Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,RAJAB FAMILY படக்குறிப்பு, ஹிந்த் ரஜாப் கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வில்லியம்சன் பதவி, பிபிசி செய்திகள் 5 நிமிடங்களுக்கு முன்னர் காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமியின் காணாமல் போயிருக்கும் சம்பவம் காஸாவின் மனிதநேயச் சிக்கலைப் பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. காணாமல் போகும் முன் அந்தச் சிறுமி செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் பேசிய தொலைபேசி அழைப்பில் அவர் என்ன சொன்னார்? கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பாலத்தீனத்தின் மனிதநேய உதவி நிறுவனமான ரெட் கிரெசன்டின் உதவி மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியது ஒரு ஆறு வயது சிறுமியின் பயந்த குரல். “எனக்கு அருகே இருக்கும் டாங்கி நகர்கிறது,” என்றார் அந்தச் சிறுமி. உதவி மையத்தில் இருந்த ராணா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாகப் பேசினார். “அது மிகவும் அருகில் இருக்கிறதா?” “மிகவும் அருகில் இருக்கிறது,” என்றது அந்தச் சிறுமியின் குரல். “எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?” அந்தத் தொலைபேசி உரையாடலை நீட்டிப்பதைத் தவிர ராணாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆறு வயதாகும் ஹிந்த் ரஜாப், காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கிக்கொண்டார். அவரது மாமாவின் காரில், தனது உறவினர்களின் உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு உதவிக்காக மன்றாடினார். இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிய குடும்பம் இஸ்ரேல் ராணுவம், காஸா நகரத்தின் மேற்குப் பகுதியிலிருந்து மக்களை தெற்கு நோக்கி கடற்கரைச் சாலை வழியே இடம்பெயரச் சொன்னதைத் தொடர்ந்து, ஹிந்த் ரஜாப் தனது மாமா, அத்தை மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் காஸா நகரை விட்டு வெளியேறினார். ஹிந்தின் டாய் விஸ்ஸாம் தங்களது பகுதியில் தீவிரமான குண்டு வீச்சு நடந்ததை நினைவுகூர்கிறார். “நாங்கள் அதிர்ந்து போயிருந்தோம். தப்பிக்க விரும்பினோம். வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க இடம்விட்டு இடம் ஓடினோம்,” என்கிறார் அவர். அவர்கள் காஸா நகரத்தின் கிழக்கில் இருந்த அஹ்லி மருத்துவமனை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து அங்கு சென்று தஞ்சம் புக முடிவெடுத்தனர். விஸ்ஸாமும் அவரது மூத்த குழந்தைகளும் நடந்து செல்ல முடிவுசெய்தனர். ஹிந்த் ரஜாபை அவரது மாமாவின் காரில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. “அன்று முகவும் குளிராக இருந்தது. மழை பெய்தது. அதனால் ஹிந்தை காரில் போகச் சொன்னேன்,” என்கிறார் தாய் விஸ்ஸாம். கார் கிளம்பியதுமே அதே திசையிலிருந்து பலத்த துப்பாக்கிச்சூடு கேட்டதாக அவர் தெரிவித்தார். ஹிந்தின் மாமா பிரசித்தி பெற்ற அல்-அஸார் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம் செய்தார். வழியில் அவர்கள் இஸ்ரேலிய டாங்கிகளை நேருக்குநேர் சந்தித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் காரை அருகிலிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குச் செலுத்தினார்கள். அங்கு அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. உதவிக்காக மன்றாடிய குடும்பம் காருக்குள்ளிருந்து அவர்கள் உதவிக்காக உறவினர்களை அழைத்தனர். அவர்களில் ஒருவர் பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டைத் தொடர்புகொண்டார். அந்த அலுவலகம், 80கி.மீ. தொலைவில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ளது. அப்போது நேரம் மாலை 6 மணி (இந்திய நேரப்படி). ரெட் கிரெசன்ட் உதவி மையத்திலிருந்தவர்கள் ஹிந்தின் மாமாவுடைய அலைபேசிக்குத் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது 15 வயது மகள் லயன் தான் பதிலளித்தார். பதிவுசெய்யப்பட்ட அந்த அழைப்பில், லயன், தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிறார். அவர்களது காருக்கருகில் ஒரு டாங்கி இருப்பதாகக் கூறுகிறார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஒரு அலறலோடு அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரல் பயத்தில் கம்மியிருந்தது. அந்தக் காரில் பிழைத்திருந்தது அவர் மட்டும்தான் என்பதும் அவர் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ளார் என்பதும் தெளிவானது. “இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர். தொலைபேசியில் உரையாடிய ராணா பகிஹ், சிறுமி ஹிந்துடன் சில மணிநேரம் தொடர்பிலிருந்தார். அதேவேளை ரெட் கிரெசன்ட், இஸ்ரேலிய ராணுவத்திடம், அவர்களது ஆம்புலன்ஸை அவ்விடத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரினர். “அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். உதவிக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்,” என்கிறார் ராணா. “தனது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறினாள். பிறகு அவர்கள் ‘உறங்கிக் கொண்டிருப்பதாகக்’ கூறினாள். நாங்கள் ‘அவர்களை உறங்கவிடு, தொந்தரவு செய்யாதே’ என்றோம்,” என்கிறார். ஹிந்த் மீண்டும்மீண்டும் தன்னை யாராவது வந்து காப்பாற்றும்படிக் கேட்டார். “ஒரு கட்டாயத்தில் இருட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் பயந்து போயிருந்தாள். எனது வீடு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டாள். நான் செய்வதறியாமல் உறைந்து போனேன்,” என்று ராணா பிபிசியிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா தொடர்பு துண்டாகும் முன் சிறுமி என்ன சொன்னார்? இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ரானா. “அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம். மாலை இருட்டியபின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, ரெட் கிரெசன்ட் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர். அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன. ஹிந்தின் தொலைபேசி இணைப்பு இன்னும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அவரது தாய் விஸ்ஸாம் கார் திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்தார். மகளுக்காக காத்திருக்கும் தாய் பிபிசியிடம் பேசிய சிறுமியின் தாய் விஸ்ஸாம், “ஒவ்வொரு நொடியும் என் இதயம் வெடிக்கிறது,” என்று “ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஒலியைக் கேட்கும்போதும் ‘அது அவள்தான்’ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வெடிச் சத்தம் கேட்கும் போதும் என் மகளுக்கு என்ன ஆனதோ என்று மனம் பதறுகிறது,” என்கிறார் அவர். காஸாவின் ரெட் கிரெசன்ட் குழுக்களாலும், ஹிந்தின் குடும்பத்தினராலும் அந்த இடத்தை அடைய முடியவில்லை. அவ்விடம் இன்னும் சண்டை நடக்கும் பகுதியில் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதைக் கட்டுப்படுத்துகிறது. ஹிந்துடன் தொலைபேசியில் பேசிய ராணா, “இரவில் தூங்குவதே சிரமமாக உள்ளது. எழுந்தால் அவளது குரல்தான் காதில் கேட்கிறது,” என்கிறார். இஸ்ரேலிய ராணுவத்திடம் அன்று அப்பகுதியில் நடந்த தாக்குதல் குறித்தும், ஹிந்த் குறித்தும், அவரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் குறித்தும் பிபிசி கேட்டது. ஒருநாள் கழித்து மிண்டும் கேட்டது. இஸ்ரேலிய ராணுவம் அதுபற்றி விசாரித்து வருவதாகக் கூறினர். தனது மகள் காணாமல்போய் ஒருவாரம் கழித்தும், விஸ்ஸாம் அஹ்லி மருத்துவமனையில் அவருக்காகக் காத்திருக்கிறார். “அவளது பொருட்களை எடுத்து வந்திருக்கிறேன். அவளுக்காகக் காத்திருக்கிறேன். ஒரு மனமுடைந்த தாயாகக் கேட்கிறேன், இதனை யாரும் மறந்துவிடாதீர்கள்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv2931y3pvvo
  2. புற்றுநோய் என்றால் என்ன? ஏன் வருகிறது? எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன? முனைவர் செ. அன்புச்செல்வன் அறிவியலாளர், பிரிட்டன் 1 செப்டெம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 6 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY/GETTY IMAGES (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) மானுடராய்ப் பிறத்தலும், பிறந்து நோயின்றி வாழ்ந்து மாய்தலும் அரிதரிது. அன்றாடம் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கலங்குகிறோமோ இல்லையோ எந்தவொரு நோயும் வந்துவிடக்கூடாது என்றும், அதிலும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் நமக்கு வரக்கூடாது என்று நினையாமலிருப்பவர் எவருமில்லை. உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும். இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது. ஆனால், 130 கோடிக்கும் மேலாக மக்கள்தொகையுடைய நாட்டில், எழுபதுக்கும் குறைவான (புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைவசதிகளைக் கொண்ட) மருத்துவமனைகள்தாம் இருக்கின்றன என்கிறது National Cancer Grid-இன் ஆய்வறிக்கை. ஆகவேதான், இந்தியப் பெருநகரப் புற்றுநோய் மருத்துவமனைகள் யாவும் நிரம்பி வழிந்தாலும், எல்லோருக்கும் சிகிச்சை கிடைக்கிறதா என்று ஐயமெழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆயினும், இவ்வாறாக நீக்கமறப் பரந்து கிடக்கும் உயிர்க்கொல்லிப் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பற்றியோ, அவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறியும் முறைகள் பற்றியோ போதிய விழிப்புணர்வு நம்மிடையே இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக படித்தறியாத பாமர மக்களுக்குத்தான் புற்றுநோய்கள் பற்றித் தெரிவதில்லை என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடவியலாது. முறையே, 95.2, 87.33 மற்றும் 77.9% படிப்பறிவு பெற்ற பெண்கள் நிறைந்த கேரளா, டெல்லி, மற்றும் தமிழ்நாட்டில்தாம் அதிகமானோர் மார்பகப்புற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதிலும், 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையொன்றின்படி, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப்புற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23%. (Estimated Cancer Incidence, Mortality and Prevalance Worldwide in 2012. 2012. v1.0 (IARC CancerBase No. 11)) இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப்புற்று இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால், இருவரில் ஒருவர் இறந்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தாம் 23.3% பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயினால் (Cervical Cancer) இறந்துபோகிறார்கள். (Lancet Oncol, 15 (6) (2014), pp. e223). இது இப்படியிருக்க, புகையிலைப் பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது. (JCO Global Oncology no. 6 (2020) pp-1063). 'புகை நமக்குப் பகை' என்ற வாசகத்தைப் படித்துவிட்டே புகைப்பவர்களாகவே பலர் இருக்கின்றனர். ஆகவே, புற்றுநோய்களை வகைப்படுத்தி, அவற்றை அழித்தொழிக்க இன்றைய நாளில் அறிவியல் உலகம் எடுக்கும் ஆய்வுகள் பற்றிப் பேசுகிறது இந்தக்கட்டுரை. ஆகவே, நோய்நாடி நோய்முதல்நாடி, நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறேன். புற்றுக்கட்டிகளும் (Malignant) புற்றிலிக்கட்டிகளும் (Benign) புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்துபெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும். லட்சம் கோடிக்கணக்கிலான (Trillions) உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். பொதுவாக, மனிதச்செல்கள் வளர்ந்து பின்னர் 'செல்பிரிதல்' (Cell Division) முறை மூலம் உடலுக்குத் தேவையான புதியசெல்களாக உருவாகின்றன. அவ்வாறு உருவான செல்கள் நாள்பட நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடுவதால், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இதைத்தான் Apoptosis (முறையான செல்லழிவு-Programmed Cell Death) என்கிறது அறிவியல். இவ்வாறு முறையான செல்லழிவு தொடர்ந்து (சங்கிலி) நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது. இதை திருமூலரின் வாக்காக, 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றும் சொல்லலாம். பட மூலாதாரம்,NANOCLUSTERING/SCIENCE PHOTO LIBRARY/GETTY IMAGES சில நேரங்களில் (பல காரணிகளால்) இந்த முறையான செல்லழிவுத் தொடர்ச்சங்கிலி உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப்பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல்க்குவியங்கள் திசுக்கட்டிகள் (Tumours) எனப்படுகின்றன. இவை புற்றுக்கட்டிகள் (Malignant) அல்லது புற்றிலிக்கட்டிகள் (தீங்கற்ற அல்லது Benign) என்றும் இருவகைப்படுத்தப்படுகின்றன. மேற்சொன்னவாறு பல்கிப்பெருகும் புற்றுக்கட்டிகள் (போதிய இடமின்மையால்) அருகிலுள்ள திசுக்களில் பரவுகின்றன, அல்லது படையெடுக்கின்றன. அதோடு, மேலும் புதிய புற்றுக்கட்டிகளை உருவாக்க உடலின் பல்வேறு இடங்களுக்கு (உறுப்புகளுக்கு) செல்லலாம். இவ்வாறு, உடலுறுப்பொன்றில் உருவாகும் புற்றுக்கட்டி, உடலின் மற்றொரு உறுப்பைநோக்கி நகர்ந்து உட்பரவுவது (Invasive) மிக முற்றிய அல்லது வீரியமிக்க (Metastasis) நிலை எனப்படுகிறது. ஆனால், உடலுறுப்பொன்றில் புற்றிலிக்கட்டிகள் தோன்றினால், அவை அருகிலுள்ள திசுக்களுக்குப் பரவாது, அல்லது படையெடுக்காது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டால், இவை பொதுவாக மீண்டும் வளராது. அதேசமயம் புற்றிலிக்கட்டிகள் சில நேரங்களில் உருவில் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்பதால், சில தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, மூளையில் உண்டாகும் புற்றிலிக்கட்டிகள் கண் பார்வை, நினைவுத்திறம் உள்ளிட்ட செயல்பாடுகளோடு உயிருக்குத் தீங்கு விளைவிக்கலாம். திண்ம மற்றும் நீர்மப்புற்றுக்கட்டிகள் (Solid and Liquid Tumours) பொதுவாக, புற்றுக்கட்டிகள் அவைத் தோன்றுமிடத்தைக் கொண்டு, திண்மப்புற்று (Solid Tumours) மற்றும் நீர்மப்புற்று (Liquid Tumours) கட்டிகள் என்று வகைப்படுத்தலாம். சற்று கடினமான செல்களைக்கொண்ட உறுப்புகளான எலும்பு, மார்பகம், நுரையீரல், மண்ணீரல் போன்ற உடலுறுப்புகளில் உருவாகும் திண்மப்புற்றுக்கட்டிகளை Carcinoma வகை என்றும், சற்று மெல்லிய அல்லது இணைப்புத்திசுக்களைக் கொண்ட தசைகள், எலும்புச்சவ்வுகள், கொழுப்புப்படலம் மற்றும் இரத்தக்குழாய்ச் சுவர்களில் தோன்றுபவற்றை Sarcoma வகை திண்மப்புற்றுகள் என்றும் கூறுவார்கள். அதோடு ரத்தம், எலும்புநல்லி (Bone marrow) மற்றும் நிணநீர் (Lymph) போன்ற உடலியல் நீர்மங்களில் உருவாகும் புற்றுக்கட்டிகள் நீர்மப்புற்று (ரத்தப்புற்று - Leukemia, எலும்புநல்லிப்புற்று- Myeloma மற்றும் நிணநீர்க்குழியப்புற்று-Lympoma) என்றும் அழைக்கப்படுகின்றன. புற்றுநோய் வகைகள் மேற்சொன்னவாறு, புற்றுக்கட்டிகளை அவற்றின் தோற்றுவாயைக் கொண்டு வகைப்படுத்தும் மருத்துவ அறிவியல், ஏறக்குறைய 200 வகைகளுக்கும் மேலான புற்றுநோய்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறது. அதாவது, இரண்டு வெவ்வேறு ஆண் (அ) பெண்களுக்கு ஒரே உறுப்பில் புற்றுநோய் வந்திருந்தாலும், அவை ஒரேவகையான புற்றுநோயாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. அதாவது, புற்றுசெல்கள் தோன்றுமிடங்கள், அவற்றின் புற மற்றும் அக வடிவங்கள், அவற்றுள் சுரக்கும் அல்லது உள்வாங்கும் உயிர்வேதிப்பொருள்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றின் உள்வகைகள் பிரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு வரும் மார்பகப்புற்றுநோய் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இயல்பிடப் பால்குழாய்ப்புற்று (Ductal Carcinoma in situ), வன்புகு பால்குழாய்ப்புற்று (Invasive Ductal Carcinoma), அழற்சி (Inflammatory) மற்றும் உட்பரவிய மார்பகப்புற்று (Metastatic Breast Cancer) என்று நான்கு உள்வகைகளாகப் பகுத்துக் கூறப்படுகிறது. இந்த நான்கு வகையான மார்பகப்புற்று நோய்களில் ஏறக்குறைய எண்பதுக்கும் மேற்பட்ட மார்பகப்புற்று செல் வகைகள் இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறது இன்றைய புற்றுநோய் அறிவியல். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில், அதிகமான எண்ணிக்கையில் தோன்றும் அரியவகைப் புற்றுநோய்களில் "மேசொதெளியோமா"வும் ஒன்று. கட்டுமானங்களில், வீட்டுக்கூரைகளில், தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் ஆசுபெசுடாசு (Asbestos)-வை நுகர்வதால், நுரையீரலிலும், அடிவயிறு மற்றும் இதயத்தில் உருவாகும் புற்றுநோய்தான் இது. இவ்வகையான புற்றுநோயானது, பெரும்பாலும் பணியிட மாசு நுகர்வால் (Occupational Exposure) உண்டாகும் கொடுநோயாகும். உலக அளவில், பெரும்பாலான நாடுகளில், ஆசுபெசுடாசுப் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் தொழிலகங்களில்/வீடுகளில் மேற்கூரையாக, பந்தல்களாகப் பயன்படுத்தப்படுவதும், வேலைக்குச் செல்லும் மக்கள் நுகர்வதும் குறையவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதோடு, "மேசொதெளியோமா" இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் ஓராண்டுக்கும் மேலாக உயிர்வாழ்வதில்லை என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம். ஆனால், இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால், இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தே உண்டாக்கி, ஆசுபெசுடாசு பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்தால் மட்டுமே மக்களைக் காக்கமுடியும். புற்றுநோய் மருந்தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகெங்கும், ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் உதவியோடு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு புற்றுநோய் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், மேற்சொன்ன காரணங்களால்தாம் புற்றுநோய்க்கு மருந்தாக்கம் என்பது எளிதாக இல்லை. ஆகவே, கடந்த நூற்றாண்டு முதலாக இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய்களுக்கான மருந்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் குறிப்பாக, வேதிச்சிகிச்சையில் (Chemotherapy) பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள், புற்றுசெல்களை அழிப்பதோடு நல்லசெல்களையும் அழிப்பதால், புற்றுசெல்களைப்போல வேகமாக வளரும் முடி மற்றும் நகச்செல்கள் உதிர்வது தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகும். ஆனாலும், அதைத் தொடர்ந்து, ஒவ்வாமை, வாந்தி, இரத்த உற்பத்தி குறைந்து உடல் நலிதல், பசியின்மை, நினைவாற்றல் குறைபாடு, உயிரிழப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்குவதால் வேதிச்சிகிச்சை என்பதே வேண்டாம் என்னும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். ஆகவே, அறிவியலாளர்கள், மேற்சொன்ன குறைகளற்ற அல்லது தீவிர பக்கவிளைவுகள் குறைந்த, நல்லசெல்களை விட்டுவிட்டு புற்றுசெல்களை மட்டும் தாக்கி அழிக்கவல்ல மருந்துகளை ஆய்ந்து ஆக்க முயல்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக, அறிவியலாளர்களின் சீரிய முயற்சிகளால், Antibody Drug Conjugates (நோயெதிர்ப்பி மருந்திணைமம்) எனப்படும் புற்றுசெல்களை மட்டும் தாக்கியழிக்கும் புதுவகை மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் இந்த வகையான மருந்துகளை பற்றித் தெரிந்துகொள்ளும் முன்னர் 'ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி' எனப்படும் Monoclonal Antibody பற்றித் தெரிந்துகொள்வோம். ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி என்பது புற்றுச்செல்களிலிருந்து, ஆய்வகச்சூழலில் (குளோனிங் முறையில்) பிரித்தெடுக்கப்படும் ஒருவகை புரதம் (Protein) ஆகும். இந்தப்புரதங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், புற்றுச்செல்களை அழிக்கவல்ல வேதிமருந்தை இணைத்து நோயெதிர்ப்பி மருந்திணைமம் செய்யப்படுகிறது. அவ்வாறு, மருந்திணைக்கப்பட்ட புரதம், புற்றுநோயாளியின் உடலுக்குள் ஊசிமூலமாகச் செலுத்தப்படும்போது, நேரடியாக மீண்டும் அதே புற்றுச்செல்களுக்கே செல்கிறது. அதாவது, புற்றுசெல்களிலிருந்தே இந்த வகைப் புரதங்கள் பிரித்தெடுக்கப்பட்டது என்பதால், நோயெதிர்ப்பி மருந்திணைமம் அந்தப் புற்றுச்செல்களை மட்டுமே நாடிச்செல்லும். புரதத்துடன் இணைந்த மருந்தானது, வெகு எளிதாக புற்றுச்செல்களுக்குள் மட்டும் உள்ளே சென்று DNA அழிப்பு, பிறழ்ச்சி (Mutation) போன்ற முறைகளில் செல்களைச் சுருக்கி அழிக்கும். இதனால், நல்ல செல்கள் குறைவாக அழிவதால், பக்கவிளைவுகள் குறைகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றுவரை, ஏறக்குறைய பதினோரு நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்பதால் 2015ஆம் ஆண்டு முதலாக இன்றுவரை பல்வேறு புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எண்ணிக்கை ஐந்து முதல் பத்தாண்டுகள் உயர்ந்துள்ளது. அதோடு, எண்பதுக்கும் மேலான நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் கடைநிலை மருத்துவச்சிகிச்சைச் சோதனைகளில் இருக்கின்றன. அண்மையில், அமெரிக்காவில் (Memorial Sloan Kettering Cancer Center, New York, USA) மலக்குடல்ப்புற்று (Rectal Cancer) நோயினால் பாதிக்கப்பட்ட பதினான்கு நோயாளிகளுக்கு dostarlimab-gxly என்னும் நோயெதிர்ப்பி மருந்திணைமம் (சோதனைக்காக) செலுத்தப்பட்டது. (N. Engl. J. Med. 2022, 386, pp 2363; DOI: 10.1056/NEJMoa2201445). இந்தச் சோதனையில், பதினான்கு நோயாளிகளும் 100% மலக்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். புற்றுநோய் மருந்தாக்கத்துறையில் இதுவொரு பெருஞ்சாதனை என்பதோடு, வெவ்வேறு வகைப் புற்றுநோய்களுக்கும் நோயெதிர்ப்பி மருந்திணைம முறையில் மருந்தாக்கலாம் என்ற நம்பிக்கையை அறிவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புற்றுநோய்களுக்கு முடிவு கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். (முனைவர் செ. அன்புச்செல்வன், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர்புதூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயிர்க்கனிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகம், போர்ச்சுகல்-இலிசுபன், இங்கிலாந்து-பர்மிங்காம் மற்றும் ஹல் பல்கலைக்கழகங்களில் புற்றுநோய் மருந்தாக்கம் மற்றும் MRI வேதியியலில் முதுமுனைவராகப் பணியாற்றியவர். ஐரோப்பிய ஆணையத்தால் வழங்கப்பெறும் மேரி-கியூரி முதுமுனைவு ஆராய்ச்சி விருதாளராகிய இவர் தற்போது பிரித்தானியாவில் Antibody Drug Conjugate Cancer Therapeutics துறையில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்) https://www.bbc.com/tamil/science-62745134
  3. Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 09:05 PM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக 2020 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க சதி செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டவிலக்களிப்பிற்கான உரிமையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்காக தனக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என டிரம்ப் தாக்கல் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பல வழக்குகளில் தனக்கு விடுபாட்டுரிமையுள்ளது என தெரிவித்துவந்த டிரம்பிற்கு இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்தால் இந்த விவகாரம் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் பழமைவாதிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175743
  4. போரில் மனைவி, குழந்தைகளை இழந்தும் பணியில் பின்வாங்காத ‘பாலஸ்தீன பத்திரிகையாளர்’ – கௌரவிக்கும் கேரள அரசு! 06 FEB, 2024 | 11:45 AM இஸ்ரேல் – ஹமாஸ் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு Wael Al-Dahdouh சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரள அரசுகௌரவிக்க உள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், Wael Al-Dahdouh துவக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிவந்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை தஹ்துத் பதிவு செய்தார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன்பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது தியாகத்தை போற்றும் விதமாக பல்வேறு செய்தியாளர் சங்கங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளா மீடியா அகாடமி ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது இந்த ஆண்டு தஹ்துத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்குவார் எனவும், இந்த விருது மற்றும் பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தஹ்துத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/175693
  5. Published By: VISHNU 06 FEB, 2024 | 05:49 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து, சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றி அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப் பதிவு செய்து, சொகுசு வாகன இறக்குமதிக்காக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி இவற்றுக்குச் செலுத்தப்படாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/175734
  6. ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் - நாமல் தெரிவித்திருப்பது என்ன? Published By: RAJEEBAN 06 FEB, 2024 | 05:51 PM கடந்தகாலங்களில் இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிய ஜேவிபியின் இந்திய விஜயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடந்தகாலங்களில் பல இந்திய முதலீடுகளை முதலீட்டாளர்களை இழந்தமைக்கு ஜேவிபியே முக்கிய காரணம்எனஅவர் தெரிவித்துள்ளார். ஜேவிபியின் இந்திய எதிர்ப்புகொள்கையால் சம்பூர் மின்திட்டம் கைவிடப்பட்டமை இதற்கான ஒரு உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஜேவிபி தற்போது வேறு கொள்கையை பின்பற்றுகின்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது இது சிறந்த விடயம என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் ஜேவிபி இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் வருவதற்கு ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175735
  7. பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய் பட மூலாதாரம்,PA MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், ஷான் காக்லன் பதவி, அரச செய்தியாளர் 6 பிப்ரவரி 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது 6 பிப்ரவரி 2024, 04:34 GMT பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) வீக்க பிரச்னைக்காக அரசர் எடுத்துக் கொண்ட சிகிச்சையின்போது இந்தப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல. என்ன வகையான புற்றுநோய் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அரண்மனையின் அறிக்கையின்படி அரசர் திங்களன்று "வழக்கமான சிகிச்சைகளை" தொடங்கினார். 75 வயதான அரசர், அவரது பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருப்பார். அரசி கமீலா மற்றும் இளவரசர் வில்லியம் அவருக்கு உதவியாக இருப்பார்கள். புற்றுநோயின் நிலை அல்லது முன்னரே கணிக்கப்பட்டது பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. அரசர் 'நேர்மறையாக இருக்கிறார்' அரசர் "தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நேர்மறையாக உணர்வதாகவும் விரைவில் முழு பொதுப் பணிக்கு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும்" பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அரண்மனையின் அறிக்கை விவரம் அரசர் தனது பொது நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தினாலும், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார். அவர் ஞாயிற்றுக்கிழமை சாண்ட்ரிங்ஹாமில் ஒரு தேவாலய சேவையில் பங்கேற்றார், அங்கு அவர் கூட்டத்தை நோக்கி கையசைத்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் சிகிச்சை செய்யப்பட்டது. புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. புரோஸ்டேட் தொடர்பாக அரசர் எடுத்துக் கொண்ட சமீபத்திய சிகிச்சையின் போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பார், ஆனால் புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மத்திய லண்டனில் அரசருடன் வந்த அரசி கமீலா அரசப் பணிகளில் இருந்து விலகியிருப்பார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்தார். 75 வயதான அரசர், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார். அரசர் தனது பொது செயல்பாடுகளில் தற்காலிகமாக விலகியிருப்பார். அரசி கமீலா, இளவரசர் சார்ல்ஸ் ஆகியோர் மன்னரின் பணிகளில் உதவியாக இருப்பார்கள். Play video, "Watch: King Charles leaves hospital with Queen Camilla", கால அளவு 0,34 00:34 காணொளிக் குறிப்பு, புரோஸ்டேட் வீக்கத்துக்கான சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அரசர் மூன்றாம் சார்ல்ஸ். ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் அடங்கும். கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களைக் கொல்லப் பயன்படும் மருந்துச் சிகிச்சையாகும்; கதிரியக்க சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை அழிக்க கதிர்வீச்சு பயன்படுத்தப்படும் சிகிச்சை; இவையில்லாமல் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து தாக்கும் புற்றுநோய் மருந்துகளும் பயன்படுத்தப்படும் பட மூலாதாரம்,PA MEDIA பிரிட்டனில் இரண்டில் ஒருவருக்குப் புற்றுநோய் பிரிட்டன் மக்களில் இரண்டில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் எதாவது ஒருவித புற்றுநோய் உண்டாகிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை வலைத்தளத்தின்படி, உலகில் 200-க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் உள்ளன. இங்கிலாந்தில் மிகவும் பொதுவானவை மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்கள் ஆகும். பல வகையான புற்றுநோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு வயதாக ஆக அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான (36%) புதிய புற்றுநோய்கள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிப்பதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மக்களவை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் ஆகியோர் அரசர் ‘முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய’ வாழ்த்தினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கவலையை தெரிவித்ததோடு, மன்னரிடம் பேசவிருப்பதாகவும் கூறினார். பைடன் எக்ஸ் தளத்தில் இட்ட ஒரு பதிவில், “புற்றுநோயைக் கண்டறிந்து, சிகிச்சை பெற்று, அதைக் கடந்து வருவதற்கு நம்பிக்கையும் தைரியமும் தேவை. ஜில் [பைடனின் மனைவி] மற்றும் நான் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மக்களுடன் இணைந்து, அரசர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடையப் பிரார்த்திக்கிறோம்," என்று தெர்வித்திருந்தார். பைடனின் மகன் பியூ, தனது 46 வயதில் மூளை புற்றுநோயால் காலமானார். மேலும் அவரது நீண்டகால நண்பரான குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கெய்னும் 2018-இல் புற்றுநோயால் காலமானார். அரசரின் சுற்றுப்பயணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசியும் அரசர் சார்ல்ஸின் தாயாருமான இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் சார்ல்ஸ் அரியணை ஏறினார். அடுத்த மே மாதம் அவருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. அரசரும் அரசியும் வரும் மே மாதம் கனடாவிற்கும், அக்டோபர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சமோவாவிற்கும் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அரசர் முழு பொதுப் பணிகளுக்குத் திரும்புவதற்கான தேதி எதுவும் பரிந்துரைக்கப்படாத நிலையில், இந்தச் சுற்றுப்பயணங்கள் நடைபெறுமா என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. https://www.bbc.com/tamil/articles/c51r30qvzr4o
  8. Published By: VISHNU 06 FEB, 2024 | 08:03 PM காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பூநகரி, ஜெயபுரம் பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 472 ஏக்கர் காணிகளே கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், பிரதேசத்தினை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி, காணிகளைப் பெற்றுக் கொள்வோர் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபடுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், அறுவடை செய்யப்படும் விளைச்சலை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் தீர்மானித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்நடவடிக்கை மூலம் பூநகரி, ஜெயபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் நேரடியாக பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொள்ள இருப்பதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரமுந்திரிகை பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான மூலப் பொருட்கள் நியாயமான விலையில் தாராளமாக கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175739
  9. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,AGS கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது அடுத்த திரைப்படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தமிழ் திரைத் துறையை எந்த அளவுக்கு பாதிக்கும்? தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் துவங்கியிருப்பதாகவும் அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்றும் அறிவித்திருக்கும் நடிகர் விஜய், "அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று கூறியிருக்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஸ்நேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. இது விஜய் நடிக்கும் 68வது படம். இந்தப் படத்திற்குப் பிறகும் ஒரு படம் நடிக்கப்போவதாக விஜய் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு நடிக்கப் போவதில்லை என தற்போது விஜய் அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜயின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவை குறிப்பாக திரையரங்குகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,ACTORVIJAY/KAYALDEVARAJ கோவிட் பரவல் மற்றும் ஓடிடிகளின் வருகைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதுமே திரையரங்குகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆயிரக்கணக்கில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது 800க்குள் சுருங்கியிருக்கிறது. எல்லா வாரங்களிலும் திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும்கூட, அப்படி வெளியாகும் படங்களில் பல 2-3 நாட்கள்கூட ஓடுவதில்லை என்பதால், அந்தப் படங்களைத் திரையிட திரையரங்குகள் ஆர்வம் காட்டுவதேயில்லை. இதனால், பல வாரங்கள் திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன. 2000கள் வரை சென்னை மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களில்கூட, தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலப் படங்களும் தொடர்ச்சியாக வெளிவந்தன. ஆனால், 2020க்கு சற்று முன்பிருந்து இந்தப் போக்கு மாற ஆரம்பித்தது. தமிழில் வெளிவரும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்தார்கள். தற்போதைய சூழலில் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பெரிய அளவில் முதல் நாள் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிகிறார்கள். மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக இருப்பதாக செவிவழி விமர்சனம் பரவினால் கூட்டம் வருகிறது. ஆனால், அதுவரை அந்தப் படம் திரையரங்கில் தாக்குப்பிடித்திருக்க வேண்டும். திரையரங்குகளுக்கு ரசிகர்களை அழைத்து வரும் இந்தப் பெரிய நடிகர்களின் படங்களும் அடிக்கடி வருவதில்லை என்பதுதான் திரையரங்குகளின் பிரச்னை. ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் வெளிவரும் வகையில்தான் நடிக்கிறார்கள். அஜீத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு படங்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில்தான் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் விஜய். இது எந்த அளவுக்கு திரையரங்குகளைப் பாதிக்கும்? அதிகபட்ச வர்த்தகத்தைத் தரும் நடிகராக இருக்கும் விஜய் பட மூலாதாரம்,@ACTORVIJAY விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்துவது பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பதை, சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான அந்தணன். "சில நாட்களுக்கு முன்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2-3 படங்களை நடிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் ரசிகர்கள் வருகிறார்கள். கேண்டீன், பார்க்கிங் என எல்லா வர்த்தகமும் அப்போதுதான் முழுமையாக நடக்கும். இதில் விஜய்தான் அதிகபட்ச வர்த்தகத்தைத் தரும் நடிகராக இருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் சுமார் 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. வருடத்திற்கு இரண்டு படம் நடித்தால், கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய். அவர் திடீரென நடிப்பதை நிறுத்தினால், இந்த 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் நின்று போகும்" என்கிறார் அந்தணன். தயாரிப்பாளரான தனஞ்செயனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "ஏற்கனவே திரையரங்குகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்களைத் திரையிட்டால் ஆட்களே வருவதில்லை. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும்தான் வருகிறார்கள். சூழல் அம்மாதிரி இருக்கும்போது திடீரென ஒரு பெரிய நடிகர் நடிப்பதை நிறுத்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். லியோ படம் வெளிவந்து எவ்வளவு நாட்களாகின்றன? ஆனால், இப்போதுவரை அந்தப் படம்தான் அதிக வசூலைச் செய்த படமாக இருக்கிறது. நிலைமை இம்மாதிரி இருக்கும்போது அவர் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாகச் சொல்வது ஒரு அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும்" என்கிறார் தனஞ்செயன். ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் அப்படி கருதவில்லை. திரையரங்குகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருதுகிறார்கள் அவர்கள். "விஜய் திரையுலகை விட்டுச் செல்வது என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆனால், அது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர் வருடத்திற்கு ஐந்தாறு படங்களிலா நடிக்கிறார். அவர் நடித்து வருடத்திற்கு ஒரு படம் வருகிறது. சில சமயங்களில் அதைவிட கூடுதல் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே அந்தப் படத்தை மட்டும் நம்பி திரையரங்குகள் இயங்குவதில்லை. இப்போது அந்த ஒரு படம் வராமல் போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது" என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன். திரைத்துறையில் இருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள் பட மூலாதாரம்,ACTORVIJAY/X பொதுவாக அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிப்பதை உடனடியாக நிறுத்திவிடுவதில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்த படியே படங்களில் நடித்ததோடு, அந்தப் படங்களில் தனது கட்சியையும் முன்னிறுத்தி வந்தார். 1972 அக்டோபரில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகும்கூட, நடிப்பதை நிறுத்தவில்லை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு, உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை, உரிமைக் குரல், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் முதலமைச்சரான பிறகே படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு, தனது படங்களை புதிய கட்சியின் பிரசார வாகனமாகவும் மிக வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர். "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" (மீனவ நண்பன்), "ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகர சபையிலே" (நேற்று இன்று நாளை), "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்" (உலகம் சுற்றும் வாலிபன்) என்று தனது பாடல்களிலேயே எதிர்க்கட்சியினரைக் குறிவைத்தார் எம்.ஜி.ஆர். விஜயகாந்தைப் பொறுத்தவரை, கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரது மன்றக் கொடி, திரைப்படங்களில் இடம்பெற்றது. கட்சியைத் துவங்கிய பிறகும், சுதேசி, பேரரசு, தர்மபுரி, சபரி, அரசாங்கம், மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி என நடித்துக்கொண்டே இருந்தார். 2010ஆம் ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. ரஜினிகாந்தும்கூட அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகும் படங்களில் நடித்துக்கொண்டேயிருந்தார். 2017ல் தான் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதற்குப் பிறகு காலா, 2.0, தர்பார் ஆகிய படங்களில் நடித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்துவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2018ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கிய கமல், அதற்குப் பிறகு விஸ்வரூபம் - 2, விக்ரம் ஆகிய படங்களில் நடித்து வெளியிட்டார். இதே காலகட்டத்தில் இந்தியன் - 2 படத்திலும் நடித்தார். தற்போது அரசியலில் இருக்கும் கமல், இப்போதும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்? பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் விஜய்க்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. விஜயைத் தவிர்த்த மற்றவர்கள் அனைவருமே தங்கள் திரைவாழ்வின் உச்சத்தைக் கடந்த பிறகே அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால், விஜய் தன் திரைவாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடப் போவதாகச் சொல்லியிருக்கிறார். "விஜய் சில காலத்திற்கு விலகியிருப்பதாகச் சொல்லலாம். ஏன் முழுமையாக விலகுவதாகச் சொன்னார் என்பது புரியவில்லை. அரசியலுக்கு வந்த பல நடிகர்கள் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல அவரும் செய்யலாம்" என்கிறார் தனஞ்சயன். ஆனால், தமிழ்த் திரைத்துறையின் பிரச்னை வேறு என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். "தமிழ்த் திரையரங்குகளைப் பொருத்தவரை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது. திரையரங்குகளை நடத்துவதே மிகக் கடினமான காரியமாகிவிட்டது. சென்னையில் அடுத்த சில மாதங்களில் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளை மூடப்போகிறார்கள். கே.கே. நகரில் உள்ள நான்கு திரையரங்குகளைக் கொண்ட காம்ப்ளக்ஸ், அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கு ஆகியவை விரைவில் மூடப்படவிருக்கின்றன. ஓடிடி தளங்கள் வந்த பிறகு திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம்" என்கிறார் அவர். ஆனால் இதில் பெரிய புதிர், சினிமா பிரபலத்தை வைத்து அரசியலில் நுழையும் விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தனது சினிமாவை அரசியலுக்காக பயன்படுத்தாமல், அதிலிருந்து விலக விரும்புவது ஏன் என்பதுதான். https://www.bbc.com/tamil/articles/c0vj9x09gn8o
  10. செங்கடலில் இன்றும் ட்ரோன் மூலம் சரக்கு கப்பல் மீது தாக்குதல் தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது என இங்கிலாந்து இராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்தது. தாக்குதல் நடந்த கப்பல் இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஆகும். பார்படோஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக கப்பல் அருகே படகு ஒன்று சென்றுள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. https://thinakkural.lk/article/290800
  11. வடக்கு காசாவில் உணவு பொருட்கள் ஏற்றிச்சென்ற லொரி மீது தாக்குதல்: உதவி கிடைக்காமல் மக்கள் தவிப்பு பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4ஆவது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லொரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லொரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகாமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லொரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லொரி கடுமையாக சேதமடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லொரி ஒன்று செல்ல காத்திருந்தது. அந்த லொரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என தெரிவித்தது. சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகாமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகாமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். https://thinakkural.lk/article/290706
  12. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம்? தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கட்சியின் சின்னம் குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கட்சியின் சின்னம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/290682
  13. முதலாவது அரை இறுதியில் நடப்பு சம்பியன் இந்தியா - வரவேற்பு நாடு தென் ஆபிரிக்கா 06 FEB, 2024 | 01:02 PM (நெவில் அன்தனி) பதினைந்தாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் முதலாவது அணியைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி தென் ஆபிரிக்காவின் பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி 16 தினங்களில் 38 ஆட்டங்கள் விளையாடப்பட்ட நிலையில் அடுத்த உலக சம்பியன் யார் என்பதற்கான போட்டியில் இந்தியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளே எஞ்சியுள்ளன. இந்த நான்கு அணிகளில் இந்தியா முழு சுற்றப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3 ஆட்டங்களில் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலிருந்து துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் இந்தியா தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்திவந்துள்ளது. இந்தியாவின் முஷீர் கான் (2), சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, அணித் தலைவர் உதய் சஹாரன் ஆகியோர் சதங்கள் குவித்து துடுப்பாட்டத்தில் அசத்தியுள்ளனர். பந்துவீச்சில் சௌமி பாண்டே 16 விக்கெட்களையும் நாமன் திவாரி 9 விக்கெட்களையும் கைப்பற்றி இந்திய பந்துவீச்சாளர்களில் முன்னிலையில் உள்ளனர். எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சைப் போன்று வேறு எந்த அணியிடமும் இந்தியா எதிர்கொள்ளவில்லை. தென் ஆபிரிக்காவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிவேனா மஃபாக்கா இந்த சுற்றுப் போட்டியில் மூன்று தடவைகள் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்து மொத்தமாக 18 விக்கெட்களைக் கைப்பற்றி எதிரணிகளை திக்குமுக்காட வைத்துள்ளார். எவ்வாறாயினும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மும்முனை கிரிக்கெட் தொடரில் கிவேனா மஃபாக்காவை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டிருந்ததை இங்கு நினைவுபடுத்தவேண்டும். மறுபகத்தில் தென் ஆபிரிக்காவும் இதுவரை திறமையாகவே விளையாடி வந்துள்ளது. ஸ்டீவ் ஸ்டோக், லுவான் ட்றே ப்ரிட்டோரியஸ் மற்றும் டெவன் மராயஸ், டேவிட் டீஜர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்துள்ளனர். கிவேனா மஃபாக்காவைவிட ரைலி நோட்டனும் சிறப்பாக பந்துவீசி 11 விக்கெடகளைக் கைப்பற்றியுள்ளார். குழுநிலை போட்டிகளுக்கான சுற்றில் இங்கிலாந்திடம் மாத்திரம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா மற்றெல்லா போட்டிகளிலும் எதிரணிகளை வெற்றிகொண்டிருந்தது. இரண்டு அணிகளிலும் திறமையான துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் விலோமுவர் பார்க்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டி இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது நிச்சயம். அணிகள் இந்தியா: ஆதர்ஷ் சிங், அர்ஷில் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (தலைவர்), ப்ரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், அராவெல்லி அவனிஷ், முருகன் அபிஷேக், நாமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே. தென் ஆபிரிக்கா: லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், ஸ்டீவ் ஸ்டோக், டேவிட் டீஜர், ரிச்சர்ட் செலெட்ஸ்வேன், டெவன் மராயஸ், ரொமாஷன் பிள்ளை, யுவான் ஜேம்ஸ் (தலைவர்), ரைலி நோட்டன், ட்ரைஸ்டன் லூஸ், நிக்கோபானி மோக்கெனா, கிவேனா மஃபாக்கா. https://www.virakesari.lk/article/175680
  14. கெஹலியவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டது! Published By: DIGITAL DESK 3 06 FEB, 2024 | 04:55 PM சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இவரது இராஜினாமா இம்மாதம் 3 ஆம் முதல் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/175730
  15. இந்த வருடத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290787
  16. Published By: DIGITAL DESK 3 06 FEB, 2024 | 11:33 AM மலையகத்தில் இயங்கி வரும் 863 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக 2,535 ஆசிரிய உதவியாளர்களை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் தெரிவிக்கின்றார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், இந் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கல்வி அமைச்சால் கோரப்படவுள்ளன. இதன் மூலம் ஆசிரிய உதவியாளர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்து கற்கும் பாடத்துறையில் பட்டம் பெற வேண்டும் அல்லது ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தனது நியமன பாடத்திற்கான ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். குறித்த தகமைகளை பூர்த்தி செய்தவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 தரத்திற்கு உள்வாங்கப்பட்டு இலங்கை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவர். இந்நியமனத்தின் மூலம் மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்படும் என நான் நம்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/175689
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 45 ஆண்டுகளுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொடுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே அஸ்வினுக்குத் தேவைப்படுகிறது. சென்னைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நிச்சயம் இந்த புதிய மைல்கல்லை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன டாப்-5 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த அஸ்வின் 21-ஆம் நூற்றாண்டில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும், திறமைகளையும் கற்றுக் கொண்டவர் அஸ்வின். குறிப்பாக அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகவே இருந்து வந்துள்ளார். அஸ்வினின் புத்திக்கூர்மை, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராக தனி ராஜ்ஜியமே நடத்துவார். அணிக்கு நெருக்கடியான காலத்தில் அறிமுகமான அஸ்வின் இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தாற்போல் நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனைத் தவிர வேறுயாரும் அடையாளம் காணப்படாத காலம். பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அஸ்வின் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று வியப்பில் ஆழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார் அதிவேக சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின் அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிவேகமாக 250 முதல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும், ஓர் ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என 4 முறை வீழ்த்தியுள்ளார். 2016-17-ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும், வங்கதேசத்துக்கு எதிதாரன டெஸ்டில் ஒரே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், முதலிரு டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 499 விக்கெட்டுகளுடன் நின்றுவிட்டார். அடுத்த டெஸ்டில் 500-வது விக்கெட்டை அஸ்வின் எட்டிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு அஸ்வின் சாதனை படைத்தால், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். ஒருவேளை 500வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் அடுத்த டெஸ்டில் எடுத்துவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இங்கிலாந்துக்கு எதிராக ‘செஞ்சுரி விக்கெட்’ அது மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் முறியடித்து 100 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அதைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ் தலா 85 விக்கெட்டுகள், இசாந்த் சர்மா 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை அஸ்வின் எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் எட்டினால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினின் எகனாமி ரேட் 2.78 ரன்கள்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார் அஸ்வினின் பந்துவீச்சு சாதனைகள் அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் 9-வது இடத்தில் இருக்கிறார். அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தி 5-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வயதான வீரர் (36 வயது, 298 நாட்கள்) சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்து 9-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார். 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகவேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வைத்துள்ள அஸ்வின், 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 2-வது பந்துவீச்சாளராக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 10 முறை தொடர் நாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjk6ljnmv05o
  18. சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை – அலி சப்ரி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இருநாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில் எவ்வித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசாங்கம் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/290719
  19. ஐயா அது வந்து 1948 இல் இருந்து 1970 வரையான கால இலங்கை வரலாற்றை ஆழ்ந்து படியுங்கள். இதுக்கு மேல எழுத காப்புச் சட்டம் தடுக்கிறது.
  20. 06 FEB, 2024 | 01:28 PM வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் பாடசாலைக்கான அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றது. இதன்போது வடமாகாணங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏற்ப்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரபரீட்சைகளில் வடக்குமாகாண மாணவர்களின் சித்திவிகிதங்கள் ஒப்பீடு செய்யப்பட்டதுடன், மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் வடமாகாணத்தை பொறுத்தவரை வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டங்களே மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே அவர்களை இனம்கண்டு அந்த மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிக்கவேண்டிய தேவை தொடர்பாக அறிவுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டது. நிகழ்வில் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான், வடக்குமாகாண ஆளுனர் எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், கல்வி அமைச்சின்மேலதிக செயலாளர் காயத்திரி அபேகுணசேகர, மற்றும்பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/175706
  21. 50 நாட்களில் 50,000 பேர் கைது! கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 124 கிலோ 541 கிராம் ஹெரோயினும், 208 கிலோ 290 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 2,678 கிலோ கஞ்சாவும், 306,821 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290774
  22. சுற்றாடல்துறை அமைச்சு பொறுப்பிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல இராஜினாமா! Published By: DIGITAL DESK 3 06 FEB, 2024 | 02:00 PM விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது. நேற்று திங்கட்கிழமை (05) அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், மூன்றாம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175711
  23. எம்மாலும் ஒரு முடிவுக்கு வர முடியாது திணறுகிறோம்! தொடருமா? தொடராதா?
  24. 106 ஓட்டங்களால் வெற்றியீட்டி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது இந்தியா Published By: VISHNU 05 FEB, 2024 | 11:08 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது. இந்தப் போட்டி நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இளம் துடுப்பாட்ட நட்சத்திரம், புதிய அதிரடி நாயகன் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த கன்னி இரட்டைச் சதம், ஜஸ்ப்ரிட் பும்ராவின் 9 விக்கெட் குவியல், இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மான் கில் குவித்த சதம் என்பன இந்தியாவை வெற்றிபெறச் செய்தன. நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 1196 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. இந்த மொத்த எண்ணிக்கையில் இரண்டு அணிகளிலும் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் பகிர்ந்த 90 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. அத்துடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் குவித்த 396 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் பிற்பகல் 399 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து, நேற்றை நான்காம் ஆட்டத்தில் சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 209, ஷுப்மான் கில் 34, ராஜாத் பட்டிடார் 32, ஜேம்ஸ் அண்டர்சன் 47 - 3 விக்., ரெஹான் அஹ்மத் 65 - 3 விக்., ஷொயெப் பஷிர் 138 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 253 (ஸக் குரோவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47, ஜஸ்ப்ரிட் பும்ரா 45 - 6 விக், குல்தீப் யாதவ் 71 - 3 விக்.) இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 255 (ஷுப்மான் கில் 104, அக்சார் பட்டேல் 45, டொம் ஹாட்லி 77 - 4 விக்., ரெஹ்மான் அஹ்மத் 88 - 3 விக்., ஜேம்ஸ் அண்டர்சன் 29 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 399 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 292 (ஸக் குரோவ்லி 73, பென் ஸ்டோக்ஸ் 36, டொம் ஹாட்லி 36, ஜஸ்ப்ரிட் பும்ரா 46 - 3 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 72 - 3 விக்.) ஆட்டநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா இன்னும் பத்து தினங்களில் இந்த இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. அந்த டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் அண்டர்சனும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பந்துவீச்சில் மைல்கற்களை எட்டிப்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் அண்டர்சன் இதுவரை 695 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 500 விக்கெட்களையும் டெஸ்ட் போட்டிகளில் கைபற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/175666

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.