Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது. அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று. இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
  2. நல்ல காலம் இந்தச் சிக்கல்களுக்குள் மாட்டுப்படவில்லை.. எங்கள் மாணவப் பருவம். 😄 வெளிநாட்டில் தமிழ்மொழியை கற்பது தெரிவாக இருப்பது தவறே அல்ல. ஆனால் போட்டிப் பரீட்சைகளுக்காக மொழியை கற்பிப்பது என்பது... மொழி ஆற்றலை.. ஆளுமையை வளர்க்குமா.. பரீட்சையோடு மொழி அறிவு மடியுமா... என்பதை இட்டுத்தான் அந்தக்ச் சிக்கல் உள்ளது. ஏனெனில்.. அந்தந்த நாட்டு மொழிகளில் கற்று பரீட்சைகளில் தேறியதையே ஞாபகம் வைச்சுப் பாவிக்கத் தெரியாத பலரை தான் இப்ப காண முடியும்.. புலம்பெயர் நாடுகளில்.
  3. இதற்குள் சாதி.. மத.. இன.. வகுப்புவாதங்களுக்கு அப்பால்.. சொறீலங்கா சனாதிபதி தான் எல்லாமே. முதலில் இந்தச் சர்வாதிகாரத்தை ஒழிக்கனும். அப்புறம் கல்வித் தகுதி அடிப்படையில்.. தனிமனித ஒழுக்கம் உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டு.. யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும்.
  4. வர வர மனிதனின் புத்தி வக்கிரமாகிக்கிட்டே போகுது. இதிலும்.. போதை ஊசி பாவிச்சு விளையாடுவினமோ..???! மேற்கு ஐரோப்பா.. மிக மோசமான சிந்தனையில் போய்க்கிட்டு இருக்குது.
  5. சனாதிபதி என்ன பொருளாதார நிபுணரா..?! விலைகளை தீர்மானிப்பது ஏற்றுமதி இறக்குமதியை தீர்மானிப்பது எல்லாமே அவராக இருக்குது. சொறீலங்காவில் இந்த ஒற்றையாட்சி.. சனாதிபதி சர்வாதிகார முறைமை ஒழியாமல்.. நாட்டுக்கு விமோசனம் இல்லை.
  6. அவை ஏன் சிக்கப் போகினம். சாதாரண மக்களும்.. தாயகம் தன்னாட்சி என்று இயங்கவல்ல சில புலம்பெயர் அமைப்புக்கள் தான் இவையட்ட சிக்கி சின்னாபின்னமாகனும். அவை எப்பவும் தெளிவாத்தான் இருக்கினம். ஒட்ட வேண்டிய இடத்தில் ஒட்டுவினம். அதுதானே அவைட கொள்கை.
  7. தான் தான் உலகச் சண்டியன்.. ரெளடின்னு மார்த்தட்டிக்கனும். தனக்கு கீழ் தான் இந்த உலகம் என்ற ஒரு வகையான பைத்தியக்காரத் தனத்தின் உச்சத்தில் அமெரிக்க ஆட்சியாளர்களும் இராணுவமும் இருக்குது இப்ப கொஞ்சக் காலமா.
  8. துணை வேந்தர்.. யாழ் மாநகர சபைக்கா.. பல்கலைக்கழகத்துக்கா..??! செய்து யாப்பவர்கள்.. குடு அடிச்சிட்டா.. யாக்கிறார்கள்..??!
  9. இவங்கள் சாப்பாடு போடிற நேரம் நீங்கள் ஒரு பந்தல் அமைச்சு ஓசில சாப்பாடு தண்ணி கொடுங்க.. ஒரு போத்தல் சாராயமும் கொடுத்தியல் என்றால்.. அவ்வளவு 'தமிழ் பெளத்தர்களும்' உங்கடை பந்தலில் தான் கிடப்பார்கள். எங்கு வறுமையும் இயலாமையும் இருக்கோ.. அங்கே.. மக்களை மிக மலிவாக விலைக்கு வாங்குவது சுலபம். சிங்களம் தெரிஞ்சு தெரிவு செய்து நடந்து கொள்கிறது. அவன் இப்ப மொக்கன் இல்லை. நாம தான் மொக்கராகி இருக்கம்.
  10. ஒபரேசன் லிபரேசன் தானே நடந்தது.. 1987 இல். இதென்ன லிபரேசன் ஒபரேசன்.. தலைகீழான பெயராக் கிடக்குது..??! அர்த்தமும் பிழை.. வரலாறும் திரிபாகுதே..??! மில்லர் அண்ணாவின் தியாகம் உட்பட பல வேங்கைகளில் தியாகத்தின் விளைவு.. இந்த சொறீலங்கா இராணுவ நடவடிக்கை.. ஹிந்திய தலையீட்டுக்கு வழிவகுத்து.. இடைநடுவில் நின்று போனது. இதனை வழிநடத்திய சிங்கள தளபதிகள்.. அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இன்று உயிருடன் இல்லை. புலிகளும் இல்லை.
  11. தமிழ் வர்த்தகரை சுட்டுக் கொன்றுவிட்டு இல்லாத புலியின் முன்னாள் புலனாய்வாளர் என்ற பெயரில்.. அரங்கேறி இருக்கும் படுகொலை. இன்னும் எத்தனை தமிழ் உயிர்களை பலியெடுக்கும் இன்னொரு தொடக்கமாகக் கூட இது அமையலாம்.
  12. துயர் பகிர்வோம் ———————— திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் காலமானார். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை நிறுவனர் அமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் 26.05.2023 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம். இவர், யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கிவரும் பூபாலசிங்கம் புத்தகசாலை நிலையங்களை இயக்கிவரும் ஶ்ரீதரசிங்,ராஜன்,காலமார்க்ஸ் ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார். https://www.facebook.com/poobalasingham202
  13. கனடாவில் பாரிய நிலப்பரப்பு இருக்கு.. அதற்கு மேல் தேவையான உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால்.. இலங்கையில் தமிழர்களுக்கு பாரம்பரிய நிலம் இருக்குது. நாடு இருக்குது. அதனை சிங்களம் ஆக்கிரமித்திருப்பதுதான் பிரச்சனையே. ஆக்கிரமிப்பை விலக்கி தமிழர் நிலத்தை தமிழர்களிடம் வழங்கிவிட்டு சிங்களவர்கள் தங்கள் நிலத்தில் வாழ்ந்து கொள்ளட்டும். யாரும் அதை நிராகரிக்கவில்லையே.
  14. Gravity map reveals Earth's extremes By Jacob Aron 19 August 2013 Go to Mount Everest (middle) if you want to lose weight (Image: GGMplus/Curtin University) Want to lose weight fast? No need to adjust your diet – just move to higher ground. This weight change is the result of fluctuations in Earth’s gravity, which a new high-resolution map shows are greater than thought. Gravity is often assumed to be the same everywhere on Earth, but it varies because the planet is not perfectly spherical or uniformly dense. In addition, gravity is weaker at the equator due to centrifugal forces produced by the planet’s rotation. It’s also weaker at higher altitudes, further from Earth’s centre, such as at the summit of Mount Everest. NASA and the European Space Agency both have satellites with highly sensitive accelerometers that map the planet’s gravitational field, but these are only accurate to within a few kilometres. Adding in topographical data, which adjusts for height variations in local terrain, can improve the maps’ resolution. Accurately constructing tunnels, dams and even tall buildings requires knowledge of the local gravity to guide GPS measurements of height, so higher resolution maps are important for civil engineering. Christian Hirt of Curtin University in Perth, Western Australia, and colleagues combined gravity data from satellites and topographic data to map gravity changes between latitudes 60° north and 60° south, covering 80 per cent of Earth’s land masses. The map consists of more than 3 billion points, with a resolution of about 250 metres. Computing gravity at five points would take 1 second on an ordinary PC, but the team used a supercomputer to do the whole lot in three weeks. Free fall favourite The model pinpoints more extreme differences in gravitational acceleration than previously seen. Standard models predict a minimum gravitational acceleration of 9.7803 metres per second squared at the equator and 9.8322 m/s2 at the poles. Hirt’s model pinpoints unexpected locations with more extreme differences. Mount Nevado Huascarán in Peru has the lowest gravitational acceleration, at 9.7639 m/s2, while the highest is at the surface of the Arctic Ocean, at 9.8337 m/s2. “Nevado was a bit surprising because it is about 1000 kilometres south of the equator,” says Hirt. “The increase in gravity away from the equator is more than compensated by the effect of the mountain’s height and local anomalies.” These differences mean that in the unlikely event that you found yourself falling from a height of 100 metres at each point, you would hit the surface in Peru about 16 milliseconds later than in the Arctic. You would also lose 1 per cent of your body weight in moving from the Arctic to the Peruvian mountaintop, although your mass would not change. Journal reference: Geophysical Research Letters, DOI: 10.1002/grl.50838 https://www.newscientist.com/article/dn24068-gravity-map-reveals-earths-extremes/ 10 ஆண்டுகளுக்கு முன்னரே பல கணிப்புகள் வெளியாகிவிட்டன.
  15. கருநீலப் பகுதி எங்கும்.. புவியீர்ப்பு குறைவு. அதற்குள் வடக்கு பகுதி அடங்கும். அந்தக் கருநீலப் பகுதிக்குள் இருக்க கூடிய சிறிய மாற்றங்கள் குறிப்பிடப்படவில்லை.
  16. இது புதுவிடயமே அல்ல. ஏலவே தெரிந்தது தான். ஆனால்.. இலங்கையின் தெற்கு என்பது சோடிப்பு. இலங்கை அமையும் பூமியின் பகுதியில்.. இது பொதுவாக காணப்பட்டாலும்.. அதற்குள்ளும்.. அடர்த்தி குறைந்த சுண்ணாம்புப் படிமைப் பாறைகள் (sedimentary rock) மீதிருக்கும்.. வடக்குப் பகுதியில்.. புவியீர்ப்பின் அளவில் சிறிய குறைவு இருக்க சாத்தியமுள்ளது.. தெற்கை விட. காரணம்.. தெற்கு மற்றும் மத்தியில்.. அடர்த்தி கூடிய கருங்கல்பாறைகள் அடங்கிய எரிமலைப் பாறைகள் (igneous rock) அதிகம் உள்ளன. மேலும் தெற்கு என்ற ஊடகச் சோடிப்பு என்பது.. தென்னிலங்கை நோக்கிய கவனயீர்ப்புக்காக இருக்கலாம். இதன் மூலம் உல்லாசப்பயணிகளை தெற்கை நோக்கி இழுக்கலாம்.. என்ற தோறணை இருக்கக் கூடும். மேலும்.. ஹிந்தியாவின் விண்வெளி ஏவு தளம் தென்னிந்தியாவில் உள்ளது. இதற்கு சீனா அச்சுறுத்தல் சொல்லப்பட்டாலும்.. முக்கிய காரணங்களில்.. இந்த புவியீர்ப்பு வலயமும் அமையும்.
  17. இப்படித்தான் புலிகள் மீதும் மேற்குலகம் குற்றம் சுமத்திவிட்டு.. முஸ்லிம் நாடுகளை சுடுகாடாக்கியது. இவ்வளவு சீப்பான நிலைக்கு உக்ரைனை தள்ளி விட்டன.. மேற்கு நாடுகள்.
  18. இதே ராஜீவின் படைகள் 36-34 ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில்.. செய்த தமிழினப் படுகொலைகள்.. முஸ்லிம்களை தேடித் தேடி வேட்டையாடியதை மறந்துவிட்டு.. இப்போ.. கண்கண்ட சாட்சியம் போல் கதை அளப்பதை நிறுத்துவது நல்லது.
  19. ரஷ்சிய - உக்ரைன் போரில் நீண்ட சண்டைகளில் ஒன்றாக கருதப்படும் Bakhmut நகருக்கான சண்டையில் ரஷ்சியா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்சிய இராணுவக் குழு அறிவித்துள்ளது. The head of Russia’s Wagner mercenary group, Yevgeny Prigozhin, earlier claimed the complete capture the town, scene of the longest and bloodiest battle in Moscow’s offensive. ஆனாலும் தாம் இன்னும் சில கட்டிடங்களை பிடிச்சு வைச்சிருப்பதாகவும் நிலமை தமக்கு மோசமாக உள்ளதாகவும் உக்ரைன் தரப்புக் கூறியுள்ளது. Ukraine’s Deputy Defence Minister Hanna Maliar says the situation is critical in the eastern town of Bakhmut, which Russia’s Wagner group claims to have captured. https://www.aljazeera.com/news/liveblog/2023/5/20/g7-summit-live-news-ukraines-zelenskyy-set-to-arrive-in-japan?update=2210437
  20. இவருக்கு மட்டும் நிம்மதி போலும். நாடே பிச்சை எடுக்குது. மேலும் புலிகள் சொந்த நிலத்தில் பூரண தாயக சுதந்திரம் வேண்டி நின்றமை ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றமை பயங்கரவாதம் என்றால்.. அடுத்தவன் நிலத்தை இராணுவ பலத்தால் ஆக்கிரமித்து.. புத்த விகாரை கட்டுவது மட்டும்.. அதுதான் மிகக் கொடிய பயங்கரவாதம். அது ஒழியும் வரை இலங்கைத் தீவுக்கு நிம்மதியில்லை.
  21. ஜேர்மன் இலத்திரனியல் கார்கள் நல்லமில்ல. சென்சர் எல்லாம் விரைவில் கெட்டுப்போகுது. பி எம் டபிள்யு ஆக்கள் எல்லாம்.. இப்ப ஜப்பான் காருக்கு தாவினம்.
  22. உக்ரைன் விடயத்தில் கனடாவின் நிலைப்பாடை விழுந்தடிச்சு வரவேற்கும் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள்.. இந்த விடயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ளாதது ஏனோ..???! கனடா தனது கூட்டுகளிடம் இதனை வலியுறுத்துமா..??! இல்ல கனடா தமிழர்களின் வாக்கு போரத்துக்காக மட்டும் இந்த அறைகூவலா..??!
  23. ஒரு தீவான இலங்கைக்குள் இவ்வளவு பாதுகாப்பு நடைமுறைகளையும் தாண்டி எப்படி போதைப்பொருள் நாட்டுக்குள் வருகுது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்களே.. அந்த தொழிலை விட்டிட்டு.. போதைப் பொருளும்.. இனவாத நடவடிக்கைகளும் செய்வதால் போலும். ஒரு பக்கம் போதைப்பொருள்.. இன்னொரு பக்கம் புத்த விகாரை. மக்களை ஒரே போதையில் வைச்சிருப்பதே இவர்களின் நோக்கம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.