-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஒரு சண்டைப்பிரியனை அதிகாரத்தில் இருத்தியபோதே இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். இன்னும் வரும்...... எனக்கு வெனிசுவேலாவும் இரக்கமற்ற அரக்க நாடு தான்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
முதல் தடவையாக டூப் இல்லாமல் பாய்ந்து இருக்கிறார்.😅 பரவாயில்லை. தொடர்ந்து முயலட்டும்.
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
நன்றி நிழலி பகிர்தலுக்கு... இதை பார்த்தவுடன் பக்கத்தில் இருந்த மகளிடம் (மருத்துவம் கடைசி வருடம்) என்னையும் மனைவியையும் உடனே பதியும்படி சொன்னேன். தமிழர்கள் செய்வது அரிது. உடனே தன்னையும் சேர்த்து செய்வதாக சொன்னார்.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. திராவிட நாடு ஒன்றை வலாற்காரமாக பிடித்து வைத்துக் கொண்டு சீமான் இவ்வாறு சொன்னால் இரண்டும் ஒரே தன்மையை உடையன. சீமானின் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தாலும் அதன் மூலம் திராவிட நாடு ஒன்றை ஏற்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள் 🙏
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
அது சரி காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது இரண்டிற்குள்ளும் நானில்லை. பட்டறிவிலிருந்து கற்ற பாடம். அகதியாக ஓடி வந்து நான் படும் வேதனை. ஒரு மண்ணில் இருந்து ஒருவரை அடியோடு புடுங்கி...... அதுவும் அவர் அதை கேட்காதபோது...?? சுமந்திரன் இதை சொன்னார் என்று அதை நான் பார்க்கவில்லை. ஆனால் இங்கே சுமந்திரன் சொன்னதால் தான் என்று வாதிடுவோர் நான் இதை சொவ்லியிருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொடுத்தது போதாதா? இவர்களையுமா ...? என்று தான் முடித்திருப்பார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மிகத் தவறான புரிதலும் உள்நோக்கமும். உங்களுக்கு கரம்பன் மண்ணுக்கும் கண்டி மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது என்று என்னால் எழுத முடியவில்லை.. நீங்கள் சிலர் என் போன்ற சிலரை எங்கே குற்றம் கண்டு பிடிக்கலாம் எங்கே சிறு தடுமாற்றம் அல்லது கொள்கை சறுக்கலில் சிக்குவார்கள் என்று தான் இங்கே வருகிறீர்கள். எனவே நான் எதை எழுதினாலும் அதை எப்படியாவது உருமாற்றி தான் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் யாழில் இருந்து முடிந்தவரை தள்ளி நிற்கிறேன். என்னைப்போல பலர் இங்கே....
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் அதிபர் மிகவும் இக்கட்டான நேரத்தில் மிகவும் கடினமான முடிவை எடுத்திருப்பது உலக அமைதிக்கு வழி வகுக்கும். அதேவேளை தனக்கு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறார். நல்லது நடக்கட்டும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?? வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா?? மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர.... மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொழும்பு சிங்களப் பகுதி அல்ல. அது தலைநகரம். அநேகமாக தலைநகரங்கள் அந்த நாடுகளின் இனத்தை பிரதிபலிப்பதில்லை.