Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. விக்கியர்.. சுரேஸ் பிரேமசந்திரன்.. சைக்கிள் கட்சி உறுப்பினர்கள், அனந்தி சசிதரன்.. ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் யாரும் தமிழ் கட்சி சார்ந்தவர்கள் இல்லையோ..??! குறைந்தது சொறீலங்கா பாராளுமன்றை தமிழ் மக்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும்.. விக்கியர்.. கஜேந்திரகுமார் கட்சியினரும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். தனக்கு சார்ப்பான ஆட்களை ஒட்டுக்குழுக்களை வைச்சு ஹிந்தியா தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகம் எனியும் எடுபடாது. 1987 - 1990 காலம் அல்ல இது.
  2. தேர்தலில் வெல்லாத இவர் ஜனாதிபதியாக முடியும் என்றால்.. அதுவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆக முடியும் என்றால்.. ஏன் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை. ஏலவே புலிகளை அழிக்க உதவினால்.. தமிழ் மக்களுக்கு 13+ யை வழங்குவம் என்றைவை தானே இவரை பினாமி ஆக்கி வைச்சிருக்கினம்.
  3. ஜப்பான் புலிகளோடு பேசிக் கொண்டு இணைத்தலைமை நாடுகளுக்கு தலைமை தாங்கிய போது தமிழர் தரப்புக் கருத்துக்களை கேட்டது போல்.. தற்போதும் தமிழர் தரப்புக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். வெறுமனவே சிங்கள அரசு தரப்பு கருத்துக்களோடு ஜப்பான் பயணிப்பது இன்னொரு ஏமாற்று வேலை.
  4. டக்கிளஸ் இப்படித்தான் மொக்குத்தனமாக செலவு செய்து ஒன்றையும் தமிழ் மக்களுக்கு உருப்படியாகச் செய்தது கிடையாது. இந்தப் படகை காட்சிப்படுத்திவிட்டு.. அல்லது ஓரளவுக்கு இயங்கக் கூடிய நிலையில்.. நிறுத்தி வைத்துவிட்டு.. உல்லாசப் பயணிகளின் பார்வைக்கு.. புதிய நவீன வசதிகளுடன் கூடிய படகுகளை கொள்வனவு செய்து இயக்கி இருக்கலாம்... இந்தக் காசுக்கு.
  5. முதலில் சிங்கப்பூரில்.. போதைப்பொருள் வைச்சிருந்தார் விற்றார் விற்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மனித உயிர்களைப் பறிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள். கடும் குற்றவாளிகளை கிலோ கணக்கில் தொன் கணக்கில் போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும்.. சட்டபூர்வாமாக்கி வைச்சிருக்கும் நாடுகளோடு சிங்கப்பூர் எல்லைகளை மூடுமா...??! அதைச் செய்யாமல்.. அவுன்ஸ்.. கிராம் கணக்கில் போதைப் பொருள் வைச்சிருந்ததாகச் சொல்லி மனிதர்களை ஈவிரக்கமின்றி கொல்லும் போக்கை சிங்கப்பூர் கைவிட வேண்டும். இப்படி திருந்த வாய்ப்பளிக்கக் கூடிய.. குற்றங்களுக்காக மனிதர்களைக் கொல்வது.. சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.
  6. யாழில் புத்தவிகாரைகளை நிர்மாணிப்பவர்களும் அதற்கு பூத்தூபுவர்களும் தான் இதற்குப் பின்னணியில் இருக்க முடியும். ஆனால் கடைசில்.. பிள்ளை கிடைக்காதவனும் கிடைக்காதவளும் பலிக்கடா.
  7. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு விகாரையை அகற்றச் சொல்லாமல்.. அங்கு பூத்தூவும் இத்தகையை அடிவருடிகளால் தான் தமிழன் இன்று ஈழத்தில் சிங்கள பெளத்தத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு திமிருக்குள் அடிமைப்பட்டுக்கிடக்கிறான். இவங்களிடம் போய் நிலத்தை மீட்டுத் தா.. என்று கெஞ்சுபவர்களை என்னென்பது. அந்த நிலங்களை ஆக்கிரமிச்சுக் கொள்ள துணை நின்றதே இவங்கள் தானே.
  8. வங்கதேசத்தை உருவாக்கிய..தமிழீழத்தை ஆதரித்த... இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்கு ஈடான கொள்கை வகுப்பாளர்கள் இப்பவும் உருவாகுவார்களாக இருந்தால்.. இவரின் இந்தக் கூற்று வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால்.. தற்போதைய ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் கீழ் ஈழத்தமிழர்கள் ஹிந்தியாவிடம் சரணாகதி அடைவது முள்ளிவாய்க்காலில் சிங்களவனிடம் சரணாகதி அடைந்த நிலையைவிட மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
  9. தென்னிலங்கையின் நலன்களும் துறைமுகங்களும் காலியாகும் என்பது தான் சாலப் பொருந்தும். மேலும் தமிழர் பகுதிகளை தென்னிலங்கை சார்ந்திருக்கும் நிலை தோன்றும். அது சிங்கள பெளத்த பேரின நிலைப்பாட்டுக்கு அதன் செழிப்பு.. சாதகமாக இருக்காது. இதுதான் இந்த புத்திசீவியின் பயம்.
  10. உண்மையில் எம்பிலிடிப்பிட்டியவில் இருந்து தொடருது. திட்டமிட்ட சிங்கள பெளத்த பயங்கரவாத அரசுகளின் அதன் முப்படை பொலிஸ் இயந்திரத்தின்.. மனிதப் படுகொலைகளை..இனப்படுகொலைகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிக்க முன்வராத சர்வதேச அமைப்புக்களும் நாடுகளுமே தான்.. இந்த நீட்சிக்கு முக்கிய காரணம். அவற்றின் ஆசீர்வாதத்தோடு தான் சொறீலங்காவில் அரச பயங்கரவாதம் நீதிக்கு உட்படாத மனித இனப்படுகொலைகளை நிகழ்த்தி தொடர்ந்து தப்பிக்க வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கி இருப்பதை இப்போதாவது உணர்வார்களா..??!
  11. சுவிஸில் நடைமுறையில் உள்ள சமஷ்டி முறைமை குறித்து இந்தப் பட்டறையை நடத்தினாலாவது சில ஆக்கபூர்வமான சிந்தனைகள் பிறக்க வழி ஏற்படும். அதைவிடுத்து ஒற்றையாட்சி.. இனப்படுகொலை அரசுகளின் கீழ் அவற்றின் இராணுவ ஆக்கிரமிப்பு இருப்பின் கீழ் நல்லிணக்கம் என்பது.. வெறுப் போலி கோசமாகவே இருக்க முடியும்.
  12. ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!
  13. புலிகள் காலத்தில் ஹிந்திய அதிகாரிகள் சொறீலங்காவுக்கு ஓடி வந்த தடவைகளை விட இப்போ அதிகம் ஓடுகிறார்கள். புலிகள் இல்லாத கடந்த 14 ஆண்டுகள்..ஹிந்தியாவுக்கு தலையிடியானதாகவே இருந்துள்ளது. இது அமெரிக்க சார்பு மேற்குலகிற்கும் பொருந்தும். தவறான வெளியுறவுக் கொள்கைகளின் விளைவு இது. உண்மையான பகையை இனங்காணத் தெரியாத பங்குவமற்ற கொள்கை வகுப்பாளர்களின் நடவடிக்கைகளால்.. ஹிந்தியா சிதறிச் சின்னாபின்னமாவது உறுதி. அதில் சோனியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
  14. ஆதவன் நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தும் நிகழ்ச்சிகளை செய்திகளை ஒருங்கமைத்து வெளியிடுகிறது.
  15. ரஷ்சிய பாதுகாப்பு முன்னரங்க நிலைகளிலேயே தகர்ந்து போகும் மேற்குலக டாங்கிகள்...கவச வாகனங்கள் - உக்ரைன் தளபதி ஏமாற்றக் குரல் (பிபிசி) The general in charge of Ukraine's stuttering counter-offensive in the south has said Russian defences are making it difficult for military equipment, including Western tanks and armoured vehicles, to move forward. (BBC)
  16. அரச வட்டாரத்துக்குள் உள்ளவையிட குடும்ப உறுப்பினர்களை அனுப்பி வைக்கவே இந்த தொகை காணாது. அதுக்குள்ள பப்பிளிக்கில விட்டு ஆட்சேர்ப்பாங்களாம். அது மாலைதீவு.. மத்திய கிழக்கு என்றால் மட்டும் தான். இப்படி ஐரோப்பா.. அமெரிக்கான்னா.. அதுக்கு சாதாரண இலங்கைப் பிரஜைகளுக்கு அரசு கடைக்கண் பார்வை கிடைப்பது கடினம்.
  17. காலப்பிந்தியதாயினும் வரவேற்கத்தக்க விடயம். அந்த மக்களின் துயரை பாப்பரசர் உட்பட கத்தோலிக உலகிற்கு நடந்த இனப்படுகொலையை உள்ளபடி சொன்னால்.. தெரியப்படுத்தி.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மண்ணுக்கும் ஒரு நீடித்த நீதியை பெற்றுக்கொடுக்க உதவினால் இன்னும் சிறப்பாக இருக்கும். உண்மையில் முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் மறைந்த இராயப்பு ஜோசப்பு இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கவர். காரணம் போர்காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி தான் சார்ந்த மக்களின் துயரை மத அடையாளங்களுக்கு அப்பால் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல பலமாக உழைத்தவர். அதேவேளை அதே காலப்பகுதியில் வாழ்ந்த முன்னாள் யாழ் ஆயர் மறைந்த செளந்தரநாயம் அவர்கள் மக்களின் குரலாக ஒலித்தாலும்.. ரிவிரெச சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின் சுருதி மாற்றிக்கொண்டவர்.
  18. நல்லூர் நிர்வாகத்தின் இந்த நெகிழ்வு தன்மை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மத நல்லிணக்கம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாக காணப்பட்ட விடயம். போர் காலத்தில் கூட..! ஆனால்.. நல்லூர் நிர்வாகம் இப்படி ஒரு தரப்புக்கு வளைந்து கொடுத்தால்.. அதையே மேலும் பலரும் எதிர்பார்க்கக் கூடும். அது இதுவரை காத்து வந்த ஆலய மரபுக்கு முரணாகவும் அதன் தொடர்ச்சிக்கு உதவாமலும் அமையும்.
  19. இதிலும் ஆணாதிக்கமா.. முடியல்ல. பிடரியில்லாச் சிங்கமுன்னு சொல்ல வந்தோமுங்கோ.
  20. தேசிய தலைவரின் நேரடி தலைமைத்துவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை தான்.. புலிகள் அங்கத்தவர்கள் மக்களால்..நம்பிக்கைக்குரியவர்களாக பார்க்கப்பட்டார்கள்....வரவேற்கப்பட்டார்கள். அதன் பின்.. அவர்கள் எத்தனை தான் முயன்றும் மக்களின் நம்பிக்கையை பெற முடியவில்லை.. என்பது தான் யதார்க்கம். அந்த வகையில்.. இந்த சிலுசிலுப்புக்கெல்லாம்.. மக்கள் எடுபட வாய்ப்பில்லை. எதிரிகளுக்கு உதவலாம். அவ்வளவே.
  21. நல்ல காலம் உக்ரைனுக்குப் போன இராணுவத்தையும் லெப்பாட் டாங்கிகளையும் திருப்பிக் கூப்பிடவில்லை. எப்படி இருந்த ஜேர்மனி.. அமெரிக்காவுக்கு வால்பிடிக்கப் போய் ஒரு சிங்கத்தின் அதுவும் பெண் சிங்கத்தின் பெயருக்கு அல்லாடும் நிலையில்..
  22. தெற்கில் மலையகத்தில் உள்ள சைவ அடையாளங்களை மீட்பதே இதற்கு ஒரேவழி. அதற்கு சிவசேன போன்ற ஹிந்திய கடும்போக்கு இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சிவனொளி பாத மலையையும் மீட்க வேண்டும். சும்மா பைத்தியம் பைத்தியம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால்.... சிங்கள பெளத்த பேரினாவதப் பயங்கரவாதிகளின் பைத்தியம் தீராது. மாறாக.. தீவிரமாகும்.
  23. யாழ் நோக்கி சிங்களவன் ரயில் விடத் தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன. இருந்தும் இன்னும் அதனை தடுப்பதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் இல்லை. இதற்கு காரணம்.. என்ன.. மனித உயிர்களின் மதிப்பறியாத நிலையா.. இல்லை அறிவிலிகள் கூட்டத்தால் நாடும் சேவைகளும் நடத்தப்படுவதா..??!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.