Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2024 “அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.” கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர். “இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத். “படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி. நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை. நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. நீயா நானா உருவான கதை பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா. நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது. “தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான். மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி. மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை. அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார். பிற மொழிகளில் நீயா நானா? பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER “நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார். இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி. “ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார். மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி. படக்குறிப்பு, ஆண்டனி 'இது மக்களுக்கான மேடை' கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB படக்குறிப்பு, கோபிநாத் "அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத். “நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத். சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். “எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத். நீயா நானா எப்படி தயாராகிறது? படக்குறிப்பு, திலீபன் "இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து. “நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார். நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார். "ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள். ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார். நீயா நானாவும் சர்ச்சைகளும்... பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன. நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர். "தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு "யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம். தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன். கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு' பட மூலாதாரம்,VIJAYTV கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம். “நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி. “பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார். “நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும். தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார். 'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்' பட மூலாதாரம்,KAVIN MALAR/FB படக்குறிப்பு, கவின் மலர் “வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு. சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர். https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo
  2. Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 08:10 AM மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். 2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரைவில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை வகுக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு நடந்துகொண்டார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதேவேளை தன்முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில்எடுத்த நீதவான் இந்திய கடன் உதவியை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மருந்துகள் குறித்தும் உள்ளுர் மருந்து விற்பனையாளர் விநியோகித்த மருந்துகள் குறித்தும் (இந்த நிறுவனமே தரங்குறைந்த மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது தரம்குறைந்த இம்யுனோகுளோபலின் மருந்தினால் பொதுமக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175576
  3. தமிழக வெற்றிக் கழகம் என்று வரணுமாம். https://www.facebook.com/100001870809982/posts/24651579967821022/?mibextid=VI5BsZ
  4. Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 10:44 AM யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த தாலிக்கொடியை இரவல் கொடுத்த பெண், அதனை நகைக்கடை ஒன்றில் சோதித்த போது, அது போலியானது (கவரிங்) என தெரியவந்துள்ளது. அதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, அயலவரான யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாக பெற்ற தாலிக்கொடியை விற்று விட்டு, அதே போன்று போலி தாலிக்கொடியை (கவரிங்) செய்து, அதனை அப்பெண்ணிடம் கொடுத்தமை தெரிய வந்துள்ளது. குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/175585
  5. Published By: RAJEEBAN 04 FEB, 2024 | 06:13 PM இலங்கையுடன் கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். இலங்கையின் 76வது சுதந்திரதினத்தையோட்டி இலங்கை மக்களிற்கான வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு சுதந்திரமான வெளிப்படையான பாதுகாப்பான இந்தோ பசுபிக் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் எங்கள் உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடு அத்துடன் கல்விபரிமாற்றங்கள் அறிவியல் கூட்டாண்மைகளால் வளர்க்கப்படும் மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடங்களில் இந்தோபசுபிக்கின் சகாக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இலங்கையுடனான பொருளாதார கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம் காலநிலை நெருக்கடி மற்றும் எங்களின் கரிசனைக்குரிய ஏனைய விடயங்களிற்கு தீர்வை காணமுயல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175560
  6. இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்! காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன. இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/290523
  7. 04 FEB, 2024 | 05:36 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வான், கடல் தேச எல்லைகளை கண்காணிக்க கூடிய அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடான நபர்களின் வருகைகளை கண்காணிப்பது போன்று, வான் மற்றும் கடல் எல்லைகளில் மீதான மீறல்கள் மற்றும் ஊடுறுவல்களை இந்த நவீன கண்காணிப்பு கட்டமைப்பு ஊடாக உடனடி தகவல்களை பெற முடியும். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போதே குறித்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு இலவசமாக வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்க உள்ள உத்தேச பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்கள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று உலகளாவிய தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான தகவல்கள் இந்த கண்காணிப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றமையினால் அவர்கள் இலங்கை எல்லையை எவ்வழியில் கடந்தாலும் கண்காணிக்க முடியும். மேலும் ஏதேனும் குற்றம் புரிந்து நாட்டை விட்டு தப்பித்து செல்ல முற்படுபவர்களையும் இந்த கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக அடையாளம் காண முடியும். எவ்வறாயினும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள குறித்த அதி நவீன எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/175516
  8. நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/290516
  9. 04 FEB, 2024 | 05:45 PM எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் - 2024 தொடர்பாக, கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.இருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும் 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதிப் பிரதம செயலாளரினை கடிதம் மூலம் கேட்டிருந்தோம். குறித்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் , அரச சேவையில் 05 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம் ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது. எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் குறித்த போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும். அத்தோடு 10.02.2024 வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம். - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/175531
  10. யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 04 FEB, 2024 | 05:54 PM இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (03) இரவு 23 இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அம்மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 2 படகுகளை கைப்பற்றினர். கைதான இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 23 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175558
  11. பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்ற சென்றவேளை என் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது : பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர் - சிறீதரன் Published By: RAJEEBAN 04 FEB, 2024 | 05:49 PM பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய நாள் பொலிஸார் தாங்கள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் அராஜகத்தை கோரமுகத்தை சர்வதேச சமூகத்தின் கண்களிற்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைகழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸார் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர் பல மாணவர்கள் காவித்தூக்கிச் செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள் தூக்கி வானிலே வீசப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் ஊர்வலம் வருகின்றபோது தண்ணீர்தாரை வாகனத்துடன் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய பொலிஸார் மிகவும் மிலேச்சத்தனமாக அடாவடியாக நடந்துகொண்டார்கள். மிகவும் ஜனநாயக அடிப்படையில் தனக்கிருக்கின்ற மனித உரிமைகளின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்த பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் மீது மிகவும் மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் பொலிஸார் நடந்துகொண்டமை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை இலங்கையில் பொலிஸாரின் அடாவடித்தனத்தை அடையாளப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பலமாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள் இதுவெல்லாம் நடைபெற்ற பின்னர் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட விடயத்திலே அந்த மக்கள் 3-30 மணிவரை காத்திருந்தார்கள் அவர்களை விடுதலை செய்யும்வரை வெளிக்கிடமாட்டோம் என காத்திருந்தார்கள் நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனும் பல்கலைகழக மாணவர்களும் பொலிஸ் நிலையம் சென்று அவர்களை விடுவித்துக்கொண்ட வந்த பின்னர்தான் இந்த போராட்டம் முடிவிற்கு வந்திருக்கின்றது எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார். பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் அதற்குரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன நான் அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175555
  12. 04 FEB, 2024 | 06:15 PM எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று 2024, பெப்ரவரி 4ஆம் திகதி பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம். ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகின்றோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நமது தாயகத்தின் மட்டக்களப்பு, கிளிநொச்சியில் ஒன்று திரண்டு நிற்கின்றோம். தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பாண்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்கா அரசு தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கின்றது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போரட்டம் கருக்காண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது. தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளிற்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களிற்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தத்தினுள் முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும், தமிழ் மக்களின் சமகால அடிப்படைச் சிங்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம். 1. எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள ஏனைய சட்டங்களால் மறுக்கப்படுகின்றது. ஆகவே இச்சட்டங்கள் மீளப்பெறப்பட வேண்டும். 2. தொல்பொருட்த் திணைக்களம், வன அஜீவராசிகள் திணைக்களம். வனவள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். 3. தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும். 4. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். 5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 6. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 7. பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமமாகக் கொண்டு செயற்படுதலையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும். 8. மனித உரிமை மீறல்கள் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது செய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 9. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், தடைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நினைவு கூறும் உரிமையை உறுதி செய்யுமாறும் வேண்டுகின்றோம். 10. கால காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC) அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும். 11. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும். இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/175552
  13. எழுத்தாளர் வள்ளியம்மை சுப்ரமணியம் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றிய காணொளி.
  14. முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
  15. IND vs ENG : ரோகித் கேரியர் காலி.. முடிவுரை எழுதிய ஆண்டர்சன்.. கடுப்பான ராகுல் டிராவிட்! விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 143 ரன்கள் முன்னிலை பெற்றதோடு, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விரக்தியடைய வைப்பதே இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடங்கியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் அட்டாக்கை தொடங்கினார். முதல் ஓவரிலேயே ஜோ ரூட் மெய்டன் செய்த நிலையில், 2வது ஓவரை வீச ஆண்டர்சன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டிஃபென்ஸை கடந்து ஆஃப் ஸ்டம்பை தகர்த்தார் ஆண்டர்சன். இதனால் ரோகித் சர்மா 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 17 ரன்களில் மீண்டும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3வது நாளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததை இங்கிலாந்து வீரர்கள் ஆரவாரமாக கொண்டாடிய நிலையில், இந்திய ஓய்வறையில் இருந்த ராகுல் டிராவிட் அதிர்ச்சியில் எழுந்து நின்றார். இதன் மூலம் இந்திய அணியின் கைகளில் இருந்த ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை எடுத்த போதும், அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கவனமாக விளையாடவில்லை என்றால் மீண்டும் பேஸ் பால் அணுகுமுறை காரணமாக இன்னொரு ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிடும். பிட்சில் பெரியளவில் உதவி இல்லாத போதும், இங்கிலாந்து பவுலர்களை எதிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடுவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-rohit-sharma-got-out-for-13-runs-to-anderson-in-2nd-innings-of-the-second-test-against-049073.html
  16. 04 FEB, 2024 | 01:23 PM இலங்கையின் 76வது சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாண மக்களும் வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது. நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கரவண்டி பவனி முதலியனவும் இந்த பேரணியில் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175520
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? காலநிலை மாற்றம்: அதிகரிக்கும் அபாயம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசா ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் 2023ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவிக்கிறது. அதன் ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் (3394.9 MtCO2e) பிடித்திருப்பதாக உலக வள நிறுவனம் (World Resource Institute) பட்டியலிட்டுள்ளது. டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையம் (Center for science and Environment), இதனால் சுற்றுசூழல் மற்றும் வளிமண்டலம் சமநிலையற்று இருப்பதாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES “கோடைக் காலத்தில் கடும் வெப்பம், மழைக் காலத்தில் வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 86 சதவீதம், தீவிரமான (extreme) வானிலை மட்டுமே இருந்துள்ளது," என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையம் கூறுகிறது. "ஆறறிவு கொண்டு தொழில்நுட்பங்களுடன் பல விஷயங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக மனிதர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அனைத்து வகையிலும் இந்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் இயற்கைதான் ஊந்துதலாகவும் ஆதாரமாகவும் இருந்து கொண்டிருக்கிறது," என்று 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலில், மசானபு ஃபுகோகா எழுதியிருப்பார். அதுபோல, மனித மேம்பாட்டிற்கு இயற்கை முதுகெலும்பாக இருந்து வருகிறது. வளர்ச்சிக்கு உந்துதலான இயற்கை பட மூலாதாரம்,NITHYANANDH JAYARAM / TWITTER படக்குறிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் இந்தியா, இயற்கையின் பல வகையான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட ஒரு வளமான நாடு. வடக்கே இமயமலையின் உறைபணியும், தெற்குப் பகுதியில் கதகதப்பான வானிலையும், மறுபுறம் வடகிழக்கில் தொடர்ந்து மழையும், வடமேற்கில் வறண்ட தார் பாலைவனமும் என அனைத்து வகையான காலநிலையையும் உள்ளடக்கிய நாடு. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விவசாயம், வருவாய், தொழில் துறை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டாலும், அனைத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் சுற்றுசூழலுக்கு வீழ்ச்சியே என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. "அனைவருக்கும் தெரிந்தது போலவே, நவீன முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்கச் செய்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் புவி வெப்பமடைந்து உலகில் காலநிலை மாற்றம் அதிக அளவில் நிகழ்கிறது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகிறார். அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதரவாக ஆக்சிஜன் வாயு இருக்கிறது. ஆனால், பசுமைக்குடில் வாயுக்களான கரிம வாயு, மீதேன், நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை நச்சுத்தன்மை வாய்ந்தவை. கடந்த சில ஆண்டுகளாக, இந்த வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியா காலநிலை மாற்றத்தால் பெருமளவில் சுற்றுச்சூழல் ஆபத்தையும், வானிலை வேறுபாடுகளையும் சந்தித்து வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சூழலியல் பாதிப்பு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்தப் பிரச்னைகள் பாதிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் புற்றுநோயா? பட மூலாதாரம்,SURESH KUMAR படக்குறிப்பு, புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார் "காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளோடு புற்றுநோயும் வரக் காரணமாக இருக்கிறது," என்று புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறினார். புகையிலைப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணத்தால் புற்றுநோய் ஏற்பட்டாலும், காலநிலை மாற்றம் மிகவும் குறைவாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பேசப்படாத ஒரு காரணியாக இருந்து வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர். உலகளவில் ஆண்டுக்கு, 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும் மக்கள் இறப்பதற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் இருப்பதாகவும் மருத்துவர் சுரேஷ் தெரிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மோனார்ஷ் பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் காலநிலை மாற்றம் மறைமுகமாக புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட மோனார்ஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான யுமிங் கோ பிபிசி தமிழிடம் பேசினார். “இது ஒரு முடிவில்லா சுழற்சி என்றும், அதிக அளவில் புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், காற்றில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து சுற்றுப்புறத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்தத் தரமற்ற காற்றைத் தொடர்ந்து சுவாசித்தால் மூளை, நுரையீரல், உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்,” என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,YUMING GUO / LINKEDIN படக்குறிப்பு, பேராசிரியர் யுமிங் கோ காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் கோடை மற்றும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், வெள்ளம், புயல் போன்றவை அதிக அளவில் நிகழ்ந்ததால் மக்களின் வாழ்க்கை நடைமுறை, பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலப்படமான தரமற்ற நீர், உணவை உண்ண, மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் பருமன் ஏற்பட்டு வயிறு, குடல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பதாக பேராசிரியர் யுமிங் கோவின் ஆய்வறிக்கை கூறுகிறது. புவி வெப்பமடைதலால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் (UV rays) இருந்து உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பதாக நாசா ஏற்கெனவே அறிவித்திருந்தது. "அந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தோலில் படும்போது மெலனோமா (melanoma), தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்," என்று எச்சரிக்கிறார் யுமிங் கோ. தொழில் வளர்ச்சி பெருகிவிட்டது, ஆண், பெண் வேறுபாடின்றி அதிக நேரம் கடும் வெப்பத்தில் பணிபுரியும் சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு மார்பகத்தில், இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேராசிரியர் யும்ங் கோ குறிப்பிட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தும், மீண்டும் இதே மாசான சுற்றுச்சூழலில் இருக்கும்போது சிகிச்சைப் பலன் குறைந்து இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக யுமிங் கோவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்" "காலநிலை மாற்றம் நிகழ்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது, தாமதப்படுத்த மட்டுமே முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், கொடிய நோய்களால் வரும் விளைவுகளைத் தவிர்க்க முடியும்," என்று வலியுறுத்தினார் யுமிங் கோ. மேலும் இதுகுறித்து நித்தியானந்த் ஜெயராமன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேசியபோது, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மட்டுமே உண்மையான வளர்ச்சி என்றும், தனி மனித கொள்கைகளுடன் சேர்ந்து அரசாங்கம் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர். "பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடிந்தவரை புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடுகளின் பரப்பளவைப் பாதுகாப்பதோடு, மேலதிக மரங்களை நடவேண்டும். இதுகுறித்துப் பலவகை பிரசாரத்தின் மூலம் மக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்." இன்னொருபுறம், உடல் ஆரோக்கிய ரீதியாகவும் வாழ்க்கை நடைமுறையிலும் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்கிறார் புற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார். "மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். "தற்போதைய காலத்தில் நாம் மேற்கத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். அதைத் தவிர்த்து நமது வாழ்விடத்தின் காலநிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்தால், நோயற்ற வாழ்வை வாழலாம்," என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c72gey0j9p0o
  18. கரி நாள் போராட்டம் - கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது 04 FEB, 2024 | 01:08 PM இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் அதேவேளை நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் இன்று ஆரம்பமானது. https://www.virakesari.lk/article/175512
  19. 19 வயதுக்குக் கீழ் உலகக் கிண்ண அரை இறுதியில் பாகிஸ்தான் 04 FEB, 2024 | 10:29 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுக்கொண்டது. பெனோனி, விலோமூர் பார்க் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (03) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 1ஆம் குழுவுக்கான சுப்பர் 6 லீக் போட்டியில் பங்களாதேஷை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கூறமுடியாத அளவுக்கு இரண்டு அணிகளும் மாறி மாறி ஆட்டத்தின் பிடியை தத்தமது பக்கம் திருப்பிக்கொண்டிருந்தன. ரொஹானத் தௌல்லா போசன், ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களுக்கு தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானை 40.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். எனினும் உபைத் ஷா 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து பங்களாதேஷை 150 ஓட்டங்களுக்கு கட்டுப்பத்தி பாகிஸ்தான் வெற்றிபெறுவதை உறுதிசெய்தார். பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் அரபாத் மின்ஹாஸ் 34 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 26 ஓட்டங்களையும் 10ஆம் இலக்க வீரர் ரொஹானத் தௌல்லா போசன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் சௌதர் மொஹமத் ரிஸ்வான் 20 ஒட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் உபைத் ஷா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அலி ராஸா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். நியூஸிலாந்தை அசத்தியது அயர்லாந்து நியூஸிலாந்துக்கு எதிராக புளூம்பொன்டெய்னில் இன்று நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய அயர்லாந்து, 41 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிபெற்றது. அயர்லாந்து முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி 50 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைக் குவித்தது. கெவின் ரூஸ்டன் 82 ஓட்டங்களையும் கியான் ஹில்டன் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்து அணியை பலப்படுத்தினர். அயர்லாந்துக்கு 38 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தமை அதன் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. பந்துவீச்சில் இவெய்த் ஷ்ரூடர் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 35.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டத்தை தொடரமுடியாமல் போனது. வெற்றி அணியைத் தீர்மானிக்க டக்வேர்த் லூயிஸ் றைமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நியூஸிலாந்தின் வெற்றி இலக்கு 173 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக நியூஸிலாந்து 31 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. ஜேம்ஸ் நெல்சன் 34 ஒட்டங்களையும் லெச்சியன் ஸ்டெக்பூல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு இலகுவான வெற்றி பொச்சேஸ்ட்ரூமில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் ஸிம்பாப்வேயை 146 ஓட்டங்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது. இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைக் குவித்தது. சார்லி அலிசன் 76 ஓட்டங்களையும் தியோ வில்லி 61 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தஸீம் சௌத்ரி அலி 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வருட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவே அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். https://www.virakesari.lk/article/175500
  20. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 பிப்ரவரி 2024 இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று, இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படும் அசோக வனம், இன்று சீதா எலிய என அழைக்கப்படுகின்றது. அசோக வனம் என்று ராமாயணத்தில் அழைக்கப்பட்ட பகுதி, இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதி என்று கருதப்படுகிறது. மலையகத்தின் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பதுளை வீதியில் இந்த அசோக வனம் என அழைக்கப்பட்ட சீதா எலிய காணப்படுகின்றது. உலகிலேயே சீதை அம்மனுக்கு கோவில் அமைந்த பகுதியாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து பதுளை பிரதான வீதி ஊடாக செல்லும் போது, வீதியின் இடது புறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. மலையகத் தொடர்கள், கங்கை என இயற்கையுடன் இணைந்ததாகவே இந்த கோவில் அமைந்துள்ளது விசேஷ அம்சமாகும். ராவணன் சீதையை கடத்தி, சுமார் 11 மாதங்கள் இந்த அசோக வனத்திலேயே மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது. சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு வருகை தந்து, அசோக வனத்தில் சீதையை கண்டுபிடித்து, அவரை முதல் முதலாக சந்தித்ததாக கூறப்படும் பகுதியில் இந்த சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அனுமன் பாதம் என கூறப்படும் அடையாளமொன்று, சீதை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள கல்லொன்றில் காணப்படுகின்றது. அந்த இடத்தில் சீதையை, அனுமன் சந்திக்கும் வகையிலான உருவச் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், சீதை நீராடியதாக கூறப்படும் அழகிய கங்கையொன்று ஆலயத்தை அண்மித்து செல்கின்றது. ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள், இந்த புனித கங்கையில் நீராடுவது, கை கால்களை கழுவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மலைத் தொடரில் அனுமனின் முகத்தை போன்றதொரு தோற்றம் தென்படுகின்றது. அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு செல்லும் போது அதிலிருந்து வீழ்ந்த பகுதி என்று பக்தர்களால் நம்பப்படுகின்றது. அசோக வனம் என கூறப்படுகின்ற இந்த பகுதியில், இன்றும் அசோக மரங்களை காண முடிகின்றது என ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசோக மரங்கள் உள்ளன. குறிப்பாக ஆலயத்தை அண்மித்து காணப்படும் ஆற்றிற்கும், அனுமன் சீதையை சந்தித்ததாக கூறப்படும் இடத்திற்கும் அருகில் இந்த அசோக மரத்தை காண முடிகின்றது. மேலும், இந்த இடத்தில் அதிகளவிலாக குரங்குகள் நடமாடி வருகின்ற நிலையில், அது அனுமனின் அவதாரங்களாக இருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்திலுள்ள சிலைகள் இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ராமர், சீதை, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் இருக்கின்றன. அத்துடன், விநாயகர், அனுமன் உள்ளிட்ட பல சிலைகள் காணப்படுவது இதன் விசேஷ அம்சமாகும். ராமர், சீதை மற்றும் லக்ஷ்மனன் ஆகியோரின் சுயம்பு விக்கிரகங்கள் காணப்படுவதாக ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார். ''ராமாயணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு வசனம், கண்டேன் சீதையை. அதாவது ஆஞ்சநேயர் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்று இதனை சொல்வார்கள். சீதை அசோக வனத்தில் இருக்கும் போது சீதையை தேடி வருகின்றார் அனுமன். முதல் முதலாக அசோக வனத்தில் இங்கு தான் அவரை காண்கின்றார். அதனால் தான் கண்டேன் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்றும் பிரசித்தி பெற்று காணப்படுகின்றது" என அவர் கூறினார். மேலும், "அந்த இடத்தில் தான் அனுமனின் பாதம் இங்கு இருக்கின்றது. அனுமன் சீதையை கண்ட பின்னர் தனது விஸ்வரூபத்தை எடுத்து காட்டி, நமஸ்காரம் செய்த இடம் என்றும் இதனை சொல்வார்கள். அதனால், விஸ்வரூப பாதம் இங்கு இருக்கின்றது." என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார். புனித கங்கை ''இந்த இடத்தில் புனிதமான இடமாக இந்த கங்கையை சொல்வார்கள். அதாவது சீதை வாழ்ந்த காலம் கிருதாயுகம் என்றும் சொல்வார்கள். கிருதாயுகத்தில் சீதை இருந்தபடியால், இந்த கங்கையில் அவர் நீராடியிருக்கலாம் என்று சிறப்பித்து சொல்வார்கள். அதனால், இந்த நதி கூட சீதா தேவியின் நாமத்தில் இன்றும் அழைக்கப்படுகின்றது. சீதா பவித்ர கங்கா என்ற நாமத்தில் இந்த கங்கை அழைக்கப்படுகின்றது." என ஆலயத்தின் பூசகர் குறிப்பிடுகின்றார். அசோக மரங்கள் ''சீதை இங்கு இருந்ததற்கு சான்றாக அந்த அசோக மரங்கள் இன்றும் இங்கு இருந்துக்கொண்டே இருக்கின்றது. அதுவொரு உன்னதமான சிறப்பாகும்." எனவும் அவர் கூறுகின்றார். மூல மூர்த்திகள் ''அசோக வனத்தில் இந்த மூர்த்திகள் எல்லாம் சுயம்பு விக்கிரமாக கண்டு எடுக்கப்பட்டது. சுயம்பு என்றால் தன்னிலையாக உருவானவை. ராமர், சீதா, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் சுயம்பு விக்கிரகங்களாக எடுக்கப்பட்டன. அது இங்கு பிரசித்தியாக காணப்படுகின்றது. ஏனைய ஆலயங்களில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் எங்களுடைய ஆலயத்தில் இரண்டு மூலஸ்தானங்கள். ஒன்று பிரதிஷ்டா மூர்த்தியாகவும், மற்றையது சுயம்பு விக்கிரகமாகவும் காணப்படுகின்றது." என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார். இந்திய பக்தர்களின் வருகை அதிகரிப்பு சீதை அம்மன் கோவிலில் வழிபாடுகளை நடத்துவதற்காக உள்நாட்டு பக்தர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இந்திய பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு அதிகளவில் வருகைத் தருகின்றார்கள். குறிப்பாக இந்தியாவின் வடப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இவ்வாறு வருகைத் தந்த பக்தர்கள் பிபிசி தமிழுடன், கோவில் தொடர்பான தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ''நாங்கள் ராமர், சீதை, மற்றும் அனுமனைப் பற்றி நிறைய கேட்டிருக்கின்றோம். நாங்கள் ராமாயணம், அதிலுள்ள சுந்தர காண்டம் ஆகியவறைப் படித்திருக்கிறோம். எனக்கு சிறுவயதிலிருந்தே இலங்கைக்கு வந்து அசோகவனம் ஆகிய இடங்களைப் பார்வையிட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அந்த கனவு நிறைவேறியிருகிறது." "இப்போது அசோகவனத்தைப் பார்த்தேன். இங்கு மிக நல்ல 'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைத்தது. நான் இங்கு வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இங்கிருந்து செல்வதற்கு மனமே வரவில்லை. நாங்கள் அனுமனின் காலடிகளைக் கண்டு அதில் கை வைத்து வணங்கினேன். என் கண்களில் நீர் திரண்டது. நாங்கள் ராமர், சீதை, அனுமன் ஆகியோரிடம் வேண்டுவதை அவர்கள் பூர்த்தி செய்வர்." என இந்திய பக்தராக ரோணு மஹத்தா தெரிவித்தார். இந்த கோவிலுக்கு வருகைத் தந்த மற்றுமொரு பக்தரான விஜயவாடாவைச் சேர்ந்த மதன் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''நாங்கள் அசோகவனத்தை தரிசிப்பதற்காக வந்திருக்கிறோம். சீதை ஒரு வருட காலம் ராமனுக்காகக் காத்திருந்த இடம் இது. இந்த இடத்திற்கு வந்து தரிசித்ததை பாக்கியமாகக் கருதுகிறோம். சீதா தேவி எங்களை ஆசீர்வதித்ததாகக் கருதுகிறோம். அரக்கர்களுக்கு மத்தியில் காட்டில் தைரியமாக இருந்து பெண்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்." "எத்தனை இன்னல்கள் வந்தாலும் சீதா தேவியைப் போல தைரியமாக இருந்து நாம் வாழ்வில் சாதிக்க வேண்டும். அனுமன் அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கு வந்து சீதையின் நிலையைத் தெரிந்துகொண்டு ராமருக்குத் தெரியப்படுத்திய இந்த இடத்தை தரிசித்தது பாக்கியமாகக் கருதுகிறோம்." என அவர் கூறினார். மேலும், ஆந்திராவைச் சேர்ந்த கங்காதர் சீதை கோவில் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். ''சீதை அசோகவனத்தில் இருந்த இடத்தை இங்கு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். இங்குதான் அனுமன் சீதையைச் சந்தித்து, அவர் கொடுத்த செய்தியை ராமரிடம் கொண்டு சென்றார். இங்கிருக்கும் நதி சீதை குளித்த நதி. அதில் நீர் மிகவும் குளிர்ந்திருக்கிறது. இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது." என அவர் குறிப்பிட்டார். அயோத்திக்கு சீதை கோவிலில் இருந்து வந்த கல் அயோத்தியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு, சீதை அம்மன் கோவிலிருந்து கல்லொன்று அனுப்பி வைக்கப்பட்டது. சீதை கோவிலின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த கல்லை அனுப்பி வைத்திருந்தார். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி இந்த கல் இந்திய உயர்ஸ்தானிகரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கையளித்திருந்தார். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார். இந்திய அரசாங்கத்தின் உதவிகளுடன், சீதை அம்மன் ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். ''இந்த கோவிலுடைய புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த இடமானது இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக காணப்படுகின்றது. இந்த கோவிலினுடைய கும்பாபிஷேகம் எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. ராமர் நவமி அன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் அயோத்தியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கோவிலுக்கு இங்கிருந்து கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன." "இந்த கோவில் பிரசித்தமான கோவில் என்ற அடிப்படையில் இந்திய நாட்டு பிரஜைகளின் வருகை இன்று அதிகமாக காணப்படுகின்றது. அதேபோன்று, இந்திய பிரதமர் அவர்களை கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வருகைத் தருமாறு அழைத்திருக்கின்றோம்." என சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார். வரலாற்று பேராசிரியர்களின் பார்வை அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இடமாக நுவரெலியாவின் சீதா எலிய பகுதி கூறப்பட்டு வருகின்ற நிலையில், அது தொல்லியல் ரீதியில் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் துறை போராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஐதீக அடிப்படையிலேயே இந்த இடத்தில் சீதை அம்மன் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர, இராமாயணத்தில் கூறப்படுகின்ற விதத்தில் இலங்கையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பான தொல்லியல் ஆதாரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை என வரலாற்றுத் துறை போராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g05kk9l39o
  21. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கை தொடர்கின்றது – அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல் Published By: RAJEEBAN 04 FEB, 2024 | 08:56 AM யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சனிக்கிழமை அமெரிக்காவும் பிரி;ட்டனும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்திற்கு பதில்நடவடிக்கையாக செங்கடலில் அமெரிக்காவின் இலக்குகளை தாக்கிவரும் ஈரான் சார்பு குழுவை மேலும் பலவீனமாக்குவதற்காக இந்த தாக்குதலை அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்டுள்ளன. போர்க்கப்பல்களையும் விமானங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்படை கலங்கள் மீதான தங்களின் சட்டவிரோத தாக்குதல்களை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்த தாக்குதல் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். 13 பகுதிகளில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட எவ்ஏ 18 போர் விமானங்களும்,பிரிட்டனின் டைபூன் எவ்ஜிஆர்4 ர விமானங்களும் தாக்குதலை மேற்கொண்ட அதேவேளை அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக மேற்கொண்டுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175493
  22. இம்ரான்கானுக்கும் மனைவிக்கும் மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 03 FEB, 2024 | 09:07 PM பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக மேலும் ஒரு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைத்தண்டனை திருமண சட்டத்தை மீறியதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக அவர்களுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://www.virakesari.lk/article/175488
  23. Published By: RAJEEBAN 03 FEB, 2024 | 05:00 PM பிரான்ஸ் தலைநகர் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. கத்தி மற்றும் சுத்தியலுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலை மேற்கொண்ட நபரை தடுத்து நிறுத்தினார். அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல தோன்றவில்லை சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாங்க முடியாத சம்பவம் இதுவென தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை அமைச்சர் சந்தேகநபரை தடுத்துநிறுத்தியவர்களை பாராட்டியுள்ளார். பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளிற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் கொல்லப்பட்டார். https://www.virakesari.lk/article/175483
  24. கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் அல்லது விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பொருளாதார சிக்கல்கள் மேலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வாகனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத்தொழில் தொடர்பான வாகனங்கள், விவசாயம் தொடர்பான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. https://thinakkural.lk/article/290508

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.