Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. இவர் யாழ் மருத்துவபீடத்தில் கற்றவரா? உயர்தரம் எந்த ஆண்டு?
  2. றியோவை சொல்கின்றீர்கள் போல் உள்ளது. அங்கு றோல்ஸ் விற்கப்படுகின்றது. அசைவம் உள்ளதா தெரியவில்லை.
  3. இவர் சாமி கும்பிடக்கூடிய ஆள் போல் தெரியவில்லையே சிறியர். நல்லூர் சுற்றாடல் பகுதியில் முளைத்துள்ள அசைவ உணவகத்திற்கு சென்றார் போலும்.
  4. எனக்கு அண்மையில் யூரியூப் வழங்கும் பரிந்துரை காணொளிகளில் கரி ஆனந்தசங்கரி பற்றிய ஒரு காணொளி காண்பித்தது. குளோபல் மெயில் எனும் கனேடிய ஊடகம் கரி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் செய்திகளை வெளிவிட்டு வருகின்றது. கரி அவர்களின் தொலைபேசி இலக்கம் விடுதலை புலிகள் சம்மந்தப்பட்ட கனேடிய அமைப்பு ஒன்றின் ஆவணத்தில் உள்ளதாகவும், கரி அவர்கள் கனேடிய மக்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் எனும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு கரி அவர்கள் எப்படி தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து தக்கவைப்பார் என்பது தெரியவில்லை.
  5. @பெருமாள் அவர்களை முன்புபோல் அடிக்கடி இங்கு காண்பதில்லை. தமிழ்வின் தளத்தில் முழுநேர செய்தியாளராகி விட்டீர்களோ?
  6. ஏன் இரண்டு கிழமைகளுக்கு மட்டும்? பரீட்சார்த்த முயற்சியோ? நிரந்தரமாக அணிய வைத்தால் கையூட்டல் தவிர வேறு பல குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடிக்கலாம். விமான நிலையத்தில் குடிவரவு துறையில் பணிபுரிபவர்கள் நெஞ்சிலும் கமெரா மாட்டுவிக்க வேண்டும்.
  7. கவலை வேண்டாம். கொலையாளி விரைவில் உயிருடனோ அல்லது உயிர் இல்லாமலோ கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்.
  8. அவர் தனது நகர்வுகளை நன்றாகவே செய்கின்றார் போல் உள்ளது.
  9. அர்ச்சனா அடுத்த தடவையும் பாராளுமன்றம் செல்வார் போலவே தோன்றுகின்றது.
  10. நீங்கள் ஒரு நாளில் எத்தனை தடவைகள் போகின்றீர்கள் என்பது முக்கியம் அல்ல. அங்கே உட்கார்ந்ததும் முக்கி தக்காமல் அதுவாய் முழுமையாக இலகுவாக வருகின்றதா என்பதுதான் எங்களுக்கு தெரிய வேண்டும். 😁 மேலைத்தேய கழிவறையை ஆசிய முறைப்படி பின்பற்றலாமா ஐயா? 😁
  11. தொடர்ச்சியாக குறளிசை காணொளிகள் இணைக்கப்படுகின்றன. சித்திரா அம்மா, சுசீலா அம்மா. நித்யசிறி, சுதா ரகுநாதன் என நாம் அறிந்த ஏராளம் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இளையராஜாவின் புதல்வி பவதாரிணி அவர்களின் குரலிலும் ஒரு குறள் இன்று பார்த்தேன். பவதாரிணி அவர்கள் மறைந்துவிட்டாலும் அதற்கு முன்னரே அவர் குரலில் குறள் ஒன்று பதிவு செய்யப்பட்டது சிறப்பு.
  12. இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது போல் தெரிகின்றதே.
  13. டிரம்ப் ஐயா மீதுள்ள வெறுப்பில் தென் அமெரிக்கா வரை சென்றுவிட்டீர்கள். அதிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ்ர்களின் பூர்வீகத்தை கிண்டி நையாண்டி செய்வதில் உங்களுக்கு அலாதி பிரியம் போல் உள்ளது. நான் படித்து பட்டம் பெற்று குடியேறினேன். நீ அகதியாய் வந்து குடியேறினாய். உன்னைவிட நான் கொஞ்சம் உசத்தி. உன்னை விட நான் சொல்லும் வாக்குத்தான் செல்லுபடியாகும் எனும் மனப்பாங்கு உங்களுக்கு. இப்படி எங்கள் சமூகத்தில் பலர் உள்ளார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் டிமிக்கிகளை வெளிவிட மாட்டார்கள்.
  14. குறள் எண்: 891 குறள் எண்: 236 குறள் எண்: 1271 மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos
  15. இந்த படம் அதிகளவில் பேசப்படுவது போல் உள்ளதே. பாலா சிவ கார்த்திகேயன் போல் வளர்வாரா?
  16. அந்த ஆன்மிகவாதியின் பெயர் என்ன? ஆறுதிருமுருகனா?
  17. அஜீவன் அவர்கட்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது பிரிவால் துயரடைந்துள்ள உறவினர்கள், நண்பர்கள், யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி!
  18. டிரம்ப் ஐயா மீது அபிமானம் உள்ளது உண்மை. ஆனால், அவரது கொள்கைகள், செயற்திட்டங்கள் அனைத்துடனும் உடன்பாடு உள்ளது என்பதற்கில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றல்ல. அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் ஒப்பிட முடியாது.
  19. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், கடினமானதுமான ஒன்று. இந்த செய்தியை பார்த்துவிட்டு அங்கு அகதி முகாமில் வாழும் ஒருவருடன் உரையாடினேன். அவர்கள் 1990 காலங்களில் இலங்கை இராணுவம் புலிகள் இடையிலான போர் மீண்டும் தொடங்கியதும் படகில் சென்றவர்கள். தம்முடன் அடிக்கடி வழக்கறிஞர்கள் வந்து உரையாடுவதாகவும், தமக்கு வதிவுடமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் வழக்கு சம்மந்தமான தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும் என கூறினார். எனக்கு விளங்கிய அளவில் வழக்கில் கிடைக்கக்கூடிய சாதகமான முடிவு அவர் தமக்கு இந்திய குடியுரிமைக்கு நிகரான வதிவுடமை கிடைக்கும் என கூறுகின்றார். அதேசமயம், இந்திய குடியுரிமை இலகுவாக பெறப்படக்கூடிய ஒன்று அல்ல என இவ்விடயம் பற்றி சிலருடன் உரையாடியபோது கூறினார்கள். இந்தியாவில் பிறந்த அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது. காரணம் இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
  20. இது உண்மை தகவல்தானா என தேடல் செய்து பார்த்தேன். இந்த செய்தி தமிழ் தளங்களில் பரவலாக வந்துள்ளது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இது. இதுபற்றிய விரிவான விளக்கங்களை விசயம் தெரிந்தவர்கள் விபரியுங்கள் பார்க்கலாம்.
  21. இந்த தாயின் பரிதவிப்பை நாங்கள் உணர்வதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்! இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவம் மட்டும்தானே பங்குபற்றியது? பிரிகேடியர் வருண கமகே நழுவல் பதிலை கூறியுள்ளார்.
  22. முதன் முறையாக ஒரே தரத்தில் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு செல்வ சந்நதி ஆலயத்தில் திருமணம் முடித்து வைப்பது புதிய விடயம் இல்லை. இப்படியான திருமண வைபவம் செல்வ சந்நிதி ஆலயத்தில் நீண்டகாலம் நடைபெற்று வருகின்றது. இந்த தடவை சமூக ஊடகத்தின் கவனத்தை பெற்றுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், முன்பு கொடையாளி எவராவது அனைத்து திருமண தம்பதியினருக்குமான திருமண செலவை ஏற்றுள்ளார்களா என தெரியவில்லை. இப்படியொரு தானம் கிடைப்பதும், கொடுப்பதும் மிகப்பெரியதொரு ஆசீர்வாதம்!
  23. யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.
  24. உங்கள் அளவுக்கு எனக்கு பொறியியல் அறிவு எல்லாம் இல்லை. ஆனால் அடியேனின் சிறிய சந்தேகம் என்ன என்றால் இந்திய கார்களின் சக்கரங்கள் தரையில் முட்டாமல் பறக்க பார்க்கின்றன என்றால் இவற்றை பறக்கும் கார்கள் என்று சொல்லி விற்பனை செய்யலாமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.