Everything posted by P.S.பிரபா
-
படம் கூறும் கதைகள்
தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் இந்த திரியினை எதிர்பார்த்தது போல தொடரமுடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் இயலுமானவரையில் தொடர்ந்து இணைக்க முயற்சிக்கின்றேன். திருகோணமலை எனக்கு மிகவும் பிடித்த இடம். எனது நெருங்கிய உறவினர் அங்கே இருப்பதால் யாழ்ப்பாணம் போகும் பொழுதெல்லாம் திருகோணமலைக்குப் போவது வழமை. அப்படிப் போகும் பொழுது இரு வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த படங்கள் இவை. இதனைப் பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது?? 2018 2023 திருகோணமலை கடற்கரையில் சூரியோதத்தைப் பார்க்க காத்திருந்த பொழுது .. அமைதியான காலைப்பொழுது..
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது..
-
படம் கூறும் கதைகள்
கெட்டிக்காரியோ இல்லையோ தெரியாது ஆனால் என்னோடு வந்தவர்களுக்கு ஏன்டா இவளோடு வந்தோம் என்றளவிற்கு காடுமேடு எல்லாம் சுத்தவைத்துவிட்டேன்😊. எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி அங்கிள்! அப்படியானால் இந்த இடத்திற்குப் போனால் இன்னமும் நிறையே கண்முன் வரும்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இதனை வாசிக்கும் பொழுது இந்தப்பாடலே நினைவிற்கு வந்தது.. மிக்க நன்றி.. மிக்க நன்றி அக்கா!
-
படம் கூறும் கதைகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா!
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
வரிகள் ஒவ்வொன்றும் பல கடந்த கால நினைவுகளை கூறுகின்றது.. இன்று பலவித கோணங்களில் வாழ்வு போனாலும் எங்களை ஏதோவொரு வழியில் இயங்கவைப்பது இந்தக் கடந்த கால நினைவுகளே.. கவிதைக்கு நன்றி!!
-
நடுவீதி...
அவுஸ்ரேலியவிற்கு வந்த ஆரம்பத்தில் இப்படியானவர்களைப் பார்த்தவுடன், “ அட இங்கேயுமா” என்று வியப்பாக இருந்தது.. முன்னேறிய நாடு, பின் தங்கிய நாடு என்ற வேறுபாடில்லாமல் இவர்களைக் காணலாம் என்றதை விளங்கிக்கொள்ளமுடிந்தது.. அப்பாவிகளும் உள்ளனர் அதே நேரம் ஆபத்தானவர்களும் இருக்கிறார்கள்.. பல்வேறு காரணங்களால் வீதிக்கு வந்தவர்களும் உள்ளனர்.. நன்றி விசுகு அண்ணா!!
-
படம் கூறும் கதைகள்
இரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan.. காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே.... கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்? நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..
-
படம் கூறும் கதைகள்
முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்.. கன்பரா - ஒரு கட்டிடத்தில் இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது..
-
படம் கூறும் கதைகள்
அப்படித்தான் நினைக்கிறேன். Catapult என்றது ஹெற்றபோல் ஆகிவிட்டது.. நன்றி Goshan!!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நகைச்சுவையாக போன ஒன்று கடைசியில் இந்த மாதிரி ஆழமான செய்தியுடன் முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. வலிகள் வரும் பொழுதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு முடிவுகளுமே கவலையைத் தந்தாலும், இந்தக் கவலையின் ஊடாக இவர்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.. எங்களையும் பரந்துபட்டளவில் சிந்திக்க உதவுகிறது. என்னைப் பொறுத்த வரை யாவும் கற்பனை என கூற முடியாது உள்ளது ஏனெனில் இப்படியானவர்களை எங்கோ ஓரிடத்தில் சந்தித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் என்றே நினைக்கிறேன். பாராட்டுகள் கோஷான்! ஆனாலும் முருகர்சாமியை வம்பிற்கு இழுக்காவிட்டால் கோஷானிற்கு அந்த நாள் நல்லதாக முடியாது என நினைக்கிறேன்!!!
- திரும்பும் வரலாறு!
-
படம் கூறும் கதைகள்
எனக்கு இந்த இடம் அதிகம் பழக்கமில்லை.. ஆனால் இந்த வழியால் போவதுண்டு.. அப்படித்தான் ஒரு நாள் போகும் பொழுது புதுசா சிவனின் சிலையைக் கண்டதும் ஒரு கிளிக்.. ஏனெனில் 2022வரை இந்த இடத்தில் சிலை இல்லை எனக்கு இதனை ஆலடிச் சந்தி எனக்கூறுவதும் தெரியாது ஹெட்டப்போல் (slingshot🤔) சந்தி எனத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன் .. தவறாகவும் இருக்கலாம்😊 நன்றி சிறி அண்ணா! நன்றி நந்தன் அண்ணா & வாலி எனக்கு எல்லாமே புதிதாகவே உள்ளது.. ஆனால் வீதிகளின் பெயர் தெரியாவிட்டாலும் படிக்கும் பொழுது இந்த இடங்களில் உலாவி இருக்கிறேன். இப்ப புது சிவன் வீதி என்று ஒன்று வந்துள்ளது.. பழைய பெயர் தெரியாது. பரமேஸ்வர சந்தியால் இடது பக்கம் திரும்பி சிவன் அம்மன் கோவில்களைத் தாண்டியவுடன் வரும் வீதிக்குத்தான் புதிய சிவன் வீதி எனப் பெயர் வைத்துள்ளார்கள். இந்த வீதி வந்து பாரதியார் சிலைக்கு முன்பாக முடியும். இந்தச் சிவன் வீதியில்தான் சிவரதனின் உருசிச்சட்டியும் உள்ளது. ஆனால் நான் நிற்கும் வரையிலும் இங்கே போய் உணவின் ருசியைப் பார்க்கமுடியவில்லை. உணவகம் பூட்டியிருந்தது. உருசிச்சட்டியின் படமும் உள்ளது, பின்பு ஒருநாள் இணைக்கிறேன்.
-
படம் கூறும் கதைகள்
உண்மைதான் நன்றி அண்ணா!! முல்லைத்தீவில் சர்ச்சைக்குரிய நீராவியடியில் உள்ள புத்தர் சிலையே அது.. முல்லைத்தீவில் சிவனின் மகனை தள்ளிவிட்டு புத்தர் வந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் புத்தர் வந்தாலும் என்று சிவன் முந்திவிட்டார்..
-
படம் கூறும் கதைகள்
யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்) முல்லைத்தீவில் ஒரு கிராமம் இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. @goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்.. இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
மீண்டும் பழையபடி வேலைக்குப் செல்லத் தொடங்கியது மகிழ்ச்சியான விடயம் சிறி அண்ணா!! satan கூறிய ஒரு விடயம் // இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.// இது சரிதானே.. அவரைப் பற்றித் தெரியாமல் கூறுவது சரியில்லை.. ஆனாலும் இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌
-
படம் கூறும் கதைகள்
இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. இந்த தேவாலயத்தினைக் கடந்துதான் மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று..
-
79170989-144E-4607-855F-38869E4EA494.jpeg
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
படம் கூறும் கதைகள்
உண்மைதான் பாசையூரில் இல்லை.. இந்த தேவாலயம் இருக்கும் இடத்தை கடந்தே நீங்கள் கூறிய இடத்திற்குப் போக வேண்டும்😊 அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!! இந்த சுருவம் அண்மையில் கட்டியது இல்லை.. முன்பே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்..
-
படம் கூறும் கதைகள்
இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம் இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
-
படம் கூறும் கதைகள்
உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. நன்றி. நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்..
-
தையல்கடை.
தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!
-
படம் கூறும் கதைகள்
நன்றி அண்ணா!! அப்படித்தான் அந்த சுவரொட்டியில் கூறியுள்ளது.. எனக்குத் தெரிந்த ஒருவர் கூறினார் இப்ப மாவீரர் தினத்திற்கு தென்னங்கன்று கொடுத்தவுடன் கடமை முடிந்துவிட்டது என நினைக்குமளவிற்கு மக்களின் மனநிலை மாறுகிறது என. நான் இன்னமும் ஒன்றிரண்டு படங்களை இணைக்க நினைத்திருப்பதால்தான் படங்கள் கூறும் கதைகள் என தலைப்பிட்டேன். உண்மைதான்.. பார்த்தவுடன் இப்படி செய்துவிட்டார்களே என கோபமும் இயலாமையும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. நன்றி .. கடைசியில அவருக்கு ஒன்றுமே மிச்சமாக இல்லை. ஒரு இடிந்த சுவரைத் தவிர!!! நன்றி அண்ணா!!
-
படம் கூறும் கதைகள்
எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..
-
EBC0793E-DA90-45F8-B190-790A964FB515.jpeg
From the album: நினைவுகளின் தொகுப்பு