Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. நாலு பம்பாய் சியர்ஸ் கேர்ல்ஸ், இரண்டு சினிமா நட்சத்திரங்களை இறக்கினால் காணும் எங்கடையதுகள் ஊருடன் படையெடுத்து பனை உயரத்துக்கு ஏறி ஆதரவு கொடுக்குங்கள்.
  2. உங்களுக்கு எங்கள் திறமையில் பொறாமை. வேலை செய்யாமலே சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் மத்தியில் குறைய நேரம் வேலை செய்து அதிக சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் பரவாயில்லை தானே. வாங்கக்கூடிய அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு மட்டமான அளவு சம்பளத்தை கொடுப்பதில்தான் பெரும்பாலான நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.
  3. துப்பாக்கிகள், தோட்டாக்கள் எல்லாம் கரள் கட்டியுள்ளன. இயக்கம் முன்பு புதைத்து வைத்தவையோ?
  4. இலங்கை போலிசார் பிணை வழங்க மறுப்பது வழமையாக நடைபெறும் விடயம்தான். சாதாரண குடிமக்களுக்கும் இதுதான் இலங்கையில் வழமையான நடைமுறை. இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதற்காக இங்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கையில் சாதாரண பொதுமக்கள் முறைகேடாக தண்டிக்கப்படுவதை ஏற்கலாமா? சாதாரண பொதுமக்களுக்கும் இவ்விடயத்தில் விலக்கு அளிக்கலாமே!
  5. அவசியம் தெரிய வேண்டிய விடயம். உணவு துகள் மூச்சு குழாயில் சிக்கி திணறல் யாருக்கும் ஏற்படலாம். அவசியம் அனைவரும் அறியவேண்டிய முதலுதவி சிகிச்சை இவை. இணைப்பிற்கு நன்றி @ஏராளன்
  6. ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும்தானா பேயாட்டம் ஆடுது. ஏறமுன்னம் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம்தான். 😁
  7. நீங்கள் பங்காளியாகும் அளவுக்கு உங்கள் மண்டை இன்னும் கழுவுப்படவில்லை போல் உள்ளது. அழியப்போவது முல்லாக்கள்தானே என நினையுங்கள். வாழ்த்துக்கள் கூறுவீர்கள்.
  8. டிரம்ப் ஐயா மீதான எனது அபிமானத்திற்கும் தமிழர்களுக்கும் சம்மந்தம் இல்லை. சிங்கத்தை எனக்கு பிடித்துள்ளது. அவ்வளவுதான்!
  9. ஓரினச்சேர்க்கை வத்திக்கான் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகத்தானே தெரிகின்றது. இங்கு பேராயர் வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளாரா?
  10. படத்தில் பார்க்க பூட்டின் டிரம்ப்புடன் ஒப்பிடும்போது வயது போனவர் போல் தென்படுகின்றது. இன்னும் நான்கு ஐந்து வருடம் வண்டியை இழுப்பாரோ? பூட்டினுக்கு பிறகு யார்?
  11. இந்த கட்டுரையை வாசிக்கும்போது எனக்கு பளிச்சென ஒரு விடயம் விளங்குகின்றது. ஆளுமை மிக்க ஒரு தமிழரை எப்படி சிங்களத்து தலைவி தன்பற்றிய கதிர்காமர் அவர்களது முன்னைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாது தன்பக்கம் இழுத்துள்ளார். அதேசமயம் தமிழ் தலைமை இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளது. ஆளுமை மிக்க தமிழர்கள் சிங்கள தரப்புடன் இணைந்தது தமிழர்கட்கு மிகப்பெரியதொரு இழப்பு.
  12. ஜேர்மனி பார்-அதிபதி என வர வேண்டுமா? பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @குமாரசாமி 🎂🎈
  13. வெளிநாட்டில் உள்ள பலரும் (தமிழர்கள்) இலங்கையில் பாரிய முதலீடு செய்கின்றார்கள். வீடுகள் கட்டுகின்றார்கள். கோயில்கள் கட்டுகின்றார்கள். பலரின் எதிர்பார்ப்பும் பகுதி அளவிலாவது இலங்கையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதுதான். வாழ்ந்து வழியனுப்பி வைத்த நாடு, வந்து வாழவிரும்பும் நாடு இடர்களை எதிர்கொள்ளும்போது அனைவருக்கும் சஞ்சலம்தான்.
  14. என்ன கொடுமை ஐயா. செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன். இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை வாசிக்க அதிர்ச்சியாக உள்ளது. நாட்டில் மனிதாபிமானம் இல்லாது போகின்றது.
  15. இப்போதைய எக்ஸ் அப்போதைய டுவிட்டர் 2009 இலும் இயங்கியது. பிரியங்கா அம்மையார் அயல்நாட்டில் இதே விடயங்கள் நடைபெற்றபோது இந்திய அரசிற்கு என்ன கூறினார்?
  16. அடி, நுனி தெரியாமல் கருத்து கூறுவது கடினம். ஆனாலும் இந்த பெண் இவ்வளவு ஆபத்துடன் பயணிக்க அவர் காதலன் அனுமதி கொடுத்தாரா? அவர் ஏன் இலங்கை செல்லவில்லை? அவருக்கு இலங்கை செல்ல முடியாத நிலமை உள்ளதா? அவருக்கு உண்மையில் இந்தப்பெண்ணில் அன்பு உள்ளதா? அவர் அங்கு யாருடன் மேய்ந்துகொண்டு உள்ளாரோ யாருக்கு தெரியும்.
  17. இவ்வளவு தகவலே போதும் ஐயா. இதற்கு மேல் அவிழ்த்துவிட வேண்டாம். 😁
  18. உங்கள் உள்ளக்கோயிலில் நெட்டன்யாகு சுவாமிகள் வீற்றுள்ளார்.
  19. நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது. கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?
  20. இங்கு பகிரப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தவறு ஏதும் இழைத்துள்ளதாக தெரியவில்லை. தனது கடமையை செய்துள்ளார். ஆனால் செய்தியை வழங்கும் ஊடகம் தனிநபர் மீது சேறு பூசும் வேலையை செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், தனக்கு பிடித்தமான விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. இதுபோலவே விடுதலை புலிகள் அமைப்பு மீது அபிமானம் வைப்பதும், மதிப்பதும், அவமதிப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கே அரச பணியாளர் ஒருவர் வேலைக்கு கள்ளம் அடித்துவிட்டு/தனக்கு கொடுக்கப்பட்ட பணியை பொறுப்பாக செய்யாமல் தனக்கு வேண்டியவர்கள் மூலம் மேலதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது தவறான செயல் மட்டும் அல்ல, சட்டவிரோதமான செயலும் ஆகும். இலங்கை அரசின் அகராதியில் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரச நிறுவனத்தின் கடிதம் ஒன்றில் பயங்கரவாதி என குறிப்பிடப்படுவது ஒன்றும் சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. தவிர, இந்த கடிதத்தை மருத்துவ அதிகாரி வினோதன் எழுதியன் பின்னால் அவருக்கு முறைப்பாடு செய்தவர்கள் யார் என தெரியாது. இங்கு தனது வேலை விடயத்தில் தனது வாழ்க்கை துணையை வைத்து அச்சுறுத்தல் கொடுத்தது மிக தவறான செயல். இதே பெயரில் உள்ள ஒரு முன்னாள் போராளி புலிகள் அமைப்பின் உறுப்பினர் தன்னை புலனாய்வு பிரிவின் முன்னைய பொறுப்பாளராக தெரிவித்து பல காணொளிகளை சமூக ஊடகத்தில் பிரசுரித்து உள்ளார். சம்பவத்தில் தொடர்புபட்ட பணியாளர் இவரது வாழ்க்கை துணையோ தெரியவில்லை. இலங்கையில் பொதுவாகவே அரச பணியாளர்கள் வேலை விடயத்தில் சோம்பேறித்தனம், வேலை செய்வதற்கு பஞ்சி. வாழ்க்கை துணையை முன்னாள் பயங்கரவாதி என விளித்தது இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும், இவ்வளவு ரோசக்காரி என்றால் ஆரம்பத்திலேயே தனது வேலையை ஒழுங்காக ஏன் செய்யவில்லை?
  21. நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வது வாழ்க்கை முறை. தாலிக்கொடியை கோயிலுக்கும் அணியாவிட்டால் அதை ஏன் கழுத்தில் கட்டவேண்டும்? கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் மேலாடையை நீக்க வேண்டும் என கடவுள் பணித்ததாக தெரியவில்லை. ஆனால், அது ஆலயங்களில் விதிமுறையாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.