-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள்
nedukkalapoovan replied to ரஞ்சித்'s topic in நிகழ்வும் அகழ்வும்
இது ஊடகச் செய்தியா.. அல்லது ஊடகம்.. சமூகவலைச் செய்திகளை வைச்சு புனையப்பட்ட ஆக்கமா..???! -
பைடன் நிர்வாகத்தினதும் சி ஐ ஏயினதும் கேலிக்கூத்தால் நிகழும் சந்திப்பு. ரஷ்சியா- வடகொரியா இரண்டுக்கும் நன்மை. அண்மையில் புட்டின் ஒரு செவ்வியில் சொல்லி இருந்தார் ரஷ்சியா நேட்டோவில் இணைவது கூட ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்டது என்று. உள்ளதையும் கெடுத்துக் குட்டிச் சுவரானது தான் பைடனின் அனைத்து நகர்வுகளும். அது ஆப்கானிஸ்தானில் இருந்து உக்ரைன் வரை தொடர்கிறது. டொனால்ட் ரம் பிடித்த அணிலை.. பைடன்.. அணில ஏறவிட்டு பார்க்கும் நிலையில்...
-
அண்மையில் நிகழ்ந்த ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு வைக்கப்பட்ட நாடுகளை குறிப்பிடும் பலகையில்.. மோடிக்கு பாரத் (BHARAT) என்று குறிப்பிட்டு நாட்டுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அப்ப மோடி ஹிந்தியாவின் சார்ப்பாக ஜி20 இல் கலந்து கொள்ளவில்லையா..??! அல்லது ஹிந்தியாவை மோடி பெயரளவில் ஒழித்துக்கட்டி விட்டாரா..??! https://www.bbc.co.uk/news/world-asia-india-66763836
-
சிங்கப்பூர் சனாதிபதியாக தமிழர் தெரிவாகியுள்ளார்
nedukkalapoovan replied to நிழலி's topic in உலக நடப்பு
கனடாவில் ஒரு தமிழன் எம் பி ஆகிட்டால்... தமிழனுக்கு விடிவு என்றது.. இங்கிலாந்தில் ஒரு தமிழர் கவுன்சிலர் ஆகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது.. இலங்கையில்.. ஒரு சிங்கள எடுபிடி தமிழன்.. அமைச்சராகிட்டால்.. தமிழனுக்கு விடிவென்பது... அமெரிக்காவில்.. ஒரு தமிழ் பின்னணி உப சனாதிபதியானால்.. தமிழனுக்கு விடிவென்பது.. மலேசியாவில்.. ஒரு தமிழன் எதிர்கட்சி தலைவரானால்.. தமிழனுக்கு விடிவென்பது.. இப்ப சிங்கப்பூரில் ஒரு தமிழன் சனாதிபதி ஆகிட்டதால்.. தமிழனுக்கு விடிவென்று கனவு கண்பது.. அவரவர் அந்தந்த நாட்டு சட்டதிட்டத்துக்குள் தான்.. சவாரி செய்ய முடியும். இதனால்... தமிழனுக்கு தமிழன் விரும்பியது கிடைக்காது. தமிழனுக்கு என்று ஒரு நாடு உருவாகி அதனை தமிழன் ஆளும் வரை.. இது கனவுகளாகவே எழுந்து இருந்து கலைந்து போகும். வாழ்த்துக்கள்.. புதிய சிங்கப்பூர் சனாதிபதி அவர்களே. நீங்கள் உங்களுக்கு வாக்களித்த.. மற்றும் வாக்களிக்காத உங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாவும் சேவையாளராகவும் இருக்கவும். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
nedukkalapoovan replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
லண்டனில் வெள்ளைகளின் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றார் அந்த தமிழ் ஐயா. அங்கு ஒரு தமிழ் அம்மாவும் வேலை செய்கிறார். அவரை ஐயா என்பதற்கு காரணம்.. அவர் ஏலவே திருமணமாகி மனைவியுடன் தான் லண்டனில் வாழ்ந்து வந்தவர். அந்த அம்மையாரை அம்மா என்று சொல்லக் காரணம்.. அவரும் திருமணமாகி குழந்தைகளுக்கு அம்மா என்பதால். இருவரும் ஒரே சிவ்ட். இருவரும் தமிழில் கதைச்சு கதைச்சு வேலை செய்வது வழமை. இப்படியே நன்கே காலமும் வேலையும் போகிறது. ஒரு நாள் திடீர் என்று ஒரு குற்றச்சாட்டை அந்தம்மா வைக்கிறார்.. அதாவது இந்த ஐயா.. அந்த அம்மாவை வேலையிடத்தில் வைச்சு படுக்கைக்கு அழைத்ததாக. இதன் பின்னணியில்.. அந்த அம்மாவின் வெள்ளைத் தோழியும். நிர்வாகத்தின் கவனத்திற்கு விடயம் போகிறது. விசாரணைகள் ஆரம்பமாகின்றன. மொழிப் பிரச்சனையால்.. மொழிபெயர்ப்பாளர் தேவை என்று அந்த ஐயா சொல்கிறார். நிர்வாகமும்.. ஏற்று மொழிபெயர்ப்பாளரை நியமிக்கிறது. மொழிபெயர்ப்பாளரிடம் அந்த ஐயா.. அழாத குறை.. என்ன தம்பி சொல்ல.. அவா கலியாணம் கட்டின ஆள். இவோவோட தமிழ் என்று தான் தமிழில் கதைச்சுப் பழகினன். காதல் வசனம் எல்லாம் பேசவும் இல்லை.. படுக்கைக்கும் கூப்பிடவும் இல்லை. அடி கள்ளின்னு.. சொல்லி இருக்கிறேன். அது சாதாரணமாக நன்கு பழகினால் சொல்லுறது தானே. இப்படி அவர் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார். இப்படி சாதாரண தொழிலாளியில் இருந்து பெரும் பெரும் தலைவர்கள்.. புரட்சியாளர்களின் பெருமைகளை சிதைப்பதற்கு பெண்கள் சிலரை எப்பவும் பாவிப்பவர்கள் இருக்கினம். அண்மையில் டொலான்ட் ரம் மீதும் குற்றம் வைச்சார்கள். விக்கிலீக்ஸ் நிறுவுனரையும் பொம்பிளை கேசில தான் உள்ள போட்டவை. இப்ப அவரின் இருப்பே கேள்வுக்குறியான பின்.. அந்த வழக்கை கைவிட்டாச்சு. இந்த உலகில் ஒரு ஆணை கொச்சைப்படுத்தனுன்னா.. அதற்கு மிக இலகுவாக உள்ள வழிமுறை.. பெண்ணோடு சம்பந்தப்படுத்தி.. படுக்கை வரைக்கு கொண்டுபோவது. ஏனெனில்.. இங்கு நிறுவ முடியாத உண்மைகள் பல இருக்கலாம் என்ற சந்தேகம் தான். அந்த சந்தேகத்தில் கட்டி வளர்க்கப்படும் உண்மைகளை.. பொய்களை நிறுவவும்.. நிராகரிக்கவும் வழி இருக்காது. இது தான் இங்கேயும். சீமான் எனும் தமிழ் தேசிய தமிழன்.. இதனை எல்லாம் தாண்டி தன் இனமானமே பெரிதென்று.. இந்த அர்ப்பங்களை கடந்து செல்ல வேண்டும். அதுதான் காலத் தேவை ஆகும். -
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
nedukkalapoovan replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
தி மு க எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கும் போகும்.. தனது அரசியல் போட்டியாளர்களை சந்திக்க வக்கில்லாமல். -
எங்கட அரசியல் வியாதிகள் ஹிந்தியாவுக்கு இலவசமாக தாரை வார்ப்பது என்றால்.. மெளனமாகி விடுவார்கள். தமிழர் நிலம் ஹிந்தியாவால்.. மட்டுமல்ல.. யாராலும் எப்படியும் திருடப்படலாம் என்றாகிப் போச்சுது.. 2009 மே க்குப் பின்.
- 1 reply
-
- 1
-
“ஓகஸ்ட் 23” இந்தியாவின் தேசிய விண்வெளி தினம் என பிரகடனம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்
இவர் மோடி இந்த மாநாட்டுக்குச் சென்று தென்னாபிரிக்க அதிபரை சந்தித்த போது.. அவர் மோடியை சந்திராயன் 3 வெற்றி குறித்து பாராட்டினார். அதற்கு மோடி.. தாங்கள் முதல்முறையாக சீனாவின் தெற்கில் தரையிறங்கி இருப்பதாகச் சொல்லி.. பின் தவறை உணர்ந்து.. நிலவின் தென்பகுதி என்று திருத்தினார். இதில் இருந்து ஹிந்திய தலைவர்கள் சீனா தொடர்பில் எவ்வளவு மன அச்சம்.. அழுத்தத்தோடு இருக்கினம் என்பதை மோடியின் நடவடிக்கை விளக்கி இருக்குது. சீனா ஹிந்தியாவுக்கு பெரும் குடைச்சலாகவே இருக்குது. எந்த வெற்றியையும் நிம்மதியாக அனுபவிக்க விடுகுதில்லை. இதில.. இப்படி ஒரு அறிவிப்பு அவசியமா..??! -
இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு
nedukkalapoovan replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
அந்த நாடு ஏலவே இந்த ஆறு ஓடி தான் இப்ப பட்டினி ஆறு ஓடுது. இந்த மொட்டைகளுக்கு தானம் போடுவதை நிறுத்தினால்.. நல்ல தண்ணி ஆறு ஓடும். நாடும் செழிக்கும். -
இது ஒரு சிங்களப் பேரினவாதி. தமிழர்கள் மீதான இன அடக்குமுறை மற்றும் இன அழிப்பை கூட நியாயப்படுத்தக் கூடிய கொடிய ஜந்து. இன்றுவரை தமிழர்கள் மீதான இனக்கலவரங்கள்.. அடக்குமுறைகள்.. இன அழிப்பை கண்டிக்காத.. ஏன் கண்டுகொள்ளாத ஒரு போலிக் கிறிஸ்தவ மத அடையாளம் தரித்த கொடிய பேரினவாதி தான் இவர். இவரிடம் இருந்து வேறு எதனை தான் எதிர்பார்க்க முடியும். சொறீலங்காவுக்கும்.. - ஹிந்தியாவுக்கும் பாலம் அமைவதால்.. தமிழர்களுக்கு அரசியல் உரிமையோ.. தாயக சுதந்திரமோ கிடைச்சிடும் என்றில்லை. ஆனால்.. தமிழர் பகுதிகளை சிங்களம் சார்ந்திருக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் தான் இந்த உளறல்.
-
இந்திரா காந்தி காலத்தில்.. ஈழத்தமிழரை சாட்டி சாட்டி ஓடி வந்தார்கள். ஆதாயமும் அடைந்தார்கள். இப்ப.. சீனா கொண்டு வரும் ஆபத்தால்.. ஓடி வருகினம். இது முன்னர் மாதிரி மனநிறைவாக அமையாது. மனக்குசைச்சலாகவே அமையும். ராஜீவ் மற்றும் அவருக்கு பின் வந்த அனைத்து ஹிந்திய தலைவர்களின் கைக்கொண்ட தவறான வெளிவிவகாரக் கொள்கையின் விளைவு இது. அதையே இன்னும் திருத்தாமல் தொடரினம்.
-
தமிழரின் உழைப்பை சுருட்டி உலையில போடுற லைக்காவுக்கு.. சிங்கள பெளத்த தேரர்கள் விருது. அதேவேளை.. லெபராவுக்கு... 4ம் மாடியில் விசாரணைக்கு.. சி ஐ டி.. ரி ஐ டி விசாரணைக்கு அழைப்பு. லைக்காவும் புலம்பெயர் தமிழரினது தான். லெபராவும் புலம்பெயர் தமிழர்களினது தான். அதேன் ஒருவருக்கு விருது.. மற்றவருக்கு விசாரணை. நல்லூரை இடிச்சு.. விகாரை கட்டுவன் என்ற குடிகாரனுக்கு.. சிங்கள இராணுவக் கூலிக்கும் விருது. சொறீலங்காவில்.. இப்ப தமிழருக்கு தமிழரின் இருப்புக்கு எதிராகவும் சிங்கள தேசத்துக்கு சிங்கள எஜமானருக்கு.. சேவகம் செய்து.. பிழைப்பை ஓட்டுபவர்களுக்கும்... விருதோ விருது.
-
வாக்னர் குழு தலைவரை ரஷ்சியவோ.. உக்ரைனோ.. கொன்றாலும்.. சி ஐ ஏ க்கே வெற்றி. ரஷ்சியா இந்த வேளையில்.. வாக்னர் குழுவின் ஆதரவை இழப்பது நல்லதல்ல. அப்படி இழக்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவினதும்.. சி ஐ ஏ யினதும் விருப்பமாகும்.
-
முன்னர் புலிகள் இருந்த போது இப்படியான எச்சரிக்கைகள் வந்தால்.. தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு போல்.. கோரஸ் பாடின கூட்டம்.. இப்ப இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக.. அதிமுக.. திமுக.. மதிமுக..பாமக.. விடுதலை சிறுத்தைகள்.. உட்பட எல்லாரும் நல்ல தூக்கம். முன்னர் என்றால்.. எம் ஜி ஆர்.. ஜெயலலிதா.. அறிக்கை விட்டால்.. அதற்கு மேலால் கருணாநிதி விடுவார். அதனை தொடர்ந்து மற்றவர்கள். இப்ப யாரும் அறிக்கை கூட விடுவதில்லை. இதுதான் இவர்களின் உண்மையான ஈழ ஆதரவு. இந்தக் கோமாளிகளை இனம் கண்டுகொண்டதால் தான்.. சிங்களம் பயம்விட்டு.. திமிரெடுத்துத் திரிகிறது. அதுசரி.. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டத்திடம் எதனை எதிர்பார்க்க முடியும். தன் கைதான் தனக்குதவி. மீண்டும்.. கசப்பான இந்த உண்மையில் இருந்து தமிழினம் தன்னை தற்காக்க முனைவதே சிறப்பு. அது சிங்களத்தை பொருண்மிய ரீதியில்.. அரசியல் ரீதியில்.. சர்வதேச ரீதியில்.. பலவீனப்படுத்துவதன் ஊடாகக் கூட இருக்கலாம்.
-
முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் தலையெடுத்து.. தலைவிரித்தாடுது என்று 2006 இலேயே இங்கு யாழில் எழுதிய போது.. அப்போது.. அந்தக் கருத்தை யாழ் களம் கத்தரித்துக் கொண்டது. 2019 இல் அது தமிழர்களின் உயிரை காவு கொள்ளும் வரை. அதேபோல்.. சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் தான் பெருமளவில்.. வடக்கு கிழக்கில் போதைவஸ்து கடத்தல் பரப்பலில் ஈடுபடுகினம்.. சிங்கள முப்படை மற்றும் பொலிஸ் அனுசரணையோடு என்ற போதும்.. ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று இங்கு யாழில் அதையும் கடாசி வீசினார்கள். இப்ப.. காத்தான்குடியில் இருந்தே பூனைக்குட்டி வெளிப்பட்டிருக்கே..?! அன்று கருத்துக்களை கடாசியவர்கள்.. இன்று என்ன பதில் சொல்லப் போகினம். எப்பவோ கொடுத்த எச்சரிக்கைகளுக்கு சரியான பரிகாரம் என்ன என்று தேடி இருந்தால்.. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் கும்பலின் பயங்கரவாதத்திற்கு தமிழ் மக்களை பலிகொடுத்திருக்க தேவையில்லை. அதேபோல்.. வடக்குக் கிழக்கில்.. போதைவஸ்து பரம்பலை குறைக்க அல்லது முன்னெச்சரிக்கை வழங்கி தடுக்க முயற்சித்திருக்கலாம். ஆனால்.. இப்போ... பள்ளிக் குழந்தைகள் கூட போதைப்பொருளுக்கு அடிமையாகி இறக்கும் நிலையையில்.. தமிழர் தாயகம்.
-
போர் மூலம் சாத்தியமில்லை என்பதிலும் பலமான நம்பிக்கைக்குரிய சக்திகளின் உதவியுடன் கூடிய குறுகிய கால போர் மூலம் எல்லாமே சாத்தியம். அப்படித்தானே வங்கதேசம் உருவானது. கொசாவோ உருவானது. அதேவேளை போர் தீர்மானிக்காது.. போரின் பின்னரான.. போருக்கான காரணிகள் அடிப்படையில் நிகழ்ந்த தேர்தல்கள் மூலம் உருவான தேசங்களும் உண்டு. ஈழத்தில்.. தனிநாடு அமைவதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு தலையீடு அறவே இருக்கக் கூடாது. அப்படி ஒரு சூழல் எழுந்தால்.. நிச்சயம் ஈழம் மலரும். அதற்கு முன் ஹிந்தியா உடைந்து சிதறனும்.