Everything posted by ஏராளன்
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை - சஜித்
தனியார் பல்கலை மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் 08 FEB, 2024 | 03:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஹொரய்ஸன் மற்றும் கே.ஐ.யு ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) விசேட கூற்றொன்றை முன்வைத்து, மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வட்டியில்லாத வங்கிக் கடன் வழங்கப்படாததன் காரணத்தால் அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹொரய்ஸன் மற்றும் கே.ஐ.யு ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான செயற்பாடுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் மேற்படி இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு அந்த இரண்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இம்முறை ஏழாவது மாணவர் குழுவும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க பல்கலைக்கழகங்கள் அல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் சுமார் 5000 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வட்டியில்லாக் கடன் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகிறது. இதற்கு முன்னரும் எதிர்க்கட்சித் தலைவரால் இந்த கேள்வி சபையில் முன் வைக்கப்பட்டதுடன் அதற்கு மறுநாளே ஜனாதிபதி செயலகத்தில் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் போது இரண்டு வங்கிகளினதும் முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் திறைசேரி அதிகாரிகள் ஆகியோரும் அழைக்கப்பட்டு அந்த விவகாரத்திற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது. இதற்கு முன்னர் கடன் பெற்றுக் கொண்ட சுமார் 200 பேர் அந்த கடனை மீள செலுத்த தவறிய காரணத்தாலேயே இந்த கடனை மீள பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/175895
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
Pakistan Under-19s 179 Australia Under-19s (45/50 ov, T:180) 164/7 Aust U19 need 16 runs in 30 balls. Current RR: 3.64 • Required RR: 3.20 • Last 5 ov (RR): 13/1 (2.60)
-
ஐசிசி பவுலிங் தரவரிசையில் பும்ரா முதலிடம்
ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை நெருங்கினார். ஆனால், அவரால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. 1979-80 ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கபில் தேவ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் செய்ய முடியாத சாதனையை தற்போது பும்ரா செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சமீபத்திய தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி, 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. இந்த வரிசையில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை (841 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார் பும்ரா. அஸ்வின் மார்ச் 2023இல் இருந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதற்கு முன், தரவரிசைப் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்ததே அவரின் முந்தைய சாதனைகளில் சிறந்தது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பாராட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் பும்ரா ‘ஆட்ட நாயகன்` விருதை வென்றார். இந்தப் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சிறப்புப் பிரிவு பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாத்தியமான, அற்புதமான இன்ஸ்விங் யார்க்கர் மூலம் பும்ரா, ஆலி போப்பின் மிடில் மற்றும் லெக் ஸ்டம்புகளை வீசிய விதத்தைப் பாராட்டினார். தான் பார்த்த சிறந்த யார்க்கர்களில் இதுவும் ஒன்று என்றார். இந்தியாவிலிருந்து நான்காவது பந்து வீச்சாளர் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 45 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரே இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இது பத்தாவது முறையாகும். பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில், பத்து முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா. ஐதராபாத் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா. அவர் 10.67 என்ற சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இதுவரை நான்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நான்காவது பந்து வீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பும்ராவுக்கு முன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தனர். வித்தியாசமான பந்துவீச்சும் காயங்களும் பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சு வித்தியாசமானது. இந்தத் தனித்துவமான பந்துவீச்சு நடவடிக்கையின் காரணமாக, பும்ரா குறைந்த ரன்-அப்பில் அதிக வேகத்தை அடைய முடிந்தது. ஆனால், இதிலுள்ள பிரச்னை என்னவென்றால், இத்தகைய அதிவேக பந்துவீச்சு முதுகுத்தண்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும். பும்ரா தனது சர்வதேச போட்டிகளை தொடங்கியதில் இருந்து இந்த பந்துவீச்சு நடவடிக்கையால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது என்று ஆய்வாளர்கள் கருதினர். வயது மற்றும் உடற்தகுதி காரணமாக, முதல் ஐந்து ஆண்டுகளில் பும்ரா எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக அவருக்குக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில், இடதுகை கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை. ஆனால், அவர் காயத்தில் இருந்து மீண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டில், பும்ரா கீழ் முதுகு அழுத்த எலும்பு முறிவு பிரச்னையால் அவதிப்பட்டார். வழக்கமான கதிரியக்க பரிசோதனையின்போது இந்தச் சிக்கல் கண்டறியப்பட்டது. இதனால் அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்தியா-நியூசிலாந்து தொடருக்காக இந்திய அணிக்குத் திரும்பினார். முதுகு வலியிலிருந்து மீண்ட பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா 2022இல், கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து மீள குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், இதிலிருந்து மீள கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆனது. இதனால், 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் பும்ரா தவறவிட்டார். மார்ச் 2023இல் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் கழித்த பிறகு, ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய கேப்டனாக பும்ரா அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பும்ரா 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் பும்ராவின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "அவர் ஒரு தலைமுறைக்கானவர்" என்று அவரை பாராட்டினார். பும்ரா அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறன் மற்றும் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் என டிராவிட் பாராட்டினார். அவர்தான் போட்டியின் வெற்றியாளர் என்று கூறினார். பும்ரா மீண்டும் களமிறங்கிய பிறகு சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுவதைவிட தற்போது நிம்மதியாக இருக்கிறது என பும்ரா கூறினார். இதிலிருந்து குணமடைவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்ததாகக் கூறினார். அதன் பிறகு பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தொடங்கி சமீபத்தில் நடைபெற்ற விசாகப்பட்டினம் டெஸ்ட் வரை விளையாடிய ஏழு போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 'முழு பலத்தையும் பயன்படுத்துவேன்' பட மூலாதாரம்,GETTY IMAGES விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு, தான் எண்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை என்றும் எண்களில் அக்கறை காட்டினால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். “இந்தியாவின் வெற்றிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என அவர் தெரிவித்தார். "விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு யார்க்கர் மட்டுமே ஒரே வழி என்று நான் நினைத்தேன். அதனால்தான் ஆலி போப்பிற்கு யார்க்கர் வீசினேன்" என்றும் அவர் கூறினார். "வேகப்பந்து வீச்சுக்கு நான் தலைவர் அல்ல. ஆனால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது எனது பொறுப்பு" என்றார். "ஒவ்வொரு விக்கெட்டும் வித்தியாசமானது. விக்கெட்டை எடுக்க எனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்" என்று பும்ரா கூறினார். https://www.bbc.com/tamil/articles/c3g0536g0geo
-
யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 05:27 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்துள்ளன. வலி.வடக்கு பிரதேசத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் நிலையில், காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்களால் பல வருடங்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதுடன், காணி விடுவிப்பு போராட்டங்களையும் பல்வேறு தடவைகள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேறிய காணிகளையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரும்பசிட்டி , கட்டுவான் மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன. அதில் மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளும் உள்ளடங்கியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில், அந்த கிராம அமைப்புக்கள் அண்மையில் கூடி ஆராய்ந்து, தமது காணிகளை சுவீகரிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முதல் கட்டமாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானித்துள்ளனர். https://www.virakesari.lk/article/175905
-
இலங்கை: 'போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு ராணுவமே பொறுப்பு' - நீதிமன்றம் உத்தரவு
படக்குறிப்பு, யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் புதன்கிழமை (பிப். 07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார். நடந்தது என்ன? கந்தசாமி இளரங்கன் என்ற 28 வயதான இளைஞன் ஒருவன், 2006ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி காணாமல் போனதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார். வாகன ஓட்டுநரான கந்தசாமி இளரங்கன் ஓமந்தை வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான முக்கிய சோதனைச் சாவடியாக ஓமந்தை சோதனைச் சாவடி அந்தக் காலப் பகுதியில் காணப்பட்டது. பெரும்பாலான தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டதாக இன்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கந்தசாமி இளரங்கன் பயணி ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுவதற்காக வேன் ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செலுத்தியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்த நிலையில், கந்தசாமி இளரங்கன், அவருடன் பயணித்த பயணி ஆகியோரை ராணுவம் இடைமறித்து சோதனை செய்துள்ளதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் ''ஓமந்தை சோதனைச் சாவடியில் ராணுவம் சோதனை செய்ததன் பின்னர், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடையாது. அவர் அந்த வழியாகப் பயணித்தமைக்கான ராணுவப் பதிவு, பதிவுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால், அவர் இத்தனை மணிக்கு வந்தார் என்பது தொடர்பான பதிவு உள்ளது. ஆனால், போனமைக்கான பதிவு இல்லை," என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். கடும் கட்டுப்பாடுகள் நிலவிய காலப் பகுதி என்பதால், கந்தசாமி இளரங்கனின் தாயாருக்கு உடனடியாக, அவரது மகனைத் தேட முடியாத நிலைமை அன்று காணப்பட்டுள்ளது. அதன் பின்னரான காலத்தில் தனது மகன் தொடர்பில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் ஆராய்ந்துள்ளதுடன், தனது மகன் தொடர்பான எந்தவித தகவல்களையும் அவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதையடுத்து, கந்தசாமி இளரங்கனின் தாயார், ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணைக்குழு, போலீஸ் உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறைப்பாடுகளைச் செய்த போதிலும், தனது மகன் தொடர்பான தகவல்களை தாயினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையிலேயே, கந்தசாமி இளரங்கனின் தாய், வவுனியா மேல் நீதிமன்றத்தில் 200ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிடுகின்றார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை ராணுவ தளபதி, ராணுவத்தின் 211ஆம் படையணியின் கட்டளை தளபதி உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். ''இலங்கை ராணுவத்தால் இந்த மனு மீது ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது. அவர் வந்தது உண்மைதான். ஆனால், அப்போதே அவர் சென்றுவிட்டார்," என இலங்கை ராணுவம் ஆட்சேபனை செய்ததாக மூத்த சட்டத்தரணி கூறுகின்றார். பட மூலாதாரம்,KOGULAN இவ்வாறான நிலையில், இறுதிக்கட்ட யுத்தம் வலுப்பெற்ற காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அதன் பின்னர், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கந்தசாமி இளரங்கனின் தாய், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மீள தொடர்வதற்கு மேல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். இதன் பின்னரான காலத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததுடன், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். ''கந்தசாமி இளரங்கன் வந்தது உண்மை. ஆனால், அவர் சென்றுவிட்டார்" என பிரதிவாதிகள் சாட்சியமளித்த பின்னணியில், அதை கந்தசாமி இளரங்கனின் தாய் நீதிமன்றத்தில் நிராகரித்துள்ளார். ''அவர் ராணுவத்திடம் இருந்து சென்றிருந்தால், எனக்கு அறிவித்திருப்பார். அவர் அந்த இடத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்," என தாய் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அத்துடன், கந்தசாமி இளரங்கனுடன் வேனில் பயணித்ததாகக் கூறப்படும் இளைஞனான உமாதரன் தொடர்பான தகவல்களும் இல்லை எனக் கூறிய மூத்த சட்டத்தரணி, அவர் தொடர்பில் யாரும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். இவ்வாறான விடயங்களை ஆராய்ந்ததை அடுத்தே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முக்கிய தீர்ப்பொன்றை நேற்று வழங்கியுள்ளார். தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது? படக்குறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்) ''மனுதாரர் அளித்த சாட்சியங்களிலும், ஏனைய சாட்சியங்களிலும் இருந்து கந்தசாமி இளரங்கன் அந்த இடத்திற்குப் போயிருக்கிறார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இவர் முற்று முழுதாக ஸ்ரீலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளார். கடைசியாக அவர் ராணுவத்தின் பொறுப்பிலேயே இருந்துள்ளார். எனவே, ராணுவமே பதிலளிக்க வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலான மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சர்வதேச சட்டங்கள், இலங்கை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்தச் சம்பவத்திற்கு இலங்கை ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிடுகின்றார். நீதிபதி ராணுவத்திற்கு விடுத்த உத்தரவு எதிர்வரும் ஜுன் 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தேதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனை, உயிருடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இலங்கை ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அது தவறும் பட்சத்தில், இலங்கை ராணுவம் கந்தசாமி இளரங்கனை வலிந்து காணாமல் ஆக்கியதாக தீர்மானித்து, அதற்கு நட்டஈடாக மனுதாரருக்கு மூன்று பிரதிவாதிகளும் கூட்டாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இப்படியான தீர்ப்புகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதா? ''சிங்கள பகுதிகளில் இவ்வாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழர் பகுதியில் இதுவே முதல் முறை. ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் கிடையாது. ஏனென்றால், இது சிவில் வழக்கு. நஷ்ட ஈடு மட்டும்தான் கொடுக்கச் சொல்லலாம்," என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிட்டார். இலங்கை ராணுவத்தின் பதில் பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இந்தத் தீர்ப்பு தொடர்பில் இலங்கை ராணுவத்தின் சட்டப்பிரிவு சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ராணுவம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது. ''இந்த வழக்கில் காணாமல் போன நபர் இருப்பாராயின், எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு இல்லையென்றால், மனுதாரருக்கு ஜூன் 3ஆம் தேதி ஆகும்போது ஒரு மில்லியன் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது சட்டப் பிரிவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு மேல் தாம் கூறுவது சிரமமான விடயமாகும்," என, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழுக்கு கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn0nqgrgxwvo
-
மூன்று முக்கிய கொடுப்பனவுகளை அரசாங்கம் அதிகரித்தது
சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை 7,500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா உதவித்தொகை 3,000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த வகைகளுக்குள் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்களைப் பெறுபவர்கள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிப்பைப் பெறுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/291071
-
கத்தாருடன் ரூ.6.5 லட்சம் கோடிக்கு எரிவாயு ஒப்பந்தம் - இந்தியாவுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 பிப்ரவரி 2024, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். இந்த வாயு, மின்சார உற்பத்தி, உரத் தயாரிப்பு, மற்றும் சி.என்.ஜி.யாக மாற்றப் பயன்படுகிறது. பட மூலாதாரம்,@HARDEEPSPURI படக்குறிப்பு, மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு என்ன? இந்த ஒப்பந்தம், கோவாவில் 2024-ஆம் ஆண்டு இந்திய எரிசக்தி வாரத்தின் முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) கையெழுத்தானது. தற்போது இருக்கும் ஒப்பந்தத்தை விட மிகக் குறைந்த விலையில் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் தனது அறிக்கையில், எரிவாயு இறக்குமதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 1999-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், அது 2028-ஆம் ஆண்டு வரையிலானது என்றும் கூறியிருந்தது. இப்போது புதிய ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டு துவங்கி 20 ஆண்டுகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. எரிவாயு வாங்கப்படும் மொத்த விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத போதும், அதன் விலை தற்போதைய ஒப்பந்தத்தை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆங்கில செய்தித்தாளான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' படி, இந்தப் புதிய ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 50,000 கோடி இந்திய ரூபாயைச் சேமிக்க வழிவகுக்கும். பெட்ரோநெட் நிறுவனம் இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 85 லட்சம் டன் எல்.என்.ஜி வாயுவை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தானது, இது 2028 வரை செல்லுபடியாகும். தற்போது இது 2048 வரை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் டன்களுக்கான மற்றொரு ஒப்பந்தம் 2015-இல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள்மீது தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் எரிவாயு வளம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக, இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கத்தார் உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதியாளராக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா கத்தாரை முந்தியது. கத்தார் ஆண்டுதோறும் 7.7 கோடி டன் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, இதனை 2027-ஆம் ஆண்டு 12.6 மில்லியன் டன்கள் ஆக அதிகரிக்க விரும்புகிறது. இதன்மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதன் பிடியை வலுப்படுத்த எத்தனிக்கிறது. இவ்விரு கண்டங்களில் எரிவாயு ஏறுமதிக்குள் அமெரிக்கா நுழைய முயற்சிக்கும் நிலையில் கத்தாருக்கு இது முக்கியமானதாகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. டிசம்பர் இறுதியில் மரண தண்டனை குறைக்கப்பட்டது. இந்தியாவின் எரிவாயு தேவை ஆற்றல் நுகரும் உலக நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டுள்ளது. இதை அடைவதற்கு இயற்கை எரிவாயு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முயற்சியின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டின் பங்கை 6.3% இருந்து 15% ஆக அதிகரிக்க இந்திய அரசு விரும்புகிறது. பெட்ரோநெட் மற்றும் கத்தார் எரிசக்தி இடையே தற்போதுள்ள நீண்ட கால ஒப்பந்தம் இந்தியாவின் எல்.என்.ஜி இறக்குமதியில் 35% ஆகும் என்றும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்றும் பெட்ரோநெட் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் குமார் சிங் கூறுகிறார். இந்த ஒப்பந்தம் எரிசக்தி பாதுகாப்பையும், தூய்மையான எரிசக்தி விநியோகத்தையும் உறுதி செய்வதோடு இந்தியா மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல உதவும் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS இந்தியா எவ்வளவு எரிவாயு இறக்குமதி செய்கிறது? கத்தாரைத் தவிர, இந்திய நிறுவனங்கள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் எல்.என்.ஜி.க்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. ஆனால் இந்தியா பயன்படுத்தும் எல்.என்.ஜி.யில் பாதிக்கும் மேற்பட்டது கத்தாரில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ வர்த்தகத் தரவுகளின்படி, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 2 கோடி டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்தது. இதில் சுமார் 54% (சுமார் 1.1 கோடி டன்கள்) கத்தாரில் இருந்து வந்தது. அதே நிதியாண்டில், இந்தியா கத்தாரில் இருந்து மொத்தம் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது, இதில் எல்என்ஜி இறக்குமதி சுமார் 69,200 கோடி ரூபாய் ஆகும். இது மொத்த இறக்குமதியில் 49.5% ஆகும். இயற்கை எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோலை விட தூய்மையானதாகக் கருதப்படுகிறது. இது கச்சா எண்ணெயை விட மலிவானது. இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைச் சார்ந்துள்ளது. அதன் கச்சா எண்ணெயில் தோராயமாக 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதேசமயம், இயற்கை எரிவாயு மிகவும் முக்கியமானதாகவும், நாட்டின் ஆற்றல் தேவைகளை மாற்றுவதற்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய ஒப்பந்தம் எப்படிச் செலவைக் குறைக்கும்? இந்தியா மற்றும் கத்தார் இடையே எல்.என்.ஜி தொடர்பான இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஷிப் அடிப்படையில் (DES) செய்யப்பட்டது. இதன்படி எரிவாயு கப்பல் மூலம் துறைமுகத்தை அடையும். அதாவது ஹோம் டெலிவரி போல எரிவாயுவை அனுப்பி வைத்துவிடுவார்கள். 1999-இல் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் ஃப்ரீ ஆன் போர்டு (FOB) அடிப்படையில் செய்யப்பட்டது. FOB-இல் எரிவாயு வாங்குபவர்தான் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். விற்பனை செய்யும் இடத்தில் இருந்து எரிவாயுவை எடுத்துக் கொண்டு வர வேண்டும். ஆனால், DES உடன்பாட்டில் இந்தப் பொறுப்பு விற்பனை செய்யும் நாட்டுக்கு உரியது. இதனால் DES-இன் கீழ் செய்யப்படும் ஒப்பந்தம் எரிவாயுவை வாங்கும் நாட்டுக்கு செலவைக் குறைக்கிறது. இந்திய எரிவாயு இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிடெட் (பி.எல்.எல்) என்பது ஓ.என்.ஜி.சி, இந்தியா ஆயில், கெயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். குஜராத்தின் தாஹேஜ் துறைமுகத்தில் பி.எல்.எல் முனையம் உள்ளது. அங்கு கப்பல் மூலம் எரிவாயு கொண்டுவரப்பட்டு, பின்னர் அது வெவ்வேறு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. பி.எல்.எல் நிறுவனம், கத்தார் எரிசக்தியுடனான இந்த ஒப்பந்தம் உரங்கள், நகர எரிவாயு விநியோகம், சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற அதிக நுகர்வுத் துறைகளுக்கு தடையின்றி எரிவாயு வழங்குவதை உறுதி செய்யும் என்று கூறுகிறது. கத்தாரின் எரிசக்தி அமைச்சரும், கத்தார் எரிசக்தியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாத் அல்-காபி, கடந்த செவ்வாயன்று கோவாவில் நடந்த இந்திய எரிசக்தி வாரக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் சந்தை பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் என்று நம்புவதாகவும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015-ஆம் அண்டு கத்தாரின் மன்னருடன் பிரதமர் மோதி இந்தியா - கத்தார் உறவு கடந்து வந்த பாதை இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் ஜூன் 2022-ஆம் ஆண்டு வந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டார். அந்த நேரத்தில், இந்தியா 'பொது மன்னிப்பு' கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இஸ்லாமிய உலகில் கோபம் பரவாமல் இருக்க, பா.ஜ.க உடனடியாக நுபுர் ஷர்மாவை நீக்கியது. அதைத் தொடர்ந்து எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இரண்டாவது பெரிய சவாலாக அமைந்து. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளையுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES வளைகுடா நாடுகள் தொடர்பான மோதி அரசின் கொள்கை தனது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நரேந்திர மோதி வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த முனைப்புகள் எடுத்து வந்துள்ளார். பிரதமர் மோதி இதுவரை நான்கு முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, சென்றிருக்கிறார். முதல் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 2015, இரண்டாவது பிப்ரவரி 2018 மற்றும் மூன்றாவது ஆகஸ்ட் 2019-இல் நடந்தது. பிரதமர் மோதி தனது நான்காவது அமீரகப் பயணத்தை ஜூன் 2022-இல் மேற்கொண்டார். 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதி ஐக்கிய அரபு அமீரகம் சென்றபோது, அது முந்தைய 34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு மேற்கொண்ட முதல் பயணமாக இருந்தது. மோதிக்கு முன், இந்திரா காந்தி 1981-இல் ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பிரதமர் மோதி அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவரை வரவேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அங்கு வந்திருந்தார். அவர் அப்படி வருவது நெறிமுறைக்கு எதிரானது. இந்தியப் பிரதமருக்காக அவர் அதை மீறினார். மோதிக்கு கிடைத்த இந்த வரவேற்பு குறித்து பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த மே மாதம் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதாகவும், அவரை மத்திய அமைச்சர் ஒருவர் வரவேற்றதாகவும் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் தெரிவித்திருந்தார். இந்தியாவின் இந்த நற்பெயர் தன்னை உறுத்துகிறது என்று அப்துல் பாசித் கூறியிருந்தார். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நரேந்திர மோதிக்கு எதிர்பாராத நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, மோதி அரசு முகமது பின் சயீத் அல் நஹ்யானை சிறப்பு விருந்தினராக அழைத்தது. அப்போது முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருக்கவில்லை. அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருந்தார். அதுவரை ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபரை மட்டுமே குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்தியா அழைத்திருந்தது. ஆனால் 2017 குடியரசு தினத்தில் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். அபுதாபியின் முன்னாள் மேற்கத்திய தூதர் ஒருவர், மோதியின் நடைமுறை அரசியல் மனப்பான்மையும் வலிமையான தலைவராக இருக்கும் பாணியும் சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக இளவரசர்களால் விரும்பப்படுவதாகக் கூறினார். பிரதமர் மோதி 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்தார். 2019-இல் பஹ்ரைன், 2018-இல் ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனியப் பிரதேசம், மற்றும் 2016-இல் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 2015-இல் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி மற்றும் 2018-இல் ஓமன் சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதியையும் பார்வையிட்டார். நரேந்திர மோதிக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் உயரிய குடிமகன் விருதும் வழங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cgx5440yxkwo
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
ஐசிசி தரவரிசை: வரலாற்று சாதனை படைத்த பும்ரா இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2 ஆவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2 ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். ரபடா 2 ஆவது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4 ஆவது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். https://thinakkural.lk/article/290939
-
பாகிஸ்தானில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் - மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தம்
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: வாக்கை பதிவுசெய்த நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடி 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது. இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார். பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலையொட்டி பொலிஸார் , விசேட ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/291067
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
Published By: VISHNU 08 FEB, 2024 | 02:02 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார். https://www.virakesari.lk/article/175852
-
லுப்தான்சா ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 1000 விமான சேவைகள் பாதிப்பு
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது. லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜேர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயற்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 இலட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஜேர்மனியில் தொடங்கியது. 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7:10 மணிக்கு போராட்டம் முடிவடையும் என விமான ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/291062
-
4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு
4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு! Published By: VISHNU 08 FEB, 2024 | 01:44 AM சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது, இந்நிலையில் வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க, சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/175850
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
Published By: VISHNU 08 FEB, 2024 | 12:04 AM ஆர்.ராம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தீர்மானம் 427 காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தமிழர்கள் மீது கரிசனைகளைக் கொண்டுள்ள அவர்களுடனான சந்திப்பில் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். விசேடமாக ராஜபக்ஷக்களின் காலத்தில் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசத்தின் மீதும் கடுமையான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் தருணத்தில் தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்த மயமாக்கல், அபிவிருத்தியின் பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழர்களை பாரிய அபிவிருத்தியின் பெயரால் வெளியேற்றுதல், அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், நினைவுகூருகின்ற சுதந்திரம், கருத்து வெளியிடுகின்ற சுதந்திரம் ஆகிய ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. அதேநேரம், உள்நாட்டில் பூகோள போட்டித்தன்மை காணப்படுகின்றது. விசேடமாகச் சீனாவுடன் மேற்குலக நாடுகள் போட்டிப்போடுகின்ற தன்மைகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் சீனாவுடனான விடயங்களைக் கட்டப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள. இதனால் அதற்கு பாரிய நிதி உதவிகள் தேவையாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காகச் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அத்தோடு. தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதோடு, பொறுப்புக்கூறலுக்காவும், இனப்பிரச்சினை தீர்வுக்காகவும் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/175846
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரிப்பு இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர கட்டார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர். முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பாலஸ்தீன கைதிககளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 2 ஆவது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிகளும், 3 ஆம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தது. அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும். நாங்கள் ஒரு முழுமையான வெற்றி பாதையில் இருக்கிறோம். காசாவின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம். காசாவின் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் இஸ்ரேலுக்கு மட்டுமே உள்ளது என்றார். ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். https://thinakkural.lk/article/291054
-
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை
பிரதான எதிர்க்கட்சியின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை Published By: VISHNU 08 FEB, 2024 | 09:05 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (7) வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த மாதம் 26ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் புதிய கூட்டத்தொடர் 2024, பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் புதன்கிழமை (7) காலை 10.30மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். எளிமையாக இடம்பெற்ற வைபவம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மிகவும் வைபவரீதியாக இடம்பெறுகின்ற போதும், ஜனாதிபதியின் ஆலாேசனைக்கமைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சாதாரண நிகழ்வாக மேற்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் ஆரம்பமாக சபாநாயக மஹந்த யாப்பா அபேவர்த்தன தனது வாகனத்தில் 2பொலிஸ் வாகன மரியாதையுடன் பிரதான வாயிலை காலை 10 அணிக்கு வந்திறங்கினார். அவரை பாராளுமன்ற செயலாளர் குஷானி ரோணதீர வரவேற்றார். அதனைத்தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் வருகை இடம்பெற்றது. அவரை சபாநாயகர் வரவேற்றார். அதன் பின்னர் காலை 10,15, மணியளவில் ஜனாதிபதி எந்த ஆரவாரமும் இன்றி பாராளுமன்ற பிரதான வாயிலை வந்தடைந்தார். அவரை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வரவேற்றார்கள். பொதுவாக தேசிய கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்ற போதும் இம்முறை அது இடம்பெறவில்லை. அதனையடுத்து, படைக்கலச் சேவிதர் மற்றும் பிரதி படைக்கலச் சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அதன்போது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்து ஜனாதிபதிபதியையும் பாராளுமன்றத்தையும் ஆசிர்வதித்தனர். அதன் பின்னர் ஜனாதிபதி உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து சபை நடவடிக்கை ஆரம்பிக்கும் முகமாக காலை 10.25மணிக்கு கோரம் மணி 5 நிமிடங்களுக்கு ஒலிக்கவிட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வருகை தந்தனர். இதன்போது ஜனாதிபதி படைக்கல சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் பிரதி செயலாளர்கள் ஆகியோரால் பாராளுமன்ற சபை மண்டபத்துக்கு பவனியாக அழைத்துவரப்பட்ட ஜனாதிபதி, காலை 10.30மணிக்கு சபைக்குள் பிரவேசித்தார். ஜனாதிபதி சபைக்குள் நுழைய ஆரம்பித்தவுடன் அவரது வருகை உதவி படைக்கல சேவிதரால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ஐந்தாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்க அக்கிராசனத்தில் அமர்ந்ததும், செயலாளர் நாயகம் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமை மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுதல் பற்றிய பிரகடனத்தை சபைக்கு வாசித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்த ஆரம்பித்தார். ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி புரக்கணிப்பு ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஆரம்பிக்க முற்பட்டதுடன் சபையில் அர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரையை பகிஷ்கரிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வரும் ஜீஎல். பீரிஸ், வீரசுமன வீரசிங்க ஆகியோரம் சபையில் இருந்து வெளியேறிச்செல்வதை காணக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் யாரும் சபைக்கு வருகை தரவில்ல. சபையில் இருந்த ராஜித்த, சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் உரையை பகிஷ்கரித்து வெளியெறிச் சென்றபோதும் அந்த கட்சியை சேர்ந்த ராஜத்த சேனாரத்ன, இஷாக் ரஹ்மான், சரத்பொன்சேகா, அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பெளசி, ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சடிியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எச்.எம். ஹரீஸ். பைசல் காசிம் ஆகியோரும் சபையில் இருந்தனர். அத்துடன் ஐக்கிய மக்கள சக்தியில் இருந்த சுயாதீனமாக செயற்படும் சம்பிக்க ரணவக்க. குமார வெல்கம ஆகியோரும் ஜனாதிபதியின் உரை முடியும்வரை சபையில் இருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டு பேர் மாத்திரமே சபையில் அத்துடன் ஜனாதிபதியின் கொன்கை பிரகடன உரையை செவிசாய்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தவராசா கலையரசன் ஆகிய இருவரும் மாத்திரமே சபையில் இருந்தனர். அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களில் ஹரினி அமரசூரிய இடையில் சபைக்கு வந்தபோதும் சிறிது நேரம் கழித்துவிட்டு சபையில் இருந்து வெளியேறிச் செல்வதை காணக்கூடிையதாக இருந்தது. ஆளும் கட்சியின் முன்வரை 4ஆசனங்களில் யாரும் இல்லை இதேவேளை, ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பித்து முடியும்வரை ஆளும் கட்சியின் முன்வரிசையில் 4ஆசனங்கள் வெறிச்சோடி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டொ, மனுஷ நாணயக்கார, கஞ்ன விஜேசேகர மற்றும் அமைச்சுப்பதவியை துறந்துள்ள கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் சபையில் இருக்கவில்லை. அத்துடன் ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலரும் சபைக்கு வருகை தந்திருக்கவில்லை. விசேட அதிதிகளுக்கு மாத்திரம் கலரிக்கு அனுமதி இதேவேளை, ஜனாதிபதியின் கொன்கை பிரகடன உரையை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற கலரிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அதேநேரம் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. வழமைபோன்று வெளிநாட்டு தூதுவர்கள், முற்படைகளின் தலைவர்கள். ஆளுநர்கள் மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி 10,30 மணிக்கு கொள்கை பிரகடன உரையை தொடங்கி, 11,15 மணிக்கு முடிவுக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதியின் உரை முடிவடைந்தவுடன் சபை முதல்வர் பாராளுமன்றத்தை இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்தார் அதன் பிரகாரம் பாராளுமன்றம் இன்று காலை 9,30 மணி வரை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி சபைக்கு அறிவித்தார். அதனையடுத்து சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் ஜனாதிபதி சபா மண்டபத்தில் இருந்து வெளிக்கு அழைத்து செல்லப்பட்டார். விக்னேஸ்வரன் எம்.பியுடன் இரகசியமாக பேசிய ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை முடித்துக்கொண்டு சபையை விட்டு பவனியாக ஜனாதிபதி அழைத்து செல்லப்பட்டும் போது சபையில் இறுதியில் முன்வரிசையில் இருந்த சி.வி.விக்னேஷ்வரனுக்கு அருகில் சென்று ஏதோ கதைத்துவி்ட்டு செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/175855
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகக் குறிப்பிடவில்லை - டயனா கமகே Published By: VISHNU 08 FEB, 2024 | 01:07 AM (இராஜதுரை ஹஷான்) கஞ்சா ஏற்றுமதிக்குக் கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது. பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பெயரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு மத தலைவர்கள், சிவில் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன 'ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா தொடர்பில் பேசப்படவுமில்லை,கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் எவ்வித பத்திரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டு கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக வெளியான செய்தியை நிராகரித்தார். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக நான் குறிப்பிடவில்லை. 2023.11.29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவே குறிப்பிட்டேன்.இந்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சமர்ப்பித்துள்ளார். கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்குப் பயன் கிடைக்கும், ஏற்றுமதி செய்யாவிட்டால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. காலம் காலமாக வெறும் விமர்சனங்களையும், பழைய கதைகளையும் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என்றார். https://www.virakesari.lk/article/175849
-
அயோத்தி இராமர் கோயிலுக்கு செல்லும் நாமல்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார். புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார். இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/291042
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 2ஆவது அரை இறுதிப் போட்டி இன்று 08 FEB, 2024 | 12:55 PM (நெவில் அன்தனி) பதினைந்தாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது அரை இறுதிப் போட்டி பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (08) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளும் எனவும் இறுதிவரை எந்த அணி வெற்றிபெறும் என அனுமாணிப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது. லீக் மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்றுகளில் இந்த இரண்டு அணிகளும் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தன. சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா எவ்வித சவலையும் எதிர்கொள்ளாதபோதிலும் அயர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளிடம் பாகிஸ்தான் பெரும் சவாலை எதிர்கொண்டே வெற்றிபெற்றிருந்தது. அவுஸ்திரேலியா சார்பாக அணித் தலைவர் ஹியூ வெய்ப்ஜென் 5 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 252 ஓட்டங்களையும் ஹெரி டிக்சன் 217 ஓட்டங்களையும் சாம் கொன்ஸ்டாஸ் ஒரு சதத்துடன் 177 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளனர். பந்துவீச்சில் கெலம் விட்லர் 11 விக்கெட்களையும் மஹ்லி பியட்மன், டொம் ஸ்ட்ரேக்கர் ஆகிய இருவரும் தலா 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஷாஸெய்ப் கான் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 260 ஓட்டங்களையும் ஷரில் ஹுசெய்ன் 134 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தான் சார்பாக துடுப்பாட்டத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். பந்துவீச்சில் உபெய்த் ஷா 17 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ், மொஹமத் ஸீஷான் ஆகியோர் தலா 6 விக்கெட்களையும் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175882
-
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டவாக்கத்தின் போது உயர்நீதிமன்றின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதாவென சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயும்: சபாநாயகர் மஹிந்த
இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – நீதியமைச்சர் அண்மையில் அமுல்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதுடன், சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்தச் சட்டத்தை பிழையானது என அழைப்பது அர்த்தமற்றது என்றும், சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரினார். “இந்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. சில குறைபாடுகளை நாங்கள் அவதானித்துள்ளோம். திருத்தங்களைச் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேவையான திருத்தங்களை நீங்கள் முன்மொழியுங்கள். அவற்றை நாங்கள் விவாதிப்போம். அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. பாராளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்புச் சட்டம் பிழையானது என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை பாராட்டுக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சட்டம் தொடர்பான விவாதங்களுக்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/291013
-
பாகிஸ்தானில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் - மொபைல் சேவைகள் நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தம்
Published By: RAJEEBAN 08 FEB, 2024 | 11:44 AM பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள அதேவேளை பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். சட்டஒழுங்கை பேணுவதற்காக இந்த நடவடிக்கை என பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மொபைல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு சட்டமொழுங்கு நிலவரத்தை பேணுவதற்கும் உருவாகக்கூடிய ஆபத்துக்களை கையாள்வதற்கும் இது அவசியம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்களால் மொபைல் இணையசேவைகளை பயன்படுத்தமுடியவில்லை என இஸ்லாமபாத்தில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/175872
-
புதனும் புதிரும்
கவி ஐயாவுக்கு நன்றி. தொடருங்கோ துயர்க்கதையை....
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
மரக்கறி விலையில் வீழ்ச்சி அண்மைக்கால மரக்கறி விலைகளுடன் ஒப்பிடுகையில், இன்று பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 700 ரூபா , போஞ்சி 500 ரூபாவாக உள்ள நிலையில், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் விலை முறையே 1,000 ரூபா மற்றும் 1,100 ரூபாவாக உள்ளது. https://thinakkural.lk/article/291010
-
ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு! பால் அருந்திய இரு சந்தேக நபர்கள் வைத்தியசாலையில்!
கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸார் பணி இடைநிறுத்தம்! Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 12:45 PM கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களுக்கு வெளிநபர் ஒருவர் விஷம் கலந்த பால் பொதியை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/175878
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை - சஜித்
Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 11:18 AM கோடிக்கணக்கான கடன்களை செலுத்த தவறிய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கடன் சலுகைகளை வழங்கிய போதிலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிந்த போதிலும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடனுதவி வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கான கற்கை நெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்த கடன் வழங்கப்படாமல் உள்ளதால்,விரைவில் இந்த கடன் வசதிகளை வழங்குங்கள். இந்த கடன் வசதி வழங்கப்படாததால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் பொறுப்பான நபர்கள் இன்றி பெரும் செல்வந்தர்களுக்கு உரிய கடன்களை வழங்கி,அந்தக் கடன்கள் கோடிக்கணக்கில் செலுத்தப்படாத நிலையில், இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த இரு பல்கலைக்கழகங்களில் சில மாணவர்கள் கடனை செலுத்தாத காரணத்தால், புதிய மாணவர்களுக்கு கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. இது அரசாங்கத்துடன் தொடர்புடைய நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினை என்பதால் இதனை உடனடியாக இன்றே நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் உத்தரவுகளை இந்த வங்கிகள் புறக்கணித்தால், இதில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/175865
-
பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கும் உணவு ரசாயனத்தை உறிஞ்சி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?
கட்டுரை தகவல் எழுதியவர், சூ க்வின் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிளாஸ்டிக் டப்பாக்கள் நம்மில் பலருக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்; பல்வேறு வகையான உணவுகளை சேமிக்கவும், உறைய வைக்கவும், வெப்பப்படுத்தவும் மற்றும் வெளியே கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சில விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களில் சில, நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் சேரலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அப்படி கசியும் ரசாயனங்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை மனித ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர். உணவுத் தரநிலைக் கழகம் (FSA) வகுத்துள்ள விதிமுறைகளில், உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக்கில் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தக்கூடாது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த விதிகளின் கீழ், தீங்கு விளைவிக்கும் அளவில் உணவில் ரசாயனங்களை வெளியிடும் பொருட்களை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. உற்பத்தியாளர்கள் உணவின் வெப்பநிலை, உணவின் வகை மற்றும் சேமிப்பு நேரம் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள கண்காணிப்பு அமைப்புகளின்படி உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிப்புகளை சோதித்ததையும் அவர்கள் சட்டத்திற்கு இணங்குவதையும் நிரூபிக்க முடியும். இருப்பினும், சில விஞ்ஞானிகள் இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்று வாதிடுகின்றனர். உணவில் பிளாஸ்டிக் கலக்கிறதா? பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு (BPF) படி, உணவுப் பாக்கெட்ககளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளில் ஒன்று பாலிப்ரோப்பிலீன்(Polypropylene) (மிருதுவான பாக்கெட்டுகள் முதல் பிஸ்கட் ரேப்பர்கள் வரை எல்லாவற்றிலும் இது காணப்படுகிறது). நம்மில் பலர் வைத்திருக்கும், டிபன் பாக்ஸ்கள், பாலிஎதிலீன் எனப்படும் மற்றொரு வகை பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆனால் உற்பத்தியின் போது பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, அதாவது டிபன் பாக்ஸ்கள் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு வண்ணங்கள் மற்றும் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. "பிளாஸ்டிகின் வேதியியல் கலவை நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பான புட் பேக்கிங் போரம் (Food Packaging Forum) இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான முனைவர் ஜானி முன்கே கூறினார். உற்பத்தியின் போது ரசாயனங்கள் ஒன்றோடொன்று வினைபுரியும் போது மாறுவது மட்டுமல்லாமல், தெரியாத கூறுகளும் கலவையில் உருவாகும். இவை வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் என குறிப்பிடப்படுகின்றன. சில ரசாயனங்கள் பிளாஸ்டிக்கிலிருந்து உணவு மற்றும் பானங்களில் இடம்பெயர்கின்றன, மேலும் சில நம் உடலால் உறிஞ்சப்படுகின்றன என்பது சர்ச்சைக்குரியது அல்ல. "சில வகையான உணவுகள் அதிக ரசாயன பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்" என்று டாக்டர் முன்கே கூறினார். எடுத்துக்காட்டாக, அமில உணவுகள் (தக்காளி சாஸ் போன்றவை) அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றவற்றை விட பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து அதிக ரசாயனங்களை உறிஞ்சும் வாய்ப்பு உள்ளது. 2022 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் குழு, 'கவலைக்குரிய ரசாயனங்கள்' என 388 ரசாயனங்களின் பட்டியலை வெளியிட்டது, அவை உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்களில் பயன்படுத்தப்படலாம். கவலைக்குரிய ரசாயனங்கள் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும் திறன் அல்லது பிற வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பெயரிடப்பட்ட 388 கவலைக்குரிய உணவு தொடர்பு ரசாயனங்களில்', 197 ரசாயனங்கள் உணவு பேக்கேஜிங், உணவு சேமிப்பு பாக்ஸ்கள், மேஜை பாத்திரங்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட, உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. "இந்த ரசாயனங்களை தினசரி பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உண்டு என்பது அதன் அர்த்தம் இல்லை," என முனைவர் முன்கே கூறினார். பிளாஸ்டிக் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதா? ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக்கில் உள்ள பல ரசாயனங்கள் ஒரு நேரத்தில் சிறிய அளவில் வெளிப்பட்டாலும் கூட, "கவலைக்குரியவை" எனக் குறிப்பிடுகின்றனர். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இணையதளத்தில் முனைவர் ரஸ் ஹவுசர், "பலவிதமான பாதகமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, நாம் ஒரே நேரத்தில் பல ரசாயனங்கள் (உதாரணமாக, ரசாயன கலவைகள்) சேர்க்கும்போது, நம் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படலாம்," என எழுதியுள்ளார். பிளாஸ்டிக்கில் காணப்படும் இரண்டு ரசாயனங்கள், ப்தலேட்ஸ் மற்றும் பைபினால்(பிபிஏ)(BPA) அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவை எண்டோகிரைன் சீர்குலைப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது அவை உடலின் ஹார்மோன்களில் தலையிடுகின்றன.இயல்பான வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் போன்ற உயிரியல் செயல்முறைகளின் வரிசையை பாதிக்கலாம். சமீபத்தில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA) ஆய்வுப்படி, இந்தப் பிளாஸ்டிக்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்தியது. பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலினில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்கள் அல்லது இரண்டின் கலவையான "பொதுவாக" பிபிஏ அல்லது ப்தலேட்ஸை கொண்டிருக்காது என்று பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு கூறுகிறது. பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து ரசாயனங்கள் கசியுமா? நம் உணவில் எந்த ரசாயனமும் கசிவதைத் தவிர்க்க விரும்பினால், எந்த வகையான டப்பாக்களை பயன்படுத்த வேண்டும்? வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் முனைவர் டயானா ஜுக்கர்மேன் கூறுகையில், "பிளாஸ்டிக் கலவையானது எல்லா நேரத்திலும் மாறிக்கொண்டே இருப்பதுதான் பிரச்னை. பெரும்பாலான மக்களைப் போலவே, என்னிடம் பழைய பிளாஸ்டிக் பாக்ஸ்களால் நிரப்பப்பட்ட சமையலறை உள்ளது, ஆனால், அவற்றில் என்ன இருக்கிறது என எனக்குத் தெரியாது,"என்றார். “பிளாஸ்டிக்குகள் காலப்போக்கில் உடைந்து, ரசாயனத்தை வெளியிடலாம். பிளாஸ்டிக் சூடாக்கப்படும்போது அல்லது பழையதாகி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு கழுவப்படும்போதும் இது நடக்கும்" என்றும் அவர் கூறுகிறார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அவை எந்த அளவிற்கு உணவில் சேரும் என்பது பற்றி முழுமையாகத் தெரிய வரும்வரை, கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை தேர்வுசெய்ய பரிந்துரைக்கிறார் ஜுக்கர்மேன். குறிப்பாக சூடான உணவு மற்றும் மைக்ரோவேவில் உணவை சூடாக்குவதற்கு கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை பயன்படுத்தலாம் என்கிறார் அவர். “ஒரு பாக்ஸ் மைக்ரோவேவ் பாதுகாப்பானது என்று உற்பத்தியாளர் கூறினால், அது உருகாது என்று பொருள். ஆயினும் நான் ஒருபோதும் பிளாஸ்டிக்கில் எதையும் சூடாக்குவதில்லை - நான் அதை ஒரு கண்ணாடி அல்லது பைரெக்ஸ் பாக்ஸில் வைத்து உணவை காகித துண்டு அல்லது தட்டில் மூடுகிறேன். அதைத்தான் மற்ற அனைவருக்கும் செய்ய நான் பரிந்துரைக்கிறேன்,” என்றார் முனைவர் ஜுக்கர்மேன். ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன? உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உலகின் மிகப்பெரிய அமைப்பான அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ், குளிர்ந்த உணவை சேமிக்க குறிப்பிட்ட பிளாஸ்டிக் பாக்ஸை மட்டுமே பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது. பெரும்பாலான பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்களில் ஒரு முக்கோணம், ஒன்று முதல் ஏழு வரையிலான எண்களைக் கொண்டுள்ளது. இது அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் என்பதை அடையாளம் காட்டுகிறது. உணவுப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான தேர்வுகள் எண்கள்- ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஐந்து என்று அகாடமி கூறுகிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மூன்று, ஆறு மற்றும் ஏழு குறியீடுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாக்ஸ்களை தவிர்க்க பரிந்துரைக்கிறது. பிஎப்ஏ,வின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,“உணவு வைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிளாஸ்டிக் தயாரிப்பும் உணவு தர ஆணையத்தின் "மிகக் கடுமையான" தரநிலைகளை சந்திக்க வேண்டும். வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் பொதுவாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மட்டுமே காணப்படுகின்றன, ஆனால் தற்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலீன் நேரடி உணவுத் தொடர்புக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது," என்றார் அந்தச் செய்தித் தொடர்பாளர். பிளாஸ்டிக் பாக்ஸ்களால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து அனைத்து நிபுணர்களும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சியைச் சேர்ந்த டாக்டர் ரேச்சல் ஓர்ரிட் கூறுகையில், “பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து குடிப்பது மற்றும் உணவைச் சேமிக்க பிளாஸ்டிக் பாக்ஸ் மற்றும் பைகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இந்த பாக்ஸ்களில் உணவை ஒரே நேரத்தில் பல மணிநேரங்களுக்கு சூடாக்கினாலும், அவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது" என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cgx5485k0wjo