Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1363
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. இனரீதியாக மக்களிடம் பாகுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு வசதிகள், வாய்ப்புக்கள் பெருன்பான்மை இனத்திற்கு செல்லும்வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்ததே இலங்கையில் சிறுபான்மை இனத்தினர் தனிநாடு சிந்தனை நோக்கி செல்வதை வலுப்படுத்தியது. எனவே, இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பெருன்பான்மை மக்களின் நலன்களை மையப்படுத்தி சிறுபான்மை மக்களை நலிவுறசெய்யும் சட்டங்கள், நடைமுறைகள் படிப்படியாக இரத்து செய்யப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் கோட்பாடு வெற்றி பெறும். மனோகணேசனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக தென்படுகின்றது. பேச்சுவார்த்தையில் பங்காளிகளான தரப்புக்கள் விட்டுக்கொடுப்புக்கு தயார் இல்லை என்றால் பேச்சுவார்த்தை பயன் தராது.
  2. இங்கு என்ன சொல்லப்படுகின்றது என்றால் வெளிநாட்டில் இருந்து நாம் கொண்டு சென்றுபோய் அங்கே அன்பளிப்பாக கொடுக்கும் அன்லொக் செய்யப்பட்ட கைத்தொலைபேசிகள், மற்றும் பொதிகளில் அனுப்புகின்ற கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது என்றால் அவற்றை முதலில் இலங்கையில் பதிவு செய்யவேண்டும்? இந்த செய்தி விபரம் அறிந்தவர்கள் செய்தியின் பொழிப்புரையை வழங்குங்கள் பார்க்கலாம். கைத்தொலைபேசி விலைகள் 2024 தொடக்கம் அதிகரிக்கவுள்ளதாக முன்னம் செய்தி பார்த்த ஞாபகம். அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு இலங்கையில் பதிவுசெய்யப்படாத கைத்தொலைபேசிகளை தடை செய்ய முஸ்தீபு நடக்கின்றதோ? செய்தி புரியவில்லை.
  3. வரலாற்றை கொஞ்சம் முன்னம் பார்த்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த விடயத்தில் முன்னம் தவறு செய்தது என்று இப்போதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. என்னவோ கஜேந்திரகுமார்… ??
  4. கீல்மிசா 28ம் திகதி பலாலி விமானநிலையம் வருவதாகவும், பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் ஒரு யூரியூப் காணொளி பார்த்தேன். பலரது மனதை கில்மிசா வெகுவாக கவர்ந்துள்ளார்.
  5. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றது. இன்னும் இதே அளவு காலம் சென்றால் 30 வருடங்கள். இனி வரும் தலைமுறை பிரச்சனைகளை எப்படி கையாளுமோ.
  6. இலங்கையில் பல்வேறு தரப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர் தரப்பில் உள்ளவர்களையும் சந்திக்கலாம். இனி இதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.
  7. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் @ஏராளன் 🎂🎈
  8. இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?
  9. நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல? பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?
  10. நல்லதொரு வினா. இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது? முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா? இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும்.
  11. என்னப்பு உலக நடப்பு விளக்கம் போதாது போல. டிரம்ப் ஐயா அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. தேவையானவர்கள் எதற்கும் இப்பவே பிரசர் குளுசையை போட தொடங்குங்கள்.
  12. எவ்பிஐ, மொசாட் தொடங்கி எல்லா நாட்டு உளவுப்பிரிவும் எல்லாத்துக்கையும் நிற்குது போல. நூறு டம்மிகளில் நான்கைந்தை கண்டுபிடிப்பது கடினம்தான். எனக்கு இந்த தருணத்தில் வடிவேலுவின் பின்லாடன் பகிடி நினைவுக்கு வருகின்றது.
  13. இதற்கு காணொளி ஆதாரம் உள்ளதா? கரி ஆனந்தசங்கரி கதைப்பதை ஏன் இணைக்கமுடியவில்லை?
  14. இலங்கையில் தமிழ் மகப்பேற்று நிபுணர்கள் உள்ளார்கள் ஐயா. சிலரிடம் சென்றால் பிள்ளையும் வேண்டாம் குட்டியும் வேண்டாம் ஆளை விடுங்கோ என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடத்தான் வேண்டும். இதுகள் எல்லாம் எப்படி படித்து பட்டம் பெற்று மருத்துவராய் வந்து இருக்குங்கள் என்று பிரமிப்பு தோன்றும்.
  15. இந்த கெளரவிப்பு, இராணுவ மரியாதை படங்களை யாழ் முகப்பில் நிரந்தரமாக தெரியும்வண்ணம் செய்ய வேண்டும். இந்தியா தமிழீழம் பெற்று தரும், இந்தியா தமிழர்களிக்கு தீர்வு பெற்று கொடுக்கும் என மக்களை ஏய்க்கும் இந்திய அபிமானிகள், மற்றும் இந்தியாவுக்கு அன்னக்காவடி எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கண்களில் இவை எப்போதும் தென்படவேண்டும்.
  16. கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்டவர் உயிரிழப்பு என எழுதமுடியாதோ. ஆழ்ந்த அனுதாபங்கள்!
  17. இமயமலை பிரகடனம் எனும் பெயரை கேட்ட அதிர்ச்சி இன்னும் நீங்க முன்னர்.. பெயர் வைத்தே நம்மை அசத்துகின்றார்கள்.
  18. கார்த்திக் அவர்களின் கருத்துக்களை கூறுகின்ற அவர் பேட்டியுள்ள காணொளிகளில் அவரை மட்டம் தட்டியும், அவமதித்தும் பல பின்னூட்டங்கள் வைக்கப்படுகின்றன. துவாராகா என தன்னை அடையாளப்படுத்திய பெண்மணி பற்றிய தற்போதைய தகவல் என்ன? அவர் மீது ஆள்மாறாட்ட குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் செய்திகள்/கருத்துக்கள் முன்பு வந்தன.
  19. இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களை அடக்கி ஒடுக்குவதில் குறியாக நிற்கும் பெருன்பான்மை அதிகாரவர்க்கம் ஒட்டுமொத்தமாக முழு இலங்கையையுமே அந்நியர்களிடம் படிப்படியாக இழந்து வருகின்றது.
  20. இந்த அட்டையை உருவாக்குவதில் இந்தியாவின் பங்கு எத்தகையது? வளங்களை வழங்குவது மட்டுமா அல்லது அடையாள அட்டை தகவல்களையும் கையகப்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதா? இலங்கை மக்களின் தனிப்பட்ட விபரங்களை உதவி செய்கின்றோம் எனும் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு இலகுவாக கிடைக்க வழிவிடக்கூடாது.
  21. திருடர் கூட்டம் நாட்டை சூரையாடி விழுங்கிவிட்டு இப்போது எப்படி திருட்டை தொடரலாம் என தினுசு தினுசாய் யோசித்து செயற்படுகின்றது. திருட்டு கூட்டம் அதிகாரத்தில் உள்ளவரை எப்படியான முயற்சியும் முழு பலனை தராது. நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்டவர்கள் இனியும் எப்படியெல்லாம் சுரண்டுவார்களோ.
  22. இது என்ன புதுசாய்? இவ்வளவு காலமும் எப்படியான நடைமுறை நிலவியது? பஸ்நாயக்க நிலமே என்றால் கோயில் முதலாளியோ?
  23. எனது பிள்ளைகள் உழைத்து தமது சொந்த காசை செலவளித்து இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்க்க செல்ல தடை இல்லை. அடுத்தவன் காசில் செல்வதற்கும் அனுமதி இல்லை. உங்கள் வீட்டு நிலவரம் எப்படி? பிள்ளைகளுக்கு மேற்பார்வை எப்போதும் உள்ளது. இந்த கேளிக்கை வேண்டும் வேண்டும் என குரல் கொடுப்பவர்கள் நாளை ஆமிக்காரன் எங்கள் பிள்ளையை கட்டிப்பிடிச்சு போட்டான், போலிஸ்காரன் உரசிப்போட்டான், முஸ்லீம்காரன் பிள்ளையை கடத்திக்கொண்டு போயிட்டான், சிங்களவன் பிள்ளையை என்னமோ செய்துபோட்டான் என்றும் அலரத்தான் போகின்றார்கள். இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாவிதமான ஆட்களும் வருவார்கள். தவிர, சடாமுடிக்காரன், தோடுகள், பச்சைகுத்துக்களை பார்த்து பிறகு பயப்படக்கூடாது.
  24. மாநகர சபைகளுக்கு இந்த விடயத்தில் எவ்வளவு அதிகாரங்கள் உள்ளன என தெரியவில்லை. இலங்கையில் வேறு பாகங்களில் இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனுமளவில் இதற்கு தடை கொண்டுவர முடியாது, அப்படியான தடையை இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவானவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைய முடியும் என நினைக்கின்றேன். அதேசமயம் கோயில்கள், பாடசாலைகள் நிறைந்துள்ள யாழ் நகர சூழலில், அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை அமைவிடம் ஆகியனவற்றை நோக்கும்போது சுற்றுவட்டாரத்துக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் இப்படியான நிகழ்ச்சி எங்கே வைக்கப்பட முடியும் என கேள்வி எழுகின்றது. மேலும் இரவு பத்துக்கு படுத்து காலை நான்குக்கு எழும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வெளிநாடு போல் இரவு பன்னிரண்டு, சாமம் இரண்டு மணிக்கு எல்லாம் குத்து ஒலியுடன் குத்தாட்டம் போடுவது எல்லாம் சீரழிவில் கொண்டுபோய் முடியும். நிச்சயம் நேரக்கட்டுப்பாடு தேவை. அத்துடன் மேற்பார்வை அவசியம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.