Everything posted by P.S.பிரபா
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
உண்மைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். வந்து பார்க்கவும் விருப்பம்தான். ஆனால் எனது சொந்த உறவும் வேறு நிறைய நெருங்கிய உறவுகளும் ஜரேப்பாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருக்கிறார்கள்(பிரான்ஸ் உட்பட). இவர்களை எல்லாம் பார்ப்பது என்றால் ஒரு 4 கிழமைகளாவது வேண்டும், பிறகு எப்படி நான் விரும்பும் இடங்களைப் பார்ப்பது???.. இவர்களுக்குத் தெரியாமலும் வரமுடியாது என்பதால் இன்று வரை ஜரேப்பா பயணம் தள்ளியே போகிறது. பார்ப்போம்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
வலையன்மடம் - வலையனைக் காணவில்லை ஆனால் தனித்து நிற்கும் மரத்தைத் தான் காணமுடிந்தது. புதுமுறிப்புக் குளம் - வாய்காலில் விளையாடும் சிறு வயசுப் பையன்கள் கயிறாக காத்திருக்கும் சணல்..சுண்டிக்குளம் போகும் வழியில்..
- IMG_2776.jpeg
- IMG_2777.jpeg
- IMG_2778.jpeg
-
பிரிதலும் புனிதமானது
என்னைப் பொறுத்தவரை ஒரு உறவில் நான் நானாக இருக்கமுடியாது என உணரும் பொழுது அந்த உறவில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை மனைவிக்கு அல்லது காதலிக்குப் பிடிக்கும் என்பதற்காக தனது கொள்கை/விருப்பங்களை மாற்றி வாழ நினைத்தாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அப்படி இருக்க முடியாமல் போகும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு உறவில் இருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி அவரவர் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அந்த உறவு விரிசல் இன்றி தொடரும். ஆனால் தேவையற்ற விதமாக கட்டுப்படுத்துவதும் விதிகளைப் போடுவதும் அந்த உறவினை நம்பவில்லை என்பதுடன் அவமானப்படுத்துவதாகவே கருதப்படும் என நம்புகிறேன். ஒரு உறவில் இருக்கும் பொழுது மூச்சு முட்டி சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் இருப்பது அடிக்கடி நிகழுமாயின் அங்கே அந்த உறவில் விரிசல் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் ஒன்றாக வாழ வேண்டும் என நினைத்தால் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தால், இருவரும் ஒருவரில் ஒருவர் பரஸ்பர நம்பிக்கையும் வைத்திருக்கவேண்டும். அத்துடன் அவரவர் உணர்வுகளுக்கும்/விருப்பங்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் தங்களையும் ஏமாற்றாமல் வாழலாம்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் நான் போனது இலங்கையைத் தவிர்த்து இந்தியாவும் இங்கிலாந்தும் தான் ஆனால் இரண்டுமே பிடிக்கவில்லை. யாழ்ப்பாணம்/திருகோணமலை/வன்னிக்குப் போவது என்னை recharge செய்து மீள இயங்குவதாக உணர்வதால் அங்கே போகிறேன் அவ்வளவுதான். ஆனால் வாழ்நாளில் ஒரு தரமாவது Greeceற்கும் Egyptற்கு போகவேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உண்மைதான்.. என்ன காரணம் என்று விளங்கவில்லை. புதிது புதிகாக சாப்பாட்டுக் கடைகள்.. வெளியில் சாப்பிடுவது இப்பொழுது ஒரு trend ஆகிவிட்டது. யாழ்ப்பாண townல் புதிதாக Domino’s திறந்துவிட்டார்கள்(போன வருட ஆரம்பத்தில் இது இருக்கவில்லை). பழைய நினைவுகளில் ஊர் சாப்பாட்டை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்தான்.
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும் பொழுது இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆசிரியர்கள் என்ற கோபமே வருகிறது.. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள நடைமுறைகளாலால் எங்களது எண்ணங்களிலும் மாற்றம் வருகிறதா? தெரியவில்லை ஆனால் எங்கள் ஊர் ஆசிரியர்கள் கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும் என நினைக்கிறேன்.
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
எனக்கும் கூட இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது ஏன் சம்பந்தமில்லாமல் தலைவரை இதற்குள் இழுத்தார் என விளங்கவில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என ஒரு பகுதியினரும்.. இந்த மாதிரி நிரூபிக்க முடியாத கதைகளை கட்டும் ஒரு பகுதியினரும் .. இப்படியே போகவேண்டியதுதான்.
- பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மதில் மேல் பூனை.. எந்தப் பக்கம் போவது என யோசிக்கிறதோ🤔
-
கடவுள் இருக்கிறாரா.............?
கடவுளை விட.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விட மனிதர்கள் பயப்பட வேண்டியது அவரவர் மனசாட்சிக்கே.. ஏனெனில் மனசாட்சிதான் எப்பொழுதும் எங்களுடன் வரும்.. மனசாட்சிக்கு விரோதமாக, பிழையாக செயற்படும் மனிதர்கள்.. கடவுளுக்கு தாங்கள் உண்மையாகவும் பக்தியுடனும் இருப்பதாக காட்டுவதெல்லாம் பொய்யான ஒன்று என்றுதான் நான் நினைப்பதுண்டு
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள் முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன். ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅 பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தோற்ற வழு
உளவியலை எம்மவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பதில்லை என்பதற்கு முதல் காரணம் எமது சமூகத்தில் அவர்களைப்(உளவியல் மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள்) பற்றிய கருத்துக்களே காரணம்.. ஒருவருடைய வெளித்தோற்றத்திற்கும் அவரது குணவியல்புகளுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைத் தான் இப்பொழுது அதிகம் காண்பதாக நான் உணர்வதுண்டு.. பச்சை முடிந்துவிட்டது😔 கதைக்கு மிக்க நன்றி😊
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
அங்கே(மூனி மூனி) முத்து எடுக்கும் முறையை காட்டும் இடமும் உண்டு ஆனால் போகவில்லை.. Oyster Shed என்ற உணவகத்தில் சீனர்கள்தான் நிரம்பி இருந்தார்கள்.. Oysterம் wineம் கலந்த வாசனையே அதிகம்.. Wiseman Ferry என்ற இடம் கூட இப்படியான தீவைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி😊.
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இப்படிப் பல இடங்களைப் பார்க்கலாம்.. ஆனால் இங்கே வரும் எம்மவர்களும் சரி வேற்று இனத்தவரும் சரி அனேகமாக போவது Sydney Opera House, Three sisters(Blue Mountain), Byron Bay etc போன்ற இடங்களுக்குத் தான் ஆனால் NSWற் அழகு நகரங்களில் இல்லை.. Regionalல்தான் உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி😊
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
அடிக்கடி காணாமல் போவதே வாடிக்கையாகிவிட்டது.. இல்லையா😁 வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி😊. ஓம் அழகான தீவுதான்.. இப்படியான சிறிய தீவுகள் Hawkesbury ஆற்றில் உள்ளன ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே போக முடியும் தீவைப் போல கட்டுரையும் சிறியதாகிவிட்டது😊. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவி அண்ணா. எப்பொழுதும் எனக்கு ஊக்கமளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி😊
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்… கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். Hawkesbury ஆற்றின் அழகு!! இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும் கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 1 3/4 மணித்தியால கார் ஓட்டத்தில் Brooklyn என்ற இடத்திற்கு வந்து பின் அங்கிருந்து படகில் இந்த தீவிற்கு போகவேண்டும். Brooklynற்கு போகும் வழியில் Mooney Mooney என்ற இடத்தில் காலை உணவிற்காக நின்ற பொழுது.. அங்கே இருந்த Lawn bowling கிளப்பில் சிறிது நேரம் பொழுதை கழித்தோம். வேலையில் இருந்து ஓய்வு எடுத்தபின் இந்த பௌலிங் விளையாட்டு உதவும் என்பதால் அதனை விளையாடிப் பார்த்த பொழுது.. பின் மதிய உணவை முடித்துக்கொண்டு Brooklyn படகுதுறைக்கு மதியம் இரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்தோம்.. படகு வந்ததும் கட்டனத்தை செலுத்திவிட்டுப் படகில் ஏறி, 10 நிமிடங்களில் Danger Island வந்தடைந்தோம்.. இந்த தீவில் வாகன வசதி இல்லை என்பதால் நடந்தே தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அதிகளவு பொருள்கள் என்றால் முன்பே பதிவு செய்து community buggy( சிறிய வண்டி) பயன்படுத்தலாம் மற்றப்படி படகுதுறையில் வைத்திருக்கும் சிறிய தள்ளுவண்டியில்( wheelbarrow) பொருள்களை வைத்து இழுத்துக் கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரவேண்டும்.. இந்த தீவி்ல் முன்பு அதிகளவு அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் இருந்தனர் ஆனால் பிரித்தானியர்களின் வருகையுடன் பூர்வீக குடிகள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இப்பொழுது 300லும் குறைவானவர்களே இந்த தீவின் மொத்த சனத்தொகை.. இங்கே ஒரு bowling club, NSW தீயணைப்பு நிலையம் மற்றும் ஒரு உணவகமும் உள்ளது.. சிறுவர் பூங்கா உள்ளது. அதுமட்டுமல்ல பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. அவசரமில்லாமல் ஆறுதலாக இந்த தீவைச் சுற்றினால் நிறைய விடயங்களை காணலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம். மேலும் இந்த தீவு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து எத்தனையோ மடங்கு பின்தள்ளி உள்ளதால் பதின்ம வயதினருக்குப் பிடிக்காது ஏனெனில் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விரும்பி வரக்கூடும் ஏனெனில் எந்தவித தடைகள், வாகனங்கள் இன்றி வீதிகளில் ஓடி விளையாட முடியும். இந்த தீவில் ஒரு சிறிய கடற்கரை உள்ளது. விடுமுறையில் வருவோர் தங்க வசதியாக கடற்கரையைப் பார்த்தபடி ஒன்றிரண்டு தங்குமிடங்களும் உண்டு.. மிகவும் அமைதியான ஒரு தீவு.. தனிமையை விரும்புபவர்கள் இங்கே வந்து அமைதியாக மனிதர்களின் தொந்தரவின்றி நாளை/நேரத்தை கழிக்க முடியும். Berowra Waters வீடு திரும்பும் வழியில் Berowra Waters என்ற இடத்தினூடாக வரும் வழியில் அந்த இடத்தைப் பார்த்து எனக்குள் நினைத்தேன் “ அவுஸ்திரேலிய உண்மையில் அழகான ஒரு தீவு.. இயற்கையாகவே அதிகளவு மலைகளும் அதனால் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் அதே சமயத்தில் இந்த மலைகளுடாக காரில் பயணிப்பதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். அதுமட்டுமல்ல இயற்கையாகவே அழகிய கடற்கரைகளும் உள்ள ஒரு நாடு.. இதைப் போல மற்ற நாடுகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகமே” என்று.. வீடு திரும்பும் பொழுது யாழ் இணையத்தின் 26வது அகவைக்காக நன்றி - பிரபா
-
சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன்
//அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.// இந்தப் பகுதியை வாசிக்கையில் எனக்கு 2009 வரை ரிஸ்க் எடுத்து வரலாறு படைத்த சமூகமாகவும் அதற்குப் பின் பிழை பிடிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் ஒழுங்காக செய்யாத, சுயநலமான ஒற்றுமையில்லாத ஒரு சமூகமாகவும் யாருக்கு என்ன நடந்தா என்ன இந்தியா என்ன செய்தால் என்ன ஆனால் நாங்கள் இந்திய சினிமாவை/ நட்சத்திரங்களை வளர்த்துவிடுவதை மட்டும் மாற்றமாட்டோம் எனக் கூறும் சமூகமாக மாறிவருகிறோமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!
அவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன். இவர்களை நம்பி ஒருதரம் வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள், ஒன்றும் நடக்கவில்லை. இரண்டாம் முறையும் செய்தார்கள் அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி தங்களது சந்ததிக்கு செல்வம் சேர்த்ததுதான் நடக்கிறது. இப்படி இவர்கள் தங்களுக்கு நன்மையோ அல்லது எம் இனத்திற்காக நன்மை செய்யவில்லை எனத் தெரிந்தும் வாக்குகளைப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன்.