Everything posted by P.S.பிரபா
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது எனது தனிப்பட்ட கருத்து. அவுஸ்ரேலியாவில் 2011ற்கு பின் வட்டி வீதம் ஏறவில்லை என்பதையும் 2010 ஆண்டின் இறுதி காலப்பதகுதியில் வீடு ஒன்றை வாங்கிய பொழுது இருந்த மதிப்பை விட இன்று வீட்டின் பெறுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதையும் காணலாம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை வீட்டின் பெறுமதி சடுதியாக குறைய வாய்ப்பில்லை என்பதால் வீட்டின் மீது முதலிடுவதுதான் எப்பொழுதும் முதலாவது தெரிவாக இருக்கும். அதுவும் owner occupied ஆக வேண்டாமல் investmentஆக வேண்டுவது சில சமயங்களில் நன்மையாக இருக்கும்(இது முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், life circumstancesஏற்ப) ஆனால் உங்களது affordabilityற்கு ஏற்ப வேண்டுவது சிறந்ததாக இருக்கும்.. அதே நேரம் இரண்டு வாரங்களிற்கு முதல் WBC Chief Economist Bill Evansன் பேட்டி ஒன்றை வாசித்த பொழுது அதில் அவர் கூறியிருந்தார் “ 2023 ஆண்டின் முதலாவது காலாண்டில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார்.. ஆனால் அதுவும் அதிகளவில் அதிகரிக்காது” என்கிறார்.. https://www.google.com.au/amp/s/amp.theaustralian.com.au/business/bill-evans-westpac-chief-economist-still-getting-the-big-calls-right-after-30-years/news-story/c0cc4db6a1b3e0d8300710a38cf07d9b
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நல்லதொரு இணைப்பு.. “Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் 👌 ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. வீட்டுகடனிலிருக்கும் மிகையான equityயை வைத்து பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன் “Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt” https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும் இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. உண்மை..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இறைச்சியை மட்டும் தனியாக அவித்தாலும் அதன் மணம் போகாது இல்லையா?.. ஒரு கறுவாப்பட்டையை போட்டு செய்து பார்ப்போம்🤔 ஆனால் நல்ல சலாட்டாகவே உள்ளது.. தேன் விடுவதைப்பற்றியும் யோசிக்கவேண்டும் நீங்கள் இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி
-
Imagine Dragons - Thunder
The Weeknd and John Legend!!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
செய்முறையை பார்க்கும் பொழுது, இதுவும் நல்லதொரு combination என்றுதான் தோன்றுகிறது.. கொஞ்சம் chilli flakesம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பெரும்பாலும் எல்லாமே நல்லவைகள்தான் சுவி அண்ணா!!! நான் இலகுவான சமையல்முறைகளையே அதிகம் விரும்புவதால், அப்படி கண்களில் தென்படுவதை செய்து பார்க்கிறேன்.. நன்றி..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் இங்கே இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. Dil, cucumber மற்றும் தயிர் சேர்த்த dipம் நல்ல ருசி.. அதே போல chicken marinateம் நன்றாக இருந்தது.. இந்த செய்முறையை பார்த்தவுடன் நினைத்தேன் நன்றாகவே இருக்கும் என்று.. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.. நான் flat breadற்கு பதிலாக Pita pocket பயன்படுத்தினேன்.. நன்றாகவே வந்தது..
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
நான் கூறியது, சாமை, கொள்ளு மற்றும் வரகரிசி போன்றவற்றை.. மற்றபடி நீங்கள் கூறுவதைப்போலத்தான்.. நவராத்திரி நேரங்களில் அவல் உடன் கெளபீ அல்லது கடலை இருக்கும்
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
நான் கூட இவற்றை சிறு வயதில் படித்தது மட்டுமே அதுவும் கவனத்தில் இருந்து மறைந்துவிட்டது.. அதே போல சிறுவயதில் குரக்கன், ஒடியல் உழுத்தம்மா புட்டு என்பவற்றை விரும்பி சாப்பிட்டதில்லை, ஆனால் சாப்பிட்டே ஆகவேண்டும்.. பின்பு இவற்றின் பயன்பற்றி விளங்கி அவற்றை தேட தொடங்கியதாலேயே இந்த மாதிரி செய்ய முடிகிறது, தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.. அதே போல இதைப்பற்றி மேலும் பல விஷயங்கள் தெரிந்தவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொண்டால் அதிலிருந்து மற்றவர்களும் பயன் அடைவார்கள்
- 446F30E0-C06A-4055-89F0-142A7F7F8111.jpeg
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
கொள்ளு - Horse grams இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம். அதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவற்றின் உற்பத்தியும் இலங்கையில் குறைவடைகிறதோ என அங்கே போகும் சமயங்களில் நினைப்பதுண்டு..நான் கூட இவற்றில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியது fitness வகுப்பில் இணைந்த பொழுதுதான்.. இந்த தானியங்களின் பயன்களை அறிய தொடங்கினால் பின் இவற்றினை இலகுவில் விடமாட்டோம் என்பதால் இங்கே அதிகம் வரவேற்க்கப்படாத ஆனால் சத்து நிறைந்த கொள்ளு எனும் தானியவகையைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்… இவை இலங்கை இந்திய போன்ற வெப்பம் கூடிய நாடுகளில் பயிரிடக்கூடியவை என்பதால் இதனால் இரு வழியில் (உற்பத்தி மற்றும் சத்து நிறைந்த உணவு) பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்… இந்த சிறிய இயற்கை விதை சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. கொள்ளு, கார்போஹைட்ரேட் மற்றும் புரத உள்ளடக்கத்தில் அதிக அளவில் இருந்தாலும் கூட, இரும்பு, மாலிப்டினம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களிலும் நிறைந்துள்ளது. இவை உகந்த ஆற்றல், தசை வலிமை, ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சிவப்பணு தொகுப்பு மற்றும் வலுவூட்டப்பட்ட எலும்புகளை உறுதி செய்கின்றன. மேலும், இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு(Metabolism) உத்தரவாதம் அளிக்கும் பிவைட்டமின்களின் போதுமான அளவு வழங்குகிறது. 100 gm of horse gram contain: Protein 22 gm Mineral 3 gm Fiber 5 gm Carbohydrates 57 gm Iron 7 mg Calcium 287 mg Phosphorus 311 mg மேலும் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலின் படி, free radicals ஏற்படும் oxidative சேதமானது பல இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், மனித உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் antioxidants மூலம் இந்த சேதத்தை குறைக்கும் திறன் உள்ளது, குறிப்பாக raw horse gramsல் polyphenols, flavonoids மற்றும் புரதங்கள் போன்ற முக்கிய antioxidants நிறைந்துள்ளது. இது கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். அதேபோல, மற்ற பருப்பு வகைகளைப் போலவே, இதில் குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்கள் ஓக்ஸியனை உடலிற்கு கொண்டு செல்ல இரும்புசத்து உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையில், பொஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம் ஆனாலும் இவ்வளவு பயன்களை தரும் இந்த கொள்ளு பிரச்சனைகளையும் தரக்கூடிய ஒரு தானியம் என்பதால் ஒவ்வொரு நாளும் உணவில் சேர்க்காமல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இதனை பயன்படுத்தினால் அதிக பயன்களை பெறலாம்.. சரி அப்படி என்னதான் இந்த கொள்ளு பிரச்சனையை தரக்கூடும் என பார்க்கலாம்.. -இந்த கொள்ளு போன்ற தானியங்களில் ஃபைடிக் அமிலம் உள்ளது, இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு அமிலம் -அதாவது இது உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆனால் இந்த கொள்ளு விதைகளை ஊறவைத்து, முளை கட்டவைத்து அல்லது புளிக்க/நெதிக்க வைத்து சமைத்தால், பைடிக் அமில உள்ளடக்கத்தை 80-90% குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. - கீல்வாதத்தால் பாதிக்கப்படும்போது கொள்ளு மற்றும் பிற பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் யூரிக் அமில அளவு மூட்டுகளைச் சுற்றி ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் கொள்ளு மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தன்மையை அதிகரிக்க பங்களிக்கும். - அதிக அளவில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மிதமாக சாப்பிடவேண்டும். கர்ப்பினி பெண்களும் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.. - நீங்கள் ஆயுர்வேத மருந்துக்களை உட்கொண்டால் கொள்ளு போன்ற தானிய வகை அடிப்படையிலான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். - கொள்ளு ரஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தின் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் சாப்பிடும்போது. - அரிதான சந்தர்ப்பங்களில், ஒவ்வாமை எதிர்வினைகள் பதிவாகியுள்ளன உடல் நிறையை பேணுவதற்கும் இந்த கொள்ளு உதவுகிறது என்பதால் நான் தோசை சுடும் பொழுது, கோதுமை மாவோ, வெள்ளை பச்சைஅரிசியோ, ரவையோ சேர்க்காமல் உழுந்துடன், வரகு/சாமை/ராகி அல்லது இந்த கொள்ளு போட்டே செய்வது வழமையாகிவிட்டது…அதே போல முளைகட்டிய தானியங்களை சலாட்டில் சேர்ப்பதும் வழக்கமாகிவிட்டது… https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#potential-side-effects https://m.netmeds.com/health-library/post/horse-gram-super-food-way https://isha.sadhguru.org/us/en/blog/article/horse-gram-benefits-nutrition-recipes
- கொள்ளு -Horse gram
-
Imagine Dragons - Thunder
Save Your Tears!!! Song by Ariana Grande and The Weeknd I saw you dancing in a crowded room (uh) You look so happy when I'm not with you But then you saw me, caught you by surprise A single teardrop falling from your eye I don't know why I run away (oh, oh, oh, oh, oh) I'll make you cry when I run away (oh, oh, oh, oh, oh) Take me back 'cause I wanna stay Save your tears for another Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (mm) Met you once under a Pisces moon I kept my distance 'cause I know that you Don't like when I'm with nobody else I couldn't help it, I put you through hell I don't know why I run away (run away, oh, oh, oh, oh) Oh, boy, I'll make you cry when I run away (away, oh, oh, oh, oh) Boy, take me back 'cause I wanna stay Save your tears for another I realize that it's much too late And you deserve someone better Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) I don't know why I run away (bum, bum, bum, bum, bum) I'll make you cry when I run away (save) Save your tears for another day (ooh) Ooh, girl (oh, oh, oh, oh, oh, okay) I said save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day Source: Musixmatch Songwriters: Max Martin / Oscar Thomas Holter / Ahmad Balshe / Abel Tesfaye / Jason Matthew Quenneville / Ariana Grande Save Your Tears lyrics © Universal Music Corp., Warp Music Limited, Sal And Co Lp, Songs Of Wolf Cousins
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
மிக்க நன்றி அண்ணா!! நான் Acaiயை போட்டதால் எங்கள் ஊர் நாவற்பழம் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.🙂 நீங்கள் கூறியது போல Acai அதிகவிலைதான்.. once in a blue moon விலையை குறைக்கும் பொழுது வாங்க நினைப்பதுண்டு.. அதே போல இவற்றின் பயன்களில் மென்மையான சருமம், உடல்நிறை குறைக்க உதவும் போன்ற சிலவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் பொதுவாக மற்றைய பழங்களை விட இனிப்பு சுவை மிக மிக குறைவு.. இவை பனை குடும்பத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பெரும்பாலும் அமேசன் காடுகளை அண்டிய பிரதேசங்களில்தான் வளர்க்கப்படுகின்றன.. சதுப்பு நிலங்கள, floodplains ..இப்படியான இடங்கள். அத்துடன் இவை மரத்திலிருந்து ஆய்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கு இலகுவில் பழுதாகிவிடுவதால் பழமாக ஏற்றுமதி செய்ய இயலாது என அறியமுடிந்தது.. அவுஸ்ரேலியாவில் இன்னமும் இவை வளர்க்கப்படவில்லை.. ஆனால் இவற்றின் விதைகள் online மூலம் வாங்கலாம், ஆனால் இணையவன் அண்ணா கூறியது போல அதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை🙂 Blackberry, Raspberryயை மறந்துவிட்டீர்களே💁🏻♀️
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
நான் சமீபத்தில் அறிந்த Acai Berry பற்றி சில தகவல்கள்.. Acai berry- Acai berryயிலும் அதிக Antioxidants உள்ளதாக அறியப்பட்டதால் Super Food வகையில் ஒன்றாக சமீபகாலமாக இதன் பயன் பற்றி அதிகம் பேசப்படுகிறது.. Acai berryயின் பிறப்பிடம் அமேசன் காடுகளில் உள்ள Acai பனை மரங்கள்…Acai பனை மற்றும் berries Euterpe genus எனும் இனத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அமேசன் சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் அங்குள்ள பழங்குடி பழங்குடியினரின் முக்கிய உணவாகவும் உள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க இந்த பெர்ரிகள், அடர்ந்த சிவப்பு மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தை உடையவை. இனிப்பு சுவை மிகவும் குறைந்த இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாது வைட்டமின்கள்:- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி மற்றும் தாதுசத்துக்கள்:- கல்சியம், சோடியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது Acai berryயிலும் உள்ள மேற்கூறிய ஊடச்சத்துகளால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்திற்கு, இலகுவான சமீபாட்டு நடைமுறைக்கு, சரும ஆரோக்கியத்திற்கு என இதன் பயன்களை கூறிக்கொண்டு போகலாம்.. அதே போல, இதனை அதிகளவு உட்கொள்வதும் கூடாது. அத்துடன் வேறு ஏதாவது berry பழங்களிற்கு அலர்ஜி உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.. அத்துடன் இங்கே அவுஸ்திரேலியா supermarkets பழங்களாக கண்டதில்லை, powder அல்லது pulp ஆகவே வாங்கலாம். இன்று எனது காலை உணவாக இந்த Acai berry frozen pulp, Strawberry, Blueberry மற்றும் பால் சேர்த்து செய்த milkshake 👇🏼 https://en.m.wikipedia.org/wiki/Açaí_palm
- 0F9C8330-7EB5-4206-87D6-B47AB38B540E.jpeg
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா😎
-
களைத்த மனசு களிப்புற ......!
50 வருட கால வரட்சியை போக்கி NBA வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய Milwaukee Bucks.. போட்டியின் சில highlights…
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
தாயம் விளையாடுவது..இதுவும் ஒரு பிடித்த விளையாட்டு.. அதே போல் card game 5-3-2..
-
மலரும் நினைவுகள் ..
மறக்கமுடியாத ஒன்று.. நர்சரிக்கு போகும் பொழுது ஒரு நாள் முன் சில்லிற்கு எனது காலைவிட்டு நானும் விழுந்து அப்பாவும் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது.. இந்த விளையாட்டில் நாங்கள் தகரப்பேணிகளை பாவித்து விளையாடினோம்.. பந்து படக்கூடாது என்பதற்காகவே முட்கள் கற்கள், சிறிய மதில்கள் ஒன்றுமே கவனிக்காமல் ஓடி காயங்கள் ஏற்படுத்தி வீட்டில் அடியும் வாங்கி.. எல்லா நினைவுகளும் பொக்கிஷம்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எழுதியவர் யார் என்று தெரியவில்லை, ஆனாலும் அருமை.. //ஊரே ஒன்று கூடி..,உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக்குத் தெரியாதா என்ன?யாருடைய பார்வைக்கப்புறம்.பறக்கும் இந்த உயிரென்று?//. இதைவிட எப்படி விபரிப்பது தந்தை - மகள் பாசத்தை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்
- Narooma
- Narooma
-
நினைவுகளின் தொகுப்பு - Narooma 27/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Australia Rock 27/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு