Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. குற்றவாளியாக சட்டத்தின் முன் நர்ஸம்மா தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால்.. இந்தக் குற்றம் 1 இல் இருந்து 7 வரை தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை பற்றியும் அதற்கு உடந்தையாக இருந்த செயற்பாடுகள்.. நபர்கள் பற்றியும் ஏன் நடவடிக்கை இல்லை..??! முதல் குழந்தையின் இறப்புக்கான உண்மைக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலே.. மிச்சம் 6ஐ தடுத்திருக்க முடியும். இறப்பின் பின் கோரனர் என்ன அடிப்படையில்.. இறப்பை பதிவு செய்தார்... என்று புரியவில்லை. ஒருவேளை இந்த நர்ஸம்மா உண்மையான குற்றவாளியாக இருந்தாலும்.. அவர் தொடர் குற்றம் செய்ய ஏதுவான சூழலை அமைத்துக் கொடுத்த நபர்கள்.. நடைமுறைகள்.. செயற்பாடுகள்.. கொள்கைகள் எல்லாமே சீர்செய்யப்படனும். அண்மையில்.. டி என் ஏ பரிசோதனையின் பின்.. நீண்ட காலமாக சிறையில் இருந்த ஒரு குற்றவாளி நிரபராதின்னு விடுவிக்கப்பட்டு உண்மையான குற்றவாளி பல ஆண்டுகளின் பின் கைதாகி உள்ளார். இந்த நிலை உருவாகாமல் இருந்தால் சரி. வரவர பிரித்தானியாவின் சில நீதிச்செயற்பாடுகள்.. பொலிஸாரின் அவசரத்தில் அமையும்.. அரைகுறை சோடிப்பு ஆதாரங்களை மையப்படுத்தி அமைந்து விடுகிறதோ என்ற கேள்விகளும் தொக்கு நிற்கின்றன.
  2. இவை உப்படியே உன்னிப்பா கவனிக்க வேண்டியான். ஒவ்வொரு சீனக் கப்பலா வந்து வேலையை முடிச்சிட்டு போகும். ஒரு நாள் மொத்தமா ஆப்படிக்கும் போது சிங்களவன் கடனுக்கு கூட கிட்ட வரமாட்டான். அப்ப தான் ஹிந்தியாக்காரனுக்கு அவனின் தப்புத் தாளம் புரியும்.
  3. சீனலங்கா ஏலவே அமைந்து விட்டது. காலிமுகத் திடலுக்கு போனாலே தெரியும். இந்த வெட்டிகளுக்கு அதெல்லாம் பெரிய விடயமே அல்ல. அதுக்கெதிராக.. ஒரு துரும்பும் அசைக்காது தமிழீழம் அமைவது பற்றி கவலைப்படும்.. இந்த வெட்டிகளுக்கு... தனித்தமிழீழம் தான் இப்பவும் கண்ணைக்குத்துது.
  4. உண்மை தான். புத்த துறவிகள்.. நயினாதீவு வரை சென்று வழிபட.. யாழுக்கு விஜயம் செய்ய எல்லாம் புலிகள் உதவினார்கள். அந்த புத்த துறவிகளும்.. சிங்கள பெளத்த மேலாதிக்கம் பற்றிச் சிந்திக்காமல்.. மிதவாதமாக செயற்பட்டார்கள். விஜயங்களோடு.. விவகாரங்கள் ஓய்ந்தன. ஆனால்.. இப்போது அதுவல்ல நடக்கிறது. புத்த பிக்குகள் ஆளாளாளுக்கு விகாரதிபதி ஆகும் ஆசையில்.. சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பை மையப்படுத்தி கட்டாய சிங்கள பெளத்த சின்னங்களை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நிர்மாணித்து வருவதோடு.. தொல்பொருள் திணைக்களம்.. வனப்பாதுகாப்பு திணைக்களம்.. காணிப் பதிவு திணைக்களம் மற்றும் பிற்போக்குவாத சிங்கள பெளத்த பேரினவாத அரசியல்வாதிகளையும் சிங்கள பெளத்த முப்படை மற்றும் பொலிஸ் தமிழ் இனப்படுகொலை வெறியர்களையும் இதற்கு பயன்படுத்தி வருவது.. புலிகள் காலத்தில் பெரிதும்..நிகழாத ஒன்று.
  5. முஸ்லிம் ஊர்காவல் படைகளால்.. தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டவை எதுவும் ஆவணமாகவில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறைக்க.. இப்படியான ஒரு சில சம்பவங்களை தமக்கு இசைவாக சோடித்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! நாம் தமிழரோ வாழாதிருக்கிறோம்.. கிடைக்கும் வாய்ப்புக்களையும் இவர்களுக்கு தாரைவார்த்தபடி.
  6. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தேசிய தலைவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். ஏனெனில்.. அவரும் அவரின் அமைப்பும் செய்த தியாகங்கள்.. தர்மத்தின் வழியில் நின்றது.. மக்களின் தேவையின் வழியில் நின்றதை.. இன்றும்.. அவசியம் என்பதை காலம் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த உணர்த்தல் உள்ள வரை தமிழர் உள்ளவரை தலைவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.
  7. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் எங்கள் மீது தன் மதத்தை திணிக்கவே செய்துள்ளனர். அதற்கு எடுபட ஒரு கூட்டமும் எம் மத்தியில் இருந்தே வந்துள்ளது. அதற்கு சிங்கள பெளத்த பேரினவாதமும் விதிவிலக்கல்ல. ஆக்கிரமிப்பு ஆயுத பலத்தின் அடிப்படையில் அமைவதால்.. ஆயுத பலமற்றிருக்கும் மக்களை எப்படியும் ஏறி மிதிக்கலாம்.. என்ற மிதப்பின் வெளிப்பாடுகளே இவை.
  8. பாகிஸ்தான் உருவாகும் வரை பாகிஸ்தான் உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வங்கதேசம் உருவாகும் வரை வங்கதேசம் என்ற சொல்லே உருவாகாது என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொசாவோ உருவாகும் வரை அப்படி ஒரு நாட்டுக்கான தேவை இருக்கான்னு கூட தெரியாமல் தான் இருந்தார்கள்.. இந்த வெட்டிகள். ஆக தனித்தமிழீழம் உருவாவதும் விடுவதும்.. ஈழத்தமிழரின்.. பிராந்திய பூகோள காலத் தேவையின் நிமிர்த்தம் அமையும்.
  9. இந்த திட்டம் ஏலவே கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது. அறிவித்தப்படியே ரஷ்சியா அனுப்பி உள்ளது. இதில் ஹிந்தியா சந்தியில் சிந்து பாடுவது ஏனோ? ரஷ்சியாவின் விண்வெளி வெற்றிகள்.. பயணங்கள்.. என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவையும் விட முந்தையது.
  10. ரஜனியை எனியும் கீரோவாகப் பார்க்க முடியாது. கிழவராகக் காட்டிற படம் வந்தால் ஒழிய.. படம் பிளாப்.
  11. கப்பலில் ஏற்றப்பட்டவர்கள் மீண்டும் இறக்கப்பட்டு விட்டார்கள். காரணம் ஒரு வகை பக்ரீரியா (லிஸ்ரிரீயா) பரவல். வயதான உள்ளூர் சமூகத்தைப் பிரயீடு செய்ய.. இந்த இளம் புலம்பெயரிகளை பாவிக்கலாம். ஆனால்.. நடப்பு பிரிட்டன் அரசுகள்.. இது விடயத்தில் நடந்து கொள்வது.. நாட்டுக்கு தான் பாதிப்பு.. நீண்ட கால நோக்கில்.! இந்த அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் எங்கட ஆக்கள் மண்ணுக்கும் இல்லை.
  12. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கனும். விட்டிட்டு.. கோட்டில போய் கோட் போட்டு பேசி கிழிப்பம்.. வெல்லுவம் என்ற போலிப் பேச்சுப் பேசும்.. அப்புக்காத்துமாற்ற கதையை நம்பி.. இப்ப காலம் கடந்து ஞானம் பெறுவதே தமிழர்களின் பிழைப்பாப் போச்சு. வெள்ளம் வரும் முன் அணைகட்டி இருக்க வேண்டும்.
  13. மனோவும் ரணிலை நம்பி நம்பி காலத்துக்கு காலம் கதை சொல்லி தன் பிழைப்பை பார்த்துக்கிறாரே தவிர.. மேற்கிலங்கை வாழ் தமிழ் மக்களுக்கோ.. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கோ.. மலைய மக்களுக்கோ ஒரு விமோசனமும் வந்ததாகத் தெரியவில்லை.
  14. வடக்குக் கிழக்கில் கட்டிற புத்தகோவில்களுக்கு ஆகிற செலவுகளையும் வடக்குக் கிழக்கு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து நிற்க பயன்படும் சிங்கள பெளத்த பொலிஸ் படை மற்றும் முப்படைக்கு ஆகும் செலவினங்களையும்.. அப்பாவி ஏழை எழிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாமே..??!
  15. கனிமொழி தன்னை கண்ணகியோடு ஒப்பிடுவது பெரும் அபந்தம். மேலும் கண்ணகி மதுரைக்கு சொந்தமானவள்... இவா.. கருணாநிதி குடும்பத்துக்குச் சொந்தமானவர்.
  16. யாழில் முன்னர் இராமாயணம் தொடர்பாக நடந்த பல கருத்தாடல்களின் போது சொன்னது... தான்.. இராமாயணம் வெறும் புனைகதை இலக்கியம் அல்லது புராணம் என்றும் அதற்கு எதிராக பேசுவது பகுத்தறிவு.. முற்போக்குவாதம் என்றும் பசப்பப்படுவதிலும்.. இராமாயணம் சொல்லும் புவியியல்... சமூகச் சான்றுகளை மையமாக வைச்சு.. தமிழர் வரலாற்றுச் சான்றுகள் பெறப்படுவதும்.. ஆவணப்படுத்தப்படுவதும் அவசியம் என்று. ஆனால்.. அதனை எல்லாம் கருத்தியலால் மறுத்தவர்கள் இப்பவும் இங்கு யாழில் இருக்கினம். அவைட.. அந்த மறுதலிப்புகளின் பலனை சிங்களம்.. தனக்கான வாய்ப்பாய்க்குக் கொண்டிருக்குது. சரி அதுபோக.. உவர் வீரசேகரவின் வாதப்படி.. பார்த்தாலும்.. இராவணன் சிங்களவன் என்றாலும்.. சிவனை வழிபட்ட சைவன். அப்போ சிங்களவர்கள் பெளத்தர்கள் என்ற உவரின் மகா வம்ச வாதம் அடியோடு சாய்கிறது. சொறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்ற கற்பனை கோட்பாடும்.. சிதறித் தூள் தூளாகிறது. அதைச் செய்த பெருமை.. வீரசேகரவை சாரும். உவர் வீரசேகர தமிழ் மொழியை நிந்திக்க முற்படுகிறாரா.. இல்லை பொய்யான சான்றுகள் தேடி ஒட்டுமொத்த சிங்களவர்களையும் பெளத்தர்கள் அல்லாதவர்கள் என்று காட்டிக்கொடுக்கிறாரா..!! இராவணன்.. சைவன்.. சிவபூசை செய்தவன்.. என்பதை இவர் மறுக்க முடியாது. ஏனெனில்.. இராவணன் காலத்தில் புத்தரோ.. பெளத்தமோ இருந்ததில்லை.
  17. சரியான தலைமையின் கீழ் அந்த தலைமையின் இயக்கத்தின் கொள்கைக்கு வழிகாட்டலுக்கு உட்பட்டு இயங்கி மரணித்த எல்லோரும் மாவீரர்களே தான். அந்த வகையில்.. வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கினும்.. தமிழீழம் என்ற தமிழ் மக்களின் பொது இலட்சியத்தை அடைய எவ்வழியில் என்றாலும் தலைமைகளின் கட்டளைக்கு உட்பட்டு போராடி அல்லது செயற்பட்டு.. மாண்டவர்கள் எல்லோரும் மாவீரர்களே. அந்த வகையில் தான் தமிழீழ தேசிய தலைவர் சிவகுமரன்.. குட்டிமணி உட்பட பல தியாகிகளையும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்பணித்தார். குட்டிமணி எதிரியிடம் பிடிபட்டு சிறையில் வீழ்த்தப்பட்டார் என்பதற்காக.. அவர் இறுதிவரை கொண்டிருந்த தமிழீழத் தாகம் என்பது புறக்கணிப்படக்கூடாது. இதே தான் எல்லா மாவீரர்களுக்கும். தமிழீழத்தைக் கைவிட்டு எதிரிக்கு இனத்தை நிலத்தை காட்டிக்கொடுத்தோர்.. ஆக்கிரமிக்க துணை நின்றோர் நிச்சயம் மாவீரர்கள்.. தியாகிகளாக முடியாது. இதில் குழப்பம் எதற்கு..?!
  18. இதென்ன பிரமாதம்.. இதை விட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்குது.. மனுசனை உறைபனி நிலையில் வைச்சு செவ்வாய்க்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  19. ஆழில்லாத விமானம் அல்ல.. தற்கொலை ரோன் படகுத் தாக்குதல்.
  20. இவை இப்படிச் சொல்லினம்.. உள்ளூரில்... டொலர் பவுன்ஸ் யூரோவை தவிர பிற வெளிநாட்டு நாணயங்களை ரூபாவுக்கு மாற்ற முடியாது மக்கள் சிரமப்படுவதாக தெரிகிறது.
  21. என்ன ஒரு பாலில் மேல தொங்குது.. இன்னொரு பாலில் கீழ தொங்குது. அதை எப்படி சுத்தி சுத்தி படமெடுத்துப் போட்டாலும்.. தொங்கிறது.. தொங்காததுகள் தான் தெரிந்துவிட்டுப் போகப் போகுது. விட்டுத்தள்ளுங்க. நமக்கு எல்லாமே உயிரியல் தான்.
  22. படிப்பில.. உலக அளவில் எங்கேயோ கடைக்கோடியில் இருக்கிற பல்கலைக்கழகம்.. இப்படி சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாவது வேதனை. தென்னிலங்கையில்.. புத்தர் வாசம் செய்யாத பல்கலைக்கழகங்களில் பெளத்த மாணவர்கள் படிக்கவில்லையோ..????! இது பெளத்த திணிப்பு. ஆக்கிரமிப்பு திமிரின் வெளிப்பாடு. அதற்கு இடமளிப்பது ஆபத்தானதாக முடியும். ஏனெனில்.. இந்த பல்கலைக்கழகம் அமைந்திருப்பது தமிழ் மக்கள் வாழும் பிராந்தியங்களின் இதயப்பகுதியிலாகும். அதனையும் சிங்கள பெளத்த மயமாக்குவது.. இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியே தனித்துவமான இடமில்லை என்பதாக வரலாற்றுத் திரிப்புச் செய்யவே இது உதவும். அதனை நோக்கி தான் இந்த நகர்வுகள் எல்லாமே. தென்னிலங்கையில்.. தமிழர்கள் வாழ்ந்தாலும் சிங்கள பெளத்த மயத்துக்குள் தான் பிழைப்பு நடத்தனும். ஆனால்.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திலும் எனி அது தான் நிலை.. ஆக மொத்தத்தில்.. சொறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்பதை நிறுவும் வேலைத்திட்டம் எல்லாம் வகையிலும் எல்லா வடிவிலும் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு புலி அழிப்பு சர்வதேச சக்திகளும் உறுதுணை..! ஹிந்தியா உட்பட.
  23. பிரதம நீதியரசர் என்பதை தான் தலைமை நீதிபதின்னு எழுதியது. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை. https://ibctamil.com/article/the-budget-was-completed-a-while-ago-1670506971
  24. இது குறித்து 1996 வாக்கிலேயே எச்சரிச்சிட்டாங்க. இவை பதவியை நோக்காகக் கொண்டு எதையும் கணக்கில் எடுக்காமல்.. இருந்து விட்டு.. இப்போ ஐயோ அம்மா என்று பாசாங்கு செய்வது போலிக் கூப்பாடு ஆகும். வெற்றுக் கூச்சல்கள் அல்ல.. தடுக்கக் கூடிய செயற்பாடுகளே அவசியம். எனி தடுப்பது அவ்வளவு இலகு அல்ல. காரணம்.. பல்வேறு புதிய பாடநெறிகளுக்கு மாவட்ட புள்ளி அடிப்படையில் அன்றி தேசிய அளவில் மாணவர்கள் பெறும் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறுவதால்.. பெரும்பான்மை சமூக மாணவர்கள் இயல்பாகவே கூடிய நன்மை பெறுவர். அதனால் தான் மாவட்ட அடிப்படையில்.. அல்லது மாகாண அடிப்படையில்.. மாணவர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால்.. அதனை ஆணித்தரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை எடுத்துச் செல்ல எம்மவர்களிடம் திராணி இருக்கவில்லை. ஆனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களே அதிகம்.. இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியப்பட்டது..??!
  25. அடப்பாவிகளா.. விமான இடைத்தங்கலுக்கு வந்ததை.. சொறீலங்காவுக்கான விஜயம் என்றிட்டாங்கள். அதுவும் விமான நிலையத்தில் வைச்சு தான் சந்திப்பு வேற.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.