Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. பாகிஸ்தானில் நடக்கும் PSL தொடர்தான் துபாய்க்கு மாற்றப்படுகிறது. (லாகூர் போன்ற இடங்கள் காஷ்மீருக்கு கிட்ட இருப்பதினால் ). இந்தியா தாக்கிய ட்ரோன் ராவல்பிண்டி மைதானத்தில் விழுந்ததினால் கராச்சி பெஷாவர் இடையிலான போட்டி பிற்போடப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்கள். ஐபிஎல் தொடர் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும். டெல்லி பஞ்சாப் போட்டி நடைபெற்ற தர்மசாலா என்ற இடம் காஷ்மீர், பாகிஸ்தான் அருகில் இருப்பதினால் பாகிஸ்தானின் தாக்குதல் நடக்கும் என்பதினால் நேற்றைய போட்டி இடை நிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் நடைபெறவுள்ள மும்பாய் பஞ்சாப் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்ற நாட்டு வாரியங்களுக்கு ஐபிஎல்இல் அவர்களது வீரர்கள் விளையாடுவதால் BCCI மூலம் குறிப்பிட்ட நிதி கிடைக்கிறது
  2. இன்று பஞ்சாப் வென்றால் 17 புள்ளிகள் கிடைக்கும் . மும்பாயும், டெல்லியும் 12 போட்டிகள் விளையாடி தலா 14,13 புள்ளிகளுடன் இருப்பார்கள். மும்பாய்க்கும் டெல்லி க்கும் இடையில் ஓரு போட்டி இருப்பதினால், மும்பாய் , டெல்லி அணிகளில் ஒன்று 17 இற்கு குறைவான புள்ளிகளை பெறுவார்கள். ஆகவே பஞ்சாப் இன்று வென்றால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும். இன்று மழையால் போட்டி நடைபெறாவிட்டால் பஞ்சாப் 16 புள்ளிகள், டெல்லி 14 போட்டிகள் பெறும். குஜராத், பங்களூர், பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 16 புள்ளிகள். மும்பாய், டெல்லிக்கு இடையில் நடைபெறும் போட்டியில் (இப்போட்டி மழையால் பாதிக்காமல் நடந்தால்)வெற்றி பேரும் அணியும் 16 புள்ளிகள் பெறும் . கொல்கத்தா அணி அதிக பட்சம் 15 புள்ளிகள்தான் எடுக்க முடியும் என்பதால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகாது,
  3. ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்! என்று இந்தியா அரசாங்கம் சொல்கிறது. 1987 இல் இந்தியா இராணுவம் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்தினை பிடிக்க நடவடிக்கை எடுத்தது. தெல்லிப்பளையில் 90 விடுதலைப்புலிகளை பிடித்ததாக இந்தியா வானொலி அப்போது செய்தி வெளியிட்டது. அதில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவி இளைஞர்கள். சிலர் பாடசாலை மாணவர்கள். இந்தியா இராணுவமும் 90 இல் இலங்கையை விட்டு சென்று விட்டது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அதன் பிறகு இன்று வரை காணவில்லை.
  4. இன்றைய போட்டி தர்மசலாவில் திட்டமிட்டபடி நடைபெறும். எனினும் சிலவேளை மழை வந்து இப் போட்டியை குழப்பலாம் . ஆனால் மும்பாய்க்கு எதிரான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாழ்கள ஐபிஎல் 2025 பதிவு 100 வது பக்கத்தினை தாண்டவுள்ளது.
  5. இந்த போட்டியிலும் சிலவேளை மழை வரலாம் என்று சொல்கிறார்கள். 😳
  6. இன்றைய போட்டியிலும் சிலவேளை மழை வந்து குழப்ப வாய்ப்பு இருக்கிறது. ரபாடா இன்று குஜராத் அணிக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது.
  7. கம்மின்சை குறை சொன்னிங்கள் நேற்று நன்றாக விளையாடினார். ரசலை குற்றம் சொன்னீர்கள். KkR இன் கடைசி போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார். சாம் கரணை திட்டினீங்கள். 47 பந்தில் 88 அடித்தார். மொயின் அலியை புகழ்ந்தீர்கள். ஆள் ஒரு ஓவருக்கு 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். சுவியையும் புகழ்ந்தீர்களோ தெரியாது. முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு போய் கொண்டு இருக்கிறார். என்னையும் ஒருக்கா திட்டி விட்டிங்கள் என்றால் புண்ணியமாக போகும். போட்டியில் முன்னுக்கு வருவேன்.😄
  8. எனக்கும்தான். எப்பவாவது SRH வென்றால் புள்ளிகள் கிடைக்கும். 2 புள்ளிகள் போயிற்றிதே.
  9. இன்று டெல்லி அணியில் நடராஜன் விளையாடுகிறார். நித்தேஷ் குமார் ரெட்டி இன்று ஹைதரபாத் அணியில் இருந்து இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சச்சின் பேபி விளையாடுகிறார்.
  10. சென்னை அணியின் வான்ஸ் பேடி பயிற்சியின் போது காயப்பட்டதினால் ஊர்வில் படேலினை (wicket keeper) வழங்கியுள்ளார்கள். இவர் T20 போட்டிகளில் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் 2 ம் இடத்தில் இருக்கிறார். 28 பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர். சென்னை அடுத்த வருட ஐபிஎல்லுக்கு இப்பவே தயார் படுத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பே வாங்கிய 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் 48 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றார். பேபி டிவிலரசும் 6 ஓட்டங்கள் அடிக்ககூடியவர் . ஜடேஜா முன்பு 6,7 இடங்களில் விளையாடவந்து பெரிதாக சாதிப்பதில்லை . ஆனால் கடந்த சில போட்டிகளில் 4 ம் இடத்தில் வந்து 53 , 77 ஒட்டங்களை குறைந்த பந்துகளில் பெற்றார்.
  11. அன்ரு ரசல் இன்று முதல் 9 பந்துகளில் 2 ஒட்டங்களை பெற்றார். ஆனால் அடுத்த 16 பந்துகளில் 55 ஓட்டங்கள் பெற்று இன்றைய போட்டியின் சிறந்த வீராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
  12. KKR ஒரு ஓட்டத்தினால் வெற்றி எனக்கு இரண்டு புள்ளிகள் நேற்று சென்னை 2 ஓட்டத்தினால் தோல்வி. எனக்கு புள்ளிகள் கிடைக்கவில்லை
  13. மொயின் முதல் 2 ஓவர் சிறப்பாக வீசினாலும் 3 வது ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். அந்த ஓவரில் 32 ஓட்டங்களை ராஜஸ்தான் பெற்றது.
  14. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.
  15. மும்பாயிருக்கு இருக்கும் 3 போட்டிகளில், எதிராக விளையாடும் அணிகள் புள்ளி பட்டியலில் 2,4,5 ஆம் இடங்களில் உள்ள அணிகள் (GT, PBKS, DC ). RCB க்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் 3 போட்டிகள் பெங்களூர் மைதானத்தில் நடைபெறும். இன்று சென்னைக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் RCB விளையாடுகிறது.
  16. KKR க்கு இன்னும் 4 போட்டிகள் . இதில் 3 இனை வென்றால் 15 புள்ளிகள். 4 இனையும் வென்றால் 17 புள்ளிகள். மிகுதி இருக்கும் போட்டிகளில் 3 போட்டிகளில் தற்போது கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளான CSK, RR, SRH எதிரான போட்டி. 4 வது போட்டி RCB க்கு எதிரான போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் பங்களூரில் நடைபெறாத 6 போட்டிகளிலும் RCB வென்று இருக்கிறது. ஆனால் பங்களூரில் நடைபெற்ற 4 போட்டிகளில் RR க்கு எதிரான போட்டிகளை தவிர மிகுதி 3 போட்டிகளிலும் தோல்வி.
  17. இன்று SRH தோல்வி அடைந்தாலும் அதிகாரபூர்வமாக தோல்வி அடையாது. இன்றைய போட்டி உட்பட 5 போட்டிகள் SRH விளையாடவேண்டும். 5 இல் 4 இனை வென்றால் SRH 14 புள்ளிகள் பெறும்.
  18. பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா 😄 சென்ற வருடம் கடைசியாக வந்தது மும்பாய், கடைசிக்கு முதல் பஞ்சாப். 8 ம் இடம் குஜராத். ஆனால் இவை தற்போது முதல் 4 இடங்களில் இருக்கின்றன.
  19. சென்றவருடம் ரோகித் சர்மாவின் அணித்தலைவர் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது . மும்பாய் ரசிகர்கள் இதனை விரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போதும், துடுப்பாட்டாம் செய்யும் போதும் மும்பாய் ரசிகர் அவரை கூக்குரல் இட்டு ஏளனம் செய்தார்கள். சென்ற வருடம் மும்பை அணி 4 போட்டிகள் மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது. யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சில எழுதினார்கள். இந்த வருடம் மீண்டும் மகேலா ஜெயவர்த்தனா மும்பாய் முதன்மை பயிற்சியாளர். ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பூமாரா , சூரியகுமார் ஜாதவ், திலக் வர்மா போன்றவர்கள் தக்கவைக்கப்பட்டார்கள். ஏலத்தில் போல்ட், தீபக் சகார், ரயான் டிக்கெல்டன், வில் ஜாக் போன்றவர்களும் எடுக்கப்பட்டார்கள். முதல் 5 போட்டிகளில் 4 இல் மும்பாய் தோற்றது. ஏன் இங்கு யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ரோகித்தும் சூரியகுமாரும் விரும்பாததினால் ஏனோதானோ என்று விளையாடுகிறார்கள் என்ற பொருளில் சக கருத்தாளர் ஒருவர் எழுதியதை வாசித்த ஞாபகம். 5 வது போட்டியில் இருந்து பூமரா விளையடத்துடங்கினார். ஆரம்பத்தில் out of form இல் இருந்தாலும் மும்பையில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் இருந்து ரோகித் சர்மா சிறப்பாக விளையாட துடங்கினார். சூரியகுமார் ஜாதவ், ராஜன் ரிக்கெல்டன் போன்றவர்களின் சிறப்பான துடுப்பட்டங்களும், போல்ட், பூமாரா போன்றவர்களின் பந்து வீச்சுகளும், ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான தலைமையும், மகேலாவின் பயிற்சியும் சேர மும்பாய் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகிறது.
  20. குத்துக்கரணத்துக்கு மும்பாயின் தொடர் வெற்றிகளும் ஒரு காரணம். முதல் 5 போட்டிகளில் மும்பாய் ஒரு போட்டி மட்டுமே வென்றது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றி
  21. இன்று ராஜஸ்தான் தோல்வியுற்றால் அதிகாரபூர்வமாக வெளியில்
  22. செம்பாட்டன் அவர்கள் பொதுவாக சொன்னதை எனக்கு சொன்னதாக நினைத்து எழுதினேன். ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்ன தோன்றுதோ அவற்றை எழுதுங்கள்
  23. முன்பு பஞ்சாப் அணியில் இருக்கும் போது சாம் கரணை முதல் 4,5 இடங்களில் துடுப்பாட விடுவார்கள். நன்றாக அடித்து ஓட்டங்கள் பெறுவார் . வேறு அணிகளில் விளையாடும் போது 8,9 இடங்களில் வந்து சரியான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைக்காது. சென்னை அணி சாம்கரனுக்கு இம்முறை சரியான இடத்தில் அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது.
  24. சாம் கரண் 2023 இல் மும்பாய்க்கு 29 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்த அடி மறக்க முடியாது. சென்ற வருடம் டெல்கி எதிராக 4 வது இடத்தில் துடுப்பாடவந்து 47பந்துகளில் 63 அடித்தது போல இன்றும் அடிப்பாரா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.