Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. அந்த செய்தி ஆய்வு எதுவென்று கூற முடியுமா, தயைகூர்ந்து 🙏
  2. இன்னுமா மேற்கை நம்புகிறீர்கள்? நாங்கள் எப்படி வாய்கிழியக் கத்தினாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையென்றால் எங்களைப் பாவிப்பார்கள், தேவை இல்லையென்றால் தூக்கி எறிவார்கள். தேவைக்கு ஆட்கள் இல்லையென்றல் உருவாக்கிக்கொள்வார்கள். தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவார்கள். இப்போது உக்ரேனுக்கு என்ன நடந்ததோ/ நடக்கிறதோ அதைத்தான் இந்தியா எமக்குச் செய்தது. மேற்கும் செய்கிறது. சிங்களம்சீனாவிடம் போகாமல் மேற்கிடம் அல்லது இந்தியாவிடம் சரணடைந்தால் எங்கள் நிலை என்னாகும் ?
  3. நடைபெறப்போவதை எதிர்வு கூறியிருப்பினும் ஆரம்பத்தில் நானும் ஏமாந்துபோனேன். 👍
  4. சம்பவம் 1 யேசு ஏன் பூமியில் அவதரித்தார் ? மக்களை மீட்க ! எப்படி மீட்க ? சிலுவையில் அறையப்பட்டு. எப்படி சிலுவையில் அறைந்தார்கள் ? யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு. காட்சி 1 யூதாஸ் கெட்டவன். ஏன் ? அவன் தூய இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தவன். காட்சி 2 யூதாஸ் காட்டிக் கொடுத்திராவிட்டால்........ ? யேசுவின் நிலை....... ? யேசு அவதரித்த நோக்கம் நிறைவேறியிருக்குமா ? கேள்வி இப்போது, யூதஸ் நல்லவனா கெட்டவனா ? 😉
  5. வணக்கம் பிரபா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது கட்டுரையை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெளிவாக/வெளிப்படையாகக் கூறவில்லை. பலதடைவைகளில் விமரிசனம் வேண்டாம் என்று ரஞ்ஜித் வெளிப்படையாகக் கூறும்படி குறிப்பிட்டிருந்தேன். தற்போதுதான் நேராகவே கூறியிருக்கிறார். நல்ல விடயம். 1) எனக்கு உள்ள கடுங்கோபம் முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது. 2) தவறான தகவல்கள், பக்கச்சார்பான, முழுமையற்ற கருத்துக்கள் (என நான் கருதும்) வரும்போது அதனை விமர்சிக்கிறேன். ஆனாலும் தற்போது குறிப்பிட்டுள்ளதுபோல ஆரம்பத்தில் தனது கட்டுரையை விமர்சிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையை பெருமளவு தவிர்த்திருக்கலாம் என நம்புகிறேன். மற்றது.. சக மனிதனது துன்பத்தை நியாயப்படுத்தும் எவனும் மனிதன் இல்லை என்பது எனது நிலைப்பாடு. ஆதலால் பொது மக்களது அழிவில் பெருமைகொள்ள எதுவுமே இல்லை. அது உக்ரேனாகட்டும் அல்லது பலஸ்தீனமாகட்டும். துரோகத்தின் நாட்காட்டியை நினைவுபடுத்தியதற்கு நன்றி பிரபா, துரோகத்தின் நாட்காட்டியை நான் பெரிதாக வாசிப்பதில்லை. அதற்குக் காரணம் 1) முரளிதரனது செயற்பாடு எங்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அவரும் ஒரு தமிழர், எமது போராட்ட/துரோக வரலாற்றில் அவருக்கும் பெரும் பங்கிருக்கிறது. இதனை எம்மால் மாற்ற முடியாது. எனவே அது தொடர்பாக எழுதப்படவேண்டி இருந்தாலும் அதுவும் ஒருவகை எமது பல்லைத் தோண்டி மணக்கக் கொடுக்கும் வேலைதானே. அதனால் அதனை வாசிக்கும்போது ஏற்படும் வேதனையும் வெட்கமும் மேற்கொண்டு வாசிப்பதைத் தடுக்கிறது. 2) துரோகத்தின் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது. ஆகவே அது தொடர்பாக என்னால் கருத்துக்கூற முடியாது. தற்போது என்னுள் எழும் கேள்வி. உக்ரேன் தொடர்பான கட்டுரையில் உள்ள(தாக நான் கருதும்) பக்கச்சார்பும் தவறான தகவல்களும், துரோகத்தின் நாட்காட்டியில் இருக்காதா ? இந்தக் கட்டுரையும் அதனை விமர்சிக்கும்போது எழும் அவரது கோபமும் ரஞ்ஜித்தின் ஏனைய எழுத்துக்களில் உள்ள நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறதே ?
  6. 1) இதை ஆரம்பத்தில் கூறியிருக்கலாம். 2) விமரிசனங்களுக்கு அஞ்சுபவன் பொதுத் த்ளத்திற்கு வரக்கூடாது. வந்தாலும் பொய் புனைவுகளை ஓரளவுக்கு மேல் சொல்லக் கூடாது. அளவு மீறினால் விமரிசனங்கள் வரும். 3) தூற்றுதலுக்கும் விமரிசனத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாத அளவில்தான் உங்கள் புரிதலின்அளவு உள்ளதென்றால் நீங்கள் எழுதும் கட்டுரையும் அதே அளவிலான புரிந்துகொள்ளலின் அடிப்படைல்தான் எழுதப்படுகிறதென்று பொருள்படும். ஆகவே முள்ளிவாய்க்காலுக்கும் மரியுபோலிற்கும் இடையில் முடிச்சுப்போடும் உங்களின் புரிதலின் அளவை புரிந்துகொள்கிறேன். 4) இத்துடன் உங்கள் புனைவுகளின் மீதான விமரிசனங்கள் நிறுத்தப்படுகிறது( திரும்பவும் இதற்குப் பதில் எழுதாதீர்கள் புண்ணியமாப் போகும்) விமரிசனங்களை ஏற்கமாட்டாதவர்கள் தயவுசெய்து அதனை முன்கூட்டியே தெரியப்படுத்தி எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். 🙏
  7. முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் எங்கே, முழு மேற்குலகும் ஆயுதம் அள்ளிக்கொடுக்கும்/மக்கள் மீதான தாக்குதல் முடிந்த அளவு தவிர்க்கப்படும் உக்ரேன் எங்கே ? முள்ளிவாய்க்கால் என்ன உங்கள் எல்லோருக்கும் கிள்ளுக்கீரையா போவோர் வருவோர் எல்லாம் நுள்ளிப் பார்ப்பதற்கு ? ரஞ்சித் தனது ஆக்கத்தை விமர்சிக்க வேண்டாம் என்று கூறட்டும். எல்லா விமரிசனங்களும் முடிவுக்கு வரும். சொல்வாரா ? அவர் அப்படிச் சொல்லாதவரைக்கும் நீங்கள்தான் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். 😏
  8. Hitter ஐ ரஸ்யா வென்ற கோபம்/இழிவு ஜேர்மனியர்கள் பலருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். எனது யூகம் சரியானதா குசாமியாரே?
  9. உங்கள் கட்டுரையை விமச்சிக்க வேண்டாம் என்று கூறுங்கள். அத்துடன் யாரும் கட்டுரையை விமர்சிக்கப்போவதில்லை. நீங்களும் மற்றும் பலரும், எல்லோரும் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும். 🙏
  10. நீங்கள் ஆதாரம் எதனையும் கொடுக்க்வில்லை. பிழைகளை, பக்கச்சார்பை சுட்டிக்காட்டுவது ஆத்திரத்தில் அல்ல. அது பிழை என்பதாலே. உங்களால்தான் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் ஆக்கத்தை இதுவரை எவருமே குப்பை என்று கூறவில்லை. ஆனால் தவறுகளைச் சுட்டிக்காட்டும் கருத்துக்களை நீங்கள்தான் குப்பை என்று கூறுகிறீர்கள். வேருபாடு புரிகிற்தா ? உண்மையைக் கூறுங்கள் ரஞ்சித்தின் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து வருகிறீர்களா ? வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலுடன் இதனை ஒப்பிடுவது நீதியானதுதானா ?
  11. சரியைச் சரியென்றும், பிழையைப் பிழையென்றும் கூறுவது வன்மம் அல்ல, நேர்மை. . (நேர்மையா அது என்னவென்று தயவுசெய்து கேட்காதீர்கள். ) பூவை பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம். நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம். பதில் இல்லையென்றால் நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம்.
  12. இந்தியர் மட்டும்தானா ? கறுப்பர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதாம் ? இன்று இரண்டு வீடியோக்கள் பார்த்தேன், மனம் கல்லாகிப்போனது. அவற்றை இங்கே இணைத்தால் யாழில் என்னைத் தடை செய்வார்கள். 😔
  13. 😀 நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை இங்கே எழுதுகிறீர்கள் என்பது என்க்கு மட்டுமல்ல, வாசிப்பவர்கள் எல்லோருக்குமே புரியும். ஆனால் அந்த சொந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள், ஏன் பக்கச் சார்பாக இருக்கிறது, தவறான தகவல்களை எங்கிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்பது யூகிப்பது கடினமேயல்ல. Mகவும் முக்கியமாக கிழக்கு உக்ரேனில் இடம்பெறும் அநீதி தொடர்பாக ஒன்றுமே பேசாதிருப்பதும், இனச் சிறுபான்மையினருக்கு நடைபெறும் அநீதி தொடர்பாகவும், நாசித் தத்துவத்தை வரிந்து கட்டிக்கொண்டுள்ள Azov Battalion தொடர்பாக நீங்கள் வாயே திறக்காது மெளனம் காப்பதும் ஏன் என்று புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்று அல்ல. நீங்கள் உளச்சுத்தியுடன்தான் இதனை பக்கச்சார்பின்றி எழுத முனைகிறீர்களென்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கு இரு பக்கங்களிலும் இருந்து உண்மையான தகவல்கள் அல்லது செய்திகளை தாங்கிவரும் ஊடகங்களைதெரியாது என்று பொருள்படும். முக்கியமாக, உங்கள் எழுத்தில் உள்ள தவறு/பிழையான தகவல்களை மறுக்க அல்லது பிழைதிருத்த முற்படுகிறேனே தவிர உங்களுக்கு எழுதுவதற்கு உள்ள உரிமையில் தலையிடவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலை இதற்குள் செருகினீர்கள் பாருங்கள், அங்கேதான் உங்கள் நோக்கம் கேள்விக்கு உள்ளாகிறது. முள்ளிவாய்க்காலை இந்த யுத்தத்துடன் இணைத்து எழுதியது த்வறென்று உணர்ந்தீர்களென்றால் தலைப்பை மாற்றிவிடுங்கள். புண்ணியமாகப் போகும். சனநாயகம், பன்முகத்தன்மை, கருத்துச் சுதந்திரம் போன்ற கருத்துருவாக்கங்கள் தேவைக்குத் த்குந்தாற்போல மாறுபடும் என்பது இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்தக் கேள்வியை இலகுவாகவே கடந்து செல்வர். 😌
  14. ரஞ்சித்தின் கட்டுரை, ரஸ்யாவையும் புட்டினையும் தூற்றுவதற்காக எழுதப்படுகின்றது என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி. ஆனால் tamilwin ஐயும் lankasri ஐயும் நம்பி கட்டுரை எழுதினால் இப்படுத்தான் இறுதியில் முடியும். ☹️
  15. வெள்ளைக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க ந்ன்றி 👍
  16. ""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்."" இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான்.
  17. ரஞ்சித் இதுவரை உக்ரேன் பொது மக்களின் துன்பங்களைக் க்ண்டு அதன் காரணமாகத்தான் ரஸ்யா MIது கோபம் கொள்கிறீர்கள் என்றிருந்தேன்.வ் ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்கள் நோக்கம் அது அல்ல என்று. ☹️
  18. “You are either with us or against us”நினைவிற்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் புடினுக்கும் இரஸ்யாவுக்கும் ஏன் எதிராக இருக்கிறீர்கள் ? நீங்கள் மேற்குலகுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் ? விளக்கமாகக் கூற முடியுமா ?
  19. இப்படியொரு பக்கம் இருப்பது பலருக்குத் தெரியவே வாய்ப்பில்லை. ஏனென்றால் நாங்கள் எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே செய்திகளையும் வாசிப்போம்.
  20. எல்லோரும் சேர்ந்துதான் எங்களை வேரோடு அறுத்தவர்கள். இதில் விசுவாசமாக இருக்க எந்தக் காரணமும் இல்லை.
  21. என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல் UNHCR ன் March 23ம் திகதி அறிக்கை. இதில் எனது விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. அழிவுகளை யாருமே நியாயப்படுத்த முடியாது. அதற்காக 150,000 ஆயிரம்பேர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலை மொத்தமாக ஆயிரத்திற்கும் குறைவான மககள் கொல்லப்பட்டுள்ள யுக்க்ரேனுடன் ஒப்பிடுவது எமது அழிவை/இனப்படுகொலையை சிறுமைப்படுத்தும் செயல் என்பது எனது நிலைப்பாடு.
  22. வணக்கம் கோசான் நீண்டகாலத்தின் பின்னர். 🙏
  23. உங்கள் கருத்தை தயவுசெய்து திரும்பவும் நிதானமாக வாசியுங்கள். அவர் பொதுமக்களின் இழப்பையிட்டு சற்று உணர்ச்சிவசப்படுகிறார். அவ்வளவே. சற்று நிதனமாக யோசிப்பாராகில் அவரது கருத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.