Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. Kayo இல்லாமல் நான் அனுப்பிய இணைப்பினுடாக போட்டிகளை பார்க்க முடிகிறதா? பெரும்பாலான போட்டிகள் அவுஸ்திரேலியா நேரம் இரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதினால் போட்டிகளை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா ? நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.
  2. முன்புதான் சென்னை அணியை அப்பாக்களின் அணி என்று சொல்வார்கள். ஏலத்தில் அதிக வயது போனவர்கள் சென்னை அணியில் எடுப்பதினால் சொல்லுவார்கள். ஆனால் இம்முறை சென்னை அணியில் 3 பேர் மட்டுமே 35 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். தோனி 43 வயது. அஸ்வின் 38 வயது. ஜடேஜா 35 வயது. மும்பாய் அணியில் 3 பேர். ஆனால் கொலகத்தா அணியில் 5 பேர் 35 ம், 35 வயதுக்கு மேல் இருக்கிறார்கள். இம்முறை கொல்கத்தா அணியில் அதிக வயது போனவர்கள் இருக்கிறார்கள். இம்முறை சென்னை அணியில் இருக்கும் 25 பேரில் 10 பேர் 25 வயதை விட குறைவானவர்கள். நூர் அகமது 19 வயது, பத்திரானா 21 வயது . ரச்சின் ரவீந்திரா 24 வயது. ஆயுஷ் ம்ஹாத்ரே 17 வயது. அன்சுல் கம்போஜ் 23 வயது . ஷாகிக் ரஷித் 20 வயது. டெவால்ட் பிரேவிஸ் 21 வயது . இன்று சிலவேளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் vansh bedi 21 வயது. தமிழக வீரர் சித்தார்த் 18 வயது .
  3. கடைசி 2 போட்டியிலும் வென்ற அணிகள் கடைசி 4 இடங்களில் இருந்த அணிகள். இதே போல சென்னை இன்று வெல்லுமா? 2024 ஐபிஎல் இருந்து இன்று வரை சென்னை மைதானம் சென்னை அணிக்கு பெரிதாக உதவவில்லை.குறிப்பாக 2024 இல் சென்னை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. தீக்சனா, ஜடேஜா போன்றவர்கள் 2024 இல் சிறப்பாக பந்து வீசவில்லை. இம்முறை 2024 இனை விட சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், 2023 க்கு முன்பு சென்னை மைதானம் இருந்தது போல இருக்கவில்லை. எப்படி மைதானம் செயற்படும் என்று சொல்லமுடியாமல் இருப்பதாக சில வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
  4. முதுகு வலிப்பு காரணமாக அணித்தலைவர் கில் ராஜஸ்தான் துடுப்பாடும் போது விளையாடவில்லை. இதனால் உபதலைவர் ரஷித் கான் அணிக்கு தலைமை தாங்கினார்
  5. கடைசி 4 அணிகளில் இனி வரும் போட்டிகளில் வென்றால் KKR 17 புள்ளிகள் எடுக்கலாம். SRH 16 புள்ளிகள் எடுக்கலாம். ஆனால் குறிப்பாக SRH துடுப்பாட்டக்காரர்கள் Out of form இல் இருக்கிறார்களே
  6. ராஜஸ்தானுக்கு இனி 4 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. மிகுதி 4 போட்டிகளிலும் இதே மாதிரி விளையாடி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறலாம். 14 புள்ளிகள் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு செல்ல சிலவேளை சந்தர்ப்பம் இருக்கும் .சென்ற வருடம் பங்களூர் அணி கடைசி 6 போடிகளில் வென்று 14 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோற்று இருந்தால் 2025 இல் அடுத்த சுற்றுக்கு தெரிவாகாத முதல் அணி ராஜஸ்தானாக இருந்திருக்கும். இதுவரை 10 அணிகளில் ஒரு அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பது உறுதிப்படுத்தவில்லை.
  7. இல்லை. அடுத்த இருவருடங்கள் மினி ஏலம். இவர் ராஜஸ்தான் அணியில் இதே குறைந்த சம்பளத்துடன் விளையாடுவார் . 2027 இலும் இதே போல சிறப்பாக விளையாடினால் 2028 ஐபிஎல்லுக்கான மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அதிக பணம் குடுத்து இவரை தக்கவைக்கும்.
  8. ஆனால் எனக்கு 2 புள்ளிகள் கிடைக்காதே 😀. நான் குஜராத்தையல்லோ தெரிவு செய்தனான்.
  9. பூரான் மட்டுமா காலி ரிஷப் பாண்டும் காலி
  10. சென்னை அணிக்கு நீண்டகாலமாக ஆதரவு என்பதினால் அதற்கு போட்டி அணியான மும்பாயினை பெரியதாக பிடிப்பதில்லை. இன்று மும்பாய் வெல்லும் என போட்டியில் விடை எழுதியிருந்தாலும் பூரான், மார்ஸ், மார்க்கம் விளையாடும் LKG வென்றால் நல்லது என்று மனம் நினைக்கிறது. போட்டியில் மும்பாய் என்று எழுதியதினால் போட்டி சுவரிஷ்யமில்லாமல் இருக்கிறது.
  11. காயப்பட்டு இருந்த Mayank Yadav இன்று விளையாடுகிறார்
  12. கேகேஆர் அணியில் இன்று Rovman Powell விளையாடுகிறார் .
  13. 2024 இல் கிருபன் நடாத்திய ஐபிஎல், t20 உலககோப்பை போட்டிகளில் எனக்கு பிடித்த சென்னை, அவுஸ்திரேலியாதான் வெல்லும் என விடையளித்தேன். இரண்டு போட்டிகளிலும் நான் 3 ம் இடம். இவ்வருடம் விருப்பு வேற போட்டி வேற என முடிவெடுத்து விடை எழுதினேன். சென்னை விளையாடும் 14 போட்டிகளில் 12 இல் சென்னை வெல்லும் என விடையளித்தேன் .(நேற்று 11 போட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவ்வருடம் சென்னை SRH இடையிலான போட்டிகள் 2 என எழுதியிருந்தேன். உண்மையில் ஒரு போட்டிதான் ). சென்னை வெற்றி பெறமாட்டாது என்று எழுதிய 2 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல சுவாரஸ்யம் சற்று குறைந்து போலவே தென்பட்டது.
  14. ரவிந்திரா ஒரே ஒரு போட்டியில் 50 க்கு மேல் அடித்தார் , 4 போட்டிகளில் 0,3,4,5 ஒட்டங்களை பெற்றார். பதிரானா, நூர் அகம்து பந்து வீச்சாளர்கள். ஓவர்டனுக்கு பதிலாக சாம் கரண் சகல்துறை ஆட்டக்காரர். பேபி ட்விலார்ஸ் ரவீந்திராவுக்கு பதில். விஜய் சங்கருக்கு பதில் ஹூடா முகமது சாமி முதல் பந்தில் விக்கெட்
  15. இல்லை சென்னை விளையாடுகிற 14 போட்டிகளில் 12 இல் சென்னை வெல்லும் என பதில் எழுதியிருந்தேன். SRH எதிரான இன்றைய போட்டிகளிலும், மும்பாயில் நடைபெற்ற போட்டியிலும் மட்டும் சென்னை தோற்கும் என எழுதினேன். போட்டி வேற விருப்பு வேற.
  16. Brevis விளையாடுகிறார். ஆனால் Hooda வும் விளையாடுகிறார். SRH வெல்லும் என விடையளித்தாலும் சென்னைக்கே ஆதரவு sam curren ம் விளையாடுகிறார்
  17. மும்பாயிற்கு எதிரான சென்ற போட்டிகளில் 8 ஆறுகள் சென்னை அணியினால் அடிக்கப்பட்டது. அதில் 4 சிவம் டுபெய், தலா 2 ஜடேஜா, ஆயுஷ் ம்ஹாத்ரேயினால் அடிக்கப்பட்டது.தோனி ஒரு ஆறும் அடிக்கவில்லை.
  18. 11,14 கோடிக்கு பட்லர் தக்கவைக்க விரும்புவாரா என்பதும் ஒரு கேள்வி. விராட் கோலி 21 கோடிகளுக்குத்தான் இணங்கினார். நிகலஸ் பூரணுக்கும் 21 கோடிகள் வழங்கப்பட்டது. கிளாசானுக்கும் 23 கோடிகள் வழங்கப்பட்டது . சென்ற வருடம் ராஜஸ்தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளிலும் பட்லர் விளையாடவில்லை. 2024 இல் நடைபெற்ற உலககிண்ண t20 போட்டிகளில் தயார்படுத்துவதற்காக பாகிஸ்தான் அணியுடன் t20 போட்டி தொடர் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். இதே மாதிரி Phil Salt (KKR), Will Jack (பங்களூர்) , Reece Topley ( பங்களூர்) போன்றவர்களும் முதல் சுற்று போட்டிகள் முடிய முன்பு இங்கிலாந்து அணி கேட்டதற்காக பாகிஸ்தான் அணியுடன் விளையாட சென்று விட்டார்கள். இம்முறை இறுதிப்போட்டி 26 திகதி மே மாதம் நடைபெறவுள்ளது. சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி 22 மே முதல் விளையாடவுள்ளது. சிலவேளை ஒரு சில இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிய முன்பே இங்கிலாந்து செல்லலாம். இது போன்ற காரணங்களுக்காகவும் பட்லரை சிலவேளை ராஜஸ்தான் அணி இம்முறை தக்கவில்லை என நினைக்கிறேன்
  19. வீரப்பையன்தான் உங்களையும் என்னையும் குழப்பி விட்டார்.
  20. 2024 இல் குல்தீப் டெல்லியில்தானே விளையாடினார். 2024 இல் KKR க்கு குல்தீப் விளையாடவில்லை. 13.25 கோடிக்கு டெல்லி அணி குல்தீப்பினை தக்கவைத்தது
  21. சென்ற வருடம் முதலிடத்தில் விராட் கோலி. இம்முறையும் முதலிடம் பிடிப்பாரா? பிடித்தால் சிலருக்கு புள்ளிகள் கிடைக்கும்.
  22. இந்த வருடத்திற்கான ஏலத்தில் சென்னை அணி 14 கோடி வரை ராகுலினை எடுப்பதற்காக டெல்லியுடன் போட்டி போட்டது.
  23. ஒருத்தருக்கும் தெரியாமல் 8 ம் இடத்துக்கு வந்தேன். நீங்கள் கண் வைத்து விட்டீர்கள். இனி பின்னுக்கு போகப்போறேன். திரும்பி 9 க்கு வந்திட்டேன். இனி கடைசிதான்.( உப்பீடித்தான் செம்பாட்டன் முதலிடத்தில் இருக்கும் போது கண் வைத்தீர்கள். அந்தாள் பாவம்.) பங்களூரில் நடைபெறும் போட்டியில் ஒரே ஒரு போட்டியைத் தவிர எல்லாப்போட்டியிலும் பங்களூர் தோற்கும் என விடை எழுதினேன். இன்று இரவு நடைபெறும் போட்டியில் மட்டும்தான் பங்களூர் வெல்லும் என எழுதினேன். ஆனால் நீங்கள் கண் வைத்து விட்டீர்கள். என்ன நடக்குமோ என்று நெஞ்சு படபடக்குது. நாளை சென்னை எதிர் ஹைட்ராபாத் எதிரான போட்டியில் SRH வெல்லும் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். நேற்று SRH இன் ஆட்டத்தை பார்க்க சென்னை எவ்வளவோ மேல். நான் எப்பொழுதும் சென்னைக்குத்தான் ஆதரவு. போட்டி என்பதினால் விருப்பு வெறுப்பு பார்க்காமல் எழுதிவிட்டேன். உங்களின் கண் பார்வை பட்டுட்டுது. இனி அதிலும் தோல்வி போல
  24. 14 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் ஒப்பாரி வைத்தேன். அதாவது முதல் 20 போட்டியில் 5 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றேன்.( முதல் 6 போட்டியில் 4 , அடுத்த 14 இல் ஒன்று) . மிகுதி 20 போட்டியில் 13 வெற்றிகள். பெங்களூர் அணி சொந்த மண்ணில் தோற்கும் என நினைத்து விடை எழுதியதும், ராஜஸ்தான் அணி பல போட்டிகளில் தோற்கும் என எழுதியதும், டெல்லி அணியின் பல வெற்றிகளும்தான் காரணம். சென்னை மும்பாய் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் வெற்றி பெறும் என்றும், பஞ்சாப் பங்களூர் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தோற்கும் என நினைத்து எழுதிய விடைகள் புள்ளி பெற உதவின. எனினும் பெரிதாக நம்பிய SRH, CSK, MI, KKR அணிகளின் தோல்விகள் பல போட்டிகளில் புள்ளிகள் கிடைக்காததற்கு காரணங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.