Everything posted by நியாயம்
-
வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
தேசிய மட்டத்தில் மாவட்டங்கள் இடையே மதுபானம் அருந்தும் போட்டி வைத்தால் வவுனியா மாவட்டம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாட்டத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனது உறவினர் ஒருவர் பேரதெனியா பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு. புதிய மாணவர்களுடன் பழைய மாணவர்கள் சந்திக்ககூடாது, கதைக்க கூடாது என விதிமுறை உள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது பழைய மாணவர்களால் எதுவித தொந்தரவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இவர்களுக்கு வகுப்பு தொடங்கிய சமயத்தில் பழைய மாணவர்கள் விடுமுறையில் நின்றார்களாம். நல்லதொரு திட்டமிடல் இது.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
பழைய நினைவுகளை மீண்டும் கிரகித்து பார்க்கின்றேன். இராணுவத்திற்கு விடுதலை புலிகள் அமைப்பு, நடமாட்டங்கள் பற்றிய உள்ளூர் தகவல்களை வழங்குகின்றார்கள், காட்டி கொடுக்கின்றார்கள் எனும் காரணத்தாலேயே முஸ்லீம் மக்கள் அப்போது வெளியேற்றப்பட்டார்கள் என ஊருக்குள் கதைத்தார்கள். முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது விடுதலை புலிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தின. நிர்வாக ஒழுங்குகளுடன் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடைவதை இந்த வெளியேற்றம் இலகுவாக்கியது என்றே கூறவேண்டும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்து நிலைகொண்ட நிலை காணப்பட்டால் போராட்டம் எந்த பாதையில், எப்படி பயணித்து இருக்கும் எனவும் சிந்தித்து பார்க்கலாம். 1990 இல் வெளியேற்றம் ஏற்பட்டது. 1995 இல் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவம் வசமாகியது. கிட்டத்தட்ட இந்த ஐந்து வருட கால இடைவெளியில் முஸ்லீம் மக்களை வெளியேற்றதன் மூலம் விடுதலை புலிகளுக்கு கிடைத்த பலன்கள் எவை, பாதகங்கள் எவை எனவும் நோக்கப்படலாம்.
-
வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
-
வெள்ளவத்தை ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்
கட்டணங்களின் விபரங்களையும் இணையுங்கள் பார்ப்போம். ஓரிரு தடவைகள் ரோயலுக்கு சென்றுள்ளேன். டெல்மன் இதை விட கொஞ்சம் பரவாயில்லையோ என்று சொல்ல தோன்றுகின்றது.
-
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.
-
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!
2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
இந்த செய்தியை சிறியர் எங்கோ இணைத்து வாசித்தேன். ஆனால், சிறியரின் வீரகேசரி இணைப்பில் செய்தி விபரம் காணப்படவில்லை. யாரோ இந்த சூரன் இது என்ன பயணமோ என நினைத்தேன். சூரத்தனமான வேலைதான் பார்த்து உள்ளார். சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!
கக்கா போகவேண்டிய அவசரம் அவருக்கு. விமானத்தை இறக்கவேண்டிய தேவை விமானிகளுக்கு. கழிப்பறையில் யாராவது உள்ள நிலையில் விமானத்தை தரை இறக்க முடியாது என ஒரு விதி உள்ளதாக அறிந்தேன்.
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
ஆரப்பா அந்த ஆட்கள். இவைகள் பெயர், ஊர் விபரங்களை வெளிவிட்டால்தானே மிகுதி வால்கள் யார், யார் என்பதை கண்டுபிடிக்கலாம். சட்டவிரோதமான முறைகளில் சொத்து சேர்ப்பவர்களின் சொத்தை முடக்குவது வரவேற்கத்தக்க விடயம்.
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்
களத்தில் பேராசிரியர் ரகுராமும் என்பதன் அர்த்தம் என்ன? பேராசிரியர் ரகுராம் அடுத்த துணைவேந்தராக வரவேண்டும் என குளோபல் தமிழ் நியூஸ் எதிர்பார்க்கின்றதா? அல்லது பேராசிரியர் ரகுராம்கூட போட்டியில் நிற்குமளவுக்கு துணைவேந்தர் பதவி மட்டமாகிவிட்டது என கூறுகின்றதா?
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவில் குறைபாடு காணப்படலாம். அவரது கவிதை குறைபாடு உள்ளதா? அவர் எழுதியதை ரசித்தோம் தானே.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
அல்வாயர் @alvayan எனது அனுபவங்களை, நான் கேட்டதை, பார்த்ததை கூறினேன் அவ்வளவுதான். 1995 யாழை விட்டு வெளியேறும் வரை பல்வேறு நேரடி அனுபவங்கள், அப்போது நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தது, அறிந்தது, கேட்டது நினைவில் உள்ளன. காரணங்கள் வேறுபாடு உள்ளவை, ஆனால் எல்லாருமே வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு தருணங்களில் பொதுமக்களிற்கு சிரமங்களை ஏற்படுத்தினார்கள். இவை மிரட்டல்கள் தொடக்கம் படுகொலை வரை சென்றன. ஒவ்வொருவருக்கும் தமது கோணத்தில் பார்க்கும்போது தாம் செய்தவை சரியாகவே தென்படும்.
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
அப்படி இல்லை துரை. இலங்கையில் அந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பு ஏற்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உள்ளே சென்று பார்க்க ஆவல். செரண்டிப் எனும் சஞ்சிகைதானே இலங்கை தேசிய பயணிகள் விமான நிறுவனத்தினுடையது. படிக்கும் காலத்தில் அதை உரை போடுவதற்கு பயன்படுத்துவோம். அப்போது எயார் லங்கா எனும் பெயர். முன்பும் சஞ்சிகையின் பெயர் செரண்டிப் என்றே நினைவு உள்ளது.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நாம் அகதிகள் என அறிந்தும் கடினமான சூழலில் எம்மிடம் இரண்டு பவுண்கள் வலியுறுத்தி பெறப்பட்டது. பெண் போராளிகள் மூன்று தடவைகள் வந்தார்கள். எமது உறவினர் ஒருவர் கொடுக்கவில்லை என்பதற்காக பதுங்குகுழிக்கு அனுப்பப்பட்டார். 2009 சம்பவங்கள், அதன் பின்னரான பல சம்பவங்கள் நடைபெறவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நம்பி இருப்பேன். 1990ல் முஸ்லீம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சமயம் நாம் யாழ் நகரில் இருக்கவில்லை. சற்று தள்ளிய கிராமத்தில் வசித்தோம். ஒவ்வொருவரும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தமக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்/பொருட்கள் காணப்பட்டால் முஸ்லீம் மக்களிடம் பறித்து எடுக்கப்பட்டது என்பதே நாம் அப்போது அறிந்த தகவல்.
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
துரை, அவ்வப்போது வேறு சில இடங்களில் இந்த இளைப்பாறும் இடங்களிற்கு சென்றுள்ளேன். சலட், கறுப்பு கோப்பி எடுப்பது, போன் சார்ஜ் செய்வது, இளைப்பாறுவது அவ்வளவு தான். மனதை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் இனிப்பு, உரைப்பு, கொழுப்பு எனவும் சென்றுவிடும். அங்கு வருவோர் உணவை விரயம் செய்வதை பார்க்க கோபம் ஏற்படும். நான் தட்டில் போடுவது அனைத்தும் வயிற்றுக்குள் செல்லும். எதையும் விரயம் செய்வதில்லை.
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
துரை @ஈழப்பிரியன் இளைப்பாறும் சொகுசு நிலையத்தில் கையை, காலை நீட்டி ஆறுதலாக சரியலாம். சொகுசு இருக்கை வசதி பொது இடத்தில் இல்லை. டுபாயில் கொஞ்சம் பரவாயில்லை. கீத்திரோவில் ஆஸ்பத்திரி இருக்கைகள் உள்ளன. கீத்திரோவில் காத்து நிற்கும்போது விமானத்தின் ஏறப்போகின்றோமா அல்லது வைத்தியரை பார்க்கப்போகின்றோமா என ஒரு பிரமை ஏற்படும். கீத்திரோ சொகுசு நிலையத்தில் காணப்பட்ட குளிக்கும் வசதியை கோவிட் பெருந்தொற்று காலத்துடன் நிறுத்திவிட்டார்கள். விமானத்திலும் உணவு கிடைக்கின்றது. ஏன் வயிற்றை இனிப்பு, கொழுப்பு பண்டங்களால் நிரப்ப வேண்டும்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. தலைவர், தலைமை இப்போது இல்லை. தலைவர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு வெளி ஆட்களால் காரண காரியங்களை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது. தமிழ் மக்களிடம் குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது இரண்டு பவுண்கள் கட்டாயமாக வாங்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் சொத்துக்கள், தங்கம் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பினால் சுவீகரிக்கப்பட்டது. அமைப்பின் உள்ளே ஆட்டையை போட்டவர்கள் உள்ளார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள். கண்டுபிடிக்கப்படாமல் ஆட்டையை போட்டவர்கள் யார் யாரோவோ?
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
பிளாஸ்ரிக் மட்டை பற்றிய உரையாடல் நினைவு உள்ளது. ஆனால், நீங்கள் விமான நிலையத்தின் பயணிகள் சொகுசு இளைப்பாறும் இடம் பற்றிய அனுபவத்தை கூறவில்லையே.
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
துரை, அதற்குள் சென்று வர அதிக செலவு ஆகுமே. சிறீ லங்கன் எயார்லைன்ஸ் வணிக வகுப்பு சீட்டு என்றால் உள்ளே போகலாம் என நினைக்கின்றேன். அது அல்லாதவர்கள் உள்ளே செல்லலாமா? பல விமான நிலையங்களில் கட்டணம் செலுத்தியும் உள்ளே செல்ல முடியாது. அதற்குரிய விமான நிறுவன பயணச்சீட்டு அல்லது பிரத்தியேக கிரடிட் மட்டை தேவைப்படும் என நினைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் உள்ளே சென்று பயன்படுத்திய அனுபவம் கிடைத்தால் கூறுங்கள் கேட்போம்.
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
நான்கு மணிநேரத்தில் உள்ளே சென்று பதிவுசெய்து பொதிகளை பட்டியில் எறிந்துவிட்டு படலை பகுதிக்கு போய்விடலாம். அங்குபோய் மிச்சம் என்ன செய்வது? உண்ணும் பகுதி, கடைகளுக்கு வர திரும்ப நடக்க வேண்டும். விமானத்தில் ஏறும்வரை எத்தனை நெஸ் ரீதான் குடிப்பது.
-
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
யாழ் கருத்துக்களத்தின் தீவிர சீமான் எதிர்ப்பாளர் அதி தீவிர விஜய் ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலதிக நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். 😁
-
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!
கட்டப்பட்ட வீட்டின் படங்கள் கிடைத்தால் போடுங்கள் பார்ப்போம். இது எப்படிப்பட்ட பொருட்கள் மூலம் கட்டப்பட்டது? முன்பு தமிழர் பகுதியில் இந்தியா கட்டி கொடுக்கும் வீடுகளை ஏற்கக்கூடாது என ஒரு பிரச்சனை ஓடியது, பலருக்கு ஞாபகம் வரலாம்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
என்ன துரை சொல்கின்றீர்கள்? சில நாட்டு ஆட்கள் வீசா எடுக்க தேவை இல்லை என ஒரு செய்தி பார்த்தேன். ஆனால், அவை பெரும்பாலும் ஆசியாவில் உள்ள இலங்கையை அண்மித்த நாடுகள். மற்றும்படி எம்மை போன்ற பெருன்பான்மை தூர தேசத்து வெளிநாட்டு மக்கள் வீசா எடுத்துத்தானே இலங்கைக்கு பயணிக்க வேண்டும். சிலவேளைகளில் வீசா எனும் பெயருக்கு ஈடாக வேறேதும் சொற்பதம் பாவிக்கப்படுகின்றதோ? அதாவது, சுருங்கக்கூறின் இலங்கைக்கு அதன் குடிவரவுத்துறைக்கு நாம் காசுக்கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணம் செய்ய முடியுமா?
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
நாங்கள் ஏற்கனவே வீசாவை இணையத்தளத்தில் விண்ணப்பித்து அதை ஓரிரு நாட்களில் பெற்றுக்கொண்டு தானே இலங்கையில் இறங்குகின்றோம். இது முன்னைய வீசாவை பெறுவதை விட, அதற்கு நிகரான இலகுவான குறுகிய காலத்தில் பெறக்கூடிய அனுமதியா? அவுஸ்திரேலியா பயணிக்கும்போது வீசாவை பெறுவதில் இந்த சொற்பிரயோகம் உள்ளது, இதை இணையத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற்ற பின்பே பயணிக்கின்றோம்.
-
யாழில் இடம்பெற்ற குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றி! 🙏