-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள்தான் முழித்திருந்து ஜக்கம்மாவை கும்பிட்டுகொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானை இறுதி வரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். நமீபியாவிடம் பாகிஸ்தான் தோற்று விட்டால் சூப்பர் 8 க்கு பாகிஸ்தானுக்கு பதிலாக அமெரிக்கா தெரிவாகிவிடும். பல புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யுவராஜ் சம்ரா 103 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டு இருக்கிறார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடா விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடைபெறும் போட்டிகளில் நான் சிம்பாவே, நேபாளம் அணியை தெரிவு செய்திருந்தேன். ஆனால் தற்போதைய நிலையில் இது சரியான பதில்களா என்று ஒரு கேள்வி ஏற்படுகிறது. சிம்பாவேயின் இரண்டு வெற்றிகளுக்கும் முக்கிய காரணங்கள் சிம்பாவேயின் வேகப்பந்து விச்சாளர்கள் மூவர் . முசாரபாணி, இவான்ஸ் தலா 7, 6 விக்கெட்டுகளை இரு போட்டிகளில் பெற்று இருக்கிறார்கள். ஓமானுக்கு எதிராக 3 விக்கெட் எடுத்த Ngarava காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. சிம்பாவே விளையாடிய 2 போட்டிகளும் SSC, பிரேமதாசா மைதானங்களில் நடைபெற்றது. இன்று போட்டி நடைபெறும் pallekele மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிமித் பிக்பாஸ் தொடரில் 6 போடிகளில் ஒரு 100 ஓட்டமும் 2 அரை சதமும் அடித்தார். இந்த 6 போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்டகாராவே விளையாடினார்.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லாமல் முன்பு விளையாடிய போட்டிகளில் ஸ்மித் பெரியதாக சாதிக்கவில்லை. சிமித் சிறந்த டெஸ்ட் போட்டியாளர் என்பதில் மாற்று கருத்தில்லை. 50 ஓவர் உலக கிண்ணப் போட்டிகளில் சிமித் விளையாடி இருக்கிறார். ஆனால் t 20 போட்டிகளில் இவர் அவுஸ்திரேலியா அணியில் பெரிதாக விளையாடியதில்லை. ஐபி எல் உட்பட வெளிநாட்டு போட்டிகளில் அண்மை காலங்களில் இவரை ஏலத்திலும் எடுப்பதில்லை. ஆனால் பாகிஸ்தானின் PSL இல் இவர் இம்முறை விளையாடுகிறார். அவுஸ்திரேலியா அணியில் மிச்சல் மார்ஸ், ஹெட் ஆகிய சிறந்த ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். மிச்சல் மார்ஷல் வேகப்பந்துவீச்சாளர் அத்துடன் சென்ற ஐபிஎல்லில் லக்னோ அணியில் அதிரடியாக விளையாடி அதிக ஓட்டங்கள் பெற்றவர். இம்முறை பிக்பாஸ் தொடரில் சிமித் 3 போட்டிகளில் திறப்பட விளையாடியதால் அவுஸ்திரேலியா ஊடகங்களும், ஒரு சில முன்னாள் வீரர்களும் சிமித் இந்த உலக கோப்பையையில் விளையாட வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இம்முறை பிக்பாஸில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் நியூசிலாந்தின் Finn Alan. அதற்கு அடுத்து அதிக ஓட்டம் பெற்றவர் டேவிட் warner
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
6 ஓவர் முடிவில் 70 -0. போகிற போக்கை பார்த்தால் 200 க்கு மேல் அடிப்பார்கள் போல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியா முதலில் ஆடுகிறது. மார்ஷ் அணித் தலைவராக விளையாடுகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி 12 பந்துகளில் 30 அடிக்கவேண்டும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி 12 ஓவரில் 114-4
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து 202-7
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீபன் சிமித், காயப்பட்ட ஹேசில்வுட்டுக்கு பதிலாக இணைகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் 97/4 . 40 பந்துகளில் 64 அடிக்கவேண்டும். மற்றுமொரு விறுவிருப்பான போட்டி?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கையுடன் தோற்றாலும் அவுஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு போவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது சிம்பாவே மிகுதியாக இருக்கும் 2 போடிகளிலிலும் (இலங்கை, அயர்லாந்து ) தோற்கவேண்டும். அவுஸ்திரேலியா ஓமனை வெல்லவேண்டும். அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாவே ஆகிய நாடுகள் ஒரே புள்ளியில் இருக்கும். ஒட்டவிகிதம் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் நாடு தெரிவு செய்யப்படும்.