Everything posted by P.S.பிரபா
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!
இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை. கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும், இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில் இந்த செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்.
-
பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள், பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் இந்த மாதிரி குற்றச் செயல்கள் குறையவேண்டும் என்றால் தண்டனை பற்றிய பயம் ஏற்படவேண்டும்.
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
ஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன.
-
பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும்.
-
தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.
முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு, தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம். ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.
-
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
இவரது கருத்துகள் பல உண்மையானவை, ஆனால் கேட்பவர்கள்தான் இல்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது.
-
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
இந்த தமிழரசுக் கட்சி எத்தனை பாரம்பரியமிக்க கட்சி என்றாலும் கூட எனக்கு இந்தக் கட்சியைப் பிடிப்பதில்லை. பொதுவாக ஒரு புள்ளிவிபரமோ அல்லது ஒரு புதிய செய்திட்டத்தையோ அல்லது அரசியல் சம்பந்தமான முடிவுகளோ எதுவானாலும் ஒன்றில் அதனை ஆதரிக்கவேண்டும் இல்லை நிராகரிக்கவேண்டும், ஆனால் நடுநிலையாக இருக்ககூடாது, ஏனெனில் இந்த நடுநிலைவாதிகள் அனேகமாக அதிகாரம் உள்ளவர் பக்கமே சாய்வார்கள் என நம்புகிறேன். அவர்களை நம்புவதும் எவ்வளவு தூரம் சரியென தெரியவில்லை. அப்படித்தான் இந்த தமிழரசுக் கட்சியை நான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அவர்கள் எப்படியிருந்தாலும் அது இப்பொழுது உதவவில்லை அதுபோல இன்றுவரை இவர்கள் சந்தர்ப்பங்களை நழுவவிட்டவர்களாகவே நான் பார்க்கிறேன். இன்று மாவையின் சுயநலம் பற்றி மட்டுமே கதைக்கிறார்கள் ஆனால் இந்தக் கட்சியில் சுயநலமற்ற ஒருவர் என யாராவது இருக்கிறாரா?
-
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - நொதேர்ண் யுனியின் விளக்கம்
இவர் இந்திய கலைஞர்களை/விருப்பமில்லாதவர்களை மிகவும் கஷ்டப்பட்டு கூட்டி வந்தேன் etc etc என்றுவிட்டு இன்று அதற்கு வேறு விளக்கம் கொடுக்கிறார். முதலில் இவர் பொதுநிகழ்ச்சிகளில், மேடைகளில், மக்களுடன் எப்படி கதைக்கவேண்டும் என்பதை படிக்கவேண்டும்.. இல்லாவிட்டால் மேலும் மேலும் சிக்கலில்தான் மாட்டுவார். மேலும் எனது சகோதரியுடன் நான் நேற்று கதைத்த பொழுது அவர் கூறியது யாழ்ப்பாணத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன.. ஏதாவதில் இப்படியொரு பிரச்சனை வந்ததா? இல்லை.. அப்படியிருக்க இவர்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தெரியவில்லை. அதனால்தான் இந்தளவு பிரச்சனைகளும், இவர்கள் ஒன்றில் முற்றிலும் இலவசமாக அறிவித்திருக்கவேண்டும் இல்லை நிகழ்ச்சியை முழுவதும் கட்டணம் செலுத்தி பார்ப்பது போல செய்திருக்கவேண்டும். தரம் பிரித்து கட்டணம் பிரித்து திறந்த வெளியில் வைப்பதாக இருந்தால் அதற்கேற்ப மேடை தொடங்கி சகலதும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படி ஒன்றுமே செய்யாமல், சரியாக திட்டமிடாமல் திறந்த வெளியில் வைத்து நிகழ்ச்சியை செதப்பி, பிழையை யாழ்ப்பாண சமூகத்தின் மேல் போடப்பட்டுள்ளது. இப்படியானவர்களினால்தான் பிரச்சனையே அதிகம் என்றார். மேலும் யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைஞர்களின் நிலை தெரியாமலா இன்றுவரை இருக்கிறார் எனவும் கேட்டார். அவர் கூறுவதும் சரியென்றே எனக்குத் தோன்றியது. இப்பொழுது சில காலமாக இந்த நடிகநடிகைகளைக் கொண்டாடுவது ஈழத்தமிழர் மத்தியில்( ஊரிலும் வெளிநாடுகளிலும்) அதிகரித்து வருகிறது. பொழுதுபோக்குகள் தேவைதான் ஆனால் இந்த மாதிரி இந்திய நடிகநடிகைகளைக் கொண்டாடுவது, பின் அதனை social mediaகளில் பகிர்வது எல்லாம் ஒரு சாதாரன நடவடிக்கையாக மாறிவருகிறது. இது எத்தனை தூரம் எமது சமூகத்திற்கு நல்லது? இது மாதிரியான நிகழ்வுகள் மாதத்திற்கு ஒன்று அவசியமா? ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக இந்தமாதிரி நடிகநடிகைகளின் பின் அலைந்து திரிவது சரியா? இந்த புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர்கள்/மாணவ சங்கங்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்..
-
நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி
நான் இந்த நிகழ்ச்சியின் சில குறுகிய காணெளிகளை எனது நட்புவட்டத்தில் பகிரப்படும் பொழுது பார்த்திருக்கிறேனே தவிர முழுமையாக பார்த்தது இல்லை. ஆனாலும் பேசப்படும் தலைப்புகள் சமூகத்தில் பேச தயங்கும் தலைப்புகளும், விழிப்புணர்வுகளுமாகவே உள்ளதை அவதானித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் வந்த சில தலைப்புகளில் பேசும் இன்றைய இளையதலைமுறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பார்க்கும் பொழுது வியப்பாகவும் சிலருடைய கருத்துகளை கேட்கும் பொழுது சலிப்பு ஏற்படுகிறது.. ஆனாலும் அதனைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது சரியா பிழையா என தன்னைத் தானே கேட்கமுடியும் என நம்புகிறேன். இப்பொழுதெல்லாம் தொடர் தொலைகாட்சி நாடகங்களைவிட இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பரவாயில்லை என நினைப்பதுண்டு. அது மட்டுமல்ல சில நேரங்களில் சில பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளது என நம்புகிறேன்.
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
//வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு// 2006 ஆண்டில் இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.. இன்றும் இந்த நிலைதான் இலங்கையில் இருக்கும். எங்களது சமூகம், எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் குறிப்பிட்ட துறைகளைத்தான் இன்னமும் அதிகளவில் தெரிவு செய்கிறார்கள் ஆனால் வேறு சமூகங்கள், அந்தந்த நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமானதை, அன்றைய நிலையில் தேவை அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்கிறார்கள், முன்னேறுகிறார்கள். அரசியல், சிறிய நடுத்தர கைத்தொழில், விவசாயம் தொடங்கி விளையாட்டு வரை ஈடுபடுகிறார்கள். ஆனால் எங்களது சமூகம் மிகமிக குறைவானவர்கள் ஈடுபடுகிறார்கள். அதே போல இங்கே ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு, உளவியல் ஆலோசகர்களுக்கு தட்டுப்பாடு. எங்களது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த துறைகளைத் தெரிவு செய்வதில்லை காரணங்கள் இந்த நாட்டு பிள்ளைகளுக்கு படிபிக்க முடியாது, ஆசிரியர்களை மதிக்கமாட்டார்கள் etc etc.. ஆனால் உண்மையான காரணங்கள் வேறு. இங்கேயே இப்படி இருக்கும் பொழுது இலங்கையில் பல்வேறு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தினாலும் பாரம்பரிய துறைகளைவிட்டு வேறு படிப்பார்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி படித்து அந்தப் பாரம்பரிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்ககூடிய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை..
-
சார்லஸ் டார்வின்: கடவுளையும் மத நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியது எப்படி?
இந்த NCERT எத்தனையாம் வகுப்பினைக் குறிக்கிறது? ஆனாலும் டார்வினின் பரிமாணக் கோட்பாட்டை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியதற்கான உண்மைக் காரணம் பாடச்சுமையென நான் நினைக்கவில்லை
-
இரண்டாம் பயணம்
நானும் கண்டிருக்கிறேன்..
-
Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
இந்தக் காணெளியில் offshore வாய்ப்புகளைப் பற்றியும் கூறுகிறார்கள். உண்மையில் நாங்கள் வட்டத்தை விட்டு யோசிக்காதமையால் பல offshore வாய்ப்புகளை விட்டுவிட்டோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக எனது வேலையில் offshore சென்ற பிரிவில் ஒரு பகுதியினருக்கு பயிற்சி அளித்து வருகிறேன், அவர்களுடன் கதைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது எங்களால் ஏன் இந்தமாதிரி offshore வேலை ஒப்பந்தங்களை எடுக்கமுடியாமல் போய்விட்டது என்று. நாட்டுப் பிரச்சனை ஒரு காரணமாக இருந்திருந்தாலும் கூட நாங்கள் எப்பொழுதும் ஒரு சில தொழில்களைத் தவிர மற்றொன்றையும் யோசிப்பதில்லை என்பதும் பல offshore வாயப்புகளை விட காரணமாக இருந்திருக்கும். இந்த கருத்தரங்கில் கூறியது போல குறுகியநோக்கில் அல்லது குறுகியவட்டத்திற்குள் மட்டுமே யோசிக்காமல் எம்மைச்சுற்றியுள்ள வளங்கள்/தேவைகளுக்கு ஏற்ப எமது முயற்சிகளை தொடங்கவேண்டும். காணெளியில் சில நல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளவர்களையும் பார்க்க முடிந்துள்ளது. உடனடி இலாபம் என்பது நிலையில்லாத ஒன்று என்பதை விளங்கி, தொடங்கியுள்ள முயற்சிகளில் வளரவேண்டும்.
-
ப்ளூ ஸ்டார் விமர்சனம்
நான் படம் பார்க்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. “காலு மேல காலு போடு இராவணன் குலமே” மற்றும் “ரயிலின் ஒலிகள்” இரு பாடல்களும் கேட்க நன்றாக உள்ளன.
-
இரண்டாம் பயணம்
உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே.. எனக்கும் உங்களைப் போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, நீங்கள் போன இடங்களுடன் மணலாறு, தென்னமாவரடி வழியாக திருகோணமலைக்குப் போயிருந்தேன், இந்த இடங்களை எல்லாம் பார்த்த பொழுது, காற்றை சுவாசித்த பொழுது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் என்னால் விபரிக்கமுடியாது.. அந்த இடங்களில் மனம் பலரைத் தேடியது.. இல்லை என அறிவுக்குத் தெரியும் ஆனாலும் இப்படி நடந்திருக்குமோ அப்படி இருந்திருப்பார்களோ என்ற எண்ணங்கள் ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை. நீங்கள் உங்களது உணர்வு கலந்து எழுதிய உங்களது பயண அனுபவம், எனது கடந்த அனுபவத்தை மீண்டும் நினைக்கவைத்துள்ளது. உங்களது பயண அனுபவத்தையும், நீங்கள் சென்றிருந்த இடங்களில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் தொடர்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
-
Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
எனக்கும் இதனைப் பார்க்கும் பொழுது ஒரு mixed emotionsதான் வருகிறது. பார்வையாளர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும். இரண்டாவது, இப்படி நிறைய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டதால் நம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கலாம். மேலும் இந்த வீடியோ கூட அங்கே நடந்த முழுவிடயத்தையும் கூறவில்லை என்பதால் ஆர்வமின்மை என கூறலாமா தெரியவில்லை. திரு ராஜ் ராஜரட்ணத்திற்கு கூட வடக்கு கிழக்கு தமிழர்கள் எதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்பதும் கூட கட்டாயம் விளங்கி இருக்கும் என நம்புகிறேன். ஆனாலும் அவர் ஆரம்பிக்க நினைக்கும் விடயங்கள் பயனளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
-
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)
இந்த மாதிரி மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு கேட்பவர்களை மற்றவர்கள் முட்டாளாகத்தான் நடத்துவார்கள் ஏனெனில் அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை மற்றவர்கள் விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. ஆகையால் இப்படி மன்னிப்புக் கேட்பவர்கள் மேலும் காயப்படுத்தப்படுவார்கள். ஆனாலும் எனக்கு இந்தக் கதை பல்வேறு காரணங்களால் மிகவும் பிடித்திருக்கிறது. இணைத்தமைக்கு நன்றி.
-
விமானத்தில் செல்லும்போது ஏன் உங்களுக்கு மெதுவாக வயதாகிறது?
இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டு வரும்பொழுது எனக்கு முதலில் தோன்றியது Interstellar படத்தின் கதை போல இருக்கிறதே என்று. நல்லதொரு படம். விண்வெளி, கருந்துளை பற்றி இங்கே எழுதியதை படத்தில் பார்க்கும் பொழுது உணரமுடியும்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மணித்துளிகள் கரையக் கரைய மலரிதழும் வாடிப் போகும்🤔
-
புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்
இன்னொரு விடயத்தையும் அவதானிக்கலாம்: புலமைப் பரீட்சை தொடங்கி உயர்தர பரீட்சையில் உயர்ந்த பெறுபேறு பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் போட்டு பாடசாலைகளும் தனியார் வகுப்புப் நிறுவனங்களும் தமக்கான விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார்கள். பரீட்சைப் பெறுபேறு வரும் காலங்களில் ஊரில் நின்றால் பத்திரிகைகளின் பெரும் பகுதியை இந்தப் பாராட்டு விளம்பரங்கள் நிரப்பிவிடும். முன்பை விட இந்த மாதிரியான போக்கு சற்றுக் கூடிவிட்டது எனலாம். பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களின் உளவியலை ஒருவருமே சிந்திப்பதில்லை. இந்த நிலை முன்பும் சரி இப்பொழுதும் சரி மாறவேயில்லை என்பதுதான் உண்மை.
-
ஊருலா
பருத்தித்துறையில் இருக்கும் வெளிச்சக்கூடைச் சுற்றி இராணுவ முகாம்தானே உள்ளது, பிறகு எப்படி பராமரிக்க முடியும். பயணக்கட்டுரை அருமை.. ஊர்ப் படங்களைப் பார்க்க திரும்பவும் போகத் தூண்டுகிறது.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாலைவனத்தில் சில தடங்களைத் தேடி!!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை இன்று இந்த உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. இவையெல்லாம் தெரிந்தும், தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா?