-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வங்கதேசம் விளையாடும் குழுவில் பெரிய நாடுகள் இங்கிலாந்து,மேற்கிந்தியா தீவுகள் ஆகியவை சூப்பர் 8 க்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு பதிலாக வங்காள தேசம் சுப்பர் 8 க்கு சென்றால் ஏற்கனவே தயாரிக்கபட்ட போட்டிகளின் அடிப்படையில் இலங்கையில் வங்காள தேசம் விளையாடும். ஆனால் மேற்கிந்தியா தீவுக்கு பதிலாக வங்காளதேசம் சூப்பர் 8 க்கு சென்றால் இந்தியாவில் வங்காளதேசம் விளையாடும்படி போட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போட்டிகள் இலங்கைக்கு மாற்றும் படி வங்காளதேசம் கேட்கும்
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
2026 ஏப்ரலில் வரும். யாழ்களத்தில் வந்த முதல் போட்டி 2006 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். 20 வருடங்களாக யாழ்கள போட்டிகள் நடைபெற்று வருகின்றது
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
விஜயினை பற்றி எனக்கு தெரிந்த சில தமிழகத்தினை சேர்ந்தவர்களுடன் உரையாடினேன். பல இளைஞர்கள், பெண்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புவதாக சொல்லுகிறார்கள். திமுகவுக்கு மாற்று விஜய் என்று சொல்கிறார்கள்.
-
19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
2004 இல் அகிலன் பீடில் என்ற ஈழத்து வம்சாவளி வீரர் ஒருவர் அவுஸ்திரேலியா 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடினார். பிற்காலத்தில் காயம் காரணமாக சில காலங்கள் அவரால் விளையாட முடியவில்லை.( கிட்னி ஒன்றை இழந்தார்).பிறகு அவுஸ்திரேலியா பிக்பாஸ் தொடரிலும் விளையாடினார். அவுஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்பட்ட 15 பேரில் 2 இந்தியா , ஒரு சீனா வம்சாவளியை சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை அணியில் விக்கினேஸ்வரன் ஆகாஷ் என்ற ஹார்ட்லி கல்லூரி மாணவர் 4 ஓவருக்கு 15 ஓட்டங்கள் குடுத்து ஒரு விக்கேட் எடுத்தார். இந்த ஆசியக்கிண்ணப் போட்டியில் இலங்கையணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களில் ஒருவர் பரியோவன் கல்லூரி மாணவர் குகதாஸ் மாதுளன்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.
- 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
- 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
-
19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
செனுரன் முத்துசாமி தமிழகத்தில் நாகப்பட்டினத்தை பூர்விகமான தமிழர்.
-
இந்தியா எப்படி தோற்றது?
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரில்தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஒட்டங்களை பெற்றது. வங்காளதேசம் அணி 9 விக்கெட் இழப்புடன் 125 பெற்று சமநிலை அடைந்தது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் அணி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளும் இழந்தது 6 ஓட்டங்களை பெற்றது. இன்னும் 3 பந்துகள் இருந்தும் 2 விக்கெட் இழப்பினால் வங்காளதேசத்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தான் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
ரணில் தம்பதிகளுடன் கலைஞர் கருணாநிதி மகள் கனிமொழி அவர்களும் நிற்கிறார். H.ராஜா ,அண்ணாமலை போன்ற தமிழக பிஜேபி தலைவர்களும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ரணில் சென்று இருக்கிறார். ஈழத்தில் சைவ கோவில்களை இடித்து விகாரைகளை கட்டும் போது கண்மூடி இருந்த ரணில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் சென்றது ஏன்?
-
இந்தியா எப்படி தோற்றது?
இந்த போட்டி ஆசிய அணிகளுக்கு இடையிலான Rising Stars (உயரும் நட்சத்திரங்கள்) போட்டி. இதில் இந்தியா அணிதான் பலம் பொருந்திய அணி. இந்தியா அணியில் பிரபல ஐபிஎல் வீரர்கள் Jithesh Sharma,vaibav suriyavamsi, Arya உட்பட பலர் விளையாடினார்கள், இலங்கை அணியில் விஜயகாந்த் சிறப்பாக 2 போட்டிகளில் விளையாடியதால் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண t20 இல் சேர்க்கப்பட்டார்.
-
இந்தியா எப்படி தோற்றது?
2008 இல் நடைபெற்ற மேற்கிந்தியா நியூசிலாந்து போட்டியில் இரு அணிகளும் 155 ஓட்டங்கள் பெற்றன. சூப்பர் ஓவரில் மேற்கிந்தியா அணி 25 ஒட்டங்களை ஒரு விக்கெட் இழப்புடன் பெற்றது. நியூசிலாந்து அணி 4 வது பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தாலும் 2 விக்கேற்றுகள் இழந்ததினால் மிகுதி 2 பந்துகள் இருக்கமுன்பே நியூசிலாந்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. கீழே உள்ள இணைப்பில் சுப்பர் ஓவரினை commentary இல் பாருங்கள் https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-new-zealand-2008-09-366700/new-zealand-vs-west-indies-1st-t20i-366707/ball-by-ball-commentary
-
இந்தியா எப்படி தோற்றது?
சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.