Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. பயணக்கட்டுரைக்கு நன்றி அங்கிள்…அழகான ஒரு நெடுஞ்சாலை, நல்லதொரு அனுபவத்தை தந்திருக்கும்!!
  2. பரவாயில்லை அங்கிள்… எனக்கும் இடங்கள் அதிலும் காடு மலை கடல் என்பனவற்றை பார்க்க மிகவும் விருப்பம்.. அதிலும் ஒரு தரமாவது USல் உள்ள Grand Ganyan பார்க்க விருப்பம்..let’s see
  3. நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேராசைப்படாமல், அவரவர் serviceabilityற்கு ஏற்ப ஈடுபடுவதில் பிரச்சனை இல்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். மேலும் personal guarantee பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. Residential investment mortgageற்கு(வர்த்தக நோக்கமில்லாத) எப்படி வரும் என்பதில் சந்தேகம் உள்ளது, மறைமுகமாக என்றால் கூட(terms and conditions) உங்களது இருக்கும் வீட்டையும் சேர்த்து (collateral securities) இந்த investment property வாங்கினால்தானே இந்த பிரச்சனை!. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம் எனக்கு பங்குகள் பற்றிய அறிவு இல்லை ஆனால் எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறும் வீடு/காணி எப்பொழுதும் பெறுமதியானது என்பதுதான்..let’s see!
  4. நல்லது அண்ணா.. வைத்தியர்களின் வழிகாட்டலில் நீங்கள் பூரண குணமடைவீர்கள் என்பதால் மனதை தளர விடவேண்டாம்..
  5. மிக்க நன்றி அண்ணா!! உங்கள் அனைவரதும் ஊக்கமும் ஆதரவும் தான் என்னை இவை போன்ற காட்சிகளை படம் பிடிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறது. யாழ் இணையம் இல்லாவிட்டால் என்னால் இவற்றை செய்திருக்கமுடியாது.. யாழ் இணையத்திற்கும் என்னை ஊக்குவிக்கும் கள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிக்க நன்றி அங்கிள்! அதற்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது என நினைக்கிறேன்..
  6. நன்றி தமிழ் சிறி அண்ணா! நீங்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்? வணக்கம், நன்றி. இங்கே வெளியூருக்கு போக தடைகள் எடுத்த ஆரம்பத்தில் போனதால் 48hrsகுள் எடுத்த negative PCR, இலங்கைக்கான health declaration form, onlineல் complete செய்து QR code எடுத்துக்கொண்டு போனேன். பின்பு அங்கிருந்து வரும் பொழுது 48hrsற்குள் எடுத்த negative PCR( யாழ்பாண ஆஸ்பத்திரியில்) எடுத்துக்கொண்டு வந்தேன். Hotel Quarantine அப்பொழுது இருக்கவில்லை. நேரே யாழ்ப்பாணம் போக முடிந்தது.. கட்டுநாயக்க விமான நிலையம் நான் போகும் பொழுது சன நடமாட்டம் அதிகளவு இல்லை.. checkingம் இல்லை. இப்பொழுது விதிமுறைகள் மாறிவிட்டதாக கூறினார்கள். முழு விபரம் தெரியவில்லை. இம்முறை அப்பாவுடன் சேர்ந்து சில வேலைகள் முடிப்பதே நோக்கமாக இருந்தமையால் அதிகளவு நேரத்தை அவருடனும் அலுவலகங்களிலுமே செலவழிக்கமுடிந்தது.. townற்கு போக கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தமையால் புத்தக கடைப் பக்கம் இம்முறை போகமுடியவில்லை.. அதே போல யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கும் தயக்கம் காரணமாக போகவில்லை. எனது தங்கை கூறினாள், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஒரு நல்ல புத்தகக் கடை(வெண்பா நூல்மனைக் கூடம்) உள்ளது என்று..அடுத்த முறை போக இருக்கிறேன்!
  7. யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!! சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன். எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!! அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!! பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்.. பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்.. வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!! மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!! அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!! இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!! முற்றும்.. நன்றி - பிரபா
  8. அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்! அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவயது ஞாபகங்கள்!! திரும்பி வரும் வழியில் தனங்கிளப்பில்(?) உள்ள காற்றாலைகளை அருகில் சென்று பார்த்தபொழுது!! எனக்கு எப்பொழுதும் பிடித்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயல்வெளி!! சிறுவயதில்/இளவயதில் சைக்கிளில் இந்தவழியாக செல்வது வழமை.. மழையை ரசித்தபடி சில நாட்கள்.. தொடரும்..
  9. வணக்கம் இணையவன் அண்ணா!! இப்பொழுது பழையமாதிரி வந்துவிட்டது.. நன்றி..
  10. நிர்வாகத்தினருக்கு வணக்கம், இன்று காலை எனது பதிவை edit செய்ய முடிந்தது, இப்பொழுது “ share” option மட்டுமே உள்ளது.. 😵‍💫 முன்பு படங்களை விம்பகத்தின் மூலம் இணைத்தமையால் பிரச்சனைகள் இருக்கவில்லை.. ஒரு மாதத்திற்கு பிறகு வந்தமையால் இதன் அனுமதியையும் தானியங்கி தடைவிட்டதாக்கும்.. 😞😞 தனிமடலில் தொடர்பு கொள்ள முயலும் பொழுது “ you are only allowed to send 0 messages per day. Please try again later “ என வருகிறது🧐😔 எனக்கு பழையபடி edit மற்றும் விம்பக அனுமதியையும் தரமுடியுமா???🥺 நன்றி..
  11. உண்மை!!! அதனால்தான் சில இடங்களுக்கு எப்பொழுது போனாலும் போவதுண்டு, கட்டடங்கள் மாறி இருக்கலாம், காலங்களும் போகலாம் ஆனாலும் நடந்தவற்றை மறக்கமுடியாது!!!
  12. ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுதூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூணை.. புதிதாக கட்டப்படும் யாழ்ப்பாணத்திற்கான Town Hall. புதிதுபுதிதாக, வித்தியாசமான வடிவமைப்புக்களுடன் கட்டடங்கள் இருந்தாலும் பழையகட்டடங்களின், வீடுகளின் அழகில் மனதை பறிகொடுத்து சில நிமிடங்கள்! தொடரும்…
  13. இந்த ஊர்கள்( மாவிட்டபுரம், மயிலிட்டி, ஊறனி etc) இப்ப கொஞ்ச காலங்களிற்கு முன்புதான் இரானுவத்தால் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.. இன்னமும் பல பகுதிகள் விடுவிக்கப்படவில்லை அங்கிள். எங்கள் தோட்டத்தை செய்பவரின் காணி கூட பலாலி முகாம் உள்ள பகுதிகளில்தான் உள்ளது..வேதனையான விடயம்!! நான் இம்முறைதான் இந்தளவு உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.. சிவந்த மண்.. இந்த மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பிடித்த ஒன்று.. ஏனெனில் காலில் ஒட்டிய மண்ணின் நிறம் போக நீண்ட நாட்கள் எடுக்கும்.. சாதி தொடங்கி சமயம், சமூகம், மாதாந்த வருமானம், சொத்து எவ்வளவு?, துணையாக வரவேண்டியவர் இருக்கவேண்டிய பிறந்த திகதி🙄, அசைவம் உண்பவருடன் கூடி வாழ முடியுமா இல்லையா!!!🤦🏽‍♀️கிட்டதட்ட 50ற்கு😵‍💫😵‍💫😵‍💫 மேற்பட்ட கேள்விகள் அங்கிள்!!
  14. பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!! மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!! தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும் ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!! தொடரும்…
  15. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.