Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. பயங்கரவாதிகளின் இந்த நியாயமற்ற கோரிக்கைகளை நிச்சயமாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. இப்போது ரபா எனும் கட்சி கோடடையையும் இஸ்ரேல் நெருங்கி உள்ளது. பயங்கரவாதிகள் , பணய கைதிகள் எல்லோரும் இப்போது அங்குதான் இருக்கிறார்கள். அந்த பயங்கரவாதிகளின் முடிவுரை விரைவில் எழுதப்படும். அதன் பின்னர் நிச்சயமாக காசா மக்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். இந்த பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கு UNRAW எனும் அமைப்பின் முழு ஆதரவும் இருந்துள்ளது. அவர்களை நடத்தும் பாடசாலைகள், வைத்திய சாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாமே பயங்கரவாதிகளின் கட்டுபாடிலதான். ஐக்கிய நாடுகள் சபை இதட்கு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் மக்களை கை விட்டு ஓடிய வர்கள் அங்கு செய்யும் வேலை இதுதான். உயர் மடடத்தினருக்கு பணம் மட்டுமே நோக்கம்.
  2. இப்போது அது சிறிய விமானங்கள் தரையிறங்குவதட்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. சர்வதேச விமான நிலையம் என்று குறிப்பிடடாலும் இப்போதைக்கு நிலைமை அப்படி இல்லை. அரசு கடடயம் அதனை விஸ்தரிக்க வேண்டுமென்றால் சடடப்படி காணிகளை சுவீகரிக்கலாம். ஆனாலும் அங்குள்ள அரசியல் கள நிலவரங்களை பொறுத்து அந்த தீர்மானத்தை கை விடவும் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே அதன் சாதக, பாதக நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும்.
  3. இஸ்ரேல் மட்டுமில்லை. நிறைய நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதாவது சூயஸ் கால்வாயுடான கப்பல் பயணம் 40 % ஆல் குறைவடைந்துள்ளது. அதாவது இஸ்ரேல் அல்லாத மற்றைய நாடுகளுக்கான பயணங்களும் தடைபட்டுள்ளன. எனவே இது மற்றைய நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை. எனவே இது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அன்கொன்றும் , இன்கொன்றுமாக நடந்தாலும் முடிவு உண்டாகும்.
  4. மக்கள் சேவை என்று வரும்பொழுது இப்படி எல்லாம் துன்பங்கள், அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். கெஹெலிய ரம்புகவெல்லா அவர்கள் எத்தனையோ வியாதிகள் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதட்காக அரசியலை தொடர்ந்தவர். அவுஸ்திரேலியாவில் கூட தனது நோய்க்காக எத்தனையோ நாட்கள் வைத்தியம் செய்தார். பாவம், அவரை போய் இப்படியான பொய் குற்றசாட்டுகள் சுமத்தி உள்ளே தள்ளியிருப்பது ஏற்க கூடியதல்ல. இப்போது வைத்தியசாலையில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்றால் எவ்வளவு கஷடம் பாருங்கள். 😜
  5. உண்மை. ராஜபக்சேக்களின் அழுக்குகளை எல்லாம் அந்த நாட்களில் நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவினார். இன்று அவருடைய அழுக்குகளை கழுவுவதட்கு யாருமே இல்லை. பாவம் மனுஷன். இதைத்தான் ஊழ் வினையென்பதோ? உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான். எப்படி இருந்தாலும் இந்த ஆளை உள்ளே தள்ளுவதட்கு போராடியவர்களை பாராட்ட வேண்டும்.
  6. அப்படி எல்லாம் அவருக்குவாராது. அங்கு ராஜா மரியாதையுடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படும். இன்னும் அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிவிப்பதுடன் மேலும் சில நடைமுறைகளில் அவர் பிணையிலும்வரலாம்
  7. அப்படி இல்லை. அதை எப்படி எங்கே பாவிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. அதுக்கெல்லாம் தலைக்குள்ளே அது வேணும். இல்லாவிட்ட்தால் பிரயோசனம் இல்லை. 😜
  8. அப்படி என்றால் இனி இஸ்ரேலுக்குக்கான பொருட்களை சீன , ருசியா கப்பல்களில் கொண்டு செல்லலாம். ஆயுதம் ஒன்றாக இருந்தாலும் சவூதி தாக்குவதட்கும் அமெரிக்கா , பிரிட்டன் தாக்குவதட்கும் வித்தியாசம் இருக்குது. 😛
  9. அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணம் , ஊழல்கள் மூலம் வியாபாரிங்க கொள்ளையடித்த பணம் மீட்கப்படும் வரை மீட்சி இல்லை.
  10. அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்.
  11. அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது.
  12. இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்கள். இதனால் மீன் உட்பத்தி பாதிக்கப்படுகின்றது. இது அந்த இந்திய மர மண்டைகளுக்கு எடுத்து சொன்னாலும் பண ஆசையினால் ஒன்றயும் கேட்பதில்லை. கஞ்சா அடைக்கலத்துக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதால் இது பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை.
  13. ஏறக்குறைய 13 வருடங்களுக்கு மேலாக இது பற்றி பேசப்படுகின்றது. ஐக்கிய நாடுகளால் எதாவது செய்ய முடிந்ததா? இனியும் அதுதான் தொடரப்போகின்றது. இலங்கையும் இவர்களை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது.
  14. இதில் அநேகமானவை உள்ளூர் மரக்கறிதான். முன்னர் பாதைகளில் வைத்து விட்ப்பார்கள். இப்போது பாதைகளும் வெறிச்சோடி கிடக்குது.
  15. இலங்கை அரசு இவர் சொல்வதை இப்போது கருத்தில் கொள்வதில்லை. இதனால் எங்கள் கர்தினால் ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிடடார். மற்றப்படி ரணில் அரசு சரியானதைத்தான் செய்யும்.
  16. அவர்கள் வயிற்றில் சொருகி உள்ள கத்தியை அமெரிக்கா, பிரிட்டன் கவனிக்கவில்லைபோலும். இனி அவர்களுக்கு கத்தி குத்துதான்.
  17. இஸ்ரேலை தாக்குகிறோம் எண்டு கூறிக்கொண்டு ஹூத்தி பயங்கரவாதிகள் சர்வதேச போக்குவரத்து கடடமைப்பை தாக்குவது எவ்வளவு மூடத்தனமான செய்கை. இன்று அதிகாலை அதட்கான பதில்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு கிடைத்தாலும் அதன் அர்த்தம் அவர்களுக்குவிளங்கி இருக்குமோ தெரியவில்லை. அவர்கள் கூறியபடி கனவிலும் நினைத்துக்கூட முடியாத பயங்கரவாத பதில் தாக்குதல் என்னவென்று பார்க்கலாம்.
  18. எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜
  19. நான் ஏன் எழுதினேன் என்பதை முதலில் இருந்து பாருங்கள். இதெல்லாம் தெரியாமல் இருக்கிறீர்களே? 😂
  20. அது வேறு. இது வேறு. கடன் கொடுப்பதட்கு நிறைய பேர் இருக்கும்போது எதட்கு அப்படி எல்லாம் அலையை வேண்டும். இங்கும் றால் போட்டு சுறா பிடிக்கும் வேலைதான் நடக்குது ஐயா. 😜
  21. அது நிலைமையை பொறுத்தது. காலத்துக்கு காலம் அது மாற்றம் பெரும். ஹூத்தி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால்தான் இலங்கை அதட்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் இலங்கையில் மேலும் விலையேற்றம் உருவாக்கி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதட்காகவும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்துவதை தவறென்று கூற முடியாதுதானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.