Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. இப்படி பல குறுஞ்சுருளொளிகள்..சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. பெண்களையும் போட்டு நசுக்கி எடுக்கிறார்கள் இப்படியான ஆண்கள். உடல் உபாதை தீருதோ.. இல்ல வேறு நோக்கங்கள் தீருதோ தெரியாது.. சமூக ஊடகங்களின் தாக்கம் இதில் இருக்க வாய்ப்பிருக்குது. எனவே இதனை ஒரு வைத்திய நடைமுறையாக கருதி செயற்படுவதை விட.. இதில் உங்களின் சொந்த முன்னெச்சரிக்கை சார் முடிவோடு இயங்குவதே சிறப்பு. சாதக பாதக விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.
  2. இது பாடசாலை ஒன்றின் உள்ளக அறிவிப்புப் போலவே தான் இருக்கிறது. பாடசாலைகளின் உள்ளக பிரசுரங்கள்.. அறிவிப்புக்கள்.. கட்டுப்பாடுகள் எல்லாம்.. ஊடகங்களில் வருவது அரிது. அது பாடசாலை நிர்வாகம் சம்பந்தப்பட்டு.. பாடசாலைகளின் விதிமுறைக்கு அமைய வெளிவருவது. இந்தப் பாடசாலை யாழ் சேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலம் என்று தான் இருந்தது. வைத்திலிங்கம் சைவ சமய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஒருவர். பின்னர் இந்தப் பாடசாலைக்கு சொறீலங்கா அரசு.. யாழ் வேலணை மத்திய மகா வித்தியாலயம் என்று பெயரிட்டு.. வைத்திலிங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டது. அதன் உள்நோக்கம் இன்று வரை வெளிவரவே இல்லை. அதன் பின் யுத்த காலத்தில்.. இடம்பெயர்வுகளால் வெறிச்சோடிப் போன பள்ளிக்கூடம்.. (1989 இல் இந்தியப் படைகளின் தீவக படையெடுப்பின் போது அகதியாக அடைக்கலமும் கொடுத்தது..அப்போது யாழ் குடாவில் இருந்து பல ஆயிரம் மக்கள் தீவகத்துக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.. ஒப்பரேசன் பவான்.. பூமாலையில் இருந்தான செல் தாக்குதல்கள்.. இராணுவ நடவடிக்கையில் இருந்து தப்ப).. அதன் பின்னர் சொறீலங்கா படைகளின் ஆதிக்கத்தின் கீழ்.. இப்பாடசாலை பல இடர்கள் மத்தியில் இயங்க ஆரம்பித்தது. குறிப்பாக சொறீலங்கா கடற்படையின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் (இப்பாடசாலைப் பகுதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகவும் சொறீலங்கா கடற்படை முகாமாகவும் இயக்கப்பட்டது) பாடசாலை இயங்க வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின் இப் பாடசாலை அதன் பழைய மாணவர் சங்கங்களின் உதவியோடு அபிவிருத்தி அடைந்தது. உள்ளக சைவ ஆலயமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. பாடசாலை நிர்வாகம்.. அந்த ஆலய சூழலை கருத்தில் கொண்டு.. அசைவ உணவுகளை அந்த இடத்தில் தவிர்க்க இந்த அறிவிப்பினூடு கோரி இருக்கலாம். இப்படியான அறிவிப்புக்கள் பிற பாடசாலைகளிலும் உண்டு. இதற்குள்.. சாதி.. மத பிரச்சனை எப்படி நுழைந்தது.. என்பதுதான் என் கேள்வி..?! சேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகாவித்தியாலயம்.. இன்று வேலணை மத்திய கல்லூரியாக.. தேசிய பாடசலையாக மாறி நிற்கும் காலம்... வரை... தீவகத்தில் எல்லோருக்கும் சம கல்வி வாய்ப்பை வழங்குகிறது தானே. சாதி.. மத அடிப்படையில்... யாரையும் அது புறக்கணிச்சு நிற்கிறதா..?! இல்லையே. உணவு சார் விடயத்தில்... அங்குள்ள சைவ ஆலய சூழலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புப் பலகை வந்திருக்கவே இடமுள்ளது. அந்த வகையில்.. இந்த அறிவிப்புப் பலகை தொடர்பில்.. அதிருப்தி இருப்பின் அது சுட்டிக்காட்டப்பட வேண்டிய இடம்.. பாடசாலை நிர்வாகம் ஆகும். சமூக முரண்பாடுகளை உருவாக்க முனையும் முஸ்லிம் இணைய ஊடகத்தில்.. அது செய்தியாக்கப்பட்ட விதமும்.. நோக்கமும் வேறு. அதனை நோக்கி யாழ் இணையக் கருத்துக்களமும் இயங்க முனைவது வருத்தமளிக்கிறது. அதைதான் இங்கு நாங்கள் முதன்மைப்படுத்தி சுட்டிக்காட்ட விளைகிறோம். யாழ் ஒஸ்மேனியா கல்லூரிக்குள் இருக்கும் நடைமுறையில் இருக்கும் அறிவிப்புக்களை இதே ஊடகம் வெளியிடுமா..??! அது ஏன் மூடுமந்திரமாக இருக்க அனுமதிக்கிறீர்கள்..????! அதெல்லாம் புட்டும் தேங்காய் பூவும்.. இன நல்லிணக்கம்.. முஸ்லிம் - தமிழ் ஒற்றுமைக்குள் மறைக்கப்படலாம் என்றால்... ஏன் இது முடியாது..??????! தீவகத்தில் கட்டாக்காலி மாடுகள் உட்பட மக்களின் மாடுகளை கால்நடைகளை களவெடுத்து வெட்டி விற்கும்.. முஸ்லிம் கடத்தல் கும்பல் குறித்து இந்த ஊடகம் செய்தி விடுமா..???!
  3. மற்ற எல்லா இனங்களும் சமூகமும் உள்ளக முரண்பாடுகளை ஒதுக்கி வைச்சிட்டு.. தமிழர்களைப் பிரித்தாளுவதில் செல்வாக்குச் செலுத்த.. தமிழர்கள் உள்ளக முரண்பாடுகளை நோண்டி நோண்டி பெரிசாக்க.. தமிழர்கள்.. தாமும் சீரழிஞ்சு.. மற்றவர்களால் சீரழியும் நிலை தான் மோசமடையும். சாதி.. மத பிரச்சனைகள் மற்றைய இனங்களில் இருக்கும் உள்ளக பிரிவினைகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் மத்தியில் மென்போக்கோடு தான் இருந்தது வந்துள்ளது. சமீப காலமாக (குறிப்பாக 2009 மே க்குப் பின்) அது ஆழப்படுத்தப்படுவதும் ஆக்கிரோசப்படுத்தப்படுவதும்.. வேண்டும் என்றே நிகழ்த்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழர்கள்.. பெளத்த தமிழர்களாகவும்.. மற்றும் மதமாற்றங்களுக்கும் உள்ளாக்கப்படும் நிலையில்.. தீவக அதிகார சபை மூலம் தீவகம் கபளீகரம் செய்யப்பட்டால்.. அங்கு சிங்கள முஸ்லிம் பெருக்கத்திற்கு வகை செய்யும் வழியில் தான்.. இந்தப் பிரச்சனையில்.. யாழ் முஸ்லிம் இணையம் மூக்கை நுழைக்கிறதோ என்ற முக்கிய கேள்வி எழுகிறது. ஏலவே சாட்டிப் பகுதியில்.. தமிழ் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாதபடி.. முஸ்லிம் மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... வேலணையும் குறிவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. நாமோ.. சாதியை நோண்டி.. கவனத்தை வேறு திசையில் கொண்டு சென்று எதிரிகளின் நோக்கம் இலகுவாக நிறைவேற உதவி நிற்கப் போகிறோம்.. என்று விடாப்பிடியோடு இருக்கிறோம். இதில்.. புத்திமான்பலவான் ஆக்களும்.. தங்களின் கெட்டினத்தனத்தைக் காட்டினம். எல்லாம் எம் இனத்தின் முன்னெச்சரிக்கையற்ற நடவடிக்கைகளின்.. தாக்கமும்.. எம்மவர்கள் சுயமாக சிந்திச்சு.. முன்னெச்சரிக்கை அடையக் கூடாது என்ற நோக்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவோ தெரியாது...??! யார் யார் என்ன வேலைத்திட்டங்களோடு இயங்கினமோ..??! உள்ளூரில்.. ஒரு சித்தார்த் சிங்களத்தால் களமிறக்கப்பட்டிருக்கிறான் என்றால்.. யாழில் எத்தனை சித்தார்த்துக்கள் பதுங்கியுள்ளனரோ.. யார் அறிவார். இதனையிட்டு.. மக்களை தான் விழிப்புணர்வு படுத்த வேண்டும்.
  4. இது ஒரு பாடசாலை உள்ளக அறிவிப்பு. அதனை சாதி.. மதப் பிரச்சனையாக உருவகிக்க வேண்டிய தேவையென்ன..?! இந்த அறிவிப்புக் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால்.. அப்பாடசாலை பெற்றோரோ பிள்ளைகளோ.. பழைய மாணவர் சங்கங்களோ பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களை கோர முடியும். இப்படி எல்லாம் வழிமுறைகள் இருக்க.. இதனை ஒரு பகிரங்கச் செய்தியாக்கி.. அங்கு.. ஏதோ மற்றைய பாடசாலைகளில் உள்ளக அறிவிப்புக்களில்.. எதுவுமே வராதது போல் தோற்றம் காட்டி.. சாதி.. மத.. கிராம.. அரசியல் எல்லாம் பேசி.. எதுக்கு வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்... இருக்கிறார்கள்..??! இருக்கிற பிரச்சனைகளுக்கே தீர்வு தேட வழியில்லாத சூழலில்.. யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில்.. இந்த அறிவிப்பு முக்கியம் பெற என்ன காரணம்.. அங்கு முஸ்லிம் மாணவர்கள் படிச்சு அதனால்.. பாதிக்கப்படுவதாலா..?! முஸ்லிம்களே இல்லாத ஊரில்.. முஸ்லிம் ஊடகத்தில் இந்தச் செய்தி வர என்ன நோக்கம்..???!
  5. யாழ் முஸ்லிம் இணையத்தளம்.. இந்தச் செய்தியை உருவகிக்கவும்.. அதனை கொழும்பான் இங்கு கொண்டு வந்து ஒட்டவும் இருந்த உள்நோக்கம் நன்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. (ஒட்டியதோடு சரி கொழும்பான்.. ஒரு கருத்தும் பதியவில்லை.) தமிழர்களுக்குள் மத.. சாதி ரீதியான அடிப்பாட்டுக்கு மேல்.. பாடசாலை ரீதியான.. கிராம ரீதியான அடிப்பாட்டை உருவாக்கனும். தமிழர்கள் எனி அரசியலுக்காகவோ.. எதுக்காகவுமோ.. ஓரணியில் திரளக் கூடாது. அப்படித் திரள்வது.. முஸ்லிம்களுக்கும் கூடாது.. அவர் தம் எஜமானச் சிங்களவர்களுக்கும் கூடாது. ஆனால்.. அல்காவின் பெயரால் முஸ்லிம் அரபுலகம் வரை உறவாட வேண்டும்.. ஒற்றுமைப்பட வேண்டும். புத்தரின் பெயரால்.. பெளத்த சிங்களம் பலம்பெற வேண்டும். ஆனால்.. தமிழர்கள் மட்டும் சாத்தியமான எல்லா வழிகளிலும் பிரிய வேண்டும்.. பலமிழக்க வேண்டும். நாட்டை விட்டு ஓட வேண்டும். யாழ் களமும்.. இப்ப வர வர.. அதற்கு நல்லா தீனி போடுது. யாழ் ஒஸ்மேனியா கல்லூரி வாசலில்.. செய்ய முடியாததை.. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவது பற்றி ஏன் பேசினமில்லை. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவதை.. யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஏன் செய்ய முடியவில்லை..?????????!
  6. யாழ் ஒஸ்மேனியா கல்லூரியில் பன்றி உணவு சாப்பிடவும்.. பன்றி உணவுக் கழிவுகளைக் கொட்டவும் இடமளிப்பினமோ.. கொழும்பான். எதுக்கு யாழ் சோனிக்கு தேவையில்லாத சோழி முடிதல்...??! இதனால் தான் 1990 இல் இடம்பெயர வேண்டி வந்தது. யாழ் சிவன்பண்ணை வீதியை மறித்து.. யாழ் வண்ணார் பண்ணை சிவன்கோவிலுக்கு அருகில் வேண்டுமென்றே மாட்டுக்கழிவுகளைக் கொட்டியும்.. சமூகப் பிரச்சனைகளை தூண்ட முனைந்தமை உட்பட பல காரணிகள் இருந்ததை மறக்கக் கூடாது.
  7. காரணம்.. தடுப்பு முயற்சி எதுவும் இன்றிய.. ஒரு துறைசாரா நபர் சொல்லுவது போலிருக்குது இந்த அறிக்கை. இதுதான் இப்ப அங்கு மருத்துவத்தின் நிலை...???!
  8. அப்ப சிங்கள நாடு.. தமிழர் நாடு என்று இரண்டு இருக்கு என்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்கிறாரா. இவர் அப்ப சிங்கள நாட்டை தமிழர் நாட்டுக்குள் ஊடுருவல் செய்ய வந்துள்ளாரா..???! ஏனெனில்.. தமிழர்களின் பாரம்பரிய பூமியில் வந்து அடாத்தாகக் குடியேறிய சிங்களவர்களுக்கும் அவர்களின் சண்டித்தனத்துக்கும் வக்காளத்து வாங்கி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதென்பது.. எப்படி இன நல்லிணக்கமாகும். இது இன இழிநிலையாக்கமாகும்.
  9. கொழும்பில்.. கேட்காமலே தடை. யாழில் கேட்டும் தடையில்லை. ஆக சொறீலங்காவில்.. உள்ளது நீதி நடைமுறையல்ல. சிங்கள பெளத்த பேரினவாதத் திமிர் தான்.. நீதிமன்றில் தாக்கம் செய்கிறது.
  10. ஒரு நாட்டின் இளைய தலைமுறையில் தலைவிதியை தீர்மானிக்கும் பரீட்சைக் கூட கிரமமாக நடத்த முடியாத நாடு.. எப்படி உருப்படும்..??!
  11. இது அரபு உலகின் கடும்போக்கு நாடுகளின் உதவியோடு உருவான.. ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மூளைச் சலவை செய்யும் கூடமே அன்றி.. வேறில்லை. இது தொடர்ந்து இயங்குவதை இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் குண்டுக்கு இலக்கான மக்கள் என்ற வகையில் மட்டக்களப்பு மக்கள் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும். 1990 காத்தான்குடி சம்பவத்தை வைச்சு உலகை ஏமாற்றிப் பிழைக்கும் ஹிஸ்புல்லா போன்ற கொடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.. மீண்டும் பலமூட்டப்படுவது.. தமிழ் மக்களுக்கே ஆபத்து. இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் தமிழ் மக்களின் உயிரைப் பறிக்க இடமளிக்கக் கூடாது.
  12. சிங்களவன் கிழக்கு மாகாணத்தில் தனக்கு சாதகமில்லாத ஆளுநரை மாற்ற முடியும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும்.. சிங்கள இராணுவ மற்றும் சிங்கள பேரினவாதிகள் அவர் தம் ஆதரவாளர்கள் ஆளுநரான போது அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. சம் சும் கும்பலோடு எல்லாக் கும்பலும் ஆமாப் போட்டன தானே.
  13. இதே காலப் பகுதியில்.. முக்கிய காலிஸ்தான் போராளி இங்கிலாந்திலும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானில் வைச்சும் கொல்லப்பட்டிருக்கினம். இங்கிலாந்து கனடாவிடம்... இச்சம்பங்கள் தொடர்பிலும்.. அவற்றின் பின்னணியில் இருக்கக் கூடிய ஒற்றுமைகள் தொடர்பிலும்.. தகவல் சேகரிக்க உள்ளதாக செய்திகள் சொல்லின. இது ஹிந்தியாவின் திட்டமிட்ட சர்வதேசப் பயங்கரவாதத்தின் நீட்சி எனலாம். ஈழத்தில் சிங்களவனையும் தமிழ் துரோகிகளையும் கைக்குள் வைச்சுக் கொண்டு செய்ததை இப்போ மேற்கு நோக்கி விரிவாக்கி இருக்குது. நம்மவர்கள் இந்தச் சூழலை சும்மா கடந்து போகாமல்.. ஹிந்தியா ஈழத்தில் செய்த இனப்படுகொலைகள்.. மற்றும் இனப்படுகொலைக்கு செய்த உதவிகளை எல்லாம்.. சர்வதேசத்துக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும். ஏனெனில்.. எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழித்ததில்.. இனப்படுகொலைக்கு கொண்டு சென்றதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு மன்னிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. அதற்காக அந்த நாடு தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
  14. ரணிலாருக்கு நினைப்புப் பெரிசே தவிர.. இதில சொல்ல வேறு ஒன்றுமில்லை. வாங்கிறதே அவங்களட்ட பிச்சை.. இதில.....
  15. திலீபனையே கொலை செய்த ஹிந்தியாவுக்கு.. ஈழத்தமிழனத்தையே படுகொலை செய்த ஹிந்தியாவுக்கு.. சீக்கிய காலிஸ்தான் போராளியைக் கொல்வது பெரிய வேலை இல்லை. கனடா பிரதமரின் குற்றச்சாட்டு..சகட்டுமேனிக்கானதல்ல. கனடிய.. புலனாய்வு பிரிவின் விசாரணைக்குப் பின் தான்.. இது வந்திருக்க முடியும். ஹிந்தியா விடுதலைப் போராளிகளைக் கொல்வது புதிதல்ல. குமரப்பா புலோந்திரன் திலீபன் கிட்டு உட்பட பலரை சமாதானம் பேசிக் கொன்றது.. மறக்க முடியாத பெரும் துரோகங்களாகும். அப்படிப்பட்ட ஹிந்தியாவுக்கு.. கனடாவில் வைச்சு சீக்கிய காலிஸ்தான் சுதந்திர தேசப் போராளிகளைக் கொல்வது பெரிய விடயமோ.. புதிசோ அல்ல.
  16. இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை.. ஜே ஆரால் தான் யுத்தமே உருவானது என்று. இன்று சொறீலங்கா வங்குரோத்து அடையவும்.. அதே ஜே ஆரின் நிறைவேற்று அதிகார சிங்கள சனாதிபதி முறை தான் காரணம் என்பது. யுத்தம் முடிவடையக் காரணம்.. மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குள்.. தமிழரின் இன விடுதலைப் போராட்டத்தை தமிழர்களையும்.. ஹிந்தியாவையும்.. கொண்டே தள்ளிக் கொண்டு வந்தது தான்.
  17. அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான எப் 35 ஜெட்டை காணல்லையாம்.. முதல்ல அதைத் தேடுங்கள். ரஷ்சியாவை பற்றி ஜோதிடம் பிறகு பார்க்கலாம்.
  18. தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும். பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை. வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்.. தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..! இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.
  19. ஈபி ஆர் எல் எவ் காலத்திலும் சரி.. அதற்கு பின்னான ஈபிடிபி கூலிக்கும்பல் தலைவனாகவும் சரி... பச்சைப்புலி கொலைக்கும்பல் தலைவனாகவும் சரி.. டக்கிளசை ஆதரிச்சு கண்ட மிச்சம் என்ன..????! திறமையானவர்கள் கூட சரியான பதவிகளை அனுபவிக்க முடியாத நிலையும்.. தமிழர் தேசம் எங்கும் சிங்கள நிர்வாகிகள் வருகையும்.. திரும்பப்பெறப்பட முடியாத சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு இருப்பும்.. பெளத்த சிங்கள மயமாக்கமும்.. காணி ஆக்கிரமிப்பும்.. வளக் களவும்.. கப்பமும் கொள்ளையும்.. வீடுடைப்புகளும்.. வன்முறையும்.. மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும்.. காணாமல் ஆக்கப்பட்டதும்.. போதைப்பொருள் பெருக்கமும்.. போதை அடிமையும்.. கலாசாரப் பண்பாட்டுச் சீரழிவும் தான். சீமானை ஆதரிக்க வேண்டாம் என்பவர்கள்.. மேலே சொன்னவற்றையாக ஆதரிக்கச் சொல்கிறார்கள். இவர்கள்.. காடைகளா.. அல்லது மக்களா..?
  20. உக்ரைன் செய்கிற இனப்படுகொலைகள்.. அமெரிக்க சார்ப்பு நடவடிக்கைகள் எல்லாமே சனநாயகமோ..??! இப்பவும் போரை சாட்டு வைச்சு தேர்தல்களுக்கு முகம் கொடுக்காமல் தப்பிக்கும் நிலை தான் அமெரிக்க ஆதரவு சனநாயகமாக்கும். எப்படி எல்லாம் சனநாயகத்தின் பெயரால் மக்களை அழிக்கிறார்கள்.. அப்படி இருந்தும்.. உந்தப் போலி சனநாயகத்தை நம்புபவர்களை என்னென்பது. பணத்துக்கும் பதவிக்கும் அடிபடும்.. இன்றைய லிபிய கூலித் தலைமை போலன்றி.. கடாபி ஆட்சியில் இருந்திருந்தால்.. நிச்சயமாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளுக்கு சரியான நடவடிக்கைகளை மக்களின் நலனை முன்னிறுத்தி செய்திருப்பார் என்பதை நம்பலாம். அதையே மேற்குலக ஊடகங்கள் சில கூட சொல்லி வைத்துள்ளன. கடாபியை எதிரியாகப் பார்த்தவர்கள் கூட.
  21. கூலி வாங்கிக் கொண்டு எம் தலையில் குண்டு போடவும் ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கிய உக்ரைனையே ஆதரிக்கிற ஆக்கள் இருக்கையில்... எமது தேசிய தலைவரையும்.. தமிழ் தேசியத்தையும்.. ஏற்று.. தமிழீழத்தையும்.. தமிழகத்தையும் தமிழர்கள் ஆள வேண்டும் என்பதையும் கோட்பாட்டடிப்படையில் ஏற்றுக் கொண்டு அதில் இருந்து இன்று வரை எந்த விலை பேசலுக்கும் இடம் கொடாமல்.. பல இடர்களை சந்தித்தும் காவிக் கொண்டிருக்கும் சீமானையும்.. அவரின் தலைமையின் கீழ் நாம் தமிழர் கட்சியையும் ஆதரிப்பது.. அல்லது தார்மீக ஆதரவு வழங்குவது ஒன்றும் பயங்கரவாதச் செயல் கிடையாது. உக்ரைன் டான்பாஸ் பிராந்தியத்தில் செய்த.. செய்கிற இன அழிப்பை மூடிமறைத்து உக்ரைனின் அமெரிக்க ஏகாதபத்திய சார்ப்பு.. ரஷ்சியா எதிர்ப்பு நிலைபாட்டுக்கு சனநாயக சாயம் பூசி ஆதரிக்கும் போலித் தனத்தைக் காட்டிலும்.. தமிழீழ தேசிய தலைவருக்கும்.. தமிழீழ மக்களுக்கும்... தமிழக தமிழ் மக்களுக்கும்.. தமிழக மக்களுக்கும் உண்மையாகவும்.. அவர்களின் உண்மையான மேம்பாட்டில் அக்கறை கொண்டும் இருக்கும் சீமானையும்.. அவரின் எத்தகைய விலை பேசல்களுக்கும் அடிபணியாத கோட்பாடுகளுக்கும்.. அதன் கீழ் இளைய சமூகத்தையும்.. தமிழக.. உலகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்துச் செல்ல முயல்வதையும்.. ஆதரிப்பது அவசியம். அதுவும் ஒரு விலைபோதல் அற்ற உறுதியான தலைமைத்துவம் இன்றி இருக்கும் தமிழினத்தின் தற்போதைய நிலையில்.. சீமானின் நாம் தமிழ் கட்சியின் அரசியல்.. சமூக இருப்பென்பது மிகவும் அவசியம்.
  22. லிபியாவின் இந்த நிலைக்கு கடாபியை கொலை செய்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளுமே முழுப்பொறுப்பு. பிபிசி கூட தெரிஞ்சோ தெரியாமலோ.. கடாபிக்கு பின்னான லிபியாவினை உருவாக்கிய அனைவரினதும் தோல்வியே இந்தப் பேரழிவு என்று சொல்லிட்டுது. அதில பிரிட்டனுக்கும் கூட்டுப் பங்களிப்பு இருக்குது என்பதை பிபிசி.. மறுதலிக்காது என்று நம்புவோமாக. லிபிய மக்களின் இந்தத் துயருக்கு மேற்குலகமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். இதே நிலை.. மிக விரைவில்.. உக்ரைனுக்கும் வரும். கோமாளி சொலுங்கியால்.
  23. உலக சமத்துவ யாழ்வாதிகள்.. புதுமாத்தளனை.. உக்ரைனோடு ஒப்பிட்டு குய்யோ முறையோ என்றவை..... உக்ரைனில் நடந்த சிறிய சம்பவங்களை எல்லாம் தூக்கிப் பிடிச்ச மேற்குலக மற்றும் அமெரிக்க ஊடகங்கள் இந்த புதைகுழி குறித்து இத்தனை மாதங்கள் கடத்தும் ஒரு ஊடக சம்பிரதாயத்துக்கு கூட.. மூச்சும் விடாதது குறித்து என்ன சொல்லுவினம்..??!
  24. விடுவித்த போது அவையோட தான் உவர் இருந்தவர். அப்ப ஏன் இந்தக் கேள்வியை கேட்கவில்லை..??!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.