Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
பொயட்டே விரும்பவில்லை.. தன் கைதை சிறீலங்கா அரசிற்கு எதிராக பாவிக்க. அந்த வகையில் தான் அவரது செயற்பாடுகள் இருந்தன. நான்.. ஹக்கீமோடு பேசி இருக்கிறேன்.. பசில்லோடு அவர் பேசி இருக்கிறார்.. எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்குது.. நான் இன்ன உயர் அதிகாரியோடு அமைச்சரோடு தொடர்பில் இருக்கிறேன்.. கைதில் இருந்தாலும்.... ஊடக வாயிலாக..வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.. எவரும்..எந்த அசெளகரியமும் தரவில்லை... இப்படியான வாக்குமூலகங்களை அளித்துக் கொண்டிருக்கும்.. ஒரு கைதின் அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு.. எதிராக என்ன பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்பது.. சின்னவருக்கே வெளிச்சம்..! இதனை உதாரணமாகக் காட்டினால்.. சிறீலங்காவில் கைதிகள் மேற்குலக தரத்திற்கும் மிக மேலாக சகல உரிமைகளோடு கையாளப்படுப்பவதாக எல்லோ உலகம் கருதும். மேலும்... விசா விதிகளை மீறிய தமிழர் ஒருவர் மீது கூட.. இவ்வளவு இலகு வழியில் நெகிழ்வோடு.. கண்ணியத்தோடு..சிறிலங்கா அரசு நடந்து கொள்கிறது.. அங்கு என்ன இனத்துவேசம் இருக்கு என்று தான் உலகம் நினைக்குமே தவிர.. இதனை எப்படி சிறீலங்காவிற்கு எதிராக பிரச்சாரப்படுத்த முடியும்..???! இவை உள்ளதைக் கெடுக்கும் நடவடிக்கையாக அமைவதோடு உண்மையான உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான மக்களை பெரிதும்... ஆபத்தான சூழலில் தள்ளிவிடுவதையே செய்யும்..!!! இருந்தாலும்.. இத்தனைக்குள் இருந்தும்.. இந்தக் கைதை வெளியில் இருந்தவர்கள் சிறீலங்கா அரசிற்கு எதிராக பயன்படுத்தத் தவறவில்லை. ஆனால் சின்னவர் அவர்களையும் விடுவதாக இல்லை. ஒரே படத்தில் நடித்து விருது தட்டிச் சென்றது போல.. ஒரே கைதில்.. சிறீலங்காவிற்கு நல்ல விருதை வாங்கியும் கொடுத்திருக்கிறார் பொயட். எல்லாம் நன்மைக்கே..! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..???!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
பெரியவர் நாடு திரும்பி விளக்கம் கொடுக்க முதலே சின்னவர் விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். உண்மையில்.. இவர்கள்.. தமிழ் - முஸ்லீம் மக்களிடையே சிங்களம் தூண்டிவிட்ட.. முரண்பாடுகளில் குளிர்காய்ந்து அரசியல் செய்ய முனைகிறார்கள் போலவே தெரிகிறது. முஸ்லீம் காங்கிரஸின் தோற்றம் வளர்ச்சி கூட இந்த முரண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்தி உருவான ஒன்று. அதனால் தமிழ் - முஸ்லீம் நெருக்கடியை சிக்கலாக்கி அதில் ஆதாயம் தேடியவர்களில் அஷ்ரப்.. ஹிஸ்புல்லா.. ஹக்கீம் போன்றவர்கள் முதன்மையானவர்கள். தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே இருக்கும் பிரச்சனையை ஓரிரு வால்பிடிகள் தீர்க்க முடியுமுன்னா அதனை எப்பவோ தீர்த்திருக்கலாம். அதன் கருவூலம்.. ஆதி மூலம் தெரியாமல்.. இவ்வளவு காலம் இருந்த.. சின்னவர் இப்ப... அளிக்கும் விளக்கமோ செமக் காமடி.! இவர் இப்ப கண்டுபிடிக்கும் காரணத்தை தான் புலிகள் அன்று சொன்னார்கள். தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பிரேமதாச அரசு சீண்டு முடிகிறது. கிழக்கில் இரு இனங்களிடையேயும்..இன விரோதத்தை வளர்க்கிறது. அதனை வடக்கிலும் பரவ அனுமதிக்க முடியாது. வடக்கிலும் கிழக்குப் போல சில கைக்கூலிகளை வைச்சு அரசு தமிழ் முஸ்லீம் விரோதத்தை வளர்க்க முனைகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வாக முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்வதன் மூலம் சிங்கள அரசின் திட்டத்தை முறியடிப்பதோடு சரியான காலம் கனியும் போது மீண்டும் அவர்களின் வாழ்விடம் நோக்கித் திரும்பலாம். அவர்களின் அசையும் அசையாத சொத்துக்களுக்கு புலிகள் பொறுப்பு என்று தான் அன்று அறிவிப்புத் தரப்பட்டது. அதை பெரியவர் இவ்வளவு காலமும் தனக்கு வசதியா மாற்றி உருமாற்றி சோடிச்சு பேசி.. தன்னை.. இரண்டு இனங்களிடையேயும் இயற்கையாக உருவான பகையை போக்கும் இரட்சகர் போல.. காட்டி வந்தார். பிரச்சனைக்குரிய காரணிகளை இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ.. நீக்கவோ முற்படல்ல. இப்ப கூட அதை அவர் செய்யல்ல. இப்ப புதிசா கோத்தா தான் இப்படிச் செய்வது போல.. சின்னவர் செம விளக்கம் அளிக்கிறார். கோத்தா.. செய்வது பிரேமதாச அரசின் கொள்கைத் தொடர்ச்சியையே. அதனை புலிகள் கையாண்ட போது விளங்கி அதற்கு ஒத்துழைத்து இரு இனங்களும் நடந்திருந்தால்.. உவர் பெரியவர் போன்ற இரட்சகர்கள்.. என்று.. தம்மை காட்டிக் கொள்வோர் மக்கள் முன் உருவாகி இருக்க முடியாது. ஆனால் அன்று புலிகள் நல்லெண்ண அடிப்படையில் எடுத்த ஓர் நகர்வை மோசமாக விபரிச்சு.. அதில் ஆதாயம் தேடிக் கொண்ட நபர்களில் பொயட்டும் ஒருவர். அதனை எந்தச் சின்னவர் பெரியவர் வந்தாலும் மறுக்க முடியாது. பொயட் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இது விடயத்தில் நடந்து கொண்டதுமல்ல.. அதனைக் காட்டியே புலிகளை எதிர்மறையாக.. விமர்ச்சித்து இந்தியா மற்றும் பிற தமிழ் தேசிய எதிர்ப்புக் கூடாரத்தில் தனக்கென்று ஒரு அணிசேரா.. முகமூடியை உருவாக்கி அணிந்து கொண்டு.. அதில் பிழைத்துக் கொண்டு வருகிறார். அதனையே தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். அதுதான் அவர் மீதான மக்களின் வெறுப்புக்குக் காரணம். ஒரு கலைஞன் என்பதற்கு அப்பால் அவர் மக்களால் வெறுக்கப்பட இது தான் முக்கிய காரணம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் வளைவு. (2013) நன்றி முகநூல்.- சிந்தனைக்கு சில படங்கள்...
மாற்றினத்தார் ஆகினும் மனிதர்கள் என்று மதிக்கும் மாண்பை வளர்த்தவன் எங்கள் தலைவன் பிரபாகரன்.- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தினம் ( படங்கள் ) நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது. - இரா.பகத்சிங் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111887- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சிறீலங்கா அரசு நினைக்குது.. உலகம் இன்னும் தன் கைக்குள்ளைன்னு. உலகம்.. இப்ப குக்கிராமம். நாங்க சொல்ல நினைக்கிறதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க பல வழிமுறை வந்தாச்சு. நோட்டீஸ் ஒட்டி கூட்டம் போட்டுத்தான் அதனைச் சொல்லனும் என்ற நிலை இன்றில்லை. அந்த வகையில்... சிறீலங்கா தமிழ் மக்களை முன்னைய காலங்கள் போன்று ஏமாற்ற ஏலாது. ஏமாற்றவும் முடியாது. அந்த அரசியல் மலையேறிட்டுது. அப்படி ஒரு கணக்கை இன்னும் வைச்சிருந்தா.. அதனை முடிக்கச் சொல்லுறது தான் நல்லம். இன்றைக்குள்ள பிரச்சனை.. சிங்களத்திடம் உள்ள சீன சார்பு தான். அதற்கான பிரதிபலனை.. கமரூன்.. தமிழர்களோடு மொட்டைமாடியில் நின்று ஒரு சிம்பாளிக்கா காட்டிட்டு வந்திட்டார். அது வெறும் காட்சி அல்ல. அறிவிப்பு. ஆக.. எந்தச் சீனாவை வைச்சு இவ்வளவு காலகமும் சதுரங்கத்தை தனக்கு சாதகமா ஆக்கிச்சோ அதே சீனாவால.. வரப்போற நெருக்கடிகளுக்கும் சிறீலங்கா முகம் கொடுக்கனும். ஆனால்.. இது சதுரங்கம். தமிழர்கள் தாறுமாறா காய் நகர்த்தி.. ஆட்டத்தை மோசமா ஆடினா.. கமரூன் நாளை கொழும்பில் போய் நிற்கவும் வாய்ப்பு வரலாம். எல்லாம் எங்கள் காய் நகர்த்தலில் தான் உள்ளது.சீனாவோடும்.. இந்த வேளையில் தமிழர்கள் பேரம் பேச வேண்டும். கடந்த காலம் போல.. சீனாவை ஒதுக்கி வைக்கிறது தமிழர்களுக்கு நல்லதல்ல. இந்த சதுரங்கத்தில்.. இவர்கள் எல்லாம் சுண்டக்காய்கள்.கோத்தா எறிஞ்சு பிடிச்சு விளையாடுறார். நாங்கள் விடுப்புப் பார்க்கிறம். சுண்டக்காய் தானாப் போய் கோத்தா கையில சிக்கிட்டுது. அவ்வளவும் தான். இது தான் யதார்த்தம். இதுவரை கூட்டமைப்பு இவர் கைது.. விடுதலை பற்றி ஒன்றுமே சொல்லேல்ல. கூட்டமைப்பு மட்டுமல்ல.. தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுமே சொல்லேல்ல. அதில் இருந்து விளங்கிக் கொள்ளனும். இது மாற்றுக்கருத்துப் பாசறைகளின் கூடாரத்துக்கு கோத்தா அடிச்ச ஆட்லறி மட்டுமே. அடிச்ச ஆட்லறிக்கு பயந்து கோத்தா கையில உள்ள என்ன புரஜெக்டோட வெளில வருனமோ யார் அறிவார். அந்த வகையில் எனி இந்தச் சுண்டக்காய்கள் தொடர்பில் இரட்டிப்பு அவதானம் அவசியம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :rolleyes:- சிந்தனைக்கு சில படங்கள்...
எம் கல்லறைகள்.. புத்தரின் வெற்றுப் பல்லை கட்டிக்காக்கும் புத்த கோவில்களை விட.. உயிர்ப்புள்ளவை..!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
என்ன தான் சொன்னாலும்.. சந்திரிக்காவிற்கு இப்பவும் ராஜபக்ச குடும்பம் மீது ஒரு தனி மரியாதை இருக்குது. அண்மையில்.. அவாவை ராஜபக்ச.. பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு அழைக்க தவறாமல் போய் வந்தவர். ராஜபக்ச தான் ஜே ஆர் காலத்தில் சுதந்திரக் கட்சியை காத்தவர். ஜே ஆர்.. சிறீமாவோவின் குடியுரிமையை பறிச்சு.. அவாவை மோசமாக தண்டித்தவர். அந்தக் கட்சி எனி எழவே கூடாது என்று காய் நகர்த்தியவர். கடைசியில் அவர் வளர்த்த அவரின் மருமகனான ரணிலை வீழ்த்தி.. அக்கட்சி.. ஐ தே க கட்சிக்கு சமாதி கிண்டிவிட்டுள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை ஐ தே க.. சுதந்திரக் கட்சி இரண்டும்.. ஒன்று தான். தமிழின அழிப்பில் சந்திரிக்கா ராஜபக்ச ஜே ஆர் பிரேமதாச ரணில் இவர்களுக்கிடையே வித்தியாசம் கிடையாது. ஆனால் நம்மவர்கள் சிலர் தான் சும்மா படங்காட்டிக்கிட்டு திரியுறாங்க. எஜமானர்கள் காலை நக்கிப் பிழைக்க. கடைசியில் அதே எஜமானர்களின் காலால் தான் மிதியும் படுகிறார்கள். வலியில்லாத மிதி என்று எனி கதையளப்பார்கள்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார். http://www.eelanatham.net/articles/2013/11/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஹக்கீம்.. பசில்.. சொல்கைம்.. கதைச்சுக் கூட கோத்தா அசரவில்லை..! சோ.. இவர்களை எல்லாம் தமிழ் மக்கள் நம்பினால்..?????!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தேவை இல்லாமல்.. பெரிய இடத்து பெயர்களை இழுக்கப் போய் பொயட்டை விடுவிக்கிறதை வேண்டும் என்றே.. தாமதமாக்கிறாங்கள் போல..! இது தான் சொல்லுறது சும்மா விலாசம் காட்டக் கூடாது என்று. யாழிலும் நான் முகம் காட்டி எழுதிறனான் என்று இறுமாப்பு அடையுறவர். இவ்வளவு பின்புலம் இருக்கு என்ற துணிவில் தான் அது கூட. ஆனால் அதனை மகிந்த சுக்கு நூறாக்கிட்டார். இது ஒட்டுமொத்த தமிழருக்கும்.. டக்கிளஸ் வாலுகளுக்கும் ஒரு நாள் இது நடக்கும்... ஒரு நல்ல பாடமும் கூட. துளசி சொன்னது போல இவற்றை சிறீலங்கா அரசின் ஜனநாயக விரோத அடாவடிக்குச் சான்றாக பாவித்து சர்வதேச அனுதாபத்தை தமிழர்கள் பெற்றுக் கொள்வதும் நல்லது. எதுஎப்படியோ.... சக கள உறவு என்ற வகையில் இவரின் துரித கதியிலான.. விடுதலையை வரவேற்கிறோம். நாங்க சொல்லி எல்லாம் மகிந்த மசிய மாட்டார். அவரா கெதியா விட்டால் அவருக்குத் தான் நல்லது.- சிந்தனைக்கு சில படங்கள்...
தன் பிள்ளைக்கு மட்டுமல்ல.. பிறர் பிள்ளைக்கும் அப்பா என்று வாழ்ந்த தமிழன் என்றால் அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே..! தோழமைக்கு மதிப்பும் உயிரும்.... துரோகத்திற்கு தண்டனையும் கொடுக்கத் துணிந்த ஒரே தலைவன்.. தேசிய தலைவர் மட்டுமே..!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
Colombo arrests visiting Tamil poet, bans gatherings ahead of Heroes Day [TamilNet, Saturday, 23 November 2013, 13:53 GMT] The operatives of the occupying Sri Lankan military on Friday arrested VIS Jayapalan, a well-known Eezham Tamil poet and an award-winning actor in Indian Tamil cinema, while the Norwegian passport holder was visiting the island on a tourist visa. The arrest took place in abduction-style. By arresting Jayapalan, Colombo was sending a message to Eezham Tamil diaspora that Tamils visiting the island should not address any meeting or gathering. Colombo's TID operatives could claim any meeting as a ‘gathering causing communal unrest,’ academic circles in Jaffna said. In the meantime, the SL Police in Ki'linochchi, on Friday told 40 people it detained that all gatherings and meetings have been banned until further notice in the district. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36842- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இவர்கள் யாராலும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கு சவால்விடத்தக்க அரசியலை முன்னெடுக்க முடியாது. அதற்கான எந்த ஆயத்தங்களோ.. திட்டங்களோ.. தொலைநோக்குகளோ இவர்களிடம் இல்லை. இவர்கள் பற்றிய ஒரு கற்பிதத்தை வழங்குவதை காட்டிலும் யதார்த்தமான இவர்களை திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனங்காட்டுவது போல இனங்காட்டிச் செல்வதே மக்களுக்குச் சிறந்தது. எதிர்காலத்திற்குச் சிறந்தது..! அதுவே புதிய தலைமுறைக்கு புதிய வழிக்கான வழிகாட்டுதலாக அமையும்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அடுத்த முறை போக முன்னமே.. போய் வாற நோக்கத்தைச் சொல்லிட்டால் மகிந்தரே ரெட் காப்பெட் போட்டு வரவேற்பார்..! ஏன் ஆமி பொலிஸ் கவலை..???! இதனை இப்போதாவது பொயட் உணர்ந்திருக்கனும்..! இல்லைன்னா..????!- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சூறாவளி நீங்க கவலைப்படுற அளவுக்கு அவர் சாதாரண தமிழன் அல்ல. பின்புலங்கள் பல உள்ள ஒரு வி ஐ பி.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இது கைதாகத் தெரியவில்லை. அன்பான உபசரிப்புப் போலவே தெரிகிறது. அதுவும் பொயட் போன்ற பலமான இந்திய.. சிறீலங்கா அரசியல் தொடர்புகள் உள்ள ஒருவரை கைது செய்ய வேண்டிய அவசியம்..???!- சிந்தனைக்கு சில படங்கள்...
இவை கல்லறைகள் அல்ல. பெற்ற வயிறுகள் பேசிக்கொள்ளும் கருவறைகள்..! - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.