Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  12723
 • Joined

 • Days Won

  42

Everything posted by putthan

 1. அவர் கூறுவது சரி ,அமைச்சு பதவியை விட பெரிய விடயத்தை அவர் செய்கின்றார் .. அமேரிக்கா இந்தியா சீனா மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எதை எதிர் பார்க்கின்றனரோ அதை அவர் முன்னிலைப்படுத்துகிறார்.. சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் , இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச அடையாளங்கள் தேவையில்லை
 2. ஆட்சியில் இருந்த சகல அரசுகளும் கொள்ளை அடித்துள்ளார்கள் ..... ஆனால் பெரும் தொகையை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர் ... குடும்ப ஆட்சி செய்தமை அடுத்த தவறு.. இடதுசாரிகளுடன் சேர்ந்து கற்பனை சோசலிசம் செய்ய வெளிக்கிட்டது அடுத்த தவறு.. அரச பணத்தில் இனவாத/மதவாத சிந்தனையை தூண்டுவதற்கா குடியேற்றங்கள்,விகாரைகள் ,தொல்பொருள் திணைக்களம் போன்வற்றுக்கு செலவளித்தமை முக்கியமாக இலங்கையில் உற்பத்தி யாகும் நெல்,சீனி,தென்னை போன்றவற்றை அபிவிருத்தி செய்ய தவறியமை .....எல்லாவற்றுக்கும் இனவாதம் பேசி பேசி
 3. உண்மை ...கிராமப்புற மக்களுக்கு டீசல் ,மண்ணெண்ணை இருந்தால் சரி
 4. சிங்கள குடியேற்றம் மற்றும் மக்களின் விருப்பமின்றி பெளத்த மத விகாரைகள் அமைத்தல் போன்றவற்றையும் சொல்லியிருக்கலாமே....அதற்கு வேறு கட்சி அறிக்கை விட வேணுமோ.... இராணுவம் தேசிய பாதுகாப்புக்கு தேவை என சொல்வார்கள் ....ஆனால் மற்றவற்றுக்கு சாட்டு சொல்ல முடியாது
 5. அவன் ஒர் ஆடம்பர அழகன் அமைதியான ஆண்டி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா
 6. இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் கொத்தா ,மகிந்தா ராஜினாமா செய்யவில்லை.. அவர்களிடம் ஒர் நிகழ்ச்சி நிரல் உள்ளது போல தெரிகிறது... ஏனைய ராஜபக்சாக்கள் ராஜினமா செய்துள்ளனர். இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியை கையில் வைத்திருப்பார்கள் ...எடுத்த பணத்தை காப்பாற்றவும் ,கைது செய்வதை தடுப்பதற்கும்... இரட்டை குடியுரிமை இவர்கள் வைத்திருப்பதன் காரணமே அது தான் .... கோத்தா அமெரிக்கா சென்று விடுவார் ,மகிந்தா ஜனாதிபதியாக வரும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா என ஆராய்வார்கள் அல்லது பிரதமர் அதிகாரம் கொண்டவராக அரசியலை மாற்றுவார்கள்... போராட்டம் இன்னும் கிராம மக்களிடம் போய் சேரவில்லை ....கொழும்பு கொள்ளோ,கெள்ளொ தான் போராடுகின்றனர்... ஜனாதிபதி இன்னும் தனது அதிகாரத்தை (பொலிஸ் இராணுவ படைகளை பாவிக்காமைக்கு காரணம் .....அகிம்சை வழியில் தமிழ் இளைஞர்கள் போராடியிருந்தால் இனவழிப்பு நடந்திருக்காது என காட்டுவதற்கு ....
 7. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....சொல்லி போடாதையுங்கோ பிறகு நான் அவுஸ் டொலரை சிறிலங்கா மாதவிடம் விசிட் பண்ணும் பொழுது மாற்ற முடியாது ... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....இப்ப சிறிலங்காவை விற்கின்றனர் ...டொலர் இருக்கா,மருந்து இருக்கா,அரிசி இருக்கா,
 8. பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி "அம்மா இந்த பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா" "அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ" தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம் பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார் "நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா தான் பெறும்" "அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே" " என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்" "அப்பா வள‌வுக்குள் இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்" "எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு" அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான். வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல பானை .ஆடுகள் உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை. இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர் கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் . "அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ" அவர்கள் சிரித்து கொண்டே "இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ" அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர். அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று. அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான். அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர். படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான். குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் . "அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே" "இவர் என்ட சொந்த தம்பி" "அண்ணே இந்த போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ" "இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவ‌ருக்கு அனுப்பிவிடுவோம் " "அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது" "அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை" "அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்" அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான் விடியகாலையில் ' "டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி" "இந்தா இருக்கு புதுசு" " எங்கயடா பழைய சட்டி" "அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்" கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு "டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?" இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள் "இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு".. "சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்" " நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா" "அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்" "இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்." "சரி சரி" "உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ" "அம்மா,பரணகோர்ட் அண்ணே பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு" "படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல் வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்" என கோபத்தில கத்திவிட்டு ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை. தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர் குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள். குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் . குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். வாடிவென்ட என்றார்கள் இவனும் பயந்து பயந்து அமர்ந்தான் "நம மொக்கத" "குகன்" "கொயத வடக்கருவே" "வெர்ஸ்ட் ஜொப்" "கம ஹொயத" "யாப்பானய" "அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)" பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள். இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி வீடு வந்தான். "என்னடா இன்டெர்வியூ எப்படி" "சரிவரவில்லையப்பா" "சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்" என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் . "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு" " எந்த கொம்பனி?பெயரை சொல்லு?" "GoMaBa" "அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள் அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்" "அடகோதாரி " "நான் சொன்னான் தானே அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்" அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன். கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் திடுக்கிட்டு எழுந்தான்
 9. இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகள்,பிக்குமார்... இந்தியா எதிர்ப்பு,தமிழ்மக்கள் எதிர்ப்பு என்ற போர்வையில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுப்பார்கள்...பொன்சேக்கா முக்கிய பங்கு வகிக்க வாய்புள்ளது இராணுவம் இவருக்கு கை கொடுக்க வாய்ப்பு உண்டு
 10. அதற்காக தான் உதயகம்பன் பிலா,விமல் வீரவம்சா,இன்னும் சில இடசாரிகளை வெளியனுப்பியதாக கதை அடிபடுகிறது ....அரசாங்கத்திலிருந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது ....வெளியில் போய் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க சொன்னதும் ராஜ்பக்சா குடும்பமாம்....
 11. சிங்கள மக்கள் விழிப்புடன் செயல்பட வேணும் சகலத்துக்கும் சிறுபான்மையை குற்றம் சாட்டி தப்பி பிழைக்கும் அரசியவாதிகளை இனம் காணவேண்டும்... இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்த எந்த அரசும் நிலைத்து நிற்கவில்லை சிறிமா முதல் கோத்தா வரை.. இன்னும் ஒன்று அண்மையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் பதாதைகளில் 74 வருடமாக ஆட்சி செய்த அரசியல்வாதிகள் செய்த பிழையை சொன்னார்கள் ... வழமையாக நாங்கள் தான் 74 வருட அரசியல் பற்றி பேசுவது .இன்று சிங்கள மக்களும் குற்றம்சாட்ட வெளிக்கிட்டுவிட்டனர்
 12. இப்படியான குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஏற்கனவே சந்தித்துள்ளோம் 1..தமிழ்ராச்சி மாநாடு1974 2.வியாபாரம் செய்த வயோதிபரை சுட்டு கொலை செய்த பின்பு பயங்கரவாதி என அழைத்தமை 77களில் 3.யாழ்ப்பாண கூட்டுறவு சங்க தலைமையகத்தில் காவலாளிகளை கொலை செய்த பின்பு பயங்கரவாதிகள் என சொன்னமை 4. யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய பின்பு ......
 13. அருமை சுவியர் .... என்றும் தீராது மனிதனின் அதிகார பசி ஆக்கிரமிப்பு பசி ஆத்மீக பசி புகழ் பசி கெளரவ பசி இவை இருக்கும் வரை கொலை களம் நிரந்தரம்
 14. அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்... தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்
 15. இன்றைய லங்கா மாதவின் பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்
 16. என்ன தான் இருந்தாலும் 30 வயசில -ஹார்மோனியம் வாசிக்கும் பொழுது இருந்த வேகம் இப்பொழுது விரல்களுக்கு இல்லையே என உள் மனதில் ஒர் கவலை அவருக்கு எட்டி பார்த்திருக்கும்
 17. சத்தியமா அது ஒர் வல்லிய சோகமானு
 18. என்ட இதயம் காதலித்தது ஒருத்தியை மட்டுமல்ல ,பல இளம் பெண்களின் இதயத்தை ...ஆனால் ஒரு இதயமும் பதிலுக்கு என்னை காதலிக்கவில்லை
 19. கதை அருமை தொடருங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்
 20. நன்றி ராஜா அவனே எல்லாம்...அவன் ஆட்டிப்படைக்கிறான் நாங்கள் ஆடுகிறோம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.