Everything posted by Kapithan
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
உங்களுக்கு ஆடத் தெரியவில்லை. அதனால் சுமந்திரனை வசை பாடுகிறீர்கள். சுமந்திரன் இல்லாத வெற்றிடம் ஒன்று உருவாகும்போது பழிபோடுவதற்காக நீங்கள் நாளை இன்னொருவரைத் தேடுவீர்கள். இனப்பிரச்சனைக்கு நடைமுறையில் சாத்தியமான வகையில் முடிவு காணப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறிய சிறீதரன் TNA யின் தலைவர். அவர் எங்களுக்கு தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள்,.... இலங்கையின் அமைதிக்காக உழைக்கும் எல்லோருமே கொல்லப்படுவார்கள். இதுதான் உண்மை. அது அனுர குமாரவாகவும் இருக்கலாம் அல்லது சஜித் பிறேமதாசாவாகக் கூட இருக்கலாம். இலங்கையில் அமைதியை விரும்பும் எல்லோருக்கும் மரணம் மட்டும்தான் பரிசு.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
வெளிநாடுகளுக்கு கதிர்காமர் சொல்லித்தான் விபு க்களைத் தடை செய்ய வேண்டிய நிலை இருந்தது என்கிறீர்களா? சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் தற்ப்போதுதான் கதிர்காமரும் இல்லை, விபு க்களும் இல்லையே? தடையை நீக்கலாமே,.... அத்துடன் சீப்பை ஒழித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கும் அளவில் விபு க்கள் இருந்தனர் என்கிறீர்களா? ஆகவே விபுக்களின் மீதான தடை என்பது கொள்கை ரீதியான முடிவு என்பதாகவே நோக்கப்பட வேண்டும். கதிர்காமரைக் கொல்வதால் யாருக்கு இலாபம்? அவர்கள்தான் கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னால் இருப்பவர்கள்.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
கதிர்காமரை ஏன் கொன்றார்கள்? யாராவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா? (குறிப்பு: லக்ஸ்மன் கதிர்காமரை விபு க்கள் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, அவரைக் கொன்றதற்குப் பின்னணியில் இந்தியா என்பது எனது தனிப்பட்ட கருத்து)
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
எழுதத் தெரிந்த தங்களுக்கு வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமே,.... அப்படி வாசிக்கத் தெரியுமென்றால் நசீர் அஹமட் கூறிய மேலேயுள்ள செய்தியை வாசிக்கவும். வாசித்தால் மட்டும் போதாது அதைக் கிரகிக்கவும் வேண்டும். 😏
-
நாட்டில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட்
புலம்பெயர்ஸ் க்குச் சொல்லப்படும் சேதி இது. உந்த முட்டாள் கூட்டத்திற்கு உது புரியுமோ? ☹️
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
"ஆடத் தெரியாத மூடன், மேடை தோதாக இல்லை" என்கிற கதையாக இருக்கிறது தங்களின் கூற்று. 😁 நாட்டில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட் வேட்டையாடியவன் யாரோ, தலைப் பங்கு கொண்டுபோபவன் யாரோ,.. உது உந்த முட்டாள் புலம்பெயர்ஸ் களுக்கும, போலித் டமில் தேசியவாதிகளுக்கும் புரியுமோ ? 😡
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
டமில் பொது வேட்பாளர் எனும் பூச்சாண்டி வேலை, தமிழ்த் தேசியத்தை பாடையில் ஏற்றும் கடைசிச் செயற்பாடாக இருக்கும். 😏
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தினால் மேலும் நன்மையானது. 🤣- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மொட்டை அடித்தால்தான் இவர்களுக்கு ரோசம் வருமோ,...🤣 இலங்கை அரசு இவர்களுக்கு கல்வியறிவூட்டி அனுப்ப வேண்டும். அப்போதாவது ஏன் கைதுசெய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கலாம். ,..😏- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
இதையெல்லாம் ஒரு விடயமாக எடுக்க வேண்டுமா ? பெறுமதியற்ற விடயங்களைத் தவிர்ப்பதே நல்லது.- பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம்
"வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் " யார் இவர்கள்?- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
உங்கள் புரிதலில் தவறு உள்ளது. விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார, நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது.- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
எங்கள் கொள்கைகளைக் கைவிடவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கொள்கைகள் கைகூட வேண்டுமெனில் இருப்பு முக்கியம் அல்லவா?- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
சேச்சே,....... நாங்கள் பகிஸ்கரிப்போம் அல்லது அதற்குப் போட்டியாக இன்னும் ஒரு அ அமைச்சரவையை கொண்டுவருவோம். அது இயங்காவிட்டலும் பிரச்சனை இல்லை. 🤣- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை கந்தையர்.- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம். அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக, சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை.- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
அண்மையில் இது போன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தேவை என்று ஒரு அருட் சகோதரி ஒருவர் உதவி கேட்டபோது சம்பவத்தின் உண்மை நிலை எனக்கு அறிய வந்தது. அது கோவிட் -19 காலம். தாய் மத்திய கிழக்கில். தகப்பன் குடிப்பழக்கமுள்ளவர். வீட்டில் இரு சகோதரிகள். தகப்பன் மூத்தவரை தொடர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கிறார். விடயம் வெளியே தெரிந்து, பொலிஸ், கோட், கேஸ் எனப்போய், இறுதியில் தகப்பனுக்கு 4 வருட சிறை. பிள்ளைகள் அருட் சகோதரிகளிடம். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தாய் நாடு திரும்பியிருந்தார். புனர்வாழ்வுக்குப் பின்னர் பிளளையை தாயிடம் ஒப்படைக்க அருட்சகோதரிகளும் அந்தப் பிதேச Probation Officer ம் பிள்ளையை அழைத்து வந்திருக்கிறார்கள். ஊரே திரண்டு, பிளளையை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்தப் பிள்ளை தற்போதும் அருட் சகோதரிகள் வசம். இது எனது நேரடி அனுபவம். வல்லவனுக்கு என்னால் ஒன்றைத்தான் கூறிக்கொள்ள முடியும். "தயவுசெய்து சமூகப் பொறுப்புட்ன் சிந்தியுங்கள். பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்"- மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
வீரகேசரியின் எண்ணுக்கணக்கு பிழை 🤣- நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார். அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. ☹️- ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
http://youtube.com/post/UgkxjjKGE21kSAXbqvUg5utoHa5pj5o9G782?si=2o267q4SlmD5Vgef- பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பாளர்’
அரியநேந்திரணை இந்தியா இறக்கவில்லையாம் ...🤣- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இதெற்கெல்லாம் அடி நுனி தேடுவீர்களா? 🥺- நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது" என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது 🤣- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு பிளீஸ் 😡 - மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.