாவது 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே, உணவுப் பொருளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகக் கூற முடியும். எனவே, நீங்கள் உணவு பாக்கெட்டை வாங்கச் செல்லும் போதெல்லாம், அதன் லேபிளைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் சரியான உணவுத் தேர்வை நீங்கள் செய்யலாம். https://www.bbc.com/tamil/articles/cz9m0q4953ro
  16. அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அணியைத் தொடர்ந்து இந்தியாவை வீழ்த்திய இளையோர் அணியும் உலக சம்பியனானது Published By: VISHNU 11 FEB, 2024 | 10:57 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாக அவுஸ்திரேலியா சம்பியனானது. இந்தியாவுக்கு எதிராக பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை 79 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 4ஆவது தடவையாக அவுஸ்திரேலியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அணியைத் தொடர்ந்து இப்போது இளையோர் அணியும் சம்பியனாகியுள்ளது. இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவை அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அஹமதாபாத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண (சிரேஷ்ட பிரிவினர்) இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு உலக சம்பியனாகியிருந்தது. இந்திய வம்சாவளி ஹர்ஜாஸ் சிங் குவித்த அரைச் சதம், ஹெரி டிக்சன், அணித் தலைவர் ஹியூ வெய்ஜென், ஒலிவர் பீக் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள், மஹ்லி பியர்ட்மன், ரபாயல் மெக்மிலன் ஆகியோரது திறமையான பந்துவீச்சுகள் என்பன அவுஸ்திரேலியா உலக சம்பியனாவதற்கு உதவின. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடந்தது. இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தவறான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தது அதன் தோல்விக்கு காரமணாக அடைந்தது. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 200 ஓட்டங்களுக்குள் இந்தியாவின் சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அந்தப் பெருமையை அவுஸ்திரேலியா தனதாக்கிக்கொண்டது. இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மொத்த எண்ணிக்கை 3 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும், ஆதர்ஷ் சிங் (47), முஷீர் கான் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இந்தியா 31ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் முருகன் அபிஷேக், நாமன் திவாரி ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சற்று கௌரவமான நிலையில் இட்டனர். இறுதிப் போட்டியில் இந்த இணைப்பாட்டமே இந்திய இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. முருகன் அபிஷேக் 42 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். நாமன் திவாரி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மஹ்லி பியர்ட்மன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபாயல் மெக்மிலன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெலம் விட்லர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது. லீக் சுற்று மற்றும் சுப்பர் சுற்று ஆகியவற்றில் எதிரணிகளை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இந்தியா அரை இறுதியிலும் இறுதிப் போட்டியிலுமே எதிரணிகளுக்கு 200 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தது. ஆரம்ப வீரர் சாம் கொன்ஸ்டாஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் மற்றைய ஆரம்ப வீரர் ஹெரி டிக்சன், 3ஆம் இலக்க வீரர் அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் ஆகிய இருவரும் 2வது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். ஹெரி டிக்சன் 42 ஓட்டங்களையும் ஹியூ வெய்ஜென் 48 ஓட்டங்களையும் பெற்று 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். எனினும், ஹர்ஜாஸ் சிங், ரெயான் ஹிக்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். இந்திய வம்சாவளியா ஹர்ஜாஸ் சிங் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களைப் பெற்றார். ரெயான் ஹிக்ஸ் 20 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களைத் தொடர்ந்து மத்திய வரிசையில் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாமன் திவாரி 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன்: மஹ்லி பியர்ட்மன் தொடர்நாயகன்: க்வேனா பஃபாக்கா (21 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/176138
  17. நிரந்தர உரிமை அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி : அமைச்சர் ஜீவன் தலைமையில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் 11 FEB, 2024 | 09:23 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதியால் 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (09) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கையை நாம் இணைந்து முன்னெடுத்துள்ளோம். தேசிய ரீதியிலான 86 சதவீதமானோருடன் ஒப்பிடுகையில், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களில் 8 சதவீதமானோருக்கு மாத்திரமே சொந்த வீடு காணப்படுகிறது. இந்த வரலாற்று அநீதியை நாம் சரி செய்வோம். அரசாங்க அதிகாரிகள், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். பொருத்தமான காணிகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணுதல், வரைபடமிடுதல், அளவீடு செய்தல், பத்திரங்களை தயாரித்தல் போன்ற நடைமுறைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. அந்த வகையில் குறித்த திட்டத்தின் மூலம் 200 000 குடும்பங்களைச் சேர்ந்தர்கள் பயனடைவார்கள். அதற்கான செயல்முறையை ஒருங்கிணைக்க ஒரு செயலகத்தை அமைக்கப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டதோடு, இந்த வேலைத்திட்டத்துக்காக ஜனாதிபதியினால் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 200 வருடங்களாக எமது பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட சமூகம் வாழ்வதற்கு ஒரு இடம் என்ற எளிய பாதுகாப்பைக் கூட அனுபவித்ததில்லை. இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனுபவிப்பதை இந்த முயற்சி உறுதி செய்கிறது. இது அவர்களின் சொந்த நிலத்தின் உறுதியையும் பாதுகாப்பையும் அவர்களின் எதிர்காலத்தில் ஒரு பங்கையும் கொடுக்கும். எனவே இதனை வழங்குவதில் நான் உறுதியாகவுள்ளேன். https://www.virakesari.lk/article/176097
  18. இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதற்கிடையே, 3 ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 15 ஆம் திகதி தொடங்குகிறது. 4 ஆவது டெஸ்ட் ராஞ்சியில் 23 ஆம் திகதியும், கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் திகதியும் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டி ருந்தது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி இருந்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக 2 ஆவது டெஸ்டில் விளையாடாத பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் இருவரும் போட்டியில் விளையாடுவது குறித்து மருத்துவ குழுவின் உடற்தகுதி அறிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் வருமாறு:- ரோகித் சர்மா (கெப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ்.பரத், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப். https://thinakkural.lk/article/291306
  19. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையர்! சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸங்க சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்களுடன் 210 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்ற 188 ஓட்டங்களே இலங்கை சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. 24 வருடங்களுக்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்றிருந்த சாதனையை பெத்தும் நிஸங்க நேற்று முறியத்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார். https://thinakkural.lk/article/291221
  20. சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு Published By: VISHNU 11 FEB, 2024 | 09:48 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவற்றில் 156 வாகனங்கள் குறித்த உரிய தகவல்களை ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகன வகையைச் சேர்ந்தவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாகனங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு போலியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு ஏராளமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட வாகனங்களில் 7 வாகனங்களை தற்போதைய உரிமையாளர்களிடம் இருந்து பெற்று இலங்கை சுங்கத்தில் ஒப்படைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 06 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 05 வாகனங்கள் இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176134
  21. ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் தோனி! சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் விரைவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/291104 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்ல 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2024 சீசனில் விளையாடும் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது எதிஹாட் ஏர்வைஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளதை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது. வீரர்களின் ஜெர்சியின் பின்பக்த்தில் அவர்களுடைய நம்பர்களுக்கு மேல் இனிமேல் எதிஹாட் ஏர்வைஸ் இடம் பிடித்திருக்கும். https://thinakkural.lk/article/291168
  22. நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர் Published By: VISHNU 11 FEB, 2024 | 10:01 PM இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர். Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும், இந்த கட்டண முறையானது கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபின்டெக் (Fintech) கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் உள்ளது. அந்நாட்டின் வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் புதுமைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்திய பிரதமர் முக்கியத்துவம் அளித்துள்ளார். இலங்கை மற்றும் மொரிஷியஸுடனான இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்த அறிமுகமானது வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் பரந்த அளவிலான மக்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும். Unified Payment Interface (UPI) அறிமுகமானது இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயன்படும் என்பதோடு இந்தியாவுக்கும் இது பயனளிக்கும். மொரிஷியஸ் பிரஜைகளுக்கும் UPI தீர்வுச் சேவைகளைப் பெறுவதற்கு உதவும். மொரீஷியஸில் RuPay கார்ட் சேவைகளை நீட்டிப்பதன் மூலம் மொரீஷியஸ் வங்கிகள் மொரீஷியஸில் RuPay பொறிமுறையின் அடிப்படையில் கார்ட்களை வழங்குவதற்கும், இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் RuPay கார்டைப் பயன்படுத்துவதற்கும் உதவும். https://www.virakesari.lk/article/176130
  23. காசாவில் ஐ.நா. அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு: வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் குற்றச்சாட்டு காசாவில் ஐ.நா அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைத்துள்ளது என வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், ” ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. https://thinakkural.lk/article/291336
  24. Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது. குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176120
  25. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ? ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன் . திவால்நிலையிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்துவதே இலக்காகும். நான் மீண்டும் ஜனாதிபதவிக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளேன். WION நிருபர்: நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா? அதாவது, இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதன் அடிப்படையில் உங்கள் பதவிக்காலத்தில் பொருளாதாரம் பற்றிய உங்கள் பார்வை என்ன? ஜனாதிபதி ரணில்: சரி, நான் மிகவும் திருப்தியடைகிறேன், எங்களால் இதைச் செய்ய முடியும் என்று நான் உணர்கிறேன். https://thinakkural.lk/article/291322

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.