Everything posted by P.S.பிரபா
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மருதங்கேணியில் ஒரு தேவாலயம் கண்ணில்பட்டது.. கோட்டை தெரியவில்லை🙂 நீலநிறக் கடலுக்கு அருகில் நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆலயம்..
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தேராவில்லும் தேக்கு மரங்களும் சொல்லும் ஒரு கதை!!
- IMG_5276.jpeg
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி. இது வெற்றிலைக்கேணியில் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ளது. அந்த இடத்தில் நிற்கும் பொழுது எல்லாவற்றையும் நினைத்து பெருமூச்சு ஒன்று எழுவதை தடுக்க முடியவில்லை.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நானும் ஒரு தகவலை தருகிறேன். வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் 4 ஊர்களில் இதைப் போல காவல் அரண்களை கட்டியுள்ளார்கள். பூநகரி அதில் ஒன்று. மிகுதி 3 ஊர்களில் ஒன்றில் இந்தக் காவல் அரண் உள்ளது. எங்களது வரலாற்றில் முக்கியமான இடம்😁
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
காணாமல் போகவில்லை. இடையிடை வருகிறனான். ஆனால் எங்களது அலுவலகத்தில் எனது பகுதி offshore போகிறது அதனால் கொஞ்சம் வேலைப்பளு, அத்துடன் தந்தையின் உடல்நிலை மற்றும் எனது தனிப்பட்ட project ஒன்றும் நிறைவடையாமல் இழுத்தடித்துக் கொண்டு போனதால் ஒரு சலிப்பு 😒 இந்தக் கோபுரம் வடமராச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது🤔 அப்படியா?? ஆனால் நான் கூகிளில் எடுக்கவில்லை😀. புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.. கோவளம் கடற்கரையில் வெளிச்சக்கூடு இல்லை
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்.. இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
- IMG_5267.jpeg
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
“ நினைவிருக்கா.. “இந்தப் பாடலும் இனிமையான ஒரு பாடல்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் இந்த முறை இந்தப் பட்டத்திருவிழாவிற்கு முதன்முதலாகப் போயிருந்தேன். ஆனால் போனபின் இதுதான் கடைசி முறை என்பதையும் மனதில் நினைத்துவிட்டேன். வேறு சில விடயங்கள் சம்பந்தமாக எனக்குத் தெரிந்த பிரசித்த நொத்தரிசு ஒருவருடன் கதைத்த பொழுது இப்படிக் கூறினார். காணி மோசடிகள் அதிகம் நடைபெற்றதாலும் அதனை தடுக்கும் ஒரு வழியாக காணி வாங்கும் பொழுது/விற்கும் பொழுது இரு பகுதியினரும் நேரில் வரவேண்டும் என்பதுடன் கையொப்பம் மற்றும் கைரேகையும் இடவேண்டும் என்றார். அத்துடன் இருபகுதியனரது புகைப்படமும் பத்திரத்தில் ஒட்டப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் காசு கட்டி காணி உறுதியை எடுத்தாலும் மாற்றும் பொழுது பிடிபடலாம் என நினைக்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மிக்க நன்றி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது..
-
படம் கூறும் கதைகள்
தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் இந்த திரியினை எதிர்பார்த்தது போல தொடரமுடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் இயலுமானவரையில் தொடர்ந்து இணைக்க முயற்சிக்கின்றேன். திருகோணமலை எனக்கு மிகவும் பிடித்த இடம். எனது நெருங்கிய உறவினர் அங்கே இருப்பதால் யாழ்ப்பாணம் போகும் பொழுதெல்லாம் திருகோணமலைக்குப் போவது வழமை. அப்படிப் போகும் பொழுது இரு வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த படங்கள் இவை. இதனைப் பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது?? 2018 2023 திருகோணமலை கடற்கரையில் சூரியோதத்தைப் பார்க்க காத்திருந்த பொழுது .. அமைதியான காலைப்பொழுது..
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது..
-
படம் கூறும் கதைகள்
கெட்டிக்காரியோ இல்லையோ தெரியாது ஆனால் என்னோடு வந்தவர்களுக்கு ஏன்டா இவளோடு வந்தோம் என்றளவிற்கு காடுமேடு எல்லாம் சுத்தவைத்துவிட்டேன்😊. எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி அங்கிள்! அப்படியானால் இந்த இடத்திற்குப் போனால் இன்னமும் நிறையே கண்முன் வரும்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இதனை வாசிக்கும் பொழுது இந்தப்பாடலே நினைவிற்கு வந்தது.. மிக்க நன்றி.. மிக்க நன்றி அக்கா!
-
படம் கூறும் கதைகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா!
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
வரிகள் ஒவ்வொன்றும் பல கடந்த கால நினைவுகளை கூறுகின்றது.. இன்று பலவித கோணங்களில் வாழ்வு போனாலும் எங்களை ஏதோவொரு வழியில் இயங்கவைப்பது இந்தக் கடந்த கால நினைவுகளே.. கவிதைக்கு நன்றி!!
-
நடுவீதி...
அவுஸ்ரேலியவிற்கு வந்த ஆரம்பத்தில் இப்படியானவர்களைப் பார்த்தவுடன், “ அட இங்கேயுமா” என்று வியப்பாக இருந்தது.. முன்னேறிய நாடு, பின் தங்கிய நாடு என்ற வேறுபாடில்லாமல் இவர்களைக் காணலாம் என்றதை விளங்கிக்கொள்ளமுடிந்தது.. அப்பாவிகளும் உள்ளனர் அதே நேரம் ஆபத்தானவர்களும் இருக்கிறார்கள்.. பல்வேறு காரணங்களால் வீதிக்கு வந்தவர்களும் உள்ளனர்.. நன்றி விசுகு அண்ணா!!
-
படம் கூறும் கதைகள்
இரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan.. காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே.... கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்? நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..
-
படம் கூறும் கதைகள்
முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்.. கன்பரா - ஒரு கட்டிடத்தில் இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது..
-
படம் கூறும் கதைகள்
அப்படித்தான் நினைக்கிறேன். Catapult என்றது ஹெற்றபோல் ஆகிவிட்டது.. நன்றி Goshan!!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நகைச்சுவையாக போன ஒன்று கடைசியில் இந்த மாதிரி ஆழமான செய்தியுடன் முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. வலிகள் வரும் பொழுதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு முடிவுகளுமே கவலையைத் தந்தாலும், இந்தக் கவலையின் ஊடாக இவர்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.. எங்களையும் பரந்துபட்டளவில் சிந்திக்க உதவுகிறது. என்னைப் பொறுத்த வரை யாவும் கற்பனை என கூற முடியாது உள்ளது ஏனெனில் இப்படியானவர்களை எங்கோ ஓரிடத்தில் சந்தித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் என்றே நினைக்கிறேன். பாராட்டுகள் கோஷான்! ஆனாலும் முருகர்சாமியை வம்பிற்கு இழுக்காவிட்டால் கோஷானிற்கு அந்த நாள் நல்லதாக முடியாது என நினைக்கிறேன்!!!
- திரும்பும் வரலாறு!
-
படம் கூறும் கதைகள்
எனக்கு இந்த இடம் அதிகம் பழக்கமில்லை.. ஆனால் இந்த வழியால் போவதுண்டு.. அப்படித்தான் ஒரு நாள் போகும் பொழுது புதுசா சிவனின் சிலையைக் கண்டதும் ஒரு கிளிக்.. ஏனெனில் 2022வரை இந்த இடத்தில் சிலை இல்லை எனக்கு இதனை ஆலடிச் சந்தி எனக்கூறுவதும் தெரியாது ஹெட்டப்போல் (slingshot🤔) சந்தி எனத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன் .. தவறாகவும் இருக்கலாம்😊 நன்றி சிறி அண்ணா! நன்றி நந்தன் அண்ணா & வாலி எனக்கு எல்லாமே புதிதாகவே உள்ளது.. ஆனால் வீதிகளின் பெயர் தெரியாவிட்டாலும் படிக்கும் பொழுது இந்த இடங்களில் உலாவி இருக்கிறேன். இப்ப புது சிவன் வீதி என்று ஒன்று வந்துள்ளது.. பழைய பெயர் தெரியாது. பரமேஸ்வர சந்தியால் இடது பக்கம் திரும்பி சிவன் அம்மன் கோவில்களைத் தாண்டியவுடன் வரும் வீதிக்குத்தான் புதிய சிவன் வீதி எனப் பெயர் வைத்துள்ளார்கள். இந்த வீதி வந்து பாரதியார் சிலைக்கு முன்பாக முடியும். இந்தச் சிவன் வீதியில்தான் சிவரதனின் உருசிச்சட்டியும் உள்ளது. ஆனால் நான் நிற்கும் வரையிலும் இங்கே போய் உணவின் ருசியைப் பார்க்கமுடியவில்லை. உணவகம் பூட்டியிருந்தது. உருசிச்சட்டியின் படமும் உள்ளது, பின்பு ஒருநாள் இணைக்கிறேன்.
-
படம் கூறும் கதைகள்
உண்மைதான் நன்றி அண்ணா!! முல்லைத்தீவில் சர்ச்சைக்குரிய நீராவியடியில் உள்ள புத்தர் சிலையே அது.. முல்லைத்தீவில் சிவனின் மகனை தள்ளிவிட்டு புத்தர் வந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் புத்தர் வந்தாலும் என்று சிவன் முந்திவிட்டார்..