Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅 உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்
  2. இன்றும் தொடர்கிறது அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣 😅🤣
  3. தனிமனித ஆதிக்கத்தை இல்லாது பண்ணி ,தனிக்கட்சி ஆதிக்கத்தை உருவாக்க முயல்கின்ற☹️னர்
  4. இப்பவும் யாழ்ப்பாண மக்கள் புத்தகங்களை வாசிக்கின்றனரா?குறிப்பாக மாணவர்கள் வாசிக்கின்றனரா? நான் நினக்கின்றேன் சர்வதேச யூ டியுப்,சர்வதேச டிக்டொக்,சர்வதேச வட்சப் ,சர்வதேச முகப்புத்தக திருவிழா என திருவிழா நடத்தினால் மக்கள் அலை அலையாக வந்து கல்ந்து கொள்வார்கள்...🤣
  5. நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ... அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ... 😆
  6. இடதுசாரிகள் நாட்டை கியுபா போல மாற்ற வேணுமென்றும் வலதுசாரிகள் நாட்டை சிங்கபூராகவும் மாற்ற வேணுமென்று கனவு காண்கின்றனர் ஆனால் சிறிலங்கா மக்களும்,அமைச்சர்களும் சிறிலங்கா போல த்தான் இருப்போம் என அடம் பிடிக்கின்றனர்.
  7. இதில பகிடி என்ன வென்றால் போராட்டம் தொடங்கிய காலம்(அகிம்சை ,ஆயுதம் முதல் மற்றும் இன்றுவரை ) வகுப்பு எடுத்தல் கருத்து சொல்லுறவையல் எல்லாம் ஒன்றை சொல்லுவினம் இந்தியாவுடன் இணைந்து செயல் பட் வேணும் ... உலக ஆயுத போராட்ட குழுக்களுடன் இணைய வேணும்.(நாங்கள் பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் சேர்ந்து போராட வேணும் ...அப்படி சேர்ந்து போராடியவையல் பின்பு இலஙகை அரசுடன் கைகோர்த்து போராட்ட த்தை அழிப்பதில் முன் நின்றனர்") எவர் எமக்காக் குரல் கொடுத்தாலும் நாங்கள் விழுந்து கும்பிட வேணும் என இப்ப சொல்லுயினம்..
  8. இறைவனே அலங்காரத்துடன் ஜெகஜோதிய காட்சியளிக்கும் பொழுது பக்தர்கள் ஆண்டியாக செல்ல முடியுமா? அதுவும் அலங்கார கந்தனிடன்...🤣 திருடர்கள் பிழைப்புக்கு திருடுகிறார்கள் நாட்டின் அமைச்சரவை ஏன் இந்த திருடர்களை நல்வழிப்படுத்த முடியாது ? என் அடுத்த கேள்வியை முருகன் கேட்கலாம் 😄 உங்களது கேள்வி, 1979 களில் சில தமிழ் புரட்சிகர இளைஞர்கள் கேட்டடதை ஞாபகப்படுத்துகின்றது. 😍..இன்னும் இப்படியான கேள்வி இருக்கின்றது...இந்த கேள்வி தொடரும் ஆனால் அதைவிட பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் ...நகைளை அணிந்து செல்வார்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ,திருடர்கள் வாழ வழிகிடைக்கும் ,பொலிசார் வேலை செய்வார்கள் ... பக்தர்கள் நகை அணிய வேண்டும் ....திருடர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு தேடிக் கொடுத்து புரட்சிகரமான சக்தியாக மாற்ற வேண்டும் ...அரசர்கள் எவ்ழியோ மக்கள் அவ்வழி என்ற நிலைக்கு புர🤭ட்சி செய்ய வேண்டும் ...
  9. உண்மை ஆனால் உலகம் ஒர் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடந்து கொண்டு போகிறது இரண்டாம் உலகப்போரின் பின்பு வரையப்பட்ட நிகழ்ச்சி நிரல் அதை மாற்ற முடியாது ...அந்த நிகழ்ழ்சி நிரலைமாற்ற கூடிய சக்திகள் இன்னும் வரவில்லை...அது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன‌... இன்று ஹாசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக‌ நடக்கும் அட்டுழியங்களை (அதாவது அமெரிக்காவும்,இஸ்ரேலும் வெளுத்து கட்டுகிறார்கள் )ஏனைநாடுகள் சரி ,இஸ்லாமிய நாடுகள் சரி சும்மா அறிக்கை விட்டு கொண்டு தான் இருக்கின்றனர்....அவர்களுக்கே அந்த நிலை ... பலஸ்தீனம் என்ற நாடு உருவாக கூடாது என்பது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று ...யுக்கோஸ்லோவாக்கியாவை 6 மாதங்களில் பிரித்து மூன்று நாடுகளை உருவாக்கியவர்கள் ,பலஸ்தீனருக்கு 60 வருடங்களுக்கு மேல் அழிவுகளை கொடுக்க்க்கின்றனர்
  10. வீரப்பன(சந்தன கடத்தல்) படுகொலைசெய்து அரசியல் செய்வது போல,இந்தியாவில் உள்ள சில மார்க்ஸிட் பயங்கரவாதிகளை கொலை செய்து அரசியல் செய்வது போல .... நம்ம போராட்ட அரசியலையும் நசுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க இந்தியா தேசியவாதிகள் தீயா வேலை செய்கின்றனர் என்பது என்னவோ உண்மை... இந்தியா தேசியவாதிகளுக்கு ஒர் கனவு உண்டு ...பிரித்தானியா நாட்டை விட்டு செல்லும் பொழுது ஒன்றாக இருந்த மாதிரி மீண்டும் பாகிஸ்தான்,பங்களதேஷ்,இந்தையா எல்லாத்தையும் ஒன்றாக்க வேணும் எண்டு... கனவு தானே காணட்ட்டும் ...காசா? பணமா?
  11. சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ... தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..
  12. ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் , சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...
  13. அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே... திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்... தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..
  14. முதலில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இந்த சமுக அக்கறை தொடங்க வேண்டும்
  15. வகுப்பு எடுத்து ,கட்டுரை வரைந்து ,யூ டியுப் போட்டு தமிழ் அரசியலை இல்லாமல் பண்ணிபோடுவினம் சிலர்...
  16. இதை நாங்கள் 1990 களில் சொன்னோம் கேட்கவில்லை அனுபவி ராஜா அனுபவி ....
  17. சிறிலான்கா நாட்டை பிரிக்க நினைத்த தமிழ் பயங்கரவாதிகளை இல்லாது செய்த சிங்கள மாவீரர்களை தண்டித்தால் பெளத்த மத விரோத செயல்
  18. அணுராவின் சிவப்பு கோவணம் இனி நட்சத்திரமும் கோடும்....வாழ்க ஜனநாயகம்
  19. அவுஸ்ரேலியா தமிழர் சார்பாக நான் போராட தயார் முஸ்லீம் மக்கள் சார்பாக .... 🤣
  20. எல்லாம் ஒரு புருடா தான் இறந்த தலைவன் இருக்கிறார் என்ற மாதிரி,நரி பரி ஆக மாறியது போல பனங்காட்டு நரி சிங்கமாக மாறிவிட்டது இதுவும் ஒரு கருத்து ...உலகமே பொய் கருத்துகளின் உறைவிடமாக மாறி வெற்றி நடை போடுகிறது🤣
  21. நாலைந்து வருடங்களுக்கு முதல் எமது வீதியால் ஒர் பெண் காலை மாலை என வோக்கிங் போவார் ..அவர் ஒரு நாள் மாரடைப்பு காரணமாக் இறந்துவிட்டார் 50 வயசு தான் இருக்கும்...சிலர் சும்மா இருப்பினம் 80 வயசுக்கு மேல் வாழ்வினம் எல்லாம் அவன்.....செயல் என சொல்லி நிம்மதியடைய வேணும்..
  22. வேலையில் இருக்கும் பொழுது ஒரு பொஸ் ,ஆனால் இளைப்பாறினால் பக்கத்து வீட்டுக்காரியும் பொஸ்...சும்மா தானே நிற்பியள் எங்கன்ட நாய்குட்டியை வோக்கிங் கூட்டிக் கொண்டு போறீயளே என்று கேட்கினம்....நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் இதுவும் கடந்து போகும் என தெய்வீக பாசையில் கூறி நிம்மதி அடையலாம் வேற வழி...எடுபிடி வேலை செய்வது எவ்வளவு கஸ்டம் என இப்ப தான் தெரியுது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்
  23. நீங்கள் சீனியர் என்று சொல்லுறீயல்...நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ..🤚 பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இரண்டு நாள் போக நாங்களே விரும்பி செய்வோம் ...நேரம் போக வேணுமல்லோ ..வருகைஇக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மை .....😂பிறகு யாரும் உத்தரவு போடமுதல் நாங்களே செய்து போடுவோம் ...எள் என சொல்லும் முன் எண்ணையாக நிற்போம்... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
  24. வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக‌ முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான். சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை. என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான். போனை எடுத்து நம்பரை டச் பண்ண "இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க, "வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்" "சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா" போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர் "எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்" "தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு" "ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ " "நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்" மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள் ,வயசு போன நேரத்தில் இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள். கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான். "மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் . "மொர்னிங் மகள்" "டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு" ""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்" "வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே" "ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான். "இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே" "ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்" "இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு" "உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான். "அம்மா ,அப்பா என்னவாம்" "மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்" "‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம் "ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்" "எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்" "ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது" "பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்." "
  25. மே 18 இனவழிப்பு தினம் அல்ல அது தலைவர் பிரபாகரன் மறைந்த நாள்(புலிகள் இயக்க பயங்கரவாத தலைவ்ர் பிரபாகர்ன் மறைந்த நாள் என உலகமக்களுக்கு பிரச்சாரம் செய்ய புலனாய்வு சக்திகள் செயல் ப்டுகின்றனர்...) ஒரு ஜனநாயக நாட்டுக்கு. இனவழிப்பு என்ற பலிசொல் இருப்பதை அந்த நாட்டின் அதிகார வர்க்கம் விரும்பாது அது ஒர் நீண்ட நாள் கறையாக அந்த நாட்டுக்கு இருக்கும் எனவே இது ஒர் தொடர்கதை... காளிஸ்தான் போராளிகளை கனடா வரை துரத்தி துரத்தி இந்தியா அழிக்க முயற்ச்கின்றனர்...ஆனால் அவர்கள் இன்றும் செயல்படுகின்றனர்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.