Everything posted by Kapithan
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உடனடி மாற்றங்கள். 1. 36% முதல் 24% வரை வரி செலுத்துங்கள். 2. உணவுப் பொருட்கள், சுகாதாரத் துறை சேவைகள் மற்றும் கல்விப் புத்தகங்களுக்கு VAT விலக்கு அளிக்கப்படும். 3. ஒரு அமைச்சர்/எம்.பி.க்கு ஒரு வாகனம். 4. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அல்லது வாகனங்கள் வீடுகள், பாதுகாப்பு போன்றவை இல்லை. 5. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைத்தல். 6. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பம்/பொரியல்களுக்கு இடமளிக்கப்படாது. 7. அனைத்து சுற்றுப்பயணங்களும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் உள்ளன. 8. 25 அமைச்சகங்கள் மட்டுமே. 9. மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைக் குறைக்கவும். 10. குறைந்த வட்டி விகிதங்கள் 11. புதிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கான மேம்பாட்டு வங்கி. 12. மோசடி வழக்குகளை விசாரிக்க 3 பெஞ்ச் சிறப்பு நீதிமன்றம். 13. ஜனாதிபதியின் பட்ஜெட் 50% குறைக்கப்பட்டது. 14. அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எரிபொருள் பாவனை வாகனங்கள் இல்லை. 15. பூஜ்ஜிய அரசியல் செல்வாக்கு இல்லாமல் காவல்துறை, சட்டத் துறை மற்றும் நீதிமன்றங்களைச் சுதந்திரமானதாக மாற்றுவதன் மூலம் ஒரு சட்ட ஸ்தாபனம். 16. எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு மாறுவதைத் தடுக்க புதிய சட்டங்கள். 17. புதிய முதலீடுகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஏற்கனவே முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்). 18. குடிமக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் இல்லை. 19. அரசாங்கத் துறைகளின் தலைவர்கள், தூதர்கள் போன்றவற்றின் தகுதியின் அடிப்படையில் அனைத்து நியமனங்களும். 20. எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (தேயிலை, ரப்பர், தேங்காய், இலவங்கப்பட்டை, மீன்பிடி, கற்கள் போன்றவை) மற்றும் சேவைகள் (வேலை வாய்ப்புகள்), புதிய சந்தைகள் மூலம் டாலர் வரவை மேம்படுத்தும் பணிகளை தூதுவர்கள் நியமிக்கப்படுவார்கள். 21. சுற்றுலாவை மேம்படுத்துதல். 22. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீட்டமைத்தல். 23. 25 அமைச்சுகளின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 24. மகசூலை அதிகரிக்க மீன்பிடித் தொழிலுக்கான புதிய தொழில்நுட்பம் (மீனவர்கள் மீன்பிடி பகுதிகளுக்கான திசைகளைப் பெற) 25. R&D வழங்கும் வெவ்வேறு மண் இடங்களின்படி & சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும். 26. குறைந்தபட்ச செலவில் குளிர் அறைகள், உரங்கள் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற பாதுகாப்பு முறைகள். 27. சுற்றுச்சூழல் அடிப்படையிலான சுற்றுலாவுக்கு வசதி. 28. தகவல் தொழில்நுட்ப சந்தையை கைப்பற்ற திட்டங்கள். 29. பொருளாதாரத்தை எளிதாக்க கல்விக் கொள்கைகளில் மாற்றங்கள். 30. போதுமான நிதியுதவி மூலம் குடிமக்களுக்கு அடிப்படையான உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி. என்பனவாகும். அநுர குமார திஸாநாயக்க. இலங்கை ஜனாதிபதி.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
புலம்பெயர் ஸ் தாங்கள் ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பு,.... டமில் தேசீயத்தின் ஒட்டுமொத்த குத்தகையையும் இவர்கள் எடுத்திருக்கிறார்கள்,.🤣 ஜனநாயக முறைப்படி வடக்கு கிழக்கு மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அதைக்கூட இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக் கண்ணன் நிலைக்குப் போயிருக்கிறது புலம்பெயர்ஸ்ஸின் நிலை. இனிமேல் இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் இவர்கள் பார்வையில் துரோகிகளே,......😏
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தேசியம் என்பது உணர்வு சார்ந்தது. சரியான தலைமை வெளிப்படும்போது மக்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள். வடக்கு கிழக்கிலும் அதுதான் நிலைமை. புலம்பெயர் ஸ் சொல்லுகிறார்கள, TNA சொல்லுகிறது என்பதற்காகவெல்லாம் தேசிய உணர்வை வெளிக்காட்ட முடியாது. அங்கேயுள்ள மக்களை முட்டாள்களாக எண்ணுவதையும் புலம்பெயர்ஸ் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணுவதையும் முதலில் நிறுத்துங்கள்.
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
வேறு என்ன சொல்ல முடியும் மிஸ்ரர் மோடி,...இந்திய எதிர்ப்பு என்பதுதானே JVP யின் அடிப்படை. அதிலிருந்துதானே JavP ஆரம்பமாகிறது,..... இனி வாயைப் பொத்திக்கொண்டு அழவேண்டியதுதான்,. .......🤣 அனுர JVP யில் இணைந்தது 1987,.......😎
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
உது மலிவான அரசியல் என்றால் எது விலை உயர்ந்த அரசியல்? முட்டையெறிந்து கலைப்பதா,. ? ஜனநாயக முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரது தெரிவை எப்படி தாங்கள் கொச்சைப்படுத்தலாம்? 😏 அரியநேந்திரன் சனாதிபதியாக வந்திருக்க வேண்டும் என்பதை நாசூக்காகச் சொல்கிறார்,..🤣
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இந்த வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில்தானா தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா எனக் கணிப்பீர்கள்?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அடுத்த பொதுத் தேர்தலில் சஜித்தும் JVP யும் சேர்த்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம். பார்ப்போம் எமது அரசியல் வியாதிகள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று,. 😎
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
1) தோற்றதால் அல்ல, எமது மக்கள் பிரிந்து நின்று ஒரு பகுதியினர் JVP க்கு வாக்களித்ததால். 2) அரியத்தார் 100% எடுத்திருந்தால் கூட பயனில்லை. ஏனென்றால் அவர் MP போல மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. சரியோ பிழையோ நாம் யாருக்கு ஆதரவளித்திருந்தாலும் எல்லோரும் ஒருசேர நின்றிருக்க வேண்டும். அதுதான் எமது பலம்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
மொத்தத்தில் அரியத்தைத் தூக்கி கடாசியாகிவிட்டது. JVP இனி மிகவும் சிம்பிளாகச் சொல்லும்,...... ஒரே நாடு ஒரே மக்கள். No 13 No 13 A or B ....... No வடக்கு கிழக்கு இணைப்பு,.... எந்த முகத்தோடு எம் அரசியல் வியாதிகள் இவர்களிடம் போவார்கள்? 50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால் பயன் ஏதும் இல்லையே,..🥺
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
உங்கள் ஆசையில் நான் மண்ணை அள்ளிக் கொட்டும் ஆளல்ல விசுகர். ஆதலால் உங்கள் விருப்பம் போலாகட்டும் 👍- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தேசிய உணர்வு என்பது அரியத்தாருக்கு ஆதரவு அளிப்பது அல்ல சாத். வடக்கு கிழக்கில் அரியத்தாரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள,. அவர்களெல்லாம் "நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வும் இல்லாத ." ஆட்கள் என்கிறீர்களா? உங்கள் கருத்தின்படி நான் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற தமிழர் திருவிழாவில் பாடகர் சிறீநிவாஸ் அவர்களுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும். அல்லது அரியத்தாருக்கு ஆதரவாக அலட்ட வேண்டும். அப்போதுதான் நான் டமில் தேசியவாதி. அதாகப்பட்டது மூழையைத் கழட்டி ஒருபக்கம் கடாசிவிட்டு புலம்பெயர்ஸ் போடும் காட்டுக் கூச்சலுக்கு அதலையை ஆட்னால் மட்டும்தான் நான் டமில்த் தேசியவாதி. சுயமாகச் சிந்தித்தால் துரோகி. உந்த முட்டாள் கூட்டத்தின் பார்வையில் நான் டமில் தேசியவாதியாய் இருப்பதைவிட இவர்களால் துரோகியாக கருதப்படுவதே மேல் என நினைக்கிறேன். ✋ 100% ✅- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
மாற்றம் ஒன்றே மாறாதது. அனுர நன்மை செய்வார் என்று நம்புவோம்.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலையாட்டாவிட்டால் துரோகி என்று கூறுவது வழமையான செயற்பாடுதானே விசுகர். நீங்கள் அரியத்தாருக்கு கண்ணுக்குப் புலப்படாத விலையுயர்ந்த ஆடையை அணிவித்து, நகர்வலம் வருவீர்கள். நான் அதைப் பார்த்து சிரிக்கிறேன். அது உங்களைக் கோபப்படுத்துகிறது. மக்கள் நிராகரித்த பின்னரும் அதை ஏற்க மறுப்பது பாஸிசமாகும்.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது கவுண்டர் செந்திலின் ""அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ் அண்ணே. நீங்க SLSC பெயில் அண்ணே,.....Pass பெருசா Fail பெருசா,..?" போல இருக்கிறது சிறியரின் வாதம். சொல்லுங்க சிறியர்,... எனக்குத் தெரிந்த ஒருவர் பெரிய பந்தா காட்டிக்கொண்டு திரிவார். அவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் "அண்ணா நீங்கள் பள்ளிக்கூடம் போகவே இல்லையாமே. மூன்றாம் வகுப்புத்தானே படித்தீர்களாம். உண்மையா என்று நையாண்டி செய்திருக்கிறார். அதற்கு அவர்,...,...இல்லை த் தம்பி நான் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தனான் " என்றிருக்கிறார். 🤣- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன் கருவிலேயே சங்கு ஊதப்பட்டுள்ளது.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
குளத்தோடு கோவித்துக்கொண்டு குண்,... கழுவாவிட்டால் நட்டம் குளத்துக்கல்ல. கழுவாதவன் நாறிப்போய்விடுவான். குழமும் வற்றிச் செல்கிறது,.. .☹️- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு அல்லவா? மகிழ்ச்சி அடைவதுதானே முற,..😁- வைரலாகும் அநுரவின் முகநூல் பதிவு!
1971……… 1987….1989 யார் அந்த They,.....? இந்தியா?- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. புலம்பெயர்ஸ் இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அவர் எங்கு போனாலும் அவருக்கு உரிய இடம் கொடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவருக்கு கொடுக்கப்படும் இடம் என்பது ஒரு கல்வியாளருக்குக் கொடுக்கப்படும் மரியாதை. அது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட முடியாது. ஆனால் அரியத்தாருக்கு வாக்களிக்கக் கோரிய டமில்த் தேசிய வெறியர்கள் எங்கே போவார்கள்? வழமை போன்று இந்தியாவின் காலை நக்க வேண்டியதுதான்.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
மிகவும் நன்றி, 👆 விசுகரின் கோபம் நியாயம் அற்றது. இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. அதன்படியே முடிவு வந்திருக்கிறது. அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா?- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஐயனுக்கு அவையடக்கம் தேவை. 🥺 இலங்கை வாக்காளர், யாழ் களத்தில், எனது கருத்துக்களைப் பார்த்த பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக தாங்கள் கருதுவதை எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன். 😏- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? தமிழர் தரப்பு எதற்குள் வரும் ? 👉 முட்டாள், மோடன், மட்டி, மடையன்,..? - ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.