Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?
  2. துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
  3. 2010 பாராளுமன்ற தேர்தலில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அதற்கு முந்தைய தேர்தலில் ஒன்று கிடைத்தது. மற்றைய தேர்தல்கள் பற்றிய விபரங்களை இன்னும் பார்க்கவில்லை.
  4. விக்கி பதிவில் உள்ளதை சொன்னேன். மற்றும்படி எனக்கு உண்மை/பொய் தெரியாது. பனை வள அபிவிருத்தி சபையில் பொறுப்பான பதவியை நித்தியானந்தா வகித்துள்ளார். டக்லசின் பெயரின் ஒரு பகுதியும் நித்தியானந்தா என உள்ளது. நித்தியானந்தா என்பது குடும்ப பெயரோ தெரியாது. கொழும்பு இந்துவில் கற்கும் காலத்தில் நித்தியானந்தா இல்லத்திலேயே டக்லஸ் வாழ்ந்ததாக விக்கி பதிவில் உள்ளது. இறுதி போருக்கு சில வருடங்கள் முன் யாழ் மாவட்டத்தில் பெருமளவு விடுதலை புலிகள் அமைப்பு ஆதரவாளர்கள், அனுதாபிகள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதன் பின்னால் இராணுவ புலனாய்வு அமைப்பும் ஈ பி டி பி யும் உள்ளதாக அப்போது கூறப்பட்டது. தமக்கு போட்டியாக தேர்தலில் நிற்கக்கூடியவர்களை ஈ பி டி பி போட்டு தள்ளியதோ என எண்ணத்தோன்றுகின்றது. இது பின்னாளில் ஈ பி டி பி அமைப்பு தேர்தலில் அதிக வெற்றியை அடைய வழி வகுத்ததோ தெரியவில்லை.
  5. யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார் என விக்கியில் உள்ளது. 1977ம் ஆண்டு இவரது நெருங்கிய உறவினர் ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் தொழிற்சங்கம் ஒன்றில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவரின் உதவியாளராக டக்லசார் செயற்பட்டார் எனவும் தகவல் உள்ளது. இத்தகைய அனுபவங்கள் டக்லஸ் அந்த காலத்திலேயே கொழும்பை பிரித்து மேய்வதற்கு உதவ போதுமானது. நடப்பு அரசாங்கம் டக்லசை எவ்வளவு தூரம் முடக்கும் என கூறுவது கடினமானது.
  6. டக்கிலசாரின் வரலாற்றை விக்கி கலைக்களஞ்சியத்தில் வாசித்தேன். தலை சுற்றுதய்யா! தாயார் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியையாம். இவருக்கு ஆறு வயதிலேயே மறைந்துவிட்டார். டக்லசாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க இதுவே ஆரம்பம் போல் உள்ளது.
  7. போட்டியில் நானும் கலந்துகொள்கின்றேன் ஈழப்பிரியன். இவ்வளவு கேட்டாப்பிறகும் கலந்துகொள்ளாவிட்டால் இவ்வளவு காலமும் நான் எழுதிய சோதனைகளுக்கு மரியாதை இல்லாமல் போயிடும். 😁 எத்தனை சோதனைகள் படிக்காமல் போய் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகள் விளங்காமல் பதில் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகளை வாசிக்காமலே பதில் எழுதினோம். இதை செய்யமாட்டேனா என்ன!!
  8. சிறியர் இணைத்த இந்த பதிவு இலங்கை வந்த இந்திய கொலைப்படைகளின் அநியாயங்களை விரிவாக கூறுகின்றது. இதை எழுதியவர் அதிர்ட்டவசமாக தப்பிவிட்டார். இவரைப்போல் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டோரே அதிகம். அவர்களில் பாடசாலை மாணவர்களும் அடக்கம்.
  9. எனக்கு வினாக்களை வாசித்து கிரகிக்கவே ஒன்று இரண்டு மாதங்கள் தேவை போல் உள்ளது. சரி பார்ப்போம். அல்வாயர் மன்னிக்கவேண்டும். நான் முன்பு பெயர்களை குறிப்பிட்டபோது @alvayan பெயர் தவறிவிட்டது. உடனடியாக நினைவில் வந்தோர் அத்துடன் அண்மைக்காலத்தில் பதிவுகள் இட்டவர்களை; வாழ்த்துக்களில் பெயர்களை குறிப்பிட்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் விடுமுறைக்காலமும் ஆங்கில புதுவருடம் 2026ம் சிறப்பாக அமையட்டும்!!
  10. நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி! இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.
  11. மழை வெள்ளத்தில் சிலிப்பர்கட்டைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன, ரயில்வே பாலங்கள் உடைந்துவிட்டன என சொல்லப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டனவா? @சுவைப்பிரியன் எதற்கும் லைப் ஜெக்கெற், பெரு நடைக்கு தேவையான பூட்ஸ், உலர் உணவு, தண்ணீர், படுக்கும் பை, ரோச் லைட் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறவும்.
  12. எங்களுக்கு பார்க்க அவருக்கு ஏதோ மண்டை பிரச்சனை போல உள்ளது. ஆனால், அவர் தெரிந்துகொண்டே பல விடயங்களை செய்கின்றார் என நண்பர் ஒருவர் கூறினார். முக்கியமாக சனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கருத்துக்களை இடக்கு முடக்காக சொல்கின்றாராம். இவர் யூரியூப்பில் காணொளி காண்பித்தால் அதை விரும்புவதற்கும், பாராட்டுவதற்கும் பலர் உள்ளார்கள். அர்ச்சுனாவை சுற்றியுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அர்ச்சுனா அளவுக்கு பொது அறிவு, சோசல் மீடியாவில் புகுந்து விளையாடக்கூடிய அறிவு, பரீட்சயம் இல்லாமையால் மற்றவர்களை முக்கியமாக இதர தமிழ் அரசியல்வாதிகளை அர்ச்சுனாவால் நல்லாய் வறுத்து எடுக்க முடிகின்றது. நேற்று ஒரு நண்பனுடன் நாட்டு விடயங்களை பற்றி கதைத்தபோது அர்ச்சுனா பற்றி குறிப்பிட்டு அவருடன் அழைப்பு எடுத்து கதைக்கலாமே என்று பகிடியாக சொன்னேன். ஐயையோ இவனுடன் கதைக்கபோனால் அவன் எனது போன் நம்பரை எடுத்து எல்லாரும் பார்க்கும்படி யூரியூப்பில் போட்டு விடுவான் என நண்பன் சொன்னான்.
  13. பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது. புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம். ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து; அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு; திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம். இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.
  14. கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம். அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.
  15. 2009 போர் முற்றுபெற்ற பின் நல்லிணக்கம், சமாதானம் என்று சொன்னாங்கள். அடாத்தாக பிடித்து எடுத்த சனங்களின் காணிகளில் புத்தர் விகாரை கட்டியெழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் உந்த நல்லிணக்கம் என்று இப்பத்தான் விளங்குது.
  16. நான் இவரது ரசிகன். எனது மனைவி மூலம் இவர் பாடல்கள் பற்றி அறிந்தேன். இவரை மூன்று சொச்சம் வருடங்கள் முன்பே பாடல்கள் மூலம் பார்த்து அறிந்துள்ளேன். இவருக்கு இலங்கையில் பெண் ரசிகைகள் அதிகம். எனது மனைவியும் இவரது ஒரு ரசிகைதான். இவர் இந்திய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு முன்பு போலவே இலங்கை நின்று படைப்புக்கள் வழங்க வேண்டும். இந்திய அடிமைத்தனம் எங்கு கொண்டுபோய் மாட்டுமோ தெரியாது.
  17. இந்த திரி பத்து பதினைந்து பக்கங்கள் உருளும் என்று பார்த்தால் ஏமாற்றமாய் கிடக்கிது.
  18. இலங்கையை எடுத்துக்கொண்டால் அது பெளத்தர்களின் நாடாக ஆட்சியாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. மதம், இனவாரியாக இலங்கையை அடையாளப்படுத்தாதவிடத்து இலங்கையில் உள்நாட்டுப்போர், பிரிவினைவாதம் இவற்றுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுமா?
  19. விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டாலும் இது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானம் என ஆங்கில எழுத்து N குறிப்பிடுகின்றது. விமானத்தை ஓட்டியவரும் அமெரிக்காவில் விமான ஓட்டி அனுமதி பெற்றவராக விளங்க வேண்டும். நாங்கள் பலாலி விமானத்தளம் என கூறுகின்றோம். ஆனால், பல சர்வதேச விமானத்துறை தகவல் தளங்களில் காங்கேசன்துறை/யாழ்ப்பாணம் விமான தளம் VCCJ என குறிப்பிடப்படுகின்றது.
  20. விசுகர் பழைய தலைமுறைதான் அப்படி இனம் காண்கின்றது. வவுனியாவில் நல்ல வசதியாக உள்ள 50 வயசு தாண்டியவர்கள் வாழும் பகுதியை வைத்து ஆட்களை முத்திரை குத்துவார்கள். தொழில் நிமித்தம் வன்னியில் பணியாற்றிய (அரசு உத்தியோகத்தர்) யாழ்ப்பாணத்தாரும் ஆட்களை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனம் காண்பார்கள். ஆனால், அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை (வன்னி) பொறுத்தவரை பெரும்பாலானோர் குடியேறியவர்களே. இங்கு போர்ச்சூழலுடன் வன்னிக்கு சென்று நிரந்தரவதிவிடமாக்கியோர் பலர். 1970 வந்து குடியேறிய மலையகத்து மக்களின் ஒரு பகுதியை பார்த்தால் அவர்களின் நாலாம் தலைமுறை பாடசாலைக்கு செல்கின்றது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை திருமணம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறையிடம் தமது அடி மலையகம் எனும் இனங்காணல் இல்லை. பலர் மலையக பக்கம் சென்றதே இல்லை. சிறப்பாக வாழ்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி கூறுவதற்கு இல்லை என்றாலும் பொதுவாக வன்னியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உள்ளது. சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கும் சென்றுள்ளார்கள். இந்த வரலாறு - டொட் எல்லாம் எங்கள் காலத்துடன் மருகிவிடும்.
  21. வவுனியாவிற்கு 1970ம் ஆண்டுகளில் குடிபெயர்ந்து காட்டு பகுதியை வளப்படுத்தி வயல், தோட்டம் செய்தார்கள் மலையகத்து மக்கள் பகுதியினர். இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.
  22. உங்கள் கருத்தை பார்த்தபின் சற்று மயக்கம் ஏற்படுகின்றது. ஆனால், இணையத்தில் தேடுதல் செய்தபோது பிரஜைகள் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் கொலை செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் உள்ளன. இங்கு ரஞ்சித் கூறும் சம்பவம் பற்றிய தகவலும் உள்ளது. அதில் ஒன்று அவர் ஈ பி ஆர் எல் எவ் இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் கடத்திய ஒரு தமிழ் பெண், மற்றும் ஒரு முஸ்லீம் பெண் விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழு கவனத்திற்கு அவர் கொண்டு சென்றதே கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என உள்ளது. தவிர இன்னோர் காரணத்திற்காக அதே பிரதேசத்து பிரஜைகள் குழு துணை தலைவரும் கொலை செய்யப்பட்டார் எனவும் தகவல் உள்ளது. மேலதிகமாக பின்னர் பல வருடங்களின் பின் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும் இதே தேவாலயத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. இந்திய அமைதிப்படை பிரஜைகள் குழுவை உருவாக்கினால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏன் இந்திய அமைதிப்படை பாதுகாப்பும் கொடுத்து ஆயுதங்களும் வழங்கிய ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட வேண்டும்? நிதர்சனம் தொலைக்காட்சி 1986, 1987 ஆண்டுகளில் பிரபலம். யாழ் நகர் பகுதி மக்களுக்கு அது பார்க்கக்கூடியதாக அமைந்தது. நிதர்சனம் தொலைக்காட்சியை நான் அப்போது தவறாமல் பார்ப்பேன். அதன் தகவல்களின் அடிப்படையிலேயே பிரஜைகள் குழுவின் தோற்றம் பற்றிய கருத்தை கூறினேன்.
  23. பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.