Everything posted by Kapithan
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
விட்டால் குடுமி, தட்டினால் மொட்டை. சிந்திக்க மறுக்கும் ஒற்றைப் பார்வை கொண்ட தீவிர தமிழ்த் தேசியவாதி அல்லது துரோகி. முதலில் இந்த அணுகுமுறையை மாத்துங்கோ, புண்ணியமாப்போம். நீங்கள் உந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். இல்லாவிட்டால் அதனை இங்கே இணைத்திருக்க மாட்டீர்கள். ஆக, பிறரை உசிப்பிவிட்டு (பழைய தமிழ் அரசியல்வாதிகள் போன்று) நீங்கள் மறைந்துகொள்வீர்கள். 😏
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
யாழ் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததை நினைவூட்டும் சரத் விஜேசேகர, இலங்கையின் சுதந்திர தினத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிற்பதை மறந்துவிட்டார். இதைவிட புலிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கலாம்.
-
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
நிச்சயமாக. முன்னிலைப்படுத்தல், தனிமைப்படுத்தல், பிரித்தல். அதுவரை நாங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். அதுவரை எமக்கு உதவப்போவது கல்வியும் பொருளாதார வளர்ச்சியுமே.
-
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
திராவிடக் கட்சிகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர்களது ஊழல் எல்லாவற்றையும் மறைத்து மேலெழுந்து அவர்களது சாதனைகளை மறைத்து நிற்கிறது. அதனால் சீர்திருத்தம் இல்லாத திராவிடம் கரைந்து போகும். உதயநிதி யின் கைகளில்/தோழ்களில் எல்லாமே தங்கியிருக்கிறது. TN ன் வளர்ச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனை NYT குறிப்பிடாவிட்டாலும் உண்மை அதுதான். ஆனால் US முதன்மை ஊடகங்கள் தொடர்ச்சியாக தென்னிந்தியாவை, குறிப்பாக TN ஐக் குறிப்பிடுவதன் நோக்கம் TN ஐ முன்னிலைப்படுத்தி அதை தமிழ்நாட்டினர் மனதில் பதிய வைப்பதுதான். இங்கே கேள்வி ஏன் அப்படி அடிக்கடி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதுதான். சோழியன் குடுமி சும்மா ஆடுமா 😀
-
தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?
தமிழ்நாட்டை US promotion செய்கிறது. அதாவது தென் இந்தியாவும் வட இந்தியாவும் வேறு வேறு என்பதை அடிக்கடி தமிழ்நாட்டு மக்களுக்கு மனதில் பதிய வைக்கிறார்கள். இது தொடரும்.
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
அந்த மனிதனின் பேச்சுக்கெல்லாம் தாங்கள் ரென்சனாகலாமா Mr. Kandiah ?
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
உங்கள் பிள்ளைகள் என்று குறிப்பிட்டது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக மனம் வருந்துகிறேன். 👍 மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொழுத்துதல், (அதனை ஆதரிப்பது, அதற்கு வக்காலத்து வாங்குவது ) முட்டாள்தனமானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது என் நம்பிக்கை.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
சிறிது நாட்களுக்கு முன்னர் Alfred Thuraiyappaaவின் பேரன் துரோகியாக்கப்பட்டார். தற்போது தரு. சிவாநந்தன் அவர்கள் துரோகியாக்கப்படுகிறார். இரண்டு நிகழ்வுகளிலும் வெற்றி சிங்களத்திற்கே,.. ☹️
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
பிற சாரதிகளின் தவறான வாகன ஓட்டத்திற்கெதிராக தங்கள் பெற்றோர் Honk செய்வதையே கனேடியத் தமிழ்ப் பிள்ளைகள் விரும்புவதில்லை. அது எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். உண்மை நிலைமை அப்படி இருக்கையில் பிள்ளைகளே மிகச் சாதாரண எதிர்ப்பை நாகரீகமான முறையில் வெளிக்காட்ட விரும்பும்போது நீங்கள் மட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனைவது முரண்நகை .
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
கனேடியத் தமிழ்க் குழந்தைகள் வன்முறையை ஆதரிப்பார்களா ? இதற்கான பதிலில் எல்லாமே அடங்கியிருக்கிறது. 1) அவர்கள் செய்வது CTC யின் கொள்கைக்கு முரணானது என்றால் அவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றலாம். 2) CTC யை எரித்தது அந்த தனி நபர்களை பயமுறுத்துவதற்காகவா அல்லது CTC யை மிரட்டவா ? 3) அந்தத் தனிநபர்களை மிரட்டுவதற்கென்றால் அது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதையாகவல்லோ இருக்கிறது ?
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
வன்முறையை ஆதரிக்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை ஆதரிக்கிறோம். ஆகாகா,... என்ன ஒடு புத்திசாலித்தனம் 😩
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
1) அது சிங்களத்தின் சாணக்கியம்,. அவர் போன்ற ஆழுமைகளைப் பயன்படுத்த முடியாமல் வைத்திருப்பது எங்கள் சாபக்கேடு. 2) எனது நளினம் எனது இனத்தைப் பார்த்து அல்ல. துரோகி முத்திரை குத்தும் ********* பார்த்து. 3) ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு 4) ✅ உங்கள் சிந்தனை பிறருக்கும் பரவ வாழ்த்துக்கள். 🙏 5) உங்கள் -1 க்கான காரணம் நியாயமானது. . ஆனாலும், நிலத்தில் நன்மை நடைபெறுவதற்கு குறுக்கே நிற்கும் எல்லோரையும் மிகக் கடுமையாக எதிர்ப்பதென்று முடிவெடுத்துள்ளேன்.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
1) எனது கருத்தைக் கூறுவதும் இன்னொருவருக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் விடையளிப்பதும் ஒன்றல்ல என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அது தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிக்கூடம் செல்வது உசிதமான யோசனையாக எனக்குத் தோன்றுகிறது.. 2) இதுவரை அதைத்தான் செய்தீர்கள். இப்போது இல்லையென்றால் எப்படி?
-
இலங்கையுடனான கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளது – சுதந்திர தினத்துக்கான செய்தியில் அன்டனி பிளிங்கென்
திருக்கோணமலை யாருக்கு? இந்தியாவிற்கா அல்லது அமெரிக்காவிற்கா?
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
ஈரானையும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் வையும் இழுத்து சண்டையைப் பெரிதாக்கி அவர்களை அழித்து அடுத்த 50 வருடங்களுக்கு அவர்களை பின்னோக்கி வைத்திருப்பதுதான் இவர்களின் உண்மையான நோக்கம். ஆனால் அது தற்போதைக்குச் சாத்தியம் இல்லை.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
நாமோ அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி உமிழ்கிறோம்.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
🤣 விசுகருக்காக தாங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள்? 🤣 அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த விஞ்ஞானிக்கு என்ன பட்டம் கொடுப்பதாக யோசனை?
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
1) எது சாபக்கேடு? 2) நடைமுறையில் எங்கள் இனத்தின் செயற்பாட்டின் பிரதிபலிப்பு - எனது சிரிப்பு 3) துரையப்பாவின் பேரனுக்கும் இதைக் கூறுவீர்களா? 4) இந்த சமன்பாட்டை எல்லா இடத்திலும் பிரயோகிப்பீர்களென்றால் அது நன்மை பயக்கும்.
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்"" அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣 சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக பாவிக்கிறது.
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
பாவம் திருமா. அவர் தூக்கிப்பிடித்த அரசியல் பொய்த்துப் போவது அவருக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை அப்பட்டமாக தனது சாதி மக்களிடம் கூற முடியாது தவிக்கிறார். அதனால் பழியை எங்காவது போட்டுத்தானே ஆக வேண்டும். அதிமுக, திமுக வரிசையில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமிழந்து போவது கண்கூடாகத் தெரிகிறது.
-
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘கரஞ்ச்’ கொழும்பை வந்தடைந்தது
முன்னர் PLOTE ஐப் பாவித்தது போன்று இந்தியா புலிகளின் பெயரைப் பாவித்து மீண்டும் ஒரு ஊடுருவலைச் செய்யலாம் என்று எனது அபிப்ராயத்தைச் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
-
ஏமாறாதீர்கள் நடந்தது என்ன? Canadian Tamil Channel
சம்பவங்கள் உண்மையாக இருக்கக்கூடும். ஆனாலும் இதில் பேட்டி கொடுக்கும் ஆட்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடாத்துகின்றனர் என நம்புகிறேன்.
-
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘கரஞ்ச்’ கொழும்பை வந்தடைந்தது
India to Pull Out Troops From Maldives by May 10, Male Says By Sudhi Ranjan Sen February 3, 2024 at 3:33 AM EST Maldives said India will withdraw its troops from the island nation by May 10, a move that makes good President Mohamed Muizzu’s election promise as he draws closer to China. எங்கோ இடிக்கிறதே,.... https://www.bloomberg.com/news/articles/2024-02-03/india-to-pull-out-troops-from-maldives-by-may-10-male-says PLOTE ஆயுதபாணிகளை முன்னர் மாலைதீவில் இறக்கியதுபோல, இனியொரு குழுவை விடுதலைப் புலிகளின் பெயரில் மாலைதீவிற்கு ஆயிததாரிகளை அனுப்புவதற்கு இந்தியா இப்போதே திட்டங்களை வகுத்திருக்கும். 🤣 @விசுகுசு ஏன் -1 ? y,.Y,...Y,....🤨
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
“”1) இதில் உள்ள ஒரு சிலர் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி பேரவையின் இலக்குகளை விற்பனை செய்ய முடியாது 2) அப்படி நடந்தால் பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா?? “” 1) எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு. 2) வன்முறையை நியாயப்படுத்துகிறீர்கள். (வன்முறையை நியாயப்படுத்துவதன் அடுத்த கட்ட வளர்ச்சி துரோகிப்பட்டம் கட்டி மண்ணடையில் போடுவதில் முடியும் என்பது எங்கள் கடந்த கால அனுபவம்)
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அவற்றை ஆதரிக்க தற்போதும் பலர் இருக்கின்றனர் என்பதுதான் கவலையான விடயம்.