Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் 04 FEB, 2024 | 12:06 PM இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றைய தினம் (04) அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு தின போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையிலேயே இந்த கறுப்பு தின போராட்டம் இடம்பெறுகிறது. இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/175510
  2. Published By: RAJEEBAN 04 FEB, 2024 | 09:58 AM ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள், ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற ஈழம் குறித்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம் ,ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது. ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார். https://www.virakesari.lk/article/175495
  3. எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் பல தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 04 FEB, 2024 | 10:04 AM எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர்..நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டு துறையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர். https://www.virakesari.lk/article/175494
  4. இலங்கையின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று - நேரலை 04 FEB, 2024 | 08:53 AM இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெறுகின்றது. இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷரேத்தா தவிசின் கலந்துக்கொண்டுள்ளார். 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், துன்பங்களைச் சகித்துக்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்ததால் எம்மால் மெதுவாக முன்னேற முடிந்தது. இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லும் போது, சிரமங்கள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கைச் சுமை குறையும். பொருளாதாரம் வலுவடையும். இலங்கை தாய்க்கு மீண்டும் விடிவு கிட்டும். 1948 இல் இலங்கை சுதந்திர நாடாக மாறிய போது, இலங்கை கீழைத்தேய பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கான அனைத்து பின்னணி காரணிகளும் எங்களிடம் இருந்தன. ஆனால் இறுதியில் நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாற நேரிட்டது. கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால், இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம். நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிக்கு இலங்கையிலும் நாட்டுக்கு வெளியிலும் வாழும் அனைத்து இலங்கையர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நிபந்தனையின்றி பாடுபடுவது ஆட்சியாளர்களினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போர்த்துகீசியர்களாலும், ஒல்லாந்தர்களாலும் பினனர் 1815 முதல் 1948 வரை ஆங்கிலேயர்களினாலும் முழுமையாக காலனித்துவப்படுத்தப்பட்டிருந்த நாம் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம். அவ்வாறு சுதந்திமடைந்து இவ்வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உயரிய சுதந்திரத்திற்காக நாடு எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள, கடந்த காலம் தொட்டு இன்று வரை உயிர் தியாகம் செய்த அனைத்து தேசப்பற்றாளர்களுக்கும் தேசத்தின் மரியாதையும் அஞ்சலியும் செலுத்தப்பட வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,பெற்ற சுதந்திரத்தை தேசிய,சமூக,கல்வி,மத ரீதியிலாக அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம். 1948 இல் இருந்து,76 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை பொருளாதார மற்றும் சமூக சுதந்திரமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, குறுகிய பேதங்கள் போலவே இனவாத மற்றும் மதவாத உணர்வுகளுடன் அரசியல் களம் மிகவும் அழுக்கடைந்து போயுள்ளமையினால்,நாம் ஒரு நாடாக பிரிந்து பல துரதிஷ்டவசமான அவலங்களை எதிர்கொண்டோம். இதன் பிரகாரம்,ஒரு நாடாக அடைந்த சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை கடந்த 76 ஆண்டுகளில் நமக்கு நல்ல பாடங்களைப் போதித்திருக்கின்றன. 'சுதந்திரம்' என்பது கிடைத்தவுடன் சும்மா கிடக்கும் ஒன்றல்லாது,தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு முழு குடிமகனின் பொறுப்பாகும் என்பதோடு, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற அர்பணிப்பை வழங்குவதும் ஆட்சியாளர்களினதும் பொறுப்பாகும். மக்களின் சுதந்திரத்துக்கு வேலி போட்டு, வரையறையின்றிய திட்டத்திற்குள் அரசாங்கம் இறங்கியிருப்பது அவலம் என்பதோடு,மனித சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுக்குமாறு சுதந்திர தினத்தன்று அரசாங்கத்திற்கு வலியுறுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அத்துடன்,இலங்கையர்களாகிய நமக்கு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே கிடைத்த சர்வஜன வாக்குரிமை என்பது சுதந்திர நாட்டில் மக்களிடம் உள்ள பலமான உரிமையாகும். ஜனநாயக சமூகத்துக்கான இருப்பையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் சர்வஜன வாக்குரிமைக்கு சவால் விடுவதானது நாட்டின் சுதந்திரத்திற்கு சவால் விடுவதானதாகும்.இந்தத் தருணத்தில் இந்தச் சவாலை எமது தாய் நாடு எதிர்கொண்டிருப்பது பாரதூரமான பேரிடராகும். மக்களின் சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் சட்டங்களை நிறைவேற்றி,தற்போதைய ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளும் விதம்,நாம் பெற்றுள்ள சுதந்திரத்தினுள் உரிமையாக்கிக் கொண்ட ஜனநாயக ஆட்சியை சர்வாதிகாரமாக மாற்றும் முயற்சியாகும்.இந்த முயற்சியை முறியடிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்போடு செயல்படும் சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது,இந்த சுதந்திர தினத்தில் நமது அபிலாஷையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.facebook.com/watch/?v=2136587140123821 https://www.virakesari.lk/article/175492
  5. 04 FEB, 2024 | 10:17 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு வழங்கினால் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் . யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (05) விஜயம் செய்வேன். என இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் குறிப்பிட்டார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன் கொழும்பு – சங்ரிலா ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிம் கல்வி முறைமையை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைகளை தெளிவுப்படுத்தினார். இதன்போது தனது சொந்த ஊரான சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இன்று சர்வதேசத்தில் பலதுறைகளில் சாதிக்கும் பல இலங்கையர்கள் இலவச கல்வியை அடிப்படையாக பெற்றவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கையர் ஒருவருக்கு வாழ்க்கை தொடர்பில் சரியான அடித்தளம் காணப்படுமாயின் அவர் சர்வதேசத்தில் நிச்சயம் சாதிப்பார் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டுள்ளேன். ஆரம்பக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். பாரிய கடின உழைப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் உயர்கல்வியை தொடர்ந்து சாதித்துள்ளேன். எனது மகள் வைத்தியர். அவரை ஒரு வைத்தியராக்குவதற்காக நான் சுமார் 01 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளேன். அதே ஆரம்ப மருத்துவ படிப்பை நான் இலங்கையில் இலவசமாக பெற்றுக்கொண்டேன், ஆகவே இந்த கல்வியால் உயர்வடைந்த நான் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன். இலங்கையில் இலவச கல்வியை பெற்றுக்கொண்டவர்களில் பலர் இன்று சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். அவர்கள் தமது வருடாந்த வருமானத்தில் குறைந்தது ஐந்து சதவீதத்தை தமது பிரதேச அபிவிருத்திகளுக்கு வழங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன்.அங்கு கலாச்சாரம் சீரழிந்துள்ளது. போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. சமூக கட்டமைப்பின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபரை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை சற்று மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் யாழ். இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்வேன் என்றார். https://www.virakesari.lk/article/175499
  6. ஜய்ஸ்வால் இரட்டைச் சதம், பும்ரா 6 விக்கெட் குவியல்; இங்கிலாந்தை திணறச் செய்தது இந்தியா 03 FEB, 2024 | 10:27 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக விசாகபட்டினம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த இரட்டைச் சதமும் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவு செய்த 6 விக்கெட் குவியலும் இந்தியாவை பலமான நிலையில் இட்டுள்ளது. முதலாம் நாளான வெள்ளிக்கிழமை (02) ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, இரண்டாம் நாளான இன்று ஜய்ஸ்வாலின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களைப் பெற்றது. ஆறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜய்ஸ்வால் குவித்த முதலாவது இரட்டைச் சதம் இதுவாகும். 290 பந்துகளை எதிர்கொண்ட ஜய்ஸ்வால் 19 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 209 ஓட்டங்களைக் குவித்தார். ஷுப்மான் கில் 34 ஓட்டங்களையும் ராஜாத் பட்டிடார் 32 ஓட்டங்களையும் அடுத்த அதிகூடிய எண்ணிக்கைகளாக பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அண்டர்சன் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரெஹான் அஹ்மத் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொயெப் பஷீர் 138 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜஸ்ப்ரிட் பும்ராவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் ஸக் க்ரோலி 76 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர். மிகத் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்ப்ரிட் பும்ரா 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவு செய்த 10ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும். அவரைவிட குல்தீப் யாதவ் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 143 ஒட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க இந்தியா 171 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜய்ஸ்வால் 15 ஓட்டங்களுடனும் ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. https://www.virakesari.lk/article/175490
  7. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 05:04 PM (எம்.நியூட்டன்) பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  8. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில்! 03 FEB, 2024 | 05:36 PM விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175486
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்பிவி தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. ஹெச்பிவி என்றால் என்ன? ஹெச்பிவி(human papillomavirus(HPV)) என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப் பெயர். இங்கு 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். மறுபுறம், அதிக ஆபத்து உள்ள ஹெச்பிவி வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். புற்றுநோயிலிருந்து ஹெச்பிவி தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது? ஹெச்பிவி தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்பிவி தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. ஹெச்பிவி தடுப்பூசி யாருக்கு? ஹெச்பிவி தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்பிவி பாதிப்பிற்கு முன் எடுத்துக்கொண்டால் அது சிறப்பாகச் செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காக்க மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது. தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. யாருக்கு ஹெச்பிவி ஏற்படுகிறது ? இவை எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்பிவி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர். இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது. உலகம் முழுவதும் ஹெச்பிவி தடுப்பூசி எவ்வளவு பரவலாக உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளன. இந்த நாடுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தீவிரமான அறிகுறிகள் தென்படும் வரை பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை. 2030 ஆம் ஆண்டளவில் ஹெச்பிவி தடுப்பூசி 90% மக்களை சென்றடைவதன் மூலம் அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நோயை மக்களிடமிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது, சுமார் 140 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன. சப்-சஹாரா ஆப்பிரிக்கா (24%), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (16%), கிழக்கு ஐரோப்பா (14%), மற்றும் தென்கிழக்கு ஆசியா (14%) ஆகிய நாடுகளில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரவலாக காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தாெடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடுகளில் முதல் நாடு ருவாண்டா ஆகும். இது 2011 இல் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பரிசோதனையை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் இது தடுப்பூசிக்கு செலுத்துவதற்கு தகுதியான 10 பெண்களில் ஒன்பது பேரை சென்றடைந்தது. இதன் காரணமாக, மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரி என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைப்பதாகத் தோன்றினாலும், இது அனைத்து வகையான ஹெச்பிவி வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பைத் தராது. நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o
  10. நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெங்கி ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கார்லோஸ் செரானோ பதவி, பிபிசி நியூஸ் 28 ஜனவரி 2024 முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் 1952 இல் பிறந்தார். தாமஸ் ஏ. ஸ்டைட்ஸ், அடா ஈ யோனத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார். ராமகிருஷ்ணன் எழுதிய வொய் வீ டை: தி நியூ சைன்ஸ் ஆஃப் ஏஜிங் அண்டு தி க்வெஸ்ட் ஃபார் இம்மோர்ட்டாலிட்டி (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality) என்ற புத்தகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. ராமகிருஷ்ணனிடம் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியபோது, மனிதர்கள் நீண்ட காலம் வாழப் பயன்படும் செல்கள் சுருங்குவதற்குக் காரணமான ரசாயன எதிர்வினைகள் அனைத்தையும் விளக்கினார். பிபிசி: முதுமை என்றால் என்ன? மனிதர்களின் உடலில் இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது? வெங்கி ராமகிருஷ்ணன்: முதுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது டிஎன்ஏவில் உள்ள மரபணுக்கள் சேதமடைவது. மரபணு மட்டத்தில், புரதங்கள் ஆயிரக்கணக்கான ரசாயன எதிர்வினைகளை இணைக்கின்றன. இந்த செயல்களால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். இவை நமது உடலுக்கு வலிமையையும் வடிவத்தையும் தருகின்றன. புரதங்கள் மரபணுக்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவுகின்றன. நமது நரம்பு மண்டலம் அவற்றைச் சார்ந்து செயல்படுகிறது. மூளையில் உள்ள பல காரணிகள் சேமிப்பிற்கு பங்களிக்கின்றன. வைட்டமின்கள், ஹார்மோன்கள், என்சைம்கள், ஆன்டிபாடிகள், ஹீமோகுளோபின் போன்றவையும் புரதங்களே. முதுமை என்பது உயிரணுக்களில் புரதங்களை உற்பத்தி செய்யும் திறனை நம் உடல் இழப்பதே ஆகும். நமது திசுக்கள், செல்கள், உயிர் மூலக்கூறுகள் மற்றும் இறுதியில் உடலும் சேதமடைவதை நாம் காணலாம். இது நாம் பிறந்தது முதல் படிப்படியாக நடக்கும் ஒரு செயல். குழந்தை பருவத்திலிருந்தே நம் வயது அதிகரிப்பதைக் காண்கிறோம். ஆனால், அந்த காலகட்டத்தில் நாம் வயதாவது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அப்போதும் நாம் வளர்கிறோம்... இளமைப் பருவத்தை அடைகிறோம்.... அது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, இந்த அறிகுறிகள் தீவிரமடைகின்றன. உடலில் உள்ள முக்கியமான அமைப்புகள் தோல்வியடையும் போது, உடல் முழுவதுமாக செயல்படாது. அதுவே மரணத்திற்கு வழிவகுக்கும் விளைவு. ஆனால் மரணத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாம் இறந்த பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு, உடலில் உள்ள சில செல்கள் உயிர்வாழ்கின்றன. அதனால்தான் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. ஆனால், உடலில் எந்த உறுப்பும் செயலிழந்தால் மரணம்தான் நிகழும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து இறப்பை நிறுத்திவைக்கமுடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உலகம் முழுவதும் ஏராளமான முதலீடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிபிசி: உயிரியலில் ஒவ்வொரு மரபணு வரிசையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மரபணு ரீதியாக நாம் ஏன் வயதாகிறோம்? ஏன் இறக்க வேண்டும்? வெங்கி ராமகிருஷ்ணன்: ஏனென்றால் மரபணு பரிணாமம் என்ற மாற்றம் நம்மை தனிநபர்களாக பார்க்கவில்லை. அது எல்லா இடங்களிலும் அதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. மரபணு பரிணாமம் என்பது மரபணுக்களின் பரிமாற்றம். நம் உடல்களில் பெரும்பாலானவை வயதானதைத் தடுக்க முயற்சிப்பது உண்மைதான். சிறந்த செயல்களின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள அவை முயல்கின்றன. வேட்டையாடுபவர்களால் கொல்லப்படும் அபாயத்தில் உள்ள உயிரினங்களில், மிக நீண்ட காலம் வாழும் உயிரினமாக இருந்தாலும் இந்த பரிணாமம் தடைபடுவதில்லை. இருப்பினும், மிக நீண்ட காலம் உயிர் வாழும் தன்மையும் அதுபோன்ற உயிரினங்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. ஏனென்றால் அவை ஒரு கட்டத்தில் மற்ற உயிரினங்களின் கைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. சிறிய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில், நடைமுறையில் பெரிய உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. எலிகளும் வெளவால்களும் ஒரே எடையில் இருந்தாலும், வெளவால்களே நீண்ட காலம் வாழ்கின்றன. ஏனென்றால் அவை பறக்கின்றன. அதனால் பிற உயிர்களின் கைகளில் சிக்கி அவை உயிரிழப்பதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிர்களின் உருவ அமைப்புக்கும், அவை உயிர் வாழும் காலத்திற்கும் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், சிறிய உயிர்கள் குறைந்த காலமே உயிர் வாழ்கின்றன. பிபிசி: கடந்த 150 ஆண்டுகளில் மனித ஆயுள் காலம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் மக்களின் ஆயுட்காலம் மேலும் அதிகரிக்குமா? அல்லது நமது உயிரினங்கள் வாழக்கூடிய அதிகபட்ச ஆயுட்காலத்தை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோமா? இது விஞ்ஞானிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் மருத்துவ முறைகளுடன் இன்று நாம் நீண்ட காலம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட காலங்களில் நாம் 120 ஆண்டுகள் வாழலாம். இந்த வயதிற்கு மேல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. 100 வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் 110 வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நீண்ட ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி டாம் பேர்ல்ஸ் தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இயற்கையாகவே உயிரியல் வரம்புகளை எதிர்கொள்வோம் என்று அவர் உணர்ந்தார். மரபணு காரணிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளுடன் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மக்கள் உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதாவது, இயற்கையாகவே இந்த வயதைத் தாண்டிய பிறகு ஒரு எல்லை இருப்பதாகத் தோன்றுகிறது. புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும். வயதாவதற்கான காரணங்களை திறம்பட எதிர்த்துப் போராடினால், ஒருவேளை இந்த வரம்பை மீறலாம். ஆனால், அதைச் செய்வது எவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி சிந்திக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிபிசி: முதுமை ஒரு நோயா என்பதும் விவாதத்திற்குரியது... வெங்கி ராமகிருஷ்ணன்: புற்றுநோய், ஞாபக மறதி, உடல் உறுப்புகளில் வீக்கம், மூட்டுவலி, இதயம் தொடர்பான நோய்களும் வயதுக்கு ஏற்ப வருகின்றன. அதனால்தான் இந்த நோய்களுக்கு முதுமையே காரணம் என்று கூறப்படுகிறது. முதுமை ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், முதுமை என்பது ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய இயற்கையான நிகழ்வு. இந்த தவிர்க்க முடியாத, பொதுவான செயல்முறையை எப்படி நோய் என்று அழைக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமும் முதுமை ஒரு நோய் அல்ல என்று கூறியுள்ளது. முதுமையை ஒரு நோயாகக் கருதும் அழுத்தம் அதிகரித்ததால், ஆராய்ச்சிக்காகப் பெரும் தொகை செலவிடப்பட்டது. பிபிசி: எதிர் காலத்தில் வயதாவதற்கு எதிரான சிகிச்சையில் எந்தெந்த பகுதிகளில் மேலும் முன்னேற்றங்களைக் காண எதிர்பார்க்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: ''இதில் எதையும் எளிதாகக் கணிக்க முடியாது. குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றி...’’ என்று கிண்டல் செய்தார் பேஸ்பால் வீரர் யோகி பெர்ரா. அந்த சிகிச்சைகள் எவ்வளவு மேம்பட்டவையாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முதுமையை குறைக்க பல நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது வயதாகும் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளம் வயதில் இப்படிச் செய்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இதேபோன்ற மருந்து தேடப்படுகிறது. ஆனால், ஐஸ்க்ரீமுடன் கேக் சாப்பிட்டுவிட்டு, எந்தக் கவலையும் இல்லாமல் மருந்து சாப்பிட்டால் போதுமா..? ராபமைசின் என்ற மருந்தில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதிக அளவு எடுத்துக் கொண்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை நசுக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூற்றுகள் உள்ளன. மற்றொரு செயல்முறை..பரபியோசிஸ். ஒரு இளம் விலங்கிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு வயதான விலங்குக்கு செலுத்தப்படுகிறது. அந்த இரத்தத்தைப் பெறும் விலங்கு அதன் உடல் உறுப்புகளில் புத்துணர்ச்சி பெறுகிறது. முதுமையை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் இரத்தத்தில் உள்ளன. அவற்றை அடையாளம் காண பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில முதிர்ந்த செல்கள் வயதுக்கு ஏற்ப வளரும். வீக்கமும் இதன் அறிகுறியாகும். வயதான செல்கள் அழிக்கப்பட வேண்டுமா? இதை அடைய முடிந்தால், சில ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற வயதான சில விளைவுகளை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகிறார்கள். மற்றொரு சுவாரசியமான ஆராய்ச்சி... செல்லுலார் ரீப்ரோகிராமிங். இதில், செல்கள் அவற்றின் அசல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த செயல்முறை சற்று ஆபத்தானது. ஏனெனில் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், விலங்குகள் மீதான இந்த சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து, இறப்பைத் தவிர்க்கமுடியும் என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கதைகள் இருந்துவருகின்றன. பிபிசி: இவை தவிர, அறிவியல் கட்டுக்கதைகளும் உள்ளன. அது போன்ற கதைகளுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கின்றன. வெங்கி ராமகிருஷ்ணன்: ஆமாம். முற்றிலும் அறிவியலுக்கு ஏற்பில்லாத, தவறான கருத்துகளும் உள்ளன. மக்கள் நம்பும் விஷயங்களில் ஒன்று கிரையோனிக்ஸ். இதன் பொருள் ஒருவர் இறந்தால், அவரது உடல் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகிறது. எனவே அவர்கள் மரணத்தை வெல்ல முயல்கிறார்கள். ஆனால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு இது வெறும் கட்டுக்கதை தான். இது மக்களின் மரண பயத்தை சுரண்டுவதற்கான ஒரு வழியாகும். கிரையோனிக்ஸ் மீது நம்பிக்கை வைத்து பணத்தைச் செலவழிப்பவர்களும் உண்டு. எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், இளமையை வாங்க முடியாது. நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஆப்ரிக்கா மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பலரை நான் அறிவேன். கிரையோனிக்ஸ் பற்றி யாரும் யோசிக்கவே இல்லை. பிபிசி: முதுமைப் பயம் பலரிடையே அதிகரித்துள்ளது. அதனால்தான் போடோக்ஸ் பயன்படுத்துகிறோம். அதாவது நரைத்த முடிக்கு கலர் அடிப்பது போல. இப்படிப்பட்டவற்றால் நமக்கு வயதாகிறது என்ற பயம் குறையும் என்று நினைக்கிறீர்களா? வெங்கி ராமகிருஷ்ணன்: வயது வித்தியாசமின்றி ஒருவருக்கு பல அழுத்தங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. ஆனால் முதுமையை தடுக்கும் ஆராய்ச்சி முதுமை பயத்தை குறைக்கும் என்று நான் நினைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை என்ற நிலையில், நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசியத் தேவையாக உள்ளன. பிபிசி: முதுமையை தாமதப்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிறைய பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், உங்கள் புத்தகத்தில் ஆரோக்கியமாக இருக்க மற்ற வழிகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவற்றைப் பற்றி விளக்க முடியுமா? வெங்கி ராமகிருஷ்ணன்: நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசிய தேவை. வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை. நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. எந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை. நமது உயிரியல் பரிணாமம் சார்பு மற்றும் வேட்டையாடலில் தொடங்கியது. அந்தக் காலத்தில் மக்கள் சீரான முறையில் சாப்பிட்டு வந்தனர். இயற்கையாகவே அவர்கள் மிகச்சரியாக சாப்பிட்டு, நன்றாக உறங்கி வந்த நிலையில், நான் முன்பே குறிப்பிட்டது போல அவை கலோரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் இப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுகிறோம். மேற்கில் உடல் பருமன் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நம் முன்னோர்களை ஒப்பிடும்போது நாம் வயிற்றில் எப்போதும் எதையாவது வைத்திருக்கிறோம். உடற்பயிற்சியையும் போதுமான அளவு நாம் செய்வதில்லை. மேலும் தூக்கம் வரும்போது, அதன் முக்கியத்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நன்றாகத் தூங்குவது நமது உடலின் மறுசீரமைப்பு அமைப்புகளில் மிக முக்கியமான பகுதி என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இப்போது நம் முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினால், தசை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு போன்ற அபாயங்களைக் குறைக்கலாம். இவற்றை எப்போதும் பின்பற்றுவது எளிதாக இருக்காது. சில நேரங்களில் மக்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், அதைக் கடக்க வேண்டும். பிபிசி: நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்... எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற பழமொழி உங்களுக்கு பிடிக்குமா? வெங்கி ராமகிருஷ்ணன்: ஆம், நல்ல வார்த்தை. இதற்கு நான் உடன்படுகிறேன். அதுதான் தேவை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொண்டால்.. நெஞ்சு வலி அபாயங்கள் குறையும். மனநிலையையும் அது நன்றாக மேம்படுத்துகிறது. முடிந்தவரை நாம் விரும்பும் வரை வாழ விரும்புகிறோம். அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாம் தனிப்பட்ட முறையில் விரும்புவது இந்த சமுதாயத்திற்கோ அல்லது இந்தச் சூழலிற்கோ சிறந்ததாக இருக்காது. புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதிப்பை நாம் காண்கிறோம். தனி மனிதனாக நாம் எடுக்கும் முடிவுகள் சமூகத்திற்கு கேடாக அமைகின்றன. அதைக் கடக்க நமக்கு ஒரு உண்மையான உணர்வு தேவை. https://www.bbc.com/tamil/articles/ckd47vx780xo
  12. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர். பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர். ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது. அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி நட்பு பாராட்டுவதாக அவரது தந்தை சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்.
  13. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 01:57 PM இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் 'கரஞ்ச்' இன்று சனிக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். 67.5 மீற்றர் நீளமுள்ள ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பலானது 53 ஊழியர்களுடன் கப்பலின் கட்டளை தளபதி அருணாப் தலைமையில் வருகை தந்துள்ளது. கப்பல் வருகையை முன்னிட்டு இடம் பெறவுள்ள நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர். அத்தோடு, நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்ய உள்ளனர். ஐஎன்எஸ் 'கரஞ்ச்' நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு 05 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவுள்ளது. https://www.virakesari.lk/article/175455
  14. 19 வயதின் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிகளில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா 03 FEB, 2024 | 12:44 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இன்றைய போட்டி முடிவு அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்காவது அணியைத் தீர்மானிக்கும். பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் இலங்கையை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகதி பெற்றது. மழையினால் ஆட்டம் கைவிடப்பட அரை இறுதிக்கு ஆஸி. முன்னேறியது கிம்பர்லியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இதே குழுவுக்கான சுப்பர் 6 போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. சாம் கொன்ஸ்டாஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்தபடியான அதிகபட்ச 29 ஓட்டங்களை ரெவ் மெக்மிலன் பெற்றார். பந்துவீச்சில் நேதன் எட்வேர்ட் 32 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசய் தோன் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 228 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 4.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த சுற்றுப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வந்த மேற்கிந்தியத் தீவுகளின் பயணம் பெரும் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. எனினும் தங்களுக்கு உற்சாகமூட்டிய இரசிகர்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் மைதானத்தைச் சுற்றிச் சென்று கைகளை அசைத்து நன்றிகளை வெளியிட்டனர். நேபாளத்துடனான சுப்பர் 6 போட்டியில் இந்தியாவுக்கு இலகுவான வெற்றி புளூம்பொன்டெய்னில் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை 132 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. அணித் தலைவர் உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகியோர் அபார சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 215 ஓட்டங்களும் சௌமி பாண்டேயின் துல்லியமான பந்துவிச்சும் இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச்செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது. 14 ஓவர்கள் நிறைவில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும், உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 215 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாக இது அமைந்தது. சச்சின் தாஸ் 101 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 116 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 107 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 100 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்சான் ஜா 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 50 ஓவர்களையும் தாக்குப் பிடித்து 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் தேவ் கணல் (33), 10ஆம் இலக்க வீரர் துர்கேஷ் குப்தா (29 ஆ.இ.), அர்ஜுன் குமல் (26), தீப்பக் பொஹாரா (22) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சௌமி பாண்டே 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அர்ஷின் குல்கர்னி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/175446
  15. ஈராக் - சிரியாவிலுள்ள ஈரான் நிலைகள் மீதான தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா : 85க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் Published By: RAJEEBAN 03 FEB, 2024 | 07:02 AM ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா இதுவரை 85க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோர்தானில் உள்ள தனது தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இராணுவத்தின் நிலைகள் மீதும் அதனுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீண்டதூர பி 1 தாக்குதல் விமானங்கள் உட்பட பல விமானங்கள் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/175421
  16. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 11:19 AM கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து கடவையை கடக்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/175438
  17. தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார் ஜனாதிபதி ரணில் ! Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 03:57 PM இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (3) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதந்துள்ள அவர், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கின்றார். தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அந்நாட்டு பிரதி பிரதமர் பூம்தாம் வெச்சயச்சாய் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் வருகை தந்துள்ள நிலையில், அவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன சிறப்பு வரவேற்பளித்தார். இதேவேளை, இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்விலும் தாய்லாந்து பிரதமர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175469
  18. செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா? புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக அமெரிக்காவின் ஹாலிவுட் போர்க் கொடி தூக்கி வரும் நிலையில் இந்திய திரை உலகம் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமைகளைப் படைத்திருப்பது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. 'ஊர்வசி ஊர்வசி' என்று பாடிய குரல் மீண்டும் ஒலிக்கிறது பட மூலாதாரம்,A R RAHMAN/X லால் சலாம் திரைப்படத்தின் ‘திமிறி எழுடா’ என்ற பாடலில் மறைந்த பாடகர்கள் ஷாஹுல் ஹமீது, பம்பா பாக்யாவின் குரல்களைப் பயன்படுத்தியுள்ளனர். இருவருமே தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடனும், பிற இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர். ஷாஹுல் ஹமீது 1980கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 1993ஆம் ஆண்டில் "திருடா திருடா" திரைப்படத்தில் அவரது தனித்துவமான குரலை வெளிப்படுத்திய "ராசாத்தி என் உசுரு" பாடல் ஹமீதுக்கு திருப்புமுனையாக இருந்தது. "வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே", "காதலன்" படத்தில் "ஊர்வசி ஊர்வசி" மற்றும் "ஜீன்ஸ்" படத்தில் "வாரயோ தோழி" உள்ளிட்ட 1990களின் மிகவும் பிரபலமான தமிழ்ப் பாடல்களை அவர் பாடினார். அவர் 1998ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார். பட மூலாதாரம்,A R RAHMAN/FACEBOOK பம்பா பாக்யா தமிழ் திரை உலகில் பின்னணிப் பாடகராக வலம் வந்தவர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பொன்னி நதி” பாடல், நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் “சிம்டான்காரன் பாடல், நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் “புல்லினங்காள்” பாடல் ஆகியவை அவர் பாடியதில் பிரபலமான பாடல்கள். அவர் 2022ம் ஆண்டு உயிரிழந்தார். பட மூலாதாரம்,A R RAHMAN/X ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசியிடம் பேசும்போது, "எந்தவொரு தொழில்நுட்பமும் மனித சமுதாயத்திற்கு நன்மை தரவேண்டும். வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன். இந்தப் பாடலை உருவாக்கும்போது நிறைய யோசித்தேன். பாடகர்களின் குடும்பத்தாரையும் சந்தித்தோம். வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எதையும் செய்வதற்கு நான் விரும்புவதில்லை. இப்போது நாங்கள் இந்தப் பாடலுக்குத் தேவையானதைச் செய்திருக்கிறோம். நாளை இதேபோன்ற முயற்சியை வேறு யாராவது செய்தாலும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாடகரின் குடும்பத்திற்கு, அவர்களின் வாரிசுகளுக்கு உரிய தொகையைச் செலுத்திவிட்டு அந்த முயற்சியை மேற்கொள்வார்கள்," என்றார். பட மூலாதாரம்,SCREENGRAB 'கடவுளுக்கு பிறகு, ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி' - ஷாஹூல் ஹமீதின் மகள் ஷாஹூல் ஹமீதின் மகள், ஃபாத்திமா ஷாஹுல் ஹமீது இது முற்றிலும் எதிர்பாராதது என்று தெரிவித்தார். அவர் நம்மிடம் பேசும்போது, “ரஹ்மான் அங்கிள், தனக்கே உரிய பாணியில் மேஜிக் செய்கிறார். அப்பாவின் குரலை மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு யாருக்கும் புரியும் என்று நான் நினைக்கவில்லை. என் அம்மாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தாத்தாவின் காலத்தில் அவருடன் இருக்க முடியாமல் தவித்த என் மகள், இப்போது இந்தப் பாடலைக் கேட்டு குதூகலிக்கிறாள்,” என்றார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனது தந்தைக்குமான உறவு நட்பையும் தாண்டியது என்கிறார் ஃபாத்திமா. “அவர்கள் சகோதரர்களைப் போலவே இருந்தார்கள். இருவரும் அவரவர் துறைகளில் வளர்ந்து வரும் காலத்திலேயே தொடங்கிய நட்பு அது. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக ஜிங்கிள்ஸ் இசைக்கும்போது இருவரும் அறிமுகமானார்கள். ரஹ்மான் அங்கிளின் சொந்த ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆல்பமான – 'தீன் இசை மாலை'- இஸ்லாமிய பக்திப் பாடல்கள் கொண்டது. அதில் ரஹ்மான் அங்கிளின் டேக் லைனாக மாறிய 'எல்லாப் புகழும் இறைவனுகே' என்ற பாடலை என் தந்தை பாடியிருந்தார். சுற்றி பல திறமைசாலிகள் இருந்தாலும் ரஹ்மான் அங்கிள்தான் திறமையை அடையாளம் கண்டு சரியான தளத்தில் பயன்படுத்தினார். கடவுளுக்கு அடுத்தபடியாக ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி செலுத்துகிறோம்,” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். மறைந்தவர்களின் குரலை மீண்டும் பயன்படுத்துவது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, “தொழில்நுட்பத்துடன் நாம் வளர வேண்டும். இதில் எதிர்மறையாக எதுவும் இல்லை. அப்பாவின் குரலைப் பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது," என்றார் ஃபாத்திமா. "நான் எப்படி உணர்கிறேன் என்பதை விட, மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவரது ரசிகர்கள் அன்புடனும் மரியாதையுடனும் அதை வரவேற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்." உண்மையில், பாடல் முதன்முதலில் ஆன்லைனில் வெளியிடப்பட்டபோது, அவரது ரசிகர் ஒருவர்தான் பாடலின் இணைப்பையும் பாடலில் தன் அப்பாவின் குரல் எந்த நிமிடத்தில் ஒலிக்கிறது என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியதாகவும் தெரிவித்தார். மேலும், “இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் மறப்பது மிகவும் எளிதானது. ஆனால், அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சினிமாவில் இருந்த ஒருவரை மக்கள் எவ்வாறு அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்,” என்றார். இனி பாடகர்களின் குரலே பாடலைப் பாடும் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலேயே முதல் முறையாக மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் ஒலிக்க செய்வது இதுவே முதல் முறை. இது எப்படி சாத்தியமானது என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதை உருவாக்கிய டைம்லெஸ் வாய்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண சேத்தன் பிபிசியிடம் பேசினார். “நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. ரஹ்மான் சார் ஏதாவது புதிய இசைக் கருவி வாங்கி வந்தால், அது எப்படிச் செயல்படுகிறது என்று முழுமையாகக் கற்றுக் கொள்வேன். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், இசையமைப்பாளர்களுக்கான இசை உருவாக்கத் தேவைப்படும் மென்பொருட்களைத் தயாரிக்க நானும் என் குழுவும் தொடங்கினோம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, டைம்லெஸ் வாய்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்," என்றார் கிருஷ்ண சேத்தன். யாருடைய குரலை உருவாக்க நினைக்கிறோமோ, அவரது குரலின் பதிவு தேவை. அது ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கத் தொடங்கினார். "பதிவு செய்யப்பட்ட குரலைக் கொண்டு ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை பயிற்றுவிக்க வேண்டும். அந்த ஏஐ மாடல் பாடகரின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் கிரகித்துக் கொள்ளும். பின்பு, நாம் பதிவு செய்ய நினைக்கும் பாடலை வேறு ஒரு நபரைப் பாடச் சொல்லி பதிவு செய்துகொள்ள வேண்டும். இது பைலட் வாய்ஸ் எனப்படும். பின்பு, நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மாடல் பைலட் வாய்ஸை பாடகரின் குரலாக மாற்றும். இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை,” என்று இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கினார். ஏன் ஷாஹூல் ஹமீது மற்றும் பம்பா பாக்யாவின் குரல்கள் தேர்ந்தெடுக்கபட்டன என்று கேட்டதற்கு, “ஷாஹுல் ஹமீத், பம்பா பாக்யாவின் குரல்கள் மிகவும் தனித்துவமானவை. செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குக் கொண்டு வர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை," என்றார். பட மூலாதாரம்,KRISHNA CHETAN மேலும், "பம்பா பக்கியாவின் குரல் ரஹ்மான் சாருக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு மாதிரி குரலை உருவாக்கியபோது, அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஷாஹூல் ஹமீது அவருடன் நெடு நாட்களாகப் பயணம் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,” என்று கூறினார். டைம்லெஸ் வாய்ஸஸ் என்பது பாடர்களின் குரல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன் சேத்தன். “இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு பாடகரின் குரலை காலத்துக்கும் பாதுகாக்க முடியும். மறைந்த பாடகரின் குரலைப் பயன்படுத்தும்போது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு உரிய வெகுமதியை முன்கூட்டியே குடும்பத்தினருக்கு அளித்துவிடுகிறோம்,” என்றார். இந்தத் தொழில்நுட்பம் இசைத் துறையில் பல மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிருஷ்ண சேத்தன். “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தங்கள் குரல்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விரும்பும் முன்னணி பாடகர்களுடன் நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். அவர்களின் குரல்களைப் பதிவு செய்து சோதனை செய்து வருகிறோம். ஸ்டூடியோவுக்கு நேரில் செல்ல முடியாத ஒரு பாடகரின் ஏஐ குரலைக் கொண்டு, பாடலைப் பதிவு செய்துகொள்ள முடியும். பல்வேறு கால கட்டங்களில் ஒரு பாடகரின் குரல் எப்படி இருந்ததோ அதைப் பதிவு செய்து ஒரே பாடலில் சேர்க்க முடியும். மேலும், ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்களின் நடிகர்களுக்குத் தங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், ஏஐ மூலம் அவரது குரலிலேயே அனைத்து மொழி ரசிகர்களிடமும் பேச முடியும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cnknq92w234o
  19. பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு இராணுவ பரசூட் வீரராக தனது திறமையை வௌிக்காட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று(02) ஜனாதிபதி அலுவலகத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டார். இலங்கை இராணுவத்தின் பரசூட் சாகச வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் குடாஓயா கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலையில் கடந்த 22ஆம் திகதி இராணுவத் தளபதி பரசூட் சாகசம் செய்தார். இராணுவத் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் முயற்சியையும், அர்பணிப்பையும் பாராட்டி இராணுவ தளபதிக்கு எயார்போன் (Airborne) சின்னம் அணிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். https://thinakkural.lk/article/290401
  20. 754 கைதிகளுக்கு நாளை பொதுமன்னிப்பு! இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளிலுள்ள 754 கைதிகள் விசேட பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர். அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு, வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்பில் 729 ஆண் கைதிகளும், 25 பெண் கைதிகளும் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290444
  21. அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
  22. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: பானிபூரி விற்ற சிறுவன் கிரிக்கெட்டில் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் மூர்க்கமாக விளையாடி தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய 290 பந்துகளில் 7 சிக்சர்கள், 19 பவுண்டரிகளை விளாசி 209 ரன்களை சேர்த்தார். தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் என அடித்து விளாசினார். இந்த இரட்டை சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இந்திய பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார். முன்னதாக யஷஸ்வி தனது முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த ஜூலை 2023இல் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 21 வயதே ஆன யஷஸ்வி புபேந்திர குமார் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். அந்தப் போட்டியில் அவர் 171 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல் ஐ.பி.எல். தொடரிலும் தனது சரவெடியான ஆட்டம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்தார். ஐபிஎல் போட்டியில் வளர்ந்து வரும் வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மிக உயர்தர ஆட்டங்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்படியாக பல சவால்களைக் கடந்து கிரிக்கெட்டில் சாதித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், களத்துக்கு உள்ளே மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். எத்தகைய சவால்கள் வந்தாலும் சளைக்காமல் தனது இலக்கை அவர் அடைந்துள்ளார். யார் இந்த ஜெய்ஸ்வால்? பட மூலாதாரம்,GETTY IMAGES உத்தர பிரதேசத்தில் உள்ள பதோஹியை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால். மும்பைக்கு வந்து, மைதானத்தில் கூடாரம் போட்டு வாழ்ந்து, பானிபூரி விற்று தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த புகழ்பெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் யஷஸ்வி ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 2019ல் ஜார்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தனது 17 வயதில் அவர் பெற்றார். இதேபோல், 2020ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் யஷஸ்வி 400 ரன்களை குவித்திருந்தார். தொடர் நாயகன் வருதும் அவர் வசமானது. இதற்கான பலன் அதே ஆண்டில் கிடைத்தது. ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. 2022 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய் சம்பளத்துடன் அணியில் தக்க வைத்துக் கொண்டது. முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால் அமோல் மஜும்தார் மற்றும் ரஸ்ஸி மோடியின் சாதனையை சமன் செய்தார். ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 91 சராசரியுடன் இந்த மைல்கல்லை கடந்துள்ளார். ரஞ்சி கோப்பையின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் சதம் அடித்துள்ள அவர், துலீப் டிராபியின் காலிறுதியிலும் இரட்டை சதம் அடித்தார். திரும்பிப் பார்க்க வைத்த ஐபிஎல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் முதல் மூன்று வீரர்களில் ஜெய்ஸ்வாலின் பெயரும் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவித்தார். தொடக்க ஆட்டக்காரரான அவர், முதல் பந்தில் இருந்தே தனது தாக்குதலை தொடங்கி எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் ஜெய்ஸ்வாலின் பங்கு உள்ளது, ஆனால், இந்த ஆண்டு அவரது ஆட்டம் `வெறித்தனம்` ஆக இருந்தது. 1 சதம், 5 அரைசதம் உட்பட 625 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது சராசரி 48.08 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 164ஆகவும் இருந்தது. மொத்தமாக 82 பவுண்டரிகள், 26 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் விளாசி இருந்தார். இந்திய அணிக்காக விளையாட வீரர்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார். முதன்முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு 2020ல் கிடைத்தது. அதன் பின்னர் அவரது ஆட்டத்திறன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின், 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்களையும், 2022 தொடரில் 10 போட்டிகளில் 258 ரன்களையும் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு சீசன்களிலும் , ஜெய்ஸ்வாலின் தொடக்கம் நன்றாகவே இருந்தது, ஆனால் விக்கெட்களை விரைவாக இழந்துவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், 2023 ஐபிஎல் தொடர் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றாலும் தனிஆளாக இருந்து 124 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். அவரது ஆட்டத்தை பார்த்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாயடைத்து போனார். ஆட்டம் முடிந்த பின்னர் தனது பேச்சில் ரோகித் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஜெய்ஸ்வால் இன்று மிகவும் மறக்கமுடியாத ஆட்டத்தை விளையாடினார். போட்டி முழுவதும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்கிருந்து இந்த பலம் வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். பல மணி நேரத்தை ஜிம்மில் செலவிடுவதாக அவர் கூறினார். இதே ஃபார்மை அவர் தொடர வேண்டும். இது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது, ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் நல்லது’’ என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பானிபூரி விற்று, பட்டினியாக தூங்கி சாதித்தவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தின் கூற்றுபடி, "மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கூடாரம் போன்று ஜெய்ஸ்வால் மூன்று ஆண்டுகள் தங்கியுள்ளார். தொடக்கத்தில் பால் கடை ஒன்றில் அவர் தூங்கியுள்ளார். அதன்பின்னர் தூங்க இடம் இல்லாமல் கூடாரத்தில் தூங்கியுள்ளார். அப்போது அவருக்கு 11 வயதுதான். அவரின் கனவு முழுவதும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது மட்டுமே” ஜெய்ஸ்வாலின் தந்தை பதோஹியில் சிறியளவில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதை வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துகொள்வது என்பது அவருக்கு கடினமாக இருந்தது. அதோடு, ஜெய்ஸ்வாலும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பினார். எனவே, அவர் மும்பை செல்ல முடிவெடுத்தப் போது அவருடைய தந்தை குறுக்கே நிற்கவில்லை. மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால், வோர்லியில் உள்ள தனது உறவினர் சந்தோஷிடம் சென்றார். ஆனால், அவரது வீடு பெரிதாக இல்லாததால், ஜெய்ஸ்வால் அங்கு தங்க வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பால் கடையில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அதையும் பின்னர் விட வேண்டியதாயிற்று. எனவே அவர் முஸ்லிம் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களிடம் கேட்டு கூடாரத்தில் தங்க அனுமதி பெற்றார். ஆசாத் மைதானத்தில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் பானிபூரி விற்கும் வேலையை ஜெய்ஸ்வால் செய்து வந்தார். இதனால் அவருக்கு நல்ல பணம் கிடைத்தது. கிரிக்கெட் விளையாட பொருட்களை வாங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்கும் இந்த பணத்தை அவர் பயன்படுத்தினார். 11 வயதாக இருக்கும்போதே, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. இந்த கனவு அவருக்கு உந்துதலை கொடுத்தது. இதற்கிடையே, மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த், ஜெய்ஸ்வாலை உன்னிப்பாக கவனித்துவந்தார். ஜெய்ஸ்வாலுக்கு ஜ்வாலா சிங் நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரின் வழிகாட்டுதலின் கீழ், ஜெய்ஸ்வால் தனது இலக்கை நோக்கி ஒரு வலுவான நகர்வை மேற்கொண்டார். மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் ஜெய்ஸ்வாலுக்கு வெறும் 17 வயதுதான். பட மூலாதாரம்,SOCIAL MEDIA தோனிக்கு வணக்கம் வைத்த ஜெய்ஸ்வால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஜெய்ஸ்வால் மகேந்திர சிங் தோனியை நோக்கி கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அப்போது, சென்னை கேப்டன் தோனியும், ராஜய்ஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் டாஸ் போடுவதற்காக சென்றனர். டாஸ் போட்டு இருவரும் திரும்பியபோது, தோனியை பார்த்த ஜெய்ஸ்வால் அவரை கையெடுத்து கும்பிட்டார். தோனி அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்துவிட்டு சென்றார். ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த ரஹானே துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு தனித்துவமான நடவடிக்கையை கொண்டு வந்தார், நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதும், நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதை காட்டும் விதமாக இது இருந்தது. ரஹானே தனது அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் மேற்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது. எப்படியும் வென்று கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசையில் மேற்கு மண்டலம் அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டல அணியை வலிமைப் பெற செய்த ஜெய்ஸ்வாலுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்தை கற்றுக் கொடுத்த முயன்றார் கேப்டன் அஜிங்க்யா ரஹானே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது தென் மண்டலம் 154/6 என்று இருந்தது. 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு அவர்கள் முன் இருந்தது. மேற்கு மண்டலத்தின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை. பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு மண்டலத்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் பந்து வீசினர். இந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால், தென் மண்டல பேட்ஸ்மேன்களிடம் ஏதோ சொன்னது தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகார் அளித்தனர். மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் நடுவர்கள் விவாதித்தனர். அமைதியாக இருக்குமாறு ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே அறிவுறுத்தினார். அவரும் ஏற்றுக்கொண்டார். சிறிது நேரத்தில் பேட்ஸ்மேனுக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரஹானே தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற சொன்னார் ரஹானே. அவரும் கேப்டடன உத்தரவையடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். சில ஓவர்களுக்கு பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் களத்துக்குள் வந்தார். இந்த முறை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கிற்கு பதிலாக தூரத்தில் அவரை ஃபில்டிங் செய்ய வைத்தார் ரஹானே. வீரரை விட ஆட்டம் பெரியது என்பதையும், விளையாடும்போது ஒருவர் வரம்புகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அன்று ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே புரிய வைத்தார். https://www.bbc.com/tamil/articles/ce5n403j275o
  23. தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இலங்கை 19இன் கீழ் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது 03 FEB, 2024 | 10:03 AM (நெவில் அன்தனி) பொச்சேஸ்ட்ரூம், சென்வெஸ் பார்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவிடம் 119 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அரை இறுதியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றுக்கொண்டது. அப் போட்டியில் தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 23.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. ஷாருஜன் சண்முகநாதன் ஓரளவு தாக்குப் பிடித்து 4 பவுண்டறிகளுடன் அதிகப்பட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட மல்ஷா தருப்பதி (21), டினுர கலுபஹன (19), ஹிரான் கப்புருபண்டார (16) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் குவேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். மஃபாக்காவுக்கு பக்கபலமாக பந்துவீசிய ரைலி நோட்டன் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெடகளைக் கைபற்றினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைக் குவித்தது. தென் ஆபிரிக்கா 27 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால் அடுத்த 23 ஓவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 2 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 232 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. ஸ்டீவ் ஸ்டோக்குடன் 52 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், 2ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை டேவிட் டீஜருடன் பகிர்ந்தார். லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ் 71 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்டோக் 22 ஓட்டங்களையும் டேவிட் டீஜர் 10 ஓட்டங்களையும் பெற்றனர். 22ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென் ஆபிரிக்கா அதன் பின்னர் மேலும் 3 விக்கெட்களை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. ஆனால், இந்திய வம்சாவளி ரொமாஷன் பிள்ளையுடன் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரைலி நோட்டன் 49 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார். பிள்ளை 27 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ட்ரைஸ்டன் லூஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (198 - 8 விக்.) அதன் பின்னர் ரைலி நோட்டன், நிக்கோபானி மொக்கோயினா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிரந்து தமது அணியைப் பலப்படுத்தினர். நோட்டன் 41 ஓட்டங்களுடனும் மொக்கோயினா 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் சுப்புன் வடுகே, மல்ஷா தருப்பதி, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/175428
  24. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 10:43 AM முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று வெள்ளிக்கிழமை காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்தனர். இந்நிலையிலேயே அவர் இன்று சனிக்கிழமை (03) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175433
  25. சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருகிறது! 02 FEB, 2024 | 07:39 PM 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை (3) காலையுடன் நிறைவுசெய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி, திறைசேரியின் செயலாளர் ஆகியோருடன் எதிர்வரும் 06 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாதகமான தீர்மானத்தை பெற்றுத் தருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/175417

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.