Everything posted by ஏராளன்
-
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023இல் 10 ஆயிரம் முறைப்பாடுகள்!
Published By: NANTHINI 15 FEB, 2024 | 11:14 AM சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு 10 ஆயிரம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிக்கையில், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் 9,434 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. அவற்றில் குறிப்பாக, 2,242 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 472 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 404 முறைப்பாடுகள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 51 முறைப்பாடுகள் சிறுமிகள் மீதான வன்முறைகள் தொடர்பானவை. 6 முறைப்பாடுகள் சிறுவர்களை ஆபாசத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பானவை. இவை தவிர, சிறுவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துதல், தொழில்களுக்கு அமர்த்துதல், குடும்ப வன்முறையை பிரயோகித்து துன்புறுத்தல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வியை பெற்றுத் தராதிருத்தல் போன்றவை தொடர்பிலும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை, கடந்த 2022இல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உரிய திணைக்களங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க தற்போது காணப்படும் சில சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176420
-
அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 11:12 AM சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176415
-
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில்
நிறைவுக்கு வந்தது இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு! Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 10:33 AM கடந்த இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று வியாழக்கிழமை (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவான DAT ஐ தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலை சேவைகளை தடங்கலின்றி முன்னெடுக்க 1,400க்கும் அதிகமான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சுகாதாரத்துடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176417
-
பெருந்தோட்ட மக்களை தொழில்முனைவோராக வலுவூட்ட விசேட சமூக உடன்படிக்கை கைச்சாத்து - சஜித்
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனேயே சஜித்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் - வேலுசாமி இராதாகிருஷ்ணன் Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 09:01 AM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது நோக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (14) ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு என்பவை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் மூலமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அவர்கள் காணி உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு விசேட செயலணியை உருவாக்குவதற்கு சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றினால் குறித்த ஜனாதிபதி செயலணியின் ஊடாக அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கின்றார். அதன் அடிப்படையிலேயே நாமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/176411
-
அதிகரிக்கப்பட்ட வற் வரியை விரைவில் குறைப்போம் - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு
Published By: VISHNU 15 FEB, 2024 | 01:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்) மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்னும் சில மாதங்களில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் தற்போதுள்ள ஆட்சி முறையில் செல்வதா மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதே மக்களுக்கு இருக்கும் சவாலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (14) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது சில கடுமையான தீர்மானங்களை எடுப்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக 2022இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும்போது திறைசேரியில் 852 பில்லியன் ரூபா மறை பெருமானத்திலேயே இருந்தது. ஆனால் 2023 நிறைவடையும்போது எமது அடிப்படை செலவுகளுக்கு ஒதுக்கிய பின்னர் திறைசேரியில் 52 பில்லியன் ரூபா மீதமாகி இருந்தது. அனைவரின் அர்ப்பணிப்பின் மூலமே இதனை செய்ய முடியுமாகியது. விசேடமாக நிதி அமைச்சின் அதிகாரிகள் திறைசேரியின் அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சேவையின் மூலமே இந்த இலகக்கை எமக்கு எட்ட முடிந்தது. மேலும் இந்த பொருளாதார அபிவிருத்திக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டதுடன் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாகச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முறையான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் வற்வரியை நூற்றுக்கு 15வீம் வரை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம். மேலும் நாடு ஸ்திர நிலையை அடைந்துவரும் நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தற்போது முன்னெடுத்துச்செல்லப்படும் ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமைக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டத்தை அவ்வாறே தொடர்ந்து முன்னுக்குக் கொண்டு செல்வதா என்பதே மக்கள் முன்னால் இருக்கும் சவாலாகும். அதனால் மனங்களை மாற்றும் வார்த்தைகளுக்கு ஏமாந்துவிடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176408
-
இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
பெத்தும் மீண்டும் அபார சதம், தொடரில் 346 ஓட்டங்கள்; ஆப்கானுடனான தொடரை இலங்கை முழுமையாக சுவீகரித்தது Published By: VISHNU 14 FEB, 2024 | 10:40 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முழுமையாக சுவீகரித்தது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதம், அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின. இந்தத் தொடரில் அபாராமாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 52ஆவது போட்டியில் 44ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரர்களில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார். இன்றைய கடைசிப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 173 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் இந்தத் தொடரில் பகிர்ந்த இரண்டாவது சத இணைப்பாட்டம் இதுவாகும். முதலாவது போட்டியில் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக்குறைவான அடி தெரிவினால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 66 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசினார். அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழந்த பின்னர் குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 78 ஓட்டங்களை பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார். குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்.. மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தம் நிஸ்ஸன்க 101 பந்துகளில் 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார். அணியின் வெற்றிக்கு மேலும் 14 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார். சதீர சமரவிக்ரம 8 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் வெற்றி இலக்கை அடைய உதவினர்.. பந்துவீச்சில் கய்ஸ் அஹ்மத் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது. ரஹ்மத்துல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸமத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட உதவியுடன் ஆப்கானிஸ்தான் 40ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அதன் பின்னர் மோசமாகத் துடுப்பெடுத்தாடி கடைசி 6 விக்கெட்களை வெறும் 43 ஓட்டங்களுக்கு இழந்தது. மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குர்பாஸ் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார். குர்பாஸைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 3 விக்.) இந் நிலையில் ரஹ்மத் ஷாவும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் 4 ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ரஹ்மத் ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 223 ஓட்டங்களாக இருந்தபோது இக்ரம் அலி 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவர் உட்பட கடைசி 6 விக்கெட்கள் 43 ஓட்டங்களுக்கு சரிந்தன. அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 54 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டு வெளியேறினார். இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி 9 விக்கெட்களை 25 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 3 வருடங்களுக்குப் பின்னர் விளையாடும் அக்கில தனஞ்சய 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார். அவர் மூன்று போட்டிகளில் ஒரு இரட்டைச் சதம், ஒரு சதம் உட்பட 173.00 என்ற சராசரியுடன் 346 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாகவும் இது அமைந்தது. முதல் போட்டியில் சாதனைமிகு 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் 18 ஓட்டங்களையும் 118 ஓட்டங்களையும் பெற்றார். https://www.virakesari.lk/article/176402
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
விசா சர்ச்சையினால் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹமத் Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 12:41 PM (ஆர்.சேதுராமன்) இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான ரெஹான் அஹமத், விசா பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். இந்தியாவிலிருந்து அபுதாபிக்கு சென்று மீண்டும் அவர் இந்தியாவுக்கு சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வென்றது. கடந்த 5 ஆம் திகதி முடிவடைந்த 2 ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ஓட்டங்களால் வென்றது. 3 ஆவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. 2 ஆவது போட்டிக்கும் 3 ஆவது போட்டிக்கும் இடையில் 10 நாட்கள் இடைவெளி இரந்த நிலையில், இங்கிலாந்து குழாத்தினர் ஓய்வுக்காக அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் நேற்றுமுன்தினம் ராஜ்கோட் நகரிலுள்ள ஹிராசார் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, ரெஹான் அஹமத்தை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ரெஹான் அஹ்மத்துக்கு ஒற்றை நுழைவு விசாவே வழங்கப்பட்டிருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் அந்த விசா மூலம் மீண்டும் இந்தியாவுக்கு வர முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நிலைமையைக் கருத்திற்கொண்டு 2 நாட்களுக்கு மாத்திரம் உள்ளுர் அதிகாரிகள் விசா வழங்கியதுடன், விசா பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு இங்கிலாந்து குழாமை அறிறுத்தினர். இங்கிலாந்து குழாத்தில் 31 பேர் பயணித்தனர் எனவும் அவர்களில் ரெஹான் அஹ்மத் மாத்திரமே விசா பிரச்சினையை எதிர்கொண்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணியினர் இந்தியாவுக்கு வரும்போது அவ்வணியின் மற்றொரு வீரரான ஷொயீப் பஷீருக்கு உரிய நேரத்தில் விசா வழங்கப்படவில்லை. இதனால் ஏனைய வீரர்கள் இந்தியாவுக்கு சென்ற பின்னரும் பஷீர் சில தினங்கள் அபுதாபியில் காத்திருக்க நேரிட்டது. அப்போ ரெஹான் அஹ்மத் பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. 19 வயதான ரெஹான் அஹ்மத், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். https://www.virakesari.lk/article/176349
-
எஸ்தோனிய பிரதமரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைத்தது ரஸ்யா
Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 03:09 PM உக்ரைனின் தீவிரஆதரவாளரான எஸ்தோனியாவின் பிரதமர் காஜா காலசினை ரஸ்யா தேடப்படும் நபர் எனஅறிவித்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஸ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. எஸ்தோனியாவின் கலாச்சார அமைச்சர் உட்பட வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ரஸ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது. வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. சோவியத்யூனியனின் போர்வீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஸ்யா சுமத்தியுள்ளது என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார். நான் சரியான விடயங்களை செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உக்ரைனிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது. இது ரஸ்யாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது எனவும்தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது. ஆனால் அது நடைபெறாது மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவைமேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176369
-
டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
“அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல” - இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்குவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் ஆதரவு 14 FEB, 2024 | 02:20 PM டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா ஸ்வாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும் அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விவசாயிகள் கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். எனது தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கவுரவிக்க எண்ணினால் எதிர்காலத்துக்காக நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உத்திகளிலும் விவசாயிகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176362
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சுரங்கப் பாதைக்குள் ஹமாஸ்தலைவர் - வீடியோவொன்றை வெளியிட்டது இஸ்ரேல் Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 12:42 PM ஹமாஸ்அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கான்யூனிசில் சுரங்கப் பாதையொன்றிற்குள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ என தெரிவித்து இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் தனது குடும்பத்தினருடன் காணப்படும் வீடியோ ஒன்றையே இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் பத்தாம் திகதி ஹமாஸ் அமைப்பின் சிசிடிவியில் பதியப்பட்ட இந்த வீடியோ சமீபத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை ஊடாக அவர் இவ்வாறே தனது குடும்பத்தினருடன் தப்பி ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த பாதுகாப்பான தங்குமிடத்திற்கு சென்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படுபவர் ஹமாஸ் அமைப்பின் தலைவரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என் அவர் உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றப்படும்வரை தேடுதல் வேட்டை முடிவடையாது. நாங்கள் அவரை கைதுசெய்வது குறித்து உறுதியாக உள்ளோம் நிச்சயம் கைதுசெய்வோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை ஹமாஸ் தலைவர் மறைந்திருந்த சுரங்கப் பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் காணப்படும் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. சின்வரின் முக்கிய பதுங்குமிடம் அது அவர் அங்கு சமீபநாட்களில் காணப்பட்டார் என இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார், படுக்கையறைகள் சமையலறைகள் போன்றவற்றையும் அந்த வீடியோ காண்பிக்கின்றது. மில்லியன் கணக்கில் டொலர்களையும் அங்கு காணமுடிந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் வருவது தெரிந்ததும் அவர்கள் தப்பிவிட்டனர் என இஸ்ரேலிய படைவீரர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176351
-
முருகன், ராபர்ட்பயஸ் கால வரையறையற்ற உண்ணாவிரதம்?!
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டடார் முருகன் 14 FEB, 2024 | 11:50 AM முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டணை வழங்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் அங்கு தான் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் தன்னை முகாமிலிருந்து விடுவித்துஇ லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜன.29-ம் தேதிமுதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால் அவரைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்கக் கோரி தலைமைச் செயலர் திருச்சி ஆட்சியர் காவல் ஆணையருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதினார். இந்நிலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் நஸிமுநிஷா முருகனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் லண்டன் செல்வதற்கான பாஸ்போர்ட் எடுக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து முருகன் 14 நாட்கள் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார். https://www.virakesari.lk/article/176341
-
ஜே.வி.பி முன்னிலையில் உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும் - உதய கம்மன்பில
Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 04:13 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களை காட்டிலும் தற்போது முன்னிலையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முன்னேற்றத்தை ஏற்க முடியாத மனநிலையில் ஒருசில அரசியல் தரப்பினர் இல்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டார். கொழும்பில் புதன்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் 'மக்கள் விடுதலை முன்னணியின் முன்னேற்றம்' தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஒருசில கருத்துக்கணிப்புக்கள் ஊடாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி என்ற ரீதியில் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. எழுமாற்றாக எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களில் உண்மைத்தன்மை சந்தேகத்துக்குரியது. தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது முன்னிலையில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையை ஏற்றுக்கொள்வோம். அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை காட்டிலும் தேர்தலை பிற்போடுவதற்கான உள்ளக சூழ்ச்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், பாராளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பதற்கும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176355
-
விபத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கணவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் கொலம்பிய நாட்டு மனைவி
13 பிப்ரவரி 2024 2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. "என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங். ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், ஆன்னி கொலம்பியாவுக்குத் திரும்பிச் சென்றார். 2021ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தார் ஹர்பால். நவம்பர் 5, 2021 அன்று அவர் டெல்லியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குராலி-சண்டிகர் சாலையில் ஒரு மோசமான விபத்தில் சிக்கிக்கொண்டார். விபத்துக்குப் பிறகு அவரது கைகால்கள் செயலிழந்து விட்டதால், படுக்கையிலே முழு நேரத்தையும் கழிக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவனை குழந்தைப் போல பார்த்துக்கொள்கிறார் மனைவி ஆன்னி. வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமென ஹர்பால் விரும்புகிறார், ஆனால் குடும்பத்தாரிடம் போதிய பணம் இல்லாததால், ஹர்பால் சிங் மற்றும் ஆன்னி நிதி உதவிக்காக காத்திருக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cd19wqjdnz7o
-
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகிறார் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி பெருபான்மை கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார். இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார். https://thinakkural.lk/article/291687
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன் எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மகாதேவா ஆசிரமத்தின் தலைவர் சி மோகன பவன் உட்பட படைப்பாளிகள் அதிபர் ஆசிரியர் மற்றும் படைப்பாளிகள் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்தும் சிறீதரன் தெரிவிக்கையில்... https://tamilwin.com/article/kilinochchi-book-release-event-1707921777
-
கூகுள், அமேசான்: இலவச சேவைகள் மூலம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி? இதில் பயனர்களுக்கு என்ன பாதிப்பு?
கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஆள் குறைப்பு செய்வது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டினா ஜெ.ஆர்காஸ் பதவி, பிபிசி நியூஸ் 42 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவிலான லாபங்களை ஈட்டிய போதிலும் ஆள் குறைப்பு ஏன் தொடர்கதையாக உள்ளது? அமெரிக்க பங்குச் சந்தைகளை தீர்மானிக்கக் கூடியவை அந்த பெரு நிறுவனங்கள். வால் ஸ்ட்ரீட்டின் செல்ல நண்பர்கள். "மேக்னிஃபிசென்ட் 7" என்று அழைக்கப்படும் குழுவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் மதிப்பும் கூட அதிகரிக்கின்றன. பிற துறையில் உள்ள நிறுவனங்களை விட, இந்த ஆண்டு 12% அதிகமாகவும், 2025 -ல் மற்றொரு 12% அதிகமாகவும் அவர்களின் விற்பனை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், ஆப்பிள், அமேசான், மெடா மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை கூட்டாக சுமார் 327 பில்லியன் டாலர் சம்பாதித்தன. இது கடந்த ஆண்டை விட 25.6% அதிகமாகும். இது, கொலம்பியா அல்லது சிலி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒத்ததாகும். எனினும்கூட, டெஸ்லா மற்றும் என்விடியா ஆகியவற்றை உள்ளடக்கிய "மேக்னிஃபிசென்ட் 7" என்ற பிரத்யேக குழு, அதிக அளவிலான ஆட்குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஆட்குறைப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2023 மைக்ரோசாஃப்ட் தனது பணியாளர்களைக் குறைத்தது. Activision Blizzard ஐ $69 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்த பிறகு, 2024 -ல் மேலும் 1,900 பேர் பணிநீக்கம் செய்யவுள்ளது. அமேசான் நிறுவனத்திலும் இதேநிலை தான். கடந்த ஆண்டில் 9,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் ட்விச் இயங்குதளத்தின் 35% பணியாளர்களையும், அமேசான் பிரைம்-ல் பணிபுரியும் 100 பேரையும் பணி நீக்கம் செய்யவுள்ளது. அதுபோதாதென்று, இந்த பிரத்யேக குழுவில் மேலும் பல சிறிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மொத்தத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே மாதத்தில் 122 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 32,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் ராய்ட்டர்ஸ் பத்திரிகையால் மேற்கோள் காட்டப்பட்ட Layoffs.fyi என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 11 மாதங்கள் மீதம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னணி நிறுவனங்களில் எவ்வளவு ஆட்குறைப்பு? இந்த ஆண்டு PayPal நிறுவனத்தில் 2,500 பணியாளர்களும் , Spotify நிறுவனத்தில் 1,500 பணியாளர்களும், eBay நிறுவனத்தில் 1,000 பணியாளர்களும், Snapchat நிறுவனத்தில் 500 பணியாளர்களும் நீக்கப்படவுள்ளனர். தொழில்நுட்பத் துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் நிலை இதுவே. 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இணையத்தின் எழுச்சி டாட்-காம் பபிளுக்கு வழிவகுத்தது. (இணையவழி நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிக முதலீடுகள் காரணமாக, பங்குச்சந்தை மதிப்புகள் அபரிமிதமாக உயர்ந்தன. இதுவே டாட்-காம் பபிள் (dotcom bubble) என்றழைக்கப்படுகிறது. ) தற்போது நடைபெறும் ஆட்குறைப்பை டாட்காம் பபிளுடன் பலர் ஒப்பிட்டு வருகின்றனர். பிரபல நிதி நிறுவனமான ஜூலியஸ் பேயரின் தலைமை ஆய்வாளரான மாத்தியூ ராச்சேட்டரைப் பொறுத்தவரை, இந்த ஒப்பீடு சரியல்ல. ஏனெனில், ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்களின் (200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள்) பங்குகளின் மதிப்பு இன்னும் 2000 களின் நிலையை அடையவில்லை என்கிறார். "மேக்னிஃபிசென்ட் 7" நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை என்றும், இது சிக்கல்கள் ஏற்பட்டால் உதவும் என்று பேயர் கூறுகிறார். எனவே இந்த இரண்டாவது அலை ஆட்குறைப்பின் பின்னணி என்ன? முக்கியமான 3 காரணங்கள் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலோபாய மாற்றங்கள் "தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் பெரிய நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அந்த துறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அடுத்த தலைமுறை நிறுவனங்களின் புதுமையான முயற்சிகள் காரணமாக ஏற்படும்”என்று முதலீட்டு ஆலோசனைகள் வழங்கும், ODDO BHF AM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மேலாளர் பிரைஸ் ப்ருனாஸ் கூறுகிறார். டாட்காம் பபிளின் போது இதுதான் நடைபெற்றது. இந்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் வளர்ச்சி ஒரு புரட்சியாகும். "உதாரணத்திற்கு மொழி சார்ந்த நிறுவனமான டியோலிங்கோவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள் பயன்படுத்தப்படும்" என்று குவார்க் வலைத்தளம் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படக் கூடியது. ஒருவர் 60 முதல் 90 நிமிடங்களில் எழுதுவதை, செயற்கை நுண்ணறிவு 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் எழுதி முடிக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை ஒன்று, செயற்கை நுண்ணறிவு 30 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமான வேலைகளை செய்யக்கூடும் என்று கூறியது . "நாங்கள் அதை 2000 களின் டாட்காம் பபிளின் போது பார்த்தோம். இடையூறுகள் எப்போதும் நிறுவனங்கள் தங்களை மறுகட்டமைக்க வழிவகுக்கின்றன" என்று eToro -ன் மூத்த சந்தை ஆய்வாளர் ஜேவியர் மோலினா கூறுகிறார். "ஒருபுறம், நிறுவனத்தின் உத்தியில் சில மாற்றங்கள் ஏற்படுவதையும், சில துறைகள் மூடப்படுவதையும் காண முடியும். மறுபுறம், செயற்கை நுண்ணறிவை நோக்கிய ஒரு நகர்வையும் காண்கிறோம். இது பல பணியிடங்கள் காணாமல் போவதற்கு காரணமாகிறது"என்கிறார் மோலினா. பட மூலாதாரம்,GETTY IMAGES 2. 2022-ன் நினைவும் பாடங்களும் 2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை 1,68,032 பேரை பணிநீக்கம் செய்தது. பிற துறைகளை ஒப்பிடும் போது, அதிக எண்ணிக்கையிலான ஆட்குறைப்பு தொழில்நுட்பத் துறையிலேயே நடைபெற்றது என்று சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற நிறுவனம் கூறுகிறது. கொரோனா பெருந்தொதொற்று காலத்தில், பல சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் ஆள் சேர்ப்பை அதிகரித்து, காற்று தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக வீசும் என்ற எண்ணத்துடன் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தின. ஆனால் நிலைமைகள் மாறிய போது, 2022-ம் மற்றும் 2023-ம் ஆண்டில் ஆள் குறைப்பு தொடங்கின. புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் போனதற்கு மற்றொரு காரணம், பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதே. பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலையில், நிறைய மூலதனம் தேவைப்படும். ஆனால், கடன் வாங்குவது இப்போது அதீத செலவினமாக மாறிவிட்டது. "சமீபத்திய வட்டி விகித உயர்வுகள் பல திட்டங்களை பாதித்துள்ளன. கடந்த காலங்களில் இந்த திட்டங்களில் முதலீடு செய்து, பின்னர் வளரவும் லாபத்தை அடையவும் முடியும்" என்று ஏ & ஜி நிதிகளில் டிஐபி மதிப்பு நிதியின் மேலாளர் ஆண்ட்ரேஸ் அலெண்டே கூறுகிறார். "கடன் பெறுவது சிரமமானதால், முதலீடுகள் மிகவும் குறைந்துவிட்டன. இதனால் தொழில்நுட்ப திட்டங்கள் மேலும் முடங்கியுள்ளன "என்று அவர் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. தொழில்நுட்பத் துறையின் வளார்ச்சி பாதை 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்கள் கூட, அதிக லாபம் என்ற முதலீட்டாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய செலவுகளை குறைத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், "தொழில்நுட்பத் துறையின் சுழற்சி பொதுவாக அப்படி தான் இருக்கும். திடீரென, ஆனால் வேகமாகவும், இருக்கும். விரைவில், இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் திட்டங்கள் மாற்றியமைத்து மீண்டும் புதுப்பிக்கப்படும். இதில் தப்பிப் பிழைப்பவை மீண்டும் மிகப்பெரிய வாய்ப்புகளை பெறலாம்." என்று அலண்டே விளக்குகிறார். புதிய சுழற்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே காண தொடங்கி விட்டன. இந்த சுழற்சி ஏற்படும் வரை தொழில்நுட்பத் துறையில் உள்ள சிரமங்கள் பிற துறைகளின் நுகர்வு மற்றும் முதலீட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய நிறுவனங்களில் உள்ள நிலைமகளையும் பெரிய நிறுவனங்களின் நிலைமைகலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். சிறிய நிறுவனங்களில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக சில முடிவுகள் எடுக்கப்படும். பெரிய அளவிலான மூலதனத்தைக் கொண்டு சிரமங்களை சமாளிக்கக் கூடிய பெரிய நிறுவனங்களின் முடிவுகளை சிறிய நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/ckrdjmerl78o
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் தொடர்பில் உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை கூறியுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா உதவி இந்தப் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர்'' என தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/ukraine-destroys-russian-warship-1707929053
-
23 வயதில் நீதிபதியாகும் பழங்குடி பெண் - பிரசவித்த மறுநாளே தேர்வு எழுதி சாதித்தது எப்படி?
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பிரசவித்த மறுநாள் தேர்வு, வறுமை என பல தடைகளை தகர்த்து அவர் சாதித்தது எப்படி? தடைகளை தகர்த்து சாதனை! தமிழகத்தில் சமீபகாலமாக பழங்குடி மக்கள் பல துறைகளில் சாதித்து தடம் பதித்துவருகின்றனர். அந்த வகையில் அடிப்படை வசதிகளற்ற பழங்குடி கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களை கடந்து உரிமையியல் நீதிபதி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார் 23 வயதான ஸ்ரீபதி. திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் குறிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து தற்போது புலியூர் பழங்குடி கிராமத்தில் ஸ்ரீபதி தனது கணவர் வெங்கட்ராமனுடன் வசித்து வருகிறார். சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ள ஸ்ரீபதி (B.A. B.L), கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் ஸ்ரீபதியை பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்று கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்,’’ என பதிவிட்டு ஸ்ரீபதியை பாராட்டியுள்ளார். ‘மகிழ்ச்சியாக உள்ளது’ - ஸ்ரீபதி தேர்வில் வென்றது தொடர்பாக பிபிசி தமிழ் ஸ்ரீபதியை தொடர்பு கொண்டது. பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபதி, ‘‘தேர்வில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார். நீதிபதி பொறுப்புக்கான முறையான உத்தரவு வரும் வரை இது குறித்து மேலும் பேச மறுத்துவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேர்வை எழுத நேரில் வந்திருந்தார் ஸ்ரீபதி. தனது கிராமத்திலிருந்து 250 கி.மீ பயணம் செய்து வந்த ஸ்ரீபதி அப்போது, குழந்தை பிரசவம் செய்து இரண்டு நாட்களே ஆகியிருந்தன. மன உறுதியுடன் தேர்வு எழுதிய ஸ்ரீபதி அதில் தேர்ச்சிப் பெற்றார். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் தேர்ச்சி பெற்றார். மலைக்கிராமத்தில் வாழ்க்கை, ஏழ்மை, பிரசவித்த அடுத்த நாளில் தேர்வு என, பல தடைகளைத் தகர்த்து ஸ்ரீபதி எப்படி சாதித்துள்ளார் என்பதை அந்தக் கிராமத்தினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளனர். ‘வறுமையிலும் வென்ற ஸ்ரீபதி’ ஸ்ரீபதியின் பெற்றோர் குறிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். மலைப்பகுதியான ஏலகிரியில் சிறிது காலம் தங்கிவந்த போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து தான் அவரது தாய் அவரை வளர்த்தார். ஸ்ரீபதி திருமணத்துக்கு பிறகு புலியூரில் வசித்து வருகிறார். புலியூர் ஊராட்சித் தலைவர் அன்பழகன் பிபிசி தமிழிடம் பேசிய போது, “ ஏலகிரியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 முடித்து, தொலைதூர கல்வியாக இளங்கலை முடித்து, பின் சென்னையில் தான் இளங்கலை சட்டம் முடித்துள்ளார்” என்று தெரிவித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகி மூன்று ஆண்டுகளாக புலியூரில் தன் கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது கணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிவதாகவும் அன்பழகன் தெரிவித்தார். “ஸ்ரீபதி பழங்குடியின மக்களுக்கும், எங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்,’’ என்றார் மகிழ்ச்சியுடன். ‘எங்கள் கிராமத்தை உலகறியச் செய்துள்ளார் ஸ்ரீபதி’ ஸ்ரீபதி போல முதல் தலைமுறை பட்டதாரிகள் சிலர் புலியூரில் உள்ளனர். அவர்கள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இன்னல்களுக்கு இடையில் நடத்திக் கொண்டு தான் படித்து முன்னேறி உள்ளனர். புலியூரை சேர்ந்த யுவன்ராஜ் தற்போது சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். பிபிசி தமிழிடம் பேசிய யுவன்ராஜ், ‘ஸ்ரீபதி திருமணமாகி எங்கள் கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அவரது குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். தற்போது பெரிய சாதனையை செய்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் எங்கள் புலியூர் கிராமத்தையும், ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களையும் உலகறியச் செய்துள்ளார். இதை நினைத்து எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்படுகிறது. வறுமைக்கு மத்தியில் பல தடைகளைத்தாண்டி தான் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்,’’ என்கிறார் யுவன்ராஜ். மேல்நிலைப் பள்ளிக்கு 25 கி.மீ பயணம் ஸ்ரீபதி உட்பட புலியூர் கிராமத்தில் படித்த, படிக்கும் அனைவரும் 25 கி.மீ பயணம் மேற்கொண்டே மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். ‘‘புலியூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பகுதி மாணவர்கள் புலியூர் கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள ஜமுனாமடத்தூர் சென்று தான் மேல்நிலைப்பள்ளி படிக்கின்றனர்.” என்கிறார் யுவன்ராஜ். மேல்நிலைப்பள்ளியை சென்றடைய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. “இது புலியூரின் நிலை மட்டுமல்ல, ஜவ்வாது மலையில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் இதேநிலை தான். ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார், நான் பொறியியல் படித்துள்ளேன், எங்கள் கிராமத்தில் இன்னும் சிலர் படித்துள்ளனர். பழங்குடி மக்களுக்கு அரசு உரிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் ஸ்ரீபதி போல் பலரும் சாதிப்பார்கள்,’’ என்றார் யுவன்ராஜ். https://www.bbc.com/tamil/articles/cv2jv3yjy92o
-
யாழ் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து : குழந்தை உட்பட இருவர் பலி! ஒருவர் படுகாயம்
Published By: VISHNU 14 FEB, 2024 | 08:17 PM யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176396
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
இந்தியா உள்பட உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இசாரியா ப்ரைதாஞ்சியம் பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு, உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இந்தியா உள்பட உலகளவில் ஜனநாயகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர். நேர்மையான தேர்தல் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம். அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் பணிபுரியும் செலேரி மேலும் கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார். செலேரியைப் பொருத்தவரை, "தேர்தல் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இதில் பங்கேற்கவும் வன்முறை இல்லாமல் பரப்புரை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார். பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், "வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன" என்கிறார். தரம் குறைந்த தேர்தல்கள் வழக்கமாகி விடும் அபாயம் உள்ளது என்கிறார் அவர். டாக்டர் சீஸ்மேனின் கூற்றுப்படி, "எந்தவொரு தேர்தலும் ஆகச்சிறந்த முறையில் நடப்பதில்லை, ஆனால் நல்ல தரமான தேர்தல்கள் வாக்காளர்களுக்கு அவர்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் அளிக்கின்றன." தேர்தல் முறைகேடுகள் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வரை தேர்தல் செயல்முறை தொடர்கிறது. இந்த சுழற்சியில் எந்த நேரத்திலும் வாக்காளர்களை ஏமாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிதாக வருபவர்களே தேர்தல் நாளன்று மட்டும் மோசடிகளைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இதில் வல்லுநர்களாக இருப்பவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிடுகிறார்கள்" என டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். தேர்தல் முறைகேடுகள் என்பது ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி செய்திகளைத் தடுக்க ஊடகங்களின் மீதான தணிக்கை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு செயல்முறையை மாற்றி அமைத்தல் ஆகியவை இந்த முறைகேடுகளில் அடங்கும். "வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஆளுங்கட்சி நடுநிலை இல்லாத நீதிபதிகளை நியமிக்கிறது. அதனால் இறுதி தேர்தல் முடிவுக்கு எதிரான எந்த மேல்முறையீடுகளும் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது," என்கிறார் செல்லரி. இதைப் பற்றிய பரவலான அச்சம் இருந்த போதிலும், அமெரிக்காவில் இது நடக்கவில்லை. அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளை நியமித்தார். இது உச்ச நீதிமன்றத்தில் 6-3 விகிதத்தில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. ஆனால் 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து டிரம்ப் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் அதிக பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான மற்றொரு வழி, நியாயமற்ற ஆதாயங்களை அடையும் நோக்கில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வது. ஆளும் கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் தங்கள் பிரசாரங்களுக்காகவும், பொய்யான செய்திகளைப் பரப்பி தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்துவதற்கும், வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துகின்றன. "அமெரிக்காவில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது ஆகியவை மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் சீஸ்மேன். "தேர்தலில் பிரசாரம் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாக்களிப்பதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் குரலில் ஒரு போலியான டிஜிட்டல் செய்தி வெளியானதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம்" என்கிறார் அவர். எல் சால்வடார் மற்றும் இலங்கை தேர்தல்களின் போது பொய்யான செய்திகள் பரவுதல் மற்றும் தேர்தல் மோசடிகள், அரசியல் வன்முறைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர் சீஸ்மேன் கூறினார். தேர்தல் மோசடி என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்களித்த பின் தேர்தல் முடிவை மாற்றும் முயற்சி இது. வாக்குப்பெட்டியில் முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை போடுவது, வாக்களித்த பிறகு எண்ணிக்கையை மாற்றுவது அல்லது எதிரணியினரின் வாக்குகளை அழிக்க வாக்குப்பெட்டிகளை அழிப்பது ஆகியவை இதில் அடங்கும். ரஷ்யாவின் 2021 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த மூன்று நாள் வாக்குப்பதிவில், பரவலான தேர்தல் மோசடிகள், முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டிகளில் போட்டது மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு எதிரான மிரட்டல் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் மக்கள் வாக்குப் பெட்டிகளில் காகிதங்களைத் திணிப்பதைக் காண முடிந்தது. எவ்வாறாயினும், எந்தவொரு 'தீவிரமான தேர்தல் விதிமீறல்களையும்' பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது ரஷ்ய அரசாங்கம். "ஆனால், முழு தேர்தல் செயல்முறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் எளிதாக 'பொய்' சொல்லலாம் அல்லவா" என்கிறார் 'How to Rig an Election' புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சீஸ்மேன். தேர்தல் செயல்முறை மிகவும் சிறப்பாகப் பேணப்படும் நாடுகளில் கூட வாக்கு மோசடிகள் நடக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த நாடுகளின் பல வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவாவதை கண்காணிக்கவும், தேர்தல் முடிவுகளை கணக்கிடவும் உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளனர். கானாவில் 2016இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடுகிறார் டாக்டர் சீஸ்மேன், அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்க ஒரு கைப்பேசி செயலியைப் பயன்படுத்தின. இதற்கிடையில், 2021இல் ஜாம்பியாவில், உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேவாலயக் குழுக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒரு வாக்காளர் பட்டியலைத் தயாரித்தன. இதனால் துல்லியமான தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறையை பின்பற்றுவது மிகவும் கடினமாகிவிட்டது என்று டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். ஏனெனில் தேர்தலின் போது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றியுள்ளன சர்வாதிகார அரசாங்கங்கள். "தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையின் கடைசி பகுதியை மட்டுமே கண்காணிக்கிறார்கள், ஆரம்ப கட்ட மோசடிகளை அவர்களால் தடுக்க முடியாது" என்கிறார் செலேரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023 டிசம்பரில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எதிர்க்கட்சிகளால் தேர்தலில் மோசடி செய்ய முடியுமா? டாக்டர் சீஸ்மேன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளும் ரகசியமான முறையில் மோசடிகளைச் செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கவும் அவர்களால் முடியும். "தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசின் மீது சுமத்தலாம். அதில் சில உண்மையானதாகவும், அதிகம் பொய்யானதாகவும் இருக்கலாம். ஆளும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியாக அவர் அதைப் பயன்படுத்தலாம்." ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார். பலவீனமான பொருளாதாரம் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார். ஜனநாயகத்தின் எதிர்காலம் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை சார்ந்துள்ளது என்கிறார் டாக்டர் சீஸ்மேன். "தொடர்ந்து தேர்தல் மோசடிகள் நடக்கும் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் வாழ்ந்தால், விரைவில் அல்லது பின்னர், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்மையான தேர்தல்களை நடத்துவதற்கான உரிமையை அமைப்பு நமக்கு வழங்கவில்லை என்றால், வாக்களிப்பது அல்லது அரசியல் பங்கேற்பின் பயன் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறார் சீஸ்மேன். https://www.bbc.com/tamil/articles/c4nk4q0dkj7o
-
அபுதாபியில் இந்துக் கோயில்
அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் : இன்று திறந்து வைக்கிறார் இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இன்று பெப்ரவரி 14 பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு சென்றிருந்த போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கோவில் கட்டமான பணிகள் மும்முரமாக நடந்து வந்தன . இந்த கோவில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். மேலும் கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும். அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டிடம் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி இன்று கோவிலை திறந்து வைக்கிறார். https://thinakkural.lk/article/291678
-
நாவற்குழி A9 வீதியில் மோட்டார் சைக்கிள் - அரச பேருந்து விபத்து
யாழ் A9 வீதியில் மோட்டார் சைக்கிள் - அரச பேருந்து விபத்து Published By: VISHNU 14 FEB, 2024 | 06:32 PM யாழ்ப்பாணம் - தென்மராட்சி - A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். https://www.virakesari.lk/article/176393
-
ரஃபாவில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலி - மசூதிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதல்
‘படுகொலை”க்கு வழிவகுக்கும் இஸ்ரேல் - ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி எச்சரிக்கை காசாவின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினால் அது ‘படுகொலை”க்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) எச்சரித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஃபா மீதான படையெடுப்பின் விளைவுகள் ‘பேரழிவாக” அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த நகரில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் ஹமாஸ் ஆயுததாரிகளை தோற்கடிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக வலுவான வார்த்தைகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ‘ரஃபாவில் நெரிசலில் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்” அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/291656
-
பெருந்தோட்ட மக்களை தொழில்முனைவோராக வலுவூட்ட விசேட சமூக உடன்படிக்கை கைச்சாத்து - சஜித்
14 FEB, 2024 | 04:42 PM எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். இன்று (14) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலையக, தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, பல்வேறு தோட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், சுமூக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். இலட்சக்கணக்கான மலையக மற்றும் தென் பகுதி பெருந்தோட்ட சமூகங்கள் நாட்டின் உயிர்நாடிக்கு பங்களித்து வருவதால், அவர்களை எப்போதும் கூலித்தொழிலாளிகளாகவே வைத்திருக்காது, அவர்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்குவதோடு, பெருந்தோட்டத் துறையில் பெருந்தோட்ட தொழில் முயற்சியாளர்களாக பணியாற்றும் பெரும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாவதாகவும், இது வரை இரண்டாம், மூன்றாம் வகுப்பினர் எனும் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்த சமூகத்திற்கு, வார்த்தைகளோடு மட்டுப்பட்ட கோஷங்களை கடந்து, ஒரு குறித்த காலக்கெடுவுக்கு உட்பட்ட வகையில், இந்த மக்களை வலுவூட்ட, தெளிவான சமூக இணக்கப்பாட்டை எட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறுவப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் கலந்துரையாடுவதற்கு பதிலாக, இந்த சமூக ஒப்பந்தத்தை நடைமுறை ரீதியாக யதார்த்தமாக்குவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறலாம் எனவும், அரசியல் சூழ்ச்சிகளால் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்ட சமூகத்திற்கு, பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்வதே, ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மையான பணி என்றும் அவர் தெரிவித்தார். மலையக, தென் பகுதி பெருந்தோட்ட சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும், தமது சொந்த பதவி சலுகைகளை விடுத்து, தமது சமூகத்தை பாதுகாத்து அபிவிருத்தியின் விடியலை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுடன் இப்படியான சமூக ஒப்பந்ததை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனணி தலைவர் வி.இராதாகிருஷ்ணன், கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர். https://www.virakesari.lk/article/176382
-
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்
நிகழ்நிலை காப்பு சட்டம் : அவதானம் செலுத்துமாறு சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291788